இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 13
இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ!
பிறவி 13
இருவரும் தண்ணீர் குடித்து கொண்டு இருந்தனர்.
"என்ன மா தம்பிக்கு தண்ணி கொடுத்தியா?" என்று அவளின் தந்தை மணி கேட்கவும், தண்ணீரை முழுதாக குடித்து முடித்தவள்,"ஹான் கொடுத்துட்டேன் ப்பா" என்று சொல்லிக்கொண்டே அபராஜித்தை முறைத்தாள்.
அவனோ அதை எல்லாம் அசட்டை செய்து, "அங்கிள் உங்க பொண்ணுக்கு பையன் பார்க்க ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேளுங்க செய்யுறேன்" என்று வேறு சொல்ல, ரிதேஷோ, "அபி ப்ரோக்கு தைரியம் தான்" என்று அகரனின் செவிகளில் சொல்ல, அதர்வ் மனதிற்குள்ளோ, 'இவன் எதுக்கு இவளோ நல்லவன் மாதிரி நடிக்குறான்?' என்று நினைத்து கொண்டு இருந்தான்.
"சரி மாமா நாங்க அப்போ கிளம்புறோம்... அப்பா இன்னும் இரண்டு நாள்ல பஞ்சாயத்துன்னு சொன்னார். வஞ்சி சித்தியை ஒரு வழி ஆக்குறேன்னு அம்மா சொல்லிக்கிட்டு இருக்காங்க" என்றும் சொல்லி விட்டு தான் சென்று இருந்தான்.
அவர்கள் சென்ற பிறகு, மணியும் கூட, "அந்த பையன் சரியா தான் சொல்லி இருக்கான் சுப்பு... உனக்கு மாப்பிள்ளை இருக்கலாம்னு இருக்கேன்" என்றதும், "சரி அப்புறம்? மாப்பிள்ளை பார்த்து என்ன? கல்யாணம் பண்ணி கொடுத்துட்டு நீங்க தனியா இருப்பீங்களா? உங்க இரண்டாவது பொண்ணு இப்பவே உங்களை பாக்குறது இல்ல... நானும் போய்ட்டா உங்க நிலைமை? வேணும்னா எனக்கு மாப்பிள்ளை பார்க்கும் பொது உங்களுக்கும் பொண்ணு பாருங்க...உங்களை ஒருத்தி கிட்ட பிடிச்சி கொடுத்துட்டு நானும் நிம்மதியா ஒருத்தனை கட்டிக்கிறேன்" என்று சொல்லவும், "லூசா நீ? பேரன் பேத்தி பெத்துக்குற வயசுல எனக்கு கல்யாணமா?" என்று அவரும் சீறினார்.
"சரி அப்போ உங்களையும் என் கூட அழைச்சுக்கிட்டு போவேன் சரியா? இல்ல வீட்டோட மாப்பிள்ளை பாருங்க... இது ரெண்டுத்துல எது நடந்தாலும் சரி நான் நீங்க சொல்லுற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்குறேன்" என்றவளை பார்த்து, "அது எப்படி மா முடியும்?" என்று கேட்கவும், "அப்போ என்னை இப்படியே விட்டுடுங்க... அப்பா உங்களை யாரு பார்த்துக்குவா? உங்களுக்கும் உடம்பு இப்போ எல்லாம் சரி இல்லமா தானே போகுது... எனக்காகவும் சுதர்ஷிகாகவும் வாழ்ந்தே உங்க வாழ்க்கை போய்டுச்சு... இப்போ நாங்க தானே உங்களை பார்த்துக்கணும்... அவ சின்ன பொண்ணு ஆனா நான் அப்படி இல்லையே... ஏன் அப்பா பொண்ணா பிறந்தா அப்பாவை கூட நாங்க பார்த்துக்க எங்களுக்கு உரிமை இல்லையா?" என்று கேட்டவளின் கண்களில் கண்ணீர் நின்று இருந்தது.
சாபக்கேடு தானே அது! பெண்களாய் பிறந்ததால் திருமணத்திற்கு பின்பு பெற்றோர்களை பார்ப்பதற்கு கூட கணவனின் அனுமதியை பெற வேண்டும் என்கிற அவல நிலை இன்றும் இருக்கிறதே!
அவளுக்கு தந்தையை விட்டுவிட்டு செல்ல எல்லாம் மனம் இல்லை. ஆதலால் இந்த முடிவிற்கு வந்து இருந்தாள்.
இதே சமயம் வஞ்சிக்கு தான் இன்னும் மனமே ஆறவில்லை.
