இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 2

 

இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ!

பிறவி 2

 

நில்லு என்று அதர்வ் சொன்னது வெளியே வரை கேட்டு தான் இருந்தது.

 

"இப்போ எதுக்கு நிக்க சொல்றான்? அதான் அவளோ பேசினான்ல" என்று கேட்டுக்கொண்டே லயனிக்கா தான், "லயு" என்று லக்ஷித் அழைத்ததையும் மீறி உள்ளே சென்று இருந்தாள்.

 

சிவயாழினி அப்படியே நின்று இருக்க, அனைவரும் லயனிக்காவின் பின்னால் சென்றார்கள். ப்ரித்வி உட்பட!

 

"ஆத்தி நம்ப ஜான்சி ராணி இன்னைக்கு கிரிக்கெட்டரை கிள்ளு கீரை மாதிரி கிள்ள போறாங்க" என்று பிரார்த்தனா ப்ரகலாத் காதில் சொல்ல, "இப்போ நீ வாய மூடலானா அவங்க உன்னையும் கிள்ளுவாங்க பரவல்லையா?" என்று சொன்னதும் வாயை மூடிக்கொண்டு உள்ளே சென்றார்கள்.

 

அதர்வ்வின் கண்கள் சிவயாழினியின் கண்களில் தான் நிலைத்து இருந்தது. அவளை விட ஒரு வயது தான் பெரியவன் அவன். ஆனாலும் அவளை எங்கையோ பார்த்தது போல் இருந்தது. அதையும் தாண்டி அவளது கண்கள்! அப்படியே ஆருஷின் கண்கள் ஆயிர்றே அது!

 

அவனின் மனதில் ஏதோ ஒரு ஊந்துதல், இன்று வரை யாரிடமும் வராத ஏதோ ஒன்று அவனை சிவயாழினியின் கண்களை பார்த்து கொண்டே இருக்க சொல்லியது.

 

"சாரி" என்று மீண்டும் சிவயாழினி சொல்லவும், அவனுக்கு மனது கேட்கவே இல்லை.

 

அவனே பத்தொன்பது வயது பிள்ளை தான், ஆனால் என்னவோ அவனின் பிள்ளை அழுவது போன்று மனதில் ஒரு வலி.

 

அவளின் குரல் கம்மிய போது அவனின் மனது கனத்தது என்னவோ உண்மை தான்!

 

அவனின் கோவம் நிறைந்த முகம் அப்படியே கனிந்து இருந்தது.

 

"இல்ல.. இல்ல நான் தான்... கொஞ்சம் டையார்ட்ல பேசிட்டேன்" என்று தலையை தேய்த்து கொண்டே அவன் கூறவும், "பேசுனது எல்லாம் பேசிட்டு இப்போ சாரியா?" என்று லயனிக்கா அவனை பார்த்து கேட்க, அவளை பார்த்ததும் சிறுபுன்னகை செய்து, "சாரின்னு சொல்லிட்டேனே இன்னும் என்ன செய்யணும்? சாக்லேட் வேணா வாங்கி தரவா?" என்று கேட்கவும், லயனிகாவின் உடல் அப்படியே உறைந்து இருந்தது. என்னவோ தெரியவில்லை இத்தனை நாட்கள் அவளின் நினைவில் வராத அவளின் சிறிய தகப்பன் அதர்வ்வின் எண்ணம்.

 

லயனிக்காவிற்கு இரண்டு வயது இருக்கும் போது அதர்வ் உடன் அவள் பேசிய உரையாடலை ஆதர்ஷ் விடியோவாக பதிவு செய்து வைத்து இருந்த போது, இதையே தான் சொல்லி இருந்தான்.

 

"சாரி லயு பேபி" என்று அவன் எதற்கோ சொல்ல, "நோ சாரி" என்று மழலை அவள் குரலில் கூறவும், "சாரி வேணாமா? அப்போ சாக்லேட் வாங்கி தரவா?" என்று அவன் கேட்டது ஏன் இன்று அவளுக்கு நினைவு வந்தது என்று அவளுக்கு தெரியவில்லை.

 

என்னவோ அடங்கி போய் விட்டாள்.

 

"என்ன அக்கா அப்படியே அடங்கிட்டா?" என்று நிலவன் ஸ்வஸ்திக் செவிகளில் சொல்ல, "அக்கா இப்படி எல்லாம் வெறும் நம்ப அப்பாஸ் கிட்ட தானே அடங்குவா... இப்போ அதர்வ்... இவன் பேரு நம்ப அதர்வ் டாடா ஓட ஒத்து போறதுனாலயா இருக்கும்" என்று ஆதவன் கொஞ்சம் சரியாகவும் கணித்து இருந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.

