இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 11
இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ!
பிறவி 11
விருமாண்டி இங்கே வருவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவனை பார்த்ததும் பெண்களின் கண்கள் மட்டும் அல்ல, அகரனின் கண்கள் கூட விரிந்தன.
அவன் எப்படி பட்டவன் என்று ஊருக்கே தெரியும் அகரனுக்கு தெரியாதா என்ன?
"யாரு ப்ரோ இந்த மீசை?" என்று ரிதேஷ் அகரனின் செவியில் கேட்க, "இவன் தான் டா அந்த நாற்பத்தி அஞ்சு வயசு கிழவன். வஞ்சிக்கு பார்த்து இருக்க மாப்பிள்ளை" என்றதும், "மாப்பிள்ளையா? இவனுக்கே மாப்பிள்ளை வர வயசுல இருக்கான். இப்போ இவன் மாப்பிள்ளையா?" என்று ரிதேஷ் கேட்டு இருந்தான்.
"உன் சித்தி காரி கிட்ட என்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுனு சொன்னியா?" என்று அவளை அதட்டல் தொனியில் கேட்டு இருந்தான் விருமாண்டி.
ஒரு கணம் வஞ்சியின் உடல் நடுங்கி அடங்கியது.
"உன் சித்தி சோலையா என்கிட்ட பத்து லட்சம் வாங்கி இருக்கா... அது இல்லமா அவளோட பொண்ணுங்களுக்கு கல்யாணம் செலவுக்கு வேற தனியா காசு வாங்குறேன்னு சொல்லி இருக்கா" என்றதும், வஞ்சி விழி விரித்து பார்த்தாள்.
அவளை விற்றே விட்டார்களா? என்று மனது பதைத்தது. அவள் வெறும் பொருளா? அவள் உயிருள்ள பெண் தானே! அவளை போய் இப்படி விற்க எப்படி தான் மனம் வந்ததோ? என்று நினைத்து மனது அவளுக்கு பற்றி எரிந்தது. ஆனாலும் வெளியே எதுவும் சொல்ல முடியவில்லை.
"யோவ்! உனக்கு அறிவில்லை, அவ சித்தி காரிக்கு தான் புத்தி இல்ல, இருபத்தி ஆறு வயசு அவளுக்கு நாற்பத்தி அஞ்சு வயசு உன்னை போய் கல்யாணம் பண்ணி தர முடியுமா? அதெல்லாம் விட நீ தான் தெருவுக்கு ஒரு கூத்தியால வேற வச்சி இருக்க... அப்புறம் எதுக்கு யா இவ உனக்கு?" என்று சுப்பு எகிறிக்கொண்டு வர, "ஹே சுப்பு நீ விலகி போ! இது எனக்கும் அவளுக்கும் நடக்குறது. எனக்கு இருபத்தி ஆறு வயசு பொண்ணு தான் வேணும். அது என் சவுகரியம்" என்று முடித்து விட்டான்.
ஜானகியோ, "ஆனா அவளுக்கு நாற்பத்தி அஞ்சு வயசு கிழவன் எல்லாம் சவுகரியம் இல்லையாம்... அவளுக்கு முப்பது வயசு ஹீரோ தான் வேணுமாம்" என்றதும், "ஹே நான் அவங்களை விட நின்னு விளையாடுவேன். வேணும்னா வாங்க டி உங்க நாலு பேரையும் கூட ஒண்ணா" என்று அவன் பேசும் போதே, "எதுக்கு இவளோ நான்சென்ஸ் மாதிரி பேசிகிட்டு இருக்க? அதான் அந்த பொண்ணு பிடிக்கலன்னு சொல்லுதுல" என்று ரிதேஷ் தான் நிறுத்தி இருந்தான்.
"ஓஹ்! நீங்கலாம் அந்த கிரிக்கெட் தம்பிங்க தானே, இங்க பாருங்க ஊருக்கு உங்க நண்பனை பார்க்க வந்தீங்களா அதோட போய்டணும். எங்க ஊருல என்ன நடக்குதுன்னு நாங்க பார்த்துக்குறோம்" என்று விருமாண்டி சொல்லவும், "எப்படி நீ இப்படி பொண்ணுங்க கிட்ட வம்பு பண்ணுவ உங்க ஊர்ல இருக்க பொட்டை பசங்க மாதிரி நாங்க பொத்திகிட்டு போவோம்னு நினைச்சியா?" என்று கண்கள் இடுங்க கேட்டு இருந்தான் அபராஜித்.
அவனுக்கு சும்மாவே சனி நாக்கில் தாண்டவமாடுவான். இப்படி அவர்களாக வந்து வாங்கி கொண்டால் அமைதியாக இருப்பானா அவன்?
