இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 6

 

இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ!

பிறவி 6

 

மீட்டிங்கிற்கு அனைவரும் வந்து இருந்தார்கள். அவர்களுக்காக தேனீர் மற்றும் கொஞ்சம் பழங்களும் வைக்க பட்டு இருந்தன.

 

அவர்களின் பயிற்சியாளர் சுக்கிரீவன் தான் பேச துவங்கினார்.

 

"இது தான் நான் ட்ரெயின் பண்ண பெஸ்ட் அண்ட் வர்ஸ்ட் டீம்" என்றவர் சொல்லவும், யாரும் எதுவும் சொல்லவில்லை.

 

அவர் ஏன் அப்படி சொல்லுகிறார் என்று தான் அனைவருக்கும் தெரியுமே!

 

"உங்களுக்குள்ள பிரச்சனைனா அதை ட்ரெஸ்ஸிங் ரூம் வரைக்கும் வச்சிக்கோங்க... இப்படி கிரௌண்ட் வரைக்கும் கொண்டு போகாதீங்க... அங்கையோட நின்னா கூட சரி பாக்குற இடம் எல்லாம் சண்டை போட்டு மானத்தை வாங்குறீங்க" என்று அவர் காட்டமாக சொல்லவும், அனைவரும் ஒரு சேர அதர்வ் மற்றும் அபராஜித்தை தான் பார்த்தார்கள்.

 

அணியின் கேப்டனும் துணை கேப்டனும் அடித்து கொண்டதுதான் இப்பொது வரை தலைப்பு செய்தி!

 

அதர்வ் அபாரஜித்தை பார்வையால் எரிக்க, அவனோ அதர்வ்வை பார்வையால் பொசுக்கி இருந்தான்.

 

இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை. இந்திய அணியின் தலைமை பொறுப்பிற்கு இருவரில் யாரு என்று தேர்வு செய்யும் போது யாரை கேப்டன் மற்றும் துணை கேப்டனாக போடுவது என்று குழுவே தலையை பிய்த்து தான் கொண்டது.

 

புலியும் சிங்கமும் ஒரே காட்டிற்குள் இருக்க முடியாதே! அதே பிரச்சனை தான் இங்கேயும்! ஒரு பக்கம் புலியாக அதர்வ் மறுபக்கம் சிங்கமாக அபராஜித்! இதற்கு நடுவில் மாட்டி கொண்டு முழிப்பது என்னவோ சுக்கிரீவன் தான்.

 

பின்பு அவர்களே யோசித்து ஒரு நாள் போட்டிக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கும் அதர்வ் கேப்டன் அபராஜித் துணை கேப்டன், டி டுவெண்ட்டிக்கு அப்படியே எதிராக அதர்வ் துணை கேப்டன், அபராஜித் கேப்டன் என்று முடிவெடுத்து இருந்தார்கள்.

 

நிச்சயமாக ஒருவர் சொல்வதை மற்றோருவர் கேட்க போவது இல்லை தான். ஆனாலும் அவர்கள் சொல்வதை அனைவரும் கேட்பார்கள் என்று அவருக்கு தெரியும்.

 

அவர் கேள்வி கேட்டு கொண்டே இருக்க, அதற்கு பதிலே பேசாமல் தான் இருவரும் அமைதியாக இருந்தார்கள்.

 

அவரின் பார்வையோ இப்பொது அகரனிடம் சென்றது.

 

'ஐயோ ஐயோ இந்த ஆளு வேற நம்பள பார்குறானே!' நினைத்து கொண்டே, "கோச் அது ஏதோ தெரியாம நடந்திருச்சு" என்று அவன் தான் பேசி இருந்தான்.

 

"எது தெரியாம நடந்தது? நல்லா மாடு மாதிரி வளர்ந்து இருக்கானுங்க ஆனா அதுல கொஞ்சம் கூட அறிவில்லை... நல்லா விளையாண்டா மட்டும் போதாது.. டிசிப்ளின் வேணும்" என்று அவர் சொல்ல, அபராஜித் யோசிக்கவே இல்லை, "எப்படி மேட்ச் முடிச்சிட்டு சியர் கேர்ள்ஸ் கூட நீங்க ஆடுனீங்களா அந்த டிசிப்ளினா?" என்று கேட்டு இருந்தான்.

