கண்கள் சொல்லும் கதைகள்! கதை 2

 

கண்கள் சொல்லும் கதைகள்!

கதை 2


"ஹலோ மிஸ்" என்று சொல்லியவன் ஒருகணம் அவளை பார்த்து, "மிஸஸ்" என்று திருத்தி இருந்தான்.

 

அவன் அழைத்ததும் தான் சுயநினைவுக்கு வந்தான்.

 

அவளின் கண்களை அவளாலே நம்ப முடியவில்லை.

 

உண்மையாகவே இவனா நிற்கிறான்?

 

நான்கு வருடங்களுக்கு முன்னால் அவளின் மனதில் ஆசனமிட்டு அமர்ந்து இருந்தவன் இவன் தானே! ஆனால் அவனுக்கு தான் இப்படி ஒருத்தி இருக்கிறாள் என்றே தெரியாது.

 

அவனை பார்ப்பாள் என்று எல்லாம் நினைத்தது கூட கிடையாது. இன்று பார்க்கிறாள், அதுவும் இத்தனை நெருக்கத்தில் பார்க்கிறாள், ஆனால் எதுவும் பேச முடியாத சூழல்.

 

அவனோ அவனின் தெத்துப்பல் தெரிய ஒரு சிரிப்பு சிரித்து, "என்னங்க, நான் என்ன பார்க்க அவளோ கொடூரமாவா இருக்கேன்?" என்று கேட்கவும், அவளுக்கோ எப்படி இத்தனை இயல்பாக பேசுகிறான் என்கிற எண்ணம் தான்.

 

அவனின் பதவி அப்படி.

 

"வீர ராவணன் ஐபிஎஸ்" என்றால் தமிழ்நாட்டில் தெரியாதவர்கள் மிக மிக சொற்பம் தான்.

 

பெயருக்கு ஏற்றாற்போல் ஆறடிக்கு நெருங்கிய உயரம். மாநிறத்தில் அவனின் பதவிக்கு என்றே முறுக்கேறிய தேகம் கொண்டு, முடியை ஒட்ட வெட்டி இருந்தான்.

 

அவனுக்கு என்று இருக்கும் பெண் ரசிகைகள் மிக மிக அதிகம். நான்கு வருடங்களுக்கு முன் அவன் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பேரும் பொழுதே அவனை அனைவரும் கொண்டாடி தீர்த்தனர்.

 

அவனின் புகைப்படத்தை அப்போது தான் முதன்முறை அவளும் பார்த்தாள்.

 

அவனின் பேட்டியை தொலைக்காட்சியில் கண்டவளுக்கு அப்போதே அவனின் மீது ஒரு ஈர்ப்பு.

 

படித்தவன், அழகாக வேறு இருந்தான். அந்த பருவத்திற்கே உரிய ஒரு வித தூண்டுதலில் அவனை அவளுக்கு பிடித்து விட்டது.

 

அன்றில் இருந்து அவனை பற்றிய அனைத்து செய்திகளையும் சேமிக்க ஆரம்பித்து இருந்தாள். ஆறு மாதங்கள் வரையில் தான். அதற்குள் தான் அவளுக்கு திருமணம் ஆகி விட்டதே! அதற்கு பிறகு ஒரு ஆடவனை நினைப்பது தவறு என்று நினைத்து ஒதுக்கி வைத்து விட்டாள்.

 

ஆனாலும் அவனை பற்றிய செய்திகள் கண்ணில் பட்டு தொலையும் பொது அவனை ரசிக்காமல் இருக்கவும் முடியாது.

 

இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அவனை சென்னை மாற்றி உள்ளார்கள் என்கிற செய்தியும் வந்தது.

 

ஆனால் இப்படி அவளின் வீட்டின் முன்னே வந்து நிற்பான் என்று அவள் என்ன கனவா கண்டாள்?

