இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 17

 

இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ!

பிறவி 17

 

அனைத்தையும் சொல்லி முடித்து வஞ்சி அபராஜித்தை பார்க்கவும், அவனின் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.

 

"என்ன அண்ணா? எதுவும் சொல்லாம இருக்கீங்க?" என்று கேட்க, அவனோ, "இல்ல என்னால எல்லாத்தையும் டைஜஸ்ட் பண்ணவே முடியல... அதர்வ் போன ஜென்மத்துல தி கிரேட் பிஏ குரூப்ஸ் அண்ட் கிறீன் எமரால்டு ஹோட்டேல்ஸ் முதலாளிங்க பையனா பிறந்து இருக்கானா? இன்னைக்கு வரைக்கும் இந்தியாவோட தி மோஸ்ட் பிரெஸ்டிஜியஸ் பேமிலி அவங்க தான். ஆதி எல்லாம் இப்போ போய் அவங்க பசங்க எல்லாத்தையும் டேக் ஓவர் பண்ணிட்டாங்க... அதான் யோசிக்கிறேன். அவளோ பெரிய வீட்ல பிறந்து ஏன் இப்படி சூசைட்?" என்று கேட்கவும், "நான் இல்லன்னு தான்... அவங்க வீட்ல எப்பவும் அவர் ஒதுங்கியே இருந்துட்டார். அவரோட தங்கச்சி ஜானவி கிட்ட தான் எல்லாத்தையும் சொன்னார்ன்னு கடைசியா சொன்னார்" என்றதும், "மிஸஸ் ஜானவி அர்ஜுன் அபினவ் தானே? அவங்க தான் இந்தியாவோட ஸ்டைல் ஐகானிக் டிரஸ் எல்லாம் ரெடி பண்ணுறாங்களே" என்றதும், "எல்லாம் அவரோட பிறந்தவங்க தான்" என்று சொல்ல, "இது எல்லாம் அவனுக்கு நினைவு வந்தா இன்னும் ஆடுவான். இப்பவே ஆடுறான்" என்றதும் சிரித்து விட்டாள் வஞ்சி.

 

"அப்போ சொல்றதை நீங்க நம்புறீங்களா?" என்று கேட்க, "எஸ் நம்புறேன். ஏன்னா இஷானாவா உனக்கு நடந்தது உனக்கு மட்டும் தான் தெரியும். அதர்வ்க்கு தெரியாது. ஆனா எனக்கு தெரியும். என்னை தாண்டி ஒருத்தருக்கு தெரிஞ்சி இருக்குன்னா அது கண்டிப்பா இஷானாவா மட்டும் தானே இருக்க முடியும். அதுவும் ஏதோ கிராமத்துல பிறந்த உனக்கு எப்படி ஸ்ரீகாந்த் பத்தி தெரிஞ்சி இருக்கும்?" என்று அவன் கேட்க, அவளோ அதிர்ந்து அவனை பார்த்தாள்.

 

"என்ன அண்ணா சொல்லுறீங்க? உங்களுக்கு என்னை பத்தி தெரியுமா?" என்றவளிடம், "இதெல்லாம் தெரியாது. ஆனா இந்த ஸ்ரீகாந்த் கை வச்ச முதல் பொண்ணு இஷானா தான்னு எனக்கு தெரியும். அதை அவனே என்கிட்ட சொல்லி இருக்கான்" எனும் போதே அவனின் கைகள் இறுகியது.

 

"உங்களுக்கு எப்படி அண்ணா இதெல்லாம் சொன்னான்?" என்று கேட்க, அபராஜித் கூட அவனின் கதையை சொல்ல ஆரம்பித்தான்.

 

அவனின் உடன்பிறவா சகோதரி பாவனா!

 

அவளும் அவர்களுடன் தான் கல்லூரி பயின்று கொண்டு இருந்தாள். அப்போது அதர்வ் என்றால் அனைவருக்கும் தெரியும். அவன் தான் அண்டர் நைன்டீன் கேப்டனாக ஜெயித்து காட்டி வந்து இருந்தானே! அகரனையும் தெரிந்து இருந்தது. அப்போது தான் அபராஜித் பயிற்சி செய்து கொண்டிருந்தான். ரஞ்சி கோப்பையில் அசத்தி அவனையும் இந்தியா திரும்பி பார்க்க துவங்கி இருந்த தருணம் அது!

