இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 3
இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ!
பிறவி 3
சில வருடங்களுக்கு பிறகு!
கதிரவன் அல்ல பூமி தான் எப்போதும் சுற்றி கொண்டே இருக்கிறது. அதனின் சுழற்சியால் தானே காலை, மாலை, வெட்பம், குளிர் என்று காலங்கள் மாறுகின்றன. காலங்களே மாறுகின்ற பொது மனிதர்கள் மாறமாட்டார்களா என்ன? அதுவும் ஒரு பிறவியில் பிறந்து மற்றோரு பிறவியில் ஒரே போல இருப்பார்கள்?
வாய்ப்பே இல்லை!
அதே போல் தான் நம் கதையின் இரண்டாவது நாயகனும்! இரண்டாவது நாயகனா? அல்லது கதையின் நாயகனுக்கு இணையானவனா என்று காலம் தான் நமக்கும் சொல்லும் போல!
முற்பிறவியில் அப்பாவியாக இருந்தவன், இப்பிறவியில் அடப்பாவியாக இருக்கிறான். சாந்தமாக, பொறுமையாக, கனிவாக என்று இருந்தவன், சாந்தாமா அது எந்த கிரகத்தில் கிடைக்கும், பொறுமையா அப்படி என்றால் என்ன விலை? கனிவெல்லாம் காட்ட முடியாது வேணும் என்றால் முக்கனியை சாப்பிடுவதற்கு வேண்டுமானால் தருகிறேன் என்று கேட்கும் அளவிற்கு பிறந்து இருக்கிறான் என்றால் காலத்தின் சுழற்சியை என்ன என்று சொல்வது?
காதல் என்னவென்று அறியும் முன்பே கடவுள் அவனின் உயிரை பறித்து விட்டு இருந்தாரே ஆதலால் தான் இந்த பிறவியில் காதலை ஏங்கி நின்று மறைந்த ஒருவளுக்கு திகட்ட திகட்ட காதலை கொடுக்க பிறந்து இருக்கிறான்.
ஆட்டோ ஓட்டுநராக அகலயாவிற்காக அவனின் உயிரை விட்டு இறந்தவனின் தங்க மனதை கருத்தில் கொண்டு தான் இறைவன் இந்த பிறவியில் வைர வியாபாரியின் மகனாய் பிறக்க வழி செய்து இருந்தார் போலும்.
அடக்கமாக இருந்தவன் இன்று அகிலத்தையே ஆளும் ஜித்தானாக அதுவும் அபராஜிதனாக பிறவி எடுத்து இருந்தான். வேல்முருகன் என்று பெயரில் குழலியின் கணவனாக இருந்தவன், இல்லறம் சிறக்கும் முன்னே இறைவனடி சேர்ந்தவன், இன்று இயற்கை கொஞ்சும் கடற்கரையின் மாளிகையில் உறங்கி கொண்டு இருந்தான்.
பார்ப்பதற்கு கூட இப்பொது அவன் வேல்முருகன் போல இல்லை! ஏழையாக பிறந்தவன் தான் இன்று எஜமானியாக மாறி இருந்தான் அல்லவா! அதற்கான மிடுக்கும் செருக்கும், அதை விட அவனது அழகும் பல மடங்கு ஏறி இருந்தது.
அவனின் லட்சங்களில் இருக்கும் பஞ்சு மெத்தையில் இருந்து எழுந்து இருந்தான். வேற்று மார்புடன் அவனை பார்த்து சூரியனுக்கு கூட பொறாமை தான் போல! அவன் தான் கதிரவனை விட கதிரொளியை வீசுகிறான்.
அவனின் கூர்மையான கண்கள், தெத்து பற்கள், இதழ்களுக்கு அடியில் இருக்கும் ஒரு சிறு மச்சம் என்று அனைத்தும் அவனுக்கு ஒரு படி அழகை சேர்த்து தான் இருந்தன!
