இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 12
இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ!
பிறவி 12
மயில் அங்கு வருவார் என்று யாருமே எதிர் பார்க்கவில்லை.
"இந்த அம்மா எதுக்கு இப்படி முடியை எல்லாம் முடிஞ்சிகிட்டு வராங்க?" என்று ரிதேஷ் கேட்க, "சும்மா இரு டா... அந்த பொம்பளை சரியான ராங்கி" என்று அகரன் தான் அடக்கி இருந்தான்.
வந்தவரோ நேரே வஞ்சியின் முன்னால் நின்று அவளின் முடியை பிடித்து இழுத்தே விட்டார்.
"வலிக்குது சித்தி" என்று சொல்லும் போதே அவளின் கண்களில் கண்ணீர் நின்று இருந்தது.
"என்ன டி வலிக்குது? அவன் எனக்கு பத்து லட்சம் கொடுத்து இருக்கான். அவன் என்ன சொன்னாலும் நீ செய்யணும் புரியுதா? இல்லனா எவன் கூடையாவது..." என்று அவர் பேசும் போதே, அவளின் கையை தட்டி விட்டு, வஞ்சியை அவனின் கை வளைவிற்குள் கொண்டு வந்து இருந்தான் அதர்வ்.
அவன் அப்படி செய்தது அனைவருக்கும் அதிர்ச்சி தான். அதையும் விட வஞ்சிக்கு, அவனின் அருகில் மூச்சே அடைத்து விட்டது. அவனின் நெஞ்சில் அவளது முகம் அழுந்தி இருந்தது. எத்தனை நாட்கள் அவனின் இந்த திண்ணிய மார்பில் அவளின் முகத்தை வைத்து உறங்கி இருப்பாள்.
அவளின் கண்ணீர் அதர்வின் சட்டையை வேறு நனைத்தது.
அவனாலும் அதை உணர முடியாது. அவனின் நெஞ்சிலும் ஆயிரம் போராட்டம். அவனால் வஞ்சி அழுவதை பார்க்கவே முடியவில்லை. அவனின் இதயமே பிளந்து விடும் அளவிற்கு அவனுக்கு வலித்தது. ஏனென்று அவனுக்கும் தெரியவில்லை. எண்ணி அவனிடம் நான்கு வார்த்தைகள் கூட பேசாதா பெண்ணிற்காக அவனின் மனம் ஏன் இத்தனை துடிக்கிறது?
பாவம் அவனுக்கு தெரியாதே, முற்பிறவியில் இதே பெண்ணுடன் ஆயிரம் காதல் பாஷைகள் பேசி, கலவியுடன் சேர்ந்து காதலை பழகியது எல்லாம் இப்பொது அவனின் நினைவில் இல்லை, ஆனால் அவளின் நினைவுகளில் தேங்கி இருந்தது.
"நீங்க எல்லாம் என்ன மனுஷி? உங்க பொண்ணா இருந்தா இப்படி நாற்பத்தி அஞ்சு வயசு கிழவனுக்கு கட்டி வைப்பீங்களா? உங்களுக்கு என்ன பத்து லட்சம் தானே? அந்த பிச்சை காசை நான் தரேன். அந்த பொண்ணை நிம்மதியா இருக்க விடுங்க" என்று சொல்லி இருந்தான்.
பணம் என்றதும் மயிலின் கண்கள் விரிந்தன.
அவருக்கு தான் பணம் என்றால் உயிர் ஆயிர்றே!
ஆனாலும் கண்களை சுருக்கி, "இவளுக்காக பத்து லட்சம் தரேன்னு சொல்லுறியே.. அப்போ இவளுக்கு நீ யாரு? பரவால்ல விருமாண்டி வேணாம்னு தான் நல்ல வாட்ட சாட்டமான ஆளை பிடிச்சி இருக்கா போல" என்று அவர் சொல்ல, "என்ன இப்படி பேசுறீங்க? அவரு வெறும் உங்க கிட்ட இருந்து வஞ்சிய காப்பாத்த தான் அப்படி சொன்னார்.... ஏன் தான் உங்க புத்தி இப்படி போகுதோ?" என்று சுப்ரியா ஆற்றாமையால் கேட்டே விட்டாள்.
வஞ்சிக்கு மேலும் குனி குறுகி நிற்க வேண்டிய நிலை. இன்னும் என்ன வார்த்தை எல்லாம் அவள் கேட்க வேண்டும்? அவளுக்கு அதர்வின் சட்டையை பிடித்து மார்பில் சாய்ந்து அழலாமா என்று இருந்ததது. ஆனாலும் இப்பொது அதை கூட செய்ய முடியாது. இரண்டடி அதர்வ்வை விட்டு தள்ளி தான் நின்றாள்.