 

"நான் போய் குளிச்சிட்டு மட்டும் வரேன். ஒரு டென் மினிட்ஸ் வெய்ட் பண்ணுறீங்களா?" என்று அனைவரையும் பார்த்து கேட்டு இருந்தான். அவனின் கண்கள் ஒவ்வொருவரையும் பார்த்தது, அதுவும் இறுதியாக ஆதிராவில் படிய, அவள் தானே அங்கே இருந்தவர்களிலேயே சிறியவள், அவளின் குண்டு கன்னத்தை பிடித்து கிள்ள வேண்டும் என்று கூட அவனுக்கு தோன்றியது. இப்படி எல்லாம் அவனின் தம்பியிடம் கூட அவனுக்கு தோன்றியது கிடையாது என்பது தான் உண்மை.

 

அவர்களும் நல்ல பிள்ளைகளாக தலையாட்டினார்கள்.

 

அப்படியே திரும்பி மேனேஜரை பார்த்து, "சாப்பிட எல்லாருக்கும் ஏதாவது கொடுங்க... டைம் ஆகிருச்சு வேற, அப்படியே ஜூஸ் கூட கொடுங்க" என்றும் சொல்லி இருந்தான். இல்லை இல்லை கட்டளை போட்டு இருந்தான்.

 

அகரனும் அவனின் பின்னால் சென்றவன், "டேய் அந்த பொண்ணுங்க எல்லாம் எவளோ அழகா இருக்கு... அதுவும் உன் கிட்ட சாரி கேட்ட பொண்ணு.." என்று அவன் பேசும் போதே அவனின் வாயில் ஒன்று போட்டு இருந்தான்.

 

"செருப்பு பிஞ்சிக்கும்... குழந்தைங்க டா அவங்க" என்று அவன் சொல்ல, "ஏதே குழந்தைங்களா? டேய் அவங்களுக்கும் நம்ப வயசு தான் டா இருக்கும்... எனக்கு தெரிஞ்சி அந்த ப்ளூ கலர் பராக் போட்டு இருந்தாலே அந்த பொண்ணுக்கு வேணா கொஞ்சம் சின்ன வயசு ஆனா அவ வயசு பொண்ணை தான் டா நமக்கு எப்படியா இருந்தாலும் கல்யாணம் பண்ணுவாங்க" என்று அவனும் விடாமல் பேச, அவனின் தலையை பிடித்து நங் நங் என்று நாலு கொட்டு வைத்தான்.

 

"இதுக்கு மேல அங்க இருக்க பொண்ணுங்கள பத்தி பேசுனா சொல்லவே மாட்டேன். ஷுவால அடிப்பேன் பார்த்துக்கோ" என்று சொல்லி குளிக்க சென்று இருந்தான்.

 

"அட சண்டாளா! இவன் என்ன சாமியாரா? இவளோ அழகா பொண்ணுங்க இருக்காங்க அவங்களை பார்க்க வேணாம்னு சொல்றான்... குழந்தைங்கன்னு வேற சொல்றான். அதை தான் ஜீரணிக்கவே முடியல... அப்போ நான் கூட தான் குழந்தை" என்று புலம்பிக்கொண்டே சென்று இருந்தான் அகரன்.

 

அதர்வ் குளித்து முடித்து வரும் பொழுது சரியாக, சாப்பிட்டு கொண்டு இருந்த ஆதிராவிற்கு புரை ஏறி இருந்தது.

 

அவனோ உடனே அவளின் அருகில் சென்று, அவளின் தலை தட்டி கொடுத்து தண்ணீரும் கொடுக்க, "அப்படியே எங்க அப்பாஸ் எல்லாம் என்ன பண்ணுவாங்களா அதையே பண்றீங்க" என்று ஸ்வஸ்திக் சொல்லி இருந்தான்.

 

அவனை பார்த்து புன்னகைத்தவன், "யாரா இருந்தாலும் அதை தானே பண்ணுவாங்க" என்று சொல்லிவிட்டு, "ரியலி சாரி... அப்படி பேசுனத்துக்கு" என்று மீண்டும் ஒருமுறை அவர்களிடம் மன்னிப்பு வேண்டினான்.