"டேய்! நீ யாரு டா ரொம்ப பேசுற" என்று கேட்டுக்கொண்டே விருமாண்டி எகிறிக்கொண்டு வர, அதர்வ் அவனின் நெஞ்சில் கை வைத்து தடுத்து இருந்தான்.
"நீ யாரு டா? இப்படி பொண்ணுங்ககிட்ட வம்பு பண்ணிக்கிட்டு இருக்க? அந்த பொண்ணுங்களுக்கே உன் பொண்ணு வயசு இருக்கும். அவங்க கிட்ட இப்படி அசிங்கமா பேசுற நீ" என்றவன் யோசிக்கவே இல்லை அவனின் முகத்தில் ஓங்கி குத்தி இருந்தான்.
அதர்வ் அடிப்பான் என்றெல்லாம் யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இப்படி பெண்களிடம் பேசிக்கொண்டே இருக்கிறான். அதுவும் கீழ்த்தனமாக பேசுகிறான்.
"டேய் என்ன டா பண்ண?" என்று அகரன் பதட்டமாக கேட்கவும், "ப்ரோ அதர்வ் அடிச்சிட்டான்" என்று ரிதேஷ் சொல்லவும், "அம்மா" என்று முகத்தை தாங்கிய விருமாண்டி அதற்கு மேல் பொறுக்காமல், "டேய் அவளை நான் விலை கொடுத்து வாங்கியிருக்கேன். அவளை இன்னைக்கு நான் அடஞ்சே தீருவேன்" என்று வஞ்சியின் கைகளை பற்ற வர, அதற்குள் அவனின் கையை முறுக்கி பிடித்து அடித்து இருந்தான் அதர்வ்.
"நீ ஆம்பளையா இருந்தா என்ன தாண்டி அந்த பொண்ணோட கையை பிடி டா பார்க்கலாம்" என்று சட்டையை மடித்து கொண்டு வஞ்சிக்கு முன் வந்து நின்றான் அதர்வ்.
வஞ்சியின் கண்கள் விழி விரித்து அவனை தான் பார்த்தது. இப்பிறவியிலும் அவளை காக்க நிற்கிறான். அவர்களின் பந்தம் எந்த பிறவியிலும் யாராலும் பிரிக்க முடியாதது தானே!
விருமாண்டியோ, "டேய் வாங்க டா" என்று சொல்லவும், இன்னும் நாலு காட்டெருமைகளை போல் தடி மாடுகள் வந்து நின்றார்கள்.
"இவனுங்களை அடிச்சி போட்டுட்டு எனக்கு வஞ்சியை தூக்கிட்டு வாங்க டா" என்று சொல்லவும், "இன்னைக்கு ஆக்ஷன் தான் போல" என்று அபராஜித் சொல்லிக்கொண்டே அவனின் கையில் இருந்த ரோலெக்ஸ் வாட்சை கழட்டி அருகில் இருந்த சுப்ரியாவை பார்த்து, "இதை வச்சிக்கோ" என்று கொடுத்து விட்டு சென்றான்.
ரிதேஷ் மற்றும் அகரனும், "இன்னைக்கு சங்கு தான டா" என்று சொல்லிக்கொண்டே அவர்களும். முன்னேறி செல்ல, பிறகு என்ன சண்டை வெடித்தது.
அவர்கள் ஒன்றும் சாதாரண ஆண் மகன்கள் இல்லையே! சண்டை பயிற்சி மட்டும் இல்லாமல் விளையாட்டிலும் சிறந்து விளங்கும் வீரர்கள். ரிதேஷ் கூட குத்து சண்டை வீரன் தான். அடிப்பது எல்லாம் அவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல!
நான்கு ஆண் மகன்கள் அந்த நான்கு தடிமாடுகளுடன் சண்டை செய்ய, அதற்குள் விருமாண்டி வந்து வாஞ்சியின் கையை பிடிக்க, அவளின் வளையல்கள் அனைத்தும் உடைய துவங்கியது.
"வலிக்குது விடு டா" என்று அவள் கத்தவும், "அவளை விடு டா" என்று ஜானகி, தரிக்கா, சுப்பு என்று அனைவரும் அவனை பிரித்து எடுக்க முயல, அவனின் முன் பெண்கள் அவர்களால் எதிர்த்து நிற்கவே முடியவில்லை.
அவனுக்கோ கோவம் வேறு! தரிக்காவை பிடித்து தள்ளி விட்டு இருந்தான்.
"அம்மா" என்று அவள் சுவற்றில் சென்று மோத, இரத்தம் கூட வந்து விட்டது.
