இடுகைகள்

மார்ச், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 18

  இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 18   ஸ்ரீகாந்த் இங்கு வருவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.   "சித்தப்பா" என்று அதர்வ் அழைக்கவும், திரும்பி பார்த்தனர்.   "ஹாய் மை பாய்ஸ்" என்று சொன்னவர் அப்படியே கண்களால் பாவனை அளந்தார்.   பதினெட்டு வயது இளம்பெண் இருந்தாலும் நல்ல வளர்த்தி இருந்தது. அவரது கண்கள் என்னவோ நேராக அவளின் கழுத்திற்கு கீழ் தான் சென்றது.   'நல்ல தளதளன்னு இருக்கா' என்று மனதிற்குள் நினைத்து, "யாரு இந்த பொண்ணு" என்றவர் வேண்டுமென்றே பாவனாவின் நாற்காலியில் கை வைப்பது போல் அவளின் கழுத்தையும் தோளையும் வருடி சென்றார். சிறுபெண் அவளுக்கு அவரின் தொடுகையின் வித்யாசத்தை உணரவும் முடியவில்லை.   அதுவும் தவறதுலாக கை பட்டு இருக்கும் என்று நினைத்து கொண்டாள்.   "இவ ரிதேஷோட பிரண்ட் சித்தப்பா" என்று அதர்வ் சொல்லவும், "ஓஹ்" என்று சொன்னவர், "என்ன பாய்ஸ் இந்தியா செலெக்ஷன் சீக்கிரம் வர போகுது அதுக்கு ரெடியா?" என்று கேட்கவும், "ம்ம் ரெடி ஆகணும். இன்னும் நாலு மாசம் இருக்கு தானே" என்றான் அபராஜித்.   "அபி உனக்கு நிறைய ...

இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 17

  இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 17   அனைத்தையும் சொல்லி முடித்து வஞ்சி அபராஜித்தை பார்க்கவும், அவனின் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.   "என்ன அண்ணா? எதுவும் சொல்லாம இருக்கீங்க?" என்று கேட்க, அவனோ, "இல்ல என்னால எல்லாத்தையும் டைஜஸ்ட் பண்ணவே முடியல... அதர்வ் போன ஜென்மத்துல தி கிரேட் பிஏ குரூப்ஸ் அண்ட் கிறீன் எமரால்டு ஹோட்டேல்ஸ் முதலாளிங்க பையனா பிறந்து இருக்கானா? இன்னைக்கு வரைக்கும் இந்தியாவோட தி மோஸ்ட் பிரெஸ்டிஜியஸ் பேமிலி அவங்க தான். ஆதி எல்லாம் இப்போ போய் அவங்க பசங்க எல்லாத்தையும் டேக் ஓவர் பண்ணிட்டாங்க... அதான் யோசிக்கிறேன். அவளோ பெரிய வீட்ல பிறந்து ஏன் இப்படி சூசைட்?" என்று கேட்கவும், "நான் இல்லன்னு தான்... அவங்க வீட்ல எப்பவும் அவர் ஒதுங்கியே இருந்துட்டார். அவரோட தங்கச்சி ஜானவி கிட்ட தான் எல்லாத்தையும் சொன்னார்ன்னு கடைசியா சொன்னார்" என்றதும், "மிஸஸ் ஜானவி அர்ஜுன் அபினவ் தானே? அவங்க தான் இந்தியாவோட ஸ்டைல் ஐகானிக் டிரஸ் எல்லாம் ரெடி பண்ணுறாங்களே" என்றதும், "எல்லாம் அவரோட பிறந்தவங்க தான்" என்று சொல்ல, "இது எல்லாம் அவனுக்கு நினை...

இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 16

  இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 16   "சித்தப்பா நீங்க இங்க வந்ததும் நல்லதா போச்சு... இந்த ஊர்ல என்ன அநியாயம்லாம் நடக்குது தெரியுமா? இருபத்தி ஆறு வயசு பொண்ணுக்கு நாற்பத்தி அஞ்சு வயசு ஆளை போய் கல்யாணம் பண்ணி வைக்குறாங்க" என்று ரிதேஷ் ஸ்ரீகாந்தை பார்த்து சொல்லவும், வஞ்சியின் மனதிலோ, 'நாற்பத்தி அஞ்சு வயசுல அவனே பரவால்ல... இவன் பாரு அம்பத்தி அஞ்சு வயசுல என்னை எப்படி பார்க்குறேன். சரியான பொம்பளை பொறுக்கி' என்று மனதில் வறுத்து எடுத்தாள்.   விட்டால் சட்டையை பிடித்து அடிக்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் செய்ய முடியாது.   "அப்படியா?" என்று ஆச்சர்யமாக கேட்ட ஸ்ரீகாந்த், "அந்த பொண்ணுக்கு இஷ்டம் இல்லனா ஏன் இப்படி வறுபுறுத்துறீங்க?" என்று கேட்கவும், "ஆமா ஆமா வறுபுறுத்த கூடாது" என்று எள்ளலாக வந்தது அபராஜிதன் வார்த்தைகள்.   அவனை பார்த்தவரின் இதழ்களில் ஒரு வித நக்கல் புன்னகை.   "சரின்னு பட்டா வறுபுறுத்தலாம். ஆனா இது தப்பாச்சே... இங்க பாருங்க அந்த பொண்ணுக்கு இஷ்டமா இல்லையான்னு தெரிஞ்சிக்கணும்" என்று அவர் சொல்ல, அபி தான் இப்போதும், "இஷ்ட...