குமரகம் - 1
குமரகம்
அத்தியாயம் 1
"ஒத்த ரூவாயும் தாரேன்
ஒரு ஒனப்பத் தட்டும் தாரேன்"
என்று அந்த ஊரில் இருக்கும் உள்ளூர் பேருந்தில் பாடல் ஒலித்து கொண்டு இருந்தது.
அந்த பேருந்தில் பயணம் செய்து கொண்டு வந்து இருந்தாள் பரினீத்தி.
அவளின் கண்களில் ரௌத்திரம் தாண்டவமாட, கை முஷ்டிகளை இறுக பற்றி இருந்தாள்.
"ஆகாயபுரி" என்று அந்த பேருந்தின் நடத்துனர் கத்தவும், அவளும் அங்கிருந்து எழுந்து கீழே இறங்கும் சமயம், "நான் தான் சொன்னேனே மா நீ அங்க போறது ஒண்ணுத்துக்கும் உதவாதுன்னு" என்று அந்த நடத்துனர் அவளை பார்த்து சொல்லவும், அவள் பதில் பேசாமல் கீழே இறங்கினாள். அங்கே அவளுக்காக நின்று இருந்தான் ஒருவன்.
அவன் யார் என்று அவளுக்கும் தெரியும்.
அவள் இறங்கி அங்கிருந்து நகரப்போக, அந்த நபரோ, "ஐயா உங்கள வீட்டுக்கு வர சொன்னாரு" என்றவுடன் அவனை தீப்பார்வை பார்த்து முறைத்தாள்.
"ஏதோ பேசணுமாம்" என்று அவன் சொல்லவும், "வரேன்" என்றவள் நடக்க துவங்க, "கார்ல போயிறலாமே" என்று அவன் சொல்லவும், "வேண்டாம். நான் நடந்தே வரேன். என்ன பத்து பதினஞ்சு நிமிஷம் தானே, எனக்கு நடக்க தெம்பு இருக்கு" என்று சொல்லியிருந்தாள்.
அதற்கு மேல் அந்த நபரும் அங்கே நிற்க வில்லை. அவன் காரை எடுக்க, "உங்க ஐயாக்கு ரொம்ப விசுவாசமோ வடிவேலு" என்று அவள் கேட்க, அவனோ திரும்பி, "ஐயாவால தான் மா என் மூணு பொண்ணுங்களுக்கு கல்யாணம் முடிச்சி கொடுத்தேன்" என்றவர் நன்றியுடன் சொல்ல, அவளின் இதழ்களில் ஒரு கேலிப்புன்னகை.
அந்த புன்னகையில் ஆயிரம் அர்த்தங்கள் மறைந்து இருந்தது.
"சரி தான்... கிளம்புங்க நான் வரேன்" என்று சொன்னவள் நடக்க துவங்கினாள்.
அவள் நடக்கும் சமயம், அவளின் கண்களில் பட்டது அந்த பலகை, அந்த ஊரின் நுழைவாயில் இது தான் என்று உணர்த்தும் பலகை. ஆகாயபுரி!
பறந்து விரிந்து இருக்கும் ஆகாயத்தின் பறவைகளின் வாழ்விடம் ஆகாயம் தான்! ஆனால் அப்படி இல்லாமல், பெண்களை அடிமைகளாய் இன்று அளவும் நடத்தும் அடிமைபுரி இது என்று அவள் இங்கு வந்த இந்த இரண்டு வாரங்களிலேளேயே அறிந்து கொண்டாள்.
பெண்களை அடிமைகளாய், போகப்பொருளாய், இன்று அளவும் நடத்தும் ஒரு கிராமம்.
அவள் நினைத்து கூட பார்க்கவில்லை. ஏனென்றால் இந்த சிறுகிராமத்தில் தான் கடந்த ஐந்து வருடங்களாக நல்ல மதிப்பெண் பேரும் அரசு பள்ளி மாணவர்கள் படித்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இங்கு வருவதற்கு முன்னே, அவளிடம் ஒரு கேள்வி இருந்தது என்னவோ உண்மை தான். பத்தாம் வகுப்பில் பெண் பிள்ளைகள் தான் எப்போதும் முதல் இடம் பிடிப்பார்கள், ஆனால் பனிரெண்டாம் வகுப்பில் எப்போதும் ஆண் பிள்ளைகள் தான் இந்த பள்ளியில் முதல் இடம் பிடித்ததாக செய்தி வரும்.
ஆனால் இதை எல்லாம் அவள் பெரிதாக எடுத்து கொள்ள வில்லை.
அவளின் வாழ்வே அவளுக்கு நிறைய கற்று கொடுத்து இருந்தது. அரசு பள்ளி ஆசிரியை அவள்.
அவளுக்கு இன்றும் இரண்டு வாரங்களாக நடந்த அனைத்து நிகழ்வுகளும் நினைவு இருந்தது.
"ஆகாயபுரி! இது தான் டீச்சர்" என்று நடத்துனர் அவளுக்கு குரல் கொடுக்கவும், அவளும் அவளின் பேட்டி படுக்கைகளுடன் இறங்கினாள்.
"ரொம்ப நன்றிங்க" என்று சொல்லிவிட்டு இறங்கினவளை அங்கே வந்த வடிவேலு தான் கூட்டி செல்ல வந்து இருந்தார்.
ஐம்பது வயது இருக்கும். அவருக்கு முன்னமே அவளின் புகைப்படம் கொடுக்கப்பட்டு இருந்தது.
"வாங்க மா" என்று வாய் நிறைய புன்னகையுடன் கூறவும், அவளோ அவரை புருவம் சுருக்கி பார்க்க, "நீங்க தான மா இந்த ஊருக்கு புதுசா வந்து இருக்க டீச்சர்? உங்க பேரு கூட ப்ரீத்தி" என்று அவர் சொல்லவும், "ப்ரீத்தி இல்லைங்க பரினீத்தி" என்று அவள் திருத்தவும், "ஹான், அதான் மா.. என் வாயில நுழையல... மன்னிச்சிக்கோங்க" என்று சொன்னவர் அவளின் கையில் இருந்த பையை வாங்க போக, "ஐயோ அதெல்லாம் வேணாம்... நானே தூக்கிக்குவேன்" என்று அவள் கையை நகர்த்த, ஆனாலும் அவர் அவளின் கையில் இருந்த பையை வாங்கி காரின் பின்புறம் வைத்தார்.
"எங்க ஐயா உங்கள கொண்டு போய் உங்களுக்குனு கொடுத்து இருக்க அரசு பள்ளி குடியிருப்புல விட்டுட்டு வர சொன்னார்" என்றதும், "யார் உங்க ஐயா?" என்று அடுத்த கேள்வி ப்ரனீத்தியிடம் இருந்து வந்தது.
"ஐயோ அதை சொல்ல மறந்துட்டேன் பாருங்க, எங்க ஐயா தான் மா இங்க எம்எல்ஏ பக்ஷிராஜா" என்று அவர் சிரித்து கொண்டே சொன்னார்.
"ஓஹ்" என்றவள் இன்னமும் வண்டியில் ஏறலாமா வேண்டாவா என்று தான் யோசித்து கொண்டு இருந்தாள்.
அவளுக்கு முன்னமே சொல்லி இருந்தார்கள் தான், இந்த ஊருக்கு சென்றால் அந்த ஊரின் எம்எல்ஏ அனைவரையும் நன்கு கவனித்து கொள்வார் என்று, ஆனாலும் அவளுள் ஒரு தயக்கம்.
"அட வந்து ஏறுங்க மா" என்று மீண்டும் வடிவேலு அழைக்க, அவளும் வண்டியில் ஏறினாள்.
காரை செலுத்திக்கொண்டே வடிவேலு அவளை பற்றி கேட்க துவங்கினார்.
"நீங்க எந்த ஊரு?" என்று அவர் கேட்கவும், "நான் சென்னை தான்" என்று சொல்லவும், "பட்டணத்துல இருந்த புள்ளையா நீங்க? தனியா வந்து இருக்கீங்க? கல்யாணம் ஆகிருச்சா மா?" என்று கேட்டு இருந்தார்.
அவளோ சிறு புன்னகையுடன், இல்லை என்று தலையசைக்க, "உங்களுக்கு என்ன மா இப்போ ஒரு இருபத்தி அஞ்சு இருக்குமா?" என்று அவர் கேட்கவும், அவளோ, "எனக்கு முப்பது வயசு ஆக போகுது" என்று சொல்லி இருந்தாள்.
அவரோ சட்டென, "என்ன மா சொல்றிங்க முப்பது வயசா? இன்னும் உங்க அம்மா அப்பா உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலயா? இல்ல ஏதாவது தோஷம் இருக்கா?" என்றவரை பார்த்து, "அம்மா அப்பா இருந்து இருந்தா நான் ஏன் இன்னும் கல்யாணம் ஆகமா இருக்கேன்? நான் ஒரு அனாதை... என் அப்பா அம்மா இரண்டு பேரும் எனக்கு பத்து வயசு இருக்கும் போதே இறந்துட்டாங்க.. அதுக்கு அப்புறம் ஆஸ்ரமத்துல தான் படிச்சேன். நல்லா படிப்பேன். எப்படியோ என் நல்ல நேரம், எனக்கு அரசு உத்தியோகமும் கிடைச்சிருச்சு.. முதல்ல வேற ஊர்ல வேலை செஞ்சிகிட்டு இருந்தேன். இப்போ தான் ஆகாயபுரிக்கு ட்ரான்ஸ்பெர் போட்டு இருக்காங்க" என்று அவளின் கதைசுருக்கத்தை சொல்லி இருந்தாள்.
"ஐயோ மன்னிச்சிக்கோங்க மா.. நான் உங்கள கஷ்டப்படுத்துற மாதிரி கேள்வி கேட்டுட்டேன். நீங்க வேணா பாருங்க உங்களுக்கு நல்ல பையன கிடைப்பாரு" என்று அவர் சொல்லவும், அவளோ, "பார்ப்போம்... நீங்க இந்த ஊர் பத்தி சொல்றிங்களா?" என்று அவள் இம்முறை அவரை கேட்டாள்.
அவரோ, "எங்க ஊர பத்தி சொல்லனும்னா சொல்லிகிட்டே போகலாம். ஆனாலும் சொல்றேன். ஆகாயபுரியவே அடக்கி ஆளுறது எங்க ஐயா பக்ஷிராஜா தான். இங்க அவரு வச்சது தான் சட்டம். இந்த ஊர் சின்ன க்ராமமா இருந்தாலும், அதை எப்படியோ முன்னேத்திகிட்டு வராரு... அவரோட வாழ்க்கையையே இந்த ஊருக்காக அர்பணிச்சவரு அவரு.." என்று புகழாரம் சூட்டவும், அவளுக்கும் அந்த நபரை பார்க்க ஒரு ஆர்வம் பிறந்தது என்னவோ உண்மை தான்.
"இது தான் மா எங்க ஐயா வீடு" என்று வெளியே இருந்து காட்ட, அவளும் கார் செல்லும் வேகத்தில் அந்த வீட்டை ஒரு முறை பார்த்தாள்.
வீடு அல்ல அது மாளிகை போல் காட்சி அளித்தது.
"உங்க ஐயா தனியாவா இருக்காரு" என்று அவள் கேட்க, "ஆமா மா.. இப்போ தனியா தான் இருக்காரு.. அவரு சம்சாரம் இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னவே செத்து போய்ட்டாங்க" என்றவர் சொல்ல, "ஓஹ்" என்பதுடன் நிறுத்தி கொண்டாள்.
அவள் அந்த ஊரின் எழில் கொஞ்சும் அழகிலே லயித்து இருக்க, "ஊரு ரொம்ப நல்லா இருக்கு" என்று சொல்லவும், "எல்லாத்துக்கும் எங்க ஐயா தான் மா காரணம்" என்று மீண்டும் அவர் ஐயா புராணத்தை பாட, அவர்கள் சேர வேண்டிய இடமும் வந்து விட்டது.
"ரொம்ப நன்றிங்க" என்று அவள் இறங்கவும், "இதுல என்ன மா இருக்கு! வீட்ல வீட்டுக்கு தேவையான எல்லாமே இருக்கும். உங்களுக்கு ஒரு மாசத்துக்கு தேவையான மளிகை சாமானும் வச்சிருக்கேன். இந்தாங்க மா வீட்டு சாவி" என்று கொடுத்தவரிடம், "நாளைக்கு பள்ளி கூடத்துக்கு போகணும். எங்க இருக்கு?" என்று கேட்க, "நடந்தே போய்டலாம் மா.. இங்க இருந்து நேரா நடந்து இடது பக்கம் திரும்புங்க. அஞ்சு நிமிஷத்துல வந்துரும்" என்று சொல்லிவிட்டு அவர் சென்று விட்டார்.
அவளும் வீட்டினுள் நுழைந்து பார்க்க, வீடு அழகாக இருந்தது.
சுத்தம் செய்து இருக்கிறார்கள் என்று தெரிந்தது.
ஒரு படுக்கை அறை கொண்ட வீடு தான். அத்தனை அழகாக இருந்தது.
அவளும் பெருமூச்சு ஒன்றை விட்டுக்கொண்டு, அவளின் பொருட்களை அடுக்கி வைத்தவள், பின்பு எளிமையாக சமைத்தாள்.
சாப்பிடும் போது அவளின் நினைவுகள் அவளின் வாழ்வின் பயணத்தை நோக்கி போக, அவளையும் மீறி அவளின் கண்களில் கண்ணீர்.
அதற்கு மேல் சாப்பிட முடியவில்லை. அப்படியே மூடி வைத்தவள், பின்பு நாளை பள்ளியில் சேர தேவையான அனைத்து ஆவணங்களையும் எடுத்து வைத்தாள்.
கணித ஆசிரியை அவள்.
பாட புத்தங்கள் சிலவற்றையும் கொண்டு தான் வந்து இருந்தாள். அதையும் அவள் எடுத்து வைத்துவிட்டு உறங்க செல்ல, உறக்கம் வர மறுத்தது.
உருண்டு பிரண்டு படுத்தவளால் உறங்க முடியவில்லை.
பின்பு எப்போதும் போல் தூக்க மாத்திரை எடுத்து உண்டு விட்டு தான் உறங்கினாள்.
அடுத்த நாள் விடிய, காலை ஐந்தரை மணி அளவில் எழுந்தவள் அவளின் பள்ளிக்கு செல்ல ஆயுத்தமாகி கொண்டு இருந்தாள்.
மதிய உணவை எடுத்து கொண்டு, காலை உணவை உண்டு விட்டு, வெளியே வீட்டையும் பூட்டிக்கொண்டு வந்தவள், நேற்று வடிவேல் சொன்ன வழியை வைத்து நடக்க துவங்கினாள்.
மாணவ மாணவியர்கள் அவளை கடந்து செல்ல, அவளின் முகத்தில் ஒரு புன்னகை.
கல்வி தான் ஒருவரின் வாழ்வாதாரத்தை மற்றும் என்பதில் மிகுந்த நம்பிக்கை உடையவள் அவள்.
பள்ளியினுள் நுழைந்தவள் தலைமை ஆசியருக்காக காத்திருக்கவும், "இங்க பிரின்சிபல் இன்னும் போடல, நீங்க துணை தலைமை ஆசிரியர் கிட்ட உங்க ஜாய்னிங் லெட்டர் கொடுத்துட்டு ஜாயின் பண்ணிக்கோங்க" என்று அங்கே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர் சொல்லவும், அவளும் அந்த பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் ஆறுமுகம் வர அவரிடம் அவளின் கடிதத்தை கொடுத்து சேர்ந்து கொண்டாள்.
"பெயருக்கு டைம் ஆச்சு... அத முடிச்சிட்டு வந்து உங்களுக்கு என்ன கிளாஸ்ன்னு எல்லாம் சொல்றேன்" என்று அவர் நகர்ந்து செல்ல, அவரின் பின்னேயே அவளும் சென்றாள்.
அங்கே சென்று பார்க்கவும் தான் அவளுக்கு அதிர்ச்சி காத்து இருந்தது.
அத்தியாயம் 2
அங்கே இருந்த மாணவ மாணவர்களில் பத்தாம் வகுப்பு வரை இருந்த பெண் பிள்ளைகளில் பாதி கூட பதினோராம் வகுப்பில் இல்லை. பனிரெண்டாம் வகுப்பில் சுத்தம் இரண்டு மூன்று பெண் பிள்ளைகள் தான் இருந்தார்கள். வகுப்பு வாரியாக அவர்கள் நிற்க அவளுக்கு இதை கண்டுபிடிப்பதில் சிரமம் இருக்க வில்லை.
காலை பிரார்த்தனை முடிந்து, பிள்ளைகள் அனைவரும் அவரவர் வகுப்பறைக்கு சென்று விட்டார்கள்.
அடுத்து வந்த ஆறுமுகம், பரினீத்தியை அவரது அறைக்கு அழைத்து சென்று அவளுக்கு அவளின் அட்டவணையை தரவும், அவளோ, "சார் ஏன் இந்த ஸ்கூல்ல டென்த்க்கு அப்புறம் கேர்ள்ஸ் ரொம்ப கம்மியா இருக்காங்க?" என்று வாய் விட்டே கேட்டு விட்டாள்.
அவரோ, "இங்க பாருங்க நீங்க இப்போ தானே வந்து இருக்கீங்க... போக போக உங்களுக்கே புரியும். அப்புறம் இங்க படிக்கிற ஆம்பள பசங்கள எல்லாம் திட்டாதிங்க" என்றவர் சொல்லவும், அவளின் கண்கள் விரிந்தன.
"என்ன சார் சொல்றிங்க? எல்லா ஸ்கூல்லயும் பொம்பள பிள்ளைங்களை ஹர்ஷா திட்டாதிங்கனு சொல்லுவாங்க, நீங்க என்ன ஆம்பள பசங்கள திட்டாதிங்கனு சொல்றிங்க" என்றவளின் குரலில் ஒரு அதிரிச்சி வெளிப்படையாக தெரிந்தது.
"இங்க அப்படி தான் மா.. இந்த ஊர்ல பசங்கள எல்லாம் திட்ட மாட்டாங்க.. உண்மைய சொல்லனும்னா அவங்கள வீட்ல ஒரு வேலை கூட வாங்க மாட்டாங்க.. எல்லா வேலையும் பொம்பள பிள்ளைங்க தான் மா செய்யணும். அது தான் இந்த ஊரோட நியதி. இன்னும் சொல்லனும்னா இன்னும் இந்த ஊர் இருபத்தி ஓராம் நுற்றாண்டுல இருக்க ஒரு நவீன குக் கிராமம்" என்று அவர் முடிக்கவும், பரினீத்தியின் நினைவுகளோ நேற்று வடிவேல் பேசிய பக்ஷிராஜாவை நோக்கி தான் பயணித்தது.
'எல்லாமே ஐயா பார்த்துக்குறார்ன்னு நேத்து புராணம் பாடினாரே! இன்னைக்கு இந்த சார் இப்படி சொல்லறாரு' என்று அவள் நினைத்து கொண்டு இருக்கும் போதே, "நீங்க உங்க கிளாஸ்க்கு போகலாம். ஒரு லவந்த டூவல்த் டீச்சர் ஒரு மாசம் வர மாட்டாங்க.. நீங்க இந்த ஒரு மாசம் அந்த கிளாஸ்சும் சேர்ந்து எடுத்துக்கோங்க" என்றவர் சொல்ல, அவளும் தலையசைத்து கொண்டு ஆசிரியர்களின் ஓய்வறையை நோக்கி நடந்தாள்.
அங்கே அவளது மேஜையில் அவளது பெயர் ஒட்டி இருந்தது.
அவளுக்கு தேவையான சில அடிப்படை பொருட்களும் வைக்க பட்டு இருந்தன.
அவள் முதலில் செல்ல வேண்டிய வகுப்பு பதினோராம் வகுப்பு தான்.
அங்கே இருந்த மற்றொரு ஆசிரியரிடம் அந்த வகுப்புரைக்கு எப்படி செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டு அங்கிருந்து வகுப்பறையை நோக்கி நடந்தாள்.
நடக்கும் போதும் அவளுள் பல கேள்விகள் எழாமல் இல்லை. நேற்று வடிவேல் பேசிக்கொண்டு வந்த பக்ஷி ராஜா, இன்று காலையில் அவள் பார்த்த மாணவர்களின் எண்ணிக்கை, ஆறுமுகம் சொன்னது என்று அனைத்தையும் அசை போட துவங்கினாள்.
அப்படியே வகுப்பறைக்கு வந்து விட்டாள்.
அவள் உள்ளே வர, அந்த வகுப்பில் வெறும் ஐந்து பெண் பிள்ளைகள் தான் இருந்தார்கள். முப்பது பேர் ஆண் பிள்ளைகள் தான்.
அதுவும் அவள் உள்ளே வந்ததும் அந்த ஐந்து பெண் பிள்ளைகள் தான் எழுந்து நின்றார்கள். ஆண் பிள்ளைகள் எழுந்து நிற்க வில்லை.
அவள் அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல், "குட் மார்னிங்" என்கவும், பெண் பிள்ளைகள் தான் அதற்கு கூட பதில் வணக்கம் கூறினார்கள்.
"உங்களுக்கு எல்லாம் குட் மோர்னிங் சொன்னா வாயில இருந்து முத்து உதிர்ந்திருமா?" என்று நேராக அந்த மாணவர்களை பார்த்து கேட்கவும், அதில் ஒரு மாணவன் தேனவாட்டாக எழுந்து, "உங்களுக்கு எதுக்கு நாங்க குட் மார்னிங் சொல்லணும்? ஆப்டர் ஆள் ஒரு பொம்பள நீங்க, உங்களுக்கு விஷ் பண்ணனும்னு எங்களுக்கு எந்த அவசியமும் இல்ல, ஏதோ டீச்சரா ஆகிட்டீங்க... அதனால தான் அமைதியா நீங்க நடத்துற பாடத்தை கவனிக்குறோம்" என்று அவன் கூறவும், ப்ரனீத்திக்கு கோவம் வந்து விட்டது.
கொஞ்சம் அடக்கி கொண்டாள். முதல் நாளே அவள் யாரையும் கடிய விரும்பவில்லை.
ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டு, "இங்க பாரு பா... ஆம்பளையா இருந்தா என்ன? பொம்பளையா இருந்தா என்ன? உனக்கு ஆசிரியர் அவளோ தானே! மாதா, பிதா, குரு, தெய்வம், குரு தெய்வத்துக்கும் மேலானவங்கனு நம்ப முன்னோர்கள் நம்புனாங்க... தெய்வம் வரைக்கும் நம்ப போக வேணாம்.. அட்லிஸ்ட் ஒரு மரியாதையை கொடுக்கலாமே தப்பு இல்லையே" என்று அவள் பொறுமையை இழுத்து பிடித்து கொண்டு பேசவும், அவனுக்கு பக்கத்தில் இருக்கும் மாணவனோ, "குரு ஆண் பால் தானே, அப்போ ஆண்களுக்கு தான் மரியாதை" என்று எகத்தாளமாக பேசினான்.
அவளோ கண்களை இறுக மூடி திறந்து, "பாலினம் இல்லாத ஒன்று ஆசிரியரா இருக்குறது. என் கிளாஸ்ல நீ பெயில் ஆனாலும் பரவால்ல, ஆனா மரியாதை கொடுக்கணும். கொடுக்கலானா இந்த வகுப்புல நீங்க இருக்கவே வேணாம். வெளிய போகலாம்" என்று அவள் சொல்ல, அந்த ஆண் பிள்ளைகள் யோசிக்கவே இல்லை. எழுந்து சென்று விட்டார்கள்.
பரினீத்திக்கு தான் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.
"என்ன கொடுமை இது? இப்படி இருக்காங்க பசங்க! இதுல எப்படி இவங்க எல்லாம் ஸ்டேட் ரேங்க் வாங்குறாங்க?" என்று கேட்கவும், பெண் பிள்ளைகளோ, "மேம் அவங்க எல்லாரும் டுஷன் போறாங்க... கிளாஸ் நீங்க எடுக்கலானாலும் அவங்களுக்கு வீட்டுக்கே போய் சொல்லி கொடுக்க நிறைய ஆசிரியர்கள் இருக்காங்க" என்று ஒரு மாணவி கூறினாள்.
அவளுக்குள் இருந்த சந்தேகத்தை தான் முதலில் கேட்டாள் பரினீத்தி.
"ஏன் பெண் பிள்ளைங்க கம்மியா இருக்காங்க?" என்று மனதில் பட்டதை கேட்கவும், அவர்களோ ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள்.
அவளிடம் சொல்ல தயங்குகிறார்கள் என்று அவளுக்கு புரிந்தது.
"நீங்க சொல்றது எதுவும் வெளிய போகாது" என்று அவள் வாக்குறுதி கொடுக்கவும் தான், ஒரு பெண் எழுந்து, "மேம் இங்க பொண்ணுங்களுக்கு எல்லாம் பதினாறு பதினேழு வயசுலயே கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க" என்று கூறினாள்.
"மைனர் மேரேஜா? எப்படி இதெல்லாம் இன்னும் நடக்குது! உங்க பக்ஷி ராஜா எம்எல்ஏ கிட்ட போய் சொல்ல வேண்டியது தானே" என்றவள் நேற்று வடிவேல் சொன்னதை வைத்து சொல்லவும், மீண்டும் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
"அட சொல்லுங்க" என்று அவள் கேட்கவும், "டீச்சர் இந்த கல்யாணம் எல்லாம் நடக்குறதே அவரு தலைமைல தான்" என்று சொல்லவும், அவளுக்கு தலையில் இடியே விழுந்த உணர்வு.
நேற்று வடிவேல் சொன்னது எல்லாம் அவளின் மனக்கண்ணில் ஓடியது.
அவரின் மூன்று பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தது, அவளுக்கு திருமணம் ஆகவில்லை என்றதும் அவரின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சி என்று அனைத்தையும் அவளால் இப்போது சரியாக கோர்க்க முடிந்தது.
"நீங்க போலீஸ் கிட்ட போய் கம்பளைண்ட் பண்ண வேண்டியது தானே" என்று அவள் மாறி கேட்க, "நாங்க எங்க டீச்சர் போறது, அப்படியே போனாலும் கேஸ் எடுக்க மாட்டாங்க" என்று கூறினார்கள்.
"தோ இவளோட அக்காக்கு அடுத்த வாரம் கல்யாணம். ஏதோ தோஷம்னு தள்ளி போயிருச்சு. வெறும் பதினெட்டு வயசு தான் ஆகுது. அவங்க தான் டென்த்ல ஸ்கூல் பர்ஸ்ட். இவளும் நல்லா படிப்பா... ஸ்டேட் பர்ஸ்ட்... எப்போ இவளையும் ஸ்கூல்ல இருந்து நிறுத்துவங்களோ" என்று இன்னொரு மாணவி சொல்ல, பரினீத்திக்கு என்ன டா இது என்று தான் இருந்தது.
இன்றளவும் இப்படி இருக்கு ஒரு ஊரா? இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா? என்று அவளின் மனதில் கேள்வி எழ, ஏன் இருக்கக்கூடாது என்று கேட்டது மற்றொரு மனம்.
இன்றையகாலத்தில் பள்ளியில் படிக்கும் எத்தனையோ நகர புறத்தில் இருக்கும் மாணவர்களே ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை. இவ்வளவு ஏன், ஆசியர்களை பற்றி அவர்கள் வன்மையாக பகிரும் பதிவுகளுக்கு என்று முகநூல் உட்பட பல சமுக வலைத்தளங்களில் குழுவே வைத்து இருக்கிறார்கள்.
அப்படி இருக்கும் போது, கிராமப்புறத்தில் இருப்பவர்களை என்ன சொல்லி விட முடியும்?
இன்றளவும் ஆண் பிள்ளைகளுக்கு ஒரு நியாயம், பெண் பிள்ளைகளுக்கு ஒரு நியாயம் என்று இருக்கும் குடும்பங்கள் ஏராளம். காலம் மாறிக்கொண்டு வருகிறதே தவிர, முழுமையாக மாறிவிடவில்லை.
"உங்க அம்மா அப்பா ஒருத்தருக்கு கூடவா அறிவு இல்ல?" என்றவள் பற்களை கடித்து கொண்டு கேட்க, "டீச்சர் இந்த ஊருல இருக்க மொத்த நிலமும் பக்ஷிராஜா அய்யாக்கு தான் சொந்தம், அவரு வச்சது தான் சட்டம். அவரு என்ன சொல்றாரோ அதை தான் எல்லாரும் கேட்பாங்க" என்று சொன்ன வள்ளியை தான் பரினீத்தி பார்த்தாள்.
"நீ தானே ஸ்டேட் பர்ஸ்ட் எடுத்த?" என்று கேட்கவும் அவளும் ஆமாம் என்று தலையசைக்க, "என்ன படிக்கணும்னு ஆசை?" என்று கேட்க, "எனக்கு சின்ன வயசுல இருந்தே ஏரோபிளேன் ரொம்ப பிடிக்கும் டீச்சர்... பைலட் இல்ல ஏரோனாட்டிகள் படிக்கணும்னு ஆசை" என்று சொல்லும் போதே வள்ளியின் கண்களில் அத்தனை மகிழ்ச்சி மற்றும் ஆசை.
பரினீத்தியின் மனதோ, 'சிறகடித்து பறக்க நினைக்கிற இந்த புள்ளைங்களோட சிறகை உடைக்க எப்படி தான் மனசு வருதோ?' என்று நினைத்து கொண்டே, "சரி இதோட இப்படி ஏதாவது பதினாறு இல்ல பதினேழு வயசு பிள்ளைங்களுக்கு நடந்தா சொல்லுங்க... அதே மாதிரி கட்டாய கல்யாணம் ஆனாலும் சொல்லுங்க.. அதெல்லாம் எவளோ பெரிய பாவம் தெரியுமா? நம்ப போலீஸ் கிட்ட கம்பளைண்ட் பண்ணலாம்... ஏசிபி வரைக்கும் போகலாம்" என்று சொல்லவும் மணியே அடித்து விட்டது.
அவள் சென்றவுடன், வள்ளியை பார்த்து, "அவங்களுக்கு இன்னும் தெரியல டி நம்ப ஊர் நிலைமை... ஏசிபி கிட்ட போனாலும் ஒண்ணுமே ஆக போறது இல்ல" என்று சொல்ல, வள்ளியோ, "நாளைக்கு அவரு தான் சீப் கெஸ்ட் நம்ப ஸ்கூல் அனுவல் டேக்கு... அவங்களே பார்த்து தெரிஞ்சிக்குவாங்க" என்று வள்ளி சொல்ல, சரியாக ஆறுமுகம் பரினீத்தியை தேடி வந்து இருந்தார்.
"நாளைக்கு ஸ்கூல் அனுவல் டே மா சொல்ல மறந்துட்டேன்" என்றவர் அனைத்து நிகழ்ச்சிகளையும் பற்றி சொல்லி முடிக்க, "ஓகே சார்.. யாரு சீப் கெஸ்ட்" என்று கேட்கவும், "ஏசிபி காகேஷ்" என்று அவர் சொல்லவும், அவளின் உதடுகளும் காகேஷ் என்று முணுமுணுத்தது.
'நாளைக்கு அவரு வரட்டும் இங்க நடக்குற அநியாயம் பத்தி கம்பளைண்ட் கொடுக்கணும்' என்று அவர் நினைத்து கொண்டு இருக்கவும், அங்கே காகேஷ் ஒருவனை லத்தியால் வெளுத்து வாங்கி கொண்டு இருந்தான்.
அத்தியாயம் 3
"ஏன் டா சார் இவன இந்த அடி அடிக்குறாரு?" என்று அருகில் இருந்த ஒரு போலீஸ்காரன் கேட்கவும், அவனின் அருகில் இருந்த காகேஷின் ட்ரைவர் நவநீதனோ, "சார் கிட்ட கேசுன்னு தூக்கிட்டு வந்தான் அதான் அடிக்கிறார்" என்றதும் அந்த மற்றோரு காவலாளியின் கண்கள் விரிந்தன.
"என்ன சொல்ற?" என்று கேட்க, "சார் இங்க வந்து மூணு மாசம் தான் ஆகுது. அவரு கிட்ட ஒரு கேஸ் இல்ல தெரியுமா? ஏனா அவருக்கு வேலை செய்ய பிடிக்காது. ஏதோ அவரு தாத்தா ஆசைபட்டாராம் அதனால போலீஸ் ஆகிட்டாராம். அதனால இது அவருக்கு பார்ட் டைம் ஜாப் தான்" என்ற நவநீதனை பார்த்து, "அப்போ முழுநேர வேலை என்ன?" என்று கேட்கவும், "பேஸ்புக் பாக்குறது, ரீல்ஸ் பண்றது, பொண்ணுங்கள சைட் அடிக்குறது" என்று நவநீதன் ஒரு பெரிய பட்டியலை தர, அதில் ஒன்றுமே உருப்படி இல்லை.
"ஏன் டா? இப்போ உன் கிட்ட ஒருத்தன் வந்து சண்டை போடுறது தான் முக்கியமா? அப்படி போட்டா நீ ஆம்பள தான திருப்பி சண்டை போடு அதை விட்டுட்டு வந்துட்டான் மனு கொடுக்க..." என்று அவனின் லத்தியை வைத்தவன் அவனின் கைப்பேசியை எடுக்க, அங்கே சரியாக ஒரு அழைப்பு வந்தது.
"டார்லிங்" என்று அவனின் இதழ்கள் முணுமுணுக்க, எடுத்து பேச துவங்கியனின் பற்களில் அத்தனை புன்னகை.
"ஐயோ நீ சொல்லி நான் பண்ணமா இருந்து இருக்கேனா டார்லிங்... கண்டிப்பா செஞ்சிடுறேன்" என்று கைப்பேசியை அவன் வைக்க, நவநீதனுக்கு தான் அத்தனை ஆச்சர்யம். இவனுக்கு சிரிக்க கூட தெரியுமா என்ன?
"காகேஷ்", காகேஷ் என்றால் காகம் அல்ல, கருடன் என்று பொருள். வானத்தையே கட்டி ஆளும், அந்த பறவைகளின் அரசனான கழுகின் பெயர் அது!
அதனாலேயோ என்னவோ அவனின் கண்கள் கூர்மையாக இருக்கும். உண்மையாகவே காவல்துறைக்கு நேர்ந்து விட்டது போன்ற உடல் வாகு தான் அவனுக்கு!
ஆறடிக்கும் மேல் உயரம் இருப்பான். முப்பத்தி மூன்று வயதில், மாநிறத்தில் கூறிய விழிகளில் அவனின் வன்மையான இதழ்களில் வரும் கீற்று புன்னகைக்கு மயங்காத கன்னியர் இல்லை எனலாம்!
ஆணழகன் அவன்! என்றும் முகத்தில் ஒரு இறுக்கம் இருக்கும், அவனின் மெல்லிய பக்கங்களை அறிந்தது ஒரு சிலர் தான்! அதுவும் அவனது டார்லிங் தான் அவனது இதயத்தின் அரசி.
அவனுக்கு வாயில் சனி இல்லை. சனி தான் அவனது வாய்! அவனின் முன் நின்று பேசும் தைரியம் யாருக்கும் கிடையாது. ஆனால் அவனையும் திணறடிக்கும் ஒருத்தி இருக்கிறாள் தான்.
"விட்டி டன்க்" என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள், நகைச்சுவையாய் நையாண்டியாய் பேசுபவர்களுக்கு கொடுக்கப்படும் சான்று அது, ஆனால் இவனின் நாவில் நகைச்சுவையுடன் நஞ்சும் கலந்து இருக்கும்.
அவனாக சண்டைக்கு போக மாட்டான். ஆனால் சண்டை என்று வந்தால், எதிரில் உள்ளவர்களை வீழ்த்தாமல் ஓயமாட்டான். இவ்வளவு தான் காகேஷ்!
அவனின் கண்களாலேயே அனைவரையும் மிரட்டி வைத்து விடுவான்.
"நவநீத்" என்று குரல் கொடுக்க, "சார்" என்று அவனின் முன் வந்து நின்றான்.
"நாளைக்கு அந்த ஸ்கூல் ப்ரோக்ராம் எத்தனை மணிக்கு?" என்று கேட்கவும், "காலைல பத்து மணிக்கு சார்" என்று சொல்ல, "நான் இன்போர்மேல்லா வந்தா போதும்ல" என்று அவன் கேட்கவும், 'எப்படி வந்தா என்ன? யூனிபார்ம் போட்டாலும் வேலை பார்க்க போறது இல்ல, போடலானாலும் வேலை பார்க்க போறது இல்ல, இதுக்கு எதுல வந்தா என்ன' என்று அவனின் மனம் பேச, "என்ன டா திட்டுறியா?" என்று காகேஷின் விழிகள் அவனை கூர்மையாக பார்த்தது.
"ஐயோ இல்ல சார்.. நீங்க கேஷுவல்லேயே போகலாம்" என்று அவன் பதில் பேசவும், அவனின் விழிகளாலேயே நவநீதை மிரட்டி தான் விட்டான்.
நவநீதிக்கு அந்த அறையில் இருந்து சென்ற பிறகு தான் மூச்சே வந்தது.
காகேஷின் கைப்பேசி மீண்டும் அலற அதை எடுத்து திரையை பார்த்தவன் ஆழ்ந்த மூச்சை எடுத்து காதில் வைத்தான்.
"சரி... சரி" என்று மட்டும் தான் பதில் வந்தது.
அதற்கு மேல் அவன் எதுவும் பேசவில்லை.
அடுத்த நாள் காலையிலேயே அரசு பள்ளி செய்ய ஆயுத்தமானவன், நவநீதுடன் பள்ளிக்கு சென்று விட்டான்.
காகேஷ் அவனின் ஜீப்பில் இருந்து கீழே இறங்க, அவனை வரவேற்றார் ஆறுமுகம்.
"வெல்கம் சார்" என்று அவர் இன்முகத்துடன் வரவேற்க, அவனும் சிறுபுன்னகையுடன் அவருக்கு பதில் அளித்தான்.
அவனுக்கு கழுகு கண் ஆயிர்றே! அனைவரையும் ஆதி முதல் அந்தம் வரை அளந்து விட்டான். அப்படியே அவனின் கண்கள் நிலைத்தது என்னவோ பரினீத்தியின் மீது தான்.
அழகாக சேலை உடுத்தி, காலையில் புலரும் கதிரவனின் மஞ்சள் நிறத்தில் அங்கே இருந்த ஆசிரியர்கள் அனைவரிலும் கொஞ்சம் வயது கம்மியாகவும் இருந்தாள்.
அவனுக்கு ஒன்றும் பெண்கள் புதியவர்கள் அல்ல! அவன் காணா பெண்களா? ஆனால் இன்று வரை அவனை ஈர்த்த பெண்கள் எவரும் இல்லை!
பரினீத்தியை கூட அவன் வெறும் ஒரு பார்வை தான் பார்த்தான்.
பின்பு கடந்து சென்று அமர்ந்து கொண்டான்.
நிகழிகள் துவங்கின, அவன் பரசுக்களையும் கொடுத்து விட்டான்.
அவனை பேச வேறு அழைத்தார்கள்.
அவனோ, "எனக்கு இதெல்லாம் வராதுங்க" என்று கூறியும், "சார் ஒரு நாலு வார்த்தை சார்" என்று ஆறுமுகம் சொல்ல, அவனும் மேடை ஏறினான்.
ஏறியவன், "அனைவருக்கும் வணக்கம், எனக்கு இப்படி எல்லாம் மேடை ஏறி பேச தெரியாது. ஆனாலும் சொல்றேன், கல்வி ரொம்ப முக்கியம். நிறைய பேரு கல்வினா மார்க் எடுக்கறதுனு நினைச்சுகிட்டு இருக்காங்க.. அப்படி இல்ல, என்ன பொறுத்த வரைக்கும் கற்றல் தான் கல்வி. தினமும் ஏதாவது கத்துக்கோங்க, அது உங்க பாடம் சம்மதப்பட்டதா இருக்கலாம், உங்களுக்கு படிக்க பிடிக்கலையா, அப்போ கைத்தொழில் ஏதாவது கத்துக்கோங்க, ஆனா கற்றல் தான் கல்வி அதை மட்டும் நிறுத்தாதீங்க.. நீங்க எந்த உயரத்தை அடையணும்னு நீங்க தான் முடிவு எடுக்கணும். ஆகாயபுரியில் உள்ள மாணவர்கள் அனைவரும் இந்த ஆகாயம் விரிந்து இருப்பது போல, உலகம் முழுக்க பறந்து, விரிந்து, நல்ல உத்தியோகத்திலும் பதவியிலும் சிறகடித்து பறக்கணும் இது தான் நீங்க உங்க ஊருக்கும், நாட்டுக்கும், பள்ளிக்கும் செய்யுற பெருமை. ஆள் தி பெஸ்ட்" என்று முடித்து கொண்டான்.
அவன் பேசியது என்னவோ முப்பது வினாடிகள் தான், ஆனால் அந்த கருத்துக்கள் ஆழமானவை. உணர்ந்து பார்த்தால் மட்டுமே அதன் அர்த்தம் புரியும்.
'நல்லா பேசுறாரு, இவரு கிட்ட கம்பளைண்ட் பண்ணா ஏதாவது ஆக்ஷன் எடுப்பார்' என்று நினைத்து கொண்டே பரினீத்தி அவனை நெருங்க அதற்குள் அவனை சுற்றி பிள்ளைகள் வந்து விட்டார்கள்.
அவனிடம் நிறைய கேள்விகள் கேட்டார்கள்.
அதிலும் ஒரு சிறுவன், "எனக்கும் உங்கள மாதிரி போலீஸ் ஆகணும் சார்" என்று சொல்ல, அவனோ அவனின் மீசையை முறுக்கி விட்டு, "கண்டிப்பா ஆகலாம்" என்று சொல்ல, அவன் அருகில் இருந்த நவநீதனோ, 'நீயாச்சு வேலை செய்ய போலீஸ் ஆகு டா' என்று சொல்லி நினைத்து கொண்டான்.
பிள்ளைகள் அனைவரும் பேசி முடிய, அவன் கிளம்பும் சமயம், பரினீத்தி அவனை பின்தொடர்ந்து வர, காகேஷ் அவளை திரும்பி பார்த்தான்.
அவளின் நடவடிக்கையை வைத்தே அவளுக்கு ஏதோ அவள் பேச வேண்டும் என்பது புரிய, அவள் அவனை நெருங்குவதற்குள் வேறொரு ஆசிரியர் வந்து அவளிடம் ஒரு வேலையை கொடுத்து விட்டார்.
அவள் அங்கிருந்து செல்வதற்கு முன், அவளது கையை பற்றி இருந்தான் காகேஷ்.
அவள் திரும்பி பார்க்கவும், அவளை தான் நெருங்கி நின்று கொண்டு இருந்தான்.
அவளின் கையில் அவனது கைப்பேசி எண் இருந்த ஒரு விசிட்டிங் கார்டை கொடுத்தவன், "உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா கால் பண்ணுங்க" என்று கண் சிமிட்டி விட்டு செல்ல, ப்ரனீத்திக்கு அவனின் இந்த நடவடிக்கை சிறு அச்சத்தை வேறு கொடுத்தது.
இதை அனைத்தையும் தூரத்தில் இருந்து பார்த்த ஆறுமுகமோ, அவன் சென்ற பின்பு நெருங்கி வந்து, "என்ன மா ஏசிபிய வந்த நாளே உன் கைக்குள்ள போட்டுக்கிட்டியா?" என்று கேட்க அவளுக்கு கடுப்பாக இருந்தது.