 

"மிஸஸ் கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?" என்கிற அவனது கேள்வியில் சற்றே அவளின் சுயநினைவுக்கு வந்தவள், "இருங்க" என்று உடனே சென்று ஒரு குவளையில் தண்ணீர் எடுத்து கொண்டு வந்தாள்.

 

அவளும் உள்ளே அழைக்க வில்லை, அவனும் செல்ல வில்லை.

 

ஆனால் அவள் சென்றதும், வீட்டை கண்களாலேயே அளந்தான். காவலன் அவனுக்கு எங்கும் சுற்றி நோக்கும் பழக்கம் இருந்தது.

 

வீடு நேர்த்தியாக இருந்தது.

 

அவனின் கண்கள் அங்கே தொங்கி கொண்டிருந்த இளநிலாவின் புகைப்படத்தில் நிலைத்தது.

 

"க்யூட்டா இருக்கே இந்த வாண்டு" என்று அவனின் வாய் முணுமுணுக்கும் போதே, கண்களை கசக்கி கொண்டு, "ம்மா ம்மா" என்று அவளின் அறையில் இருந்து வெளியே வந்தாள் இளநிலா.

 

நிலாவே தான்!

 

அவனின் கண்களும் அந்த சின்ன உருவத்தில் படிந்தது.

 

அந்த குட்டிக்கும் யாரோ அவளை பார்ப்பது போல் இருந்து இருக்க வேண்டும், அப்படியே திரும்பி வாயிலை பார்த்தாள்.

 

அங்கே அவனின் பேண்டில் கையை விட்டு கொண்டு அவளை பார்த்தான் ராவணன்.

 

"ஹாய் வாண்டு" என்று அவன் சொன்னதும் தான் தாமதம், "ம்மா" என்று ஓடி செல்ல, அப்போது தான் அங்கே அவனுக்கு தண்ணீர் எடுத்து கொண்டு வந்தாள் மாதவி.

 

நிலா அவளின் அன்னையை கட்டி கொள்ள, மாதவியோ தண்ணீர் குவளையை அவனிடம் கொடுத்து விட்டு, நிலாவை அவள் தூக்கி கொண்டாள்.

 

அவளும் அவளின் அன்னையின் கழுத்தில் புதைந்து கொண்டாள்.

 

"உங்க வாண்டு முகத்தை காட்டவே மாட்டாளா?" என்று தண்ணீர் குடித்து கொண்டே நிலாவின் முகம் பார்க்க முற்பட, "அவ புதுசா வந்த ஆளுங்க கிட்ட பேச மாட்டா சார்" என்று சொல்லவும், "ஓஹ்" என்று மட்டும் சொல்லி நிறுத்தி கொண்டான்.

 

அவனுக்கு தெரியாது அந்த பிள்ளைக்கு தந்தையிடமே செல்ல பயம் தான் என்று! ஆண்கள் என்றாலே பயத்தில் வளரும் பிள்ளை அவள்.

 

"வீடை ரொம்ப சுத்தமா வச்சி இருக்கீங்க" என்று சொல்ல, "தேங்க்ஸ்" என்று மட்டும் சொல்லி இருந்தாள்.

 

"தேங்க் யு" என்று சொல்லி குவளையை அவளும் கொடுத்தவன், "அடுத்த வாட்டி உன்னை பார்த்துக்கறேன் வாண்டு" என்று அவன் சொல்லவும், நிலாவோ இல்லை என்று தலையசைக்க, அவனும் சிரித்து கொண்டே சென்று விட்டான்.

 

அவன் நினைத்தது என்னவோ பிள்ளைக்கு வெட்கம் என்று, ஆனால் அவனுக்கு தெரியாதது பிள்ளைக்கு ஆண்கள் என்றாலே நடுக்கம் என்று!

 

செல்லும் அவனை தான் மாதவியின் கண்கள் நோக்கின.

 

அவளுக்கு இன்றும் அவனை முதன்முதலில் செய்தியில் பார்த்தது நினைவு இருந்தது.

