குமரகம் 2
அத்தியாயம் 31 பக்ஷியின் முன் அமர்ந்து இருந்தான் காகேஷ். அவனின் ராஜாங்கத்தையே அசைத்து பார்த்து இருக்கிறார்கள் இந்த பறவைகள். "சொல்லுங்க மிஸ்டர் பக்ஷி! இப்போ சொல்லுங்க எப்படி உங்க அண்ணா பெரிய திருவடியையும் அவரோட பொண்டாட்டி ரோஜாவையும் கொன்னிங்க?" என்று காகேஷ் கேட்க, பக்ஷியோ, "அதெல்லாம் நான் ஒன்னும் கொள்ளல அவங்க ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க" என்று அவர் சொல்ல, காகேஷோ ஒரு சிறு புன்னகையுடன், "எப்படி எப்படி ஆக்சிடென்ட்டா? என்ன சார் உங்க கையாள நீங்க தானே கொன்னு இருக்கீங்க... இதுக்கு இருந்த ஒரே சாட்சி உங்க அண்ணி ரோஜாவோட அப்பா காசிநாதனையும் தீர்த்து கட்டி இருக்கீங்க... சரி தானே?" என்று கேட்க, அவருக்கோ திருடனுக்கு தேள் கொட்டுவது போல் தான் இருந்தது. "சரி நீங்க நல்லா யோசிச்சி உங்க எல்லா க்ரைமையும் ஒத்துக்கோங்க... இல்லனா அப்புறம் உங்க மகன் ஹம்சா கிட்டயே லத்தி கொடுத்து உங்கள ஜட்டியோட அடிக்க வேண்டியதா இருக்கும் பரவல்லயா?" என்று கேட்டு விட்டு அவன் சென்று விட்டான். பக்ஷிக்கு அவ்வளவு ஆத்திரமாக வந்தது. அவர் பிடுங்கி எரிந்து விட்டார் என்று நினைத்து இருந்த ச...