இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 18
இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ!
பிறவி 18
ஸ்ரீகாந்த் இங்கு வருவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
"சித்தப்பா" என்று அதர்வ் அழைக்கவும், திரும்பி பார்த்தனர்.
"ஹாய் மை பாய்ஸ்" என்று சொன்னவர் அப்படியே கண்களால் பாவனை அளந்தார்.
பதினெட்டு வயது இளம்பெண் இருந்தாலும் நல்ல வளர்த்தி இருந்தது. அவரது கண்கள் என்னவோ நேராக அவளின் கழுத்திற்கு கீழ் தான் சென்றது.
'நல்ல தளதளன்னு இருக்கா' என்று மனதிற்குள் நினைத்து, "யாரு இந்த பொண்ணு" என்றவர் வேண்டுமென்றே பாவனாவின் நாற்காலியில் கை வைப்பது போல் அவளின் கழுத்தையும் தோளையும் வருடி சென்றார். சிறுபெண் அவளுக்கு அவரின் தொடுகையின் வித்யாசத்தை உணரவும் முடியவில்லை.
அதுவும் தவறதுலாக கை பட்டு இருக்கும் என்று நினைத்து கொண்டாள்.
"இவ ரிதேஷோட பிரண்ட் சித்தப்பா" என்று அதர்வ் சொல்லவும், "ஓஹ்" என்று சொன்னவர், "என்ன பாய்ஸ் இந்தியா செலெக்ஷன் சீக்கிரம் வர போகுது அதுக்கு ரெடியா?" என்று கேட்கவும், "ம்ம் ரெடி ஆகணும். இன்னும் நாலு மாசம் இருக்கு தானே" என்றான் அபராஜித்.
"அபி உனக்கு நிறைய டிமாண்ட் இருக்கு" என்று சொல்லவும், "டேலண்ட் இருக்கனும்... டிமாண்ட் இருந்து என்ன பிரயோஜனம்?" என்று அவருக்கு எப்போதும் போல் பிடி கொடுக்காமல் பேசி இருந்தான்.
"அவரு தான் உங்கள செலெக்ட் பண்ணனும் அபி ப்ரோ" என்று ரிதேஷ் சொல்ல, "எனக்கு டேலண்ட் இருந்தா உங்க சித்தப்பாவால ஒன்னும் பண்ண முடியாது டா... என்ன உன் அண்ணாக்கு அவரா ரெகமண்ட் பண்ணுறார்? அவன் டேலண்ட் தானே?" என்று கேட்கவும், ஸ்ரீகாந்தின் இதழ்கள் விரிந்தன. அது என்னவோ அபி மட்டும் அவரின் பேச்சில் எப்போதும் சிக்குவது இல்லை. அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையும் வராது.
"பாப்போம் அபி" என்று அவர் சொல்லிவிட்டு, பாவனை பார்த்தவர், "பாப்பாக்கு எந்த ஊரு?" என்று கேட்க, "ஏன் போய் ஊர்ல பார்க்க போறிங்களா?" என்று அபராஜித் உடனே சொல்லி இருந்தான்.
அபியை முறைத்தவர், "பை" என்று சொல்லி பாவனாவின் கன்னம் தட்ட செல்ல, அவரின் கையை பிடித்தவன், "கைல ஏதோ இருக்கு" என்று சொல்லி ஆராய்ந்து அவரை நெருங்கி, அவருக்கு மட்டும் கேட்கும் குரலில், "அடுத்த தடவ அந்த பொண்ணு மேல கை வச்சா உங்க அண்ணா பசங்க முன்னாடியே கையை உடைச்சிருவேன்" என்று சொல்லி இருந்தான்.
அபி போன மாதம் தான் அவரை ஒரு பெண் விளையாட்டு வீராங்கனையுடன் பார்த்து இருந்தான். அவன் வந்த அந்த விடுதிக்கு அவரும் அந்த பெண்ணுடன் வந்து இருந்தார். அந்த பெண் பெண்கள் கிரிக்கெட் அணியில் இருக்கும் வீராங்கனை தான். ஆனால் பெரிதாக அவள் இப்போதெல்லாம் நன்றாக விளையாடுவதில்லை. ஆனாலும் இன்னும் அவளை இந்தியா அணியில் தான் வைத்து இருந்தார்கள்.