"யாருமே சும்மா காசு எல்லாம் கொடுக்க மாட்டாங்க... இவன் யாரு இவளுக்கு காசு தர?" என்று அங்கேயே அவர் வந்து நிற்க, "ஹான் மனுஷன்... மனுஷனா இருக்க யாரா இருந்தாலும் நீ பண்றதை எல்லாம் பார்த்து கண்டிப்பா அந்த பொண்ணுக்கு உதவி செய்ய தான் நினைச்சி இருப்பாங்க... அவன் முந்திக்கிட்டான் அவளோ தான்... இல்லனா எங்க மூணு பேர்ல யாராவது செஞ்சி இருப்போம்" என்று அபராஜித் தான் முதல் முறையாக அதர்வ்வுக்காக பேசினான்.
அவனுக்கே வஞ்சியை பார்க்க பாவமாக இருந்தது.
"இங்க பாரு மயிலு நீ முதல்ல இங்க இருந்து போ சொல்லிட்டேன்.. நாளைக்கு பஞ்சாயத்து கூட்ட தான் போறேன் நான்" என்று சொல்லி இருந்தார் தாரிக்காவின் தந்தை.
"அது வரைக்கும் வஞ்சி எங்க வீட்லயே இருக்கட்டும்" என்று சொல்லவும், "நீங்களே இந்த சனியனை வச்சிக்கோங்க... நாளைக்கு நானும் பஞ்சாயத்துல பேசிக்குறேன்" என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.
"என்ன பொம்பளை அவ இப்படி பேசுறா?" என்று அபராஜித் கேட்க, அகரனோ, "அவங்க அப்படி தான் டா" என்றதும், "அவங்க? அந்த ங்க தான் இப்போ குறைச்சல்... இவ மட்டும் சென்னைல இருந்து இருக்கனும்... ஆளு வச்சி அடிச்சி இருப்பேன்" என்று பேசி இருந்தான் அதர்வ்.
இதே சமயம் உள்ளே வந்தார் சுப்ரியாவின் தந்தை மணி.
"வா மணி" என்று தாரிக்காவின் தந்தை அழைக்கவும் அவரும் உள்ளே வர, வந்தவரின் கண்களில் தாரிக்காவின் தலையில் இருக்கும் கட்டும், பின்பு வஞ்சியின் கையில் இருக்கும் கட்டும் தான் கண்களில் பட்டது.
"ஐயோ புள்ளைங்களுக்கு என்ன ஆச்சு? அடியேய் சுப்பு என்ன டி உன் ஸ்நேகிதிங்க இரண்டு பேரு இப்படி கட்டோட நிக்குறாங்க?" என்று மக்களிடம் கேள்வி கேட்க, அவளும் நடந்த அனைத்தையும் சொல்லி இருந்தார்.
"நாளைக்கு பஞ்சாயத்து கூடட்டும்... அந்த மயிலை வச்சி செய்றேன்" என்று அவரும் சொல்லிவிட்டு, "அகரன் உன் சகாக்களை எல்லாம் கூட்டிட்டு இன்னைக்கு சாயந்திரம் வீட்டு பக்கம் வர்றது... வந்து ரொம்ப நாளு ஆகுதுல... எல்லாம் இப்போ பெரிய மனுஷங்க ஆகிட்டிங்க" என்று அகரனிடம் சொல்ல, அவனோ, "ஐயோ மாமா அப்படி எல்லாம் இல்ல... இந்த வாயாடி கிட்ட பணியாரம் சாயந்திரம் செஞ்சி வைக்க சொல்லுங்க... நானும் இவனுங்களுக்கு வீட்டுக்கு வரோம்... நம்ப வீட்டுக்கு எப்போ வந்தா என்ன மாமா?" என்றும் சொல்லி இருந்தான்.
அபராஜித் யோசித்தவன் சுப்ரியாவின் புறம் திரும்பி பார்த்து விட்டு, அப்படியே அவளின் தந்தையின் புறம் திரும்பியவன், "அங்கிள், தாரிக்கா இவளுக்கு எல்லாம் ஒரே வயசு தானே! இவளுக்கும் நீங்க மாப்பிள்ளை பார்க்கலாமே" என்று சொன்னானே பார்க்கலாம். அப்படியே அவனை முறைத்து பார்த்தாள் சுப்ரியா.
"ஆமா மணி நீயும் சுப்புக்கு நல்ல வரனா பாரேன்" என்று சொல்லவும், "மனசுல நினைச்சுகிட்டு தான் இருந்தேன். தம்பி தெய்வம் மாதிரி சொல்லிருச்சே.. அதையும் சீக்கிரம் செஞ்சிரலாம்" என்று சொல்லவும், "அப்பா" என்று அவள் கத்த, "என்ன மா என்னைக்கா இருந்தாலும் நீ இன்னொருத்தர் வீட்டுக்கு போய் தானே ஆகணும்... இப்பவே நான் உன்னை ஒரு நல்லவன் கைல பிடிச்சி கொடுத்தேனா தானே எனக்கும் நிம்மதி" என்று சொல்ல, அவளுக்கு அபராஜிதன் மண்டையை செங்கல்லால் பிளக்க வேண்டும் போல் இருந்தது.