"அதெல்லாம் ஒன்னும் இல்ல சார். முதல்ல இப்படி எல்லாம் பேசாதீங்க அப்புறம் கம்பளைண்ட் பண்ணுவேன்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டாள்.
அவளுக்கு காகேஷுக்கு அழைக்க சிருதயக்கம் இருந்தது அதுவும் அவனின் அதிரடியை பார்த்த பிறகு இன்னும் அவளுக்கு அச்சம் தான் எழுந்தது. அவள் இருக்கும் ஊரும் அவளுக்கு ஒரு வித நடுக்கத்தை கொடுத்தது உண்மை தான்.
இந்த ஊருக்கு மாற்றம் நிச்சயம் வேண்டும் என்று எண்ணினாள்.
அதை பள்ளியில் இருந்து தான் துவங்க வேண்டும் என்றும் எண்ணி கொண்டாள்.
முதலில் ஒரு நல்ல தலைமை ஆசிரியர் வேண்டும்.
அது தான் துவக்கமாகவும் இருக்க முடியும்.
அதற்கு ஒரு மனு எழுதினால் என்னவென்று அவளுக்கு தோன்றியது.
ஆம், எழுதவும் துவங்கினாள்.
கடிதத்தில் தலைமை ஆசிரியரின் முக்கியத்துவத்தையும் மற்றும் இந்த ஊரில் பெண் பிள்ளைகளை பதினைந்து பதினாறு வயதிற்கு மேல் படிக்க விடமால் இருப்பதையும் கூட எழுதி தான் இருந்தாள்.
எழுதி முடித்தவள், 'சரி இன்னும் இரண்டு மூணு நாள் பார்த்துட்டு அடுத்து இதை போஸ்ட் பண்ணிர வேண்டியது தான்' என்று நினைத்து மீண்டும் தூங்க முயற்சிக்க, தூக்கம் வந்தால் தானே!
மீண்டும் மீண்டும் அவளை மிரட்டும் அதே கனவு!
எழுந்து மாத்திரை போட்டு கொண்டு படுத்து விட்டாள்.
அடுத்த மூன்று நாட்கள் எப்படி சென்றது என்று தெரியவில்லை. ஆனால் வள்ளி பள்ளிக்கு வர வில்லை.
அடுத்த வாரமும் துவங்கி இருக்க, பள்ளியில் இருந்த ஒரு மாணவியிடம், "வள்ளி எங்க? ஏன் இன்னும் ஸ்கூல்க்கு வரல?" என்று கேட்கவும், மாணவர்களிடம் ஒரு சலசலப்பு.
மாணவிகள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
"என்ன அவ அக்காக்கு தானே கல்யாணம், இப்போ என்ன ஆச்சு இவளுக்கு?" என்று கேட்க, மாணவன் ஒரு தெனாவட்டாக எழுந்து, "டீச்சர் கல்யாணம் ஆனது வள்ளியோட அக்காக்கு இல்ல, வள்ளிக்கு தான். கல்யாணம் ஆகி அஞ்சு நாள் ஆகுது" என்று சொல்ல, அவளுக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது.
'எனக்கு பைலட் இல்ல ஏரோனாட்டிகள் படிக்கணும்' என்று ஆசையுடன் கூறிய அதே பெண்ணின் கழுத்தில் தாலி என்கிற தூக்குக்கயிறை மாட்டி அவளின் கனவுகளை புதைத்து விட்டு இருந்தது இந்த ஆகாயபுரி!
பரினீத்தியின் கண்களில் கண்ணீருடன் சேர்ந்த ஒரு கோவம் இருந்தது.
அதற்கு மேல் அவள் அங்கே நிற்கவே இல்லை.
"வள்ளியோட வீடு எது?" என்று கேட்டவள், அந்த இடத்தை நோக்கி நடக்க துவங்க, அவள் கால்கள் நின்றது என்னவோ வள்ளியின் வீட்டில் முன்னாள் தான்.
அங்கு போய் செல்லவும், அவளின் கண்கள் விரிந்தன.
அத்தியாயம் 4
பரினீத்தி அதிர்ந்து அப்படியே நின்று இருந்தாள்.
மருத்துவமனையில் இருந்து அம்புலன்ஸ் வந்து இருந்தது.
அவளின் கண்களில் நீர் கோர்த்து கொண்டது.
"என்ன ஆச்சு?" என்று அருகில் இருந்த ஒருவரை கேட்க, அவருக்கு பரினீத்தி தான் ஊருக்கு புதிதாக வந்து இருக்கும் ஆசிரியர் என்று தெரியும். ஆகையால், "டீச்சர் அந்த பொண்ணுக்கு ஏதோ உடம்பு சரி இல்லயாம். அதான் ஹாஸ்பிடல் கூட்டிகிட்டு போறாங்க" என்று சொல்ல, அவளால் அதை ஏற்று கொள்ள முடியவில்லை.
அவள் நேராக சென்றது அங்கு வந்த மருத்துவமனை ஊழியர்களிடம் தான்.
"அந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு?" என்று அவள் கேட்க, அவர்களோ சுற்றும் முற்றும் பார்த்து, "நீங்க யாரு?" என்று கேட்க, "நான் இந்த ஊருக்கு புதுசா வந்து இருக்க டீச்சர். வள்ளி என் ஸ்டுடென்ட் தான்" என்றதும், மற்றொரு முறை அவர்கள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, "மேம், மனுஷன் இல்ல மேம் அந்த ஆளு, அந்த பொண்ண ரேப் பண்ணிருக்கான்" என்றதும் அவளின் கண்களில் இருந்த நீர் அப்படியே கீழே விழுந்தது.
"மரைடேல் ரேப் இது" என்றதும், அவளோ அழுத்தமாக தலையை இல்லை என்று அசைத்து, "இது ஒரு போக்ஸோ கேஸ்! அந்த பொண்ணு ஒரு மைனர், இந்த கல்யாணமே செல்லாது! இதுல ரேப் வேற... நான் கேஸ் கொடுக்குறேன்" என்று அவள் சொல்ல, அவர்களோ ஒருவரை ஒருவர் பார்த்து, "மேம் நீங்க என்ன செஞ்சாலும் இங்க செல்லாது... இந்த கேஸ் கோர்ட்க்கு போகவே போகிறது" என்றவர் சொல்ல, அவரை கேள்வியுடன் பார்த்தார்.
"இந்த மாதிரி இங்க நடக்குறது முதல் முறையும் இல்ல... இது கடைசி முறையாவும் இருக்காது... மேம் என் சர்வீஸ்ல எத்தனை பொண்ணுங்கள பொணம்மா தூக்கி இருக்கேன் தெரியுமா? ஆனா இந்த ஊர்ல தான் நிறைய சின்ன பொண்ணுங்கள தூக்கி இருக்கேன். இந்த ஊர்ல இருக்குறவனுங்க எல்லாம் மனுஷன் இல்ல மேம். மிருகம். பொண்ணுங்களுக்கு மரியாதை அப்படினா என்னன்னே தெரியாம வளக்குறாங்க... பசங்களுக்கு மரியாதையை கொடுக்க சொல்லி தராம வளக்குறாங்க... இது ஊரே இல்ல மேம் நரகம். பெண்களுக்கான நரகம். நானும் இதே ஊர் காரன் தான் எனக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்ததும் இந்த ஊற விட்டே போய்ட்டேன். இங்க இருந்து அவளை சீரழிக்க நான் விரும்பல" என்று அவர் சொல்லி கொண்டு இருக்கும் போதே, அங்கே போதையில் தள்ளாடி கொண்டு வந்தான் வள்ளிக்கு தாலி என்கிற பெயரில் தூக்கி கயிறு கட்டிய பாரி வள்ளல்.
"அதோ வரானே அவன் தான் மேம் இந்த பொண்ணு வாழ்க்கையை சீரழிச்சது" என்று அவர் சொல்லும் போதே, போதையில் வந்தவன், "ஹே இப்போ எதுக்கு இவளோ பேரு இங்க கூடி இருக்கீங்க? அவளுக்கு புருஷன சந்தோஷ படுத்தவே வக்கு இல்ல.. சும்மாவே ஐயோ அம்மா வலிக்குதுன்னு கத்துறா? இதெல்லாம் தாங்கணும்னு சொல்லி கொடுத்து வளக்க வேணாம். கொஞ்சம் கூட என்னை திருப்தியே படுத்தல் தெரியுமா?" என்றவன் கொஞ்சம் கூட லஜ்ஜையின்றி, வள்ளியின் தாயை பார்த்து, "உன் பொண்ண விட நீ நல்லா இருக்க, நீ வா வந்து என்ன சந்தோஷப்படுத்து" என்று அவன் சொல்லி முடிக்கும் முதல், அவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தது ஒரு கரம்.
அங்கே நின்று இருந்தார் பக்ஷிராஜா!
ஆறடிக்கு மேல் கம்பீரமாக இருந்தார். முறுக்கிய மீசை, திடகாத்திரமான உடல் கட்டுடன், இன்றும் சிங்கம் போல் தான் இருந்தார். அவரது தோற்றம் கூட பின் நாற்பதுகளில் இருப்பது போல் தான் இருந்தன. ஆனால் அவருக்கு அறுபது வயது.
பரினீத்தியின் கண்கள் அவரை தான் பார்த்து கொண்டு இருந்தன.
"அடி செருப்பால! அந்த புள்ளைய இப்படி படுக்க வச்சிட்டு அவ ஆத்தாக்காரி வேற வேணுமோ துறைக்கு? ஏன் டா நீ ஒன்னு அந்த புள்ளைய வச்சி ஓழுங்கா வாழ்ந்து இருக்கனும் இல்ல பண்ற தப்ப சரியா பண்ணி அவளை கொன்னு போட்டு கூட இருக்கலாம்... இப்போ பாரு நான் தான் இந்த விஷயம் எல்லாம் வெளிய வராம இருக்க என்னோட தலையை பணயம் வைக்கணும்" என்று அவர் கத்தவும், அங்கிருந்த அனைவர்க்கும் நடுக்கம் தான்.
பரினீத்தியின் கண்கள் அதிர்ந்து விரிந்தன. 'என்ன மனிதன் இவன்? ஒரு பெண்ணை பாலிய வன்கொடுமை செய்து இருக்கிறான். அதுவும் சிறுபெண் அவள்! அப்படி செய்தது குற்றமில்லை ஆனால் அவன் இப்படி மாட்டியது தான் குற்றம் என்று பேசுகிறான் அதுவும் அந்த பெண் இறந்தால் கூட பரவாயில்லை" என்று நாக்கில் நரம்பு இல்லாமல் பேசும் ஜென்மத்தை எந்த ரகத்தில் சேர்ப்பது என்று அவளுக்கே தெரியவில்லை.
அங்கிருந்த மருத்துவ ஊழியர்களை பார்த்தவன், "இங்க இருந்து யாரும் அந்த பொண்ண கொண்டு போக கூடாது. பொழைக்க வைக்கணும்னா இங்கயே பொழைக்க வைங்க இல்லையா இங்கயே கிடந்தது சாகட்டும். என் ஊர் பேரு கேட்டு போக கூடாது. இந்த ஆகாயபுரிக்கு இந்த பக்ஷிராஜா வச்சது தான் சட்டம். தெரியும்ல? இல்லனா நீங்க ஊரு போய் சேர மாட்டீங்க" என்று மிரட்டல் வேறு விடுக்க, அங்கிருந்த அனைவரும் தலையாட்டி கொண்டனர்.
அப்போது தான் பக்ஷிராஜாவின் கண்கள் பரினீத்தியில் பதிந்தன.
"யாரு இந்த பொண்ணு?" என்று அவளை சுட்டிக்காட்டிய கேட்க, வடிவேலு தான் அருகில் வந்து, "ஐயா இவங்க தாங்க புதுசா வந்து இருக்க கணக்கு டீச்சர்" என்று சொன்னதும், "நீ தானா அது? பசங்க எல்லாரையும் வெளிய நிக்க வெக்குறியாமே... இதோட வெளிய நிக்க வைக்க கூடாது. வந்தோமா? பாடம் நடத்துனோமா அதோட நிறுத்திக்கோ" என்று ஒற்றை விரலை நீட்டி அவள் முன் எச்சரிக்கை வேறு செய்து வைத்தார்.
அவளுக்கோ பொறுமை போய் விட்டது.
"இல்லனா என்ன பண்ணுவீங்க?" என்று வெளிப்படையாகவே கேட்டு இருந்தாள்.
அவளின் குரலில் உறுதி இருந்தது.
இரண்டாவது முறை பக்ஷிராஜாவை எதிர்த்து ஒருவர் பேசி இருக்கிறார், அதுவும் இந்த முறை ஒரு பெண்!
பக்ஷிராஜாவின் கண்கள் இடுங்கின!
"யாரு கிட்ட பேசுறேன்னு தெரியுமா?" என்று அவர் கர்ஜிக்க, அவளோ இதழ்களில் ஒரு நக்கல் புன்னகையுடன், "தெரியுமே! மனசாட்சியே இல்லாத மிருகத்து கிட்ட பேசிகிட்டு இருக்கேன். மிருகத்துக்கு கூட கொஞ்சம் நியாயம் இருக்கும்யா! நீ ஒரு பிணந்தின்னி... ச்சை என்ன மனுஷன் நீ! பதினாறு வயசு பொண்ணுயா அவ! அவளை மிருகம் மாதிரி வேட்டையாடி இருக்கான் இவன்... பண்ண தப்புக்கு நியாயம் கேட்காமா அந்த பொண்ணு இன்னும் ஏன் சாகலைன்னு கேட்குறியே நீ எல்லாம் மனுஷன் தானா?" என்று அவரை பார்த்து ஆங்காரமாக ஒலித்தது அவள் குரல்.
அப்படியே திரும்பி மக்களை பார்த்து, "இவனா பெரிய மனுஷன்? உங்களுக்குலாம் நியாயம் தர்மம் தெரியுமா? உங்க ஊர்ல இருக்க பொண்ணுங்க தானே! நீங்க பெத்த பொண்ணுங்க தான? கொஞ்சம் கூட கோவம் வரல? இவனை போய் தெய்வமா கும்பிடுறிங்க? இவனை எல்லாம் தொடப்பதையும் செருப்பையும் கொண்டு அடிக்கணும்" என்று அவள் கத்த, அங்கிருந்த ஒருவர் கூட அசையவே இல்லை.
"உங்களுக்குலாம் கொஞ்ச கூட வா சூடு சொரணை இல்லை? பசங்க மட்டும் இல்ல பொண்ணுங்களும் இப்போ எல்லாம் வேலைக்கு போறாங்க.. இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா தெரியாதா?" என்று அவள் கேட்கவும், "என்ன தான் பொண்ணுங்க வேலைக்கு போனாலும் அவங்க இன்னொரு வீட்டுக்கு போறவங்க தானே?" என்று ஒருவர் கூறவும், அவரை பார்த்து, "சரியா சொன்னிங்க.. அதனால இதோட நம்ப பசங்கள பொண்ணுங்க வீட்டுக்கு அனுப்பலாம். என்ன? அப்போ பொண்ணுங்கள படிக்க வச்சிட்டு பசங்கள வீட்டு வேலை செய்ய சொல்லுவோம். என்ன சொல்றிங்க?" என்று அவள் கேட்கவும், அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து விட்டனர்.
"என்ன எல்லாரும் கண்ணு வெளிய வந்து விடுற அளவுக்கு கண்ணை விரிக்குறிங்க? பொண்ணுங்க புகுந்த வீட்டுக்கு போறது தான் பிரச்சனைனா, அப்போ பொண்ணுங்க வீட்டுக்கு பசங்க வரட்டுமே! பொண்ணுங்க படிக்கட்டும். பசங்களுக்கு வீட்டு வேலை எல்லாம் சொல்லி கொடுங்க" என்றவள் மீண்டும் அதை வலியுறுத்த, "ஏன் மா பசங்க தான் மா கொல்லி வைக்க போறாங்க" என்றவரின் பக்கம் திரும்பினாள்.
"கொல்லி வைக்க ஆண் பெண்லாம் இல்ல ஒரு கொள்ளிக்கட்டை இருந்தா போதும். யாரு பத்த வச்சாலும் அது எரியும். எந்த கொள்ளிக்கட்டை உங்க கிட்ட வந்து சொல்லுச்சு, நான் ஆம்பளைங்க பத்த வச்சா தான் எரிவெனு... நீங்களா ஒன்ன கற்பனை செஞ்சிகிட்டு இப்படி உங்க மூட நம்பிக்கையால இப்படி அநியாயமா பிஞ்சு பூவா இருக்க பெண் பிள்ளைங்களை கொல்லுறிங்களே! உங்களுக்குலாம் மனசாட்சியே இல்லையா?" என்று கத்தியவள், அப்படியே பக்ஷிராஜாவின் புறம் திரும்பி, "இன்னைக்கு கண்டிப்பா போலீஸ் கூட வந்து இங்க நடக்குற அநியாயம் எல்லாத்துக்கும் முற்று புள்ளி நான் வைக்குறேன்" என்று சொல்லியும் இருந்தாள்.
"என்ன மா எங்க ஊருக்கு புதுசா வந்து எங்க ஊரு பழ வழக்கத்தை எல்லாம் மாத்த நினைக்கிற?" என்று ஒருவர் எகிறிக்கொண்டு வரவும், அவளோ, "ஏன் மாத்துனா என்ன? உங்க சாப்பிட்ட தட்ட அதோட நீங்க தான் கழுவணும்னு பயமா?" என்று அவள் கேட்க, கப்சிப் என்று வாயை மூடிக்கொண்டார் அந்த நபர்.
மீண்டும் பக்ஷிராஜாவை பார்த்து, "உங்கள கம்பி எண்ண வைக்குறேன்" என்று சொடக்குப்போட்டு அவள் சொல்ல, அவரின் இதழில் ஒரு குரூர புன்னகை.
"நீ உன்னால முடிஞ்சது பண்ணு. எந்த போலீஸ் கிட்ட வேணா போ! இந்த பக்ஷிராஜாவை ஒன்னும் பண்ண முடியாது. உன்ன மாதிரி எத்தனை பேர பார்த்து இருக்கேன் தெரியுமா? கடைசியா வந்து ஒன்னும் பண்ண முடியாம என் முன்னால வந்து நிப்ப பாரு" என்று அவர் சொல்லவும், "அதையும் பார்க்கலாம்" என்றவள் அப்படியே அந்த மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுனரை பார்த்து, "யாரு இந்த ஊரு இன்ஸ்பெக்டர்?" என்று கேட்க, "ஹம்சா சார் தான்" என்றதும், அவளின் கால்கள் நேராக சென்றது என்னவோ அந்த ஊரில் இருக்கும் காவல் நிலையத்திற்கு தான்.
இதே சமயம் அங்கே அவனது ஜீப்பில் வந்து இறங்கினான் ஹம்சா.
ஹம்சா பரினீத்தியின் குறிகோளை நிறைவேற்றுவானா? அன்னத்தை நாடி செல்லும் பறவையின் நிலை என்னவோ?
அத்தியாயம் 5
ஹம்சா ஜீப்பில் வந்து இறங்க, "வணக்கம் சார்" என்று ஒரு காவலாளி வந்து சல்யூட் அடிக்க அவனும் அமைதியாக தலையசைத்து உள்ளே சென்றான்.
கம்பீரமானவன் அவன்!
ஆறடிக்கு சற்று குறைவான உயரம். அழகானவன்! அன்னப்பறவையின் பெயரை வைத்து இருப்பதா அல்லது அவன் அப்படி தான் இருப்பான் என்று நினைத்தாளோ என்னவோ அவனது தாய் தான் அவனுக்கு ஹம்சா என்று பெயரை வைத்தார்.
ஆம் அன்னம் தான் அவனும்! பாலில் இருந்து தண்ணீரை எடுக்கும் அன்னத்தை போல், அவனும் யார் கெட்டவர் யார் நல்லவர் என்று பார்த்தவுடன் கணித்து விடுவான்.
ஆனால் யார் பக்கம் நிற்பான் என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
உள்ளே சென்றவன் அவனின் இருக்கையில் அமர, அவனின் கண்களில் பட்டது என்னவோ புதிதாக வந்து இருக்கும் ஏட்டு பெண் தான். குயில் அவள்! அவளின் தந்தை இறந்த வேலை அவளுக்கு கிடைத்து வந்து சேர்ந்து இருக்கிறாள்.
அவளுக்கு இந்த உத்யோகம் பிடிக்கவே இல்லை என்று தான் சொல்லவேண்டும்.
ஆனால் ஏழ்மையான குடும்பம். ஆகையால் அவளுக்கு வேளைக்கு சென்றாக வேண்டிய காட்டாயம்.
பிடிக்காத வேலை என்றாலும் அவசியமான வேலை என்பதால் எடுத்து கொண்டு இதோ வந்து விட்டாள். இது தான் அவளது முதல் நாளும் கூட!
"ஹே!" என்று ஹம்சா கத்தவும், அவனின் முன் வந்து நின்றாள் குயில்.
அவனின் சன்கிளாஸை கழட்டி விட்டு, அவளை மேல் இருந்து கீழ் ஒரு பார்வை பார்த்தவன், "என்ன புதுசா?" என்று கேட்க, அவளும் மேலும் கீழும் தலையாட்டினாள்.
"சரி பக்கத்து கடைல போய் ஒரு டீ வாங்கிட்டு வா" என்று அவன் சொல்லவும், அவளோ, "பால் ஊத்தியா ஊத்தாமலா?" என்று அடுத்த கேள்வி கேட்டாள்.
அவனோ, "பால் ஊத்தி" என்று சொல்லிவிட்டு நகர போக, அவளோ அடுத்து, "இஞ்சி போடணுமா? போடவேணாமா?" என்று கேட்கவும், "இஞ்சி போட்டு" என்று ஒரு அடி எடுத்து வைக்க, "சக்கரை போட்டா போடாமலா?" என்று கேட்கவும், அவனின் பொறுமை போய் விட்டது.
"ஏட்டு தானே நீ? இல்ல ஹோட்டல்ல வேலை செய்ற குக்கா? இத்தனை கேள்வி கேட்குற.. போ போய் ஒரு டீ சொல்லு, அந்த ஆளு தான் எப்பவும் எனக்கு டீ தருவான் அவனுக்கு தெரியும் எப்படி போடணும்னு... அப்படி உனக்கு அவன் சரியா போடலைனு தெரிஞ்சா நீயே உன் கையாள டீ போட்டு கொண்டு வா" என்றவன் அவனின் கோப்பைகளை பார்க்க ஆர்மபித்து விட்டான்.
இதே சமயம் தான் உள்ளே வந்தாள் பரினீத்தி.
அவள் உள்ளே வரவும், அவனின் கண்கள் இடுங்கியது.
"மேடம் யாரு?" என்று அவளை பார்த்து அவன் கேட்க, "நான் ஆகாயபுரில இருக்க அரசு பள்ளி டீச்சர் சார்! ஒரு கம்பளைண்ட் கொடுக்கணும்" என்று அவள் சொல்லவும், அவனின் புருவங்கள் மேலும் இடுக்கி அவனின் கண்கள் கூர்மையானது.
"என்ன கம்பளைண்ட்?" என்று அவன் கேட்க, அவளோ, "சார் ஒரு மைனர் பொண்ண கட்டாய படுத்தி கல்யாணம் பண்ணி அவளை ரேப் பண்ணி இருக்காங்க... இட்ஸ் எ போக்ஸோ கேஸ்... அது மட்டும் இல்ல இது ஒன்னும் முதல் தடவை இல்ல.. இன்னும் நிறைய தடவை இந்த மாதிரி நடந்து இருக்கு... நான் கம்பளைண்ட் கொடுக்குறேன். ஆக்ஷன் எடுங்க ப்ளீஸ்" என்று அவள் சொல்லவும், அவனோ ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை விட்டு கொண்டு, "இங்க பாருங்க மிஸ்.." என்றவன் ஒரு கணம் நிறுத்தி அவளின் நெற்றி வகுட்டை பார்க்க, அவளோ அவன் எதற்கு பார்க்கிறான் என்பதை உணர்ந்து கொண்டு, "மிஸ் பரினீத்தி" என்று அழுத்தமாக சொல்லவும், "மிஸ் பரினீத்தி, வந்தோமா பாடம் எடுத்தோமா போனோமான்னு இருங்க" என்று அவன் அதே வார்த்தையை சொல்லவும், பொறுமை அவளுக்கு காற்றில் போய் விட்டது.
"என்ன சார் எல்லாரும் வந்தோமா பாடம் எடுத்துட்டு போங்கன்னு சொல்றிங்க! உங்களுக்குலாம் கொஞ்ச கூட மனசாட்சியே இல்லயா? அதுவும் ஜெனரல் பப்லிக் சொல்றது கூட ஓகே ஆனா நீங்க எவளோ பெரிய பொசிஷன்ல இருக்கீங்க நீங்க போய் இப்படி பேசுறீங்க. நியாயமா பார்த்தா நீங்க இந்நேரம் வந்து அந்த கேடுகெட்டவனை அரெஸ்ட் பண்ணி இருக்கனும். இதெல்லாம் விட அங்க இன்னொரு பொறுக்கி இருக்கான் அவன் தான் அந்த ஊரையே ஆட்டி வைக்குறான். அவன் மேல தான் முதல்ல கேஸ் கொடுக்கணும்" என்றவள் எழுந்தே விட்டாள்.
ஆத்திரமாக வந்தது. அவளால் கோவத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை. அவன் தான் இந்த ஊரின் இன்ஸ்பெக்டர் அவனே இப்படி பேசினால் எப்படி என்று ஒரு புறம் இருக்க, மறுபுறம் அனைவரும் சொன்ன அதே வார்த்தைகளை கேட்டு கேட்டு அவளுக்கு காது புளித்து போய் விட்டது.
"நீங்க யாரை பத்தி யாரு கிட்ட கம்பளைண்ட் கொடுக்க வந்து இருக்கீங்க தெரியுமா?" என்று கேட்க, "தெரியுமா அந்த ஆகாயபுரில இருக்க பொறுக்கி பக்ஷிராஜா..." என்று அவள் துவங்கும் போதே, "ஜஸ்ட் ஷட் அப்... என் அப்பாவை பார்த்து பொறுக்கின்னு சொல்ல உனக்கு எவளோ தைரியம் இருக்கும்?" என்று கத்திகொண்டே எழுந்து நிற்க, அவளின் கண்கள் ஒரு பக்கம் விரிந்தது என்றால், மறுபக்கம் அங்கே டீ எடுத்து கொண்டு வந்த குயிலின் கையில் இருந்த கிளாஸ் கீழே விழுந்து உடைந்து இருந்தது.
அவனோ குயிலை பார்த்து, "ஒரு டீ கூட ஓழுங்கா வாங்கிட்டு வர முடியல! ஆனா பெண்களுக்கு உரிமை வேணும்னு உரிமை குரல் கேட்க மட்டும் வந்திருங்க" என்று கூறினாலும் அவனின் கண்கள் நிலைத்து இருந்தது என்னவோ பரினீத்தி மீது தான்.
பரினீத்திக்கு ஆத்திரமாக வந்தது.
இவன் பக்ஷிராஜனின் மகன் என்று தெரிந்து இருந்தால் அவள் இங்கே வந்து கூட இருக்கமாட்டாள்.
அவளோ இதழ்களை வளைத்து, "நீங்க மட்டும் என்ன வித்யாசமாவா இருந்துருவிங்க? உங்க அப்பா மாதிரி தானே இருப்பீங்க? உங்களுக்கு கீழ வேலை செய்ற லேடி கான்ஸ்டெபிலை டீ வாங்கிட்டு வர சொல்லி அனுப்பிருக்கிங்க.. இதுலயே உங்க லட்சணம் தெரியுது" என்றவள் பற்களை கடித்து கொண்டு பேசினாள்.
"ஹே சும்மா பேசமா போ இங்க இருந்து... நீ யாரு கிட்ட போனாலும் உன்னால ஒன்னும் புடுங்கமுடியாது" என்று அவன் சொல்ல, அவளோ சொடக்கிட்டு, "புடிங்கி காட்றேன்" என்று வெளியே சென்று இருந்தாள்.
குயிலுக்கு தான் ஆதியும் புரியவில்லை அந்தமும் புரியவில்லை. அவள் டீ வாங்கிவிட்டு வந்து உள்ளே வரும் சமயம், ஹம்ஸாவின் காத்தலில் பயந்து தான் கீழே கிளாசை தவறவிட்டு விட்டாள்.
பரினீத்தி சென்ற பிறகு தான் ஹம்ஸாவின் கண்கள் குயிலின் மீது படிந்தது.
அவன் ஒன்னும் அவ்வளவு பிற்போக்கு தனமான எண்ணம் கொண்டவன் எல்லாம் இல்லை. பரினீத்தி அவனின் தந்தையை பற்றி பேசி விடவும், அவனுக்கு கோவம் வந்து விட்டது.
ஆழ்ந்த மூச்சை எடுத்து கொண்டு, அவன் குயிலிடம் செல்ல, அவன் நெருங்கி வர அவளோ இரண்டடி பின்னால் சென்றாள்.
அவளுக்கு ஏற்கனவே பிடிக்காத வேலையாக இருக்க, இதில் முதல் நாளே நடந்த கூத்தில் இந்த வேலையில் இருக்க வேண்டுமா என்கிற எண்ணம் அவளுக்கு எழாமல் இல்லை.
அவன் அவளை நடத்திய விதமும் அவளுக்கு பிடிக்க தான் வில்லை. அவளது வீட்டில் ஏழ்மை இருந்தாலும் செல்லமாக வளர்ந்தவள் தான் அவள்.
அவளின் தாய் தந்தை கூட இன்று வரை அவள் முன் குரல் உயர்த்தி பேசியது இல்லை. ஆனால் முதல் நாளே அவன் அவளை நடத்திய விதம் அவளுக்கு கண்ணீரை வரவழைத்தது என்னவோ உண்மை தான்.
அழுகையை அடக்கி கொண்டு தான் தேநீர் வாங்கவே சென்றாள்.
ஆனாலும் அவன் கத்திய கத்தில் அவள் உடல் நடுங்கியதால், கிளாசை கீழே போட்டு விட்டாள்.
அவனை பார்க்கவே அவளுக்கு பயந்து வந்தது.
அவள் இரண்டடி பின்னே செல்லும் போதே பயந்து இருக்கிறாள் என்று தெரிந்து தான் கொண்டான் ஹம்சா.
அவன் அழுந்த கண்களை மூடி திறந்து, அவனை சமாதானம் செய்து கொண்டு, "சாரி" என்று மென்மையான குரலில் அழைத்தான்.
அவளோ அவனை அதிர்ந்து பார்க்க, அவனோ, "சாரி உன்ன பார்த்து கத்துனதுக்கு தான். மத்த படி ஒன்னும் இல்ல... இவளோ பயப்படுறவ எதுக்கு போலீஸ் வேலைக்கு வரணும்?" என்று நேரடியாகவே கேட்க, அவளோ, "எனக்கு இந்த வேலை உண்மையாவே பிடிக்காது சார்... என் குடும்ப சூழ்நிலை அப்பா வேலை கிடைச்சி வந்துட்டேன்" என்று கண்கள் கலங்கி அவள் சொல்ல, அவனோ, "சரி ஆனா இந்த வேலைக்கு வந்து இப்படி அழுதுகிட்டு இருக்காத... இந்த வேலைக்கு கொஞ்சமாச்சு கம்பீரமா இருக்கனும்" என்றதும், "உங்கள மாதிரியா சார்?" என்று அவள் கேட்டது அவனுக்கு என்னவோ நக்கல் செய்வது போல் தான் இருந்தது. அவளும் அப்படி தான் அதை கேட்டு இருந்தாள்.
அவனோ, "என்ன டி நக்கலா?" என்று கேட்க, அவளோ வேகமாக இல்லை என்று தலையசைத்து, "உங்க கிட்ட நக்கல் பண்ண முடியுமா சார்?" என்று அவள் கேட்ட தோணி கூட அவனுக்கு சரியாக பட வில்லை.
ஏனோ அவள் பார்ப்பதற்கு பாவமாக தோன்றினாலும், அவளது பேச்சில் ஒரு குறும்பும் குசும்பும் நிறைந்து இருந்தது.
"நீ பொழச்சிக்குவ.." என்றவன் சொல்லிவிட்டு, அப்படியே அங்கிருந்த மற்றோரு காவலாளியை பார்த்து, "இப்போ யாரு ஏசிபி?" என்று கேட்கவும், "சார் காகேஷ்" என்று சொல்லவும், "காகேஷ்... அந்த ஆளு ஒரு மாதிரில?" என்று கேட்கவும், "ஆமாங்க சார் மூணு மாசமா ஒரு கேஸ் கூட எடுக்காம இருக்காரு" என்றதும், அவனும், "அப்போ சரி நமக்கு பிரச்சனை இல்ல... எப்படியா இருந்தாலும் அவ அடுத்து அவன் கிட்ட தான் போவா... அவன் கேஸ் எடுக்க மாட்டான். அப்புறம் பார்த்துக்கலாம். இவளுக்கு ஒரு பாயசம் போடணும் போல" என்று ஹம்சா சொல்லவும், குயிலுக்கு ஒரு உறுத்தல்.
அவளும் இந்த ஆகாயபுரியை பற்றி கேள்வி பட்டு இருக்கிறாள். அவள் அதற்கு பக்கத்துக்கு ஊர் தான் என்பதால் அரசால் புரசலாக அந்த ஊரை பற்றி அவளுக்கு தெரியும் தான். ஆகையால் என்னவோ மனது பிசைந்தது.
'கடவுளே அந்த டீச்சர் ஆகாயபுரியை மாத்துனா நல்லா இருக்கும்' என்று அவள் மனதில் நினைக்க, இங்கோ பரினீத்தி பேருந்தில் ஏறி ஏசிபி அலுவலகம் வந்து இருந்தாள்.
அத்தியாயம் 6
ஏசிபி அலுவலகம் அவள் பேருந்தில் ஏறி தான் செல்ல வேண்டும். பேருந்தில் செல்லும் போதே, அவள் ஏசிபி அலுவலகம் என்று சொல்லி இருக்க, அந்த பேருந்தின் நடத்துனரோ, "ஏன் மா?" என்று கேட்டு இருந்தார்.
அவளோ, "எனக்கு ஒரு கம்பளைண்ட் கொடுக்கணும்" என்று சொல்லி இருக்க, அவரோ, "அதுக்கு எதுக்கு மா ஏசிபி ஆபீஸ்? பக்ஷிராஜன் சார் கிட்ட சொன்னா போதாதா?" என்று கேட்க, அவளோ அவரை நிமிர்ந்து பார்த்து, "கம்பளைண்ட் அவர் மேல தான் கொடுக்கணும்" என்று அழுத்தமாக கூறினார்.
நடத்துனர் அதிர்ந்து தான் விட்டார்.
"என்ன மா சொல்ற? பக்ஷிராஜா ஐயா மேல கேஸ் கொடுக்க போறியா? அதெல்லாம் வேண்டாம் மா சொல்றத கேளு... நீ என்ன பண்ணாலும் இங்க அவரு வச்சது தான் சட்டம்" என்றவரை பார்த்து, "நீங்க வேண்டிய விடுங்க" என்று சொல்லவும், அவருக்கும் வேறு வழி தெரியவில்லை.
'ஆண்டவா இந்த பொண்ண நீ தான் காப்பாத்தணும்' என்று நினைத்துக்கொண்டார்.
அவளும் ஏசிபி அலுவலகம் வந்ததும் இறங்கி கொண்டாள்.
ஒரு தயக்கம் இருந்தது. அது எவ்வகை என்று அவளுக்கும் தெரியவில்லை. ஆனால் செல்ல துணிந்து விட்டாள்.
ஒரு அடி எடுத்து வைத்தவள் பின்பு யோசித்து மறுஅடியையும் வைத்து நடந்து, அலுவலகத்தினுள் செல்ல, அங்கே முதலில் இருந்தது என்னவோ நவநீதன் தான்.
"என்ன மா என்ன வேணும்?" என்று அவளை பார்த்து கேட்க, அவளோ, "ஏசிபிய பார்க்கணும்" என்று சொன்னதும், "எதுக்கு?" என்று அடுத்த கேள்வி அவனிடம் இருந்து வந்ததது.
"ஒரு கம்பளைண்ட் கொடுக்கணும்" என்று அவள் சொன்னதும் தான் தாமதம், அவனுக்கோ ஒரு வாரம் முன் ஒருவன் இப்படி வந்ததற்கு காகேஷ் அடி வெளுத்தது தான் நினைவு வந்தது.
அவனோ, "ஐயோ மேடம் போயிருங்க" என்று நவநீதன் சொல்ல, அவன் பதட்டத்தை பார்த்து, "ஏன் இப்படி பயப்படுறீங்க?" என்று கேட்டாள்.
"அவனோ வேண்டாம் மேடம் சொன்னா கேளுங்க" என்றவன் மீண்டும் சொல்ல, "எனக்கு ஏசிபி காகேஷை பார்த்தே ஆகணும்" என்று அவள் அழுத்தமாக சொல்லவும், சத்தம் கேட்டு காகேஷ் வெளியே வந்தான்.
"என்ன சத்தம் இங்க?" என்று கேட்டுக்கொண்டே வந்தவனின் கண்களில் பரினீத்தா தான் விழுந்தாள்.
"நீங்க அந்த ஸ்கூல் டீச்சர்ல? அன்னைக்கு என் கூட ஏதோ பேசணும்னு ட்ரை பண்ணீங்க... ஆனா எதுவும் சொல்லவே இல்ல" என்றவனை பார்த்து, "இன்னைக்கு சொல்றேன் சார். கம்பளைண்ட் கூட கொடுக்குறேன். ஆனா ஆக்ஷன் நீங்க எடுப்பிங்களா?" என்று அவள் கேட்க, அவளை மேல் இருந்து கீழ் வரை அவனது கண்கள் ஊடுருவியது.
அவளிடம் துளி அளவும் பயமில்லை. தைரியமாக நின்று இருந்தாள்.
அவனின் இப்படி நிற்கும் இரண்டாவது பெண் இவள்!
'அவளை போல தான் இருக்கா... ஆனா அவ அளவுக்கு இருக்க முடியாது' என்று அவனது மனம் நினைத்து கொண்டு, "உள்ள வாங்க" என்று அழைத்து சென்றான்.
நவநீதனின் கண்கள் வெளியே வந்து விடும் அளவு விரிந்தன.
'அடப்பாவி மனுஷா போன வாரம் ஒருத்தன் வந்ததுக்கு அந்த அடி அடிச்சியேயா? இன்னைக்கு என்னடானா இப்படி இருக்க?' என்று நினைத்தவன், 'பொண்ணுனா பல்ல இளிக்கிற ஆளு போல' என்று மனதில் நினைத்து கொண்டே அவனும் பின்தொடர்ந்து சென்றான்.
அவளின் முன் இருக்கையை காட்டிய காகேஷ் அவனும் அமர்ந்தான். "சொல்லுங்க என்ன கம்பளைண்ட்?" என்று அவன் கால் மேல் கால் போட்டு கொண்டு கேட்கவும், அவளோ, "சார் என்னோட ஸ்டுடென்ட் பதினாறு வயசு பொண்ணு, டிஸ்ட்ரிக்ட் பர்ஸ்ட் வாங்குன வள்ளியை மைனர்னு கூட பார்க்காம கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க அது மட்டும் இல்ல, அவளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி இருக்காங்க" என்றவள் உணர்ச்சி போங்க பேச, அவனோ, "அச்சோ அப்புறம்?" என்று ஆர்வமாக கேட்கவும், "சார் அந்த பொண்ணு உயிருக்கு போராடிகிட்டு இருக்கா சார்... அவங்க எல்லார் மேலயும் கேஸ் கொடுக்கணும்" என்றவளை பார்த்து, "யாரு மேல எல்லாம்?" என்று கேட்கவும், " அந்த பொண்ண கெடுத்தவன் மேல அண்ட் பக்ஷிராஜா மேல" என்று அழுத்தமாக கூறி இருந்தாள்.
அவனோ, "அவரு தான எம்எல்ஏ?" என்று கேட்கவும், "அந்த ஆளுக்கு எம்எல்ஏ பதவி தான் ஒரு கேடு" என்று சொல்லும் போதே அவளின் கண்களில் அணல் தெறித்தது.
"சில் டீச்சர்.. கொஞ்சம் தண்ணி குடிங்க" என்று சொல்லிக்கொண்டே அவளின் முன் ஒரு பாட்டிலில் தண்ணீர் நீட்டினான்.
அவளுக்கும் தாகமாக இருந்து இருக்க வேண்டும். அவன் கொடுத்ததும் வாங்கி பருக, அவனோ பின்பு தான் ஆரம்பித்தான்.
"நான் இந்த கேஸ் எடுத்துக்குறேன்" என்றதும், பரினீத்திக்கு முன் நவநீதனின் கண் விரிந்தது.
'ஆத்தி நான் உண்மையா தான் கேக்குறேனா? இந்த ஆளா இத பேசுறது? எப்படி டா இவளோ மாற்றம்?' என்று அவன் நினைத்து கொண்டு இருக்கும் போதே, "ஆனா எனக்கு என்ன கிடைக்கும்?" என்று அவன் கால் மேல் கால் போட்டு கொண்டு கேட்டான்.
நவநீதனோ, 'அதான் பார்த்தான், என்ன டா சனியன் தானா சரி சொல்லுதேனு... ஒரு க் இருக்குமே எல்லா இடத்துலயும்' என்று நினைக்கும் போதே, "புரியல சார்" என்றவளை பார்த்து, "ஹலோ மேடம், நீங்க சொல்றது ஒன்னும் சாதாரண கேஸ் இல்ல, என்எல்ஏ மேல கேஸ் போட சொல்றிங்க.. அதுக்கு எனக்கு ஏதாவது கொடுத்தா தானே நான் ப்ரொசீட் பண்ண முடியும்" என்றவன் சொல்ல, "அதுக்கு தானே நீங்க அரசாங்கத்து கிட்ட இருந்து சம்பளம் வாங்குறீங்க" என்று அவளும் கேட்டு இருந்தாள்.
"அத வச்சிக்கிட்டு என்ன பண்ண முடியும் டீச்சர்? நானும் முன்னேறணும்ல?" என்று நக்கல் தொனியில் அவன் கேட்க, அவளுக்கோ அதிரிச்சியாக இருந்தது.
"சார் உங்க கடமையை செய்ய லஞ்சமா?" என்று அவள் சீறவும், "எது மா கடமை? எம்எல்ஏ மேல கேஸ் போடுறதா? இங்க பாரு எனக்கு கை மேல காசு வை.. அதுக்கு பிறகு இந்த கேஸ் பத்தி பேசலாம்" என்றதும் எழுந்து விட்டாள்.
"உங்கள போய் தேடி வந்தேன் பாருங்க.. என்ன நானே செருப்பால அடிச்சிக்கணும்" என்றதும், அவனோ அவனின் காலை குனிந்து பார்த்து, "சாரி ஷூ தான் போட்டு இருக்கேன். நீங்க செருப்பு தானே போட்டு இருக்கீங்க.. அப்போ அதாலேயே அடிச்சிக்கோங்க..." என்று சொன்னதும், அவளுக்கோ பொறுமை போய் விட்டது.
"ச்சீ நீ எல்லாம் மனுஷனே கிடையாது" என்றவள் சொல்ல, அவனோ, "ஆமா நான் கழுகு மா" என்று கண் சிமிட்டினான்.
இத்தனை நேரம் இருந்த சிறு நம்பிக்கையும் பொய்த்து போனது.