 

"நம் மாநிலத்தில் இருந்து ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சிபெற்றுள்ளார் இருபத்தி மூன்று வயது வீர ராவணன். கிராமத்தில் பிறந்து, நல்ல மதிப்பெண்களுடன் சிறந்த கல்லூரியில் படித்து முடித்து இப்பொது யுபிஎஸ்சி தேர்விலும் தேர்ச்சி பெற்று விட்டார்" என்கிற செய்தி ஓடி கொண்டு இருக்க, அப்போது தான் அந்த செய்தியை நிமிர்ந்து பார்த்தாள்.

 

அங்கே அவனின் தாயுடன் நின்று கொண்டு இருந்தான் வீர ராவணன். அவனில் ஏதோ ஒன்று அவளை ஈர்த்து விட்டது.

 

"எல்லாத்துக்கும் காரணம் என் அம்மா தான். அவங்க இல்லனா நான் இல்ல.. பெண்களோட சேப்டி தான் எனக்கு ரொம்ப முக்கியம். அதுக்காகவே தான் இந்த ஐபிஎஸ் துறையை தேர்ந்து எடுத்து இருக்கேன். வெறும் கற்பழிப்பு மட்டுமே பெண்களுக்கு நடக்குற பிரச்சனை இல்லை... பஸ்ல, ட்ரைன்ல, என் வீட்டில கூட பெண்களுக்கு பாதுக்காப்பு இல்ல.. அந்த பாதுகாப்புக்காக தான் நான் இந்த துறையை தேர்ந்து எடுத்து இருக்கேன்" என்று சொன்னதும் அவளின் கண்கள் மின்னின.

 

சொன்னது மட்டும் அல்ல, அப்படி செய்தும் கொண்டு இருந்தான். அவன் ஒரு நகரத்திற்கு போனான் என்றால், அந்த நகரத்தில் அன்றைய தேதியில் இருந்து பெண்கள் எந்த நேரத்திலும் தைரியமாக நடக்கலாம். பெண்களை தவறாக பார்த்தாலே அடித்து விடுவான். பெண்களின் மேல் கை வைத்தவர்களை என்கவுண்டர்கள் செய்து அவனுக்கு மாற்றுதல் வந்ததெல்லாம் கணக்கில் எடுத்தால் கணக்கில் அடங்காது.

 

அப்படி பட்டவன் இப்பொது அவளின் எதிரில், அவனை போல் ஒரு கணவன் வேண்டும் என்று நினைத்து இருந்தாள். இப்பொது கணவனிடம் இருந்து அவளை காப்பற்ற மாட்டானா என்கிற எண்ணம் இருந்தது. ஆனால் சொல்லும் தைரியம் இல்லை.

 

இதை எல்லாம் யோசித்து கொண்டு இருந்தால் ஒன்றும் மாறப்போவது இல்லை என்று அவளுக்கும் தெரியும்.

 

அவளின் கழுத்தில் புதைந்த மகள் மீண்டும் தூங்கி இருந்தாள் என்பதை உணர்ந்தவள், மீண்டும் அவளை அவளின் கட்டிலில் படுக்க வைத்து விட்டு, அவளும் வேலை செய்ய துவங்கி இருந்தாள்.

 

காலையில் அவன் எழுந்து அமர, அங்கே அவனுக்காக சுட சுட காபி வைக்க பட்டு இருந்தது. வைத்து இருக்க வேண்டும். இல்லையென்றால் அவளுக்கு அன்று பாலபிஷேகம் தான். அதுவும் பால் எவ்வளவு சூட்டில் இருந்தாலும் அவனுக்கு கவலை இல்லை.

 

குளித்து விட்டு அவன் வெளியே வந்து, உடை மாற்றி சாப்பிடுவதற்கு வந்து அமர்ந்து விட்டான்.

 

"ஹே! எங்க டி டிப்பேன்?" என்று அவனின் குரலில் ஒரு நொடி அவளுக்கு தூக்கிவாரி போட்டது.