"நீங்க வாங்க நம்ப வீட்டுக்கு போகலாம்" என்றவள் அவரை கூட்டிட்டு கொண்டு அவனை பார்த்து முறைத்து விட்டு அவளின் வீட்டிற்கு சென்று இருந்தாள்.
"ஏன் டா?" என்று அகரன் கேட்க, "என்ன டா? நியாயமா பார்த்தா நீங்க எல்லாம் அவளை கட்டிக்க போறவனுக்காக தான் பீல் பண்ணனும். என்ன வாயாடுறா தெரியுமா?" என்றவனை பார்த்து, "ஹலோ எங்க சுப்பு எவளோ நல்ல பொண்ணு தெரியுமா?" என்று கேட்க ஜானகியை, "ம்கூம் அதான் உங்கள எல்லாம் பார்த்தாலே தெரியுதே" என்று வந்தது ரிதேஷின் வார்த்தைகள்.
அதற்கு பிறகு அங்கிருந்து அவர்களும் நகர்ந்து இருந்தது.
சொன்னது போலவே அன்றைய மாலை சுப்ரியாவின் வீட்டிற்கு வந்து இருந்தான் அபராஜித். அவன் மட்டும் அல்ல கூடவே ரிதேஷ், அதர்வ் மற்றும் அகரனும் வந்து இருந்தார்கள்.
"வாங்க ப்பா வந்து உட்காருங்க" என்ற சுப்பிரியாவின் தந்தை அவர்களை பற்றி அப்படியே விசாரிக்கவும் ஆர்மபித்து இருந்தார்.
"சுப்பு வந்தவங்களுக்கு சாப்பிட கொடு" என்று அவர் சொல்லும் போதே, "ஐயோ அதெல்லாம் வேண்டாம் மாமா" என்று அகரன் சொல்லியும் அவர் கேட்கவே இல்லை.
அவர்களுக்காக சுப்ரியா பணியாரத்தை சுட்டு கொண்டு இருந்தாள். "இந்த அபராஜித் இதோட வாயே திறக்க கூடாது" என்று சொல்லிக்கொண்டே அவனுக்கு என்று ப்ரேதேயேகமாக பணியாரம் சுட்டு இருந்தாள்.
அனைவருக்கும் ஒரு தட்டு கொடுக்கவும், அவர்களும் உண்ண துவங்கினார்கள். அபராஜித் அப்போதும் அனைவரும் சாப்பிட்ட பிறகு தான் பணியாரத்தை எடுத்து வாயில் வைத்தான். "சூப்பரா இருக்கு" என்று ரிதேஷ் சொன்னதும் தான் அதுவும் சாப்பிடவே துவங்கினான்.
வாயில் பணியாரத்தை வைத்தவனுக்கு கண்கள் வெளியே வந்து விடவில்லை அவ்வளவு தான்.
அவனின் கண்கள் அப்படியே அங்கே நின்று இருந்த சுப்ரியாவில் தான் படிந்தது.
அழுந்த கண்களை மூடி திறந்தான். அவனுக்கு பெரிதாக காரமே சேராது. இதில் அவள் அவனுக்கு என்று கொடுத்த பணியாரத்தில் காந்தாரி மிளகாயை வைத்து கொடுத்து இருந்தாள். எப்படி இருக்கும்?
கண்களில் தண்ணீரே வந்து விடும் போல இருந்தது.
"தண்ணி வேணும் அங்கிள்" என்று மணியை பார்த்து சொல்லவும், "ஹான் தம்பி நான் சுப்ரியாவை..." என்று அவர் ஆரம்பிக்கும் போதே, "இல்ல நானே போய் எடுத்துக்குறேன்" என்று அவர் எதுவும் சொல்வதற்கு முன்னால் அவனே அடுப்பங்கரை உள்ளே சென்று இருந்தான்.
சுப்ரியா அவனை இப்படி எதிர் பார்க்கவில்லை. அதுவும் வீட்டின் சமயற்கட்டிற்குள் வருவான் என்றெல்லாம் அவள் சிந்திக்க கூட இல்லை. கத்துவான் கதறுவான் என்று தான் நினைத்து இருந்தாள். ஆனால் இப்படி கத்தாமல் அவளின் முன் வந்து அனல் தெறிக்க நிற்பான் என்று கனவு கூட காணவில்லை.
"என்ன டா?" என்று அவள் முடிக்கும் முதலே, அவளின் கழுத்தை பிடித்தவன், அவன் கையில் இருந்த அத்தனை பணியாரத்தையும் அவளின் வாயில் திணித்து இருந்தான்.
அவளுக்கும் வாய் எரிந்தது.
கத்த கூட அவன் விடவில்லை. வாய் முழுக்க பணியாரத்தை நிரப்பி இருந்தானே!
அவளின் கண்களில் தண்ணீர் வந்தே விட்டது.
ஏதோ ஆன்டி ஹீரோ போல அவளின் முன் நின்று இருந்தான்.
இருவரும் இப்படி மோதி நிற்க இனி என்ன நடக்குமோ?
கருத்துகள்
கருத்துரையிடுக