அவனின் கண்கள் கூர்மையாகின. யாரும் இல்லை என்று அவர்கள் பேசிய அனைத்தையும் அவன் கேட்டு தான் இருந்தான்.
"நீ இப்படியே வந்து என்னை சந்தோஷ படுத்துற வரைக்கும் உனக்கு இந்தியா டீம்ல நான் சான்ஸ் தரேன்" என்று சொல்லவும், "சரி சார்" என்று சொல்லி அவள் சென்று இருந்தாள்.
யாரும் அறியா ஸ்ரீகாந்தின் கருப்பு பக்கத்தை அபி அறிந்து இருந்தான்.
அவளை சென்றதும் அவர் திரும்ப, கைகளை கட்டி கொண்டு அங்கே வந்தான் அபராஜித்.
"சோ இப்படி தான் நீங்க செலெக்ஷன் பண்ணுறீங்க இல்லையா?" என்று கேட்டவனின் குரலில் ஒரு வித அழுத்தம் இருந்தது. அவருக்கு மாட்டி கொண்டோம் என்கிற குற்ற உணர்ச்சி எல்லாம் இல்லை. அபராஜித் தானே என்று தான் எண்ணி இருந்தார். இதுவே அதர்வ் மற்றும் ரிதேஷாக இருந்தாலும் அவருக்கு சமாளிக்க தெரியும். கை தெரிந்தவர் அவர். இல்லையென்றால் இந்த பதவிக்கு வந்து இருக்க முடியாதே!
"எல்லாரையும்னு சொல்ல முடியாது. எண்பது சதவீதம் என் நாட்டுக்காக இருபது சதவீதம் எனக்காக" என்று அவர் கண்களை சிமிட்ட, அவனோ முகத்தை சுழித்து இருந்தான்.
"உங்க பொண்ணு வயசு தெரியுமா இப்போ போன பொண்ணுக்கு?" என்று அவன் சீறவும், "நான் அவளை பொண்ணு மாதிரி பார்கலேயே.. எனக்கு கல்யாணமே ஆகல... ஆகி இருந்தா தானே பொண்ணுனு நினைப்பு எல்லாம் வரும். என்ன பொறுத்த வரை பொண்ணுங்க எல்லாமே சுகத்துக்கு தான்" என்று சொன்னவரை அருவெறுப்பாக பார்த்து இருந்தான் அபராஜித்.
"உன்னால ஒன்னும் பண்ண முடியாது அபி. நீ உன் விளையாட்டை பாரு.. இன்னும் கொஞ்ச மாசத்துல உன் செலெக்ஷன் இருக்கு" என்றவரை பார்த்து, "நீங்க ஒன்னும் எனக்கு பிச்சை எல்லாம் போடவேணாம். எனக்கு என் திறமை மேல நம்பிக்கை இருக்கு" என்றவன் அங்கிருந்து நகர்ந்து இருந்தான்.
அவன் மிகவும் தைரியசாலி. உண்மையாகவே திறமை வாய்ந்தவன். ஆதலாலேயே அவனுக்கு மக்கள் மத்தியில் நல்ல விமர்சனம் இருந்தது. ஆனால் இந்த முகத்தை ஸ்ரீகாந்த்திடம் பார்த்த பிறகு அவன் மொத்தமாக ஒதுங்கி கொண்டான்.
அவர் இங்கு வரும் போதே, அவர் பாவனாவை நோட்டமிட்டது முதல் அவளை உரசியது வரை அனைத்தும் அவனின் கண்களில் விழாமல் இல்லை. கிராமத்தில் இருந்து வந்த பெண் என்று இப்பொது தான் ரிதேஷ் சொல்லி இருந்தான். தந்தைக்கு ஒரே மகள். தாயும் இல்லை என்று அவனுக்கு தெரிந்த அனைத்தையும் அவளுக்கு உணவு வாங்கும் சமயமே ரிதேஷ் சொல்லி இருக்க, அப்படி பட்ட பெண்ணை இப்படி ஒருவனின் கையில் சிக்க வைப்பதில் அவனுக்கு விருப்பம் இல்லை.
