இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 1
இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ!
பிறவி 1
மும்பையில் உள்ள கிரிக்கெட் மைதானம் அது!
கிரிக்கெட் அண்டர் நைன்டீன் உலகக்கோப்பையின் இறுதி போட்டி நடந்து கொண்டு இருந்தது. உலகமே எதிர் பார்த்து கொண்டு இருக்கின்ற ஒரு போட்டி என்று கூட சொல்லாம். இந்தியா வர்சஸ் நியூஸிலாந்து! உலகத்தில் இருக்கும் அத்தனை இந்தியர்களும் இந்தியா வென்று விட வேண்டும் என்கிற வேட்கையில் இருந்தார்கள்.
அதையும் தாண்டி அந்த ஒரு இளம்வீரன் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து இருந்தான். அவனிற்காக தான் அனைவரும் இன்று மும்பை மைதானத்தில் கூடியே இருக்கிறார்கள்.
செந்தளிர் இல்லத்தில் இருக்கும் அனைத்து செல்வங்களும் கூட இப்பொது அவர்களின் பதினெண் பருவத்தில் இந்த காட்சியை காண வந்து இருந்தார்கள்.
இந்தியாவின் பெரிய வீட்டு பிள்ளைகள் அதுவும் இப்பொது ருத்ரன் வேறு உள்துறை அமைச்சராக இருந்தார். ஆதலால் அவர்களுக்கு என்று தனி இருப்பிடமே கொடுத்து இருந்தார்கள்.
செல்வச்செழிப்பில் இருக்கும் பிள்ளைகள் அனைவரும் இந்திய கொடியுடன் நின்று கத்தி கொண்டு இருந்தார்கள். அவர்கள் மட்டுமா? அந்த மைதானமே அவனின் பெயரை தான் நாமமாக உச்சரித்து கொண்டு இருந்தது.
"அதர்வ்... அதர்வ்", என்று அந்த கிரிக்கெட் மைதானமே கத்தி கொண்டு இருந்தது. அனைவர் கத்தினாலும், அந்த வீட்டின் செல்வங்கள் கத்துவது தனி சிறப்பு தானே! அதுவும் அவர்கள் காணா அவர்களின் சிறிய தகப்பனின் மறுபிறவிக்காக கத்தி கொண்டு இருந்தார்கள். உண்மையாகவே அதர்வ் இந்த நிலையை அடைந்து இருந்தால், ஆதி, ஆதர்ஷ், ஆருஷ் என்ன செய்து இருப்பார்களோ அதை தவறாமல் அவர்கள் ஈன்ற மணி முத்துக்கள் செய்து கொண்டு இருந்தார்கள்.
பத்தொன்பது வயதான அதர்வவர்ஷனுக்கு தான் இந்த ஆரவாரம்.
ரஞ்சி கோப்பையில் அவனை திரும்பி பார்க்க வைத்து இருந்தவன், அண்டர் நைன்டீன் அணியின் கேப்டனும் ஆகிவிட்டான். அவனை காணுவதற்காக தான் கூட்டம் கூட்டமாக மும்பை வான்கடேவை நோக்கி இந்தியாவே சென்று கொண்டு இருந்தது.
ஆல் ரவுண்டர் ஆகி விட்டான். அவனின் கையில் தான் இந்தியாவின் வெற்றியை இருக்கிறது.
கடைசி பனிரெண்டு பந்துகள், நாற்பது ரன்கள் வேண்டும். கிடைத்தால் இந்தியாவிற்கு தான் கோப்பை!
இந்தியாவே பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தது. பந்தை அவன் தான் எதிர் கொள்ள போகிறான்.
"ஐயோ கடவுளே அதர்வ் போர் அடிச்சரனும்", என்று வேண்டிக்கொண்டிருந்தாள் சிவயாழினி.
"இப்படி நீ உன்னோட போர்டு எக்ஸாம் ரிசல்ட்க்கு கூட வேண்டுனது இல்ல சிவு", என்று ஷ்ரேயஸ் சொல்ல, "ஸ்ரே போர்டு எக்ஸாம் வெறும் எனக்கு, இது இந்தியவோட மானப்பிரச்சனை டா", என்றவள் சொல்லவும், "ஆமா, கண்டிப்பா அதர்வ் அடிச்சிருவான் பாரு", என்று லயனிக்கா சொல்ல, லக்ஷித்தோ, "நீங்கலாம் அவனை சைட் அடிக்கிறிங்களோனு எனக்கு ஒரு டவுட்", என்று பெரிய அண்ணாவாக பேசினான்.
இருபத்தி இரண்டு வயதில் ஆதர்ஷின் அழகும், சாந்தினியின் ஆளுமையும் அவனிடம் நிறைந்து இருந்தது.