பரினீத்தி வெளியே சென்றதும், காகேஷ் அவனின் கைப்பேசியை உயிர்ப்பித்து, "ஹலோ நீங்க சொன்ன படி செஞ்சிட்டேன். டூ சி வேணும். அக்கௌன்ட்க்கு ட்ரான்ஸ்பெர் பண்ணி விடுங்க" என்று வைத்து விட்டான்.
நவநீதனோ, 'அட கோல்மால் போலீஸ் இதுக்கு தான் அந்த பிள்ளையை உள்ள கூப்டியா?' என்று நினைத்து கொண்டே அவரும் வேலையை பார்க்க சென்று விட்டாள்.
இதே மனநிலையில் தான் மீண்டும் பேருந்தில் ஏறி ஊர் திரும்பி இருந்தாள்.
இவ்வாற்றை எல்லாம் நினைத்து கொண்டே தான் அவள் பக்ஷிராஜனின் வீட்டிற்குள் நுழைந்தாள்.
வாசலில் வீட்டின் பலகை மாட்டி இருந்தது, "குமரகம்!" என்கிற பெயரை பார்த்ததும் அவளின் இதழ்களில் ஒரு நக்கல் புன்னகை. சிறகை உடைக்கும் மனிதன் வாழும் இடத்திற்கு சிறகை விரித்து பறக்கும் பறவைகளின் சரணாலயங்களின் பெயர், என்ன ஒரு வேடிக்கை என்று அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
வீட்டினுள் அவள் செல்ல, அங்கே அவரின் ராஜ நாற்காலியில் அமர்ந்து இருந்தார் பக்ஷிராஜன்.
பக்ஷிராஜனின் முன் நின்று இருந்தாள் பரினீத்தி.
"பரினீத்தினா பறவைன்னு தானே அர்த்தம்? அந்த பறவைகளுக்கே அரசன்மா நான்! இந்த பக்ஷிராஜனை எதிர்த்து ரொம்ப நியாயம் பேசுறியாமே!" என்று அவர் நக்கலாக அவளை கேட்க, அவளோ அவரை பார்த்து முறைத்து கொண்டு, "ச்சை என்ன மனுஷன் நீங்க? இப்படி ஒரு பதினாறு வயசு பொண்ணுக்கு கல்யாணம் கட்டி வச்சிருக்கீங்க! அந்த பொண்ணு டென்த்ல ஸ்டேட் பர்ஸ்ட்! அவ வாழ்க்கை படிச்சி இருந்தா எப்படி இருந்து இருக்கும் தெரியுமா? அவ அக்கா ஓடிப்போனா அவ என்னயா பண்ணுவா? அக்கா இல்லனா தங்கச்சி, அதுவும் ஒரு மைனர் பொண்ணுக்கு கல்யாணம் கட்டி வச்சிருக்கீங்க! நீங்கலாம் ஒரு எம்எல்ஏ" என்று ஆதங்கமாக வந்தது அவளின் வார்த்தைகள்.
"இங்க பாருமா நீ என்ன கத்து கத்தினாலும் இந்த ஆகாயபுரிக்கு இந்த பக்ஷிராஜா வச்சது தான் சட்டம். இங்க எந்த பொண்ணும் வேலைக்கு கூட போக முடியாது. ஏதோ இந்த அரசு பள்ளில அரசாங்கமே உன்ன மாதிரி டீச்சருங்கள போடுறதுனால தான் அமைதியா இருக்க வேண்டியதா இருக்கு... வந்தோமா, பாடம் எடுத்தோமா, சம்பளம் வாங்குனோமான்னு போய்கிட்டே இரு... உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது. நான் பருந்து, நீ ஊர் குருவி! என் உயரம் என்ன உன் உயரம் என்ன?" என்றவர் கால்மேல் கால்போட்டுக்கொண்டு கூற, அவளின் மனதிலோ, 'இப்படி சிறகடித்து பறக்க வேண்டிய கிள்ளைகளோட சிறகை உடைச்சி வைக்குற ஊரு பேரு ஆகாயபுரி! என்ன கொடுமை! இந்த ஆகாயபுரிய மாத்தி, பறவைகள் சாரணாலயமான குமரகமா நான் மாத்தல என் பேரு பரினீத்தி இல்ல. நீ பருந்தாவே இருந்துக்கோ, ஆனா இந்த ஊர் குருவி உன்ன மொத்தமா அழிச்சி காட்டும்' என்று மனதில் கருவிக்கொண்டு திரும்பி நடக்க துவங்கினாள் பரினீத்தி.
ஆகாயபுரியை குமரகமாக மாற்றுவாளா பரினீத்தி? இந்த பயணத்தில் எத்தனை பறவைகள் அவளுடன் சேருமோ?
இவற்றை எல்லாம் நினைத்து கொண்டு அவள் வீட்டிற்கு வருகையில் அவளின் கண்களில் பட்டது அந்த காகிதம். அவள் எழுதி வைத்து இருந்த அந்த கடிதம் அவளிடம் இருக்கும் கடைசி பிரம்மாஸ்திரம் அது!
அனுப்பி விடலாம் என்று நினைத்து விட்டாள்.
அடுத்த நாள் விடிய அனுப்பியும் விட்டாள்.
அந்த கடிதம் ஒரே நாளில் சென்னை கல்வி துறையை சென்று அடைந்தது.
தெரிந்தோ தெரியாமலோ இப்போது இருக்கும் கல்வி துறை அமைச்சருக்கும் பக்ஷிராஜனுக்கும் நல்ல நட்பு முறை இல்லாததால், அவர் இதற்கு உடனே நடவடிக்கை எடுக்குமாறு சொல்லி இருந்தார்.
இது அடுத்த நிலை அதிகாரிக்கு சென்றதும் அதை வாசித்து பார்த்தவருக்கு யாரை இந்த ஊருக்கு அனுப்புவது என்று தெரியவில்லை.
அவர் யோசித்து கொண்டு இருக்கும் போதே, உள்ளே வந்தார் கைலாசம்.
"என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க?" என்று கேட்கவும், "ஒரு பிரச்சனை... இந்த ஆகாயபுரில இருக்க அரசு பள்ளிக்கு ஒரு தலைமை ஆசிரியரை அனுப்பனும்" என்றதும், கைலாசத்தில் மனக்கண்ணில் வந்தது அந்த பெயர்.
"நான் சஜஸ்ட் பண்றேன். அவங்கள அனுப்பி பாருங்க" என்றவரை பார்த்து புருவம் சுருக்க, அவரும் அவளது பெயரை எழுதி கொடுத்தார்.
அதை பார்த்ததும் அந்த அதிகாரியின் கண்கள் விரிந்தன.
"இவங்களா?" என்று அவர் அதிர்ந்தே விட்டார்.
"ஆமா இவங்க தான்... நீங்க அனுப்பி பாருங்க அந்த ஊரையே ஒரு கலக்கு கலக்குவாங்க" என்று அவர் நம்பிக்கை கொடுக்க, அவரும் அவர் சொல்லிய அந்த பெண்மணிக்கு அழைப்பை விடுக்க, அழைப்பை ஏற்று இருந்தாள் நம் கதையின் நாயகி!
ஆம், நம் கதையின் நாயகி! இந்த கதையையே மாற்றி எழுத போகிறவள் அவள்!
அடுத்த அத்தியாயத்தில் இருந்து அவளின் அதிரடியான அறிமுகம் காண்போம்!
அத்தியாயம் 7
"ஹலோ" என்று அவளின் குரல் கம்பீரமாக வந்தது.
அவளது பெயருக்கும், குரலுக்கும், ஆளுமைக்கும் சம்மந்தமே இருக்காது.
"ஹலோ மேம்? மிஸஸ் சிட்டு தானே பேசுறது?" என்று அவர் கேட்க, "மிஸஸ் இல்ல டாக்டர். சிட்டு. என் பிஎச்டி தான் முக்கியம்ன்னு நினைக்கிறன். எனக்கு கல்யாணம் ஆகிருச்சா இல்லையான்னு என் பெயர்க்கு முன்னாடி இருக்க டைட்டிலாலா எனக்கு மரியாதை கிடைக்க வேணாம். என் படிப்புக்கு கிடைச்சா போதும்" என்று கறாராக வந்தது அவளின் வார்த்தைகள்.
"ஐயோ மேம் சாரி. உங்களுக்கு அடுத்து ப்ரின்சிபாலா நாங்க ப்ரோமோஷன் கொடுக்கணும். அதான் உங்களுக்காக ஒரு ஊரு பார்த்து வச்சிருக்கோம். நீங்க போவிங்களானு தெரியல.. நீங்க போனா நல்லா இருக்கும்னு நாங்க பீல் பண்றோம்" என்றவர் சொல்ல, "எந்த ஊரு?" என்று அடுத்த கேள்வியை அவள் கேட்டு இருந்தாள்.
"ஆகாயபுரி" என்றார் அவர்.
அவளோ, "அந்த ஊருக்கு எதுக்கு?" என்று கேட்க, அவர்களும் பரினீத்தி அவர்களுக்கு கடிதத்தில் எழுதிய அனைத்தையும் சொல்லி இருந்தார்கள்.
"நீங்க தான் ரிஸ்ன்ட்டா நீங்க சொல்லி கொடுக்குற ஸ்கூல்ல நடக்குற ட்ரக் சப்பளை எல்லாம் கண்டு பிடிச்சி ஸ்டுடென்ட்ஸ் எல்லாரையும் ரெஹாபிலேஷன் சென்டர்க்கு அனுப்பி வச்சி இருக்கீங்க. ரிமார்க்கப்பில் இன்சிடென்ட் அது! இந்த ஊருக்கு நீங்க போனிங்கனா இன்னுமே நாங்க ஹாபியா பீல் பண்ணுவோம். அண்ட் கண்டிப்பா அந்த ஊர்ல இருக்க ஸ்டுடென்ட்ஸ் எல்லாரையும் மாத்துற கெபாசிட்டி உங்களுக்கு இருக்குனு எங்களுக்கு உங்க மேல நிறையவே நம்பிக்கை இருக்கு" என்றவர் அவளுக்கு புகழாரம் சூட்டினார்.
அவளோ சிரித்து விட்டு, "சார் நான் எதுவும் பண்ணல.. ட்ரக் சப்பளை நடக்குதுன்னு கண்டு பிடிச்சேன். ஸ்டுடென்ட்ஸ்க்கு இது நல்லதுக்கு இல்லன்னு சொன்னேன். அவங்களுக்கும் புரிஞ்சிக்கிட்டாங்க. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. அதே கான்செப்ட் தான் எல்லா இடத்துலயும். அவங்க மாறணும்னு நினைச்சா தான் மாற முடியும். இங்கையும் அதே தான். அவங்க திருந்த நினைக்கணும், நான் திருத்த முயற்சி மட்டும் தான் செய்ய முடியும். எப்போ போகணும்?" என்று கேட்டு இருந்தாள்.
"இப்போ அங்க யாரும் தலைமை ஆசிரியரா இல்ல...நீங்க நாளைக்கே கூட போகலாம்" என்றவர் சொல்ல, "இரண்டு நாள் டைம் கொடுங்க.. நான் என் பொண்ண கூட்டிட்டு போயிடுறேன்" என்று சொன்னதும், "மேடம் உங்க ஹாஸ்பேண்ட்.." என்றவர் ஆரம்பிக்கும் போதே, "வி ஆர் நாட் டுகெதர். இத பத்தி பேச வேண்டாம்." என்று அவர் சொல்லிவிட, அதற்கு மேல் அந்த அதிகாரியும் எதுவும் பேச வில்லை.
"உங்களுக்கு அப்பொய்ன்ட்மென்ட் லெட்டர் இப்பவே அனுப்புறேன் மேம்" என்பதோடு முடித்து கொண்டார்.
இங்கோ கைலாசம் அவரை பார்த்து, "ஏன் யா அவங்க கிட்ட அவங்க புருஷன பத்தி இப்போ பேசுன?" என்று திட்டிவிட்டு, அங்கிருந்து வெளியேறியவர் அடுத்து அவரின் கைப்பேசியை எடுத்து, "சார் நீங்க சொன்ன மாதிரியே செஞ்சிட்டேன்" என்று வைத்து விட்டார்.
சிட்டு அவளின் அழைப்பை துண்டித்து விட்டு அப்படியே திரும்ப, அங்கே அவளது ஐந்து வயது மகள் ஷ்ராவனி தான் விளையாடிக்கொண்டு இருந்தாள்.
"அம்மா போன் கொடு" என்று அவள் அவளை பார்த்து கேட்க, சிட்டுவோ அவளை பார்த்து, "முடியாது. நீ யாருக்கு கால் பண்ணுவேன்னு எனக்கு தெரியும். நான் கொடுக்க மாட்டேன்" என்று சொல்லவும், அவளுக்கு இருக்கும் அதே வீம்பு தானே அவளது மகளிர்க்கு இருக்கும்.
"அம்மா வேணும்" என்று கைகளை கட்டி கொண்டு அவளும் அவளின் தாய்க்கு சரிசமமாக நின்று இருந்தாள்.
அவளுக்கு அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியவில்லை. யாரிடம் வேண்டுமானாலும் வென்று விடலாம், ஆனால் அவளது மக்களிடம் வாய்ப்பே இல்லை. அவளை போல வீம்பும், அவளது கணவனின் ஆளுமையும் இணைந்து பிறந்தவள் அவள்.
அவளின் கைப்பேசியை கொடுத்து விட்டு அவள் சென்று விட்டாள்.
இன்னும் இருநாட்களில் அவள் ஆகாயபுரிக்கு செல்ல வேண்டும்.
அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்ய வேண்டும்.
அவளின் முன் இருந்தது அவளது விவாகரத்து மனு!
அவள் தான் அதை அனுப்பி வைத்து இருந்தாள்.
அவளது கணவன் கொடுக்கவே மாட்டேன் என்று ஒற்றை காலில் நிற்கிறான்.
என்ன செய்வது என்றும் தெரியவில்லை.
இங்கிருந்து சென்று விட்டால் அவனால் சிறிது காலம் தொந்தரவு இருக்காது என்றும் நினைத்து கொண்டாள்.
காதல் திருமணம் அவர்களுடையது. சிட்டு ஒன்னும் பேரழகி எல்லாம் இல்லை. மாநிறத்திற்கும் குறைவான நிறம் தான். ஐந்து அடி இரண்டு அங்குலம் தான் இருப்பாள். ஆனால் அவளின் அறிவிற்கும் தைரியத்திற்கும் என்றுமே குறைவு இல்லை.
அதை பார்த்து தானே அவளின் கணவனும் மயங்கினான்.
ஆனால் இன்று அவர்கள் பிரிவார்கள் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. அதுவும் அவளே விவாகரத்து கேட்பாள் என்பது தான் இன்னும் கொடுமையாக இருந்தது.
அவளின் முன் ஐந்து வயது மகள். அவளுக்காக தான் இந்த விவகாரத்தே!
ஆழ்ந்த மூச்செடுத்து ஆகாயபுரிக்கு செல்வதற்கான வேலைகளை செய்ய துவங்கினாள்.
அடுத்த நாள் விடிய, பரினீத்தி எழுந்து இருந்தாள். அவளுக்கு இங்கு நடந்த எதுவும் தெரியாது.
அவளின் மனது சோர்வாக இருந்தது. நேற்று விடுமுறை வேறு விட்டுவிட்டார்கள். இன்றும் வள்ளியின் நிலை என்ன என்று தெரியவில்லை.
அவளை மருத்துவமனைக்கு கூட அவர்கள் அழைத்து செல்ல வில்லை. வீட்டிலேயே வைத்து தான் வைத்தியம் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
அவள் அனுப்பிய கடித்தை பற்றி அவளுக்கு இன்னும் எந்த ஒரு விடயமும் தெரியவும் இல்லை.
எழுந்தவள் பள்ளிக்கு செல்லவே மனமில்லாமல் சென்றாள்.
அவளை ஆறுமுகம் அவரின் அறைக்கு அழைத்து இருந்தார்.
அவளும் செல்ல, "ஸ்கூலுக்கு புது தலைமை ஆசிரியர் வராங்க மா" என்றதும் அவளின் கண்கள் விரிந்தன.
"யாரு சார் அது?" என்று ஆர்வமாக கேட்டாள் அவள்.
"யாரோ ஒரு பொம்பளையாம், பேரு கூட சிட்டுவாம்" என்று அவன் எகத்தாளமாக கூறவும், அவளுக்கோ, "அது என்ன சார் பொம்பளைனா அவளோ நக்கலா சொல்றிங்க... அவங்க வந்து உங்க கொட்டத்தை எல்லாம் அடக்கும் போது தெரியும்" என்றவள் சொல்லிவிட்டு சென்று விட்டாள்.
எல்லா இடங்களிலும் இப்படி ஆண் ஆதிக்கம் இருந்தால், பெண்களும் தான் என்ன செய்வார்கள்.
அவளின் கைப்பேசியை எடுத்தவள், அந்த பெயரை போட்டு பார்க்கவும், சிட்டுவை பற்றிய விவரகங்கள் அனைத்தும் வந்தது.
அவளுக்கு ஒரு பக்கம் பிரமிப்பு, மறுபக்கம் மகிழ்ச்சியாக இருந்தது.
அவளுக்குள் ஒரு புது உத்வேகம் பிறந்தது போல இருந்தது. ஏனோ சிட்டு அனைத்தையும் மாற்றி விடுவாள் என்று ஒரு பக்கம் தோன்ற மறுபக்கம் தனியாக இந்த ஊரை சாமளிக்க முடியுமா என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.
ஆனால் ஒரு நம்பிக்கை துளிர்த்து தான் இருந்தது.
"நிச்சயமா இவங்க எல்லாத்தையும் மாத்திருவாங்க" என்று அவளின் இதழ்கள் முணுமுணுக்க, இதே சமயம் அங்கே பக்ஷிராஜானுக்கும் விடயம் தெரிவிக்க பட்டது.
முன்னாள் தலைமை ஆசியரை விரட்டி அடித்ததே அவர் தான். அவர் நல்லவர், இதே போல் தான் பெண் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்.
அவரை மிரட்டி உருட்டி எப்படியோ ஊர் மாற்றி விட்டு சென்று விட்டார்.
"ஐயா அந்த டீச்சர் தான் யா எல்லாத்துக்கும் காரணம்" என்று ஆறுமுகம் சொல்ல, "அந்த பொண்ண நான் கூட சாதாரணமா நினைச்சிட்டேன். ஆனா ரொம்ப புத்திசாலியா இருக்கா" என்று கால் மேல் கால் போட்டு ஆட்டிக்கொண்டு அவர் பேச, "வரவங்களும் ரொம்ப பெரிய இடமாம்" என்று சொல்ல, "பக்ஷிராஜாவை விட பெரிய இடம் என்னவா இருக்க முடியும்?" என்று அவர் கேட்க, அதற்கு மேல் ஆறுமுகம் பதில் பேச வில்லை.
இதே சமயம் உள்ளே வந்தான் ஹம்சா.
"அப்பா" என்று அவன் சிரித்து கொண்டே வர, "வா டா மகனே! உனக்கு நல்ல பொண்ணா பார்க்குறேன்னு சொல்றேன் நீ கேட்குறீயா?" என்று கேட்க, "எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேணாம் ப்பா" என்றதும், "ஏன் ஏதாவது பொண்ண லவ் பண்றியா?" என்று கேட்க, "ஐயோ அதெல்லாம் இல்ல ப்பா.. இந்த பக்ஷிராஜாக்கு மருமகளா வர ஒரு தகுதி வேணவா?" என்று கேட்க, அவரோ புன்னகைத்து கொண்டார்.
"சார்" என்கிற ஒரு குரலில் அவர்கள் திரும்பி பார்க்க, அங்கே பேந்த பேந்த முழித்து கொண்டு நின்று இருந்தாள் குயில்.
"யாரு இந்த பொண்ணு?" என்று பக்ஷிராஜன் கேட்க, "என் கூட வேலை பாக்குற ஏட்டு அப்பா.. தங்க இடம் தேடிகிட்டு இருக்கா போல.. நம்ப பண்ணை வீடு சும்மா தானே இருக்கு.. அங்க தங்க வச்சிக்கலாம்னு..." என்று அவன் சொல்லவும், அதற்கு முன்னே குயில், "சார் அதெல்லாம் வேணாம் சார்.. நான் வேற இடம் பார்த்துட்டேன்" என்று கூறினாள்.
"நீ தான் தங்க இடம் வேணும்னு சொல்லிக்கிட்டு இருந்தியே" என்கிற ஹம்ஸாவை பார்த்து, "ஆமா சார் ஆனா இரண்டு நாளைக்கு முன்ன வந்தங்களே அந்த டீச்சர் அவங்கள இன்னைக்கு கடை தெருவுல பார்த்தேன். சும்மா தான் பேசுனேன். அவங்க கூடவே தங்கிக்க சொல்லிட்டாங்க. அவங்க தனியா தான் இருக்காங்களாம்" என்றதும், "இத முன்னவே..." என்று ஹம்சா ஆரம்பிக்கும் முதலே, "நீ அங்கேயே தங்கிக்க கண்ணு.. உனக்கு ஏதாவது வேணும்னா சொல்லு" என்று பக்ஷிராஜன் சொல்ல, அவளும் விட்டால் போதும் என்று அங்கிருந்து ஓடி சென்று விட்டாள்.
"என்ன அப்பா இப்படி சொல்றிங்க?" என்கிற ஹம்ஸாவை பார்த்து, "அந்த பொண்ணு உன்கூட தானே வேலை செய்து, நீ என்ன சொன்னாலும் செய்யும்ல? இப்போ நமக்கு அந்த மாதிரி ஒரு ஆள் தான் வேணும். அந்த டீச்சர் என்ன பண்ரான்னு நமக்கு தெரியணும். அந்த பொண்ணு கிட்ட நல்லா பேசி பழக ஆரம்பி" என்றவர் சொல்ல, எப்போதும் போல அவனும் தலையசைத்து கொண்டான்.
பரினீத்தியின் வீட்டிற்கு வந்தாள் குயில்.
"வாங்க குயில்" என்று இன்முகத்தோடு வரவேற்ற பரினீத்தியை பார்த்து, "ரொம்ப நன்றிங்க.. உங்கள கடை தெருவுல பார்த்ததும், உடனே எனக்கு உங்க கூட இருக்க இடம் தர ஒத்துக்குட்டிங்க... நான் கூட நீங்க என்கிட்ட பேசவே மாட்டிங்களோனு நினைச்சேன்" என்று குயில் சொல்ல, "இதுல என்ன இருக்கு குயில், ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி தானே இது! நானும் தனியா இருக்கேன். என்கூட ஒருத்தர் இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு" என்று சொன்னவளை பார்த்து, "எனக்கு இந்த வேலையும் பிடிக்கல..ஊரும் பிடிக்கல...அத விட அந்த அன்னப்பறவைய சுத்தமா பிடிக்கல" என்று அவள் சொல்ல, "அன்னப்பறவையா?" என்று பரினீத்தி கேட்கவும், "அதான் ஹம்சா...ஹம்ஸானா அன்னப்பறவை தானே? அவனுக்குலாம் குரங்கு கீரிப்பிள்ளைன்னு பேரு வச்சிருக்கணும்" என்று அவள் பொங்கவும், சிரித்து விட்டாள் பரினீத்தி.
"எனக்கு புரியுது. நாளைக்கு இந்த ஊர் பள்ளிக்கூடத்துக்கு புது தலைமை ஆசிரியர் வராங்க. எனக்கு என்னவோ எல்லாமே மாறிடும்னு தோணுது" என்று அவள் சொல்ல, "நானும் நாளைக்கு அவங்கள கூப்பிட வரேன்" என்று குயில் சொல்ல, தலையசைத்தாள் பரினீத்தி.
அதற்கு பிறகு இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு உறங்கிவிட்டார்கள்.
அவர்கள் இருவரும் அடுத்த நாள் விடிந்ததும் எழுந்து குளித்து விட்டு பேருந்து நிறுத்தத்தில் நிற்க, பேருந்தும் வந்து நின்றது.
அங்கே அவர்கள் யாருக்காக காத்து இருக்கிறார்களோ அவளும் அவளின் மகளுடன் பேருந்தில் இருந்து இறங்கினாள்.
சிட்டு, குயில் மற்றும் பரினீத்தியின் சந்திப்பு அடுத்த அத்தியாயத்தில்!
அத்தியாயம் 8
ஷ்ராவணியை ஒரு கையில் பிடித்து கொண்டு மற்றோரு கையில் அவள் கொண்டு வந்த டிராலியுடன் அவள் இறங்க கொஞ்சம் சிரமப்பட, "குழந்தையை என் கிட்ட கொடுங்க" என்று குயில் சொல்லவும், அவளை புருவம் சுருக்கி பார்த்தாள் சிட்டு.
"இந்த ஊரு கான்ஸ்டபிள் தான் மேம் நான்" என்கவும் அருகில் இருக்கும் பரினீத்தியை பார்க்க, "நான் தான் மேம் பரினீத்தி இந்த ஊருக்கு புதுசா வந்து இருக்க மாக்ஸ் டீச்சர்" என்றதும் தான் பையை அவர்களிடம் கொடுத்தாள். மொத்தமாக மூன்று டிராலிகள் இருந்தன.
பிள்ளையை மட்டும் அவளே வைத்து கொண்டாள்.
அவள் பேருந்தில் இருந்து இறங்கியதும், ஷ்ராவனியை பார்த்து, "ஹாய்" என்று குயில் சொல்ல, அவளும், "ஹாய் ஆண்டி" என்று அழகாக மழலை மொழியில் கூற, பரினீத்தி மற்றும் குயில் இருவரின் இதழ்களும் விரிந்தன.
"நீங்க மட்டும் தானா மேம்?" என்று பரினீத்தி கேட்க, "ம்ம்" என்பதுடன் சிட்டு முடிக்கவும், அதற்கு மேல் பரினீத்தியும் எதுவும் கேட்கவில்லை.
அவளின் முகபாவனையை வைத்தே ஏதோ சரி இல்லை என்று புரிய, பரினீத்தி அமைதியாகி விட்டாள்.
"சாரி மேம்... உங்கள கூப்பிட கார் பைக் எதுவும் கொண்டு வரல" என்று பரினீத்தி சொல்லவும், "தட்ஸ் பைன். எவளோ தூரம் இங்க இருந்து?" என்றவள் கேட்க, "பதினஞ்சுல இருந்து இருபது நிமிஷம் குள்ள போய்டலாம் மேம்" என்றாள்.
"இவ தான் நடக்க மாட்டா" என்று குழந்தையை பார்த்து அவள் சொல்ல, குயில் தான், "அதனால என்ன மேம்? நான் தூக்கிக்குறேன்" என்றதும் குழந்தை அவளை பார்த்து சிரித்தது.
சிட்டு இரண்டு ட்ரொலியை நகர்த்த, ஒரு பெட்டியை பரினீ நகர்த்தி கொண்டு வந்தாள்.
"நீங்க தான் லெட்டர் போட்டு இருந்திங்க ரைட்?" என்று நேரடியாகவே கேட்டு இருந்தாள் சிட்டு.
அவளும் ஆமோதிப்பாக தலையசைக்க, "இந்த ஊர்ல போலீஸ் எதுக்கு இருக்காங்க? இவர்களே கான்ஸ்டேபிள் தானே?" என்று குயிலை பார்த்து கூறவும், "அட ஏன் மேம் நீங்க வேற! எனக்கு இந்த வேலையே பிடிக்கல, அதுவும் அந்த அன்னப்பறவை இருக்கானே..." என்கவும், "அன்னப்பறவையா?" என்று சிட்டு புருவம் சுருக்கி அவளை பார்க்க, "ஆமா மேம்! அவன் தான் இந்த ஊர் இன்ஸ்பெக்டர், அந்த பக்ஷிராஜா பையன். சரியான பொறுக்கி! இவனுக்கு எல்லாம் எப்படி தான் இன்ஸ்பெக்டர் வேலை கிடைச்சி இருக்குமோ? எனக்கு இந்த வேலையே பிடிக்கல! என் அப்பா வேலைன்னு வந்துட்டேன். வீட்டு கஷ்டம் வேற" என்று அவள் புலம்பினாள்.
"சிட்டுவோ அவளை பார்த்து, உனக்கு தானா கிடைச்ச வரத்தை இப்படி வேஸ்ட் பண்ணாத! எத்தனை பெண்கள் இதே வேலைக்காக உழைக்குறாங்க தெரியுமா? நிறைய பேர் நான் போலீசா தான் ஆவேன்னு கங்கணம் கட்டிக்கிட்டு சுத்துறாங்க. நீ என்னடானா கிடைச்ச வேலை பிடிக்கலன்னு சொல்ற... எல்லாமே பிடிச்சி பண்ணு...இந்த ஊர்ல எவளோ நடக்குது நீயே பாக்குற தானே! அந்த அன்னப்பறவையா அவன் ஒரிஜினல் நேம் என்ன?" என்று அவள் கேட்க, "ஹம்சா" என்று பதில் பரினீத்தி கொடுத்து இருந்தாள்.
"வாட்டவேர் அவனையே நீ நினைச்சா ஆட்டி வைக்கலாம். அவனுக்கு தெரியாம அவன் பண்றத எல்லாம் வீடியோ எடுத்து மேல் இடத்துக்கு ரிப்போர்ட் பண்ணு... ஏன் இப்போ பரினீத்தி பண்ணல... எல்லாமே மாறும். நம்ப தான் மாற்றத்துக்கான முதல் படிய எடுத்து வைக்கணும். மாற்றம் நம்ப கிட்ட இருந்து தான் முதல்ல ஆரம்பிக்கணும். நீ உன் கடமையை செய்.. பலனை எதிர் பார்க்காம செய்... எல்லாமே நல்லதாவே நடக்கும்" என்று அவள் சொல்லுகையில் குயிலுக்கே ஒரு உத்வேகம் பிறந்தது.
அதே சமயம் அவர்கள் பக்ஷிராஜான் வீட்டையும் நெருங்கி இருந்தார்கள்.
"இது தான் மேம் அந்த பக்ஷிராஜனோட குமரகம்" என்று பரினீத்தி சொல்லவும், "குமரகம் பறவைகள் சரணாலயம்ல?" என்று சிட்டு கேட்க, "ம்கூம் பறவைகள் சரணாலயம் மாதிரியா தெரியுது? பறவைகளுக்கு பாடகட்டுற இடம் மேம் இது தான்" என்று சொல்லி இருந்தாள் குயில்.
அந்த வீட்டை ஒரு முறை பார்த்து விட்டு சென்று விட்டனர்.
"அந்த பொண்ணு எப்படி இருக்கா?" என்று சிட்டு கேட்க, "எந்த பொண்ணு மேம்?" என்ற பரினீத்தியை பார்த்து, "அந்த பொண்ணு ஏதோ சீரியஸா இருக்கானு நீங்க எக்ஸ்ட்ரா கடைசியா எழுதி இருந்திங்களே" என்று அவள் நினைவு படுத்த, "வள்ளியா? அந்த பொண்ணு உசுருக்கு போராடிகிட்டு இருக்கா மேம்! பைத்தியக்கார ஊரு மேம் இது, வெளிய கூட்டிட்டு போனா ஊர் பேர் கேட்டு போயிருமாம்" என்றவுடன், "ஓஹ் ஊர் பேர் போக கூடாது, ஆனா உசுரு போகலாம். நல்ல ஊரு.. இவங்க எல்லாம் இன்னும் இப்படியா இருக்காங்க? ஒருத்தருக்கு கூட அவங்க பெண் பிள்ளைகள் மேல பாசமே இல்லயா?" என்கவும், "கொஞ்சம் படிச்சவங்களா இருந்தா இந்த ஊரை விட்டு போயிருவாங்க மேம். நாங்களே இந்த ஊர் காரங்க தான். ஆனா நான் பிறந்த பிறகு தான் என் அப்பா இங்க இருந்து பக்கத்துக்கு ஊருக்கு போய்ட்டாரு" என்று ஷ்ராவணியிடம் விளையாடிக்கொண்டே வந்த குயில் கூறினாள்.
"பக்கத்து ஊர் நாட்டாமை பெரிய மனுஷன்லாம் எதுவும் கேட்க மாட்டாங்களா?" என்றவளை பார்த்து, "இந்த ஊரை சுத்தி இருக்குற மக்களையே இந்த பக்ஷிராஜா தான் மேம் பணக்காரரு... அவரு வச்சது தான் சட்டம். அந்த ஆளு என்ன சொன்னாலும் இந்த மக்கள் கேட்டு தான் ஆகணும். என்ன மத்த ஊருல இந்த மாதிரி பிரச்சனை எல்லாம் இருக்காது. ஆனா இந்த ஆகாயபுரி தான் இப்படியே இருக்கு" என்று குயில் பெருமூச்சு ஒன்றை விட்டு கொண்டு கூறி இருந்தாள்.
"இப்படி தான் இந்த ஊர் முன்னமே இருந்ததா?" என்று சிட்டு கேட்க, ?" "இல்ல மேம் அது..." என்று ஆரம்பிக்கும் முதலே, ஷ்ராவனி, "அம்மா பசிக்குது" என்று சொல்ல, "தோ வீடு வந்திருச்சு பாப்பா" என்று பரினீத்தி சொல்லும் போதே அவர்களின் குடியிருப்பு வந்து விட்டது.
பரினீத்திக்கு எதிர் வீடு தான் கொடுத்து இருந்தார்கள். என்ன பரினீத்தியின் வீட்டை விட கொஞ்சம் பெரிய வீடு அது!
"மேம் நீங்க உள்ள போய் வீட பாருங்க...நான் உங்களுக்கும் குழந்தைக்கும் சாப்பிட எடுத்துட்டு வரேன். அவ வேற பசிக்குதுனு சொன்னா" என்று அவள் சென்று விட்டாள்.
அவளும் சாவியை வாங்கிவிட்டு உள்ளே சென்றாள்.
வீடு அழகாக இருந்ததது. இயற்கை எழில் சூழ நன்றாகவே இருந்தது.
"இது தான் நம்ப புது வீடா அம்மா?" என்று குழந்தை கேட்க, அவளும் ஆமோதிப்பாக தலையசைத்தாள்.
"என்ன பாப்பா வீடு பெருசா இருக்கா?" என்று குயில் குழந்தையை பார்த்து கேட்கவும், அவளோ, "இத வீடு எங்க அப்பா வீடு எவளோ பெருசா இருக்கும் தெரியுமா?" என்று கண்களை உருட்டி கேட்டது.
"ஷ்ராவனி" என்று உடனே அவளை அதட்டினாள் சிட்டு.
குழந்தையோ உதடுகளை பிதுக்க, குயிலோ, "மேம் அவ சின்ன குழந்தை தானே! ஏதோ அப்பா வீடு நினைவு வரவும் சொல்லிட்டா" என்று சொல்ல, சிட்டுவோ ஆழ்ந்த மூச்சை எடுத்து கொண்டு, "யாரும் வேணாம் எந்த நினைவும் வர கூடாதுனு தான் நான் வந்துட்டேன். இன்னும் இவ அப்படி நினைக்கறது அவளுக்கும் நல்லது இல்ல, எனக்கும் நல்லது இல்ல" என்று அழுத்தமாக வந்தது அவளின் வார்த்தைகள்.
இதே சமயம், பால் மற்றும் காபி எடுத்து கொண்டு வந்து இருந்தாள் பரினீத்தி.
"மேம் ப்ரஷ் பண்ணிட்டு வரிங்களா?" என்று கேட்க, அவளும் குழந்தையையும் உடன் அழைத்து கொண்டு சென்றாள்.
அவர்கள் ஒரு பத்து நிமிடம் காத்துகொண்டு இருக்க, இருவரும் வந்தார்கள்.
"குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு அவளுக்கு வரைய ஒரு புத்தகத்தையும் கொடுக்க, அவளும் அமைதியாக அமர்ந்து வரைய துவங்கி இருந்தாள்.
"பரவால்ல மேம், குழந்தைகளுக்கு இப்போல்லாம் போன் தான் கொடுக்குறாங்க. நீங்க டிராயிங் புக் கொடுக்குறீங்க" என்று பரினீத்தி சொல்லவும், "நம்ப குழந்தைங்களால் எப்படி வளர்க்குறோம்ன்றது தான் முக்கியம்" என்று கூறி இருந்தாள்.
"சாரி மேம் உங்க பெர்சனல் லைப் பத்தி கேட்குறதுக்கு, உங்க ஹஸ்பண்ட்க்கும் உங்களுக்கும் ஏதாவது பிரச்சனையா?" என்று கேட்கவும், "இல்ல, என் புருஷனுக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்ல" என்ற சிட்டுவை பார்த்து, "இல்ல குழந்தை கிட்ட அப்பாவை பத்தி பேசவேணாம்னு சொன்னிங்களே அதான்" என்று சொல்லவும், "என் மாமியாருக்கும் எனக்கும் செட் ஆகல... என் புருஷனுக்கு நானா அவங்க அம்மாவானு குழப்பம். அவருக்கு அந்த கஷ்டம் கொடுக்க வேண்டாம்னு நானே வெளிய வந்துட்டேன்" என்றவள் குரலில் ஒரு உறுதி இருந்தது.
அதற்கு மேல் அவர்கள் எதுவும் பேசவில்லை.
இதே சமயம் ஒரு பள்ளி மாணவி பரினீத்தியின் வீட்டை பார்த்து கொண்டு தயங்கி நிற்பது தெரிந்தது.
மூவரும் வெளியே சென்றனர்.
"நீ வள்ளி வீட்டுக்கு பக்கத்து வீட்ல இருக்க பொண்ணு தானே?" என்று பரினீத்தி கேட்கவும், "டீச்சர் உங்கள தான் டீச்சர் தேடி வந்தேன். வள்ளிக்கு சுத்தமா உடம்பு முடியல... நான் தான் யாருக்கும் தெரியாம டாக்டர்க்கு போன் பண்ணேன். இப்போ டாக்டர் வந்து இருக்காரு ஆனா இவங்க அவரை டிரீட்மென்ட் பார்க்க விட மாற்றங்க.. நீங்க வாத்து பேசுறிங்களா! அவ புழைக்கை மாட்டா போல.." என்று கண்களில் கண்ணீருடன் அந்த சிறுபெண் பேச, சிட்டோ அடுத்து குயிலை பார்த்து, "குழந்தையை கொஞ்ச நேரம் பார்த்துக்கோ... பரினீத்தி போகலாம்" என்று அந்த பெண்ணுடன் இருவரும் கிளம்பினார்கள்.
"இது தான் இங்க நடக்குறது மேம்! ஒரு உயிருக்கு மதிப்பே இல்ல" என்று பரினீத்தியின் வார்த்தைகள் ஆதங்கமாக வர, சிட்டுவோ ஒரு கேலிப்புன்னகையுடன், "பெண்களோட உயிருக்குனு சொல்லுங்க... இதுவே ஒரு பையனா இருந்தா இந்நேரம் இவங்க இப்படி இருந்து இருக்க மாட்டாங்க" என்று சொல்லிக்கொண்டே செல்லுகையில் வள்ளியின் வீடும் வந்து விட்டது.
"என்ன டிரீட்மென்ட் பார்க்க விடுறிங்களா இல்லையா?" என்று அங்கே கத்தி கொண்டு இருந்தார் அந்த மருத்துவர்.
இப்போது தான் இந்த ஊருக்கு மாற்றல் வந்து இருந்தது.
அவனின் குரலை எல்லாம் அங்கிருந்து யாரும் மதிக்கவே இல்லை.
"யோவ் என்ன மனுஷங்க நீங்க! அந்த பொண்ணு உயிருக்கு போராடிகிட்டு இருக்க... நான் டிரீட்மென்ட் பார்க்கணும்" என்று அவன் கத்த, "நாங்க யாரும் உங்களுக்கு தகவல் சொல்லல" என்று வள்ளியின் தந்தை சொல்லவும், கண்ணீருடன் நின்று இருந்தார் வள்ளியின் தாய்.
சிட்டுவின் கண்கள் மருத்துவரில் படிய, "சாஹில் கோ எ ஹெட்" என்ற அவளின் குரலில் அதிர்ந்து அவளை திரும்பி பார்த்து இருந்தான் சாஹில்.
அத்தியாயம் 9
"அண்ணி" என்றவனின் வாய் முணுமுணுக்க, "சாஹில் உள்ள போய் அந்த பொண்ணுக்கு டிரீட்மென்ட் பாரு.. நான் பார்த்துக்கறேன்" என்று சொல்லவும், அவனும் தலையசைத்து முன்னேறினான்.
அதற்குள் வள்ளியின் தந்தை அவனை பிடித்து தடுக்க பார்க்க, "அவனை தடுக்க பார்த்தீங்கன்னா இங்க நடக்குற எல்லாத்தையும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம்னு லைவா போட்டு கிழி கிழினு கிழிச்சிருவேன். எப்படி வசதி?" என்று அவள் கேட்கவும், அங்கிருந்த அனைவருக்குள்ளும் சலசலப்பு.
"சாஹில் உள்ளே போ" என்று மீண்டும் அவனை பார்த்து அவள் சொல்ல, அவனும் தலையசைத்து உள்ளே சென்று விட்டான்.
அதற்கு மேல் அவர்கள் யாரும் அவனை தடுக்கவும் இல்லை.
"உங்களுக்குலாம் கொஞ்சமாச்சு மனசாட்சி இருக்கா? நீங்கலாம் மனுஷங்க தானே? ஒரு பொண்ணு உயிருக்கு போராடிகிட்டு இருக்கா, அரசாங்க டாக்டரை கூட நீங்க வேலை செய்ய விட மாட்டுறிங்க! அப்படி என்ன ஊரு மானம்? இல்ல ஒரு பொறுக்கி பதினாறு வயசு பொண்ணுன்னு கூட பார்க்கமா அவ கிட்ட இவளோ மோசமா நடந்து இருக்கான், அவனை ஊரே ஒன்னு கூடி அடிச்சி விரட்டாம, அந்த பொண்ணால மானம் போய்யிறோம் மரியாதை போய்யிறோம்னு பேசிகிட்டு இருக்கீங்க... இல்ல எனக்கு புரியல... ஒரு பொண்ண பலாத்காரம் பண்ணவன் உங்க முன்னாடி நடமாடிகிட்டு இருக்கான். ஆனா பலாத்காரம் பண்ண பட்ட பொண்ணு சாகணுமா? ச்சீ வெட்கமா இல்ல" என்று அவள் கத்தி பேசவும், அங்கிருந்த ஒருவரால் கூட பதில் பேச முடியவில்லை.
"ஏன் மா புருஷனா அப்படி இப்படி இருக்க தான் செய்வான்" என்று ஒருவன் பேசவும், சுற்றி இருந்தவர்களை பார்த்து, "யாரு யா அது? யாரு அது? புருஷனா என்ன? படுக்கவா? அதுக்கு எதுக்கு யா புருஷன்? எவன் கிட்ட போனாலும் இதே கருமம் தான பண்ண போறான். அதுக்கு எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு... வெறும் படுக்கைக்கு தான் கல்யாணம்னா வேசிங்க வீட்டுக்கு போங்க... அவங்க அத தொழிலா பன்றாங்க... ஏன் தாம்பத்யத்தை புனிதமா பாக்குற பெண்களை கல்யாணம் பண்ணி சீர் அழிக்குறிங்க? உங்களால தான் யா பெண் பிள்ளைகளை பெத்துக்கவே பயமா இருக்கு... உங்கள மாதிரி அரிப்பு புடிச்ச ஆளுங்களால தான் பதினாறு வயசு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்ல அறுபது வயசு பாட்டிக்கும் பாதுகாப்பு இல்ல. அந்த பத்து நிமிஷ சுகத்துக்காக வாழ்நாள் முழுக்க எங்க வாழ்க்கையை சிதைச்சுடுறீங்களே" என்று பேசவும், வாயை கூட திறக்க வில்லை.