 

அகரனுக்கோ, 'அடேய் சண்டாளா! வாயா மூடு டா குரங்கு' என்று அவனுக்கு பார்வையாலேயே சொல்லியவன், "ஐயோ கோச் அவன் ஏதோ தெரியாம சொல்றான்" என்று அகரன் சமாளிக்க, "அவன் தெரிஞ்சு தான் கோச் சொல்றான். நீங்க எல்லாம் டிசிப்ளின் பத்தி பேசலாமா? பார்ட்டில நல்லா குடிச்சிட்டு வாந்தி எடுத்துட்டு குப்புற கவுந்து படுத்திகிட்டு இருக்கறது தான் டிசிப்ளினான்னு கேட்டு இருக்கான்" என்று அதர்வ் இது தான் சாக்கு என்று அவன் மனதில் நினைத்ததையும் அபராஜிதன் பெயரை சொல்லி அடித்து விட்டு இருந்தான்.

 

அவன் தான் சொல்கிறான் என்று அனைவருக்கும் தெரியும். ஏன் சுக்கிரீவனுக்கே தெரியும்.

 

அகரனோ, 'ஆத்தி இவனுங்க இன்னைக்கு என்னை ஒரு வழி ஆக்காம விட மாட்டானுங்க போலையே' என்று நினைத்தவன், "கோச் நீங்க எதுக்கு வர சொன்னீங்க அதை சொல்லுங்க" என்று நேரடியாக விடயத்தை முடித்து எங்களை அனுப்பி விடுங்கள் என்று மறைமுகமாக சொல்லி இருந்தான்.

 

"இன்னும் இரண்டு மாசத்துல ஆஸ்திரேலியா டூர் இருக்கு... அதுக்குள்ளே இவங்களை ஒழுங்கா இருக்க சொல்லு... அப்புறம் இரண்டு பேரும் சண்டை போட்டுக்க மாட்டாங்கன்னு இதுல சைன் பண்ண சொல்லு" என்று அவர்கள் இருவரின் முன்னும் ஒரு காதித்தை வைக்க, அதை இருவரும் சொல்லுவதைத்து போல கிழித்து எரிந்து பறக்க விட்டு இருந்தனர்.

 

அகரனோ நெஞ்சில் கையை வைத்தே விட்டான்.

 

அபராஜித் சுக்கிரீவனை பார்த்து, "இங்க பாருங்க நான் ஒழுங்கா ஆடுறேனான்னு மட்டும் தான் நீங்க பார்க்கணும். அதை விட்டுட்டு யார் கூட பேசணும் சண்டை போடணும்னு எல்லாம் சொல்ல கூடாது.. அதுக்கு உங்களுக்கு ரைட்ஸ் கிடையாது" என்று சொன்னவன் நிக்க கூட வில்லை அங்கிருந்து சென்று விட்டான்.

 

அதர்வ் அவர்களை பார்த்து, "அவன் சொன்னது தான்" என்று சொல்ல, "நான் கோச்சா அவனுங்க கோச்சா?" என்று அகரனை பார்த்து கத்தவும், அவனோ எடுத்தேன் பாரு ஓட்டத்தை என்று இருவரின் பின்னாலும் சென்று இருந்தான்.

 

"டேய் நில்லுங்க டா.. நில்லுங்க" என்று அவன் கத்திகொண்டே பின்னால் வர, அங்கே அவனுக்காக காத்து கொண்டு இருந்தான் ரிதேஷ்.

 

"என்ன அகரன் ப்ரோ இன்னைக்கும் சண்டையா?" என்று அவன் புன்முறுவலுடன் கேட்டுக்கொண்டே அவனின் முன் பழரசம் ஒன்றை நீட்டி இருந்தான்.

 

"உனக்கு கோவிலே கட்டலாம் டா.. எப்படி தான் இவனுங்க கூட சின்ன வயசுல இருந்து இறுக்கியோ? பைத்தியம் தான் இரண்டு பேரும்.. சரியான திமிரு பிடிச்சவனுங்க... இவனுங்களை கட்டிக்க போறவளுங்கலாம் ரொம்ப பாவம்" என்று சொன்னவனை பார்த்து வாய்விட்டு சிரித்தவன், "அதெல்லாம் காலம் மாறிடுச்சு.. இப்போ எல்லாம் பசங்க தான் பாவம்.. பொண்ணுங்க தான் தூக்கி போட்டு மிதிக்குறாங்க... இவங்களுக்கு வர்ரவங்க இவங்களை மிதிப்பாங்கனு நம்புவோம்" என்று சொல்லி அவனின் தோளில் கையை போட்டு நடக்க துவங்கி இருந்தான்.