மஞ்சள் நிறத்தவன், கார்மேக நிறத்தில் இருக்கும் அவனின் கேசத்தை அவன் கோதும் பொது அதற்கு மயங்கும் பெண்களே பலர் இருக்கிறார்கள்.
திரும்பி நேரத்தை பார்த்தான். அது ஏழு மணி என்று காட்டியது, அப்படியே எழுந்து அந்த கடற்கரையை வெறித்தான். இன்று அவனின் நினைவில் அவனின் முற்பிறவி நினைவுகள் எதுவும் இல்லை. என்றுமே அவனுக்கு அந்த பாக்கியத்தை தர போவதும் இல்லை. அவனின் காதல் அந்த பிறவியில் எழுதப்பட வில்லை. இந்த பிறவியில் தான் எழுத பட உள்ளது. இனி அவனுக்கு அனைத்தும் புதிது தான். காதல், திருமணம், ஊடல், கூடல், மோதல் என்று எல்லாமே புதிதாக தான் எழுத பட இருக்கிறது.
அவனே உள்ளே வந்து அவனின் உடற்பயிற்சி செய்யும் அறைக்கு சென்று இருந்தான்.
அவனின் வீடே ஒரு சிறிய அரண்மனை தான். அதுவும் பளிங்கால் செய்து இருந்த அரண்மனை அது!
அவனுக்கு என்று பிரத்யேக உடற்பயிற்சி அறையை அவனே வடிவமைத்து இருந்தான்.
இரண்டு மணி நேர உடற்பயிற்சிக்கு பிறகு அவன் வெளியே வந்து குளித்து முடித்து கீழே இறங்கி வரும் சமயம் அவனின் அன்னை நந்தினி பூஜை செய்து கொண்டு வந்து அவனின் நெற்றியில் திருநீர் வைக்க போகவும், "மாம் எத்தனை தடவ சொல்லிருக்கேன் இதெல்லாம் எனக்கு பிடிக்காது" என்று கையை தட்டி விட்டு இருந்தான். இதே வாயால் தான் திருநீர் இல்லாமல் எங்கும் செல்ல மாட்டேன் என்று சொல்லி கொண்டு இருந்தான் முற்பிறவியில்!
மக்கள் நேற்று இன்று என்று மாறும்போது இந்த பிறவியில் இவனிடம் மட்டும் நான் என்ன எதிர் பார்த்து விட முடியும்?
நந்தினியின் முகம் அப்படியே சுருங்கி விட்டது.
"சரி சரி இப்படி முகத்தை தூக்கி வைக்காதீங்க" என்று சொன்னவன் எப்படியோ அவரின் தோல் மேல் கை போட்டு கொண்டு, அவரை உணவு சாப்பிடும் இடத்திற்கு அழைத்து சென்றான்.
"எங்க உங்க புருஷ் மிஸ்டர் புஷ்?" என்று அவன் கேட்கவும், அவனின் தலையில் செல்லமாக அடித்து விட்டு, "அப்பான்னு மரியாதை இருக்கா டா உனக்கு? மிஸ்டர் புஷாம்" என்று சொல்லிக்கொண்டே அவனுக்கு வைத்து இருந்த ப்ரோடீன் ட்ரின்க், அவகடோ, முட்டை என்று எடுத்து வைத்தார்.
"அம்மா அபராஜித் புஷ்பலிங்கம்ன்னு சொல்ல எனக்கு தான் சிரிப்பா இருக்கு... எனக்கு மாடர்ன் பேரு என் அப்பாக்கு இப்படி பேரு நான் என்ன பண்றது?" என்று அவன் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, "நான் என்ன பண்றது? உன் அப்பா மொர்டானா இருக்கேன் ஆனா உன் தாத்தா அப்படி இல்லையே டா அபி" என்று சொல்லிக்கொண்டே அவனின் அருகில் அமர்ந்தார் புஷ்பலிங்கம்.
இருவரும் உண்டு கொண்டு இருக்கும் போதே கண்களால் எதையோ அறிவுறுத்து இருந்தார் நந்தினி.