"தாரு" என்று ஜானகி அவளை நோக்கி ஓட, சுப்ரியாவோ அப்போது தான் ஏதோ நினைவில், "கருப்பா" என்று கத்தியவுடன் எங்கிருந்து தானோ தெரியவில்லை, நான்கு கால் பாய்ச்சலில் வந்து இருந்தான் அவளது கருப்பன்.
"வாவ் வாவ்" என்று அவன் கத்திகொண்டே விருமாண்டியின் புறம் வர, இத்தனை நேரம் பிடித்து இருந்த கைகளை விட்டு இருந்தான்.
"அவனை கடிச்சி கோதரு டா" என்று சுப்ரியா சொல்லவும், கருப்பன் எகிறிக்கொண்டு விருமாண்டியை நோக்கி செல்லவும், அவனோ அங்கிருந்து ஓட்டம் பிடித்து இருந்தான்.
அதற்குள் இவர்களும் நால்வரை அடித்து துவைத்து விட்டு வர, "தாரு" என்று அகரன் தரிக்காவின் பக்கம் ஓட, "என்ன ஆச்சு?" என்று கேட்டு கொண்டு அதர்வ் வஞ்சியின் கைகளை பிடித்து இருந்தான்.
அவளுக்கோ அவன் கையை பிடித்ததும் கோடி மின்சாரம் பாய்ந்த உணர்வு. அவனின் கைகளில் எத்தனை முறை முத்தம் கொடுத்து இருக்கிறாள் என்று அவளுக்கு கணக்கே இல்லை. இருந்தாலும் இந்த பிறவியில் தொடுதல் அரிது என்னும் நிலை தான்.
"நிறைய ஸ்க்ரசஸ் இருக்கு... ஹாஸ்பிடல் போகலாம்" என்று அதர்வ் சொல்ல, "ஆமா ஹாஸ்பிடல் போகலாம் டா... தாருக்கு கூட ப்ளாட் லாஸ்" என்று அகரன் சொல்ல, "நாங்க போய் கார் எடுத்துட்டு வரோம்.. ஜஸ்ட் டென் மினிட்ஸ்" என்று ரிதேஷ் மற்றும் அபராஜித் இருவரும் சென்றனர்.
அகரனின் வீட்டில் ஒரு கார் இருப்பதால், அபராஜித் அவனின் காரையும், அகரனின் காரை ரிதேஷும் எடுத்து வந்தனர்.
ரிதேஷ், ஜானகி, அகரன் மற்றும் தாரிகா ஒரு காரிலும், அதர்வ், வஞ்சி, சுப்பு மற்றும் அபராஜித் ஒரு காரிலும் ஏறிக்கொண்டு அருகில் இருக்கும் ஒரு கிளினிக்கிற்கு சென்றார்கள்.
அங்கே இருந்த மருத்துவரும் அனைத்து முதலுதவி செய்து கொண்டிருக்க, செவிலியர்களோ, "வாவ் இவங்க எல்லாம் கிரிக்கெட்டர்ஸ் தானே" என்று கேட்டுக்கொள்ளவும், "சீக்கிரம் கிளம்பனும் டா... மீடியா எல்லாம் வந்திரும்" என்று சொல்லிக்கொண்டே விரைவாக அங்கிருந்து நகர்ந்து இருந்தனர்.
நேராக தாரிக்காவின் வீட்டிற்கு தான் வந்தார்கள்.
அவளின் தலையில் கட்டை பார்த்ததும், அவளின் பெற்றோர்கள் பயந்து விட, நடந்த அனைத்தையும் அகரன் சொல்லி இருந்தான்.
"மாமா வஞ்சிய இப்படி பட்ட ஒருதனுக்கா கொடுக்கணும்?" என்று அகரன் கேட்க, "நான் நாளைக்கே போய் வஞ்சியோட அப்பா கிட்ட பேசுறேன். என்ன நினைச்சுகிட்டு இருக்கான் அவன்?" என்று அவருக்கும் கோவமாக வந்தது.
இதே சமயம், "அடியேய் சிறுக்கி! விருமாண்டிக்கு முந்தி விரிக்காம வேற எவனுக்கு டி விரிக்கலாம்னு இருக்க?" என்று கேட்டுக்கொண்டே கொண்டையை அல்லி முடிந்து உள்ளே வந்தார் மயில்.
"யாரு இந்த வில்லி?" என்று அபராஜித் சுப்ரியாவை பார்க்க, "அவங்க தான் வஞ்சியோட சித்தி" என்று சொன்னவளை பார்த்து, "ஓஹ்" என்று சொல்லி இருந்தான்.
வஞ்சியின் சித்தி என்ன செய்ய காத்து இருக்கிறாரோ?
கருத்துகள்
கருத்துரையிடுக