தலையை பிடித்து கொண்டு தாரிக்காவின் வீட்டின் பின் புறம் அமர்ந்து இருந்தாள். கண்முன் அவளுக்கு பிடித்தவன், அவளின் மனதை வென்றவன், மனதை மட்டுமா அவளை மொத்தமாக கொடுத்து இருந்தாலே அப்போது அவனை எத்தனை பிடிக்கும் என்று சொல்லவும் வேண்டுமா?
ஆனால் இதை எல்லாம் இப்பொது சொன்னால் பைத்தியம் என்று தான் கூறுவார்கள். அவளின் வாழ்க்கை இப்படியே போராட்டமாக தான் செல்லும் போல என்கிற மனநிலையில் இருந்தாள்.
"ஹலோ" என்கிற குரல் கேட்கவும், சட்டென அவள் திரும்பி பார்த்து எழும் போதே, கால் தடுக்கி விட்டது. அவள் விழுவதற்கு முன் அவளின் இடையில் கையை பிடித்து தாங்கி இருந்தான் அவளது அதர்வ்.
அவளின் கண்கள் விரிந்தன.
"ஆர் யு ஓகே?" என்று கேட்டவன், அப்போதும் அவளின் இடையில் இருந்து கையை எடுத்தான் இல்லை.
"ம்ம்" என்றவள் இப்போது நிற்க, அவளின் கண்கள் இப்பொது அவனின் கையை காட்டியது.
அவனோ உடனே, "சாரி" என்று கையை விளக்கி கொள்ள, "நீ எதுவும் யோசிக்காத... உன்னை அப்படி எல்லாம் யாரு கிட்டையும் நான் கொடுத்துற மாட்டேன்" என்று அவன் சொல்ல, அவனை உடனே நிமிர்ந்து பார்த்தாள்.
"ஐ மீன் நான் தானே காசு தரேன்னு சொல்லி இருக்கேன். அப்படி எல்லாம் உன்னை விட்டுட மாட்டேன்" என்று எதையோ சமாளித்து அவன் நகர போக, "ஏன் எனக்காக இதெல்லாம் பண்ணுறீங்க?" என்று கேட்கவும், அவனும், "தெரியல... ஆனா இந்த கண்ணுல இருந்து கண்ணீர் வந்தா என்னால தாங்கிக்கவே முடியல" என்று உண்மையாகவே அவனின் மனதை சொல்லி தான் இருந்தான்.
அவளுக்கு இதற்கு மேல் கேட்க எதுவும் தேவை பட வில்லை. அவனுக்கு இப்போதும் அவளின் மேல் ஏதோ ஒரு உள்ளுணர்வு சார்ந்த உணர்வு இருக்கிறது என்பதே போதுமானதாக இருந்தது.
"நாளைக்கு ஆத்து கிட்ட வாங்க... நல்லா இருக்கும்" என்று சொல்லவும், "அகரன் கிட்ட கேட்டு பாக்குறேன்" என்று சொல்லி சென்று விட்டான்.
அன்று அப்படியே கழிந்தது.
அடுத்த நாள் காலையிலேயே ஆத்தங்கரைக்கு நம் நாயகிகள் தான் வந்து இருந்தார்கள்.
"அடியேய் சுப்பு எதுக்கு டி நம்ப ஊருக்கு வந்து இருக்க அந்த கிரிக்கெட் அண்ணா கிட்ட சண்டை போட்டுக்கிட்டு இருக்க?" என்று கேட்ட இளவஞ்சியை பார்த்த, சுப்ரியா, "நானா டி சண்டை போடுறேன்? அவன் தான் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி எப்போ பாரு எதையாவது செய்யுறான்? வேணும்னே என் வயல்ல ஷு போட்டுட்டு நடக்குறான். ஏன் டான்னு கேட்டா அப்படி தான் பண்ணுவேன்னு இன்னும் நாலு மிதி மிதிக்கிறான். சரி அது போகட்டும்னு விட்டா, என் அப்பா கிட்டயே வந்து உங்க பொண்ணுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி கொடுங்கன்னு கொளுத்தி போட்டுட்டு போறான்... காலம் கெட்டு கிடக்குதாம்... அப்படி இப்படின்னு இத்தனை நாள் நல்லா இருந்த என் அப்பாவோட நெஞ்சுல நஞ்சை விதைச்ட்டு போய்ட்டான் பாவி" என்று அவள் கையை முறிக்க, அப்படியே அவளை பார்த்தா இளவஞ்சிக்கு தான் தூக்கி வாரி போட்டது.