 

"அதர்வ் கூட பரவால்ல டா.. ஆனா இந்த அபி இருக்கான் பாரு... அவனுக்கெல்லாம் அம்மியில் வச்சி அரைக்கிற மாதிரி ஒருத்தி வரணும்" என்று தெரிந்து சொன்னானோ தெரியாமல் சொன்னானோ, உண்மையாக அவனை அடக்கி ஆள போறவள் அம்மியில் தூதுவளை துவையலை அரைத்து கொண்டு தான் இருந்தாள்.

 

ரிதேஷ் அபராஜித்க்கு அழைத்து ஒரு பெரிய ஹோட்டலிற்கு வர சொல்ல, அதர்வ்வையும் அழைத்து இருந்தான் அகரன்.

 

நால்வரும் ஒன்றாக தான் அமர்ந்து இருந்தார்கள். அதர்வ் மற்றும் அபராஜித்திற்கு எதிரில் அமர்ந்து இருந்தனர் அகரனும் ரிதேஷும்.

 

"டேய் உங்க இரண்டு பேரை வச்சிக்கிட்டு என்னால முடியல டா நான் குய்ட் பண்றேன்" என்று அவன் சொல்ல, "ரொம்ப சந்தோஷம் கிளம்பு" என்று சொல்லி இருந்தான் அபராஜித்.

 

இவன் தானா வேல்முருகனின் முற்பிறவி என்று சத்தியம் செய்து சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டார்கள். சாந்தமாக இருந்தவன், இப்படி சாத்தானாக மாறுவான் என்று பிரமன் கூட நினைத்து பார்க்கவில்லை.

 

ரிதேஷிற்கோ சிரிப்பு வந்து விட்டது.

 

அடக்கி கொண்டான். இல்லையென்றால் அதற்கு வேறு திட்டு விழும்.

 

"உங்க கிட்ட நான் வாக்கப்பட்டு சாகுறேன் டா" என்று அகரன் சொல்ல, "டேய் என்ன வாக்கப்பட்ட? எனக்கு எல்லாம் பொண்ணுங்க மேல தான் இன்டெரெஸ்ட்... கேர்ள் பிரண்ட் இல்லனு எனக்கு பசங்க மேல தான் காதலன்னு தப்பா எல்லாம் நினைக்காத... அப்படி எல்லாம் ஏதாவது ஆசை  இருந்தா உன் இதயத்துல இருந்து அழிச்சிறு... மே பி அடுத்த பிறவில நீ ஆணா இல்ல நான் பெண்ணா, இல்ல நீ பெண்ணா நான் ஆணா பிறந்தா வேணா நடக்கலாம்" என்று அதர்வ் சொல்லவம், கொலென்று சிரித்து விட்டான் ரிதேஷ்.

 

அபராஜித்க்கும் சிரிப்பு தான். ஆனால் அமைதியாய் இருக்க, "வேணும்னா இவன் அப்படியான்னு கேட்டு பாரு.. இரண்டு பேரோட கல்யாணத்துக்கும் வந்து அச்சத்தை போட்டு கிபிட் கொடுத்துட்டு போறேன்... வீட்ல சம்மதிக்கலானாலும் பரவால்ல... நான் சாட்சி கை எழுத்து போடுறேன்" என்று சொல்லவும், அபராஜித் அவனை பார்த்து முறைத்து, "டேய் உன் நண்பன் கிட்ட சொல்லு அவனுக்கு முன்னாடி நல்ல பொண்ணா பார்த்து கட்டிக்கிட்டு அவனுக்கு முன்னாடி குழந்தையும் கொடுக்கல என் பேரு அபராஜித் இல்ல டா" என்று சொல்லவும், ரிதேஷோ, "அப்போ அகரனுக்கு பொண்ணு கூட கல்யாணம் நடக்காதா?" என்று கேட்க, அவர்களை தான் அடிக்க முடியாது, இவனை முடியும் என்பதால், தலையை பிடித்து அவர்களின் மேல் இருக்கும் அத்தனை கோபத்தையும் நங் நங் என்று ரிதேஷின் தலையில் கொட்டி இறக்கி இருந்தான் அகரன்.

