இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 10

 

இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ!

பிறவி 10

 

அடுத்த நாள் காலை விடிய சுப்ரியாவும் ஜானகியும் தரிக்கா வீட்டிற்கு தான் வந்து இருந்தார்கள்.

 

அதே சமயம் தாரிக்கா மற்றும் வஞ்சி இருவரும் சாப்பிட்டு கொண்டு இருக்க, "என்ன சமையல் சித்தி?" என்று தாரிக்காவின் அன்னையிடம் கேட்டு கொண்டு வந்து அமர்ந்தாள் சுப்ரியா.

 

"உப்மா தான்" என்றதும், "அதை நீங்களே சாப்பிடுங்க... நம்ப கோவிலுக்கு போகலாம் டி" என்று சொல்லவும், வஞ்சிக்கோ நேற்றில் இருந்து மனமே சரி இல்லை. ஒரு புறம் பழைய ஜென்மத்தின் நினைவுகள், பத்தாதற்கு இந்த ஜென்மத்தின் கஷ்டங்கள் என்று அவளை படுத்தி எடுத்தது. போன ஜென்மத்தில் அப்பாவின் இளவரசியாக இருந்தவள், இன்று பிச்சைக்காரியை போல் இருக்கிறாள்.

 

அனைத்திற்கும் காரணம் அவளின் சித்தி மயில் வேறு அவளை ஆட்டி வைத்து கொண்டு இருக்கிறார்.

 

ஒரு பக்கம் வேதனை, மறுபக்கம் அவனின் நினைவுகள் தரும் காதல் கீதம் ஆனால் இப்பொது அது கூட அவளுக்கு கிடையாது.

 

"என்ன டி ஏன் ஒரு மாதிரி இருக்க?" என்று கேட்ட ஜானகியை பார்த்து, "ஒன்னும் இல்ல.. கோவில் போகலாம்" என்று சொல்லி நால்வரும் கோவிலுக்கு கிளம்பினார்கள்.

 

இதே சமயம் தான் நம் நாயகர்களும் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர்.

 

"டேய் யாரும் வர மாட்டாங்க தானே?" என்று கேட்டு இருந்தான் அபராஜித்.

 

"டேய் மணி இப்போ பத்து.. அதுவும் வியாழக்கிழமை தான். பசங்க எல்லாரும் பள்ளிக்கூடத்துக்கு போயிட்டு இருப்பாங்க... அதனால பெருசா யாரும் இருக்க மாட்டாங்க.. தைரியமா வாங்க.. இங்க மலை கோவில் ரொம்ப பேமஸ்" என்று அகரன் அவர்களை அழைத்து கொண்டு சென்றான்.

 

"ஆனா அகரன் ப்ரோ எங்களை நல்லா எக்சர்சைஸ் பண்ண வைக்குறிங்க... பேசாத ட்ரேட்மில்ல ஓடுறதுக்கு இங்க ஓடலாம் ப்ரோ" என்றவனை பார்த்து, "அதான் அபி தினமும் ஓடுறானே! நீயும் ஓடு" என்று சொல்லவும், "நான் கூட ஓடலாம்னு பார்க்குறேன்" என்று அதர்வ் கூட சொல்லி இருந்தான்.

 

இவர்கள் இப்படி பேசிக்கொண்டு வரும் அதே சமயம் நம் நாயகிகளும் கூட வந்து இருந்தார்கள்.

 

"அட கொடுமையே! இந்த அரக்கி கும்பல் இங்க என்ன செய்யுது?" என்று அகரன் காதில் ரிதேஷ் கேட்க, "கோவிலுக்கு எதுக்கு டா வருவாங்க?" என்று அவனை முறைத்தவன் அப்படியே திரும்பி வஞ்சியை பார்த்து, "இப்போ ஓகேவா வஞ்சி? ஏதும் பிரச்சனை இல்ல தானே?" என்று கேட்டு இருந்தான்.