"ச்சீ அவனை பார்த்தாலே அப்படி எல்லாம் தோணல", என்று லயனிக்கா சொல்ல, "ஆமா, ஏதோ ஒரு பீல்... நம்ப பேமிலில ஒருத்தர் ஆடுற போல", என்று முடித்து இருந்தாள் சிவயாழினி.
"கொஞ்சம் எல்லாரும் அமைதியா இருக்கீங்களா! பால் போட போறாங்க", என்று நிலவன் கத்தவும், ஆதவனோ, "சிவு அக்காவும், லயு அக்காவும் அமைதியா இருக்கறதா? நடக்குறத பேசு டா", என்று ஆதவன் சொல்ல, சிவுவும், லயுவும் அவர்களின் தம்பியின் தலையில் நங்கென்று கொட்டினார்கள்.
"இரு இரு சாந்தினி மம்மி கிட்டயும், தளிர் மம்மா கிட்டயும் சொல்றேன்", என்று பதினேழு வயது பாலகன் அவன் பேச, "போடா போடா நாங்க எங்க மூன் அம்மாகிட்ட சொல்லுவோம்", என்று இருவரும் ஒரே போல் பேசினார்கள்.
"ஆமா ஆதிரா எங்க? மேட்ச் முடிய போகுது அவ தான் அதர்வ்வ பார்க்கணும்னு குதிச்சிகிட்டு இருந்தா" என்று ஷ்ரேயஸ் கேட்கவும், "அவ இப்போ தான் ஜூஸ் குடிக்கணும்னு சொல்லிட்டு வாங்க போனா... போய் என்னனு பாரு டா" என்று லயனிக்கா சொல்லவும், "சீக்கிரம் வாங்க... டைம் அவுட் முடிய போகுது" என்று ஆருஷின் இரண்டாவது மகன் ஸ்வஸ்திக் பேச, "வரேன் டா" என்று வேகமாக அங்கிருந்து நகர்ந்து இருந்தான்.
அதேசமயம் பழரசத்தை எடுத்து கொண்டு வந்து இருந்தாள் ஆதிரா. "டெட்டி" என்கிற அழைப்பில் திரும்பி பார்க்க, அங்கோ ப்ரகலாத் மற்றும் ப்ரித்வி தான் வந்து கொண்டு இருந்தார்கள். ப்ரகலாத் தான் அழைத்து இருந்தான். அனைவரும் ஒரே பள்ளியில் தான் படிக்கிறார்கள். பிரதாப்பின் பிள்ளைகள் தான்!
ஆதிராவின் கண்களோ ப்ரித்வியில் படிய, ப்ரித்வியின் கண்களும் அவளை துளைத்து எடுக்கும் பார்வை பார்த்தது.
பதினாறு வயது துவக்கத்தில் இருக்கும் பதுமை அவள். ருத்ரன் மற்றும் ஆதியின் அத்தனை அழகையும் சேர்த்து, யாழின் குறும்பையும் கொண்டு அதே சமயம் அந்த செந்தளிர் இல்லத்திற்கே உண்டான திமிரையும் சேர்த்து செய்த கலவை அவள்.
ப்ரகலாத் தான், "என்ன டெட்டி தனியா வந்து இருக்க? எங்க உன்னை சுத்தி இருக்கும் உன் வானர சேனை?" என்று சுற்றும் முற்றும் பார்க்க, அவளுக்கோ கோவம் வந்து விட்டது.
"இங்க பாருங்க எங்க அண்ணா அக்காவை எல்லாம் வானர சேனானு சொன்னிங்க அப்புறம் மூக்கை உடைச்சிருவேன் பார்த்துக்கோங்க" என்று ஒற்றை விரலை நீட்டி அவனின் முன்னால் பேச, நீட்டிய விரலை மடக்கி பிடித்து இருந்தான் ப்ரித்வி.
"சொன்னா என்ன டி பண்ணுவ?" என்று அவளை இன்னும் நெருங்கி இருந்தான். பிரதாப்பின் உயரத்திற்கு இப்போதே வளர்ந்து இருந்தான். அவனின் கூறிய விழிகளும், கொள்ளை கொள்ளும் சிரிப்பும் அனைவரையும் மயக்கி விடும். ஆனால் சிரிப்பதற்கு தான் அவனுக்கு கஞ்சம்.
அப்போது வந்த பிரார்த்தனாவோ, "டேய் பிரகு, ப்ரி நான் பாப்கார்ன் வாங்கிட்டு வந்துட்டேன் டா" என்று சொல்லிக்கொண்டே வர அங்கே வந்து இருந்தான் ஷ்ரேயஸ்.