அமைதி தான் எங்கும் நிலவியது.
இதே சமயம் வெளியே வந்த சாஹில், "அண்ணி அந்த பொண்ண இம்மீடியட்டா ஹோஸ்பிடல் ஷிப்ட் பண்ணனும்" என்று சொல்ல, "ஷிப்ட் பண்ணு சாஹில். அந்த பொண்ணு சாக கூடாது... டூ வாட்டவேர் யு வாண்ட். ஐ வாண்ட் ஹேர் அலைவ்" என்று அவள் சொல்ல, வள்ளியை உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்து இருந்தான் சாஹில்.
பரினீத்தியை பார்த்து, "சாஹில் பாத்துக்குவான். நம்ப போய் ப்ரெஷ் ஆகிட்டு வரலாம்" என்கவும் இருவரும் மீண்டும் அவளது வீட்டிற்கு வந்து இருந்தார்கள்.
வீட்டிற்கு வரவும், அங்கே குயிலுக்கு வரைய கத்து கொடுத்து கொண்டு இருந்தாள் ஷ்ராவனி.
"அம்மா நான் ஆண்டிக்கு வரைய கத்து கொடுத்துட்டு இருக்கேன்" என்கவும், "நீ ஆன்டி கூடவே கொஞ்ச நேரம் இரு... அம்மா வெளிய போய்ட்டு வரேன்" என்கவும், "இல்ல இல்ல நானும் வருவேன்" என்று அவள் அடம் பிடிக்க, அவளுக்கும் வேறு வழி இருக்கவில்லை.
"சரி இவளையும் கூட்டிகிட்டு போகலாம்" என்று சொல்லவும், "ஆனா மேம் குழந்தையை அங்க கூட்டிட்டு போறது.." என்று பரினீத்தி தயங்க, "அவளும் அவங்க சித்தப்பாவை பார்த்து ரொம்ப நாலு ஆச்சு.. பார்க்கட்டும்" என்று சொல்ல, "எந்த சித்தப்பா மா?" என்று ஆர்வமாக கேட்க, "சாஹில்" என்று சொன்னதும் தான் தாமதம், "ஹை ஜாலி சாஹி சித்தப்பாவா" என்று துள்ளி குதிக்க ஆர்மபித்து இருந்தாள்.
"அவளோ பிடிக்குமா?" என்று குயில் கேட்கவும், "ம்ம்... சாஹி சித்தப்பா செம்ம ஸ்வீட்" என்று சொல்ல, குழந்தையை தூக்கி கொண்டு குளிக்க வைக்க கிளம்பி இருந்தாள்.
ஒரு மணி நேரம் சென்று இருக்கும்.
நால்வரும் மருத்துவமனையை அடைந்தனர்.
வள்ளியின் அன்னை அழுது கொண்டே இருந்தார்.
சிட்டுவை பார்க்கவும் அவரையும் மீறி அவரின் கைகள் தாமாக அவளை வணங்கியது.
அவளோ ஒரு பார்வை மட்டும் வீசிவிட்டு அங்கிருந்து நகர்ந்து இருந்தாள்.
அங்கே இருந்த ஒரு தாதியை பார்க்கவும், "டாக்டர் சாஹில்?" என்று கேட்க, "அவரு அந்த ரேப் கேஸ் பார்த்துட்டு இருக்காரு மேடம். இடது பக்கம் போங்க" என்று வழியை சொல்லி அனுப்ப, அவர்களும் அந்த இடத்திற்கு சென்றனர்.
"ஏன் இந்த பொண்ணோட கேஸ் போலீஸ் கம்பளைண்ட் பண்ணல?" என்று சிட்டு கேட்க, பரினீத்தியோ, "என்னது பண்ணலயா? பண்ண போனா கேஸ் எடுத்தா தானே மேம்" என்று சொல்ல, குயிலோ, "இந்த பக்ஷியோட புள்ள அன்னப்பறவை தான் இன்ஸ்பெக்டர். அப்புறம் புதுசா வந்து இருக்க ஏசிபி ஒரு பைத்தியமா இருக்கான்" என்கவும், "யாரு புதுசா வந்து இருக்க ஏசிபி?" என்று சிட்டு கேட்க, "காகேஷ்னு அவரு பேரு சொன்னாங்க" என்று குயில் சொல்ல, அவள் தலையை மட்டும் அசைத்து கொண்டாள்.
அவர்கள் சிறிது நேரம் காத்து இருக்க, வெளியே வந்தான் சாஹில்.
அவனை பார்த்ததும் ஓடிச்சென்று, "சித்தப்பா" என்று அணைத்து கொண்டாள் ஷ்ராவனி.
"பிரின்சஸ்" என்று அவன் அவளை தூக்கிக்கொள்ள, அவளும் அவனின் கன்னத்தில் எச்சில் ஒழுக முத்தம் கொடுத்தாள்.
"எப்படி இருக்க பிரின்சஸ்? சித்தப்பாவை மறந்துட்ட தானே!" என்று சொல்லவும், "நோ, நீங்க தான் என்ன மறந்துட்டீங்க" என்று சண்டை கட்டி கொண்டு அவனை முறைக்க, அவனோ, "உன் அம்மாகிட்ட சண்டை போடு" என்று எடுத்து வேறு கொடுத்தான்.
"ம்கூம்" என்று சிட்டுவின் குரலில் சாஹிலும் ஷ்ராவுவும் அமைதியாகி விட, "சாஹில் எப்படி இருக்கா அந்த பொண்ணு?" என்று விடயத்திற்கு வந்து இருந்தாள் சிட்டு.
"அண்ணி, அந்த பொண்ணு இன்னும் மெடிகேஷன்ல தான் இருக்கா... அது மட்டும் இல்ல அவளை ரொம்ப பிருட்டல்ல ரேப் பண்ணிருக்காங்க... பார்க்கவே ரொம்ப பாவமா இருக்கு.. ஏன் கேஸ் கொடுக்கல?" என்று சாஹில் கேட்க, "கேஸ் எடுக்கலையாம்" என்று சிட்டு சொல்ல, "யாரு ஏசிபி?" என்று அவனும் அதே கேள்வியை கேட்க, "ஏசிபி காகேஷ்" என்று சொல்லி இருந்தாள்.
சாஹில் அவளை பார்த்து குரலை செரும்பி, "அப்போ கம்பளைண்ட் நீங்க கொடுக்க போறிங்களா? இல்ல நானும் கூட வரணுமா?" என்று அவன் இதழில் புன்னகையை அடக்கி கொண்டு கேட்க, அவனோ அவளை முறைத்து பார்த்து, "நானே கொடுக்குறேன்" என்று சொன்னவள், "பரி நம்ப காகேஷை பார்க்க போகலாம்" என்று சொல்ல, "நீ குழந்தையை பார்த்துக்கோ" என்று சாஹிலை பார்க்க, "கண்டிப்பா" என்று அவன் சம்மதித்தான்.
"குயில் நீ உன்னோட வேலைக்கு போ.. இந்த ஹம்சா என்ன பண்றனு நோட் பண்ணு.. என்னோட கேஸ் சரியா இருந்தா உங்கிட்ட இருந்து தான் எல்லாத்தையும் கறக்க ட்ரை பண்ணுவாங்க... நீ தான் பரினீத்தி கூட இருக்கன்னு அவங்களுக்கு தெரியும். எல்லாத்தையும் சொல்லு, எது வந்தாலும் பார்த்துக்கலாம். எல்லாத்தையும் தாண்டி ஹம்சாக்கு பயப்படாத... நீ அமைதியா இருக்கறதுனால தான் அவன் ஏறி மிதிக்கிறான். நீ எதிர்த்து நில்லு அவன் அடங்கி போவான்" என்று அவள் சொல்ல, "ஆமா அனுபவசாலி சொல்ராங்க கேட்டுக்கோங்க.. எங்க அண்ணாவை அப்படி தான் அடக்கி வச்சி இருக்காங்க" என்று சாஹில் சிரித்து கொண்டு சொல்ல, அவளோ அவனை முறைக்க, அவன் அதையெல்லாம் சட்டை செய்யவே இல்லை.
"உண்மை தானே! இன்னைக்கு வரைக்கும் அண்ணா உங்க மேல பைத்தியமா தான் இருக்கான். நாங்க கூட நினைச்சோம் கல்யாணம் ஆகி வருஷம் ஒரு புள்ள பெத்துக்குவீங்கன்னு... பரவால்ல ஒன்னோட இன்னும் நிக்குது" என்று சொல்ல, "பப்லிக்ள அடி வாங்காத" என்று சொல்லிவிட்டு அவளும் பரியும் அங்கிருந்து கிளம்பினார்கள்.
"மேம் அவன் சரியான பணப்பேய் மேம். அவன் கிட்ட போகிறதே வேஸ்ட்" என்று அவள் சொல்லவும், "அவன் இன்னைக்கு என்ன பண்ரான்னு பார்க்கலாம் வா" என்று அவளை கூட்டி கொண்டு சிட்டு செல்லவும், இன்றும் பேருந்து நடத்துனர், "வேண்டாம் மா எதுக்கு உங்க நேரத்தை எல்லாம் வீண் அடிக்குறிங்க? உங்களால ஒன்னும் பண்ண முடியாது" என்று சொல்லி இருந்தார்.
ஆனால் சிட்டு காதில் எதுவும் வாங்கவில்லை.
பரினீத்திக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது.
மீண்டும் அவனை பார்க்க வேண்டுமா என்று தான் தோன்றியது.
அவளுக்கு ஏனோ காகேஷை சுத்தமாக பிடிக்கவில்லை.
அந்த அலுவலகத்தை நெருங்கியும் விட்டார்கள்.
"வேண்டாம் மேம் நம்ப வேற எங்கையாச்சு போய் கம்பளைண்ட் பண்ணலாம்" என்று சொல்லியும் அவள் கேட்காமல் முன்னேறினாள்.
இதே சமயம் நவநீதனின் கண்களில் தென்பட்டது என்னவோ இவர்கள் இருவரும் தான்.
அவன் ஜீப்பில் அமர்ந்து பாட்டு கேட்டு கொண்டு இருந்தான்.
இவர்களை பார்த்ததும், 'ஐயோ இவங்களா? அந்த ஆளு இன்னைக்கு நல்ல மூட்ல கூட இல்லையே! காலைலயே என்ன பத்து செகண்ட் லேட்டா வந்துட்டேனு பத்து நிமிஷம் வச்சி செஞ்சான். இவங்கள பார்த்தா இன்னைக்கு சங்கு ஊதுவான் போல' என்று நினைத்து கொண்டே அவர்களிடம் சென்று, "எதுக்கு இங்க வந்திங்க? இன்னைக்கு சார் வேற ரொம்ப டென்க்ஷனா இருக்காரு" என்று நவநீதன் சொல்லவும், சிட்டு அவனை பார்த்து, "அவரு டென்க்ஷனா இருந்தாலும் சரி டேங்கர் மேல இருந்தாலும் சரி நாங்க பார்த்து தான் தீருவோம்" என்று சொல்லி அவள் உள்ளே செல்ல, அவளின் பின்னாலேயே ஓடினார்கள் பரியும் நவநீதனும்!
"மேடம் சொல்றேன்ல" என்று நவநீதன் சொல்ல சொல்ல கேட்காமல் அவள் செல்லவும், காகேஷோ, "ஏன் டா கத்துற?" என்று அவன் கேட்கும் போதே, அவனின் அறையின் கதவை திறந்து உள்ளே நுழைந்து இருந்தாள் சிட்டு.
அவர்களும் உள்ளே நுழைய, அவளோ அவன் அமர சொல்ல கூட நேரம் தராமல், அவளே அவனின் இருக்கைக்கு எதிரில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு கொண்டு, "என்ன மிஸ்டர் காகேஷ்" என்று கேட்க, அவனோ எழுந்து நின்றான்.
அவன் எழுந்து நிற்பதை பார்த்து நவநீதன் மற்றும் பரியின் கண்கள் தான் விரிந்தன.
சிட்டுவை பார்த்து கழுகு பயப்படும் காலமோ இது?
அத்தியாயம் 10
இங்கோ மருத்துவமனையில் சாஹிளுடன் விளையாடி கொண்டு இருந்தாள் ஷ்ராவனி.
அப்போது தான் உள்ளே நுழைந்தாள் ஒரு செவிலியர் பெண்மணி கனகா.
"டாக்டர் அந்த பொண்ணுக்கு என்ன கூடவே இருக்க சொல்லிருக்கீங்களாமே" என்று அவள் வந்து கேட்க, "ஆமா கனகா.. நீங்க கூடவே இருங்க... அந்த பொண்ண தனியா விடாதீங்க... அவளை சுத்தி ஆபத்து இருக்கு... உண்மையா சொல்லனும்னா அவளை வச்சி தான் இந்த ஊருக்கு எதிரா நம்ப கேஸ் போடவே முடியும்" என்று அவன் சொல்ல, "சரிங்க டாக்டர்" என்று சொல்லவும், "நான் பாப்பாவை கூட்டிட்டு எனக்கு கொடுத்து இருக்க வீட்டுக்கு போய்ட்டு வரேன். மதியம் ஆக போகுது. ஒரு மணி நேரத்துல வந்திடுறேன். அது வரைக்கும் கொஞ்சம் பார்த்துக்கோ" என்று சொல்லி சென்று விட்டான்.
அவன் காரில் தான் வந்து இருந்தான். ஆகையால் அவன் காரை செலுத்தும் சமயம், யாரோ ஒரு நபர் ராயல் என்பிலடில் வந்து அவனது காரில் இடித்து விட்டார்கள். குழந்தை வேறு பயந்து விட்டாள்.
அவனுக்கு சரியான கோவம்.
காரை நிறுத்தி விட்டு, வெளியே வந்து இருக்க, அந்த நபரை அவன் திட்டும் முதல், அவளது ஹெல்மெட்டை கழட்டி இருந்தாள் அந்த மங்கை.
அந்தரை அடி உயரத்தில் சிற்பம் போல் இருந்தவளாது முகத்தில் அத்தனை கர்வம்.
கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சி என்பது துளி கூட இல்லை.
"உனக்கு அறிவில்லையா மென்?" என்று அவனை பார்த்து கேட்கவும், அவனுக்கோ கோவம் தான். தவறாது அவளது மேல் இருக்க, அவனை வேறு திட்டுகிறாள்.
"அறிவு உங்களுக்கு தான் இல்ல மிஸ்! இவளோ வேகமா வந்ததும் இல்லமா பிரேக் கூட போட தெரியல.. திமிரா வேற பேசுறீங்க? கார் குள்ள குழந்தை வேற இருக்கு... கொஞ்சம் மிஸ் ஆகிருந்தா என்ன ஆகியிருக்கும்" என்று அவன் பற்களை கடித்து கொண்டு கேட்க, அவளோ இரக்கமே இல்லாமல், "என்ன ஆகியிருக்கும் இன்னைக்கு அந்த குழந்தைக்கு பால் குடிபாட்டி இருக்க மாட்டாங்க.. பால் ஊத்திருப்பாங்க அவளோ தானே" என்று அவள் சொல்லி முடிக்கும் முதல் அவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தான்.
என்ன வார்த்தை பேசி விட்டால், ஐந்து வயது குழந்தை அவளை மண்ணில் புதைப்பதை சர்வ சாதாரணமாக சொல்கிறாளே! மனசாட்சியே இல்லாத ராக்ஷஸி அவள்!
அழகு மட்டும் இருந்தால் ஒரு பெண் நல்லவளாக ஆகி விடுகிறாளா என்ன? வெள்ளையா இருந்தா பொய் சொல்லமாட்டாங்க என்று நினைக்கும் நபர்கள் இன்றும் இருக்கிறார்கள் அல்லவா!
"நீ எல்லாம் பொண்ணா டி? ஒரு குழந்தை உள்ள இருக்குனு சொல்றேன். அவ உயிரை கூட மதிக்க மாட்டேங்குற? ஒரு உயிரோட விலை என்னனு உனக்கு தெரியாது அதான் இப்படி" என்று சொன்னவன் அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டான்.
அவனுக்கு ஆத்திரம், ஒரு மருத்துவனாக அவனுக்கு தான் ஒரு உயிரின் மதிப்பு தெரியும் அல்லவா, அதுவும் இல்லாமல் அவனின் வீட்டின் குழந்தையையே என்ன வார்த்தை சொல்லிவிட்டால் என்கிற கோவம். கை நீட்டி விட்டான்.
இப்படி எல்லாம் நடந்து கொள்பவன் அல்ல சாஹில். மிகவும் அமைதியானவன் தான். ஆனால் இன்று அவனையே கோவப்பட வைத்து விட்டு இருந்தாள் அவள்.
காரில் ஏறியவுடன் குழந்தையை சமாதானம் செய்தவன், குழந்தையுடன் அவனது வீட்டிற்கு சென்று விட்டான்.
இங்கோ அவன் சென்ற திசையிலேயே பார்த்து கொண்டு இருந்தாள் அவள். அவளின் கணங்களில் இன்னும் சுர்ரென்ற வலி.
அவளை இன்று வரை யாரும் எதிர்த்து கூட பேசியது இல்லை. ஆனால் அவன் கை நீட்டி அடித்து இருக்கிறான். பழி வெறி அவள் கண்களில் இருந்தது. அவளது இரத்தம் அப்படி!
அவளது ராயல் என்பிலடில் வீட்டிற்கு சென்று சோபாவில் அமர்ந்தவளுக்கு தண்ணீர் எடுத்து வந்து ஒரு வேலைக்காரன் கொடுக்க, அதை தட்டி விட்டு இருந்தாள்.
அந்த வெள்ளைக்காரனின் முகத்தில் தண்ணீர் தெறித்து இருந்தது.
கண்ணாடி தூள்கள் அங்கே இங்கே சிதறி இருந்தது.
இதே சமயம் உள்ளே நுழைந்தார் பக்ஷி ராஜா.
"என்ன மா இது?" என்று கேட்டுக்கொண்டே அவர் வரவும், அவரின் செல்ல மகளின் கன்னங்களை பார்த்தவருக்கு ஒரு பதற்றம். அந்த கன்னங்களில் தான் இப்போது சாஹீலின் கை ரேகைகள் இருக்கின்றனவே!
"யாரு அது உன்ன அடிச்சது?" என்று கேட்க, "தெரியல ப்பா... ஆனா ஊருக்கு புதுசுன்னு நினைக்கிறன். என் மேலயே கைய வச்சிட்டான். இந்த ஹன்சிகா மேலையே கைய வச்சிட்டான். அவன் நிம்மதியா இருக்கவே கூடாது" என்றவள் கண்களில் அப்படி ஒரு வெறி.
அப்பாவிற்கு தப்பாமல் பிறந்தவள் அவள்.
"நீ ஒன்னும் கவலை படாத மா... அவன் யாருனு தெரியட்டும் அவனே வச்சி செஞ்சிடலாம். என் பொண்ணு மேலயே கைய வச்சிருக்கான்" என்று அவரும் கருவிக்கொண்டார்.
"போ போய் ரெஸ்ட் எடு" என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
இதே சமயம், இங்கே காகேஷ் எழுந்து நிற்க, அவனின் முன் கால் மேல் கால் போட்டு கொண்டு அமர்ந்து இருந்தாள் சிட்டு.
அவனுக்கு அதிர்ச்சி ஒரு புறம், மறுபுறம் அவன் மனதோ, 'ஆத்தி, இவை எப்படி இங்க வந்தா' என்று நினைக்கவும், "உட்காருங்க ஏசிபி சார்.. எதுக்கு நிக்குறீங்க?" என்று அவள் கேட்கவும், எச்சில் கூடி விழுங்கினான் அவன்.
அவனின் இந்த செயலில் அதிர்ச்சி ஆனது என்னவோ நவநீதனும் பரியும் தான்.
'என்ன இந்த காக்கா இப்படி பம்புறான்' என்று பரி நினைக்கவும், நவநீதனோ, 'இல்லையே இவரு இப்படி எல்லாம் பண்ற ஆளு கிடையாதே' என்று நினைத்து கொண்டான்.
"என்ன ஏசிபி சார் எப்படி இருக்கீங்க?" என்று கேட்க, அவனோ அவளை பார்த்து குரலை செருமி விட்டு, "நல்லா தான் இருக்கேன்" என்று சொல்ல, "நீங்க நல்லா இல்லனா தான் அதிசயம். உங்களுக்கு தான் அடுத்தவங்க எப்படி இருந்தாலும் கவலை இல்லையே" என்று சொல்ல அவனுக்கோ செருப்பால் அடித்த உணர்வு.
அவனின் கைகள் இருகின.
"என்ன ஏசிபி சார் குத்துதா? உங்களுக்கு தான் அடுத்தவங்க உணர்ச்சி எல்லாம் பத்தி கவலை இல்லையே எப்படி போனா என்னனு தான் யோசிக்கிற ஆளு நீங்க! உங்க கிட்ட வேற என்ன பேசிட முடியும்! இப்படி பட்ட மனநிலை இருக்குறவரு இப்படி சோஷியல் சர்வீஸ் பண்ற வேளைக்கு வந்து இருக்கவே கூடாது" என்று அவள் சொல்ல, அவன் அப்போதும் பதில் ஏதும் பேச வில்லை.
"பேசுங்க மிஸ்டர் காகேஷ், இப்படியே அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?" என்று கேட்க, அவனோ அவளை பார்த்து, "என்ன பேசுறது? எப்படி பேசுனாலும் அடிக்க தான் போற.. மொத்தமா பேசி முடி" என்று சொல்லி அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான்.
பரியோ, 'இவன் தான் ஒரு வேல மேம் புருஷனா? இவன் இப்படி மடமா இருக்கறதுனால தான் மேம் அவனை விட்டுட்டு வந்துட்டாங்க போல.. அவங்க எவளோ நியாயமா இருக்காங்க... இந்த காக்கா பையன் எப்படி இருக்கான்? ச்சை குரங்கு கைல பூமாலை' என்று நினைத்து கொண்டாள்.
இதே சமயம் நவநீதனோ, அவளின் காதின் அருகில் குனிந்து, "மேம் இவங்க எந்த ஊரு? இந்த கிழி கிழிக்குறாங்க... இந்த ஆளு வந்து இத்தனை நாள்ல முதல் முறை இப்படி அடங்கி போய் இன்னைக்கு தான் பார்க்குறேன்" என்று அவன் சொல்ல, "அவங்க சென்னைல இருந்து தான் வந்து இருக்காங்க" என்று சொல்லவும், "இவரும் சென்னைல தான் மேம் வேலை செஞ்சிகிட்டு இருந்தாரு" என்று அவன் சொல்லவும், பரி, முடிவே செய்து விட்டாள்.
'அப்போ கண்டிப்பா மேம் புருஷன் இவன் தான் போல' என்று நினைக்கவும், அவர்களோ பேச துவங்கினார்கள்.
"நீ பண்ண வேலைக்கு நான் தான் கடைசில அனுபவிக்க வேண்டியதா போச்சு" என்று அவள் பற்களை கடித்து கொண்டு சிட்டு சொல்லவும், "இங்க பாரு நான் ஒன்னும் தப்பு பண்ணல.. அது உனக்கு தெரியும்" என்று அவனும் அவளை பார்த்து சொல்ல, "ஆனா பண்ண இடம் தப்பு தானே" என்று சொல்லவும், "ஹே எல்லாம் தெரிஞ்சும் நீயே இப்படி பேசாத டி... உனக்கு என்ன நடந்ததுன்னு தெரியும். எனக்கு இன்னும் கோவம் தீரவே இல்ல" என்று அவன் சொல்ல, "எனக்கு கூட தான் உன்ன அடிக்கணும்னு தோணுது" என்றாள்.
அவனோ அவளை பார்த்து, "என்ன முதல் முறையா அடிக்கிற! நிறைய தடவ வாங்குனது தானே! வேணும்னா நாலு அடி அடி முதுகு வேற வலிக்குது" என்று சொல்லவும், "உன்ன எல்லாம் திருத்தவே முடியாது" என்று சொல்லி முகத்தை திருப்பி கொண்டாள்.
"இத சொல்ல தான் சென்னைல இருந்து இவளோ தூரம் இந்த பறவையை கூட்டிட்டு வந்தியா?" என்றவனை பார்த்து, "எனக்கு வர ஆத்திரத்துக்கு உன்ன இந்த பேப்பர் வெய்ட் வச்சே மண்டையா உடைக்கலாமான்னு இருக்கு... ஏன் டா கேஸ் எடுக்க மாட்டேன்னு சொன்ன?" என்று அவள் கேட்கவும், அவனோ பரியை பார்த்தான்.
"என்ன இந்த பறவை உன் கிட்ட போட்டு கொடுத்தாளா?" என்று அவனின் விழிகள் கூர்மையாக, "காகேஷ், இந்த கேஸை நீ எடுத்து தான் ஆகணும்" என்று அவள் சொல்லவும், ஆழ்ந்த மூச்சை எடுத்து, "பைத்தியம் மாதிரி பேசாத ... இதுல எவளோ பிரச்சனை இருக்கு தெரியுமா? கொஞ்சம் யோசி சிட்டு" என்றதும், "இந்த கேஸை நீ எடுத்து தான் ஆகணும்" என்று அவள் விடாப்பிடியாக நின்றாள்.
அவனுக்கோ அய்யோடா என்று இருந்தது.
"நீ ஏன் இவளோ இன்டெரெஸ்ட் காட்டுற?" என்று அவன் கேட்கவும், "அந்த ஆகாயபுரியோட புது அரசு பள்ளி தலைமை ஆசிரியர் நான் தான். அந்த பொண்ணு வள்ளி எங்க ஸ்கூல் ஸ்டுடென்ட். நாங்க கம்பளைண்ட் கொடுக்கிறோம். பைல் பண்ணுவியா மாட்டியா?" என்று கேட்க, "வாட் நீ இங்க போஸ்டிங் வாங்கிட்டு வந்துட்டியா? இது மட்டும் அவனுக்கு தெரிஞ்சா.." என்று அவன் சொல்லும் போதே, வெளியே கார் நிற்கும் சத்தம் கேட்டது.
அந்த ஒலியை வைத்தே அது யார் என்று ஓரளவு இருவருக்கும் தெரிந்து தான் இருந்தது.
அந்த அளவு அவனின் காரின் ஓசை அவர்கள் இருவருக்கும் பழகிய ஒன்று!
"வந்துட்டான்" என்று காகேஷ் சொல்ல, சிட்டுவின் கண்கள் விரிந்தன.
இதே சமயம் அந்த உயர் ரக காரில் இருந்து இறங்கினான், நம் கதையின் நாயகன் ஜடாயு! ஜடாயுரதன்.
அத்தியாயம் 11
"வந்தவனை எப்படி சமாளிக்க போறீங்க மிஸஸ் சிட்டு ஜடாயூரதன்?" என்று சொன்னவன் அவள் முறைத்த முறைப்பில், "சரி சரி டாக்டர். சிட்டு போதுமா?" என்று காகேஷ் சொல்லவும், உள்ளே அவனின் கூலர்ஸை கழட்டி கொண்டு வந்தான் ஜடாயு.
ஆறடி உயரம் இருப்பான். அடர்ந்த கேசம் காற்றில் ஆட, அவனின் சிவந்த மேனியை கண்டு சூரியனே சிவந்து விடுமோ என்னவோ!
கூறிய விழிகள் அவனுடையது! ஆணழகன் மட்டும் அல்ல பேரழகன் அவன், நிச்சயம் அனைத்து பெண்களும் அவனை ஒருமுறையாவது திரும்பி பார்த்து விட்டு தான் செல்வார்கள்.
பரினீத்தியின் கண்கள் கூட விரிந்தன. இவன் தான் சிட்டுவின் கணவன் என்று சொல்லவே வேண்டாம். ஷ்ராவனி தான் அப்படியே இவனை உரித்து வைத்து பிறந்து இருக்கிறாள் அல்லவா!
"இவளோ அழகா இருக்குறவரு எப்படி இந்த அம்மாவை கல்யாணம் பண்ணாரு?" என்று நவநீதன் வாயை விட்டே பரினீத்தியை கேட்க, "எனக்கு எப்படியா தெரியும்?" என்றவரிடம், " கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு எப்பவும் அவங்கள விட கலரா அழகா இருக்கணும்னு நினைப்பாங்க... ஆனா இந்த அம்மா இந்த ஐயாவை விட கலர் கம்மி" என்று சொல்லவும், "ஆனா அவங்க நல்லா படிச்சி இருக்காங்க... நல்ல வேலைல இருக்காங்க.. வேற என்ன வேணும்? எல்லா ஆம்பளைங்களும் கலர், அழகுன்னு பார்க்குறது இல்ல" என்று அழுத்தம் திருத்தமாக கூறினாள்.
நவநீதனுக்கும் அது சரியாக தான் பட்டது.
ஜாடாயுவின் கண்கள் காகேஷை எரித்து விடும் பார்வை பார்த்தது.
அவன் அதற்கெல்லாம் அசர கூடவில்லை.
சிட்டு கூட திரும்பவே இல்லை. அவனுக்கு பற்றி கொண்டு வந்தது.
"என்ன உன் பேஸ்டி கூட ஒரே ஜாலியா இருக்க போல!" என்று ஜடாயு அவனது வசீகர குரலில் கேட்க, காகேஷோ சிரிப்பை அடக்கி கொண்டு, "எங்க இருந்து அதுக்குள்ள தான் நீ வந்துட்டியே நந்தி மாதிரி" என்று கண் சிமிட்டினான்.
"எல்லாம் என் நேரம் டா.. உன் கிட்ட எல்லாம் பேச்சுவாங்கணும்னு... இதுக்கெல்லாம் காரணம் இவ தான்" என்று சிட்டுவை பார்க்க, அவளோ அவன் புறம் திரும்பாமல், "அவளோ சகிச்சிட்டு இருக்க வேணாம்னு தான் டிவோர்ஸ் கொடுத்து இருக்கேனு சொல்லு" என்று காகேஷை பார்க்க, அவனின் கண்கள் விரிந்தன.
காகேஷிர்கே தெரியாது அவள் ஜடாயுவிடம் விவாகரத்து வாங்க ஆவணங்களை அனுப்பியது. அவர்கள் பிரிந்து இருப்பது வரையில் மட்டும் தான் அவன் அறிந்தது. அதற்கே அவன் தான் காரணம் என்கிற உறுத்தல் வேறு அவனுக்கு இருக்கவே தான் சென்னையில் இருந்து மாற்றல் வாங்கி இங்கு வந்து விட்டான்.
"என்ன சொல்ற நீ? டிவோர்ஸா?" என்று அவன் அதிர்ச்சியாக கேட்க, "ஆமா மேடம் என்கிட்ட இருந்து டிவோர்ஸ் வாங்க போறாங்களாம். அதுவும் என் பொண்ண கூட்டிட்டு வந்துட்டா" என்று அவன் சிட்டுவை முறைக்க, அவள் அவன் புறம் திரும்பவே இல்லை.
"ஹே என்ன டி இதெல்லாம்? ஏதோ கோவத்துல கொஞ்ச நாள் தனியா இருப்பன்னு நினைச்சா நீ இப்படி பண்ணிக்கிட்டு இருக்க" என்று காகேஷ் அவளிடம் பேச, "இங்க பாரு முதல்ல நான் சொல்றத நீ செய்! வள்ளி கேஸை எடு" என்று அவள் காகேஷை பார்க்க, "அவன் அத எடுக்கறதுக்கு முன்னாடி அவங்க அக்கா தெய்வானை கேஸை எடுக்கட்டும்" என்று சொல்லி இருந்தான் ஜடாயு.
அவளுக்கோ பொறுமை போய் விட்டது, எழுந்தே விட்டாள். எழுந்தவள், ஜடாயுவின் கண்களை பார்த்து, "அந்த பொண்ணு உயிருக்கு போராடிகிட்டு இருக்கா, அவ கேஸ் தான் முக்கியம்" என்று சொல்லவும், "இந்த பொண்ணு செத்தே போய்ட்டா இந்த கேஸ் தான் முக்கியம்" என்று சொன்னதும், அதிர்ந்து விட்டார்கள் அங்கிருந்த அனைவரும்.
"வாட்?" என்று கத்தியே விட்டார்கள் காகேஷ், சிட்டு மற்றும் பரினீத்தி. நவநீதனின் கண்கள் வெளியே விழ வில்லை அவ்வளவு தான்.
"என்ன சொல்றிங்க?" என்று சிட்டு அதிர்ந்து கேட்க, "ஹானர் கில்லிங். தெய்வானை அப்புறம் அவளோட லவர் கார்த்திகேயன் இரண்டு பேரையும் கொன்னு ஆத்துல தூக்கி வீசி இருக்காங்க... அந்த கேஸை எடுத்தே தீரணும். இது தான் ரொம்ப முக்கியம். ஹானர் கில்லிங் தான் பண்ணி இருக்காங்க. அந்த பையன் கீழ் ஜாதி காரன்னு நினைச்சி பண்ணிட்டாங்க... ஆனா அந்த பையனோட அப்பா ஒரு தாசில்தார்ன்னு இவங்க யாருக்கும் தெரியாது. அதனால தான் ஆழம் தெரியாம கால விட்டுட்டாங்க... அவங்க அப்பாக்கு வேற செல்வாக்கு அதிகம் போல... பயங்கர ப்ரெஷர்... சோ இந்த கேஸை முதல்ல ரெஜிஸ்டர் பண்ணு... வள்ளியோட கேஸ் விதோட் எனி டவுட் போக்ஸோ... எல்லாரையும் புடிச்சி போட வேண்டியது தான்" என்று சொன்னவனின் குரலில் உணர்ச்சிகளே இல்லாதது போல் தான் இருந்தது.
"அந்த ஊரே அந்த ஆள் பக்ஷி கைல இருக்கு டா" என்று காகேஷ் சொல்ல, "சோ வாட்? ஜாடாயு டா நான்!" என்று சொல்லவும், "அப்போ சார் உங்க பொண்டாட்டிக்காக இங்க வரல அப்படி தானே!" என்று சொல்லவும், அவனோ அவனை பார்த்து, "அவ இதுக்காக தானே இங்க வந்து இருக்கா... அப்போ நான் தானே அத முடிச்சி வைக்கணும்" என்று சொல்லவும், "எனக்கு யாரோட உதவியும் தேவை இல்ல" என்று வந்தது அவளின் வார்த்தைகள்.
அவளின் அழுத்தத்தை பற்றி காகேஷ் மற்றும் ஜாடாயு இருவரும் நன்கு அறிவார்கள்.
அவள் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நிற்பவள் மட்டும் அல்ல, அதற்கு மூன்று கால் தான் என்று நிரூபித்து கூட காட்டும் திறமை உடையவள் அவள்.
ஜடாயுவோ ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டு, "இப்போ என்ன டி உனக்கு பிரச்சனை? என் அம்மா பேசுனத்துக்கு எதுக்கு என்கிட்ட மோகத்தை திருப்பிகிட்டு போற?" என்று கேட்டே விட்டான்.
அவளோ அவனை பார்த்து, "உங்களுக்கும் அப்படி ஒரு எண்ணம் இருந்தது தானே" என்றவள் சொல்ல, அவனுக்கோ பொறுமை போய் விட்டது.
"அறஞ்சாஞ்சேனா" என்று கையை ஓங்கியே விட்டான்.
"டேய் ஜடாயு" என்று காகேஷ் அவனை பிடிக்க, "கொன்னுடுவேன் பார்த்துக்கோ... என்ன பார்த்தா உனக்கு எப்படி தெரியுது? சந்தேக பேர்வாழி மாதிரியா? உன்ன என்னைக்காச்சு அப்படி நான் நினைச்சி இருக்கேனா டி? ச்சை" என்றவன் அழுந்த நெற்றியை நீவி கொண்டு, "என் தப்பு தான்... உன் பின்னாடி நாய் மாதிரி சுத்தி லவ் பண்ணி உன்ன கல்யாணம் பண்ணேன் பாரு அதான் உனக்கு என் அருமை புரியல..." என்றவன் நிறுத்தி காகேஷை பார்த்து, "ஏசிபி காகேஷ், மிஸ் தெய்வானை அப்புறம் மிஸ்டர் கார்த்திகேயன் இரண்டு பேரோட மர்டர் சமந்தமா கேஸ் எடுங்க... அதே மாதிரி மிஸ் வள்ளி அவங்களுக்கு நடனத்துக்கு போக்ஸோ போடுங்க... நோ மோர் டிலே... அம் ஐ கிளியர்?" என்று அவன் அதிகாரமாக கேட்கவும், காகேஷோ அவனின் தொப்பியை அணிந்து விட்டு, "எஸ் சார்... ப்ரோஸ்ட் பண்றேன்" என்று சொல்லி இருந்தான்.
அதற்கு பிறகு சிட்டுவை பார்த்து, "ஷ்ராவனி எங்க?" என்று கேட்க, "சாஹில் கிட்ட இருக்கா" என்று சொல்லவும், "நான் சாஹில் வீட்டுக்கு போய் பார்த்துக்கறேன்" என்று சொல்லி செல்ல, "உங்க பொண்டாட்டிய கூட்டிட்டு போங்க கலெக்டர் சார்" என்று காகேஷ் தொப்பியை கழட்டி விட்டு சொல்லவும், "நீயே கொண்டு போய் உன் பெஸ்டிய விடு.. நான் போய் என் பொண்ண பார்க்க போறேன்" என்று சொல்லிவிட்டு அவன் சென்று விட்டான்.
புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது.
நவநீதனோ, "என்ன மேம் வந்தாரு, கேஸ் போட சொன்னாரு, கிளம்பிட்டாரு" என்று பரினீத்தியின் செவிகளில் அவன் கேட்க, "எனக்கு மட்டும் என்னயா தெரியும்" என்று சொல்லி அவள் நகர்ந்து விட, "நீ பண்றது ரொம்ப தப்பு" என்று காகேஷ் சிட்டுவை பார்த்து சொல்லவும், "நீ முதல்ல உன் வேலைய பாரு" என்று சொல்லி இருந்தாள் அவள்.
"சரி வா நான் கொண்டு வந்து விடுறேன்" என்று அவன் சொல்லவும், "தேவை இல்ல.. நானே போய்க்குறேன்" என்று அவள் சொல்லவும், "ஏம்மா நீ வரலைனா உன் புருஷன் என்னை வச்சி செய்வான். வா" என்று அவளின் கையை பிடித்து இழுத்து செல்ல, பரினீத்தி அப்படியே நின்று இருப்பதை பார்த்து, "மேடம் நீங்களும் வரிங்களா? இல்ல பறந்து போயிருவீங்களா?" என்று கேட்க, அவளும் அவனின் பின் நடக்க துவங்கினாள்.
"சார் நீங்க வந்து தான் ஜீப் எடுக்கணும்" என்று நவநீதனை பார்த்து சொல்லவும், அவனும் வந்து வண்டியை எடுத்தான்.
யாரும் ஒன்றும் பேசவில்லை.
பரினீத்திக்கோ ஆச்சர்யம் தான்.
இத்தனை பெரிய பதவியில் இருக்கும் நபர்களுடன் பேசுகிறாள் ஆனால் ஒன்றுமே இப்போது வரை அவள் சொல்ல வில்லை.
"எதுக்கு டிவோர்ஸ் கொடுக்க நினைக்கிற?" என்று காகேஷ் மீண்டும் பேச்சை துவங்க, "உன் வேலைய பாக்கறியா? இது உனக்கு தேவை இல்லாத விஷயம்" என்று சொல்லி முகத்தை திருப்பி கொண்டாள்.
இங்கோ இப்படி இருக்க, சாஹீலின் வீட்டின் முன் வந்து வண்டியை நிறுத்தி இருந்தான் ஜடாயு.
அடுத்து அவன் சாஹீலின் வீட்டினுள் நுழைய, அங்கே சாஹில் ஷ்ராவானிக்கு உணவு ஊட்டி கொண்டு இருந்தான்.
ஜாடாயு உள்ளே நுழைந்ததும், "அப்பா" என்று குட்டி ஷ்ராவனி அவனின் கால்களை வந்து கட்டி கொள்ள, அவனோ அவனின் செல்வ மகளை கையில் அள்ளி எடுத்து தூக்கி இருந்தான்.
"அப்பா ஐ மிஸ் யு" என்று அவளின் மழலை மாறா குரலில் அவள் கூப்பிட, அவனும், "ஐ மிஸ்ட் யு டூ பேபி" என்று சொல்லவும், அவளும் கட்டி அணைத்து கொண்டாள்.
சாஹிளை ஒரு பார்வை அவன் பார்க்க, அவன் தலையசைத்து, "நான் ஹாஸ்பிடல் போறேன்" என்று கிளம்பி விட்டான்.
"அவனும் வந்துட்டான்ல?" என்று கேட்க, "வந்துட்டேன்னு தான் சொன்னான் அண்ணா" என்று சொல்லிவிட்டு சாஹில் சென்று விட்டான்.
"யாரு ப்பா?" என்று குழந்தை கேட்கவும், "உன்னோட இன்னொரு சித்தப்பா தான்" என்றதும், "வாவ் மயூ சித்தப்பாவா? அவரும் வந்து இருக்காரா?" என்று ஆசை போங்க குழந்தை கேட்க, அவனும் ஆமாம் என்று தலையசைத்தான்.
இதே சமயம் அவனின் முன் நின்று இருக்கும் மைனாவை வெளுத்து வாங்கி கொண்டு இருந்தான் மயூரன்.
அத்தியாயம் 12
இங்கு நடக்கும் கூத்து ஒரு புறம் இருக்க, இந்த கிராமத்தின் நிறுவக அலுவலராக பொறுப்பேற்று இன்று முதல் நாளாக அந்த அலுவகளத்தினுள் நுழைந்தான் மயூரன்.
ஆண் மயிலுக்கு தானே தொகை விரித்து ஆடும் அழகு உள்ளது. அதே போல் அவனும் அழகன் தான். ஜடாயுவை போல் கரடு முரடானவனும் அல்ல, சாஹிளை போல் மென்மையானவனும் அல்ல, இரண்டிற்கும் நடுவே ஏதோ ஒன்று அவன்!
திறமைசாலி அவன்! புத்திகூர்மை உடையவன் என்று கூட சொல்லலாம்! சிட்டுவே அவளின் நிர்வாகத்தில் ஏதாவது ஆலோசனை வேண்டும் என்றால் மயூரனை தான் நாடுவாள்.
சாணக்கியன் அவன்! அவனின் பார்வையிலேயே குறிப்பை உணர்த்தி விடுவான்.
உள்ளே அலுவலகத்தில் அவன் நுழைய ஒருவர் கூட இல்லை!
அவனுக்கு சுரென்ற கோவம். அவனுக்கு வேலையில் சிறப்பாக இல்லையென்றாலும் பரவாயில்லை ஆனால் சரியாக இருக்க வேண்டும். அதுவும் நேரம் தவறுவது என்பது அவனின் அகராதியிலேயே பிடிக்காத ஒன்று!
இன்று இப்படி ஒரு நிலையில் அவன் அலுவலகத்தை பார்த்த பின்பு அங்கிருந்த பியூனின் எண்ணுக்கு தான் அழைத்து இருந்தான்.