 

"அவ வீட்டுக்கு போகல.. தாரிக்கா வீட்டுலயே தங்கிட்டா" என்று சொல்லவும், அவனோ, "இப்படியே வீட்டுக்கு போகமா இருந்தா எல்லாம் சரி ஆகிடுமா? நான் வேணா மாமா கிட்ட வந்து பேசட்டுமா?" என்று கேட்டு இருந்தான்.

 

"உங்க மாமா பொண்ணா ப்ரோ?" என்கிற ரிதேஷை பார்த்து, "இங்க எல்லாம் முறை வச்சி தான் கூப்பிடுவாங்க" என்று ஜானகி பதில் கூறி இருந்தாள்.

 

"ஓஹ் அப்போ உன்னோட அம்மா அப்பாவை என்னனு அகரன் ப்ரோ கூப்பிடுவாரு?" என்றதும், "மாமான்னு தான்" என்றவளை பார்த்து, "அப்போ என்னையும் மாமான்னு கூப்பிடுறியா?" என்று கேட்டு இருந்தான்.

 

"பிஞ்சிக்கும்" என்று ஒற்றை விரலை நீட்டி அவள் சொல்ல, "பரவால்ல தச்சிக்கலாம்.. இல்ல புதுசா வாங்கி தரேன்" என்று விடாமல் வாய் அடித்தான்.

 

"கோவிலுக்கு போகும் போது என்ன பேச்சு இதெல்லாம்" என்று வஞ்சி கடியவும் தான் அமைதி ஆனார்கள்.

 

அதர்வ் மற்றும் வஞ்சி தான் ஒன்றாக முதல் படியில் காலை வைத்து இருந்தனர். அதை இருவருமே எதிர்பார்க்கவில்லை.

 

இருவரின் விழிகளும் ஒரே கோட்டில் சந்தித்தும் கொண்டது. அவள் தான் பார்வையை திருப்பி கொண்டாள்.

 

பார்த்தால் அவளின் காதல் அப்பட்டமாக தெரிந்து விடும் என்கிற ஒரு வித தயக்கம். அவனின் மேல் காதல் இல்லாமல் அவளால் பார்க்க முடியுமா? முற்பிறவியில் திருமணம் கூட செய்யாமல் அவளையே அவனுக்கு கொடுத்தவள், சாகும் போது கூட அவனின் வாரிசை சுமந்து கொண்டு உயிரை விட்டு இருந்தாலே!

 

அப்படி பட்டவள் இப்பொது அவனை பார்க்கும் போது எப்படி காதல் இல்லாமல் பார்க்க முடியும்? ஆனால் என்னவென்று சொல்லுவது? முற்பிறவியில் உன்னை பைத்தியக்காரத்தனமாக காதிலித்தவள் நான், உன்னை நெஞ்சில் சுமந்து, உன் கருவையும் சுமந்து இருந்த தருணத்தில் கயவன் ஒரு நாசனம் செய்ததால் மொத்தமாக என் உயிரே என்னை விட்டு பிரிந்து விட்டது. நம் காதலின் கதையும் முற்று பெறாமலே முடிந்து விட்டது என்றா? இப்படி எல்லாம் சொன்னாலே அவன் அவளை பைத்தியம் என்று நினைக்க மாட்டான்.

 

"அடியேய் அடுத்த படியில் ஏறு" என்று சுப்பு சொல்லவும், அடுத்த அடி எடுத்து வைத்து இருந்தாள், அவர்களை தொடர்ந்து சுப்பு மற்றும் அபராஜித் ஒன்றாக முதல் அடியை எடுத்து வைத்தார்கள். அடுத்து ஜானகி ரிதேஷ், இறுதியாக அகரன் தரிக்கா மலையை ஏற துவங்கினார்கள்.

 

சிறிய மலை தான் அது என்பதால் ஏறுவதற்கு அவர்களுக்கு சுலபமாக தான் இருந்தது. அதுவும் அங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் தான் பெண்களும் அகரனும், மற்ற மூவரும் கூட திடகாத்திரமான ஆண்மகன்கள் தான் என்பதால் இன்னும் சுலபம் தான்.