ப்ரித்வி ஆதிராவின் கைகளை பிடித்து கொண்டு இருப்பதை பார்த்தவுடன், இரண்டே எட்டில் அவர்களை அடைந்து, ஆதிராவின் கைகளை அவனிடம் இருந்து பிடுங்கி விட்டு, "அடுத்த தடவை கையை பிடிச்ச" என்று ஷ்ரேயஸ் பேசவும், "பிடிச்சா?" என்று ஒற்றை புருவம் உயர்த்தி ப்ரித்வி கேட்க, "உன் தங்கச்சி கை இருக்காது" என்று பிரார்த்தனாவை பார்த்து கொண்டு அவன் கூறவும், 'அட சண்டாளா உங்க சண்டைக்கு ஏன் டா என் கை போகணும்?' என்று பிரார்த்தனா நினைத்து கொண்டு இருக்கும் போதே, "ஸ்ரே ப்ரோ.. நீங்க டெட்டிய கூட்டிட்டு போங்க" என்று ப்ரகலாத் தான் அனுப்பி வைத்து இருந்தான்.
"ஏன் டா?" என்று ஷ்ரேயஸ் சென்றதும் ப்ரகலாத் கேட்க, "என்னவோ அவளை சீண்ட பிடிச்சி இருக்கு" என்று கண்ணை அப்படியே தந்தையை போல் சிமிட்டி இருந்தான் ப்ரித்வி.
"ம்கூம் நீ பண்றதுக்கு எல்லாம் அவன் என்னை தான் வச்சி செய்றான்" என்று பிரார்த்தனா புலம்பி கொண்டே அங்கிருந்து நகர்ந்து இருந்தாள்.
அனைவரும் ஒரே இடத்தில் தான் இப்பொது நின்று இருந்தார்கள். என்ன அவர்கள் மூவரும் தனியாக கொஞ்சம் இடைவெளி விட்டு நின்று இருந்தார்கள்.
லயனிக்கா லக்ஷித் இருக்கும் போது ப்ரித்வி ஆதிராவை சீண்டுவதும் இல்லை. அதே போல் பிரார்த்தனாவும் அமைதியாக இருந்து விடுவாள். லயனிக்கா எதையாவது பேசுவாள் என்று அவளுக்கு தெரியும்.
"அஸ்வந்த் வந்து இருக்கலாம்" என்று ஸ்வஸ்திக் சொல்ல, "வந்து இருக்கலாம் தான். ஆனா அத்தை தான் விட மாட்டேன்னு சொல்லிட்டாங்களே" என்று சிவன்யா, சிவமின் இரண்டாவது மகள் சொல்லி இருந்தாள். சிவயாழினி ஷ்ரேயஸ் எப்படியோ அதே போல் தான் ஸ்வஸ்திக்கும் சிவன்யாவும்! இணைபிரியா நண்பர்கள்.
இவர்கள் இப்படி பேசி கொண்டு இருக்கும் போதே ஒரு ஓவர் முடிந்து இருந்தது.
அடுத்த இறுதி ஓவரில் இருபத்தி நான்கு ரன்கள் தேவை.
"ஐயோ இந்தியா ஜெய்ச்சிரணும் கடவுளே" என்று அனைவரும் ஒரு சேர வேண்டவும், முதல் பந்தில் வெறும் இரண்டு ரன்கள் தான் கிடைத்தது.
"ஐயோ அஞ்சு பால் இருபத்தி இரண்டு ரன்" என்று நிலவன் சொல்ல, அடுத்த பந்தை நான்கு ரன் அடித்து இருந்தான் அதர்வ்.
"ஹுரே!" என்று அனைவரும் கத்த, நான்கு பந்துகளில் பதினெட்டு ரன்கள். ஆனால் அடுத்த பந்தும் இரண்டு ரன்கள் தான். அடுத்த மூன்று பந்துகளில் பதினாறு ரன்கள். அடுத்த பந்தை ஆறு ரன்கள் பறக்க விட்டு இருந்தான் அதர்வ். ஆனால் ஐந்தாவது பந்து வெறும் இரண்டு ரன்கள் தான்.
இறுதி பந்து! ஆறு ரன்கள் வேண்டும்! பற்களை கடித்து கொண்டு அனைவரும் பார்த்து கொண்டு இருந்தனர்.
அனைவரின் கண்களும் அவன் ஒருவனின் மேல்!
கடவுளே என்று கையை எடுத்து கும்பிட்டே இருந்தாள் ஆதிரா.
பிரார்த்தனாவும் அதையே தான் செய்தாள். பத்தாதரற்கு பிரகாலத்தின் கைகளையும் பிடித்து இருந்தாள்.
"அடியேய் கைய விடு டி... நானே சராயூ வரலன்னு இருக்கேன்" என்று ப்ரகலாத் கூற, "உன் பேஸ்டி தான் முக்கியமா?" என்று அவள் சீற, "ஆமா டி உன்னை விட அவ எவளோ பரவால்ல" என்று டயானா மற்றும் ரித்திக்கின் மகளை பற்றி கூறி இருந்தான்.