 

அதே சமயம் அகரனும் வெளியே வந்தான்.

 

"அகரன் அண்ணா நீங்களும் நல்லா பால் போட்டீங்க" என்று சிவன்யா சொல்ல, "தேங்க்ஸ் மா" என்றதும், "ஆமா அண்ணா" என்று சிவயாழினி, ஆதிரா இருவரும் சொல்ல, "நான் மட்டும் அண்ணாவா? அப்போ இவனை அண்ணானு கூப்பிடுங்க" என்று அவன் சென்று அமர்ந்து கொள்ள, லயனிகாவிற்கோ சிரிப்பு.

 

"அகரன் ஏன் இப்படி கோவ படுறிங்க?" என்று கேட்டவளை பார்த்து, "பின்ன என்னங்க இவளோ அழகான பொண்ணுங்க என்னை அண்ணான்னு சொன்ன நெஞ்சு வலிக்குமா இல்லையா?" என்று அவன் சொன்ன விதத்தில் லக்ஷித் கூட சிரித்து விட்டான். ஆனால் அதர்விற்கு தான் கோவமாக வந்தது.

 

"டேய் நீ வாங்க போற என்கிட்ட" என்று விரலை நீட்டி மிரட்டியவனின் முன், "நீங்களும் சாப்பிடுங்க" என்று ஒரு தட்டை நீட்டி இருந்தாள் சிவயாழினி.

 

அவனும் எடுத்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது கொஞ்சம் கதை பேசினார்கள். ஏதோ பல நாள் பார்த்தது போன்ற ஒரு பிணைப்பு. அவர்களை தம்பி தங்கைகள் போல நினைக்க முடியவில்லை. நண்பர்கள் என்றும் சொல்ல முடியவில்லை. ஏதோ சொல்லிலடங்கா ஒரு உறவு!

 

அவனையும் மீறி அவனின் கண்கள் சிவயாழினியில் தான் படிந்தது. அந்த கண்கள் அவனை ஏதோ செய்தது என்னவோ உண்மை தான். அவனுடன் பார்த்து பழகி என்றுமே நிலைத்து இருந்த கண்கள் அவை போல் அவனுக்கு தோன்றியது.

 

லக்ஷித்தின் கண்கள் இப்பொது அதர்வ்வில் படிந்தது.

 

"ஏன் சிவுவ அப்படி பார்க்குறீங்க?" என்று வாயை திறந்து கேட்டே விட்டான்.

 

அவன் தவறாக பார்க்கவில்லை என்று அவனுக்கும் தெரியும் ஆனால் இப்படி வைத்த கண் வாங்காமல் பார்க்கிறான் என்கிற கேள்வி தான்.

 

"இல்ல இந்த பொண்ணை எங்கையோ பார்த்த மாதிரியே இருக்கு" என்று அவனும் சொல்ல, "அவ எங்கையும் வரவே மாட்டா" என்று லயனிக்கா சொல்லவும், "ஆமா ஆமா வர மாட்டா... அவனோட கான்சர்ட்க்கு மட்டும் யாருக்கும் தெரியாம போவா" என்று ஷ்ரேயஸ் முணுமுணுத்தது நல்ல வேலை யாரின் செவிகளுக்கு எட்டவில்லை.

 

"ஏன் டா இந்த பசங்களும் உன்னை பார்க்க தானே வந்து இருக்காங்க.. அவங்களை ஒரு வார்த்தை கேட்குறீயா" என்று அகரன் கேட்டுக்கொண்டே பிரார்த்தனாவின் அருகில் அமரும் சமயம் நிலவன் வந்து அமர்ந்து இருந்தான்.

 

இருவரும் ஒரே வகுப்பில் தானே படிக்கிறார்கள். ப்ரித்வி இவர்கள் யாரிடமும் பெரிதாக பேசவில்லை என்றாலும் பிரார்த்தனா மற்றும் ப்ரகலாத் அனைவரிடமும் பேசுவார்கள்.

 

அதிலும் நிலவன் பிரார்த்தனாவின் ஆருயிர் நண்பன் வேறு! ஆதியும் பிரதாப்பும் தொழில் முறை எதிரிகள் ஆனால் இங்கோ பிள்ளைகள் நண்பர்களாகி விட்டனர்.

 

"சாரி அகரன்" என்று நிலவன் சொல்லிக்கொண்டே, "சாப்பிடு டி" என்று பிரார்த்தனாவை பார்த்து சொல்லியும் இருந்தான்.