 

"அடேய் அறிவு கெட்டவனுகளா உங்களால தான் டா நான் அடிவாங்குறேன்" என்று ரிதேஷ் கத்தும் பொது கூட அந்த இருவருக்கும், 'எங்களை அடிக்கவில்லை' என்று தோளை குலுக்கி கொண்டனர்.

 

இதே சமயம் அகரனின் கைப்பேசி சிணுங்கியது. எடுத்து பார்த்தால் அவனது அன்னை தான்.

 

"சொல்லு மா" என்றவனுக்கு, "டேய் நீ நாளைக்கே கிளம்பி ஊருக்கு வா.. உனக்கு தாரிகாவை பொண்ணு பார்க்கலாம்னு இருக்கோம்... நீ வர" என்று சொல்லி வைத்து விட்டார். அவனின் பேச்சை கூட கேட்கவில்லை. எங்கே மறுத்து பேசி விடுவானோ என்று அவருக்கு பயம்.

 

அவனோ அப்படியே தலையை பிடித்து அமர்ந்து விட்டான்.

 

"என்ன ப்ரோ என்ன ஆச்சு? எனி ப்ரோப்லேம்?" என்று ரிதேஷ் கேட்கவும், "எனக்கு பொண்ணு பார்த்து இருக்காங்களாம்... நாளைக்கே ஊருக்கு வரணுமாம்" என்று அவன் பாவமாக சொல்ல, "அப்போ உங்களுக்கு பொண்ணுங்களை பிடிக்காத ப்ரோ அதர்வ் சொன்ன மாதிரி பையனை தான் பிடிக்குமா? நான் வேணா உங்க அம்மா கிட்ட பேசட்டுமா?" என்று சொன்ன ரிதேஷின் தலையில் மேலும் கொட்டியவன், "சேட்டை சேட்டை... அவனுங்க முறைச்சிகிட்டே என்னை டார்ச்சர் பன்றானுங்க நீ சிரிச்சிகிட்டே டார்ச்சர் பண்ற... நான் கல்யாணத்தை பத்தி எல்லாம் யோசிச்சதே இல்ல... என் பேமிலிய பத்தி தான் தெரியும்ல... இப்போ தான் நாங்க கொஞ்சம் நல்ல நிலைமைக்கு வந்து இருக்கோம்... அம்மா வர சொல்லி இருக்காங்க... ஊருக்கு போகணும்னு நினைச்சி தான் இருந்தேன்... நாளைக்கே போகணும் போல" என்று நிதானமாக பேசினான்.

 

"சூப்பர் ப்ரோ அப்போ ஒரு ஷார்ட் வெகேஷனா?" என்று கேட்கவும், "அப்படி தான் போல" என்றவனை பார்த்து, "நாங்களும் வரட்டுமா ப்ரோ? உங்க ஊரை பார்க்கணும்னு ரொம்ப நாளா ஆசை... இப்போ எல்லாரும் ப்ரீ தானே" என்று அவன் கேட்க, அபராஜிதோ, "ஆமா டா எனக்கும் ஒரு பிரேக் வேணும்" என்றதும், அதர்வ் அதையே தான் சொல்லி இருந்தான்.

 

"அங்கையும் நான் இவனுங்கள மேய்க்கணுமா டா?" என்று அகரன் ரிதேஷை பார்க்க, "ப்ரோ இரண்டு பேரும் சேர்ந்து மேய்க்கலாம்.. முடிஞ்சா இவங்களை மேய்க்க யாராவது கண்ல பட்ட அவங்களுக்கு கட்டியும் வச்சிரலாம்" என்று சொல்லி இருந்தான் ரிதேஷ்.

 

அனைவரும் புன்னகைக்க, இதோ அடுத்த நாள் காலையில் அகரனின் கிராமத்தை நோக்கி அவர்களின் பயணமும் ஆரம்பமானது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கண்கள் சொல்லும் கதைகள்! கதை 1

கண்கள் சொல்லும் கதைகள்! கதை 2