கண்கள் சொல்லும் கதைகள்! கதை 8
கண்கள் சொல்லும் கதைகள்! கதை 8 மாதவியின் முன் அமர்ந்து இருந்தார் தமிழரசி. ராவணனும் அங்கே தான் நின்று இருந்தான். "என்னனு சொல்லுமா? ஏதாவது சொன்னா தானே நாங்க ஏதாவது பண்ண முடியும்" என்று அவர் கேட்க, ராவணனோ அங்கே மாதவியை தான் பார்த்து கொண்டு இருந்தான். அவனது அன்னை தான், "நம்ப அந்த பொண்ணு மாதவி கிட்ட பேசணும் டா... அந்த பொண்ணு ஏதாவது கேஸ் கொடுத்தா நீ தான் எடுக்கணும்" என்று விரலை நீட்டி சொல்ல, அவனின் கண்கள் விரிந்தன. "அம்மா... நடக்குறதா பேசுங்க... அந்த பொண்ணுக்கு பிரச்சனைன்னு எனக்கு என்னைக்கோ தெரியும். ஆனா அவ வாயே திறக்க மாட்டா... நானும் ஒரு நாள் கேட்டு பார்த்தேன். வேஸ்ட் ஆவ் டைம்" என்று சலிப்பாக சொல்லி இருந்தான். "டேய் அவளுக்காக இல்லனாலும் அந்த மூணு வயசு குழந்தைக்காக டா... அவளை நினைச்சி பாரு" என்று சொல்லவும், மூச்சை இழுத்து விட்டவன், "சரி வாங்க போய் பேசுவோம்... எப்படியா இருந்தாலும் அவ வாய திறக்க மாட்டா.. உங்க ஆசைய எதுக்கு கெடுக்கணும்" என்று சொன்னவன், அவருடன் மாதவியின் வீட்டிற்கு சென்று இருந்தார். இதோ இப்பொது அமர்ந்தும் இருந்தார...