"இன்னும் அரை மணி நேரத்துல எல்லாரும் ஆபீஸ் வரணும். இல்லனா தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்தி விட்டுடுவேன்" என்று சொல்லவும், அவனோ அந்த அலுவலகத்தில் இருக்கும் அனைவர்க்கும் அழைப்பு விடுத்து விடயத்தை சொல்லவும், அரக்க பறக்க அனைவரும் வந்து இருந்தார்கள்.
பியூனை பார்த்து, "இன்னைக்கு பதினோரு மணிக்கு மீட்டிங் இருக்குனு சொல்லு... எல்லாரும் கண்டிப்பா வரணும்" என்று சொல்லிவிட்டு அவனின் அலுவலக அறைக்குள் சென்று விட்டான்.
இதே சமயம் உள்ளே வந்தாள் மைனா. அவள் தான் அவனின் காரியதரிசியாக இருக்க வேண்டும்.
வந்ததும் பியூனை பார்த்து, "அண்ணா சார் என்ன சொன்னார்?" என்று கேட்க, "ஐயோ அவரு செம்ம ஸ்ட்ரிக்ட் மா... இன்னைக்கு எல்லாருக்கும் பொங்கல் தான் நினைக்கிறன். பதினோரு மணிக்கு மீட்டிங்னு சொல்லிருக்காரு" என்றதும், அவளுக்கு உள்ளுக்குள் நீர் வற்றி விட்டது.
அவனின் அறைக்குள் சென்றாக வேண்டும். அவளின் இஷ்ட தெய்வங்கள் அனைத்தையும் வேண்டிக்கொண்டு, அவனின் அலுவலக அறையை தட்டி இருந்தாள்.
"கம் இன்" என்று குரல் எழுப்பவும், அவளும் உள்ளே சென்று அவனின் முன் நின்றாள்.
மயூரன் அவனின் கோப்பையை பார்த்து கொண்டே அமர்ந்து இருந்தான். அவனுக்கு இங்கு மாற்றல் கிடைத்து அவன் அலுவலகம் வரும் முதல் நாள் இது. கிராம நிறுவக அலுவலராக அவன் பணியாற்ற துவங்கி நான்கு வருடங்கள் ஆகி இருந்தன.
அவனின் முன் வந்து நின்ற அவனின் காரியதரிசி மைனாவை பார்த்தவன், "டைம் இப்போ என்ன?" என்று கேட்கவும், அவளோ திருதிருவென விழித்து கொண்டு நின்றாள்.
இதற்கு முன் இருந்த கிராம நிறுவக அலுவலர்கள் எல்லாம் பதினோரு மணிக்கு தான் வருவார்கள். அதுவும் இரண்டு மணிக்கே சென்று விடுவார்கள்.
அதே நினைவில் அவள் பத்தரை மணிக்கு வந்து இருக்க, அவனோ ஒன்பது மணிக்கே இங்கு வந்து அமர்ந்து இருந்தான்.
"உங்கிட்ட கேட்குறேன் மணி என்ன? ஆபீஸ் எத்தனை மணிக்கு வரணும்? மேடம் ஆடி அசஞ்சி சீவி சிங்காரிச்சிகிட்டு பத்தரை மணிக்கு வரீங்க? நீங்க எல்லாம் எதுக்கு வேலைக்கு வரீங்க? உங்கள விட நல்ல பஷனெட்டா வர்க் பண்ற பெண்கள் இருக்காங்க தெரியுமா? அவங்களுக்குலாம் இந்த வாய்ப்பு கிடைக்கமாட்டேங்குது, கிடைச்சாலும் சில நேரம் குடும்பம் அது இதுன்னு முடக்கிடுறாங்க... ஆனா இப்படி நல்ல வேலை கிடைச்சும் அத சரியா நீங்க பயன் படுத்திக்கிறது இல்ல.. அப்புறம் பெண்களுக்கு வாய்ப்பு தர்றது இல்லனு புலம்பல் வேற! உங்களால முடியலைன்னா ரிசைன் பண்ணிட்டு போங்க... போங்க போய் அந்த ஆகாயபுரி லேண்ட் கேஸ் பைலை எடுத்துட்டு வாங்க" என்று அவன் சொல்லவும், அவளும் கண்ணீர் ததும்ப வெளியே சென்று விட்டாள்.
அவளுக்கு கோவமாக வந்தது. அவள் ஒன்றும் இப்படி வேலையில் அழைக்கழிப்பவள் எல்லாம் இல்லை. பொறுப்பானவள் தான். முன்பு இருந்த அலுவலர் தான் இவளை பதினோரு மணிக்கு வந்தால் போதும் என்று சொல்லி இருந்தார். அதே நினைப்பில் இருந்து விட்டாள்.
பாவம் அதற்கு திட்டு வாங்கவும், அவளுக்கு அழுகை தாள வில்லை. அவள் மிகவும் மிருதுவானவள் தான்.
கண்களை துடைத்து கொண்டு அவன் சொன்ன கோப்பையை எடுக்க போகி இருந்தாள்.
எடுத்து வந்து அவனின் முன் வைக்கவும், அவனும் பார்த்து, "இந்த கேஸ் என்ன நிலமைல இருக்கு?" என்று கேட்க, அவளோ, "இத ஆரம்பிக்கவே இல்ல சார்" என்று சொல்லவும், "வாட்? ஏன் ஆரம்பிக்கல? அரசு பள்ளிக்கு சொந்தமான நிலத்தை அபகர்ச்சிக்கிட்டாங்கனு தானே கேஸ்? எப்படி ஆக்ஷன் எடுக்காம இருக்காங்க?" என்றதும், "சார் அத ஆக்ரமிப்பு பனிக்கறது மிஸ்டர் பக்ஷி ராஜா சிட்டிங் எம்எல்ஏ... இந்த ஊர்ல அவரு வச்சது தான் சட்டம் சார்" என்று அவள் சொல்லவும், "நீ அரசாங்கத்துக்கு வேலை பாக்கறியா? இல்ல அவருக்கு வேலை பாக்கறியா?" என்று கைகளை கட்டி கொண்டு அவன் கேட்கவும், அவளுக்கு தான் கண்கள் விரிந்தன.
'இவரு என்ன இப்படி பேசுறாரு' என்று மனதில் நினைக்கவும், "என்ன கெட்ட வார்த்தைல திட்டுறியா?" என்று அவன் கேட்க, "ஐயோ இல்ல சார் எனக்கு கெட்ட வார்த்தையே தெரியாது" என்று அவள் தலையசைக்க, "சரி தான்.. மீட்டிங் வா" என்றவன் அவர்களின் அலுவலகத்தில் வேலை செய்பவர்களுடன் பேச நுழைந்தான்.
"ஹலோ! இது வரைக்கும் எப்படி இருந்தீங்கன்னு எனக்கு தெரியாது, எனக்கு தெரிஞ்சிக்கவும் வேண்டாம். இதோட ஒன்பது மணிக்கு ஆபீஸ்ல இருக்கனும். இல்லனா உங்களோட ட்ரான்ஸ்பெர் ஆர்டர் உங்க கிட்ட வரும். இல்ல டெப்ரோமோஷனும் ஆகலாம். உங்கள வேலைய விட்டு தூக்குற அளவுக்கு பவர் என்கிட்ட இருக்கு. ஒழுங்கா வேலைய செஞ்சிட்டு போங்க. அது தான் உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது" என்று சொன்னவன் அங்கிருந்து சென்று விட்டான்.
இதே சமயம், சாஹில் அழைத்து இருந்தான்.
"சொல்லு டா" என்று மயூரன் சொல்ல, "அண்ணி இங்க தான் இருக்காங்க.. நம்ப ப்ரின்சஸ் என்கூட தான் இருக்கா" என்றதும் அவனின் கண்களில் அப்படி ஒரு மகிழ்ச்சி.
"சரி லஞ்ச்க்கு வரேன். அண்ணாவும் இங்க தான் ட்ரான்ஸ்பெர் வாங்கிட்டு வந்து இருக்கான்." என்று சொல்லவும், அவனோ, "நான் ஹாஸ்பிடல் போகணும் டா.. சீக்கிரம் வா" என்று சொல்ல, அவனும், "சரி டா. நான் வந்து இருக்கறத பேபி கிட்ட சொல்லாத, சர்ப்ரைஸா இருக்கட்டும்" என்று சொல்ல, "அப்படியே ஆகட்டும் மயூரன்" என்று சொல்லி இருந்தான் சாஹில்.
அவனும் புன்னகையுடன் கைப்பேசியை வைக்க, 'இவருக்கு சிரிக்க கூட தெரியுமா?' என்று நினைத்து இருந்தாள் மைனா.
"எனக்கு பிடிச்சவங்க கூட மட்டும் சிரிப்பேன்" என்று அவளின் மனதை படித்து அப்படியே பதில் அளிக்கவும், "சார் எப்படி சார் நான் மனசுல நினைச்சதுக்கு அப்படியே பதில் சொல்றிங்க?" என்று கேட்க, "அதான் உன் மொகரையே காட்டி கொடுக்காதே... போ போய் வேலைய பாரு" என்று சொல்லி இருந்தான்.
அவளும் உதட்டை சுழித்து கொண்டு சென்று விட்டாள்.
இங்கு இப்படி நடந்து கொண்டு இருக்க, ஹம்ஸாவோ, குயிலை ஒரு வழி செய்து கொண்டு இருந்தான். ஆனால் குயில் ஒன்றும் இப்போது பழைய பயந்த சுபாவம் உடையவள் இல்லையே, பரினீத்தியுடன் இருப்பது ஒரு வித தெம்பு என்றால், சிட்டுவின் வருகையை அவளை தேற்றி இருந்தது. அதுவும் சிட்டு அவளுக்கு சொல்லியே சில அறிவுரைகள் எல்லாம் அவளுக்கு ஏதோ புது வித பலத்தை கொடுத்து இருந்தது.
"என்ன டி பிளான் போடுறீங்க? ஒழுங்கா சொல்லு... பொம்பளைங்க எங்களை அழிக்க திட்டம் போடுறிங்களா?" என்று அவன் அதட்டி கேட்க, "சொல்ல முடியாது. உங்களால முடிஞ்சது பண்ணிக்கோங்க" என்று அழுத்தமாக வந்தது குயிலின் வார்த்தைகள்.
"என்ன அந்த பரினீத்தி சொல்லி கொடுத்து அனுப்பினாலா?" என்று கேட்க, அவளோ அழுத்தமாக இல்லை என்று தலையசைத்து, "சிட்டு மேம் சொல்லி கொடுத்து அனுப்புனாங்க" என்று சொல்லவும், "அது யாரு டி சிட்டு?" என்று அவன் எகத்தாளமாக கேட்க, "உன் அப்பனுக்கே எமன் டா" என்று அவனின் முகத்தை பார்த்து பயமே இல்லமால் கூறி இருந்தாள்.
அப்படி ஒரு மாற்றத்தை ஹம்சா எதிர் பார்க்கவே இல்லை.
இரண்டு நாட்களுக்கு முன் அவன் கத்திய கத்தில் கையில் வைத்து இருந்த டீ கிளாசை கீழே தவறு விட்டு இருந்தவளா இன்று இப்படி பேசுகிறாள் என்கிற எண்ணம் தான்.
"என்ன டி ஓவரா பேசுற" என்று அவன் மேலும் அவளை நெருங்க, அவளோ, "கிட்ட வந்திங்க என்கிட்ட தப்பா நடந்துக்க பாக்குறீங்கன்னு நானே கேஸ் போற்றுவேன்" என்று மிரட்ட, அவனின் கண்கள் விரிந்தன.
ஓரடி பின்னால் சென்று தான் விட்டான்.
அவளின் இந்த அதிரடி பேச்சை அவன் முற்றிலுமாக எதிர் பார்க்கவில்லை.
சட்டென சுதாரித்து கொண்டான்.
"என்ன டி கை வைக்க மாட்டேன்னு நினைக்கிறியா?" என்று அவன் கேட்டுவிட்டு இப்போது நெருங்கும் முன், அவளே அவளின் சட்டையின் பட்டன்களை கழட்ட துவங்கினாள்.
அதிர்ந்து விட்டான். இரண்டு பட்டன்களை அவள் கழட்டி இருக்க, அவளின் கையை பிடித்தவன், "ஹே, என்ன பைத்தியமா உனக்கு? நல்ல வேலை யாரும் சுத்தி இல்ல....என்ன ஆகுறது?" என்று பற்களை கடித்து கொண்டு அவன் பேசவும், அவனின் கையை தட்டி விட்டவள், "நீங்க தானே சொன்னிங்க, மேல கை வைப்பேன்னு... உங்கள மாதிரி ஆம்பளைகங்களுக்கு எல்லாம் பொண்ணுங்க உடம்பு தான் ஆயுதம். உங்க பலத்த காதனும்னா பெண்களை பலாத்காரம் பண்றது, பொண்ணுங்க உங்க காதலை ஏத்துக்கலைனா ஆசிட் அடிக்குறது... ஏன் இப்படி எங்களை உயிருள்ள ஒரு மனுஷியா பார்க்காம உங்க கோவத்துக்கும் தாபத்துக்கும் தீர்த்துக்குற பொருளா பாக்குறீங்க? என்ன மனுஷன் நீங்க எல்லாம்? அடுத்தவங்க பொண்ணு மேல கைய வைப்பேன் காலு வைப்பேன்னு சொல்றிங்களே, உங்க அம்மா தங்கச்சி மேலயும் வைப்பிங்களா?" என்று கேட்க, "ஹே" என்று கைகளை ஓங்கியே விட்டான்.
அவன் கையை ஓங்கிய அதே சமயம், அவனின் அலுவலக அறையை எட்டி உதைத்து உள்ளே நுழைந்தான் காகேஷ். கழுகும் அன்னமும் சந்திக்கும் தருணம் யாரின் கைகள் ஓங்குமோ?
அத்தியாயம் 13
காகேஷை சற்றும் எதிர் பார்க்க வில்லை ஹம்சா.
அவனின் கண்களோ ஹம்சாவையும் குயிலையும் தான் மாறி மாறி பார்த்தன. அவளின் சட்டையின் மேல் இரு பட்டன்கள் வேறு திறந்து இருக்க, காகேஷின் கண்களோ ஹம்சாய் எரித்து விடும் பார்வை பார்த்தது.
"என்ன நடக்குது இங்க?" என்று காகேஷ் கர்ஜிக்க, குயிலோ சட்டென அவளின் மேல் இரு பட்டங்களையும் போட்டு கொண்டாள். ஹம்ஸாவோ அழுந்த கண்களை மூடி திறந்து, அருகில் இருந்த அவனின் தொப்பியை எடுத்து அணிந்து கொண்டு, காகேஷிற்கு சல்யூட் வைக்க, குயிலும் சல்யூட் வைத்தாள்.
காகேஷோ ஹம்ஸாவை பார்த்து, "கேஸ் எழுது" என்று சொன்னதும், அவனின் கண்கள் விரிந்தன.
"என்ன கேஸ்?" என்று அவன் புருவம் சுருக்கி கேட்கவும், "இரண்டு கேஸ் எழுதணும். ஒன்னு தெய்வானை மர்டர் ஹானர் கில்லிங் கேஸ், இன்னொன்னு..." என்று நிறுத்தியவன், "வள்ளியோட போக்ஸோ கேஸ்" என்று சொல்ல, ஹம்ஸாவின் கண்கள் விரிந்தன.
"ஹலோ சார், அந்த கேஸ் போட முடியாது" என்று ஹம்சா சொல்ல, "அப்போ உன் வேலைய ராஜினாமா பண்ணிட்டு போ டா" என்று அவன் சொல்ல, "என்ன டா போட்டு பேசுறீங்க? நீங்களும் என் அப்பா கிட்ட காசு வாங்கி இருக்கீங்க" என்று சொல்லவும், "அதுக்கு என்ன ப்ரூப் இருக்கு?" என்று கேட்க, ஹம்ஸாவோ, அவனின் கைப்பேசியில் அவன் செய்த பண பரிமாற்றத்தை எடுத்து காட்டினான்.
"சரி ஆனா இது என்னோட அக்கௌன்ட் இல்லையே மிஸ்டர் ஹம்சமித்ரன் பக்ஷிராஜன்" என்று இருபுருவங்களையும் தூக்கி அவன் நக்கல் புன்னகையுடன் சொல்ல, ஹம்சாவிற்கு தலையில் இடியே விழுந்த உணர்வு.
அவன் அனுப்பி இருந்த அதே எண்ணிற்கு தான் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது. அவனின் உறவினர் என்று நினைத்து இருந்தான்.
"உங்க ரிலேட்டிவ் யாரவது இருந்தாலும் கண்டு பிடிச்சிரலாம்" என்று ஹம்சா சொல்ல, காகேஷோ, "அது ஒரு ஆனதை இல்லத்தோட பேங்க் அக்கௌன்ட் மிஸ்டர் ஹம்சா" என்றவனின் இதழ்களில் நக்கல் புன்னகை.
குயிலின் கண்களும் விரிந்தன. பரினீத்தி முன்னவே காகேஷ் சொன்னதை எல்லாம் சொல்லி தானே இருந்தாள்.
'நல்லவரு தான் போல' என்று மனதில் நினைத்து கொண்டாள்.
"என்ன பார்த்தா எப்படி தெரியுது? இந்த ஊருக்கு வந்த முதல் நாளே உன் அப்பனோட மொத்த டேட்டாவும் எடுத்துட்டேன் டா... இந்த போலீஸ் வேலைக்கு என்ன உன் அப்பா மாறி ஆளுக்கு சோம்பு தூக்க வந்தேன்னு நினைச்சியா? உன் அப்பனையே வேரோட அறுக்க வந்து இருக்கேன் டா.. உன் அப்பா பக்ஷி ராஜாவாவே இருக்கட்டும். நீங்க ஆகையாபுரிக்கு ராஜாவாவே இருங்க.. உங்க வீடு தானே குமரகம். ஆகையாபுரியவே குமரகமா மாத்தி, உன் அப்பா பக்ஷி ராஜனை மோக்ஷத்துக்கு அனுப்பல என் பேரு காகேஷ் இல்ல... அதே மாதிரி அந்த ஆளு இன்னைக்கு வரைக்கும் அவனுக்கு அடி பணிஞ்சி போற ஆளுங்கள தான் பார்த்து இருக்கான். அவனையே கொத்தி திங்குற கழுகுங்க டா நாங்க... சிட்டு குருவி கிட்ட செருப்படி வாங்குவான். பரினீத்தி கிட்ட சொன்னானாமே நீ ஒரு சின்ன பறவை என்ன புடுங்க முடியும்னு! போய் சொல்லு, அந்த ஆளு பக்ஷி ராஜா தான், ஆனா அவனை அழிக்க, ஒரு பறவை கூட்டமே வருதுன்னு சொல்லு... காகேஷ், ஜடாயு, சிட்டு, பரினீத்தி, சாஹில், மயூரன்னு ஒரு பாட்டாளமே வருதுன்னு சொல்லு... அந்த பொண்ணு குயிலு கிட்ட என்ன டா உன் வீரத்தை காட்டுற? என் கிட்ட காட்டு" என்று அவன் முன்னால் வந்து நிற்க, ஹம்சா அவனை தான் பார்த்து கொண்டு இருந்தான்.
"என்ன மூணு மாசம் புல்லு புடுங்கிட்டு இருக்கேனு நினைச்சியா? இந்த ஊர என்னால மட்டும் எல்லாம் திருத்த முடியாது அதே மாதிரி என்னால மட்டும் மாத்தவும் முடியாது. அதனால தான் நானே சிட்டுவை இங்க மாத்தி வர வச்சேன். நான் தான் கைலாசம் கிட்ட பேசி அவளை இங்க வரவச்சதே! அவ வந்தா தானா ஜடாயு, மயூரன் வருவாங்கனு எனக்கு தெரியும். நான் நினைச்சது தான் நடந்தது. உன்னால முடிஞ்சது பார்த்துக்கோ. உன் அப்பன் கிட்ட சொல்லு, அவனோட கடைசி நாட்களை எண்ணிக்க சொல்லு" என்று அவன் சொல்லிவிட்டு, குயிலை பார்த்து, “அடுத்த தடவ உங்கிட்ட ஏதாவது பண்ணா எனக்கு கால் பண்ணு மா, அன்னப்பறவைக்கு பிண்டம் கொடுத்திரலாம்" என்று சொல்லவும், குயிலோ, "கண்டிப்பா சார்" என்று சிரித்து கொண்டு சொல்லி இருந்தாள்.
ஹம்சா அவளை பார்த்து முறைக்க, அவளோ அவனை சட்டை செய்ய வில்லை.
"கேஸ் போடுறியா இல்லையா?" என்று அவனை கேட்கவும், அவனே எடுத்து அந்த வழக்கை பதிவு செய்தான்.
கைகள் நடுங்கின, அவனின் தந்தைக்கு எதிராக அவனே செய்யும் காரியம், கடுப்பாக இருந்தது, அடக்கி கொண்டான்.
எழுதி அவன் முடிக்க, "குட். உன் அப்பாக்கு நீயே மரண சாசனம் எழுத பிள்ளையார் சுழி போட்டு இருக்க பாரு அங்க நிக்குற... காகேஷ் ஹாப்பி அண்ணாச்சி" என்று சொன்னவன், "இதுக்கு ரிலேட்டடா எல்லா இன்வெஸ்டிகேஷனும் நீ தான் ஆரம்பிக்க போற... புரிஞ்சிதா?" என்று அவன் கேட்க, ஹம்ஸாவும், ஆமாம் என்று வேண்டா வெறுப்பாக தலையசைத்தான்.
காகேஷ் குயிலை பார்த்து, "இந்த கேஸ்ல அவனுக்கு அசிஸ்டன்ட்டா இரு மா.. அது மட்டும் இல்ல இந்த அன்னப்பறவை ஏதாவது பண்ணா சொல்லு, அன்னதோட அலகை பிடிங்கிறலாம்" என்று சொல்லிவிட்டு அவன் நகர்ந்து வெளியே சென்று விட்டான்.
வெளியே வந்தவன் அழைத்து என்னவோ சிட்டுவுக்கு தான்.
"நீ சொன்னது சரி தான் அவன் குயிலை வச்சி மிரட்டிக்கிட்டு இருந்தான். ஆனா அந்த பொண்ணும் தைரியமா தான் டி ஸ்பாரோ இருக்கு... நீ பயந்த சுபாவம்னு சொன்ன" என்று அவன் கேட்கவும், "இல்ல அவளுக்கு எல்லாம் சொல்லி தான் அனுப்புனேன் இருந்தாலும் சின்ன பொண்ணு அதான்" என்றவுடன், "நீ தான் மோட்டிவேஷனல் குயின் ஆச்சே நீ பேசி அத யாரவது கேட்காம இருக்க முடியுமா? அதான் எல்லாரோட குடுமியையும் பிடிச்சி ஆட்டுறியே" என்று சொல்லவும், "ரொம்ப பேசாத சொன்னதை செய்.. இன்னைக்கு நைட் டின்னர்க்கு வீட்டுக்கு வா" என்று சொல்லி வைத்து விட்டாள்.
நவநீதனுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தான். இவனை என்னவோ என்று நினைத்து இருக்க, இவன் என்னோவோவாக அல்லவா இருக்கிறான்.
"சார்" என்று இன்று முழுமனதோது மரியாதையோடும் அழைத்து இருந்தான்.
"என்ன நவநீதன்? உங்க மைண்ட் வாய்ஸ் இன்னைக்கு எதுவும் பேசலையா?" என்று கேட்க, "சார் மைண்ட் வாய்ஸ் எதுக்கு சார் என் வாய்ஸ்லேயே பேசுறேன். யாரு சார் நீங்க? எப்படி இவ்ளோவும் பண்றீங்க? இதுக்கு ஏதாவது காரணம் இருக்கா?" என்று கேட்க, "எல்லாம் போக போக நீங்களே தெரிஞ்சுக்குவீங்க.. நம்ப மொதல்ல அந்த தேவயானை பொண்ண கொலை பண்ணி இருக்க க்ரைம் ஸ்பாட்க்கு போகணும்" என்று சொன்னவன் வண்டியில் ஏறி அமர, நவநீதனும் வாந்தியை எடுத்து இருந்தான்.
இதே சமயம், மயூரன் சாஹீலின் வீட்டிற்கு வந்து இருந்தான். சாஹில் முன்னமே மருத்துவமனைக்கு கிளம்பி இருந்தான். ஜாடாயுவுடன் மட்டும் தான் ஸ்ராவனி இருந்தாள்.
மயூரனை பார்த்ததும், "சித்தப்பா" என்று சென்று கட்டி கொள்ள, அவனும், "பேபி எப்படி இருக்க? சித்தப்பாவை மறந்துட்டியா?" என்று கேட்கவும், "மறந்து இருந்தா எப்படி சித்தப்பான்னு கூப்பிடுவேன். தாத்தான்னு தானே கூப்பிட்டு இருப்பேன்" என்று அவள் வாயடிக்க, "அப்படியே உன் அப்பா அம்மாக்கு தப்பாம பிறந்து இருக்க" என்று சொல்லவும், "அவங்க ப்ரொடக்ட் தானே நான்" என்று சொல்லவும், "ஸ்ராவனி உனக்கு இப்படி எல்லாம் பேச யாரு சொல்லி தரா?" என்று ஜாடாயு கேட்க, "காக்கி மாமா" என்று பற்களை இளித்து கொண்டு கூறினாள்.
"அவனும் வந்து இருக்கானா?" என்று மயூரன் கேட்க, "அவன் தான் டா சிட்டுவை இங்க போஸ்டிங் போடு வர வச்சதே" என்று ஜாடாயு சொல்ல, "நாசமா போச்சு... இப்போ என்ன அண்ணா பண்றது? அந்த பெரிய திருவடி மேல அவளோ மோசடி கேஸ் இருக்கு.. ஆனா ஒன்னுத்துக்கும் சாட்சி இல்ல..." என்று மயூரன் சொல்ல, "அதெல்லாம் நம்ப பார்த்துக்கலாம். நமக்கா சாட்சிய கொண்டு வர தெரியாது" என்று அவன் சொல்ல, "அதானே" என்று புன்னகைத்தான்.
சிறிது நேரம் தான் ஆகி இருக்கும், "சார்" என்று ஒரு குரல் கேட்டது. பரினீத்தி தான் வந்து இருந்தாள்.
"உள்ள வாங்க" என்று சொல்லவும், அவளும் உள்ளே வர, அங்கே ஸ்ரவாணி மயூரனுடன் விளையாடி கொண்டு இருந்தாள்.
"சார் குழந்தையை மேடம் வாங்கிட்டு வர சொன்னாங்க" என்று அவள் தயங்கி கொண்டே சொல்ல, ஜடாயுவோ, "அதுக்கு கூட மேடம் வர மாட்டாங்களா?" என்று கேட்க, அவளோ பேந்த பேந்த முழித்து கொண்டு இருந்தாள்.
"குழந்தையை கொடுத்து அனுப்பு" என்று மயூரனை பார்த்து சொல்லவும், அவனும் ஸ்ரவாணியை போகும் படி சைகை செய்ய, அவளும் பரிநீதியிடம் சென்று விட்டாள்.
"தனியாவை வந்திங்க?" என்று கேட்கவும், ஆமாம் என்று தலையசைத்தாள்.
"நான் வந்து விடுறேன்" என்று சொன்ன ஜடாயு, அவனின் ஜீப்பின் சாவியை எடுக்கவும், "இல்ல சார் நான் நடந்தே.." என்றவளை, "இட்ஸ் ஓகே" என்று சொல்லி அவனின் வண்டியில் ஏற்றி கொண்டு சென்று இருந்தான்.
போகும் நேரம் சிறிது பேச்சும் கொடுத்து கொண்டு வந்தான்.
"நீங்க தான் அந்த கம்பளைண்ட் கொடுத்தீங்களா?" என்று கேட்க, "ஆமாம் சார்" என்று சொல்லவும், "ரொம்ப தைரியமான பொண்ணு தான்" என்று சொல்லவும், அவளிடம் புன்னகை தான்.
இதே சமயம் அவர்களின் வீட்டையும் நெருங்கி விட்டார்கள்.
"போய்ட்டு வாங்க" என்று சொல்லவும், இருவரும் இறங்க, என்ன நினைத்தானோ, அவனும் இறங்கினான்.
பரினீத்தி அவனை பார்த்தாலும் ஒன்றும் கேட்கவில்லை. அவனின் மனைவியை பார்க்க வருகிறான். இதில் அவள் என்ன கேட்க முடியும்?
அமைதியாக மூவரும் உள்ளே நுழைந்தனர்.
"வந்துட்டியா பரி?" என்று கேட்டுக்கொண்டே சமயற்கட்டில் இருந்து சிட்டு வரவும், ஜடாயுவை பார்த்து அதிர்ந்து விட்டாள்.
அவர்களை அங்கே விட்டுட்டு, "நான் கிளம்புறேன் மேம்" என்று சொல்லி பரினீத்தி நகர போக, "ஆண்டி எனக்கு உங்க வீட்ல இருக்க க்ரையான்ஸ் வேணும்" என்று சொல்லி அவளுடன் சென்று விட்டாள் ஸ்ராவனி.
ஜடாயுவும் சிட்டுவும் மட்டும் தான் இருந்தார்கள்.
"எதுக்கு வந்திங்க?" என்று கேட்க, "புருஷன் வந்தா தப்பா?" என்று கேட்க, "அதான் டிவோர்ஸ் ஆக போகுதுல" என்று அவள் கேட்க, "சாவடிச்சிருவேன் பார்த்துக்கோ.. டிவோர்ஸ்ன்னுலாம் கனவுல கூட நடக்காது" என்று அவன் சொல்லவும், "டொமெஸ்டிக் வையலென்ஸ்ன்னு சொல்லி வாங்குவேன்" என்று அவள் சொல்லும் போதே, உள்ளே வந்தான் காகேஷ்.
"என்ன மறுபடியும் பிரச்சனையா?" என்று கேட்கவும், "இவரை வெளிய போக சொல்லு டா" என்று அவள் எங்கோ பார்த்து கொண்டு சொல்ல, ஜடாயுவோ, நீ ரொம்ப பேசுற டி, என்றவன் அவளை பிடித்து இழுத்து அவளின் இதழ்களை சிறை செய்து இருந்தான்.
காகேஷோ, "அடேய் ஏன் டா" என்று திரும்பி கொண்டான்.
இரண்டு வினாடிகள் தான், "இதோட பேசுனா இப்படி தான் வாய மூட வைப்பேன்" என்று சொன்னவன் அங்கிருந்து சென்று இருக்க, சிட்டுவோ பேயறைந்தது போல் நின்று கொண்டு இருந்தாள்.
இதே சமயம், இங்கு பக்ஷி, ஹம்சா மற்றும் ஹன்சிகா மூவரும் கோவமாக அமர்ந்து இருந்தார்கள்.
அத்தியாயம் 14
ஜடாயு காகேஷை பார்த்து, "உன் பிரண்டை ஓழுங்கா என் கூட வந்து வாழ சொல்லு" என்று சொல்லும் போதே அங்கே பரினீத்தி கொடுத்த க்ரையான்சுடன் வந்தாள் ஸ்ராவனி.
"நான் கிளம்புறேன், அம்மா கூட சமத்தா இருக்கனும்" என்று சொல்லவும், அவளும் அழகாக தலையை ஆட்டி, "சரி அப்பா" என்று சொல்ல, அவனும் குழந்தையை தூக்கி அவளின் பட்டு கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.
பின்பு சென்று விட்டான்.
அவன் சென்ற பின்பு சிட்டுவும் சமயலறைக்குள் சென்று விட்டாள். அதற்கு மேல் அங்கு இருந்தாள் காகேஷ் அவளை தான் வைத்து செய்வான் என்று அவளுக்கு தெரியும்!
நான்கு மாதங்கள் கழித்து ஜடாயு முத்தம் இடுகிறான். அவளின் மேனியில் அவளையும் மீறி ஒரு சிலிர்ப்பு.
அவனின் முத்தம் ஒன்றும் அவளுக்கு புதிதல்ல! கணக்கே இல்லாமல் அவளுக்கு முத்தங்கள் வழங்கிய தாராள வள்ளல் அவன்!
அவளே எத்தனையோ முறை கேட்டு இருக்கிறாள்.
"நான் ஒன்னும் அவளோ அழகா இல்ல, எப்படி உங்களுக்கு என் மேல இவளோ காதல், மோகம் எல்லாம்?" என்று அவள் கேட்கும் போதெல்லாம், "இந்த அழகை மட்டும் பார்த்து எத்தனை நாள் வாழ முடியும்? எனக்கு உன்ன பிடிச்சி இருக்கு. உன்ன மட்டும் தான் பிடிச்சி இருக்கு. உன்ன பார்க்கும் போது தான் எனக்கு அர்ஜஸ் கூட வருது நான் என்ன செய்யட்டும்? இப்போ கூட எப்படி இருக்கு தெரியுமா?" என்று அவளை மொத்தமாக கொள்ளையிட்ட பின்பு தான் அவளை விடுவான்.
இப்படி ஒரு காதலா என்று அவள் நினைக்காத நாளே இல்லை எனலாம்.
அவளின் எண்ணங்கள் முழுக்க ஜடாயு நிறைந்து இருந்தான். அதே சமயம் சமயற்கட்டிற்குள் நுழைந்தான் காகேஷ்.
அவனுக்கு தெரியும் சிட்டுவின் எண்ணம் முழுக்க இப்போது அவளின் மணவாளன் தான் நிறைந்து இருக்கிறான் என்று! அவளின் உயிர் நண்பன் ஆயிர்றே இதை கூட அறியாமல் இருப்பானா என்ன?
அவன் குரலை செரும சட்டென சுயநினைவு பெற்றுவிட்டாள். சிட்டு அப்போது தான் காகேஷ் வந்ததையே அவள் கவனித்தாள். அவளின் முகம் இப்போது கோவமாக மாறியது.
சிரிப்பை அடக்கி கொண்டு நின்று இருந்தான் காகேஷ்!
சிட்டுக்கு கோவமாக வந்தது. "என்ன டா இப்போ?" என்று அவள் தோசை கரண்டியை வைத்து கொண்டு அவனை கேட்க, அவனோ ஒன்றும் இல்லை என்று தலையசைத்தான்.
இதே சமயம் ஷ்ராவனி வந்து, "அம்மா உங்க வாய அப்பாவால மட்டும் தான் அடைக்க முடியுமாமே காக்கி மாமா சொன்னாரு" என்று சொல்லவும், இவ்வளவு நேரம் அடக்கி வைத்து இருந்த சிரிப்பை சிரித்து விட்டான்.
சிட்டுவோ அவளை பார்த்து, "நீ போய் டிராயிங் பண்ணு டி வந்துட்டா காக்கி மாமா சொன்னாரு காக்ரோச் மாமா சொன்னாருன்னு" என்று அவள் எரிந்து விழ, "ஹே ஸ்பாரோ என்ன விட்டா ஓவரா பேசுற? என்ன பார்த்தா காக்ரோச் மாதிரி இருக்கா?" என்று அவன் எகிறிக்கொண்டு அவள் முன்னால் நிற்க, அவளோ, "ஆமா டா காக்கா" என்று சிலுப்பி கொண்டு நின்றாள்.
இருவரும் ஒருவருக்கு முன்னால் மற்றோருவர் நிற்க, சட்டென இருவருக்கும் சிரிப்பு வந்து விட்டது.
"நீ இன்னும் மாறவே இல்ல டா" என்று சிட்டு சொல்ல, "நீ மட்டும் என்ன, அதே மாதிரி தான் இருக்க... கொஞ்சமே கொஞ்சம் இலச்சிட்ட மத்த படி அப்படியே தான் இருக்க ஸ்பாரோ" என்று அவளின் கன்னத்தை பிடித்து ஆட்டினான்.
"டேய் சைத்தான், ஏன் டா என் பொண்ணு கன்னத்தை பிடிச்சு ஆட்டுனா கூட ஒரு நியாயம் இருக்கு என் கன்னத்தை ஏன் டா பிடிச்சி ஆட்டுர? விடு டா காக்கா" என்று அவனின் கையை எடுத்து விட்டு சமைக்க ஆரம்பிக்க, "எனக்கு நீயும் என் டார்லிங்கும் ஒன்னு தான். இரண்டு பேரும் வேற வேற இல்ல" என்று அவன் சொல்ல, "அவ அஞ்சு வயசு குழந்தை டா" என்றவளிடம், "ஆமா அவ அஞ்சு வயசு குழந்தை நீ முப்பத்தி மூணு வயசு குழந்தை அவளோ தான் வித்யாசம். உன் பிடிவாதம் அப்படியே உன் பொண்ணு கிட்ட இருக்கு டி" என்று அவன் சொல்லவும், அவளோ, "ஆனா என்ன விட உன்ன மாதிரி தான் நீ அவளை ட்ரெயின் பண்ற... அப்படியே உன்ன மாதிரியே என் உயிரை வாங்குறா" என்று அவள் சொல்லிக்கொண்டே அவனிடம் சப்பாத்தி உருட்டும் கட்டையை கொடுத்தாள்.
"சப்பாத்தி திரட்டிட்டே பேசு" என்று சொல்லிவிட்டு அவள் திரும்ப, "நான் ஒரு ஏசிபி என்ன இப்படி எல்லாம் வேலை வாங்குற நீ" என்று அவன் சொல்லிவிட்டு சப்பாத்தி மாவை எடுக்க, அவளோ, "ஊருக்கே நீ ஏசிபியா இருந்தாலும் இந்த சிட்டுக்கு நீ எடுபிடி தான் டா காக்கா... என் நண்பன் தானே அப்புறம் என்ன?" என்று சொல்லிவிட்டு அவளும் சமையல் செய்ய, "ஏன் ஜாடாயுக்கு டிவோர்ஸ் அனுப்புன?" என்று இப்போது தான் விடயத்திற்கு வந்தான்.
சிட்டுவின் முகம் இறுகியது.
"அத பத்தி பேச வேண்டாம் காகேஷ்" என்றவளின் குரலின் மாற்றத்தையும், அவள் காகேஷ் என்று அழைத்ததை வைத்தும் அவள் கோவத்தில் இருக்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது.
"இங்க பாரு அவன் உன்ன எவளோ லவ் பன்றான். எதுக்கு டிவோர்ஸ்லாம்? நீ ரொம்ப பண்ற டி" என்று அவன் சொல்லவும், "அவன் பண்றது இருக்கட்டும், நீ ஏன் என்ன இந்த ஊருக்கு வர வச்ச?" என்று கேட்க, அவனோ அவளை திரும்பி பார்த்து, "போர் அடிச்சுது அதான் வர வச்சேன். ஆனா முதல் நாளே என் ஆபீஸ் வருவேன்னு நினைக்கல" என்று சொல்லவும், "உனக்கு பரிய பிடிச்சி இருக்கா?" என்று கேட்கவும், அவனோ கண்கள் விரித்து, "ஹே அப்படி எல்லாம் இல்ல டி.. நீ வேற நான் சிங்கள்லா ஜாலியா இருக்கறது உனக்கு பிடிக்கலையா?" என்று கேட்கவும், "உனக்கு முப்பத்தி மூணு வயசு ஆகுது எரும... கல்யாணம் பண்ணிக்கோ... அந்த பொண்ண இவளோ சீண்டறியே அதான் இன்டெரெஸ்ட் இருக்கோனு நினைச்சேன்" என்று அவள் அவனை ஆழ்ந்து பார்க்க, "என்ன அப்படி பார்க்காத, எனக்கு பயந்து வருது... எங்க என் மனச படிச்சிருவியோன்னு" என்று அவன் சொல்ல, அவளோ சிரித்து விட்டு, "இந்த காக்காக்கு அந்த பறவை தான்" என்று அவள் வாய்விட்டே சொல்லி விட்டாள்.
"கேட்க நல்லா தான் இருக்கு" என்று அவன் முணுமுணுக்க, அவளோ அவனின் கையை கிள்ளி, "சப்பாத்தி போடு" என்று சொல்லிவிட்டு சமைக்க துவங்கினார்கள்.
இங்கோ பக்ஷிராஜா, ஹம்சா, ஹன்சிகா மூவரும் அமர்ந்து இருந்தார்கள்.
"என்ன அப்பா நடக்குது இங்க? இந்த ஊர்ல நீங்க வச்சது தான் சட்டம்னு சொல்லுவீங்க... இன்னைக்கு ஒருத்தன் என்ன அடிச்சி இருக்கான். அண்ணாவை ஒருத்தன் வச்சி செஞ்சிட்டு போயிருக்கான். இன்னொருத்தன் உங்க மேல கேஸ் பைல் பண்ண சொல்லிட்டு போயிருக்கான். அந்த புது விஎஓ வேற உங்க மேல இருக்க லேண்ட் கேஸ் எடுக்குறான். நீங்க அமைதியா இருக்கீங்க" என்று கத்தி கொண்டு இருந்தால் ஹன்சிகா.
அவள் தான் அந்த வீட்டின் ராஜகுமாரி ஆயிர்றே!
"அப்பா அந்த குயில் இரண்டு நாள் முன்னாடி வரைக்கும் நடுங்கிட்டு இருந்தா... இன்னைக்கு என்னனா அவ என்ன மிரட்டுறா! எப்படி பா? எனக்கு ஆத்திரமா வருது" என்று ஹன்சாவும் சொல்ல, பக்ஷி ராஜா தான், "இப்போ எதுக்கு இரண்டு பேரும் இப்படி கத்துக்கிட்டு இருக்கீங்க? அதெல்லாம் ஒன்னும் ஆகாது. அவங்க இப்போத்தானே புதுசா வந்து இருக்காங்க அதான் ஆடுறாங்க... ஆனா இது எல்லாத்துக்கும் காரணமான அந்த புது டீச்சரை தான் டா அடிக்கணும். அவ தான் எல்லாத்துக்கும் காரணம். சின்ன பொண்ணுன்னு நினைச்சிட்டேன். அவ என்னனா இந்த ஆகையாபுரியவே மாத்தி எழுதிருவா போல! இத்தனை பேர கொண்டு இறக்கி இருக்கா பாரு.. நம்ப மேலையும் தப்பு இருக்கு அந்த ஏசிபி யாரு என்னனு விசாரிக்கம இருந்துட்டோம். அவன் இப்படி ஒரு கழுகா இருப்பான்னு நம்ப நினைச்சி பார்கலேயே.. முதல் அடி அந்த டீச்சருக்கு தான் அடிக்கணும். அந்த பொண்ணு குயிலை நீ பார்த்துக்கோ. கொஞ்ச நாள் நல்லவனா நடி. எல்லாம் சரி ஆகிரும்" என்று அவர் சொல்ல, "அப்பா அந்த டாக்டர்?" என்று ஹன்சிகாவின் நினைவு முழுக்க சாஹில் தான் நிறைந்து இருந்தான்.
"அவனை பார்த்துக்கலாம் மா. கண்டிப்பா அவனுக்கும் அடி விழும் நீ அவனையே நினைச்சுகிட்டு இருக்காம போய் ரெஸ்ட் எடு" என்று சொல்லி விட்டு மூவரும் அவரவர் அறைக்கு சென்று விட்டனர்.
ஆனால் ஹன்சிக்காவல் தான் அப்படி நினைக்க முடியவில்லை. அவளை ஒருவன் அறைந்து இருக்கிறான். அவனை எப்படி விடுவது என்கிற எண்ணம் அவளுக்கு! அப்படி தானே அவளை வளர்த்தும் இருந்தார்கள்.
சாஹிளை அடிக்க எந்த எல்லைக்கும் செல்ல தயாராகி விட்டாள் அவள்!
அவனை அழித்தே தீர வேண்டும் என்கிற வேட்கையை தவிர அவளின் மனதில் வேறொன்றும் இல்லை.