இறுதி பந்து வீசியும் விட்டார்கள். அதர்வ் அடித்த அடியில் அது ஸ்டேடியதின் கூரையின் மீது விழுந்தது.
"இந்தியா வான் தி வேர்ல்டு கப்" என்று அனைவரும் கத்த, தங்களையும் அறியாமல் ஷ்ரேயஸ் மற்றும் ப்ரித்வி ஒருவரை ஒருவர் அணைத்து கொண்டார்கள்.
லக்ஷித், லயனிக்கா, சிவயாழினி, ஆதிரா, ஸ்வஸ்திக், சிவன்யா, ப்ரகலாத், பிரார்த்தனா, நிலவன், ஆதவன் என்று அனைவரும் ஒருவரை ஒருவர் அணைத்து கொண்டார்கள்.
ப்ரகலாத், ஆதிராவின் தலையை பிடித்து ஆட்டி, "டெட்டி நம்ப வின் பண்ணிட்டோம்" என்று சொல்ல, "முடி கலையுது" என்று அவள் சிணுங்கினாள்.
ப்ரகலாத் அப்படியே சென்று சிவயாழினியை அணைக்க, அவளும், "நம்ப ஜெயிச்சிட்டோம்" என்று கத்தி இருந்தாள்.
ப்ரித்வியும் ஷ்ரேயஸும் பின்பு தான் பிரிந்து என்ன நடந்தது என்று உணர்ந்தார்கள்.
'ச்சை இவனையா கட்டி பிடிச்சேன்' என்று மனதில் தோன்றி பிரிந்தும் இருந்தார்கள்.
அதர்வ்வை தூக்கி இருந்தான் அவனின் நண்பன் அகரன்.
பின்பு சிவயாழினியோ, "நம்ப அதர்வ்வ மீட் பண்ணிட்டு போகலாமே ப்ளீஸ்" என்று சொல்ல, "ஹே இப்போவே டைம் பதினொன்னரை" என்று லயனிக்கா சொல்ல, "ப்ளீஸ் ப்ளீஸ்" என்று அனைவரும் கெஞ்ச ஆர்மபித்து இருந்தார்கள்.
பிரார்த்தனாவும் கூட, "பார்த்துட்டு போகலாம்" என்று ப்ரித்வி மட்டும் பிரகாலத்திடம் சொல்ல, ஆமோதிப்பதை தவிர வேறு வழி இருக்க வில்லை.
மினிஸ்டர் வீட்டு பிள்ளைகளை பார்க்க முடியாது என்று சொல்ல முடியுமா என்ன? முடியும் அதர்வ் ஒருவனால் தான் முடியும்.
"சார் இப்போ தான் மேட்ச் முடிஞ்சி இருக்கு.. எனக்கு டையார்ட் சார்... ப்ளீஸ் முடியாதுனு சொல்லுங்க" என்று அவனது கொச்சிடம் சொல்லி கொண்டு இருந்தான்.
"அவங்க எல்லாம் ஹாம் மினிஸ்டர் பேர பசங்க அப்புறம் இப்போ மும்பை சிஎம் பேர பசங்க" என்று சொல்லியும், "அதுக்கு நான் என்ன சார் பண்றது? அவங்களுக்கு என்ன கொம்பா முளைச்சி இருக்கு? பார்க்க முடியாது" என்று அவன் கத்தியது வெளியே இருக்கும் அவர்களின் செவிகளிலும் விழுந்தது.
அகரன் மட்டும் தான் அவனுடன் அப்போது இருந்தான்.
லயனிகாவுக்கோ கடுப்பாக இருந்தது. என்ன பேச்சு பேசுகிறான்? அவனை பார்க்க வந்தது ஒரு குத்தமா? என்கிற கோவம்.
"இவனை பார்க்கணுமா?" என்று பற்களை கடித்து கொண்டு லக்ஷித் கூட கேட்க, சிவயாழினிக்கு தான் ஒரு மாதிரி ஆகி விட்டது.
அவளே தயங்கி, உள்ளே வந்தவள், "சார், சாரி நாங்க தெரியாம வந்துட்டோம்" என்று சொல்ல, அகரனோ அங்கு நின்று இருந்த தேவதையை தான் ஆ என்று பார்த்தான்.
"ரொம்ப சந்தோஷம் அவங்களே கிளம்புறாங்க" என்று சொல்லிவிட்டு அதர்வ் திரும்ப, அங்கே கண்களில் ஒரு வித சோகத்துடன் இருக்கும் சிவயாழினியின் இதயத்தில் ஒரு வித அழுத்தம்.
வெளியே செல்ல இருந்தவளை, "நில்லு" என்று சொல்லி நிறுத்தி இருந்தான் அதர்வ்.
கருத்துகள்
கருத்துரையிடுக