கண்கள் சொல்லும் கதைகள்! கதை 27
கண்கள் சொல்லும் கதைகள்!
கதை 27
ராவணனிடம் இருந்து அழைப்பை ஏற்றவள், "சொல்லுங்க" என்றதும், "அது மாதவி... குணவாளனுக்கு தண்டனை நிறைவேத்திட்டாங்க... அதை கேட்டு அலமேலுவோம் ஹார்ட் அட்டாக்ல ஆன் ஸ்பாட்ல இறந்துட்டாங்க... அவங்களை என்ன பண்றது?" என்று கேட்டு இருந்தான். அவளிடம் மௌனம் தான்.
சிறிது நேரம் பொறுத்து பார்த்தவன், அவனே, "மாதவி உங்கிட்ட தான் சொல்றேன்" என்று அவன் கேட்க, "நான் என்ன சொல்லணும்? எனக்கு எதுவும் தோணல" என்பதுடன் நிறுத்தி கொண்டாள்.
"அவங்க முகத்தை.." என்று ஆரம்பிக்கும் போதே, "எனக்கு அவங்க யாருமே தெரியாது... அதனால கடைசியாவும் எனக்கு அவங்க முகத்தை பார்க்க விரும்பல" என்று சொல்லி வைத்து விட்டாள். அவளுக்கு அவர்கள் இறந்து விட்டார்கள் என்கிற கரிசனை கூட வரவில்லை.
அவளை கொஞ்சம் ஈவு இரக்கம் பார்த்து நடத்தி இருந்தால் கூட, "ஐயோ பாவம்" என்று நினைத்து இருப்பாளோ என்னவோ, ஆனால் இறுதி வரை அதுவும் வழக்காடு மன்றத்தில் கூட அவளை பற்றி இழிவாக பேசியவர்களுக்கு அவள் ஏன் பாவம் பார்க்க வேண்டும்?
அவளிடம் எந்த மாற்றமும் இல்லை. ஏன் பூ கூட வைத்து தான் இருந்தாள்.
அவளிடம் யாரும் கேட்கவில்லை என்றாலும், "நான் ஏன் அந்த ஆளுக்காக பூ எல்லாம் வச்சிக்க கூடாது? எனக்கு பூ வச்சிக்க பிடிக்கும்" என்று சொல்லவும், "நாங்க யாரும் எதுவும் சொல்லவே இல்லை" என்று அனைவரும் சொல்லி இருந்தார்கள்.
கண்ணம்மாவும் கொஞ்சம் தேறி தான் இருந்தாள்.
ஒரு நாள் அவளை தேடி வந்து இருந்தார் அவளது அன்னை.
"எங்க கூட வந்திடு டி" என்று அவர் கெஞ்சவும், "அம்மா நான் இவரை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்" என்று போட்டாலே ஒரு போடு! வேலவன் கையை நெஞ்சில் வைத்து இருந்தான்.
"உண்மையாவா சொல்ற?" என்று கண்கள் மின்ன அவன் கேட்கவும், "எனக்கு உங்க கூட உடனே வாழ முடியுமான்னு தெரியல... ஆனா கண்டிப்பா வாழ முடியும்னு ஒரு நம்பிக்கை இருக்கு" என்று சொன்னவள் கையை பிடித்து, "நீ எப்போ சொல்றியோ அப்போ வாழ ஆரம்பிக்கலாம். இப்போ கல்யாணம் மட்டும் பண்ணிக்கலாம்" என்று சொல்ல, அவளும் கண்கள் நிறைந்து தலையாட்டினாள். அவளின் கண்களில் இத்தனை நாள் இருந்த ஒரு வித சோகம் நிறைந்து இப்பொது மகிழ்ச்சி நிரம்பி இருந்தது.
அவள் சென்ற மனநல நிபுணர் நிறையவே அவளுக்கு உண்மையை எடுத்து விளக்கி இருந்தார். அவளது மனது தெளிந்து தான் இருந்தது.