"என்ன அம்மா எதையோ உங்க புருஷ் கிட்ட கண்ணாலேயே சொல்றிங்க? இந்த ரோமன்ஸ் எல்லாம் நான் பிறந்த பிறகு நீங்க பண்ணி இருந்தா எனக்கும் ஒரு தம்பியோ தங்கச்சியோ இருந்து இருப்பாங்க" என்றவனின் தோளில் ஒரு அடி போட்டு இருந்தார் புஷ்பலிங்கம்.
ஆம் நந்தினி புஷ்பலிங்கத்திற்கு ஒரே மகன் அபராஜித்! திருமணம் ஆகி மூன்று ஆண்டுகள் குழந்தை இல்லாத இருந்த தம்பதிகளுக்கு இந்தாருங்கள் உங்களின் மணி செல்வனை என்று வாரி வழங்கி இருந்தார் இறைவன்.
"அது என்னனா.. உன் அம்மா உனக்கு பொண்ணு பார்க்கலாம்னு சொல்ராங்க டா அபி" என்று சொல்லவும், நந்தினியை பார்த்தவன், "அம்மா எனக்கு வெறும் இருபத்தி ஒன்பது வயசு தான் ஆகுது இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம்?" என்று கேட்க, "டேய் உன் வயசு பசங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகி அவங்களுக்கு குழந்தையே இருக்கு டா" என்று நந்தினி சொல்ல, அவனோ மூச்சை இழுத்து விட்டு, "அதுக்காக எல்லாம் நான் கல்யாணம் பண்ணிக்க முடியாது தாயே!" என்றவன் மீண்டும் சாப்பிட துவங்கினான்.
"யாரையாவது லவ் பண்றியா டா?" என்று நந்தினி கேட்க, "ம்கூம் உன் மகனை மேல உனக்கு அந்த நம்பிக்கை எல்லாம் இருக்கா நந்து? அவன் சாமியாரா போயிருவானோனு எனக்கு பயமா இருக்கு? அதை எல்லாம் விட நமக்கு மருமக இல்லாம மருமகனை கூட்டிட்டு வரானோனு வேற ஒரு எண்ணம். டேய் அபி அப்படி ஏதாவது இருந்தா கூட சொல்லுடா நான் உனக்கு சப்போர்ட் பண்றேன்" என்றவரை பார்த்து முறைத்து கொண்டு இருந்தான் அபராஜித்.
"அப்பா மாதிரி பேசுங்க... எனக்கு அப்படி எல்லாம் யாரு மேலையும் லவ் இல்ல... யாரையாவது பார்த்தா இவ தான் உங்க மருமகன்னு சொல்றேன்" என்று சொன்னவனை பார்த்து, "டேய் நீ அந்த அட்வெர்ட்டிஸ்ட்மென்ட்ல நடிக்கிறியே.. அந்த நடிகை பேரு என்ன வியன்னாவா வியாதியோ அவளை மட்டும் கூட்டிட்டு வராதா டா ப்ளீஸ்" என்று கெஞ்சி கொண்டு இருந்தார் நந்தினி.
அவனோ சலிப்பாக தலையாட்டி விட்டு, "அம்மா அப்படி எல்லாம் எனக்கு ஒரு எண்ணமும் இல்ல.. நடிகை கூட நடிக்குறேன் மத்தபடி எதுவும் இல்ல உங்களுக்கும் தெரியும் தானே" என்றவனை பார்த்து, "எனக்கு என்ன டா தெரியும், உன் டீம்ல இருந்த முக்காவாசி சீனியர் எல்லாம் நடிகைகளை தான் கல்யாணம் பண்ணி இருக்காங்க.. இதுல நீ மட்டும் எப்படி இருப்பன்னு நினைச்சா எனக்கு பயமா இருக்கு... டேய் நல்ல குடும்பத்து பொண்ணா பாரு டா... வசதி எல்லாம் கூட நமக்கு தேவை இல்ல" என்று நந்தினி அடுக்கி கொண்டே போக, "அம்மா போதும் போதும் ...விட்டா இப்பவே நீங்க சாமுத்திரிக்கை லட்சணம்ன்னா என்னனு எனக்கு க்ளாஸ் எடுப்பீங்க... நான் போகணும்.. கோச் இன்னைக்கு மீட்டிங் கூப்பிட்டு இருக்கார்" என்று சொல்லிக்கொண்டே எழுந்து கொண்டான்.