 

இருபது வயதின் நெருக்கத்தில் இருந்தார்கள். ரிதேஷ் அவர்களுடன் கல்லூரி பயில துவங்கி இருந்தான். அது பெரிய இடத்து பிள்ளைகள் படிக்கும் கல்லூரி தான். ஆனாலும் படிக்கும் பிள்ளைகளுக்கும், விளையாட்டில் அசத்தும் பிள்ளைகளுக்கும் கூட எப்போதும் அங்கே இடம் உண்டு.

 

அப்படி ரிதேஷின் வகுப்பில் சேர்ந்தவள் தான் பாவனா.

 

அன்னை இல்லாத பெண். தந்தையின் அரவணைப்பில் கிராமத்தில் இருந்து வந்து இருந்தாள்.

 

ரிதேஷ் முதல் நாளே அவர்களின் முன் வந்து, "ஹாய் ப்ரோஸ்... இது தான் எனக்கு கிடைச்ச முதல் பிராண்ட் பாவனா" என்று அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

 

பாவனாவுக்கு கிரிக்கெட் என்றால் கொள்ளை பிரியம். அவளும் கிரிக்கெட் ஆடுவாள். அதில் சாதிக்க வேண்டும் என்கிற எண்ணமும் இருந்தது. ஆனால் பயிற்சி கொடுக்க தான் யாரும் இல்லை. நன்றாக படிக்கவும் செய்வாள். எப்படியோ இங்கே அவளுக்கு இடம் கிடைத்து இருந்தது. அதற்கே கடனை வாங்கி தான் அவளை இங்கே அவளின் தந்தை கல்லூரியில் சேர்த்து விட்டு இருந்தார்.

 

அதர்வ், அகரன், மற்றும் அபராஜித்தை எல்லாம் கண் கொட்டாமல் பார்த்தாள் பாவனா. அவள் திரையில் பார்த்து வியந்த விளையாட்டு வீரர்கள் இப்பொது அவளின் முன்னிலையில் இருக்கிறார்கள். நம்பவே முடியவில்லை.

 

கண்களை விரித்து பார்த்தாள். அவர்கள் இந்த கல்லூரியில் படிக்கிறார்கள் என்று தெரிந்து தான் சேர்ந்தாள். ஆனால் இப்படி நேரில் பார்ப்பது அவளுக்கு ஒரு வித ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும், அதே சமயம் உள்ளே ஒரு உற்சாகத்தையும் கொடுத்து இருந்தது.

 

ரிதேஷ் தான் அவளிடம் முதலில் வந்து பேசினான். பேந்த பேந்த முழித்து கொண்டிருந்த பெண்ணை ஏனோ அவனுக்கு பார்த்ததும் பிடித்து விட்டது. ஒரு தங்கையை போல் தான் பார்த்து இருந்தான். அவனுக்கு தான் தங்கை எல்லாம் இல்லையே!

 

"எங்க போகணும்?" என்று ரிதேஷின் குரலில் திரும்பி பார்த்தவள் அவள் போக வேண்டிய வகுப்பறையை சொல்ல, "நானும் அங்க தான் போறேன் வா" என்று அவளை அழைத்து சென்றான். அவளிடம் கேள்விகள் சில கேட்க, அவளும் அதர்வ், அபி மற்றும் அகரன் மேல் அவளுக்கு இருக்கும் கிரிக்கெட் பற்றை பற்றி சொல்லி இருந்தாள்.

 

ரிதேஷை பெரிதாக யாருக்கும் தெரியாது. சிவராஜும் சரி, அதர்வ்வும் சரி அவனை வெளியுலகில் காட்டவில்லை. அவனின் சுந்தந்திரம் பரி போய் விடும் என்பதால் அவனின் புகைப்படத்தை பொது வெளியில் அவர்கள் பகிர்ந்தது இல்லை. ஆதலால் அவளுக்கு அவன் தான் அதர்வ்வின் தம்பி என்று தெரியாது.

