இடுகைகள்

பிப்ரவரி, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 13

  இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 13   இருவரும் தண்ணீர் குடித்து கொண்டு இருந்தனர்.   "என்ன மா தம்பிக்கு தண்ணி கொடுத்தியா?" என்று அவளின் தந்தை மணி கேட்கவும், தண்ணீரை முழுதாக குடித்து முடித்தவள்,"ஹான் கொடுத்துட்டேன் ப்பா" என்று சொல்லிக்கொண்டே அபராஜித்தை முறைத்தாள்.   அவனோ அதை எல்லாம் அசட்டை செய்து, "அங்கிள் உங்க பொண்ணுக்கு பையன் பார்க்க ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேளுங்க செய்யுறேன்" என்று வேறு சொல்ல, ரிதேஷோ, "அபி ப்ரோக்கு தைரியம் தான்" என்று அகரனின் செவிகளில் சொல்ல, அதர்வ் மனதிற்குள்ளோ, 'இவன் எதுக்கு இவளோ நல்லவன் மாதிரி நடிக்குறான்?' என்று நினைத்து கொண்டு இருந்தான்.   "சரி மாமா நாங்க அப்போ கிளம்புறோம்... அப்பா இன்னும் இரண்டு நாள்ல பஞ்சாயத்துன்னு சொன்னார். வஞ்சி சித்தியை ஒரு வழி ஆக்குறேன்னு அம்மா சொல்லிக்கிட்டு இருக்காங்க" என்றும் சொல்லி விட்டு தான் சென்று இருந்தான்.   அவர்கள் சென்ற பிறகு, மணியும் கூட, "அந்த பையன் சரியா தான் சொல்லி இருக்கான் சுப்பு... உனக்கு மாப்பிள்ளை இருக்கலாம்னு இருக்கேன்" என்றதும், "சரி அப்புறம்?...

இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 12

  இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 12   மயில் அங்கு வருவார் என்று யாருமே எதிர் பார்க்கவில்லை.   "இந்த அம்மா எதுக்கு இப்படி முடியை எல்லாம் முடிஞ்சிகிட்டு வராங்க?" என்று ரிதேஷ் கேட்க, "சும்மா இரு டா... அந்த பொம்பளை சரியான ராங்கி" என்று அகரன் தான் அடக்கி இருந்தான்.   வந்தவரோ நேரே வஞ்சியின் முன்னால் நின்று அவளின் முடியை பிடித்து இழுத்தே விட்டார்.   "வலிக்குது சித்தி" என்று சொல்லும் போதே அவளின் கண்களில் கண்ணீர் நின்று இருந்தது.   "என்ன டி வலிக்குது? அவன் எனக்கு பத்து லட்சம் கொடுத்து இருக்கான். அவன் என்ன சொன்னாலும் நீ செய்யணும் புரியுதா? இல்லனா எவன் கூடையாவது..." என்று அவர் பேசும் போதே, அவளின் கையை தட்டி விட்டு, வஞ்சியை அவனின் கை வளைவிற்குள் கொண்டு வந்து இருந்தான் அதர்வ்.   அவன் அப்படி செய்தது அனைவருக்கும் அதிர்ச்சி தான். அதையும் விட வஞ்சிக்கு, அவனின் அருகில் மூச்சே அடைத்து விட்டது. அவனின் நெஞ்சில் அவளது முகம் அழுந்தி இருந்தது. எத்தனை நாட்கள் அவனின் இந்த திண்ணிய மார்பில் அவளின் முகத்தை வைத்து உறங்கி இருப்பாள்.   அவளின் கண்ணீர் அதர்வின் சட்டையை வேறு ...

இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 11

  இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 11   விருமாண்டி இங்கே வருவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவனை பார்த்ததும் பெண்களின் கண்கள் மட்டும் அல்ல, அகரனின் கண்கள் கூட விரிந்தன.   அவன் எப்படி பட்டவன் என்று ஊருக்கே தெரியும் அகரனுக்கு தெரியாதா என்ன?   "யாரு ப்ரோ இந்த மீசை?" என்று ரிதேஷ் அகரனின் செவியில் கேட்க, "இவன் தான் டா அந்த நாற்பத்தி அஞ்சு வயசு கிழவன். வஞ்சிக்கு பார்த்து இருக்க மாப்பிள்ளை" என்றதும், "மாப்பிள்ளையா? இவனுக்கே மாப்பிள்ளை வர வயசுல இருக்கான். இப்போ இவன் மாப்பிள்ளையா?" என்று ரிதேஷ் கேட்டு இருந்தான்.   "உன் சித்தி காரி கிட்ட என்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுனு சொன்னியா?" என்று அவளை அதட்டல் தொனியில் கேட்டு இருந்தான் விருமாண்டி.   ஒரு கணம் வஞ்சியின் உடல் நடுங்கி அடங்கியது.   "உன் சித்தி சோலையா என்கிட்ட பத்து லட்சம் வாங்கி இருக்கா... அது இல்லமா அவளோட பொண்ணுங்களுக்கு கல்யாணம் செலவுக்கு வேற தனியா காசு வாங்குறேன்னு சொல்லி இருக்கா" என்றதும், வஞ்சி விழி விரித்து பார்த்தாள்.   அவளை விற்றே விட்டார்களா? என்று மனது பதைத்தது. அவள் வெறும் ...