திருமணமும் உடனே நடந்து விட்டு இருந்தது. வேலவனுக்கு யாருமில்லை. கண்ணம்மா யாரையும் அழைக்க விரும்பவில்லை. ஆனால் அவர்களின் திருமணத்தில் தமிழரசி, ஆருத்ரன், கனகா, சசி, ராவணன், தேன்மொழி, மாதவி மற்றும் இருக்கவே இருக்கிறாளே நம் நிலா என்று அனைவரும் சேர்ந்து தான் நடத்தி இருந்தார்கள்.
அத்தனை மகிழ்ச்சியான தருணம் இது!
கற்பை பெண்ணின் உடலில் தேடும் ஆண்களுக்கு மத்தியில் அவளின் மனதை மட்டும் போதும் என்று ஏற்று கொண்டு இருந்தான் வேலவன். இனி கன்னமாவிற்கு காவலனாகவும் இருப்பான்.
இப்படியே நாட்கள் செல்ல, மாதவியும் கல்லூரியில் சேர்ந்து இருந்தாள். ஆருத்ரன் அவளை அழைத்து வந்து, "என் தங்கச்சி கிட்ட ராகிங் எல்லாம் பண்ண கூடாது" என்று மிரட்டி விட்டு வேறு செல்லும் பொது, "ம்கூம் இவனே என்னை ராகிங் பண்ணவன் தான்" என்று மாதவியின் செவிகளில் ஓதினால் தேன்மொழி.
" இப்பவும் ராகிங் பண்ணுவேன்.. நீ பாவமென்னு விடுறேன்" என்று சொல்லிவிட்டு தான் சென்றான்.
இப்படியாக மூன்று வருடங்கள் கழிந்து இருந்தது....
மாதவி கல்லூரி மூன்றாம் வருட முடிவில் இருந்தாள். தேன்மொழியோ படித்து முடித்து ஆருத்ரனிடமே ஜூனியராக சேர்ந்து இருந்தாள்.
அவள் வேண்டாம் என்று சொல்லியும், அவளின் தாய் சுந்தரி தான், "ஆருத்ரன் கிட்ட வேலை செய்றது தான் உனக்கு பாதுகாப்பு டி" என்று சொல்ல, 'அவன் கிட்ட வேலை பாக்குறது எனக்கு பாதுகாப்பா அவனே எப்போ நான் மாட்டுவேன் என்னை எப்போ காசப்பு போடலாம்ன்னு இருக்கான்' என்று நினைத்தாலும் வெளியே சொல்ல முடியவில்லை.
அவளின் நினைவோ ஒரு மாதம் முன் நடந்த நினைவிற்கு சென்றது.
நிலாவிற்கு சாதம் ஊட்டி கொண்டு இருந்தாள் தேன்மொழி.
நிலாவோ, "போதும் ஹனி" என்று சொல்ல, "ஹே பாதி கிண்ணம் தான் காலி ஆகி இருக்கு... இன்னும் சாப்பிடு" என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அங்கே வந்தான் ஆருத்ரன்.
"என் பார்பி டாலை என்ன டி கொடுமை பண்ணுற கொடுக்கி?" என்று அவர்களின் அருகில் வந்தவன், நிலாவிற்காக அவன் வாங்கி வந்த ஐஸ் கிரீம் டப்பாவை கொடுக்க, "எனக்கா?" என்று கண்கள் விரித்து கேட்ட குழந்தையிடம், "உனக்கு தான் பார்பி டால்" என்றதும், "தேங்க் யு அங்கிள்" என்று சொல்லி அங்கிருந்து ஓடி விட்டாள்.
"ஹே நிலா சாப்பிட்டு போ டி" என்று தேன்மொழி கத்தியதெல்லாம் காற்றில் கரைந்து போனது.
"இப்ப சந்தோஷமா?" என்று கேட்டவளை பார்த்து, "ரொம்ப சந்தோஷம்" என்றதும், "அவ பாதி கிண்ணம் சாப்பிடவே இல்ல" என்று தேன்மொழி குறைப்படவும், அவனோ, "சரி அவளுக்கு பதில் எனக்கு ஊட்டு" என்று சொல்லி இருந்தான்.