அய்யன்னாருக்கு வெள்ளை பெயிண்ட் அடித்தது போல ஆறடிக்கு மேல் உயர்ந்து ஆஜான உடல் கொண்டு சுப்ரியாவின் பின்னால் நின்று கொண்டு இருந்தான் அபராஜித்.
"கருமம் என் மூக்குல கூட அந்த ஆறடி அறிவில்லாதவன் வாசனை தான் இப்போ கூட வருது... அவனும் அவன் யூஸ் பண்ற பெர்ப்யூம்மும்... அவனை மாதிரியே நாறுது" என்று அவள் சொல்லிமுடிக்கும் போதே, "சானிய விட என்னோட ஷனல் பெர்ப்யூம் நாறுதா?" என்ற அவனின் குரலில் ஆடி தான் போய்விட்டு இருந்தாள் சுப்ரியா.
அவளோ திரும்பி பார்க்க, அங்கே கைகளை கட்டி கொண்டு நின்று இருந்தான் அபராஜித். அவனை தொடர்ந்து அகரன், ரிதேஷ், அதர்வ் என்று மூவரும் வந்து இருந்தார்கள்.
"ஆத்தங்கரைக்கு வரணும்னு சொன்னாங்க அதான் கூட்டிட்டு வந்தேன். நீங்க இங்கையும் இருப்பீங்கனு தெரியாது டி" என்று அவர்களை பார்த்து சொல்லவும், "அதான் வந்துடீங்களே அப்புறம் என்ன?" என்று தாரிக்காவும் அமர்ந்து விட்டாள்.
கூடவே, "வாவ் வாவ்" என்று குறைத்து கருப்பன்.
"இது உன்கூடவே தான் இருக்குமா?" என்று அபி சுப்புவை பார்க்க, "ஆமா இப்போ என்ன?" என்று கேட்கவும், "ஹான் இரண்டு பேருக்கும் வித்யாசமே இல்ல அதான் கேட்டேன்" என்று சொல்லி அருகில் அமர்ந்து விட்டான்.
சிறிது நேரம் கழிந்து இருக்கும், சுப்புவிற்கு அபியை வைத்து செய்ய வேண்டும் போல இருந்தது. அருகே அங்கே மண்ணில் பிரண்டு கொண்டிருந்த கருப்பனை பார்த்து, "டேய் கருப்பா! உனக்கு அறிவில்ல ஒரு வாட்டி சொன்னா உனக்கு புரியாது?" என்று அவளின் நாயை திட்டுவது போல அபராஜித்தை தான் திட்டி கொண்டு இருந்தாள் சுப்ரியா.
அவளின் அருகே இளவஞ்சி, ஜானகி, தாரிக்கா என்று மூவருமே இருந்தனர்.
"என்ன டி பேசுற?" என்று இளவஞ்சி சொல்லவும், "அவனுக்கு புரியாதாம் மா... கொஞ்சம் நல்லா சொல்லு" என்று அதர்வ் சொல்ல அவனை பார்த்து முறைத்தான் அபராஜித். அதை எல்லாம் அவன் அசட்டை செய்து இருந்தான். அகரன் மற்றும் ரிதேஷிற்கும் சிரிப்பு தான்.
யாருக்கும் அடங்காதா அபராஜித்தையே இப்படி ஆட்டி வைத்து கொண்டிருக்கிறாள் ஒருத்தி என்று நினைக்கும் போதே அவர்களுக்கு ஒருவித மகிழ்ச்சி தான்.
"அது எல்லாம் நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல மனுஷனுக்கு ஒரு சொல்லு அண்ணா... இதெல்லாம் எங்க இருந்து சில ஜென்மங்களுக்கு புரிய போகுது... எது செய்ய கூடாதுனு சொல்லுறோமோ அதை தான் செய்யுறாங்க" என்று அப்போதும் விடாமல் பேசினாள் அவள்.
அபராஜிதோ அவளை பார்த்து, "மத்தவங்க வழியில குறுக்க மறுக்க ஓடாம இருந்தா அடுத்தவங்களுக்கு அவங்க வாழ்க்கைக்குள்ள வர மாட்டாங்க" என்று பேசி இருந்தான்.
இதே சமயம் அங்கே ஓடி வந்து இருந்தான் தர்ஷன் தாரிக்காவின் தம்பி தான்.
"எதுக்கு டா ஓடி வர?" என்று கேட்கவும், "சுப்பு அக்கா.. மணி சித்தப்பாக்கு ஹார்ட் அட்டாக்" என்று அவன் சொல்லவும், அப்படியே நின்று விட்டாள் சுப்ரியா.
கருத்துகள்
கருத்துரையிடுக