 

"ஆமா உங்க ஊருல என்ன பேமஸ்?" என்று ரிதேஷ் அனைவரையும் பார்த்து பொதுவாக தான் கேட்டான்.

 

"வந்ததும் தெரியல.. சாணி தான் பேமஸ் போல" என்று சொன்ன அபராஜித்தை தடுத்து, "ரொம்ப பேசுறீங்க... எங்க ஊர்ல எவளோ விஷயம் இருக்கு தெரியுமா?" என்று அவனின் முன் வந்து நின்றவளை மேல் இருந்து ஒரு பார்வை பார்த்தான். அவன் இன்று வரை எந்த பெண்ணையும் ரசித்தது எல்லாம் இல்லை. நந்தினியின் வளர்ப்பு அப்படி!

 

பெண்களை கழுத்துக்கு கீழ் என்று இல்லை, கழுத்துக்கு மேலும் கண்களை தவிர வேறு எங்கேயும் பார்க்க கூடாது என்று சொல்லியே வளர்த்து விட்டார்.

 

ஆனால் இன்று ஏனோ அவனின் அன்னை சொல்லிக்கொடுத்த பாடங்கள் எல்லாம் சுப்ரியாவின் முன் பொடி பொடியாக போனது.

 

முதல் முறை ஒரு பெண்ணை ரசிக்கிறான். அவன் பார்த்த அழகிகளில் அவள் ஒன்றும் அழகி இல்லை. ஆனால் ஏதோ ஒன்று அவனை ஈர்த்து தான் இருந்தது. அவனின் ஒரு பார்வைக்காக ஏங்கும் பெண்களுக்கு மத்தியில் அவனையே திரும்பி பார்க்க வைத்த பெண் அவள் தான்!

 

அவனை ஒரு நாள் முழுக்க யாரு டா அந்த பெண் என் கார் கண்ணாடியை உடைத்து என்று அவளின் முகத்தை காட்டாமலேயே நினைக்க வைத்து இருக்கிறாளே!

 

"உங்கள தான் கேட்குறேன்? எங்க ஊர்ல எவளோ விஷயம் இருக்குனு உங்களுக்கு தெரியுமா?" என்று இடுப்பில் கை வைத்து கேட்பவளுக்கு மட்டும் கேட்கும் குரலில், "உன் கிட்ட என்ன விஷயம்னு முதல்ல எனக்கு தெரிஞ்சிக்கணும்" என்று சொன்னானே பார்க்கலாம், அவளின் கால்கள் தடுக்கியே விட்டது.

 

அவள் விழாமல் இடையை பற்றி தாங்கி இருந்தது என்னவோ அவனின் கரங்கள் தான்.

 

"ஹே சுப்பு பாத்து டி" என்று ஜானகி சொல்ல, "அதான் அபி ப்ரோ பார்த்துகிட்டே இருக்காரே" என்று ரிதேஷ் சமயம் பார்த்து காலையும் வாரி விட்டான்.

 

வஞ்சியோ சிரித்து விட, அதர்வ் அவளை திரும்பி பார்த்தான்.

 

"அழகா சிரிக்கிற" என்று அவன் யோசிக்காமல் சொல்லி இருந்தான்.

 

அவளின் சிரிப்பு நின்று அவனை திரும்பி பார்த்து இருந்தாள்.

 

அப்போது தான் அவனுக்கு அவன் என்ன சொன்னான் என்றே உரைத்தது.

 

அவன் இப்படி எல்லாம் ஒரு பெண்ணிடம் பேசி இருக்கிறானா என்ன?

 

"இல்ல நேத்து ரொம்ப பதட்டமா இருந்த... இன்னைக்கு இப்படி சிரிக்கும் போது அழகா இருக்க" என்று சொல்லவும், அவள் எதுவும் பதில் பேசாமல் தலை மட்டும் அசைத்து கொண்டாள்.

 

அகரனும் தாரிக்காவும் ஒன்றாக நடந்து வந்தார்கள். சிறுவயதில் இருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள் தான்.