"என்ன டா பேசுற சார் கிட்ட?" என்று கேட்ட அகரனிடம், "ஹான் அடுத்த வாட்டி எல்லாமே சிக்ஸ் தான் அடிப்பேன்னு சொல்றேன்" என்றவன் அந்த அடிப்பெனில் அழுத்தம் கொடுக்கவும் தவறவில்லை.
"நான் கிளம்புறேன். சும்மா இந்த பக்கம் வந்தேன் அதான் பார்த்துட்டு போகலாம்னு.." என்று அவர் சொல்லும் போதே, "இதோட வராதீங்க" என்று அபி சொல்லி அனைவரையும் பார்த்து, "இல்ல இங்க அவரு வந்தாருன்னா ஏதோ நம்ப அவரு கிட்ட டீம் செலெக்ஷன்க்காக பேசுற மாதிரி இருக்கும். சோ முடிச்சிட்டு பேசிக்கலாம்" என்று சொல்லவும், "ஆமா சித்தப்பா அபி ப்ரோ சொல்றது சரி தான். நீங்க இதோட வராதீங்க" என்று சொல்லி இருந்தான் ரிதேஷ்.
ஸ்ரீகாந்திற்கு முகம் கருத்து விட்டது. கேவலம் ஒரு சிறுபெண்ணை அவரை தீண்ட இந்த அபராஜித் விடவில்லை என்கிற ஆத்திரம்.
அவருக்கு அப்போது தான் பாவனாவை அடைய வேண்டும் என்கிற வெறியே வந்தது. எந்த பெண்ணை அவன் தீண்டினால் அடித்து விடுவேன் என்று சொன்னானோ அதே பெண்ணை தீண்டுவதா முழுதாக தின்று விட வேண்டும் என்று மனதில் சபதம் செய்து கொண்டார்.
"எல்லா நேரமும் காற்று உன் பக்கம் வீசி சிக்ஸ் அடிக்க முடியாது அபி பார்த்து" என்று அவரும் சொல்லிவிட்டு தான் சென்று இருந்தார்.
அவர் சொல்வதின் அர்த்தம் அவன் ஒருவனுக்கு மட்டும் தான் புரிந்தும் இருந்தது.
"அபி ப்ரோ உங்களை சித்தப்பா நிறைய ப்ராக்டிஸ் பண்ண சொல்றார் போல" என்று சொன்ன ரிதேஷை புன்னகையுடன் பார்த்தான் அபராஜித்.
அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அதர்வ்வும் சரி ரிதேஷும் சரி, ஏன் அவர்களின் தந்தை சிவராஜும் சரி பெண்கள் என்றாலே தள்ளி நிற்பவர்கள். ரிதேஷ் அவனாக ஒரு பெண்ணை தோழி என்று அறிமுகம் செய்வது கூட பாவனாவை தான். அவர்களுக்கு இப்படி ஒரு சித்தப்பா என்று நினைத்து கொண்டான்.
பாவனாவை பார்த்தவன், "சாப்பிடு" என்று சொல்ல, அவளும் சாப்பிட ஆரம்பித்தாள்.
"சோ பாவனா நீ என்ன மா பண்ண ஆசை படுற?" என்று அகரன் கேட்க, "அது சார்.." என்று அவள் சொல்ல, "சார்ரா அண்ணான்னு கூப்பிடு மா" என்று அவனும் சொல்லி இருந்தான்.
அவளுக்கோ தயக்கம் அவர்களை அண்ணா என்று அழைப்பதா? அதற்கெல்லாம் அவளுக்கு அருகதை இருக்கிறதா?
"நானும் கிராமத்துல இருந்து வந்தவன் தான் மா.. எங்க ஊர்ல இருக்க நாலு அராத்தும் என்னை அண்ணாவா மனுஷனா கூட கூப்பிடாதுங்க... அகரன்னு பேரை சொல்லி வேற கூப்பிடுவாளுங்க" என்று சொல்லவும், "அது யாரு டா நாலு அராத்து?" என்று அபி கேட்க, "என் பக்கத்து வீட்டு பொண்ணும் அவளோட நண்பிகளும்" என்று சொல்லி இருந்தான்.