"கண்டிப்பா உன்ன விட மாட்டேன் டா.. நீ வாழ்க்கை முழுக்க பீல் பண்ணனும்" என்று நினைத்து கொண்டவளுக்கு அவனை என்ன செய்தால் தகும் என்று தான் ஓடிக்கொண்டே இருந்தது.
மனதின் கோவத்தில் மதி இழப்பது தானே இயல்பு. ஆனால் மதியோடு சேர்ந்து மொத்தத்தையும் இழக்கும் நிலைமைக்கு தள்ளப்படலாம் என்று ஹன்சிகா யோசிக்க தவறிவிட்டாள்.
இதே சமயம், சாஹீலின் மனத்திலும் ஹன்சிகாவின் எண்ணம் தான்.
"ச்ச ஒரு பொண்ண போய் கைய நீட்டி அடிச்சிட்டேன்" என்று தன்னை தானே சொல்லி கொண்டு இருந்தான் அவன். அவன் தான் ஜாடாயு, மயூரன் இருவரையும் விட மென்மையானவன்.
சாந்தமானவனும் கூட! ஸ்ரவனியை அப்படி பேசியதால் அடித்து விட்டான்.
"நாளைக்கு பார்த்தா சாரி கேட்கணும்" என்று அவன் நினைத்து கொண்டு இருக்கும் போதே, உள்ளே வந்தான் ஜாடாயு.
"என்ன யோசனை?" என்று கேட்கவும், "ஒன்னும் இல்ல சும்மா தான்" என்று சாஹில் சொல்ல, "அந்த பொண்ணு எப்படி இருக்கா?" என்று ஜடாயு கேட்க, "க்ரிட்டிக்கல் தான். இவங்க அந்த பொண்ண மதிக்கவே இல்ல... கொஞ்சம் கஷ்டமா இருக்கு... அந்த பொண்ணு தான் மனசு வைக்கணும். என்ன தான் நம்ப டிரீட்மென்ட் கொடுத்தாலும் ஒரு மனுஷனோட வில் பவர் தான் முக்கியம்" என்று சாஹில் சொல்ல, "நாளைக்கு அந்த பொண்ண பார்க்க வரேன். எங்க மயூ?" என்று ஜாடாயு கேட்க, "தெரியல" என்று சாஹில் சொல்லும் அதே சமயம்.
கத்தி முனையில் நின்று கொண்டு இருந்தான் மயூரன். அவனின் பின்னால் அவனின் காரியதரிசி மைனா நின்று கொண்டு இருந்தாள். அவளின் கண்களில் உயிர் பயம் தெரிய, மயூரனோ அசராமல் நின்று கொண்டு இருந்தான்.
அத்தியாயம் 15
மயூரன் அவனின் அலுவலகத்தில் இருந்து கிளம்பவே நேரம் ஆகி விட்டது. மைனாவும் அவனுடன் இருக்க வேண்டிய நிலை தான்.
அப்போது தான் கடிகாரத்தை பார்த்தார்கள். இரவு எட்டு மணி காட்டியது.
"சார் கிளம்பலாமா?" என்று அவள் கேட்கவும் தான் அவனுக்கு மணி ஆனதே தெரிந்தது.
"சாரி எப்படி போவ?" என்று அவன் கேட்க, "நான் போய்குவேன் சார்" என்று அவள் சொல்ல, அவனோ, "நானே ட்ரோப் பண்றேன்" என்று சொல்லிக்கொண்டு இருவரும் அவனின் காரில் தான் ஏறினார்கள்.
கார் ஓட்டுவதில் கை தேர்ந்தவன் அவன்!
"ரொம்ப நல்லா ஓட்டுரிங்க சார்... இந்த கிராமத்து ரோட்டலேயே இவளோ நல்லா வண்டி ஓட்டுறீங்களே" என்று அவள் சொல்லவும், அவனிடம் ஒரு மெல்லிய புன்னகை.
இதே சமயம் தான் அவனின் முன் வந்து நின்றது ஒரு ஜீப்.
அதில் இருந்து ஐந்து நபர்கள் இறங்கினார்கள்.
அவனும் வண்டியை நிறுத்தி இருந்தான்.
இறங்கியவர்கள் கையில் கத்தி, கடப்பாரை, அருவாள் என்று ஆயுதம் தான் இருந்தன.
அவன் ஓரளவு சுதாகரித்து கொண்டான்.
அவனின் கைப்பேசியை எடுத்தவன், ஒரு எண்ணிற்கு அழைக்க, அந்த நபரும் அழைப்பை ஏற்க, அவனும் வண்டியை விட்டு கீழே இறங்கினான். அவன் இறங்கிய உடனே அவளும் இறங்கினாள்.
"சார் நம்ப இன்னைக்கு சாக போறோமா?" என்று அவள் பயத்துடன் கேட்க, அவனோ அவள் புறம் திரும்பி, "அப்படி சாகுறதுனா கூட நான் செத்த பிறகு தான் நீ சாவ போதுமா?" என்று கேட்க, அவளோ, "ஹப்பாடா அப்போனா ஓகே" என்று அவள் சொல்ல, அவனோ அவளை முறைக்க, "சார் நீங்க ஹீரோ சாக மாட்டீங்க... அப்போ நானும் சாக மாட்டேன்" என்று சிறுபிள்ளை போல் அவள் பேச, அவனுக்கோ கடுப்பாக இருந்தது.
இதே சமயம் வந்தவர்களோ, "அங்க என்ன பேசிகிட்டு இருக்கீங்க! எங்க கிட்ட பேசுங்க... என்ன விஏஓ சார் ஓவரா இப்பவே ஆடுறிங்களாமே! காலு கை எல்லாம் நல்லா இருந்தா தானே ஆட முடியும்... அதெல்லாம் ஒடச்சி போட்டுட்டா என்ன ஆகும்?" என்று ஒருவன் கேட்க, மற்றோருவரோனோ, "அண்ணா அந்த குட்டி நல்லா இருக்குல" என்று மைனாவின் பக்கம் கண்கள் திருப்ப, அவளோ, ஓடி வந்து மயூரனின் கையை பற்றி இருந்தாள்.
அவளின் கை அழுத்தமே அவனுக்கு அவளின் பயத்தை உணர்த்தியது.
மயூரனோ அவர்களை பார்த்து, "பிரச்சனை உங்களுக்கும் எனக்கும் தானே, இந்த பொண்ண போக விடுங்க.. அவளுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல" என்று சொல்லவும், கத்தி வைத்து இருந்த ஒருவனோ, முன்னே வந்து அவனின் முன் கத்தியை நீட்டி, "முடியாது டா... முதல்ல உன்ன மட்டும் தான் போடணும்னு நினைச்சோம்... ஆனா இப்போ நீ பேசுனா பேச்சுல முதல்ல அந்த பொண்ணு மேல தான் கைய வைப்போம்" என்று கத்தியை நீட்டி மைனாவின் கையை பற்ற போகும் அரை நொடி நேரத்தில் அவனின் கையில் இருந்த கைதியை பிடுங்கி அவன் கையை பற்ற இருந்த அதே கையில் சொருகி இருந்தான் மயூரன்.
அவனின் இரத்தம் வேறு மைனாவின் முகத்தில் தெறிக்க, அவளோ மயூரனை பின்னே இருந்து கட்டி அணைத்து இருந்தாள்.
பயத்தில் அவளது உடல் நடக்கும் அதே சமயம் மழையும் பெய்ய துவங்கியது.
வலியில் கையை பிடிக்க வந்தவன் துடிக்க, வந்தவர்கள் அனைவரும் ஓரடி பின்னே சென்றார்கள்.
"யாரு அடுத்து வரா?" என்று அவன் அவர்களை பார்த்து கேட்க, மற்றோருவன் கடப்பாரையோடு வர, அவனின் கையை பிடித்து இழுத்து கடப்பாரையை பிடுங்கி போட்டு, அவனின் தலையிலேயே ஓங்கி குத்தி இருந்தான் மயூரன்.
சிறுவயதில் இருந்து கராத்தே மற்றும் சிலம்பம் பயின்றவனுக்கு இதெல்லாம் எம்மாத்திரம்!
"இன்னும் யாருக்காவது தைரியம் இருந்தா வாங்க டா?" என்று அவன் கர்ஜிக்க, மயில் மழையில் ஆடும் தானே, மயூரனும் ஆடினான் ஆனால் தொகை விரித்து அல்ல, அவனின் கோவ கனலை மொத்தமாக வெளியே தெளித்து ருத்ர தாண்டவம் ஆடி கொண்டு தான் இருந்தான் இந்த மயூரன்.
மயில் கொத்தினால் வலிக்கும் தானே, மயூரன் அடித்தாலும் உயிர் வரை தீண்டி வலிக்கும். அப்படி பட்டவன் அவன்.
"வாங்க டா" என்று அவன் மீண்டும் கர்ஜிக்க, அதே சமயம் வந்தது இரண்டு வண்டிகள்.
ஒன்றிலிருந்து காகேஷ் மற்றும் சிட்டு இறங்க, மற்றோரின்றில் இருந்து ஜடாயுவும் சாஹிலும் இறங்கினார்கள்.
அதே சமயம் நவநீதன் மற்றும் இரண்டு போலீஸ் ஆட்களும் வந்து இருந்தார்கள்.
அடியாட்கள் அங்கிருந்து நகர முற்பட, "அரெஸ்ட் தேம்" என்று காகேஷ் கத்தவும், மூவரையும் சிறையெடுத்து இருந்தார்கள் நவநீதனும் அவனுடன் வந்தவர்களும்.
"போய் லோக் அப்ல போட்டு விசாரிங்க நான் வரேன்" என்று காகேஷ் சொல்ல, "எஸ் சார்" என்று சொல்லி நவநீதன் சென்று விட்டான்.
சிட்டு தான் மயூரனை நெருங்கினாள். பல நாட்கள் கழித்து காண்கிறாள்.
அவனின் வயிற்றை சுற்றி இரு கரங்கள் இருந்தது.
சிட்டுவின் கைகளிலும் ஒரு ரெயின்கோட் இருந்தது.
சிட்டுவின் கண்கள் அவனின் வயிற்றில் பாடிய, அப்போது தான் மைனா அவனை அணைத்து நிற்பதே அவனுக்கு உரைத்தது.
"கையை எடு டி" என்று அவன் பற்களை கடித்து கொண்டு கூற, "சார் டிரஸ் நனஞ்சிருச்சு...ரொம்ப ட்ரான்ஸ்பிரேண்ட்டா இருக்கு" என்று அவள் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்ல, அவனுக்கு தான் இப்போது அவஸ்தையாக போனது.
"இத போட்டுக்க சொல்லு" என்று சிட்டு அவனிடம் அந்த ரெயின் கோட்டை நீட்டவும், அவனும் அவளின் கைகளை அவனில் இருந்து பிரித்து சிட்டு கொடுத்ததை அவளிடம் கொடுத்தான்.
அவளும் உடனே அவனிடம் இருந்து பிரிந்து, அந்த ஆடையை அணிந்து கொண்டு தான், அவனை விட்டு தள்ளி நின்றாள்.
"தேங்க்ஸ் காலை எடுத்துக்கு" என்று மயூரன் காகேஷை பார்த்து சொல்ல, "என் ஸ்பாரோ ஓட பெஸ்ட் மச்சினன் ஆச்சே! எப்படி எடுக்காம இருப்பேன்" என்று அவன் கண்கள் சிமிட்டி சொல்ல, "டேய் அவளை ஸ்பாரோன்னு கூப்பிடாத" என்று ஜடாயு சொல்ல, "அப்படி தான் டா கூப்பிடுவேன் என் இகல்" என்று அவனை பார்த்தும் சொன்னவன், மயூரனை நெருங்கி, "இதுக்கு கம்பளைண்ட் கொடுக்க போறியா?" என்று கேட்கவும், "கண்டிப்பா கொடுக்கணும். அது மட்டும் இல்ல... லேண்ட் கேஸ் பத்தியும் பேசணும்" என்று சொல்ல, சிட்டுவோ, "அதெல்லாம் அப்புறம் பேசலாம்... முதல்ல அந்த பொண்ண போய் வீட்ல விட்டுட்டு வா" என்று சொன்னவள், மைனாவின் புறம் திரும்பி, "எங்க இருக்கு உன் வீடு?" என்று கேட்கவும், "நான் ஹாஸ்டெல்ல இருக்கேன் மேம்" என்று சொல்லவும், ஏனோ அவளுக்கு அவளை இப்போது இருக்கும் சூழ்நிலையில் தனியாக விட மனம் வர வில்லை.
"ஹாஸ்டல் வேண்டாம் என் கூட இருக்கியா?" என்று கேட்கவும், "மேம்" என்று அவள் தயங்கி நிற்க, "சி சிட்டுவேஷன் ரொம்ப க்ரிட்டிக்கல். நீ தனியா இருந்தா உன்ன தான் ஈஸியா டார்கெட் பண்ணுவாங்க.. அதான் சொல்றேன்" என்றதும், அவளுக்கும் மனதில் அந்த யோசனை தான்.
அவளின் முன்னால் தானே கத்தியை நீட்டி மிரட்டி இருக்கிறார்கள். அவளுக்கே தனியாக இப்போது இருக்க பயம் தான்.
"ஆனா என் தின்க்ஸ்" என்று அவள் தயங்கவும், "நாளைக்கு போய் எடுத்துக்கலாம். நீ இப்போ ஸ்பாரோ கூட போ மா.. உங்க எல்லாருக்கும் தனி தனியா எல்லாம் ப்ரொடெக்க்ஷன் கொடுக்க முடியாது" என்று காகேஷ் சொல்லவும், "சரி சார்" என்று சொல்லி இருந்தாள் மைனா.
"சரிங்க அண்ணி அப்போ இவ உங்க கூடவே இருக்கட்டும்" என்று மயூரன் சொல்ல, "அண்ணியா?" என்று மைனா வாய் விட்டே கேட்க, அவனும் திரும்பி ஆமாம் என்று தலையசைத்தான்.
"நான் கூட போலீஸ்ன்னு நினைச்சேன். ரொம்ப கம்பீரமா இருக்காங்க" என்றவள் பாராட்டவும், "கொஞ்சம் தைரியமா எப்படி இருகர்துன்னு கத்துக்கோ" என்று சொல்லவும், அவளும் உதட்டை பிதுக்க, "நீ போய் ஜீப்ல உட்காரு மா" என்று சிட்டு சொல்லவும், அவளும் சென்று விட்டாள்.
சிட்டுவோ மயூரனை நெருங்கி, அவனின் கன்னத்தை வருடி, "எப்படி இருக்க?" என்று கேட்க, அவனின் கண்கள் கூட கலங்கி விட்டது.
மயூரன் ஒன்றும் ஜடாயு மற்றும் சாஹீலின் உடன் பிறந்த சகோதரன் அல்ல. அவர்களின் சித்தப்பா மகன் தான். சிறுவயதிலேயே அன்னை இல்லாமல் வளர்ந்தவன் அவன்!
சிட்டு வந்த பிறகு தான் அவனுக்கு அன்னை இல்லாத குறையே தெரியாமல் போனது.
அவனுக்கு அன்னைக்கு அன்னையாய், சகோதரிக்கு சகோதரியாய், தோழிக்கு தோழியாய் இருந்தவள் அவள் தான்.
ஜாடாயு அவனின் துணையை தேடினான் என்றால், மயூரன் அவனின் அன்னையை தேடினான்.
"என்ன மறந்துட்டீங்க தானே?" என்றவனின் குரலில் மழலையின் கோவமும், உரிமையும், பாசமும் நிறைந்து இருந்தது.
"அம்மா எப்பவும் அவங்க குழந்தைங்களை மறக்குறது இல்ல" என்றவள், ஒரு கணம் நிறுத்தி, "நீ எப்படி இருக்க எங்க இருக்கன்னு நான் எப்பவும் கேட்டுகிட்டே தான் இருப்பேன்" என்று சொல்லளவும், "பசிக்குது அண்ணி" என்று அவன் சொல்லி இருந்தான்.
அவளுக்கு தெரியும் அவன் இதை தான் சொல்வான் என்று!
அவள் திரும்பி காகேஷை பார்க்க, அவனும் ஜீப்பில் இருந்து ஒரு பையை எடுத்து வந்து சிட்டுவிடம் கொடுத்தான்.
"ஹாட் பாக்ஸ்ல சப்பாத்தி அப்புறம் தக்காளி தொக்கு வச்சி இருக்கேன். உனக்கு பிடிக்குமேனு முட்டை பொடிமாஸும் வச்சி இருக்கேன். போய் சாப்பிடு" என்று சொல்லவும், "அண்ணி இதெல்லாம் அநியாயம்" என்று சாஹீலின் குரல் கேட்க, "உங்க மூணு பேருக்கும் தான் டா வச்சி இருக்கா" என்று காகேஷ் கத்த, "அப்போ ஓகே" என்று சாஹில் சொல்லி கொண்டான்.
"கிளம்பு" என்று சிட்டு சொல்லிவிட்டு ஜீப்பில் நகர போகும் சமயம், "உனக்கு நண்பன், மச்சினனா நான் இருந்து இருக்கலாம் டி.. என் நேரம் உனக்கு புருஷனா வாக்க பட்டு இருக்கேன்" என்று ஜடாயு சொல்ல, "அதுக்கு தான் டிவோர்ஸ் கொடுக்குறேன்" என்று அவள் சொல்லும் முதலே, அவளின் கன்னத்தை பற்றி அழுந்த இதழ் பதித்து இருந்தான் ஜடாயு. அவளோ சட்டென அவனை தள்ளி, "நடு ரோட்ல என்ன பண்றீங்க?" என்று அவள் அதட்ட, "அடுத்த தடவ டிவோர்ஸ்ன்னு சொன்னா எங்கய்யா இருந்தாலும் கிஸ் தான் பண்ணுவேன் பார்த்துக்கோ.. உன் பிராண்ட கூட்டிட்டு போ டா" என்று கோவமாக அவனின் காரில் ஏறி கொண்டான்.
இவர்களை பார்த்து காகேஷ், சாஹில், மயூரன் சிரித்தார்கள் என்றால், மைனாவின் வாயோ பெரிய அனகோண்டா போகும் அளவிற்கு திறந்து கொண்டது.
'ஆத்தி இது என்ன ரோடுல சண்டை போடுறாங்க, கிஸ் அடிக்கிறாங்க.. ஒரு மார்க்கமான குடும்பம் தான் போல' என்று நினைத்து கொண்டாள்.
இங்கோ ஹன்சிகா ஒருவனுக்கு அழைத்து, "நான் சொன்னது நினைவு இருக்குல... சொன்னபடி எனக்கு கொடு... நாளைக்கே வேணும்" என்று சொல்லி இருந்தாள்.
அழைப்பை துண்டித்தவளின் இதழ்களில் ஒரு குரூர புன்னகை.
"நீ செத்த டா சாஹில்.. உன் வாழ்க்கை முழுக்க நீ அனுப்ப வைப்ப" என்று அவளின் இதழ்கள் முணுமுணுத்தது.
சாஹீலின் வாழ்வு இனி எப்படியோ?
அத்தியாயம் 16
மைனாவை அவளின் வீட்டிற்கு அழைத்து வந்து இருந்தாள் சிட்டு.
"உனக்கு இப்போதைக்கு செஞ் பண்ண என்னோட டிரஸ் கொடுக்குறேன்" என்று சொல்லிவிட்டு சிட்டு அவளின் அறையின் உள்ளே செல்ல, அங்கு பரி மற்றும் குயில் தான் ஷ்ராவனியுடன் விளையாடி கொண்டு இருந்தனர்.
மைனாவை பார்த்ததும், "நீங்க யாரு?" என்று குயில் கேட்க, சிட்டு தான், "விஏஓ பிஏ" என்று சொல்லி இருந்தாள்.
முன்னவே இப்போது வந்து இருக்கும் மயூரன், ஜடாயுவின் தம்பி என்று அறிந்து இருக்க, அவளை ஏன் இங்கு அழைத்து வந்து இருப்பாள் என்று அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது.
"உயிருக்கு ஏதும் ஆபத்து இல்லையே?" என்று குயில் கேட்க, மைனாவோ, "கத்திய கழுத்துல வைக்கல அவளோ தான். இந்த ஊர்ல வேலை செய்றதுக்குள்ள மேல போய்டுவேன் போல" என்று அவள் உதட்டை பிதுக்கி சொல்ல, "இந்த ஊர்ல இருக்கறது ரொம்ப கஷ்டம் தான் போல" என்று பரியும் சொல்லி கொண்டாள்.
"இருந்து தான் ஆகணும். வேற வழி இல்ல" என்று சிட்டு சொல்ல, "சீக்கிரம் பிரச்சனை எல்லாம் முடிச்சிரணும். எனக்கு வள்ளி அவ ஆசைப்பட்டா மாதிரியே ஒரு பைலட் ஆகணும்" என்று பரி சொல்லும்போதே அவளின் கண்களில் கண்ணீர் தேங்கி விட்டது.
"எல்லாமே நடக்கும் பொறுமையா இருக்கலாம்" என்று சிட்டு அவளின் தோளை அழுத்தி சொல்ல, அதே சமயம் மைனாவை பார்த்து, "சாப்பிடுறியா?" என்று குயில் கேட்க, அவளும் தலையாட்டி கொண்டாள்.
அடுத்த நாள் விடிந்தது.
அவனின் வேலைக்கு செல்ல ஆயுதமாகி கொண்டு இருந்தான் ஹம்சா.
அதே சமயம் அவனின் அறையில் நுழைந்த பக்ஷிராஜனோ, "சொன்னது எல்லாம் நினைவு இருக்குல... அந்த பொண்ணு குயில் கிட்ட கொஞ்சம் பாசமா இரு" என்று சொல்லவும், அவனும் பற்களை கடித்து கொண்டு தலையாட்டி விட்டு சென்றான்.
மயூரன் சிட்டுவின் வீட்டிற்கு வந்து இருந்தான்.
"அண்ணி" என்று சொல்லி அவன் உள்ளே நுழைய, "சித்தப்பா" என்று சொல்லி ஷ்ராவனி தான் அவனை கட்டி கொண்டு இருந்தாள்.
இதே சமயம் சிட்டு சமையல் கட்டில் இருந்து, "மயூ" என்று குரல் கொடுக்க, அறையில் இருந்து மைனாவும் வந்து இருந்தாள்.
"குட் மார்னிங் சார்" என்று அவள் சொல்ல, அவளிடம் ஒரு தலையசைத்து மட்டும் கொடுத்து விட்டு, நேற்று சிட்டு கொடுத்த பாத்திரங்களை அங்கே இருந்த நாற்காலியில் வைத்தவன், அப்படியே அமர்ந்தும் விட்டான். இதே சமயம், அவனுக்கும் மைனாவிற்கும் இட்லி தக்காளி சட்னி செய்து கொண்டு வந்து இருந்தாள் சிட்டு.
"சாப்பிடுங்க" என்று சொல்லிவிட்டு அவளுக்கும் ஷ்ராவனிக்கும் கூட ஒரு தட்டில் உணவு எடுத்து வந்து அவளுக்கு ஓடிக்கொண்டே சிட்டுவும் சாப்பிட்டாள்.
"நீங்க எனக்கு இப்படி சாப்பாடு தர்றது அவங்க இரண்டு பேருக்கும் தெரிஞ்சுதுனா தினமும் இங்க அவங்களும் வருவாங்க" என்று மயூரன் சொல்ல, "வர சொல்லு எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல" என்று அவள் சொல்ல, அவனோ குரலை செருமிக்கொண்டு, "இந்த டிவோர்ஸ் தேவையா?" என்று கேட்க, "என்ன நடந்ததுன்னு உனக்கு தெரியும் தானே? உன் பெரியம்மா பேசுன பேச்சுக்கு..." என்று அவள் மென்று முழுங்க, அவன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.
மைனாவை அழைத்து கொண்டு அவன் சென்று விட, ஷ்ராவனி மற்றும் பரி உடன் அவள் பள்ளிக்கு சென்று விட்டாள்.
அவள் தலைமை ஆசிரியராக போகும் முதல் நாள்.
பள்ளியின் காலை பிரார்த்தனைக்கு அனைவரும் கூடி இருக்க, அவளும் பேச துவங்கினாள்.
"இது வரைக்கும் இந்த பள்ளி எப்படி இருந்ததுன்னு எனக்கு தெரியாது. ஆனா இனி எப்படி இருக்க போகுதுனு எனக்கு தெரியும். ஆணும் பெண்ணும் சமம். அதான் உண்மை. இது இன்னைக்கு வரைக்கும் உங்களுக்கு தெரியல்னா இனி தெரிஞ்சிக்கோங்க. ஆம்பள பசங்கள திட்ட மாட்டோம்னு எந்த டீச்சரும் சொல்ல கூடாது. யாரு தப்பு பண்ணாலும் தண்டனை கிடைக்கணும். அது தான் உலக நியதி. அது தான் இந்த பள்ளியிலயும் இனி பின் பற்ற படும். அதுக்கு மேல யாரவது ஏதாவது பேசுனா, இந்த பள்ளியில் இருந்து உங்களை வெளியேற்றுவோம்." என்றவளின் பேச்சில் அப்படி ஒரு உறுதி.
"அது மட்டும் இல்ல, இதோட ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் சேர்ந்து தான் இன்டெர்னலுக்காக ப்ராஜெக்ட் செய்ய போறீங்க... நோ எக்ஸ்க்யூஸ்... பெண்கள் ஆண்களை மதிக்கணும்னு பள்ளியில இருந்து சொல்லி கொடுத்தா தான் உண்டு. அதே மாதிரி ஆண்களை வெறும் அப்பா, சகோதரனான மட்டும் பார்த்தா போதாது.. நண்பனா பார்க்கணும், ஒரு ஆண் நண்பன் எந்த அளவுக்கு ஒரு பெண்ணோட வாழ்க்கைல முக்கியம்னு தெரிஞ்சிக்கணும், அதே மாதிரி ஒரு பெண் தோழி ஒரு ஆண் வாழ்வுல முக்கியம். கண்ணியத்தோட நட்ப பின்பற்றுனா எதுவும் தப்பு இல்ல.. அதை பள்ளி தான் பழக்கி விடணும். இது வரைக்கும் பழகலனா இனி பழகிக்கோங்க. இது இன்னைக்கு உங்களுக்கு கசக்கலாம் ஆனா இது தான் உங்களோட எதிர்காலத்துக்கு நல்லது" என்று சொல்லிவிட்டு கீழே இறங்கி விட்டாள்.
மாணவர்கள் அனைவர்க்கும் அதிரிச்சி, அதுவும் பெண் பிள்ளைகளுடன் ப்ராஜெக்ட் செய்ய வேண்டும் என்று அவள் சொன்னது இடியை இறக்கியது போல் தான் இருந்தது.
"மேடம் வயசுக்கு வந்த பிள்ளைங்க எப்படி ஒண்ணா?" என்று துணை தலைமை ஆசிரியர் கேட்க, "தாய்க்கும் தாரத்துக்கும் உங்களுக்கு வித்யாசம் தெரியும் தானே, அதே மாதிரி அவங்களும் தோழிக்கும் துணைவிக்கும் வித்யாசம் தெரிஞ்சிக்குவாங்க... உண்மையா சொல்லனும்னா இந்த வயசுல அம்மா கிட்ட கூட அவங்க சிலதை ஷார் பண்ண மாட்டாங்க... ஆனா பிரண்ட் கிட்ட சொல்ல முடியும். டோன்ட் வரி" என்று சொல்லிவிட்டு அவள் அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.
குயிலிடம் இன்று ஹம்சா பெரிதாக எதுவும் பேசவில்லை.
'என்ன இந்த அன்னப்பறவை பம்புறான், ஏதோ சரி இல்ல' என்று அவள் நினைத்து கொண்டு இருக்கும் போதே, ஹம்சா குயிலை அழைக்க, 'அதானே பார்த்தேன், டீ வாங்கிட்டு வர அனுப்ப போறான் பரதேசி' என்று அவனை மனதில் அர்ச்சித்து கொண்டே தான் உள்ளே சென்றாள்.
"வா வெளிய போகலாம்" என்று அவன் அழைக்க, "ஹான் காபி ஷாப்க்கு" என்றவன் சொல்லவும், "எனக்கு காபி பிடிக்காது. நீங்க போயிட்டு வாங்க" என்று முகத்தில் அடித்தது போல் பதில் அளித்து விட்டாள்.
அவனோ பொறுமையை இழுத்து பிடித்து கொண்டு, "வந்து தான் ஆகணும்" என்று அவளின் கையை பற்றி வலுக்கட்டாயமாக இழுத்து சென்றான்.
"சார் இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்" என்று அவள் திமிறினாலும், அவளை காபி ஷாப் வரை அழைத்த சென்று இருந்தான்.
"ரொம்ப ஓவரா பேசுற நீ! பேசுற இந்த வாய்க்கு" என்றவனின் கண்கள் அவனையும் மீறி அவளின் இதழ்களில் படிந்தது.
அவளின் இதழ்களோ, "பொறுக்கி" என்று முணுமுணுக்க, "என்ன டி பொறுக்கின்னு திட்டுற?" என்று அவளிடம் சீற, அவளோ, "பொம்பள பொறுக்கின்னு சொன்னேன். பொம்பளைய மிஸ் பண்ணிட்டீங்க போல" என்று நக்கலாக பதில் அளித்தாள்.
அவனுக்கு அவளிடம் பேசிவிடலாம் என்றாலும் இப்போது அடங்கி போக வேண்டிய கட்டாயம்.
காபி அமைதியாக சாப்பிட்டார்கள். அவள் சாப்பிட காபிக்கு அவளே பணமும் அளித்தாள்.
ஏனோ இத்தனை நாட்கள் அவனை ஈர்க்கத்தவள், அவனை எதிர்க்கும் போது அவனை ஈர்த்தது என்னவோ உண்மை தான்.
அவளிடம் இருக்கும் அந்த நிமிர்வு அவனுக்கு பிடித்து தான் இருந்தது.
மூச்சை இழுத்து விட்டு கொண்டு இருவரும் மீண்டும் காவல் நிலையத்திற்கு வந்து இருந்தனர்.
மாலையும் ஆகி விட, அன்று காகேஷ் சிட்டுவின் வீட்டிற்கு வந்து இருந்தான்.
காகேஷ் ஷ்ராவனியுடன் விளையாடி கொண்டு இருந்தான். இதே சமயம் அங்கே வந்தார்கள் ஜாடாயு, மயூரன் மற்றும் சாஹில்.
அவர்களை பார்த்ததும், "ஹாய் அப்பா, ஹாய் சித்தப்பாஸ்" என்று சொல்லிவிட்டு, "காக்கி மாமா பால் போடுங்க" என்று அவன் புறம் திரும்பி விட்டாள்.
மூவருக்கும் காதில் புகை வராத குறை தான்.
"என் பொண்டாட்டிய மட்டும் இல்ல பொண்ணையும் மயக்கி வச்சிருக்கான்" என்று பற்களை கடித்து கொண்டு ஜாடாயு கூற, மயூரனோ, "பேபி, நீ வா சித்தப்பா கூட விளையாடு" என்று கூப்பிட, குழந்தையோ, "போங்க சித்தப்பா நீங்க எப்போ பாரு, ஏ போர் ஆப்பிள்னு போர் அடிக்கிறீங்க... காக்கி மாமா என்கூட ஷிஞ்சான் பாக்குறாரு தெரியுமா? அது மட்டும் இல்ல என் கூட ப்ரோசன் கூட பார்த்தாரு" என்று அவள் கண்களை விரித்து சொல்ல, "ப்ரோசனா? தண்ணிய எப்படி ஐஸ் கட்டி ஆக்குறதுனா?" என்று சாஹில் விழி விரித்து கேட்கவும், "ஐயோ உங்களுக்கு பிரைன் இல்ல சித்தப்பா.. அது மூவி பேரு... இப்படி நீங்க போர் அடிக்கிறீங்க அதான் நான் என் காக்கி மாமா கூட விளையாடுறேன்" என்று மீண்டும் விளையாட ஆரம்பித்து இருந்தாள்.
இவர்கள் மூவரும் அவனை முறைத்து கொண்டு இருக்க, காகேஷோ அவர்கள் முறைப்பது தெரிந்தும் சிரிப்பை அடக்கி கொண்டு விளையாட்டை தொடர்ந்து கொண்டு இருந்தான்.
மூவரும் உள்ளே நுழைந்தனர், அங்கே மைனா, பரி மற்றும் குயில் அமர்ந்து சிட்டுவுடன் பேசி கொண்டு இருந்தார்கள்.
அவர்களை பார்த்ததும், "சார்" என்று மூவரும் எழுந்து நிற்க, சிட்டு மட்டும் தான் அப்படியே அமர்ந்து இருந்தாள்.
"உட்காருங்க" என்று சொன்ன ஜடாயு சிட்டுவை பார்க்க, அவளோ அங்கிருந்து எழுந்து சமையல் அறைக்குள் சென்று விட்டாள்.
"சார் இப்போ வள்ளி எப்படி இருக்கா?" என்று சாஹிளை பார்த்து கேட்க, "உயிருக்கு போராடிகிட்டு இருக்கா... அவ மனசு வச்சி தான் வெளிய வரணும். பார்ப்போம்" என்று அவன் சொல்லும் போதே, அங்கே ஷ்ராவனியுடன் வந்தான் காகேஷ்.
"அப்பா" என்று இப்போது ஷ்ராவனி ஜடாயுவின் மடியில் அமர்ந்து விட்டாள்.
"என்ன பிளான் நெக்ஸ்ட்?" என்று காகேஷ் கேட்க, "உன்ன தெய்வயானை கார்த்திகேயன் கேஸை பார்க்க சொன்னேன் நினைவு இருக்கா?" என்று ஜடாயு கேட்க, "பார்த்துட்டு தான் இருக்கேன், ஒரு க்ளூவும் கிடைக்கல என்ன பண்றது?" என்று கேட்க, அனைவரிடமும் மௌனம் தான்.
"நான் இன்னைக்கு நைட் ஷிப்ட் போறேன். நேத்து நைட் வள்ளிக்கு ஏதோ பிக்ஸ் வந்திருச்சுனு போன் வந்தது அதனால இன்னைக்கு நைட் நானே போகலாம்னு இருக்கேன்" என்று சாஹில் சொல்ல, "ஓகே சாஹில் நீ ஏதாவது ப்ரோப்லேம் வந்தா சொல்லு" என்று ஜடாயு சொல்லவும், அவனும் தலையசைத்து கொண்டான்.
பின்பு ஆண் மகன்கள் அனைவரும் அவர்களின் வீட்டிற்கு செல்ல ஆயத்தமாக, ஜடாயுவோ சிட்டுவை திரும்பி பார்க்க, இருவரின் கண்களும் உரசி கொண்டன.
அவனும் நகர்ந்து சென்று விட்டான்.
காகேஷும், "நானும் கிளம்புறேன்" என்று சொன்னவன், என்ன நினைத்தானோ, "எனக்கு ரொம்ப கிளிட்டியா இருக்கு டி.. என்னால தான்..." என்று அவன் ஆரம்பிக்கும் போதே, "அப்படி எல்லாம் இல்ல விடு" என்று அவள் அவனை வழி அனுப்பி வைத்து இருந்தாள்.
பரிக்கு ஒரு கேள்வி இருந்தது.
"மேம்" என்று அழைத்தவள், "இந்த ஏசிபி எப்படி உங்களுக்கு பிரண்ட் ஆனாரு?" என்று கேட்டுவிட, சிட்டுவின் இதழ்கள் தாமாக வளைந்தன.
"அவன் எங்க எனக்கு பிரண்டா இருந்தான்? நாங்க எப்படி மீட் பண்ணோம் தெரியுமா?" என்றவளின் நினைவுகள் காகேஷும் அவளும் முதன்முதலில் சந்தித்த அந்த நாளை நோக்கி பயணித்தது.
சிட்டு மற்றும் காகேஷின் நட்பதிகாரம் அடுத்த அத்தியாயத்தில் இருந்து!
அத்தியாயம் 17
அது தான் சிட்டு இந்த பள்ளிக்கு வரும் முதல் நாள். ஆறு வயது சிறுமி அவள். முதலாம் வகுப்புக்கு செல்ல தயாராக இருந்தாள்.
"தாத்தா குடுமி போட்டு விடுங்க" என்று அவளின் தாத்தாவின் முன் வந்து நிற்க, அவளின் தாத்தா காசிநாதனும் வந்து, "தோ வந்துட்டேன் கண்ணு" என்று சமையல் வேலைகளை எல்லாம் முடித்து வந்து அவளுக்கு குடுமி போட்டு கொண்டு இருந்தார்.
அவளுக்கு அம்மா அப்பா இல்லை அவளது தாத்தா தான் அவளை படிக்க வைத்து கொண்டு இருந்தது.
"புது ஸ்கூலுக்கு போக ரெடியா தங்கம்?" என்று அவர் கேட்க, அவளும் அவளது இரட்டை குடுமியுடன் தலையசைத்து கொண்டாள்.
பள்ளிக்கு செல்லும் போதே, "யாருக்கும் பயப்பட கூடாது. தப்புனா துணிஞ்சி நின்னு நீ கேட்கணும். அதே மாதிரி தப்பு பண்ணா சாரி சொல்லவும் தயங்க கூடாது" என்று சொல்லிக்கொண்டே தான் கூட்டிச்சென்றார்.
அவளும் தலையசைத்து கொண்டே வர, இருவரும் ஒரு வழியாக பள்ளியும் வந்து விட்டார்கள்.
"பார்த்து போய்ட்டுவா கண்ணு" என்று சொல்லி அனுப்பி வைத்து விட்டு அவர் வேலைக்கு சென்று விட்டார்.
அவளும் புது வகுப்பறைக்குள் நுழைய, அங்கே எங்கே இடம் கிடைக்கும் என்று பார்த்து கொண்டே இருந்தாள்.
அங்கே ஒரு ஒரு மாணவன் மட்டும் தனியாக அமர்ந்து இருக்க, அவளும் அங்கே சென்று அமரும் சமயம், அவளை பிடித்து இழுத்து மற்றோரு மாணவனின் கை.
"அந்த காக்கா பையன் பக்கத்துல போய் உட்காராத உன் ஸ்னாக்ஸ் எல்லாம் சாப்டிருவான். நான் சொல்றத கேளு" என்று சொல்லவும், அவளும் யோசனையுடன் கையை உருவி அவனின் அருகில் தான் சென்று அமர்ந்தாள்.
இளம்கன்று பயம் அறியாது அல்லவா!
அவளுக்கும் பயம் எல்லாம் இல்லை.
"நான் உன் ஸ்னாக்ஸ் எல்லாம் சாப்டிருவேன்" என்று காகேஷ் அவளிடம் முதலில் பேச, அவளோ அவனை பார்த்தவள், அவளின் பையில் இருந்த ஸ்னாக்ஸ் டப்பாவை எடுத்து, "சாப்டுக்கோ" என்று கொடுத்து விட்டாள்.
அவனுக்கோ அதிர்ச்சி, இப்படி எல்லாம் சிறுபிள்ளைகள் அவர்களின் தின்பண்டத்தை கொடுக்கமாட்டார்கள் அல்லவா?
"உண்மையாவே உனக்கு வேணாவா?" என்று கேட்க, "உனக்கு தானே வேணும். சாப்டுக்கோ" என்று சொன்னவள் அதற்கு மேல் ஒரு வார்த்தை பேசவில்லை.
வகுப்பு ஆசிரியர் வரவும் அனைவரும் அதில் கவனம் செலுத்த ஆயுதமாகி விட்டார்கள்.
மதிய உணவு நேரமும், "நான் உன் முட்டை கொஞ்சம் எடுத்துக்கவா?" என்று கேட்க, அவளும் இரண்டு முட்டைகளில் ஒன்றை எடுத்து அவனின் டப்பாவில் போட்டு விட்டாள்.
இருவரும் அமைதியாக உண்டனர். வகுப்பில் உள்ள மாணவர்கள் அனைவரும் அவர்களை தான் பார்த்து கொண்டு இருந்தனர். காகேஷிடம் தினமும் ஒரு பிரச்சனை அதுவும் உணர்விற்காக என்று இருக்கும் மாணவர்கள் அனைவரும் சிட்டு அமைதியாக உண்பதை கண்டு உலக அதிசயம் போல தான் பார்த்தார்கள்.
சாப்பிட்டு முடித்த பிறகு தான், "ஏன் உனக்கு உன் லன்ச் பிடிக்கலையா?" என்று கேட்டு இருந்தாள் சிட்டு.
காகேஷ் அவளை நிமிர்ந்து பார்த்தான்.
"என் தாத்தா நல்லா சமைக்க மாட்டேங்குறார்" என்று அவன் உதட்டை பிதுக்கி சொல்லவும், "சரி நான் என் தாத்தா கிட்ட சொல்லி உனக்கும் ஒரு லஞ்ச் பாக்ஸ் எடுத்துட்டு வரேன்" என்று சொல்லி விட்டாள்.
மாலை நேரம் காகேஷின் தாத்தா வரதராஜனும், சிட்டுவின் தாத்தா காசிநாதனும் அவர்களை அழைக்க வந்தார்கள்.
சிட்டுவோ, "தாத்தா இவன் தாத்தா சமைக்கறது இவனுக்கு பிடிக்கலையாம், இவனுக்கும் சேர்த்து நாளைல இருந்து லன்ச் கொடுத்து விடுங்க" என்று மழலை மாற குரலில் காகேஷை சுட்டி காட்டி கூற, அவனின் தாத்தாவிற்கு தான் அதிரிச்சியாக இருந்தது.
"டேய் என்ன டா இதெல்லாம்? எப்பவும் பிரச்சனையா இழுத்துட்டு வருவ, இன்னைக்கு இப்படி என் மானத்தை வாங்குற" என்று அவர் காகேஷை பார்க்க, "என்ன பண்ண வராதா நீ சமைக்கறது எனக்கு பிடிக்கல" என்று அவன் தோளை உலுக்கி சொல்ல, காசிநாதனோ சிரித்து கொண்டே, "பரவால்ல நான் நாளைல இருந்து கொடுத்து விடுறேன்" என்று அவனின் மதிய உணவு பையை வாங்கி கொண்டார்.
அதற்கு பிறகு இருவரின் வீடும் சிறிது அருகில் தான் இருந்தது என்பதால், பேசிக்கொண்டே ஒன்றாக சென்று விட்டனர்.
அடுத்த நாளில் இருந்து சிட்டுவுடன் சேர்த்து காகேஷிற்கும் உணவு கொடுத்தார் காசிநாதன்.
"சிட்டு.. அப்படினா சிட்டு குருவி தானே! அப்போ நீ ஸ்பாரோ" என்று காகேஷ் மதிய நேரம் ஒன்றக விளையாடும் நேரம் சொல்ல, "ஆமா நான் ஸ்பாரோ நீ காக்கா" என்று அவள் சொல்லவும், "என்ன பார்த்தா காக்கா மாதிரியா இருக்கு" என்று அவன் கோவமாக முகத்தை வைத்து கொண்டு கேட்க, "காகேஷ்னா காக்கா தானே டா" என்று அவள் கேட்கவும், "லூசு" என்று அவளின் தலையில் தட்டியவன், "காகேஷ்னா கருடாழ்வார்ன்னு அர்த்தம்" என்று சொல்ல, "டேய் டேய் கதை விடாதா, கருடனுக்கு ஜடாயுன்னு தான் பேரு இருக்கு.. நீ காக்கா தான்... அது தான் ஈஸி நான் இதோட உன்ன காக்கானே கூப்பிடுறேன்" என்று அவள் சொல்லிவிட்டு சாப்பிட, அவனோ, "சரி தான் போ டி ஸ்பாரோ" என்று சாப்பிட துவங்கி விட்டான்.