 

சட்னி தாளித்து கொண்டு இருந்தவளாது கைகளில் கொஞ்சம் சூடான எண்ணையும் தெளித்து விட்டது.

 

அதை கூட பொருட்படுத்தாமல் அவனுக்காக சுட சுட இட்லியும், சட்னி, சாம்பார் என்று அனைத்தையும் எடுத்து கொண்டு ஓடினாள்.

 

அவனுக்கு அவள் பரிமாற, அவனுக்கு அவளின் கைகளில் இருக்கும் காயம் பட்டாலும் கேட்கும் மனமில்லை.

 

மனிதனாக இருந்தால் தானே கேட்க முடியும்! கணவனாக வருபவர்கள் பாதி பேருக்கு தான் மனது என்று ஒன்று இருப்பதே இல்லையே!

 

மனைவி என்று ஒருத்தி வந்தவுடன், அவள் தான் எல்லாமே செய்ய வேண்டும். இன்றும் சம்பளம் தராத வேலை ஆட்கள் தான் மனைவிகள் என்று நடத்தும் ஆண்கள் தான் அதிகம்.

 

ஒரே வாய் தான் எடுத்து சாப்பிட்டு இருப்பான்.

 

தட்டு பறந்து சென்று விழுந்து இருந்தது.

 

அவனின் தட்டில் இருந்த சட்னி, சாம்பார் எல்லாம் அவளின் மீது தான் விழுந்து இருந்தது.

 

"இதெல்லாம் என்ன எழவு டி? சட்னி சாம்பாரா? இன்னைக்கு லீவ் தானே? சிக்கன் மட்டன் சமைக்க வேண்டாம்?" என்று கேட்கவும், அவளோ, "இன்னைக்கு சனி கிழமைங்க" என்று அவள் தட்டு தடுமாறி சொல்ல, அவனோ, "அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? இன்னும் ஒரு மணி நேரத்துல எல்லாம் சமைச்சி வைக்குற... இல்லனா உன்னையும் அந்த சனியன் இரண்டு பேரையும் போட்டு தள்ளிருவேன்" என்றவன் மற்றோரு அறைக்குள் சென்று விட்டான்.

 

அவளோ உடனே பையை எடுத்து கொண்டு கறி கடைக்கு தான் சென்றாள்.

 

அவள் கறி வாங்கி வரும் சமயம், அங்கே சாமான்களை எல்லாம் அடுக்கி வைத்து கொண்டு இருந்தான் வீர ராவணன்.

 

அவளோ அவளின் வீட்டிற்குள் நுழைய, அப்போது வெளிய வந்த குணவாளனோ, "நீயே எல்லாத்தையும் கொட்டிக்கோ.. நான் போயிட்டு நைட் தான் வருவேன்" என்று சொல்லி சென்று விட்டான்.

 

அவளுக்கு அவன் சென்ற பிறகு தான், அப்பாடா என்று இருந்தது.

 

உள்ளே வந்தவள், அவளுக்கும் மகளுக்கும் மட்டும் சமைத்து விட்டு இருந்தாள்.

 

நிலாவும் எழுந்து வர, அவளுக்கும் உணவு கொடுத்து, தொலைக்காட்சியை போட்ட சமயம், அவளின் வீட்டின் கதவு மீண்டும் தட்ட பட்டது.

 

அவளுக்கோ மனதில் நடுக்கம், மீண்டும் அந்த அரக்கனா? என்று நினைத்தவளுக்கு நெஞ்சே அடைத்து விட்டது.

 

அவள் சென்று கதவை திறக்க, மீண்டும் அங்கு நின்று இருந்தான் வீர ராவணன்.

 

கணவனே அவளை கை விட்ட நிலையில் கதவை தட்டுபவன் என்ன செய்ய காத்து இருக்கிறானோ?



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கண்கள் சொல்லும் கதைகள்! கதை 1