 

அதர்விற்கு சிரிப்பு வந்தாலும் அடக்கி கொண்டான்.

 

"எல்லாம் எமகாதனுங்களா இருக்கானுங்க" என்று முணுமுணுத்து கொண்டே அவன் அமர்ந்தது என்னவோ அதர்வ் அருகில் தான்.

 

அனைவரும் உண்டு முடித்ததும், "பிக் எடுக்கலாம்" என்று ப்ரகலாத் சொல்ல, ஒவ்வொருவரும் அவனுடன் புகைப்படம் எடுக்க துவங்கினார்கள்.

 

அழகான புகைப்படங்கள்.

 

"பிலீஸ் எதையும் போஸ்ட் பண்ணாதீங்க" என்று அதர்வ் சொல்லுவதற்கு முன்னமே லக்ஷித் சொல்லி இருந்தான்.

 

பெரிய வீட்டு பிள்ளைகள் இப்படி எல்லாம் புகைப்படம் போட்டால் ஒன்றுக்கு இரண்டாக திரித்து பேசுவார்கள் என்று அவர்களுக்கு தெரியும்.

 

"நானே சொல்லலாம்னு இருந்தேன்" என்று அவன் சொல்ல, அவர்களும் தலையசைத்து விடை பேரும் சமயம், "சாரி" என்று மீண்டும் சொல்லி இருந்தான்.

 

"அந்த சாரிய விடுங்க" என்று சிவயாழினி சொல்ல, அவனும் புன்னகையுடன் வந்தவன், அவர்களை வண்டி வர ஏற்றவும் வந்து இருந்தான்.

 

அகரனுக்கே அதிர்ச்சி! இப்படி எல்லாம் செய்பவன் இல்லை அதர்வ்!

 

அவர்களை வண்டியில் ஏற்றும் சமயம், ப்ரித்வி ஆதிராவின் முடியை பிடித்து இழுக்க முயற்சி செய்யும் சமயம் அவனின் கரத்தை பற்றி இருந்தான் அதர்வ். அவனின் கண்களில் கோவக்கனல்!

 

"இப்படி தான் போற பொண்ணு கிட்ட முடிய பிடிச்சி இழுப்பியா?" என்று கேட்கவும், ப்ரித்வி மிகவும் சாதாரணமாக தான் இருந்தான்.

 

"அவளோட அண்ணா எல்லாருமே அமைதியா இருக்காங்க நீங்க யாரு அவளை பெத்த அப்பா மாதிரி இவளோ துடிக்குறிங்க? அவளோட டாடி டாடாலாம் தான் இப்படி பிஹேவ் பண்ணுவாங்க... அதுவும் மிஸ்டர் ஆருஷ் வீர் மாதிரி தான் நீங்களும் என்னை முறைக்குறிங்க" என்று அவன் சொல்லவும், அதர்வ் அப்படியே கையை விட்டு, "எந்த பொண்ணையும் அப்படி செய்ய கூடாது" என்று சொல்லி அனுப்பினான்.

 

அனைவரையும் பிரியும் பொது ஏதோ ஒரு வலி.

 

ஆதிராவும் சிவயாழினியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு இருந்தனர்.

 

"உங்களுக்காக நாங்க ஒன்னு வாங்கணும்" என்று சொன்னவர்கள், அவர்கள் அவனுக்காக வாங்கி வந்த க்ளோவ்சை கொடுத்தார்கள். அதற்காக தான் அவனை பார்க்க விழைந்தார்களே!

 

"தேங்க்ஸ்" என்று சொல்லி அவன் அனுப்ப, கொடுத்தவர்கள் அவனது க்ளாவ்ஸை மட்டும் அல்ல, அவனுக்கு சொந்தமான மற்றொன்றையும் அவர்களுக்கே தெரியாமல் கொடுத்து விட்டு சென்றார்கள்.

 

அவனின் முன் ஜென்ம நினைவலைகளை மீண்டும் எழவைக்க கூடிய ஒன்று அது!

 

முன் ஜென்ம நினைவுகளை பெருவானா அதர்வ்? அதையும் தாண்டி இந்த கதையில் அதர்வ்வின் காதலை கை கூட்டுவதற்காகவே மறுபிறவி எடுத்து இருக்கிறாரானே ஒருவன்!

 

இத்துடன் கதை அதர்வ்வின் கைகளிலும் அவனின் கைகளிலும் தான்! அவன் யார்? அபராஜித்!



கருத்துகள்