"ஆசை தான்" என்று உதட்டை சுழித்தவளை பார்த்து, "ஆசை தான்" என்று அவனும் சொல்லி கண்சிமிட்டினான்.
"நான் போறேன்" என்று செல்ல போனவளின் பின்னலை இழுத்து, "சாதம் ஊட்டு டி" என்று அவன் விடாப்பிடியாய் நிற்க, "இது என்ன வம்பாய் போச்சு" என்று புலம்பி கொண்டே அவள் ஒரு வாய் சாதம் அவனின் முன்னால் நீட்ட, "என்ன இது?" என்றவனிடம், "ஊட்ட தானே சொன்னிங்க?" என்று கேட்கவும், "அவ குழந்தை அதனால கைல ஊட்டு எனக்கு..." என்றவன் நிறுத்தி, "நீயே சாப்பிடு டி" என்றதும், கையில் சாதம் அவளின் வாயிற்குள் போய் இருந்தது.
அவள் வாயில் இருந்த சாதமோ கன நேரத்தில் அவனின் இதழ்களுக்குள் சென்று இருந்தது விந்தை போல!
"இப்படி ஊட்டணும் எனக்கு... வரட்டா" என்று அவளின் கன்னம் தட்டி அவனின் இதழ்களுக்குள் சிரிப்பை அடக்கி கொண்டே சென்று இருந்தான்.
அடுத்த நாள் அவனிடம், "ஏன் அப்படி பண்ணீங்க?" என்று கேட்கவும், "எப்படி பண்ணேன்?" என்று கேட்டவளை பார்த்து, "கிஸ் பண்ணீங்க" என்று சொன்னவளை பார்த்து சிரிப்பை அடக்கி கொண்டு, "இல்லையே நான் ஜஸ்ட் சாப்பாடு தான் உன்னை ஊட்ட சொன்னேன். நீ அதை தான் பண்ண" என்று சொல்ல, "இதோட அந்த மாதிரி எல்லாம் பண்ணாதீங்க" என்று விரலை நீட்டினவளின் விரலை மடக்கி, அவளை இன்னும் நெருங்கி, அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில், "ஏன் பிடிக்கலையா?" என்று மயக்கும் மாய கண்ணனாய் அவன் கேட்க, அவளுக்கு என்ன சொல்வதென்று உண்மையாகவே தெரியவில்லை.
இன்று வரை அவனித்திடம் சண்டையிட்டு கொண்டு இருந்தாள். அவனை பிடிக்காமல் இல்லை. காதல் என்றும் இல்லை. இதுவே வேறு யாரவது இருந்தால், காலில் போட்டு இருப்பதை கழட்டி அடித்து இருப்பாள் தான். ஆனால் ஆருத்ரனிடம் அப்படி செய்யவும் முடியவில்லை. பிடிக்கும் ஆனாலும் ஒரு பயம்.
"பிடிக்கலன்னு இல்ல... ஆனா பிடிக்குதுனாவும் தெரியல" என்று மனதை அப்படியே ஒப்பித்து இருந்தாள்.
அவனோ, "சரி திருப்பி கிஸ் பண்றேன். பிடிக்குதா பிடிக்கலையானு சொல்லு" என்று மீண்டும் அவளின் இதழில் கவி பாட, அவளுக்கு பிடித்து தான் இருந்தது.
மறுபடியும் அதே கேள்வி அவனிடம் இருந்து... "தெரியல" என்று இம்முறை அவனை பார்க்காமலே பொய் சொல்ல, "திருப்பி அப்போ.." என்று ஆரம்பிக்கும் போதே, அங்கிருந்து அடித்து பிடித்து ஓடி இருந்தாள். ஆனால் அன்னை அவளிடம் அவனிடம் வேலை செய்ய சொல்லி சொல்லவும் ஒரு தயக்கம்.