 

அவளுக்கு பத்து வயது இருக்கும் போது அவள் செய்த ஒரு தவறை அவளின் அன்னை தந்தையிடம் போட்டு கொடுத்ததற்கு, "போடா கருவாயா உனக்கு எல்லாம் கல்யாணமே நடக்காது போ" என்று அவனுக்கு சபிக்க செய்தவள் தான். பின்பு எப்படியோ பதினாறு வயதில் அவனை ரசிக்கவும் செய்து இருந்தாள்.

 

குரலை செறுமிய அகரன் தான், "உனக்கு இந்த கல்யாணம் ஓகே வா?" என்று பேச்சை ஆரம்பித்தான். அவளின் மனதிலோ, 'ம்கூம் வேணாம்னு சொன்னா மட்டும் என் தகப்பன் விட்டுடுவானா? ஆமாம்னு சொல்லி தான் ஆகணும்' என்று மனதில் பேசியவள், "உங்களுக்கு காதல் எல்லாம் இல்லையா?" என்று கேட்டு இருந்தாள்.

 

திருமணத்திற்கு சம்மதமா என்று கேட்டவனின் முன் இப்படி கேட்டால் அவனும் என்ன செய்வான்?

 

"எனக்கு காதல் இருந்தா நான் ஏன் டி உன்னை பொண்ணு பார்க்க இப்படி இவனுங்க எல்லாரையும் கூட்டிட்டு வரணும்?" என்று கேட்டு இருந்தான்.

 

"எனக்கு இந்த ஊரு ரொம்ப பிடிக்கும் அகரன். உனக்கு தெரியும் தானே? நாங்க இங்க தானே நிறைய நாள் இருந்து இருக்கோம்... இப்போ உன்னை கல்யாணம் பண்ணா சிட்டில வந்து இருக்கனும்" என்று அவளின் மனதை சொல்லியே விட்டான்.

 

அவளின் மனது அவனிற்கு புரிந்தது தான். அவனுக்கும் ஊரை விட்டு செல்லும் போது இந்த எண்ணம் இருந்தது. ஆனால் அதை விட அவனின் கனவு அவனை இங்கிருந்து அழைத்து சென்றது. ஆனால் அவளுக்கு அப்படி ஏதும் இல்லையே!

 

அவனுக்காக மட்டும் ஊரை விட்டு வா என்று எப்படி அவனால் அழைக்க இயலும்?

 

"நானும் விளையாடுறதை நிறுத்திட்டா ஊருக்கு தான் வந்து செட்டில் ஆகலாம்னு இருக்கேன் தாரு" என்றான்.

 

உண்மையாகவே அது தான் அவனது எண்ணம்.

 

"நீ யோசிச்சிட்டு சொல்லு.. என் வாழ்க்கைல எந்த பொண்ணும் இருந்தது இல்ல... என் மனைவிக்கு மட்டும் தான் என் மனசுல இடம்.. நீ என்னை பதினாறு வயசுல சைட் அடிச்சது எல்லாம் எனக்கு தெரியும்... கொஞ்ச வருஷம் சிட்டில இருக்கலாம்.. பிறகு இங்கயே வந்திறலாம்" என்று சொல்லியும் இருந்தான்.

 

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அவனை வேண்டாம் என்று சொல்வதற்கு எந்த காரணமும் இல்லை.

 

மனதிற்கு பிடித்தவனும் கூட! யோசித்தால் என்ன என்று தான் அவளுக்கும் தோன்றியது.

 

"இரண்டு நாள் டைம் கொடுங்க யோசிச்சிட்டு சொல்றேன்" என்று சொல்லிக்கொண்டே இதோ எட்டு பேரும் சந்நிதியையும் அடைந்து இருந்தார்கள்.

 

இறைவனை தரிசிக்க செல்லும் சமயம் தான், இதோ வஞ்சியின் முன் வந்து நின்றார் விருமாண்டி. வஞ்சியின் சித்தியால் அவளுக்கு என்று பார்க்க பட்டு இருக்கும் மாப்பிள்ளை.

 

 



கருத்துகள்