 

"சரி அவங்களை எல்லாம் நான் கூட்டிட்டு போய் காட்டுறேன் சரியா?" என்று கேட்கவும், "எப்படி? அவங்களுக்குன்னு பிரைவசி எல்லாம் இருக்கும்ல காலேஜ்ல அவங்க பின்னாடி இப்படி போனா எதுவும் சொல்லுவாங்களே" என்றவளை பார்த்து, "யாரு கிட்டையும் சொல்லாத.. நான் தான் அதர்வ் தம்பி" என்று சொல்ல முதலில் அதிர்ந்தாலும் பின்பு, "ஆமா ஆமா நான் தான் அபராஜித் தங்கச்சி" என்று சொல்லி இருந்தாள்.

 

"அபி அண்ணாக்கு தங்கச்சி இருக்கான்னு எனக்கு தெரியாதே" என்று அவன் சிரித்து கொண்டே கேட்க, "எனக்கு கூட தான் அதர்வ்க்கு தம்பி இருக்குறது தெரியாது" என்று நக்கலாக பேசி இருந்தாள் பாவனா. அதனாலேயே அவளை பிடித்து தான் இருந்தது ரிதேஷிற்கு!

 

"சரி அப்போ உன் அண்ணா அபியை இன்ட்ரோ கொடுக்குறியா?" என்றவன் கேட்க, "நீங்க முதல்ல அதர்வ்வை இன்ட்ரோ கொடுங்க" என்று அப்போதும் வாய் அடிக்க, "கொடுத்துட்டா போச்சு... அதர்வ் மட்டும் இல்ல உன் அண்ணா அபியையும் சேர்த்து கொடுக்குறேன்" என்று அவன் சொல்லவும், அவளோ, "கொடுப்பீங்க கொடுப்பீங்க" என்று சொல்லி உதட்டை சுழித்து கொண்டாள்.

 

மதிய உணவு சமயம், "சரி வா இன்ட்ரோ கொடுக்குறேன். அப்படியே சாப்பிட்டும் வரலாம்" என்று சொல்லவும், "ஐயோ இங்க எல்லாம் ரொம்ப விலையா இருக்கு... நான் ஹாஸ்டல் போய் சாப்பிட்டுக்குறேன்" என்று சொல்ல, அவனோ ஒரு முறை அவளை பார்த்து, "நான் பெ பண்றேன் வா" என்று சொல்லவும், "இல்ல வேண்டாம்" என்று தயங்கி நின்றாள்.

 

அவளுக்கு இப்படி பட்ட சூழ்நிலை எல்லாம் புதிது. அதுவும் ஒரு ஆண்மகனுடன் சில மணி நேரங்கள் தான் பழகிய ஒருவனுடன் செல்வது ஒரு தயக்கத்தை கொடுத்தது.

 

"அட உன் அண்ணா மாதிரின்னு நினைச்சிக்கோ... அபராஜித் ப்ரோவ அண்ணான்னு தானே சொன்ன? அவரையும் நான் அண்ணான்னு தான் கூப்பிடுவேன்" என்று அவளை அழைக்க, சரி என்று அவனிடம் சென்று இருந்தாள்.

 

அப்போதும் போகும் வரை ஒரு வித தயக்கம் இருந்தது தான். ஆனால் இப்படி உண்மையாகவே அவர்களின் முன் கொண்டு வந்து நிறுத்துவான் என்று அவள் நினைத்து பார்க்கவில்லை.

 

"ஹலோ" என்று அதர்வ் சொல்ல, அவளோ பேசினால் இல்லை.

 

"என்ன ரிதேஷ் உன் பிராண்ட் சிலையா நிக்குறா?" என்று அபி கேட்க, "உங்க தங்கச்சின்னு சொல்லுங்க" என்றதும், "ஏதே தங்கச்சியா? எப்படி டா அபி உனக்கு தங்கச்சி எல்லாம் இருக்கா? நீ சொல்லவே இல்ல" என்று அகரன் கேட்க, "எனக்கே தெரியாதே" என்று இப்பொது அவனின் கண்கள் பாவனாவில் படிந்தது.