"இன்னைக்காவது வர்ஷன் கூட சண்டை போடாம வா டா" என்று புஷ்பலிங்கம் சொல்லவும், "போதும் போதும் உங்க நண்பன் மகன் கிட்ட இதே டயலாக் தான் உங்க நண்பரும் சொல்லி அனுப்புவார். ஆனா உங்க இரண்டு பேருக்குமே தெரியும் நீங்க பெத்த இரண்டு பேரும் நீங்க சொல்றதை கேட்க மாட்டோம்னு அப்புறம் ஏன் டாடி டைம் வேஸ்ட் பண்றீங்க? எப்படியா இருந்தாலும் இன்னைக்கு பிரச்சனை தான்" என்று சொல்லிக்கொண்டே அவனது காரின் சாவியை எடுத்தவனை பார்த்து, "டேய் உங்க இரண்டு பேருக்கு நடுவுல இருந்து வதை படுவது என்னவோ அகரன் தான் டா" என்று சொன்ன தந்தையை பார்த்து, அவனோ சிரித்து, "அவனுக்கு பழகிருச்சு" என்று சொல்லி இருந்தான்.
நந்தினியோ, "அவன் பாவம் டா, போனா வாட்டி நீயும் வர்ஷனும் போட்ட சண்டைல அவன் தான் அந்த ஹோட்டலுக்கு பைன் கட்டிட்டு வந்தான்" என்று சொன்னவரை பார்த்து, "அம்மா அதுக்கு தான் அவனுக்கு நான் புதுசா ஜாகுவார் கார் ப்ரெசென்ட் பண்ணேன் அம்மா" என்றவனை பார்த்து முறைத்தவர், "உன்னை எல்லாம் நான் எப்படி பெத்தேனோ டா? நானாச்சு பெத்த பாவத்துக்கு இதை எல்லாம் கேட்குறேன். அந்த பையன் அகரன் பாவம் உனக்கும் அவனுக்கும் நடுவுல மாட்டிகிட்டு முழிக்கிறான்" என்று புலம்பிக்கொண்டே இரண்டு டப்பாக்களை அவனிடம் கொடுத்து இருந்தார்.
அவனோ புருவம் உயர்த்த, "ஒன்னு அகரனுக்கு இன்னொன்னு வர்ஷனுக்கு" என்றதும் அவரை முறைத்தவன், "போய் கொடு டா! அவன் அம்மாவும் உனக்கு ஏதாவது கொடுத்து தானே அனுப்புவா" என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
அவன் சென்றதும் நந்தினியும் புஷ்பலிங்கமும் ஒருவரை ஒருவர் பார்த்து தலையசைத்து கொண்டனர்.
"உன் பையனும் அவனும் இன்னைக்காவது மீட்டிங் ஒழுங்கா முடிச்சிட்டு வரணும்னு வேண்டிகோ டி... இல்லனா இரண்டு பேரையும் இந்தியா டீம்ல இருந்து வெளிய அனுப்பிருவாங்க" என்று சொன்னவரை பார்த்து, "அதெல்லாம் பண்ண மாட்டாங்க இரண்டு பேருக்கும் நல்ல டேலண்ட் இருக்கு... ஆனா கோவமும் சேர்ந்தே இருக்கு" என்று நந்தினி சொல்ல, ஆமோதிப்பாக தலையசைத்தார் புஷ்பலிங்கம்.
இங்கோ, "அவனுக்கு நான் எடுத்துட்டு போகணுமா?" என்று அவனின் அன்னையிடம் கத்தி கொண்டு இருந்தான் அதர்வவர்ஷன்.
கருத்துகள்
கருத்துரையிடுக