"சரி மா இப்போ சொல்லு என்ன பண்ண ஆசை?" என்று மீண்டும் அங்கேயே வந்து நிற்க, "அது அண்ணா...சொன்னா சிரிக்க கூடாது" என்று அவள் சொல்லவும், "அட சொல்லு மா" என்று அவன் மீண்டும் கேட்க, "எனக்கும் உங்களை மாதிரி கிரிக்கெட்டர் ஆகணும். எங்க ஸ்கூல் டீம்ல எல்லாம் ஆடி இருக்கேன்" என்றவள் சொல்லவும், இப்பொது அதர்வ் மற்றும் அபியின் கண்களும் அவளில் படிந்தது.
"வாவ் அப்போ நல்லா ஆடுவியா?" என்று ரிதேஷ் கேட்க, "இவங்க அளவுக்கு இல்ல ஆனா ஆடுவேன்" என்று சொல்லவும், "பெட்டெர் ஆர் பௌலர்?" என்று அதர்வ் கேட்கவும், "பெட்டெர் கம் கீப்பர் சார்" என்றதும், "அவன் அண்ணா நான் சார்ரா? ஏன் அண்ணானு கூப்பிடு" என்று சொல்லி இருந்தான்.
அவளுக்கு இவ்வளவு அவர்கள் பேசுவதே பெரிய விடயமாக இருந்தது.
"ப்ராக்டிஸ் பண்ணுறியா?" என்கிற அபியை பார்த்து, "பண்ணிக்கிட்டு தான் இருக்கேன் அண்ணா.. இனி எங்க பண்றதுனு தெரியல?" என்று அவனை மட்டும் சரளமாக அண்ணா என்று அழைத்து இருந்தாள்.
"இது என்ன மா நாங்க எல்லாம் கேட்டு அண்ணானு கூப்பிட சொன்னோம். ஆனா அவனை மட்டும் சரளாமா கூப்பிடுற" என்றான் அகரன்.
"அவ தான் அபி ப்ரோவ முன்னவே அண்ணானு சொல்லி இருந்தாலே" என்று ரிதேஷ் இப்போதும் அவளை பார்க்க, "ஐயோ இல்ல அது ஒரு ப்ளோல தான் வந்தது" என்று தன்னிலை விளக்கம் கொடுக்கும் சிறுபெண்ணை அபிக்கு பிடித்து தான் இருந்தது.
"சரி எங்க கூட இன்னைக்கு ப்ராக்டிஸ் வரியா?" என்றதும் அவளின் கண்கள் விரிந்தன. இவர்களுடனா?
"நீங்க செபாக்ல தானே ப்ராக்டிஸ் பண்ணுவீங்க?" என்று கேட்கவும், "ம்ம் வந்து கிரௌண்ட்ட பாரு" என்று சொல்லவும், அவளுக்கோ இப்படி முதல் நாளிலேயே இத்தனை பெரிய ஆட்களுடன் தனியாக செல்ல வேண்டுமா என்று மனதில் தோன்றினாலும் இளம் கன்று பயம் அறியாது என்பதை உறுதி செய்யவும், அவளின் கிரிக்கெட் ஆர்வமும் சேர்ந்து கொள்ள, "சரி" என்று ஒப்புக்கொண்டாள்.
"சரி காலேஜ் மூணு மணிக்கு முடியும். அஞ்சு மணிக்கு ரெடியா இரு. நான் பிக் அப் பண்ணிக்குறேன். ஹாஸ்டெல்ல தானே தங்கி இருக்க?" என்று அபி கேட்க, அவளும் ஆமோதிப்பாக தலையசைத்தாள்.
"நான் இவளை கூட்டிட்டு வரேன் டா" என்று சொல்லி சாப்பிட்டு விட்டு அபராஜித் நகர்ந்து கொண்டான்.
"அபி ப்ரோக்கு உன்னை பிடிச்சி இருக்கு போல..அவரோட கார்ல எல்லாம் பொண்ணை இல்ல படங்களையே ஏத்த மாட்டார்" என்று ரிதேஷ் சொல்ல போகும் அவனை தான் பார்த்தாள் பாவனா.
சொன்னது போல் இதோ ஐந்து மணிக்கு அவளை அழைத்து செல்ல பெண்கள் விடுதிக்கு வந்து இருந்தான் அபராஜித்.
கருத்துகள்
கருத்துரையிடுக