இப்படி துவங்கியது தான் அவர்களின் நட்பு. உணவிற்காக துவங்கிய நட்பு என்று உணர்வு பூர்வமாக மாறியது என்று அவர்களுக்கே தெரியாது. அறியா வயதில் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் ஆரம்பித்தது.
அந்த வருடமே, சிட்டு ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள, காகேஷும் கலந்து கொண்டான்.
ஒரு சிறுவன் வேண்டுமென்றே சிட்டுவை கீழே தள்ளி விட, காகேஷோ அந்த சிறுவனை தள்ளிவிட்டு இருந்தான்.
பெரிய பஞ்சாயத்தே ஆகி விட்டது.
அந்த சிறுவனின் பெற்றோர் வந்து, "எப்படி எங்க பையன கீழ தள்ளி விடலாம்?" என்று கேட்க, காகேஷோ, "உங்க பையன் எப்படி என் ஸ்பாரோவ கீழ தள்ளி விடலாம்?" என்று ஆறு வயதில் அவன் கேள்வி கேட்க, "இந்த வயசுலயே என்ன பேச்சு பேசுறான்? அப்பா அம்மா வளர்த்து இருந்தா தானே மரியாதை தெரியும்" என்று அந்த சிறுவனின் அம்மா பேசிவிட, அவ்வளவு தான் சிட்டுவோ, "நீங்க தானே ஆன்டி உங்க பையன தினமும் கொண்டு வந்து விடுறிங்க? நீங்க தானே வளர்க்குறீங்க? ஒரு காம்படீஷன்ல சீட் பண்ணி ஜெயிக்க கூடாதுனு சொல்லி கொடுக்கலயா?" என்று கேட்கவும், வாயடைத்து தான் போய்விட்டார் அந்த பெண்மணி.
காசிநாதன் மற்றும் வரதராஜன் கூட இதற்காக பேசவும், அமைதியாக சென்று விட்டனர்.
அவளுக்காக உடன் இருந்த நண்பன் காகேஷ் என்றால், அவனுக்காக எதிரித்து நின்று கேள்வி கேட்ட பெண் தோழி சிட்டு தான்.
காகேஷ் ஒன்றும் அமைதியான மாணவனும் இல்லை, வகுப்பு நடக்கும் போதெல்லாம் அவளின் இரட்டை குடுமியில் ஒன்றை ஆட்டி கொண்டே இருப்பான்.
சிட்டு பல நேரம் அதை கண்டு கொள்ளாமல் இருந்தாலும், சில நேரம் அவளுக்கும் கோவம் வந்து விடும்.
"முடிய விடு டா" என்று சில நேரம் அவள் கத்தவும், அவர்களின் ஆசிரியர்கள் இதை பார்த்து, இருவரையும் வெளியே அனுப்பி விடுவார்கள்.
இது காகேஷிற்கு குதூகலமாக தான் இருக்கும். சிட்டு தான் அவனை முறைத்து கொண்டு நின்று இருப்பாள்.
"டேய் காக்கா உன்னால தான் டா நான் இப்போ வெளியே நிக்குறேன்" என்று அவள் பற்களை கடித்து கொண்டு பேசவும், "ஜாலியா இரு ஸ்பாரோ... எப்ப பாரு கிளாஸ் உள்ளேயே இருந்து என்ன பண்றது. பறந்து விரிந்த உலகத்தை பாரு" என்று அவன் சொல்லும் போதெல்லாம், அவனின் தலையை பிடித்து இழுத்து நங் நங் என்று கொட்டுவாள்.
"ராக்ஸஸி விடு டி" என்று இருவரும் பின்பு அடித்து கொண்டாலும் உடனே சமாதனம் ஆகி விடுவார்கள்.
இப்படியே வருடங்கள் ஓடின.
பதினான்கு வயது இருக்கும் அவர்களுக்கு!
ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தார்கள்.
காகேஷ் மாறவே இல்லை, சிட்டுவும் மாறவே இல்லை. ஆனால் உலகம் இப்போது அவர்களை பார்க்கும் பார்வை தான் மாறி விட்டது.
சிட்டு பருவம் ஏய்தி ஒரு வருடம் ஆகி விட்டது.
பெரிய பெண்ணாகி விட்டாள் என்று உலகம் சொன்னாலும் காகேஷிற்கு இன்றும் அவள் அவனின் ஸ்பாரோ தான்.
"ஹே ஸ்பாரோ, உன் லன்ச் பாக்ஸ் கொடு டி" என்று பிடிங்கி அவன் சாப்பிடவும், அவளோ, "டேய் பைத்தியம், அதையே தான் என் தாத்தா உன் பாக்ஸ்ல வச்சி இருக்காரு.. இன்னும் என் பாக்ஸை ஏன் டா பிடுங்கி திங்குற?" என்று அவள் கத்த, "ஷ்ஷ்.. ஏன் இவளோ டென்சன்? அப்புறம் பிபி வந்துரும். கூல்! அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல.. உன் பாக்ஸ்ல பிடிங்கி தின்னா தான் எனக்கு என்னவோ சாப்பிட்டா மாதிரியே இருக்கு" என்று அவன் சொல்லவும், "இருக்கோம் இருக்கோம். காக்கா பையலே" என்று திட்டி கொண்டே தான் இருவரும் சாப்பிடுவார்கள்.
இப்படியே பழகியும் போய் விட்டது.
ஒரு நாள் சிட்டுவும் காகேஷும் நடந்து சென்று கொண்டு இருந்தார்கள்.
அப்போது அவர்களின் வகுப்பில் பயிலும் மற்றோரு மாணவன் வந்து அவர்களின் முன் நின்றான்.
காகேஷும் சிட்டுவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். அவனோ வந்து சிட்டுவின் முன், ஒரு கடிதத்தை நீட்ட, சிட்டுவோ அதை வாங்கவா இல்லையா என்று யோசித்து கொண்டே நின்று இருந்தாள்.
பின்பு அதை வாங்கியது என்னவோ காகேஷ் தான்.
வாங்கியவன் சும்மா இருப்பானா என்ன, அந்த கடிதத்தை படிக்கவும் ஆரம்பித்து விட்டான்.
அவனுக்கு சிரிப்பு தாங்கவே முடியவில்லை. அது காதல் கடிதம் தான்.
"உனக்கு லவ் லெட்டர் கொடுத்து இருக்கான் டி ஸ்பாரோ" என்று அவன் சொல்லவும், சிட்டுவோ அந்த பையனை பார்க்க, அவனோ, "உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் சிட்டு" என்று சொல்லி முடிக்கும் முதல் அந்த பையனின் கன்னம் பழுத்து இருந்தது.
"படிக்கிற வயசுல காதலா? போய் படிக்கிற வழிய பாரு" என்று அவள் சொல்லவும், அவனுக்கோ கோவம், "ஆமா நீ பெரிய உத்தமி, இவன் கூட பிரென்ட்னு சொல்லி கூத்து தானே அடிச்சிக்கிட்டு இருக்க... இதுக்கு பேரு பிரண்ட்ஷிபா?" என்று கேட்கவும், காகேஷ் அவனை அடிக்க வரும் முதல், அவனின் கையை பற்றியவள், "ஆமா இதுக்கு பேரு தான் பிரென்ட்ஷிப் அவன் கிட்ட இருந்து எப்படி பிரண்டா இருக்கணும்னு கத்துக்கோ... வந்துட்டான்" என்று சொல்லி அவனையும் இழுத்து கொண்டு போய்விட்டான்.
"அவன் மொகரைய கிழிச்சிட்டு வந்து இருக்கனும்" என்று காகேஷ் பற்களை கடித்து கொண்டு பேசவும், அவளோ, "எத்தனை பேரு முகத்தை அப்போ கிழிப்பை? உலகம் இப்படி தான் பேசும். அவங்களுக்கு எல்லாம் விளக்கம் கொடுத்துக்கிட்டு இருந்தா அப்புறம் வாழ்க்கை நரகம் ஆகிடும்" என்று அவள் சொல்லவும், அவனுக்கும் அது தான் சரி என்று பட்டது.
அதற்கு மேல் அவர்கள் எதுவும் பேசவில்லை. ஒரு வாரம் சென்று இருக்கும்.
சிட்டு கடையின் வாசலலில் நின்று கொண்டு, "போ டா போய் வாங்கிட்டு வா" என்று அவள் அனுப்ப, காகேஷோ பேந்த பேந்த முழித்து கொண்டு நின்று இருந்தான்.
அத்தியாயம் 18
"இப்போ போல சாவடிச்சிருவேன்" என்று சிட்டு திட்டவும், "போய் தொலையுறேன் டி" என்று சொல்லிக்கொண்டே தயங்கி தயங்கி அந்த மருந்தகத்திற்குள் நுழைந்தவன், அங்கிருந்த பெண்மணியை பார்த்து, தயக்கத்துடன், "அக்கா சானிட்டரி நாப்கின் கொடுங்க" என்று கேட்கவும், அந்த பெண்மணி மட்டும் அல்ல, அங்கிருந்த அனைவரும் அவனை தான் பார்த்தார்கள். பதினான்கு வயது சிறுவன், சானிட்டரி நாப்கின் வாங்க வந்து இருக்கிறான் என்றால் அப்படி தானே பார்ப்பார்கள்.
"கொடுங்க அக்கா" என்று அவன் மீண்டும் சொல்ல, பேப்பரில் சுத்த சென்றவளிடம், "எதுக்கு பேப்பர்ல சுத்துறீங்க? இது என்னனு யாருக்கும் தெரியாதா என்ன? இல்ல எதுக்கு யூஸ் பண்ணுவாங்கனு யாருக்கும் தெரியாதா? எல்லாம் தெரியும் தானே! இதெல்லாம் ஒரு காமன் விஷயம். உண்மையா சொல்லனும்னா இது ஒரு நார்மல் பொருள் தான். எனக்கே இத வாங்க வர தைரியம் இல்ல. என் பிரென்ட் தான் வாங்கி வர சொன்னா... அப்போ எனக்கும் கொஞ்சம் தயக்கம் இருந்துது... ஆனா நீங்கலாம் பாக்குறத பார்த்து தான் இது ஒன்னும் தப்பானது இல்லையேன்னு தோணுது" என்று அவன் சொல்லவும், அந்த பெண்மணியும் அப்படியே அந்த பாக்கெட்டை அவனிடம் கொடுக்க, அவனிடம் ஒரு பெருமிதம் இருந்தது.
அதை வாங்கும் போது அவனுக்கு என்ன உணர்வென்று தெரியவில்லை. எதையோ சாதித்தது போன்று தான் தோன்றியது.
அவன் வாங்கி வந்து சிட்டுவின் கைகளில் கொடுக்க, அவளோ அவனை பார்த்து, "டேய் காக்கா என்ன நோபல் ப்ரைஸ் வாங்குற போல பீல்ல வர! இது வெறும் நாப்கின் தான்" என்றவள் சொல்லவும், "ஆனா எனக்கு நோபல் ப்ரைஸ் வாங்குன போல தான் இருக்கு ஸ்பாரோ... ரொம்ப தேங்க்ஸ் இந்த எக்ஸ்பிரியன்சை எனக்கு கொடுத்ததுக்கு" என்று அவன் சொல்லவும், "போதும் போதும் ரொம்ப நெஞ்சை நக்காத... வா போகலாம்" என்று இருவரும் சென்று விட்டனர்.
நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தன. இருவரும் பனிரெண்டாம் வகுப்பும் முடித்து விட்டு இருந்தார்கள். சிட்டு தான் அந்த பள்ளியிலேயே முதல் மாணவி. காகேஷும் நல்ல மதிப்பெண்கள் தான் பெற்று இருந்தான்.
இருவரும் ஒரே கல்லூரிக்கு விண்ணப்பித்து இருந்தார்கள்.
அவர்களின் தாத்தாக்களும், "இரண்டு பேருக்கும் ஒரே காலேஜ்ல சீட் கிடைச்சா நல்லா இருக்கும்ல" என்று பேசி கொண்டு இருந்தார்கள்.
நினைத்தது போலவே அவர்களுக்கு ஒரே கல்லூரியில் தான் அனுமதி கிடைத்தது.
"இரண்டு பேரும் ஒரே காலேஜ் ஸ்பாரோ" என்று அவன் ஆர்பரித்தலும் அவளோ, "ம்கூம் உன் தொல்லை இன்னும் நான் அனுபவிக்கணுமா?" என்று கடவுளிடம் கைகள் கூப்பி கேட்டாலும், அவளுக்கும் அவனுடன் கல்லூரி செல்ல இருப்பதில் மகிழ்ச்சி தான்.
ஆனால் இருவரும் வெவ்வேறு பிரிவுகளில் தான் சேர்ந்து இருந்தார்கள்.
அதுவும் பெரிய கல்லூரி தான்.
பெரிய இடத்து பிள்ளைகள் அதிகம் படிக்கும் கல்லூரியாக இருந்தாலும் நல்ல மதிப்பெண் பெற்றவர்களுக்கும் எப்போதும் அங்கே இடம் உண்டு.
"காலேஜ் செம்மயா இருக்கு டி ஸ்பாரோ... இங்கயே ஒரு நல்ல பொண்ணா பார்த்து நான் செட் பண்ணி எடுத்திறனும்" என்று காகேஷ் சொல்லி கொண்டு இருக்கும் போதே, "உன் மொகரைக்கு இதெல்லாம் தேவையா?" என்று சிட்டு கேட்க, "ஏன் எனக்கு என்ன? நீ வேணா பாரு.. எனக்கான தேவதை எங்கையாவது பிறந்து இருப்பா... அவளை பார்க்கும் போது நான் கண்டிப்பா விட மாட்டேன்" என்று அவன் சொல்லவும், அவளின் மனத்திலும் அதே எண்ணம் தான். அவனுக்கு என்று கிடைக்கும் அந்த பெண் யாராக இருந்தாலும் அவனின் குழந்தை மனதையும், குறும்பு குணத்தையும் அனுசரித்து போக வேண்டும் என்கிற எண்ணம் தான்.
இருவரும் அவரவர் வகுப்பறைக்குள் போய் விட்டு இருந்தனர்.
அப்போது தான் அந்த வாரம் அவர்கள் கல்லூரியில் புதிய மாணவர்களை வரவேற்பதற்காக நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் புதிய மாணவர்களும் அவர்களின் திறமையை வெளிப்படுத்தலாம் என்றும் சொல்லி இருந்தார்கள்.
"நீ கிட்டார் வாசி டா" என்று சிட்டு சொல்ல, "ஏன் இல்ல ஏன்னு கேட்குறேன். அதுவே அரைகுறையா கத்துக்கிட்டது. அத நான் எல்லாரு முன்னாடியும் காட்டி என்ன எல்லாரும் அழுகின தக்காளி மற்றும் முட்டை வச்சி அடிப்பாங்க...அதை நீ பார்க்கணும் அதனா உன் எண்ணம்?" என்று அவன் கேட்க, "ச்ச சரியா கண்டு பிடிச்சிட்டியே டா.. நீ அடி வாங்குறத பார்க்க நான் எவளோ ஆர்வமா இருந்தேன் தெரியுமா" என்று அவள் பாவமாக சொல்லவும், "சிங்கம் சிக்கும் சிறுவண்டு சிக்காது... அதே மாதிரி காக்கா தான் சிக்கும் இந்த காகேஷ் சிக்க மாட்டான் டி என் ஸ்பாரோ" என்று சொன்னவன், பின்பு திரும்பி, "நீ என்ன கவிதை சொல்ல போறியா?" என்க அவளும் ஆமாம் என்று ஆமோதித்தாள்.
அவளிடம் இருக்கும் திறமை அது!
"இந்த தடவை எதை பத்தி?" என்று கேட்க, "சஸ்பென்ஸ்" என்று சொல்லி இருவரும் முடித்து கொண்டனர்.
"பார்ட்டிசிபேட் பண்றவங்க எல்லாம் இந்த ஈவென்ட் ஆர்கனைஸர் நம்ப காலேஜின் கனவு கண்ணன் ஜடாயூரதன் கிட்ட பேரு கொடுக்குமாம் ஸ்பாரோ" என்று சொல்ல, "சரி வா போகலாம்" என்று அவனையும் கூட்டி கொண்டு தான் போய் இருந்தாள்.
பெண்கள் கூட்டம் அலைமோதியது.
"என்ன டா இவளோ கூட்டம்?" என்று அவள் கேட்க, "எல்லாரும் பார்ட்டிசிபேட் பண்ண வாரங்களோ இல்லையோ அந்த ஜடாயுவை பார்க்க வந்து இருப்பாங்க போல டி" என்று அவன் சொல்லவும், "சரி தான்" என்று சொல்லிக்கொண்டே அவளும் அந்த varisaiyil நின்று இருந்தாள்.
"அவன் என்ன அப்படி ஒரு ஆண் அழகனா?" என்று கேட்டுக்கொண்டே காகேஷ் நெருங்க, "ஏன் டா இப்படி பொறாமைல பொங்குற?" என்று அவள் கேட்க, "ஹே இவளோ பொண்ணுங்க பின்னாடி வர்றதெல்லாம் எவளோ பெரிய வரம் தெரியுமா? உனக்கு அதெல்லாம் புரியாது" என்று சொல்லிக்கொண்டே செல்லவும், அவளுக்கு இவனை எதை கொண்டு அடித்தால் தகும் என்று தான் தோன்றியது.
இருவரும் நெருங்கியும் விட்டனர். அவனின் கேசம் தான் முதலில் அவர்களின் கண்களில் பட்டது.
பின்பு நகர்ந்து செல்ல, அங்கே நின்று இருந்தான் ஜடாயு.
அவனை பார்த்ததும் காகேஷ் தான், "ஹே செம்ம ஹண்ட்ஸம்மா இருக்கான் டி ஸ்பாரோ.. இவனை கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிக்கோ" என்று காகேஷ் சொல்ல, "சும்மா இரு டா" என்று சொன்னவள், ஜடாயுவின் கண்ணை மட்டும் தான் பார்த்தாள்.
அவனின் அழகு ஏனோ அவளை அசைத்து கூட பார்க்க வில்லை. அவளை பொறுத்தவரை புறத்தின் அழகை விட, அகத்தின் அழகு தான் முக்கியம் என்று நினைப்பவள் அவள்.
"வெல்கம் டு தி காலேஜ்... ப்ரெஷர் டேல என்ன பண்ண போறீங்க?" என்று ஜடாயு அவனின் வசீகர குரலில் கேட்டான். பாடகன் அவன் குரலுக்கு பஞ்சம் இருக்குமா என்ன? அவனின் குரலில் பாடும் போது இருக்கும் மென்மை அவன் அதிகாரம் செய்யும் போது இருப்பதில்லை என்பது தான் உண்மை.
"நான் இல்ல இவ தான் கவிதை சொல்ல போறா" என்று காகேஷ் சொல்ல, "ஏன் அத மேடம் சொல்ல மாட்டங்களோ?" என்று ஜடாயு அவளை பார்க்க, அவளோ அவனை பார்த்து, "சிட்டு கவிதை சொல்ல போறேன்" என்று அவனின் விழிகளை நோக்கி கொண்டே சொல்லி இருந்தாள்.
ஜடாயுக்கு ஏனோ இந்த பெண்ணின் மேல் ஒரு ஆர்வம். அவனை ஆர்வமாக ஒரு வித மயக்கத்துடன் பார்க்கும் பெண்களுக்கு மத்தியில் இவள் அவனை பார்க்கும் விதமே வித்யாசமாக இருந்தது.
அவளின் விழிகளில் தைரியம் இருந்தது. கண்ணியம் இருந்தது. வீரம் நிறைந்து இருந்தது. ஆண்களுக்கு எப்போது பெண்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் நிச்சயம் இருக்கும். அவர்களின் கர்வத்தை என்றும் விட்டு கொடுக்க மாட்டார்கள். ஆனால் ஜடாயு கொஞ்சம் மாறுபட்டவன், அவனுக்கு இப்படி நேர்த்தியாக இருக்கும் பெண்கள் மீது தான் நாட்டம் அதிகம். அடங்கி போகும் பெண்களை விட, அவர்களின் ஆதிக்கத்தை போராடி பேரும் பெண்களின் மீது அவனுக்கு எப்போதும் மதிப்பும் மரியாதையும் இருக்கும்.
"இன்னும் நீங்க எழுதவே இல்ல சார்" என்று அவள் சொல்லவும், "எழுதிட்டேன்" என்று அவனின் பதில் வர, "பேனா அசையவே இல்ல" என்று காகேஷ் சொல்லவும், அவனை பார்த்து முறைத்தவன், "அதெல்லாம் அப்படி தான்..நாளைக்கு பார்ப்போம்" என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்து விட்டான்.
காகேஷும் சிட்டுவும் அவனை விட்டு அகன்று செல்ல, "சிட்டு" என்கிற ஜாடாயுவின் குரலில் சிட்டு மற்றும் காகேஷ் இருவரும் திரும்பினார்கள்.
"எந்த டாபிக் பத்தி கவிதை சொல்ல போற?" என்று அவன் கேட்க, அவள் பதில் அளிப்பதற்கு முன்னே, "அது சஸ்பென்ஸ் நாளைக்கு பார்த்துக்கோங்க" என்ற காகேஷ் சிட்டுவின் கைகளை பிடித்து இழுத்து கொண்டு சென்று விட்டான்.
"ரொம்ப தான் ப்ரொடெக்ட் பன்றான்" என்று வாயில் முணுமுணுத்து கொண்டான் ஜடாயு.
"ஏன் டா இப்படி பிடிச்சி இழுத்துகிட்டு வர?" என்று சிட்டு கேட்க, "அவன் உன்ன பார்க்குற பார்வையே சரி இல்ல" என்று காகேஷ் சொல்ல, அவளோ அவனை மேல் இருந்து கீழே பார்த்தவள், "அவன் எவளோ அழகா இருக்கான். என்னை போய் தப்பா பார்ப்பானா? லூசு" என்று திட்டு விட்டு தான் அவனுடன் சென்றாள்.
"நாளைக்கு என்ன தான் டி டாபிக்ல கவிதை சொல்ல போற?" என்று அவன் மீண்டும் கேட்க, "இன்னும் இருபத்தி நாலு மணி நேரத்துல தெரிய தானே போகுது. சற்று பொறு காக்கா" என்று சொல்லி இருவரும் வீட்டிற்கு வந்து விட்டார்கள்.
அடுத்த நாளும் விடிந்தது. அன்று நாள் முழுவதும், "என்ன டாபிக்ல கவிதை சொல்ல போற?" என்பதை கேட்டே அவளை நச்சரித்து விட்டான் காகேஷ்.
அவளுக்கு இந்த கேள்வி கேட்டு சளித்தே விட்டது.
"இன்னும் ஒரு மணி நேரம் வெய்ட் பண்ணு டா காக்கா" என்று அவள் அவனின் தலையில் நங் என்று கொட்டும் சமயம், அங்கே வந்தான் ஜடாயு.
"கவிதை ரெடியா?" என்று அவன் கேட்க, எப்போதும் போல் அவள் பேசுவதற்கு முன்பு காகேஷ் பேசி விட்டான்.
"ஏன் ரெடி இல்லனு சொன்ன எழுதி தருவியா?" என்றவனை பார்த்து, "அவளுக்காக எழுதி தருவேன்" என்றதும் தான் தாமதம், "அப்போ இந்தாங்க என் அசைன்மென்ட் எழுதி கொடுங்க.. வந்த இரண்டாவது நாளே அசைன்மென்ட் கொடுத்துட்டாங்க" என்று காகேஷ் சொல்ல, ஜடாயுவோ அவனை முறைத்து, "அவளுக்கு தான் எழுதி தருவேன்னு சொன்னேன்" என்று பற்களை கடித்து சொல்லவும், "ஹே ஸ்பாரோ இந்த ஜந்துவை எனக்கு அசைன்மென்ட் எழுதி தர சொல்லு டி" என்றதும் கொந்தளித்து விட்டான்.
"யாரு டா ஜந்து?" என்று சீறிக்கொண்டு ஜடாயு வரவும், "சரி சரி இரண்டு பேரும் சண்டை போடாதீங்க... நான் ரெடி சார் நீங்க எப்போ சொன்னாலும் போய் பேசுறேன்" என்று அவள் தன்மையாக தான் பேசினாள்.
"சார் வேணாம் ஜடாயுனே கூப்பிடு" என்று அவன் சொல்ல, "ஜந்துன்னு கூப்பிடு" என்று காகேஷ் சொல்ல, மீண்டும் போர்க்களம் வெடிக்கும் முதல், அவள் காகேஷை இழுத்து கொண்டு அங்கிருந்து நகர்ந்து இருந்தாள்.
பின்பு ஜடாயு தான் மேடை ஏறி, "அடுத்து பர்போர்ம் பண்ண போறது சிட்டு பர்ஸ்ட் இயர்" என்று சொல்லி இறங்க, சிட்டுவும் மேடை ஏறினாள்.
காகேஷ் மற்றும் ஜாடாயு இருவரின் கண்களிலும் ஒரு ஆர்வம்.
எதை பற்றி கவிதை இருக்கும் என்கிற ஆர்வம் அது!
"என்ன கவிதை சொன்னிங்க?" என்று ஆர்வமாக பரினீத்தியும் நிகழ்காலத்தில் கேட்க, "அது சஸ்பென்ஸ்" என்று சிட்டு கண்களை சிமிட்ட, "ஐயோ சஸ்பென்ஸ் தாங்கல சொல்லுங்க ப்ளீஸ்" என்று பரி கேட்கவும், அவளும் அன்று சொன்ன கவிதையை சொல்ல துவங்க, காகேஷ் மற்றும் ஜாடாயுவின் கைப்பேசியில் அவள் சொன்ன கவிதையை தான் காணொளியாக பார்த்து கொண்டு இருந்தனர்.
சிட்டுவின் கவிதை அடுத்த அத்தியாயத்தில்!
அத்தியாயம் 19
சிட்டு மேடை ஏறியதும், காகேஷும் ஜடாயு இருவருமே அவர்களின் கைப்பேசியை உயிர்ப்பித்து அவர்களின் கேமராக்களை உயிர்ப்பித்து இருந்தனர்.
சிட்டுவின் கண்கள் இருந்தது என்னவோ காகேஷின் மீது தான்.
"இந்த கவிதை என் வாழ்க்கையோட ரொம்ப ரொம்ப முக்கியமான நபருக்காக!" என்று ஆரம்பித்தவள் கவிதையை சொல்லவும் துவங்கினாள்.
"என்னில் எப்போதும் மகிழ்ச்சியயை நிரப்பி வைக்கும் என் நண்பா!
யார் சொன்னது காதலுக்கு தான் வலிமை உண்டு என்று?
நட்பிற்கு இல்லா வலிமையா காதலுக்கு இருக்க போகிறது?
காதலில் காமம் உண்டு, கலவி உண்டு, எதிர்பார்ப்பு உண்டு, ஏக்கங்கள் உண்டு!
ஆனால் நட்பில் மட்டும் தான் வெறும் நண்பன் மட்டும் இருக்கிறான்.
எதிர்பார்ப்புகள் அற்று, ஏக்கங்கள் மறந்து என் புன்னகையை மட்டுமே
எனக்கு கொடுப்பவன் என் நண்பன்!
ஆண் பெண் நண்பர்களாக இருக்க முடியாது என்று யார் சொன்னது?
ஆண் பெண் நட்பு இல்லை என்றால் இன்று திரௌபதியின் மானம் காக்க பட்டு இருக்குமா?
கணவர்கள் கைவிட்ட அந்த பெண்பாவை அவளுக்கும் தான்
உடுப்பை இழந்து அவள் நிர்கதியாய் நிற்கும் போது
நட்பு கரம் நீட்டி அவளுக்கு உடுப்பை கொடுத்தவன் கண்ணன் அவளின் நண்பன் தானே!
கண்ணனுக்கு திரௌபதி அப்படி என்ன செய்து விட்டாள்?
பாண்டவர்களுக்கு வருடம் ஒருமுறை என்று அவளையே பிரித்து கொடுத்தது போல்
கிருஷ்ணன் ஒன்றும் த்ரோபதியிடம் பங்கு கேட்கவில்லை
கிருஷ்ணனுக்கு அவள் கொடுத்தது ஒரு பருக்கை
கிருஷ்ணன் அவளுக்கு கொடுத்தது ஒரு பருத்தி
ஒரு பருக்கை பசியை போக்கியது
ஒரு பருத்தி மானத்தை காத்தது
நட்பில் மட்டும் தான் கோட்பாடுகள் இல்லை
கோவங்கள் இருந்தாலும் க்ரோதங்கள் இல்லை
வாக்குவாதம் இருந்தாலும் வசைபாடல்கள் இல்லை
இல்லை என்று நீ எனக்கு என்றுமே உரைத்ததே இல்லை
உன்னை போல் ஒரு நண்பன் கிடைத்தது நான் பெற்ற வரம் அன்றோ!
உன் நட்பை நான் என்றும் யாசித்து இல்லை
நீயே எனக்கு யாசகம் வழங்கி என்னை யாசைகையாக்கி விட்டாய்
நீ இன்றி என் செய்வேன்?
இனி நீ இனின்றி என் செய்வேன்?
அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது என்பது போல்
நீ இன்றி நானும் கூட அசைய முடியா நிலைக்கு என்னை பழக்கப்படுத்தி விட்டாய்!
காகேஷ் அல்ல என் காக்கா தான்!
இன்று மட்டும் அல்ல என்றுமே என் காக்கா தான்!
எனக்கானவன் அல்ல, என்னவன் அல்ல, என்றும் என்னுள் உறைந்தவன் நீ!
என்னுள் நட்பாய் கலந்தவன் நீ!
தன்னலமற்றது நட்பு! என்னக்காக உன்னையே தன்னலமற்றவனாய் மாற்றி கொண்டவன் நீ!
பறவைகளின் அரசனே! இந்த சிட்டை உன் சிறகுக்குள் காத்து
இன்று வரை பேணியதற்கு யான் என் செய்வேன்?
நட்பதிகாரம் என்று இனி ஒரு குரலை ஏற்றினால்
நிச்சயம் காகேஷ் என்று பெயரை தான் முதலில் எழுத வேண்டும்
இல்லையேல் அது நட்பதிகாரமே இல்லை என்று
நான் உரக்க சொல்வேன்.
நட்பின் இலக்கணமே! என் நண்பா, இன்று போல் என்றும் நம் நட்பு தொடரட்டும்!
இப்படிக்கு
உன் சிட்டு
இல்லை இல்லை உன் ஸ்பாரோ!"
இத்துடன் அவள் முடித்து இருந்தாள்.
அவள் முடிக்கவும், அனைவரும் கை தட்ட, காகேஷின் கண்களில் கண்ணீர் தேங்கி இருந்தது.
அவன் நினைத்து கூட பார்க்கவில்லை. அவள் அவனுக்காக கவிதை எழுதுவான் என்று!
கனவு போல் தான் இருந்தது.
அவள் மேடையை விட்டு கீழே இறங்கி வந்து அவனின் முன் நிற்க, "என்ன டா காக்கா கவிதை எப்படி?" என்று அவள் முடிக்கும் முதல், காகேஷ் அவளை கட்டி அணைத்து இருந்தான்.
அந்த அணைப்பில் காமம் இல்லை, காதல் இல்லை, நட்பு மட்டும் தான் இருந்தது.
காதலர்கள் மட்டும் தான் கட்டி அணைக்க வேண்டுமா என்ன? நண்பர்கள் கூட அணைக்கலாம், கண்ணியத்துடன் அணைக்கலாம்.
காதலர்களின் அணைப்பில் தான் காமம் இருக்கும். ஆனால் நண்பர்களின் அணைப்பில் நேசம் இருக்கும், பாசம் இருக்கும், உனக்காக நான் இருக்கிறேன் என்கிற ஆறுதலை தவிர வேறு எதுவும் இல்லை.
"யு மேட் மீ பீல் சோ ஸ்பெஷல்" என்று அவன் சொல்லவும், "அண்ட் யு ஆர் ஸ்பெஷல்... அதுல உனக்கு டவுட் வேணாம்" என்று சொல்லவும், "ம்கூம்" என்கிற குரலின் செருமலில் இருவரும் பிரிந்தனர்.
அங்கே நின்று இருந்தது என்னவோ ஜடாயு தான்.
"கவிதை ரொம்ப நல்லா இருந்தது. இவனுக்கு தான் அந்த கவிதையா? ஏன் மா நண்பன் மட்டும் நல்லவன்னு சொல்ற, காதலன் என்ன பாவம் பண்ணான்?" என்று ஜடாயு புருவம் உயர்த்தி கேட்க, "அப்படி யாரவது இருந்தா தானே சொல்ல முடியும்! இது வரைக்கும் யாரும் இல்ல" என்று அவள் தோள் உலுக்கி சொல்லவும், "இனி வந்தா அப்போ காதலனுக்காகவும் கவிதை வருமா?" என்று ஜடாயு ஆர்வமாக கேட்க, "அது அவ காதலன் கேட்கணும், நீங்க ஏன் கேட்குறீங்க?" என்று காகேஷ் கேட்கவும், அவனை பார்த்த ஜடாயு, 'இவன் ஒருத்தன் ஓவரா பாடி கார்ட் வேலை பாக்குறான்' என்று மனதில் நினைத்து கொண்டு, "சும்மா தான் கேட்டேன்" என்று சொல்லவும், "அவளுக்கு லவர் வரும் போது தெரிஞ்சிக்கோங்க. நாங்க கிளம்பறோம்" என்று சொல்லிவிட்டு, அவளையும் அழைத்து கொண்டு சென்று விட்டான்.
அதன் பிறகு ஜடாயு, காகேஷ் மற்றும் சிட்டு மூவரும் ஓரளவு ஒன்றாக பார்த்து கொண்டதெல்லாம் கேன்டீனில் மட்டும் தான்.
ஜடாயு வருகிறான் என்றாலே, காகேஷ் சிட்டுவை கண்ணில் காட்ட மாட்டான். உட்காரும் போது கூட, இருவருக்கும் நடுவில் அவன் தான் அமர்வான்.
"இவளோ நேரம் அந்த பக்கம் தானே உட்காந்துட்டு இருந்த, இப்போ ஏன் டா மாறின?" என்று ஜடாயு கேட்கும் போதெல்லாம், "அது எதுக்கு உனக்கு? எனக்கு இந்த பக்கம் பிடிச்சி இருக்கு... அதான் மாறினேன்" என்று ஏதேதோ சொல்லி தப்பித்து கொண்டான்.
முதலாம் ஆண்டு இறுதி பரீட்சை எழுதி முடித்து இருந்தார்கள்.
ஜடாயு அவனின் படிப்பை முடிக்கும் நாள். ஆனால் அவன் முதுக்கலைக்கு அங்கேயே சேர்ந்து இருந்தான்.
"இன்னைக்கு லாஸ்ட் டே ஸ்பாரோ! வா படத்துக்கு போகலாம்" என்று சிட்டுவை அழைக்க, "தாத்தா இரண்டு பேரும் சேர்ந்து நம்பள உப்புக்கண்டம் போட்டிருவாங்க" என்று சிட்டு சொல்ல, "அதெல்லாம் நான் பார்த்துக்குறேன். தாத்தங்களை அந்த ரம்பை மேனகை, திலோத்தமையாவது கொண்டு வந்து மயக்கி உன்னை காப்பாத்துறேன் டி... என் கூட படத்துக்கு வா" என்று காகேஷ் சொல்ல, அவளும் வேறுவழியின்றி ஒப்புக்கொண்டாள்.
இதே சமயம் அங்கு வந்த ஜடாயுவோ, "என்ன படத்துக்கு போறிங்களா? நானும் வரலாமா?" என்று கேட்க, "வேணான்னு சொன்னா மட்டும் வரமா இருந்துருவீங்களா?" என்று காகேஷ் கேட்க, "உங்கிட்ட யாரு டா பேசுனா?" என்று அவனும் பதில் பேச, "நீ தான் எங்க இரண்டு பேருக்கும் நடுவுல பேசும் போது வந்த" என்று காகேஷ் ஜடாயு இருவரும் சண்டைக்கு நின்றார்கள்.
சிட்டுவுக்கோ சலிப்பாக இருந்தது.
"வாங்கா சீனியர்" என்று ஜடாயுவை பார்த்து சொன்னவள், "விடு டா" என்று காகேஷை பார்த்தும் கூறி இருந்தாள்.
மூவரும் ஒன்றாகத்தான் படத்துக்கு சென்றார்கள்.
ஜடாயு அவனின் காரில் தான் அழைத்து சென்றான்.
"உங்க அப்பா யாரு?" என்று காகேஷ் கேட்க, அவனோ, "தெரிஞ்சி என்ன பண்ண போற?" என்றவனை பார்த்து, "இல்ல கார்லாம் வச்சி இருக்கீங்களே அதான் கேட்டேன்" என்று காகேஷ் சொல்லவும், "நேரம் வரும் போது சொல்றேன்" என்றவன் திரையரங்கிற்கு வந்து விட்டான்.
மூவரும் காரில் இருந்து இறங்கி டிக்கெட் கவுண்டருக்கு செல்லவும், டிக்கெட்டையும் பெற்று கொண்டார்கள்.
காகேஷ் ஒரு பக்கம், ஜடாயு ஒரு பக்கம் என்று அமர நடுவில் சிட்டு அமர்ந்து இருந்தாள்.
படமும் ஆரம்பமானது.
படத்தின் நடுவில் சிட்டுவிடம் இருந்த பாப்கார்னில் காகேஷ் கையை விட்டு எடுத்து சாப்பிட, அவளுக்கோ சுர்ரென்று கோவம். எத்தனையோ முறை அப்படி செய்யாதே என்று அவள் சொல்லியும் அவன் செய்து கொண்டு இருக்கிறான் என்றால் கோவம் வரும் தானே!
இங்கோ இதை பார்த்து மற்றொருவனும் அவளது பாப்கார்னில் கையை விட, அவளுக்கு பொறுமை காற்றில் பறந்து போய் விட்டது.
அவர்கள் இருவரின் கையையும் நறுக்கென்று கிள்ளியவள், இருவரின் தலையிலும் கையில் வைத்து இருந்த பாப்கார்னையும் கொட்டி இருந்தாள்.
இரண்டு ஆண்மகன்களுக்கும் அதிரிச்சி தான்.
"இனி பாப்கார்ன் என் கிட்ட இல்ல.. ஓழுங்கா உங்க பாப்கார்ன் சாப்பிடுங்க... என் பாப்கார்ன்லயே கண்ணு வச்சிருக்கானுங்க" என்று கையை கட்டி அமர்ந்து படம் பார்க்க ஆர்மபித்து விட்டாள்.
மூவரும் படம் முடிய கிளம்பினார்கள்.
"நானே ட்ரோப் பண்றேன்" என்று ஜடாயு சொல்ல, அவர்களும் ஒப்புக்கொண்டார்கள்.
முதலில் காகேஷை தான் இறக்கி விட்டான்.
"பரவால்ல நான் அவளை இருக்குற இடத்துல இறங்கிக்குறேன்" என்று அவன் சொல்ல, "இங்க இருந்து அஞ்சு நிமிஷம் தான் அவ வீடு, அதுக்குள்ள உன் பிரண்டா ஒன்னும் பண்ண மாட்டேன்" என்று ஜடாயு சொல்ல, சிட்டுவும், "டேய் ஓவரா பண்ணதா இறங்கு" என்றதும் தான் இறங்கினான்.
அப்போது கூட, "வீட்டுக்கு போயிட்டு கால் பண்ணு" என்று சொல்லவும், "சப்பா டேய் முடியல டா" என்று ஜடாயு அவனின் காரை எடுத்து கொண்டு கிளம்பி விட்டான்.
"உன் பிரண்ட் ரொம்ப தான் உன்ன ப்ரொடெக்ட் பன்றான்" என்று ஜடாயு சொல்ல, சிட்டுவும் சிரித்தாள்.
"சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்க" என்று ஜடாயு சொல்ல, அவளோ சட்டென அமைதியாகி விட்டாள்.
"உனக்கு உன் பிரண்டை தான் ரொம்ப பிடிக்குமோ?" என்று கேட்க, "இல்லையே என் தாத்தாவை கூட ரொம்ப பிடிக்கும்" என்று சொல்லவும், "நீ இவளோ ஸ்ட்ரிக்ட்டா இருக்க, உன் பிரண்ட் வாலா இருக்கான். எப்படி பிரண்ட்ஸ்?" என்றவனை பார்த்து, "ஆப்போசிட் போல்ஸ் அட்ட்ரக்ட் இச் அதர்" என்று அவள் சொல்லவும், "சரி தான்" என்றவன் அவளின் வீட்டையும் நெருங்கி விட்டான்.
இறக்கி விடும் சமயம், "ரொம்ப தேங்க்ஸ்" என்று சொல்லி அவள் இறங்க, அவனோ, "சிட்டு ஒரு செகண்ட் உன் கிட்ட ஒன்னு பேசணும்" என்றவன், அவளிடம் சொன்ன விடயத்தில் அவளின் கண்கள் தான் விரிந்து விட்டன.
அத்தியாயம் 20
ஜடாயுவோ, "சிட்டு நீ இந்த தடவ காலேஜ் செர்பெர்சன் தேர்தல்ல நில்லு" என்றவுடன் அவளின் கண்கள் விரிந்தன.
"என்ன விளையாடுறிங்களா?" என்று அதிர்ச்சியாக அவள் கேட்க, "இல்ல நான் ரொம்ப சீரியஸா சொல்றேன். நான் மாஸ்டர்ஸ் பண்ண போறேன். ஆனா நம்ப காலேஜ்ல பேச்சிலர்ஸ் பண்றவங்களுக்கு இப்போ செர்பெர்சன் வேணும். எலெக்ஷன்ல நில்லு" என்று அவன் அழுத்தமாக கூறினான்.
"ஆனா அந்த பொசிஷன்ல ஸ்ரீப்ரியா நிக்க போறா" என்று அவள் சொல்ல, "அவ நின்னா என்ன? நீயும் நில்லு பெஸ்ட் கேண்டிடேட் யாரோ அவங்க வின் பன்னடோம்" என்று அவன் சொல்லவும், அவளுக்கு தயக்கம் தான் ஸ்ரீப்ரியா எவ்வளவு பெரிய இடத்து பெண் என்று அவளுக்கு தெரியும்.
ஏன் ஜடாயுவே எத்தனை பெரிய இடத்து பிள்ளை என்று அவள் அறிந்து தான் இருந்தாள்.
அவளுக்கு இதெல்லாம் தேவை இல்லை என்று தோன்றியது. ஆனால் ஜடாயுவிற்கு சிட்டுவை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்ல வேண்டும் என்கிற எண்ணம்.
"நான் யோசிச்சி சொல்லவா?" என்று அவள் தயக்கமாக கேட்கவும், "நீ நல்லா யோசி... வேணும்னா உன்னோட வீணா போன அந்த பிரண்ட் கிட்டையும் கேளு" என்று அவன் சொன்னதும், "இங்க பாருங்க என் பிரண்டா வீணா போனவன்னுலாம் சொல்லாதீங்க...அவன் எவளோ நல்லவன் தெரியுமா?" என்று அவள் கேட்கும் போதே, "ஆமா ஆமா எவளோ நல்லவன் தெரியுமா? உன்ன நான் தனியா அபேஸ் பண்ணி கூட்டிட்டு போயிருவேன்னு பின்னாடியே அவன் பைக் எடுத்து வந்து அதோ ரோடு மோனைல நின்னு பல்லை கடிச்சிகிட்டு இருக்கான்" என்று அவன் சொன்னதும் தான் முன்னாடி இருக்கும் கண்ணாடியை பார்த்தாள்.