 

அவளோ இப்பொது தான் சுயத்திற்கு வந்து இருந்தாள்.

 

"என்ன அண்ணா உங்க தங்கச்சி எவளோ உரிமையா என் கிட்ட உங்க தங்கச்சின்னு சொன்னா தெரியுமா?" என்று கேட்க, அவனின் கண்கள் கேள்வியுடன் பாவனாவை பார்த்தது.

 

அவளோ இப்பொது திருட்டு முழி முழித்தாள். அவள் என்ன கனவா கண்டால் உண்மையாகவே ரிதேஷ் அதர்வ்வின் தம்பியாக இருப்பான் என்று?

 

"அது... அது..." என்று அவள் தயங்கும் போதே, "நீ அப்புறமா தயங்கி தயங்கி உன் அண்ணா கிட்ட பேசுமா... இப்போ எனக்கு பசிக்குது சாப்பிட போலாமா டா?" என்று அகரன் கேட்க, அனைவரும் சென்றார்கள்.

 

உண்மையாகவே அவளுக்கு அவர்களுடன் செல்வதே ஏதோ கனவு போல் இருந்தது.

 

கல்லூரியில் யாரும் அவர்களின் பின்னால் வருவது இல்லை. முதல் காரணம் பல பேர் பெரிய தொழிலதிபர்களின் பிள்ளைகள் தான். மற்றோன்று அவர்களின் கல்லூரியில் இப்படி பிரபலன்களாக இருப்பவர்களை தொந்தரவு செய்ய கூடாது என்கிற விதிமுறையும் இருந்தது.

 

ஆதாலால் அனைவரும் பார்த்து விட்டு செல்வார்கள் தவிர அவர்களை நெருங்குவது இல்லை.

 

"என்ன வேணும்?" என்று ரிதேஷ் அவளை பார்க்க, அவளுக்கு வாயில் வார்த்தைகள் வருவேனா என்று இருந்தது.

 

"என்ன சாப்பிடவாவது வாயை திறப்பியா மா?" என்று அகரன் கேட்க, அவளோ ஆமாம் என்று தலையசைக்க, "ரைஸ் வேணுமா இல்ல சப்பாத்தி மாதிரி ஏதாவது சாப்பிடுறியா?" என்று அபி கேட்க, "ரைஸ்" என்று சொல்லவும், "பாரேன் அவளோட அண்ணா கேட்டா தான் பா பதில் எல்லாம் வருது" என்று ரிதேஷ் சொல்ல, "ஏன் டா?" என்று அபி சொல்லி இருந்தான்.

 

பின்பு அவளை ஒரு நாற்காலியில் அமர சொல்லி விட்டு, அவர்கள் மட்டும் சென்று உணவுகளை எடுத்து கொண்டு வந்தனர்.

 

அனைவரின் கண்களும் இப்பொது அவளில் தான் படிந்தது. பின்னே இந்த மூவரும் ஒரு பெண்ணுடன் அமருகிறார்களா? நல்ல அழகான பெண் வாந்தாலே அவளை விரட்டி விட்டு முனிவர்களாக வாழ்பவர்கள். இன்று அவர்களை பொறுத்தவரை சுமாராக இருக்கும் பெண்ணை இப்படி அவர்களுடன் சாப்பிட அமர வைத்து இருக்கிறார்கள்.

 

உணவு அனைத்தையும் எடுத்து கொண்டு வந்தார்கள் நால்வரும்.

 

அவளுக்கு பழரசம் ஒன்றையும் எடுத்து வந்து கொடுத்தான் ரிதேஷ்.

 

"இந்த பிரைட் ரைஸ் அப்புறம் ஒரு கோபி சிக்ஸ்டி பைவ் தான் ஆர்டர் பண்ணி இருக்கேன்" என்று அபி அவளின் புறம் நீட்டவும், அவளுக்கு உண்மையாகவே சாப்பிடலாமா இல்லையா என்கிற கேள்வி வேறு எழுந்ததது.

 

இதே சமயம் தான் அங்கே வந்தார் அதர்வ்வின் சித்தப்பா ஸ்ரீகாந்த்.



கருத்துகள்