அவளும் அவனிடம் சென்று, "உங்க கூட வேலை செய்யவே பயமா இருக்கு... கிஸ் பண்ணிட்டே இருப்பீங்களோன்னு" என்று சொன்னவளை பார்த்து சிரித்து, "என் ஆபீஸ்ல கண்டிப்பா கிஸ் பண்ண மாட்டேன். ஆனா இந்த வாசலை தாண்டினா என்ன வேணா பண்ணுவேன்" என்று சொல்லவும், அவளுக்கு தான் வெட்கமாக போய் விட்டது.
கண்ணம்மாவும் வேலவனும் கூட வாழ ஆரம்பித்து இருந்தார்கள். முழுதாக இரண்டு வருடங்கள் தேவை பட்டது கண்ணம்மாவிற்கு! எத்தனையோ தடவை அவனுடன் கூடும் சமயம் ஏதாவது நினைவு வந்து விடும்... வேலவன் தான் பாவம், அவளே ஒரு முறை, "உங்களை ரொம்ப கஷ்டப்படுத்துறேன்.. நீங்க வேணா..." என்று அவள் சொல்லும் போதே, அவளின் வாயை பொத்தி, "எனக்கு நீ போதும்... இந்த சுகத்துக்காக நான் உன்னை கல்யாணம் பண்ணல டி" என்று அவளை தேற்றி, அவனும் அவளுடன் கவுன்செலிங் சென்று, எப்படியோ ஒரு மனதாக வாழவும் ஆர்மபித்து இருந்தார்கள்.
இதோ அதற்கு சான்றாக அவர்களின் ஒரு மாத மகன், கண்ணன் பிறந்து இருக்கிறானே! உண்மையாகவே குட்டி கண்ணன் தான்.
நிலாவும் கூட நன்கு வளர்ந்து இருந்தாள். ஆறு வயதில் புள்ளி மான் போல எங்கும் துள்ளி குதித்து கொண்டு இருந்தாள். அதுவும் கண்ணம்மாவின் பிள்ளையை பார்க்கும் போதெல்லாம், "கண்ணா கண்ணா" என்று அவள் கொஞ்சும் பொது, அவனும், "ங்க ங்க" என்று சத்தம் கொடுக்க, அவர்களை பார்த்து கொண்டே இருக்கலாம் போல் தான் தோன்றும். கண்ணம்மாவை சசி தான் அவர்களின் வீட்டில் வைத்து கொண்டார். பத்திய சாப்பாடு எல்லாம் கொடுக்க வேண்டுமே!
ஆருத்ரனுக்கும் அத்தனை மகிழ்ச்சி... அவர்களின் வீட்டிலும் குழந்தை சத்தம்.
ராவணனும் அதே ஊருக்கு மாற்றல் வாங்கி வந்து இருந்தான். அதுவும் இப்பொது தான் ஒரு மாதத்திற்கு முன்னால் தான் வந்து இருந்தான்.
நிலாவின் ஆறாவது பிறந்த நாள் அன்று, "நிலா பேபிக்கு என்ன வேணும்?" என்று ராவணன் கேட்க, "ஹல்க் என் கூடவே இருக்கனும்" என்று சொல்லவும், இதோ மாற்றல் அடுத்த நாளே வாங்கி வந்து இருந்தான்.
இந்த மூன்று வருடங்களில் நிறைய மாற்றங்கள் இருந்தாலும், நிலாவும் அவளின் ஹல்க்கின் பிணைப்பு இருகிக்கொண்டே தான் போனது. ஆருத்ரன் கூட இப்பொது இரண்டாம் பட்சம் தான்.
நிலாவே ஒரு நாள் சொல்லி இருந்தாள்.
"எனக்கு ஹல்க் தான் ரொம்ப பிடிக்கும்.. அம்மாவை விட" என்று அவள் சொன்னதும் தான் தாமதம், அவளை அல்லி அனைத்து, அவளின் கொழு கொழு கன்னங்களில் முத்தத்தால் குளி பாட்டி இருந்தான் ராவணன்.
அனைத்தும் சரியாக சென்று கொண்டு இருக்க, இதோ அடுத்த புயல் வீச மாதவியின் கல்லூரியில் பணியாற்றும் ஒரு பேராசிரியர் ராவணன் வீட்டிற்கு வந்து இருந்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக