இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 16

 

இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ!

பிறவி 16

 

"சித்தப்பா நீங்க இங்க வந்ததும் நல்லதா போச்சு... இந்த ஊர்ல என்ன அநியாயம்லாம் நடக்குது தெரியுமா? இருபத்தி ஆறு வயசு பொண்ணுக்கு நாற்பத்தி அஞ்சு வயசு ஆளை போய் கல்யாணம் பண்ணி வைக்குறாங்க" என்று ரிதேஷ் ஸ்ரீகாந்தை பார்த்து சொல்லவும், வஞ்சியின் மனதிலோ, 'நாற்பத்தி அஞ்சு வயசுல அவனே பரவால்ல... இவன் பாரு அம்பத்தி அஞ்சு வயசுல என்னை எப்படி பார்க்குறேன். சரியான பொம்பளை பொறுக்கி' என்று மனதில் வறுத்து எடுத்தாள்.

 

விட்டால் சட்டையை பிடித்து அடிக்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் செய்ய முடியாது.

 

"அப்படியா?" என்று ஆச்சர்யமாக கேட்ட ஸ்ரீகாந்த், "அந்த பொண்ணுக்கு இஷ்டம் இல்லனா ஏன் இப்படி வறுபுறுத்துறீங்க?" என்று கேட்கவும், "ஆமா ஆமா வறுபுறுத்த கூடாது" என்று எள்ளலாக வந்தது அபராஜிதன் வார்த்தைகள்.

 

அவனை பார்த்தவரின் இதழ்களில் ஒரு வித நக்கல் புன்னகை.

 

"சரின்னு பட்டா வறுபுறுத்தலாம். ஆனா இது தப்பாச்சே... இங்க பாருங்க அந்த பொண்ணுக்கு இஷ்டமா இல்லையான்னு தெரிஞ்சிக்கணும்" என்று அவர் சொல்ல, அபி தான் இப்போதும், "இஷ்டம் இல்லனா விடுற ஜென்மம் எல்லாம் இருக்கா என்ன?" என்று கேட்டு இருந்தான்.

 

இப்பொது வஞ்சியின் கண்கள் அபிஜித்தை தான் பார்த்தது.

 

அவனின் கண்களில் ஸ்ரீகாந்தை கொன்று விடும் அளவிற்கு ரௌத்திரம் இருந்தது. அவளின் கண்களை பிரதிபலித்தன. ஏன் என்று தான் அவளுக்கு தெரியவில்லை.

 

"அது எப்படி அந்த பொண்ணோட சித்தி பத்து லட்சம் என்கிட்ட இருந்து வாங்கி இருக்காங்க" என்று விருமாண்டி மீண்டும் முறுக்கி கொண்டு வர, "அதான் பத்து லட்சம் அதர்வ் தரேன்னு சொல்லிட்டானே" என்று சொல்லி இருந்தான் அகரன்.

 

ஸ்ரீகாந்த் திரும்பி இப்பொது அதர்வ்வை பார்க்க, "ஆமா சித்தப்பா ஒரு பத்து லட்சத்துக்காக அந்த பொண்ணு வாழ்க்கை வீணா போகணுமா என்ன?" என்று சொல்லி இருந்தான்.

 

ஸ்ரீகாந்த் கூட திரும்பி, "அந்த பொண்ணுக்கு விருப்பம் இல்ல அப்புறம் என்ன? பத்து லட்சம் தானே... நானே கூட இருபது லட்சம் தரேன்" என்று அவன் சொல்லி முடிக்கும் முதல், "இல்ல வேண்டாம்" என்று அழுத்தமாக வந்தது வஞ்சியின் வார்த்தைகள்.

 

அவன் கொடுத்து அவள் விருமாண்டியிடம் இருந்து தப்பிப்பதற்கு அவள் செத்தே விடலாம். விருமாண்டி கூட திருமணம் செய்து அவளை அடைய நினைக்கிறான். ஆனால் இவன்? மாதமாக இருந்த பெண் என்றும் பாராமல் அவளை கொலையே செய்து இருக்கிறானே!

 

அந்த கொலைகாரன் கொடுத்த பணத்தில் அவள் தப்பிப்பதா?

 

"அப்போ என் பத்து லட்சம்? ஒன்னு என்னை கல்யாணம் பண்ணிக்க இல்ல பத்து லட்சத்தை கொடு" என்று விருமாண்டி அங்கேயே வந்து நிற்க, வஞ்சி நிமிர்ந்து பார்த்தாள். யாருக்காக பயப்பட வேண்டும்? அவள் ஒன்றும் தவறு செய்யவில்லையே!

 

தவறு செய்தவர்களே தலை நிமிர்ந்து அவளின் முன் நிற்கிறார்கள். அவள் ஏன் தலை குனிய வேண்டும்?

 

"பணம் நானா வாங்குனேன்? வாங்குன அவங்க கிட்ட கேட்கணும். அதான் ஒண்ணுத்துக்கு இரண்டு பொண்ணு அவங்க பெத்து வச்சி இருக்காங்களே... அந்த இரண்டு பேரையும் உனக்கு கூட்டி கொடுப்பாங்க... இல்ல பணத்தை கொடுப்பாங்க... அது உனக்கும் அவங்களுக்கும் இருக்கிற பிரச்சனை. அவங்க ஒன்னும் என் அம்மா இல்ல சித்தி தான். பெத்த அப்பனே என்னை பார்க்கல.. இவங்க எல்லாம் யாரு... நான் பணத்தை வாங்கல... வாங்குனவங்க கிட்ட பேசிக்கோ... நான் ஒன்னும் விக்கிற பொருள் கிடையாது" என்று விருமாண்டியின் கண்களை பார்த்து அழுத்தம் திருத்தமாக பேசினாள்.

 

இந்த வஞ்சி அனைவருக்கும் புதிது! வஞ்சியாக மட்டும் தான். இஷானா இப்படி தானே! எதுவாக இருந்தாலும் நேராக நிமிர்வாக பேசும் பெண். அதை தானே அதர்வ் விரும்பி இருந்தான். இப்போதும் இந்த நிமிர்வு அவனுக்கு பிடித்து இருந்தது. கண் கொட்டாமல் வஞ்சியை தான் பார்த்தான்.

 

அப்படியே பஞ்சாயத்தார்கள் பக்கம் திரும்பியவள், "ஐயா என் அப்பா சொத்து எனக்கு எதுவும் வேணாம். என் அம்மாவோட நிலம், அப்புறம் அவங்க தோப்பு வீடு எல்லாம் என் பேருல தான் இருக்கு... அதை எல்லாம் நானே இதோட பார்த்துக்கறேன். அங்கேயே நான் தனியா இருந்துக்குறேன். இவங்க குடும்பத்துக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல... வேணும்னா பெத்த கடமைக்கு என் அப்பாக்கு மாசம் இவளோன்னு பணம் கொடுக்குறேன். வேற யாருக்கும் எதுவும் செய்யணும்னு எனக்கு அவசியம் இல்ல" என்று முகத்தில் அடித்தது போல் பேசி இருந்தாள்.

 

அங்கே இருந்தவர்களுக்கும் அது சரியாக தான் பட்டது.

 

அபராஜித் கூட ஒரு நொடி அதிர்ந்து தான் வஞ்சியை பார்த்தான். இப்பொது வரை அழுது கொண்டே இருந்த பெண் இப்படி பெண் சிங்கமாய் மாறி நிற்கிறாள்.

 

ஆனால் ஏதோ அவனுக்கு தவறாக பட்டது. எப்படி இந்த மாற்றம்? அதர்வ் பணம் தரும் பொது அமைதியாக இருந்தவள், ஸ்ரீகாந்த் சொன்னதும் வேண்டாம் என்று மறுத்து விட்டாள். ஏன் என்கிற கேள்வி அவன் மனதினுள் எழுந்தது.

 

அவன் தான் பல விதமாக யோசிப்பவன் ஆயிர்றே... அவனுக்கு எங்கேயோ ஏதோ இடித்தது. அதையும் தாண்டி அவனின் கண்களில் தெரியும் அதே கோவமும் கனலும் அவளின் கண்களில் ஸ்ரீகாந்திற்காக தெரிவது போல ஒரு எண்ணம். அவனின் கணிப்பாக கூட இருக்கலாம். ஆனால் உண்மையாகவே ஏதாவது இருந்தால்? அதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் அபியிடம் இருந்தது.

 

"அந்த பொண்ணு சொல்லுறது சரி தானே! இன்னைக்கு வரைக்கும் மயிலு என்ன வஞ்சியை சொந்த பிள்ளை மாதிரியா பார்த்தா? அவ காசு வாங்குனா அவ பொண்ணை கட்டு விருமாண்டி... இந்த புள்ளை என்ன பண்ணும்?" என்று மயிலின் மகள்களின் மேலே வந்து விடிந்தது.

 

இதை தான் தன் வினை தன்னை சுடும் என்பார்கள்.

 

"ஒன்னு மயிலு காசை கொடுக்கும் இல்ல அவ பொண்ணுங்களை கொடுக்கோம்" என்று அவர்களே முடிவையும் எடுத்து விட்டார்கள்.

 

மயிலுக்கு ஆட்டம் கண்டது. மகள்களை இப்படி பட்டவனுக்கா கொடுக்க வேண்டும் என்று அவளின் மகள்கள் என்று வரும் பொது அவருக்கு விருமாண்டி எப்படி என்று தெரிந்தது.

 

"காசு கொடுத்துடுறேன்" என்று மயில் சொல்ல, வஞ்சியோ, "என் அம்மாவோட எல்லாம் சொத்தும் எனக்கு வேணும்... அந்த தோப்பு வீட்ல நான் இருந்துக்குறேன்" என்றவள் அங்கிருந்து விறுவிறுவென்று நடந்து இருந்தாள்.

 

அவளுக்கு அங்கே இருக்கவே மனம் ஒப்பவில்லை. எதிரே அவளின் வாழ்வை அழித்தவன். அவன் அவளுக்கு வாழ்வு வேறு தருகிறானாமே! மனம் கொதித்தது. அவளின் கையறு நிலையை பார்த்து அவளுக்கே கோவம்.

 

அவள் நடந்த வேகத்திற்கு அவளின் கையை பிடித்து இருந்தது ஒரு கரம். சட்டென திரும்பி பார்த்தாள். அபராஜித் தான் நின்று இருந்தான்.

 

அவளோ ஒரு முறை பிடித்து இருந்த கையை பார்க்க, அவளின் கையை விட்டவன், "சாரி... ஜஸ்ட் உன்னை நிறுத்த தான் கையை பிடிச்சேன்" என்று சொல்லவும், அவளோ கொஞ்சம் ஆசுவாசம் அடைந்து, "சொல்லுங்க அண்ணா" என்று சொல்லி இருந்தாள்.

 

அவள் அண்ணா என்று சொன்னதுமே அவனுக்கு அவளது எண்ணம் தான்.

 

ஒரு புன்னகையுடன், "உங்கிட்ட பேசலாமா?" என்று அவன் கேட்கவும், அவளோ, "ம்ம்" என்று சொல்ல இருவரும் கோவிலுக்கு ஒன்றாக சென்றனர்.

 

வஞ்சியின் பேச்சில் அப்படியே அசந்து தான் போய் விட்டான் அதர்வ். அவனுக்கு பழைய நினைவுகள் நியாபகத்தில் இல்லை. ஆனால் தினமும் அவனின் கனவில் வரும் அந்த பெண்ணுடன் இப்பொது முதல் முறை வஞ்சியை வைத்து பார்க்க மனம் தோன்றியது. கனவில் வருபவளும் இப்படி தானே வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுகிறாள்.

 

என்ன முக ஒற்றுமை என்று எதுவும் இல்லை. ஆனால் ஏதோ ஒன்று அவனுக்கு அவள் தான் இவளோ என்று சொல்லியது.

 

"அதர்வ்" என்கிற ஸ்ரீகாந்தின் அழைப்பில் சுயம் பெற்றவன், "அந்த பொண்ணு ரொம்ப தைரியமா பேசுச்சு... யாரு அவ நீ ஏன் அவளுக்காக காசு தரேன்னு சொல்லி இருக்க?" என்று அவர் கேட்கவும், அவன் பதில் சொல்லும் முதல் ரிதேஷ் நடந்த அனைத்தையும் சொல்லி இருந்தான்.

 

"ஒரு ஹெல்ப் தான் சித்தப்பா" என்று ரிதேஷ் சொல்லவும், அவரின் மனது அப்போது தான் ஆசுவாசம் அடைந்தது. அவருக்கு வஞ்சி வேண்டும் என்று அவர் தான் முடிவெடுத்து விட்டு இருந்தார் அல்லவா!

 

எங்கே அண்ணனின் மகனுக்கு அவளின் மீது ஈடுபாடு இருக்கிறதோ என்கிற ஒரு எண்ணம். ஆனால் அவருக்கு தெரியாதே அவனுக்கு இப்பொது தான் அவளின் மீது ஈடுபாடு வரவே ஆரம்பித்து இருக்கிறது என்று!

 

தெரியும் நேரம் என்ன ஆகுமோ?

 

"சார் நீங்க எவளோ நாள் இங்க இருக்க போறீங்க?" என்று அகரன் கேட்க, "ஒரு வாரம் இருக்கலாம்னு இருக்கேன் அகரன்" என்றதும், "எங்க வீட்லயே தங்கலாம் சார்" என்று சொல்லி ஸ்ரீகாந்தை அழைத்து சென்று இருந்தான்.

 

இங்கோ அபராஜித் முன் அமர்ந்து இருந்தாள் வஞ்சி.

 

இருவரின் கண்களிலும் ஆயிரம் கேள்விகள்.

 

அபராஜித் தான் ஆரம்பித்தான்.

 

"உனக்கு ஸ்ரீகாந்தை முன்னவே தெரியுமா வஞ்சி?" என்று முதல் கேள்வி கேட்டு இருந்தான்.

 

அவளும் அவனின் கண்களை பார்த்தாள். அவனுக்கு ஏதோ தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது.

 

மறைக்க வேண்டுமா என்றும் தெரியவில்லை. உண்மை சொன்னாலும் ஏற்று கொள்வானா என்றும் தெரியவில்லை. ஒரு வித தயக்கம் இருந்தது.

 

"சொல்லு வஞ்சி... என்னை அண்ணான்னு கூப்பிட்ட... அண்ணாவா நினைச்சா சொல்லு... உனக்கு ஸ்ரீகாந்தை தெரியுமா?" என்று அவளுக்கு நம்பிக்கை தரும் விதமாக பேசினான்.

 

அவளோ, "அண்ணான்னு எனக்கு யாரும் இருந்தது கிடையாது. முதல் முறை ஒருத்தர் அண்ணாவா நினைச்சுக்கோன்னு சொல்லுறீங்க... சொன்னா நம்புவீங்களான்னு தெரியலையே" என்றும் தயங்கி சொன்னாள்.

 

"நீ என்ன சொன்னாலும் நான் நம்புறேன். உனக்கு எப்படி ஸ்ரீகாந்தை தெரியும்? அவரை நீ முன்னவே பார்த்து இருக்கியா?" என்று கேட்டு இருந்தான். அவள் தயங்கிய விதத்திலேயே அவளுக்கு நிச்சயம் ஸ்ரீகாந்தை தெரிந்து இருக்க வேண்டும் என்று முடிவே செய்து இருந்தான்.

 

"நான் சொல்லுவேன்.. ஆனா நீங்க கிண்டல் பண்ண கூடாது... அதே போல நான் பொய் சொல்ரேன்னும் சொல்ல கூடாது" என்று அவள் சொல்ல, அவனோ, "சத்தியமா மாட்டேன்" என்று அவளுக்கு உறுதி கொடுத்து இருந்தான்.

 

அவளும் முற்பிறவியில் துவங்கி இப்பிறவி முதல் அவளின் உள்ளம் கவர்ந்தவனுக்கு கூட சொல்லாத அனைத்தையும் அவளின் இப்பிறவியில் தமையனுக்கு சொல்லி இருந்தாள்.

 

அகல்யாவை காப்பாற்ற உயிரை கொடுத்தவன் இப்பொது வஞ்சியாகிய இஷானாவின் கதையை கேட்டு அவளை காக்க எதை கொடுப்பானோ?



கருத்துகள்