ஆம், அவன் சொன்னது போலவே அங்கே காகேஷ் நின்று அவனது காரை தான் உற்று நோக்கி கொண்டு இருந்தான்.
"இன்னும் நீ இரண்டு நிமிஷம் கார்குள்ள இருந்தா அவனே இங்க வந்துருவான். அதனால நீ கிளம்பி போ" என்று சொல்லி அனுப்பி வைத்து இருந்தான்.
அவளுக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.
ஒரு பக்கம் காகேஷ் மறுபக்கம் ஜடாயு ஆனால் இத்தனை நாட்களில் ஒன்று அறிந்து இருந்தாள். இருவரும் ஒரே போல் தான் குணத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு செய்து முடிக்க வேண்டும் என்றால் செய்து முடித்தே தீர வேண்டும் என்கிற வேட்கை இருவரிடமும் கொட்டி கிடந்தது. ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் கிடையாது.
அவள் உள்ளே சென்ற பின்பு, ஜடாயு காகேஷின் அருகில் காரை நிறுத்தி இருந்தான்.
"உன் பிரண்டை ஒன்னும் பன்னிரல டா நான்" என்றதும், "உன்னால ஒன்னும் பண்ண முடியாதுன்னு தெரியும் இருந்தாலும் அவ கிட்ட அப்படி என்ன பேசிகிட்டு இருந்த?" என்று கேட்டான்.
"அதை உன் நண்பியே சொல்லுவா... அப்போ தெரிஞ்சிக்கோ.. வரட்டா" என்று சொல்லி சென்று இருந்தான்.
அதற்கு பிறகு காகேஷ் சிட்டு பின்னாலேயே அவளின் வீட்டிற்குள் நுழைந்தான்.
"என்ன டி சொன்னான் அந்த வெள்ளை பன்னி?" என்று அவன் கேட்கவும், "ஏன் டா ஏன் இப்படி பேசுற?" என்று கேட்டவள் ஜடாயு சொன்னதையும் சொல்லி தான் இருந்தாள்.
"நல்ல ஐடியா நீ கண்டிப்பா எலெக்ஷன்ல நில்லு சிட்டு" என்று காகேஷ் சொல்லவும், "என்ன டா நீயும் இப்படி சொல்ற? ஸ்ரீப்ரியா எப்படின்னு தெரியும் தானே?" என்று கேட்கவும், "அவ எப்படி இருந்தா நமக்கு என்ன? இங்க பாரு அந்த வெள்ளை பன்னி சொன்னதாலேயே நான் ஒத்துக்குற ஒரு விஷயம் இது தான். உங்கிட்ட என்ன இல்ல? உன்ன மாதிரி ஒரு செரிபெர்சன் வர நம்ப காலேஜ் கொடுத்து வச்சி இருக்கனும். இந்த தடவை தான் முதல் முறை இரண்டு பெண்கள் எலெக்ஷன்ல மோத போறீங்க... மோதி பார்ப்போம்.. வின் பண்ணா ஓகே... இல்லனாலும் ஓகே... பட் கண்டிப்பா நீ பார்ட்டிசிபேட் பண்ற" என்று அவனும் அழுத்தமாக சொல்லி இருந்தான்.
அவளுக்கோ, 'என்ன இரண்டு பேரும் இப்படி சொல்ராங்க' என்று நினைத்து கொண்டாள்.
பின் இருவரும் அமர்ந்து ஒன்றாக தான் சாப்பிட்டார்கள்.
"டேய் காக்கா உனக்கு எப்படி பட்ட பொண்ணு வேணும்?" என்று கேட்க, "எதுக்கு பொண்ணு?" என்கவும், "உன்ன கல்யாணம் பண்ணிக்க" என்றவளிடம், "உன்னை மாதிரி தான் பொண்ணு வேணும்" என்று அவன் சொல்ல, "என்னை மாதிரி நான் ஒருத்தி தான்" என்று அவள் அவனை பார்க்க, "அது சரி தான்... உன்ன மாதிரி பாதி இருந்தா கூட போதும்... உன்னோட தைரியம், திமிருல பாதி இருக்கட்டும்... அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்குறேன்" என்று சொன்னவனை பார்த்து, "ஏன் டா பொண்ணு இப்படி இருக்கனும், அழகா இருக்கணும்னுலாம் எதுவும் உனக்கு எக்ஸ்பெக்டேஷன் இல்லையா?" என்று கேட்கவும், "என்ன எக்ஸ்பெக்டேஷன் நீ கேட்குற? எனக்கு தெரிஞ்சி நீயே நல்லா அழகா தான் இருக்க... இங்க பாரு ஸ்பாரோ... அழைக்கலாம் நிறத்துல இல்ல மனசுல இருக்கு... நான் என் வாழ்க்கையிலேயே பார்த்தா அழகான பொண்ணு நீ தான்... என் அம்மா மாதிரி" என்று அவன் சொல்லவும், அவளின் கண்கள் கலங்கிய விட்டன.
அம்மா என்று சொல்லி விட்டான் அல்லவா!
"ஏன் டி அழற?" என்று அவனே வந்து அவளின் கண்களை துடைத்து விட, "உனக்கு நான் அப்படி எதுவும் செய்யலையே டா" என்றவளின் குரல் கூட தழுதழுத்தது.
"ஹலோ பிரண்ட்ஷிப்ல கொடுக்கல வாங்கல்லாம் இல்ல... வெறும் பிரண்ட் மட்டும் தான்" என்று அவன் சொல்ல அவளும் தலையசைத்து கொண்டான்.
இங்கோ அவனின் மாளிகை போல் இருக்கும் வீட்டின் முன் அவனின் காரை நிறுத்தி இருந்தான் ஜடாயு.
அவனுக்கு மனதில் பட்டாம் பூச்சி பறக்க துவங்கியது.
ஆம், அவன் தான் சிட்டுவை காதலிக்க துவங்கி விட்டு இருந்தானே! அவனை சுற்றி வரும் பெண்களுக்கு மத்தியில் அவனை பார்க்காத பெண் மேல் அவனுக்கு காதல். அவளின் கோவம், நேசம், நட்பு என்று அனைத்தும் அவனை ஈர்க்க தான் செய்தது.
அவள் காகேஷிற்காக சண்டைக்கு நிற்கும் போது சிறுபொறாமை எட்டி பார்த்தாலும் அவனுக்கு அதுவும் கூட பிடித்து தான் இருந்தது.
அவனின் மனதை அவள் வென்று தான் விட்டாள்.
அவனின் காரின் சாவியை சுழற்றி கொண்டே உள்ளே செல்லவும், "ஜடாயு" என்கிற ஆதிக்கமிக்க அழைப்பு அவனை தடுத்து நிறுத்தி இருந்தது.
மேலே இருந்து பத்தாம் வகுப்பில் இருந்த மயூரனும் சாஹிலும் தான் பார்த்து கொண்டு இருந்தார்கள்.
"பெரியம்மா இன்னைக்கு அண்ணாவை வச்சி செய்ய போறாங்க" என்று மயூரன் சொல்ல, "அண்ணா அதை எல்லாம் சமாளிச்சிருவான் டா" என்று சொல்லி இருந்தான் சாஹில்.
ஜாடாயுவோ அப்படியே திரும்பினான்.
அங்கே கம்பீரமாக அமர்ந்து இருந்தார் அந்த வீட்டின் ராணி. ராஜ ராஜேஸ்வரி!
ராஜேஸ்வரி குழும்மத்தின் டிரைக்டர் அவர் தான்!
அவர் மட்டுமே கட்டி ஆளும் சாம்ராஜ்யம் அது!
ஜாடாயுவின் தந்தை கருணாகரன் தான் நீதிபதியாக இருக்கிறார். அவனின் சித்தப்பா கார்மேகம் இந்தியாவிலேயே சிறந்த குற்றவியல் வழக்கறிஞர். ராஜேஸ்வரி மட்டும் தான் அந்த குடும்பத்திலேயே வரத்துறையில் இருக்கிறார்.
ஆனால் ஜடாயுவிற்கும் சரி, சாஹிலிற்கும் சரி துளியும் அதில் விருப்பம் இல்லை. அதுவே அவருக்கு பெரிய அடியாக இருந்தது.
வரும் மருமகளாவது அவளின் தொழிலை எடுத்து நடத்துவாள் என்பது தான் அவரது பெரிய ஆசை மற்றும் கனவே!
வீட்டில் அவர் வைத்தது தான் சட்டம். நீதிமன்றத்தில் வேண்டும் என்றால் கருணாகரன் நீதிபதியாக இருக்கலாம் ஆனால் வீட்டில் ராஜேஸ்வரியின் தீர்ப்பு தான் இறுதியானது.
"எங்க போயிட்டு வர?" என்று அவள் மிரட்டல் தொனியில் கேட்க, அவரின் உதிரத்தில் பிறந்தவன் தானே அவனும், இதற்கெல்லாம் அஞ்சி விடுவானா என்ன?
"காலேஜ்ல சில பிரண்ட்ஸ் ட்ரோப் பண்ணிட்டு வரேன் மா... இப்போ என்ன உங்களுக்கு?" என்று கேட்டு இருந்தான்.
"இங்க வந்து உட்காரு... உங்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்று ஜடாயுவை பார்த்து சொன்னவர், அப்படியே மேலே திரும்பி, "இரண்டு பேரும் போய் படிக்கிறிங்களா? இல்ல தனியா உங்களுக்கு வெத்தலை பாக்கு வச்சி சொல்லனுமா?" என்று கேட்கவும், சாஹில் மற்றும் மயூரன் ஓடியே விட்டனர்.
"சின்ன பசங்க தானேம்மா.. ஏன் இப்படி?" என்று சலிப்பாக ஜடாயு கேட்கவும், அவரோ முறைத்து கொண்டு, "நீ தான் டா அவனுங்கள கெடுக்குற...உன்ன உன் தாத்தா வளர்த்து உனக்கு என்னை எதிரித்து பேசுற தைரியத்தை கொடுத்துட்டாரு" என்று சொல்லவும், அவன் எதுவும் பேச வில்லை.
உண்மை தான், ஜடாயு அவனின் தாத்தா மாணிக்கதிலகர் கையில் தான் நிறையவே வளர்ந்தான். அவனுக்கு நல்லது கெட்டது என்ன என்று சொல்லிக்கொடுத்து வளர்த்தது அவர் தான். தாய் என்றாலும் தப்பென்றால் தட்டி கேள் என்று சொல்லி அவனுக்கு பாடம் புகட்டியவர் அவர் தான்.
ஆனால் சாஹில் மற்றும் மயூரன் அப்படி இல்லையே! ஆனால் ஜடாயு இருந்தால் ராஜேஸ்வரியின் பேச்சும் எடுபடாது. அந்த வீட்டில் அவரை எதிர்த்து பேசும் ஒரே ஆள் ஜடாயு மட்டும் தான்.
அவருக்கு அவனுக்கென்று வரும் மனைவி அவரை போல் இருக்க வேண்டும் என்று கொள்ளை ஆசை.
ஆனால் அவனோ அவனின் அன்னையின் விருப்பத்திற்கு துளியும் ஒத்துவராத சிட்டுவை விரும்புகிறான்.
"ஜடாயு, என் பிரண்ட் பொண்ணு ஸ்ரீப்ரியா காலேஜ் செர் பெர்சன் போஸ்டிங்க்கு நிக்குறா" என்று அவர் சொல்ல, "ம்ம் தெரியும் மா... இப்போ அதுக்கு என்ன?" என்று அவன் கேட்க, "நீ தான் அவளுக்கு உதவி செய்யணும். நான் அவங்களுக்கு வாக்கு கொடுத்துட்டேன். அவளை நீ தான் செர் பெர்சன் ஆக்கி காட்டணும்" என்கவும், அவனுக்கு அதிர்ச்சியில் கண்கள் வெளியே வந்து விட்டன.
"அம்மா என்ன சொல்றிங்க? யாரை கேட்டு இந்த வாக்கெல்லாம் கொடுத்தீங்க? நோ வே நான்லாம் ஹெல்ப் பண்ண மாட்டேன்" என்று அவன் ஆணித்தரமாக சொல்லவும், "டேய் உன்ன நம்பி தான் டா நான் வாக்கு கொடுத்து இருக்கேன். நீ என்ன இப்படி சொல்ற? அவ என்னோட கிளோஸ் பிரண்ட் பொண்ணு... உன் அம்மா மேல பாசம் இருந்தா நீ இதை செஞ்சி தான் ஆகணும்" என்று அவர் அம்மாவின் உணர்வை வைத்து விளையாட, விக்கித்து போய் நின்றது என்னவோ ஜடாயு தான்.
அத்தியாயம் 21
ஜடாயுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இப்போது தான் சிட்டுவிடம் அவன் அவளை தேர்தலில் நிற்க சொல்லிவிட்டு வந்தான். அதுவும் இதே ஸ்ரீப்ரியாவிற்கு எதிராக! இப்போது அவன் ஸ்ரீப்ரியாவிற்கு ஆதரவாக நடக்க வேண்டும் என்று அவனின் அன்னை வந்து நிற்கிறார்.
அவனுக்கு தர்மசங்கடமான நிலை தான்.
"அம்மா ப்ளீஸ் சொல்றத கேளுங்க நான் இப்படி அப்பட்டமா சப்போர்ட் பண்ண முடியாது... நான் தான் எக்ஸ் செர் பெர்சன். நான் அவளுக்கு சப்போர்ட் பண்ணி அவ ஜெயிச்சா அதுக்கு பிறகு அது அவளோட வெற்றியா பார்க்க மாட்டாங்க... அவளுக்கு ஏதாவது எக்ஸ்பிளான் பண்ணனும்னா நான் பண்றேன்" என்று சொல்லவும், அவன் சொன்ன இந்த விடயம் ராஜேஸ்வரிக்கும் சரியாக பட்டது.
ஆகையால், "சரி ஜடாயு, அப்போ ஸ்ரீப்ரியாவை நாளைக்கு உங்கிட்ட வந்து பேச சொல்றேன்" என்று சொல்லி அவர் அனுப்பி வைத்து விட்டார்.
அவனுக்கு இப்போது தான் மூச்சே வந்தது.
அவன் மேலே ஏறி அவனின் அறைக்கு செல்லவும், அவனின் அறைக்குள் நுழைந்தனர் சாஹில் மற்றும் மயூரன்.
"அண்ணா எப்படி தான் அம்மா கிட்ட இவளோ தைரியமா பேசுறியோ?" என்று சாஹில் கேட்க, "உங்க தைரியத்துல பாதி எனக்கு கடன் கொடுங்க குருவே" என்று சொன்னான் மயூரன்.
"உனக்கு குசும்பு தானே மயூர்... டேய் சாஹில் இவன் கிட்ட இருந்து மொதல்ல கத்துக்கோ... அமைதியா இருந்தே எல்லாரையும் வாரி விட்ருவான்" என்று சொல்லவும், அவர்களும் சிரித்து கொண்டனர்.
"அண்ணா அந்த சைத்தான் பிரியா வின் பண்ண போய் ஹெல்ப் பண்ணாத... அவ சரியான பைத்தியம். நேத்து தான் இங்க வீட்டுக்கு வந்து இருந்தா, அந்த வெள்ளை மோகினி பிசாசு நம்ப குக் ராமு அண்ணாவை அடிச்சிட்டா தெரியுமா?" என்று சாஹில் சொல்லவும் சட்டென திரும்பி பார்த்தான் ஜடாயு.
"என்ன சொல்ற?" என்றவனின் விழிகள் இப்போது கூர்மையாகின. ராமு கிட்டத்தட்ட ஐம்பது வயது இருக்கும் நபர். அவனின் தாத்தா காலத்தில் இருந்து இங்கு வேலையில் இருப்பவர், முப்பது வருடங்களாக இங்கு வேலை செய்கிறார். உண்மையை சொல்லவேண்டும் என்றால் ராஜேஸ்வரியின் கைகளால் அவன் உண்டதை விட, ராமுவின் கைகளில் நிறையவே உண்டு இருக்கிறான்.
அவரை போய் இப்படி அடித்து இருக்கிறாள் என்கவும் அவனுக்கு கோவம் தான்.
"அம்மா எதுவும் சொல்லலையா?" என்றதும், "ம்கூம் பெரியம்மா ராமு அங்கிள்ல தான் திட்டுனாங்க" என்று மயூரன் சொல்ல, கீழே உடனே இறங்கி சென்றான்.
"அம்மா" என்று கத்தி அழைக்கவும், அப்போது தான் உள்ளே சென்ற ராஜேஸ்வரி வெளியே வர, அவனின் தந்தை கருணாகரனும், அவனின் சித்தப்பா கார்மேகமும் வர சரியாக இருந்தது.
"ராமு அண்ணா" என்று அழைத்தான்.
அவரும் உடனே வந்தார். கூனிக்குறுகி தான் நின்று இருந்தார்.
அவருக்கு இருப்பது இருபத்தி ஐந்து வயதில் ஒரு மகள். அவளை கரைசேர்க்க வேண்டும் என்றால், இந்த வேலை அவருக்கு வேண்டுமே! ஆகையால் இந்த அவமானத்தை எல்லாம் சகித்து கொள்ள வேண்டிய கட்டாயம்.
ஜடாயுவோ அவரை பார்த்து, "ராமு அண்ணா நீங்க இந்த வேலைல இருந்து வெளிய போயிருங்க... உங்களுக்கு நான் நல்ல ஸ்டார் ஹோட்டல்ல செப் வேலை வாங்கி தரேன்" என்கவும், ராஜேஸ்வரிக்கு தான் அதிர்ச்சியாக இருந்தது.
"என்ன டா சொல்ற நீ" என்று அவர் வரவும், "உண்மையா சொல்றேன்...எதுக்கு அவரு இங்க இருக்கனும்? உங்களோட பேச்சை எல்லாம் கேட்டுகிட்டு இருக்க அவரு ஒன்னும் அடிமை இல்ல...இதோட நீங்க சமைங்க" என்று குண்டை தூக்கி போடு இருந்தான்.
"டேய் நம்ப எல்லாரும் உயிரோட இருக்க வேணாவா?" என்று கருணாகரன் சொல்லவும், கார்மேகம் மட்டும் அல்ல, மயூரன் மற்றும் சாஹில் கூட சிரித்து விட்டனர்.
"பெரியப்பா பாரேன் இது தான் சான்ஸ்ன்னு நல்லா செய்றாரு" என்று மயூரன், சாஹில் காதில் சொல்லவும், "அப்பா அப்புறம் போய் கால்ல விழுந்திருவாரு டா" என்று சாஹிலும் பேசிக்கொண்டு இருந்தனர்.
"ஜடாயு" என்று ராஜேஸ்வரி கத்த, "ஜடாயுரதன்" என்று திருத்தியும் இருந்தான்.
"அம்மா நான் இதெல்லாம் டொலரேட் பண்ண மாட்டேன். அண்ட் கண்டிப்பா அந்த பொண்ணுக்கு ஹெல்ப் பண்ணவும் மாட்டேன். இப்படி ட்ரீட் பண்ற ஒருத்தி ஸ்டுடென்ட் செர் பெர்சன் கேட்கவே கேவலமா இருக்கு... அவளுக்கு ஆப்போசிட்டா யாராச்சு நிக்கட்டும் அவங்களுக்கு தான் என் சப்போர்ட்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து இருந்தான்.
நகர்வதற்கு முன்பு, "அப்பா உங்க பிரண்ட் ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டல் வச்சி இருக்காருல அதுல ராமு அங்கிள்க்கு செப் வேலை ஏற்பாடு பண்ணுங்க" என்று சொல்லவும் அவன் தவறவில்லை.
அவரும் ஆமோதிப்பக தலையசைத்தார்.
அவனுக்கு இதுவும் ஒரு நல்ல விடயமாக போய் விட்டது.
இப்போது அவன் சிட்டுக்கு உதவி செய்தாலும் ராஜேஸ்வரி ஒன்றும் சொல்ல முடியாது. உதவிக்கே இந்த நிலை என்றால் அவன் காதலித்து திருமணம் என்று யோசிக்கும் போது தலையே சுற்றி கொண்டு வந்தது.
ஆனால் அவனுக்கு சிட்டு தான் மனைவி என்று முடிவே எடுத்து விட்டான். அவன் அன்னையை விட அவளை எப்படி அவன் காதலிக்க வைக்க போகிறான் என்று நினைத்தால் இன்னும் தலையே சுற்றியது.
அதுவும் காகேஷ் தான் கருப்பசாமி போல் இருக்கிறானே!
"ஒரே ஒரு லவ் வச்சிக்கிட்டு நான் பாடுற பாடு இருக்கே... சிட்டு நீ என் வாழ்க்கைல வர்றதுக்குள்ள என்ன எல்லாம் ஆக போகுதோ" என்று வாய்விட்டே புலம்பும் நிலை தான் அவனுக்கு...
அடுத்த இரண்டு வாரம் எப்படி சென்றது என்றே தெரியவில்லை.
கல்லூரி திறந்து விட்டது. இன்னும் ஒரு மாதத்ததில் தேர்தல் என்று அறிவித்து இருந்தார்கள்.
இன்னும் இரண்டு நாட்களில் இருந்து மனுதாக்கல் செய்யலாம் என்று சொல்லியும் இருந்தார்கள்.
"சிட்டு ரெடியா இரு... கண்டிப்பா நீ நாமிநேஷன் பண்ற" என்று காகேஷ் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அங்கே வந்தான் ஜடாயு.
"என்ன சொல்றான் உன் பிரண்ட்?" என்று சிட்டுவை பார்க்க, "நீ சொன்னதை தான் சொல்லிட்டு இருக்கேன்" என்று இருவரும் நகர போக, "எங்க போறீங்க?" என்று கேட்டான் ஜடாயு.
"போகும் போது எங்க போகுறனு கேட்க கூடாது சார்" என்று அவன் அழுத்தமாக கூறவும், "நான் அவளை கேட்டேன்" என்றவனை பார்த்து, "அவ என்கூட தானே வரா" என்று இருவரும் ஏட்டிக்கு போட்டியாக பேசினார்கள்.
"நாங்க ஐஸ் கிரீம் சாப்பிட போறோம் சார்" என்றதும், "அது என்ன சார், ஜடாயுன்னு கூப்பிடு" என்றான்.
அவளுக்கோ தயக்கமாக இருந்ததது.
"அதான் வெள்ளை பன்னியே சொல்லிருச்சே அப்போ இதோட ஜடாயுன்னு கூப்பிடு" என்றவனை பார்த்து முறைத்து கொண்டே, "வாங்க போகலாம்" என்று ஜடாயு சொல்ல, "நாங்க என் பைக்ல வரோம்" என்றதும், 'என் காதலுக்கு வில்லன் நீ தான் டா' என்று நினைத்து கொண்டே, "சரி வாங்க நானும் என் தம்பிங்களை கூட்டிட்டு வரேன்" என்றான் ஜடாயு.
"உனக்கு தம்பிங்க இருக்காங்களா?" என்று காகேஷ் கேட்க, "ம்ம் சாஹில் அப்புறம் மயூரன். மயூரன் சித்தப்பா பையன் ஆனா எனக்கு இரண்டு பேருமே ஒன்னு தான்" என்று சொல்லிக்கொண்டே அவனின் காரின் அருகில் வந்து விட்டான்.
சிட்டுவும் காகேஷும் முதலில் ஐஸ் கிரீம் கடையை அடைந்து விட்டனர்.
பின்பு தான் ஜடாயு, மயூரன் மற்றும் சாஹில் வந்தார்கள்.
"எங்க அண்ணா கூட்டிட்டு போறீங்க?" என்று வரும் வழியில் எல்லாம் அவர்கள் கேட்டுக்கொண்டே வர, "ஐஸ் கிரீம் சாப்பிட தான்... அப்படியே என் பிரண்ட் ஒருத்தவங்கள இன்ட்ரோ பண்றேன்" என்று ஜடாயு சொல்லும் போதே அவனின் முகத்தை பார்த்தான் மயூரன். அதில் அப்படி ஒரு சந்தோஷம். அவன் மிகவும் புத்திசாலி.
"உங்க கேர்ள் பிரண்ட்டா அண்ணா?" என்று கேட்கவும், ஜடாயுவோ, "டேய் அப்படி எல்லாம் அவ முன்னாடி கேட்டு வைக்காத, அவ சாமி ஆடிருவா... அவளோட பிரண்ட் வேற ஒருத்தன் இருக்கான். அப்புறம் அவளை கண்ல கூட காட்ட மாட்டான்." என்று அவன் சொல்லிக்கொண்டே வண்டியை செலுத்திக்கொண்டே ஐஸ் கிரீம் பார்லரை அடைந்தும் விட்டான்.
அங்கே உள்ளே நுழைந்ததும் மயூரனின் கண்களில் பட்டது சிட்டு தான்.
அங்கே அவள் தான் அவர்கள் அனைவருக்கும் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்து கொண்டு இருந்தாள்.
"அந்த பசங்களுக்கு என்ன பிடிக்கும்னு தெரியலையே டா" என்று காகேஷை பார்த்து கேட்க, "ஏதாவது வெண்ணிலா ஸ்டராபெரின்னு ஆர்டர் பண்ண வேண்டியது தான்" என்று அவன் தோள்களை குலுக்கி சொல்ல, அவளோ, "சரி அவங்க வரவரைக்கும் வெயிட் பண்ணலாம்" என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, "எனக்கு சாக்லேட்" என்று மயூரன் காகேஷ் மற்றும் சிட்டுவின் நடுவில் வந்து நின்றான்.
"டேய் வாண்டு நீ யாரு?" என்று காகேஷ் கேட்க, அவனை முறைத்து கொண்டே, "மயூரன் என்று சொல்ல" என்று சொல்லவும், சிட்டுவின் மறுபுறம், "எனக்கு பட்டர் ஸ்காட்ச்" என்று சாஹில் வந்து நின்று புன்னகைத்தான்.
"உங்க அண்ணா மாதிரியே என்னையும் என் பிரண்டையும் பிரிக்கர்துலேயே இருக்கீங்க டா" என்று காகேஷ் சொல்லிக்கொண்டே மயூரனின் தலையை கோதி விட, அவனோ, அவனின் கையை தட்டி விட்டு, "நீங்க தான் இவங்கள என் அண்ணா கிட்ட இருந்து பிரிக்குறிங்க" என்று அவனிடம் சண்டைக்கு நின்றான்.
"ஸ்பாரோ இந்த த்ரீ மஸ்கட்டயர்ஸ் உன்ன என்கிட்ட இருந்து அபேஸ் பண்ண பாக்குறானுங்க டி" என்று சொல்லிக்கொண்டே அவன் முறைக்க, "டேய் காக்கா சின்ன பசங்க டா" என்று சொல்லி அனைவரும் ஐஸ் கிரீம் வாங்கி கொண்டு வந்து விட்டார்கள்.
அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்க, மயூரனின் கண்கள் அங்கே சிறுபிள்ளைக்கு ஊட்டிக்கொண்டு இருக்கும் அந்த அன்னையின் மீது தான் படிந்தது. ராஜேஸ்வரி அவனை வளர்த்தார் தான். ஆனால் தாய் பாசம் உணராதவன் அவன்.
சாஹிலிற்கே அவர் ஊட்டுவது பெரிய விடயம் இதில் எங்கு இருந்து மயூரன்?
சிட்டுவின் கண்களும் சரி, காகேஷின் கண்களும் இதை கவனிற்காமல் இல்லை.
சிட்டு சட்டென அவனின் கையில் இருந்த ஐஸ் கிரீமை பிடிங்கி விட்டாள்.
மயூரன் அவளை பார்க்க, அவளோ அவனுக்கு தேக்கரண்டியில் பனிக்கூழை அவனின் வாயின் அருகே நீட்டி இருந்தாள்.
அத்தியாயம் 22
மயூரனோ அவளை கேள்வியுடன் பார்க்க, "ம்ம் வாய திற, நான் ஊட்டி விடுறேன்" என்று சொல்லவும், அவனும் மெதுவாக வாயை திறந்தான். அவனின் மனக்கதவையும் திறந்து அன்னை என்கிற ஸ்தானத்தில் அமர வைத்த தருணம் அது தான்.
மயூரனின் மனதில் அழுத்தமாக சிட்டு அன்னையாகவே மாறி விட்டாள்.
"ஹே ஸ்பாரோ உன் ஐஸ்கிரீம் கரையுது" என்று சொல்லி காகேஷ் அவளுக்கு ஊட்டி விட, இங்கு ஜடாயுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி மறுபக்கம் பொறாமையும் கூட! அதுவும் மயூரன் காகேஷ் இருவரையும் பார்த்து!
பின்னே, ஒருவனுக்கு அவனது காதலி ஊட்டிக்கொண்டு இருக்கிறாள். மற்றோருவன் அவனது காதலிக்கு ஊட்டிக்கொண்டு இருக்கிறான்.
"அண்ணா ரொம்ப பொறாமை படாத பச்சையா முகத்துல தெரியுது" என்று சாஹில் சொல்லவும், அவனோ அவனை பார்த்து, "அவளோ அப்படமாவா தெரியுது?" என்று கேட்க, "ம்ம் ரொம்ப ரொம்ப பச்சையா தெரியுது" என்று சொல்லி இருந்தான்.
பின்பு அனைவரும் அவர்களின் வீட்டிற்கு சென்று விட்டனர்.
ஸ்ரீப்ரியாவிற்கு எதிராக சிட்டு தான் சேர்ப்பரசன் தேர்தலுக்கு நிற்க இருக்கிறாள் என்று அவளுக்கும் செய்தி போனது.
"ஒண்ணுமே இல்லாத அவ எனக்கு எதிரா நிற்க போறாளா?" என்று பற்களை கடித்து கொண்டு அவளின் தோழியிடம் அவள் பேசிக்கொண்டு இருக்க, அவளது தோழியோ இன்னும் எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றும் படி, "நீ சொல்லிக்கிட்டு இருந்தியே ஜடாயுவோட அம்மா ராஜேஸ்வரியும் உன் அம்மாவும் பிரண்ட்ஸ் உனக்கும் ஜடாயுவுக்கும் கல்யாணம் பண்ற ஐடியா கூட இருக்குன்னு.. அதெல்லாம் ஒன்னும் நடக்காது போல... ஜடாயு சீனியர் அந்த சிட்டு பின்னாடியே அலையுறாரு" என்று அவள் தோழி சொன்னதும் அவளுக்கு கோவம் தலைக்கு ஏறியது.
"ஹே அந்த சிட்டு பின்னாடி தான் காகேஷ் இருக்கானே! அவங்க தான் கபிள்ஸ்ன்னு நினைச்சேன்" என்று அவள் சொல்லவும், "இல்ல இல்ல அவங்க வெறும் பிரண்ட்ஸ் தான் போல ப்ரியா" என்று அவள் முடிக்கவும், அவளுக்கு இன்னும் ஆத்திரம் தான்.
ஜாடாயுவை எப்படியாவது மடக்கி விட வேண்டும் என்று அவளது தாயே அவளுக்கு சொல்லி தான் இருந்தார்.
அவளை பொறுத்தவரை ஜாடாயு ஒரு பொன் வாத்து. பதவி, ஆஸ்தி என்று அனைத்தும் இருக்கும் குடும்பம் அவர்களுடையது.
ஆகையால் அவளுக்கு ஜாடாயு வேண்டும். அது மட்டும் அல்ல, அவனின் அழகும் அறிவும் கூட ஒரு வித மயக்கத்தை அவளுக்கு கொடுத்தது என்னவோ உண்மை தான்.
இதே சமயம், "கேம்பெய்ன் நல்லா பண்லாம் டோன்ட் வரி" என்று ஜாடாயு சொல்லவும், "ஆமா ஆமா நல்லா பண்ணிரலாம்" என்று காகேஷும் அவனை போல சொல்ல, அங்கு வந்தாள் பிரியா.
"ஹாய் ஜடாயு!" என்று அவள் சொல்லவும், அவனும் குரலை செருமிக்கொண்டு, "ஹாய்" என்று சிட்டுவை பார்க்க, ப்ரியா விடுவாளா?
"ஜாடாயு காலேஜ்ல இருந்து என்னை வீட்ல ட்ரோப் பண்ணிருவியா ப்ளீஸ்?" என்று கேட்க, "ஏன் நீயே கார்ல தானே வருவ" என்று காகேஷ் அவளை பார்த்து கேட்டான்.
அப்பொழுதே அவனுக்கு அனைவரையும் கேள்வி கேட்கும் திறன் மட்டும் அல்ல, யார் எப்படி என்று கூட கணித்து விடுவான்.
ஏன், ஜடாயுவிற்கு சிட்டுவின் மேல் உள்ள காதல் கூட அவனுக்கு தெரியும். அவன் எப்பொழுது சிட்டுவிடம் சொல்ல போகிறான் என்று தான் காத்து கொண்டு இருக்கிறான்.
என்ன தான் ஜடாயுவிற்கும் அவனுக்கும் ஆகாது என்பதாலும் அவனுக்கு தெரியும் ஜாடாயுவை போல் ஒருவன் சிட்டுவிற்கு கிடைத்தால் சிட்டு நிச்சயம் சந்தோஷமாக இருப்பாள் என்று! இப்போது ப்ரியா வந்தால் அவன் விடுவானா என்ன?
"நீ ஏன் மென் அதெல்லாம் கேட்குற?" என்று ப்ரியா அவனை பார்த்து முறைக்க, "உன் கார் இருக்கும் போது ஜடாயு எதுக்கு உன்ன ட்ரோப் பண்ணனும்?" என்று காகேஷ் அப்போதும் விடாமல் அவளிடம் கேள்வி கேட்டான்.
"கார் பங்ச்சர்" என்று பற்களை கடித்து கொண்டு சொல்லவும், அவனுக்கு ஏதோ சரியாக பட வில்லை.
"இட்ஸ் ஓகே நம்ப நாளைக்கு பேசலாம்... நான் இவளை ட்ரோப் பண்றேன்" என்று அவளுடன் செல்ல இருந்தான் ஜடாயு. சிட்டுவிற்கு ஒன்றும் பெரிதாக தோன்றவில்லை.
அவர்கள் சென்றதும், அவளின் கையை கிள்ளி இருந்தான் காகேஷ்.
"ஆஹ்ஹ்ஹ் எருமை எருமை வலிக்குது டா" என்று அவள் கத்தவும், "வலிக்கட்டும், ஏன் டி ஜடாயுவை ஒருத்தி அபேஸ் பண்ணிக்கிட்டு போறா நீ பொங்கமா இப்படி பாப்கார்ன் சாப்பிட்டுட்டு இருக்க" என்று அவன் பொங்க, அவளோ, "நான் ஏன் டா பொங்கணும்? ப்ரியா லிப்ட் கேட்டா ஜடாயு சீனியர் கொடுக்குறாரு" என்று தோள்களை குலுக்கி கொண்டு கூறினாள்.
"நீ எல்லாம் வாழ்க்கை முழுக்க சந்நியாசி தான் டி" என்று அவன் சொல்லிக்கொண்டு அவளை வீட்டிற்கு அழைத்து சென்று விட்டான்.
இங்கோ ப்ரியா ஜாடாயுவிடம், "நீங்க ஏன் அந்த சிட்டு கிட்டலாம் பேசுறீங்க? உங்க ரேஞ்க்கு நீங்க அவ கிட்ட எல்லாம் பேசலாமா? அவளுக்கு வேற சப்போர்ட் பண்றீங்க?" என்று பிதற்றி கொண்டு வர, அவன் வாயே திறக்கவில்லை. அன்னையின் தோழியின் மகள் எதற்கு பிரச்சனை என்று தான் அவனது எண்ணம்.
இறக்கி விடும் போது, "நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணுங்க ஜடாயு" என்று அவள் அவனின் கையை பிடிக்கவும், சட்டென அவளின் கையை தட்டி விட்டு விட்டான்.
"இங்க பாரு ப்ரியா, நீ வெறும் என் அம்மாவோட பிரண்ட் பொண்ணு... அந்த லிமிட்ல இருந்துக்கோ...நான் ஒன்னும் குழந்தை கிடையாது... என் அம்மாக்கே நான் என்ன பண்ணனும்னு சொல்ல ரைட்ஸ் இல்ல...நீ யாரு சொல்றதுக்கு? இங்க பாரு ப்ரியா நான் யாரு கூட பேசணும் பழகனும்னு எல்லாம் சொல்ற வேலை வச்சிக்காத" என்று சொல்லி சென்று விட்டான்.
அவளுக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது. அதற்கு பிறகு அவளுக்கு ஜடாயுவை அடைந்த தீர வேண்டும் என்கிற வெறி வேறு வந்து விட்டது. அது தான் இன்னும் கொடுமை.
இது எதுவுமே தெரியாமல், ஜடாயுவும், காகேஷும், சிட்டு அனைவரும் அந்த தேர்தலுக்காக உழைக்க ஆரம்பித்து இருந்தார்கள்.
சிட்டுவை பற்றி அனைவர்க்கும் நன்கு தெரியும். ஜடாயு வேறு உடன் இருக்க, காகேஷும் அவளுக்காக நிற்க அதற்கு பிறகு எதற்கு தடை?
அவள் தான் வெற்றி பெறுவாள் என்பது உறுதியாகி விட்டது, உறுதி என்ன உறுதி ஜெயித்தே விட்டாள்.
ஸ்ரீப்ரியாவால் கல்லூரியில் நிம்மதியாக இருக்க முடியவில்லை.
அவளின் அன்னையின் உதவியை தான் நாடினாள்.
"நான் பார்த்துக்குறேன்" என்று அவளின் அன்னையும் சொல்லிவிட்டு இருந்தாள்.
அதற்க்கான மொத்த திட்டத்தையும் தீட்டி இருந்தார்கள் அன்னையும் மகளும்!
இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த பரினீத்தியோ, "மேம், அப்போ எப்போ உங்களுக்கும் ஜடாயு சார்க்கும் லவ் வந்தது?" என்று ஆர்வமாக கேட்கவும், சிட்டுவோ, "அது இன்னொரு நாள் சொல்றேன்" என்று சொல்லி விட்டாள்.
பரினீத்திக்கு அப்படி ஒரு ஆர்வம்.
காகேஷை பற்றிய அவளது எண்ணமும் கொஞ்சம் மாறி தான் இருந்தது.
மயூரன் மற்றும் ஜடாயு அவர்களின் இல்லத்தில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தார்கள்.
"சாஹில் எங்க?" என்று ஜடாயு கேட்க, "அவனுக்கு நைட் ஷிப்ட் அண்ணா" என்று சொல்லி இருந்தான் மயூரன்.
"மைனாவ பத்தி நீ கவலை பட வேண்டாம்" என்று ஜடாயு சொல்ல, "அவளை பத்தி எல்லாம் நான் கவலை படல... இப்போதைக்கு என் கவலை எல்லாம் அண்ணி மேல தான்... அவங்க டிவோர்ஸ் வாங்க தான் போறாங்களோ?" என்று அவன் ஜடாயுவை பார்க்க, "அவ வாங்க நான் விற்றுவேனா? அவ நண்பனுக்கே தெரியாம அவளை காதலிச்சவன் நான்... இந்த காதலுக்காக நான் என்ன எல்லாம் பன்னேனு உனக்கு தெரியும் தானே! அதை தக்க வச்சிக்கவும் நான் பார்த்துக்குறேன். என் பொண்ணு வேற இருக்கா" என்று அவன் பற்களை கடித்து கொண்டு பேசவும், "எனக்கு என்னவோ பெரியம்மா தான் ஏதாவது சொல்லி இருப்பாங்கன்னு தோணுது" என்று மயூரன் சரியாக கணிக்க, "உனக்கு சந்தேகம்லாம் வேணாம்... கண்டிப்பா அவங்க தான் பேசி இருக்காங்க... ஆனா இவ வாய திறந்து சொன்னா தானே என்னால அவங்க கிட்ட போய் கேட்க முடியும். மாமியாருக்கு ஏத்த மருமக... அவங்க வில்லி.. இவ அவங்களுக்கே வில்லி... இரண்டு பேருக்கும் நடுவுல நான் தான் பலி ஆடு" என்று ஜடாயு புலம்பி கொண்டு இருக்கும் போதே அவனின் தந்தை கருணாகரன் அழைத்து இருந்தார்.
"என்ன எப்படி இருக்கா என் மருமக?" என்று அவர் கேட்க, "அவளுக்கு என்ன நல்லா இருக்கா என்னை தான் வச்சி செஞ்சிகிட்டு இருக்கா" என்றதும், அவர் சிரித்து விட்டார்.
"சிரிக்காதிங்க அப்பா கடுப்பா இருக்கு" என்றவனிடம், "இங்க பாரு உன் அம்மாவை பத்தியும் உனக்கு தெரியும் உன் பொண்டாட்டிய பத்தியும் தெரியும். பார்த்துக்கலாம் விடு... என் பேத்தி எப்படி இருக்கா?" என்று அவர் ஆசையாக வினவ, "ம்ம் நல்லா இருக்கா" என்றதும், "காகேஷ் இருப்பான். அவன் எல்லாமே பார்த்துக்குவான்" என்று சொல்லி இருந்தார்.
"ம்கூம் அவன் மேல எவளோ நம்பிக்கை" என்று அவன் அவரை சாட, அவரோ, "டேய் அவனை நம்பு.. உன் பொண்டாட்டி பொண்ணுக்காக நீ உயிரை கொடுப்ப, அவன் உயிரை எடுப்பான்" என்று சொன்னவர், "சாஹிளை பார்த்துக்கோ" என்று சொல்லி சிறிது நேரம் பேசி வைத்து விட்டார்.
மூவரில் சாஹில் தான் கொஞ்சம் மென்மையானவன். அவனின் உணர்வுகள் கூட கொஞ்சம் நாசுக்கானது. ஆகையால் வீட்டில் இருக்கும் அனைவருக்குமே அவன் செல்ல பிள்ளை தான்.
இங்கோ சாஹீலின் வாழவையே புரட்டி போடும் நிகழ்வு நடந்து கொண்டு இருந்தது.
அதுவும் மருத்துவமனையில், அவன் இருக்கும் அறையில்!
அவள் நினைத்ததை சாதித்து இருந்தாள் ஹன்சிகா.
அவள் தான் எமகாதகி ஆயிர்றே!
யோசிக்காமல் அவள் என்ன நினைத்தாளோ அதை செய்து முடித்து விட்ட சந்தோஷம் அவளுக்கு!
ஆனால் இதற்கான பின்விளைவுகளை அவள் யோசிக்கவில்லை.
அவளின் முனகல் சத்தம் சாஹீலின் மருத்துவர் அறையையும் தாண்டி ஒலித்து கொண்டு இருந்தது.
அவளை மிருகம் போல அவனையும் மீறி புணர்ந்து கொண்டு இருந்தான் சாஹில்!
சாஹில் மற்றும் ஹன்சிகாவின் வாழ்வு இனி இந்த குமரகத்தில் எப்படியோ?
அத்தியாயம் 23
சாஹில் மருத்துவமனைக்கு வந்து வள்ளியை சோதித்து விட்டு, அங்கிருந்த பிளாஸ்கில் இருந்த தேநீரை அருந்தினான். அங்கு தான் பிரச்சனை ஆரம்பம் ஆனது.
ஹன்சிகா தான் உணர்ச்சிகளை தூண்டும் போதை பொருளை அதில் கலந்து இருந்தாள். அதை தான் அவள் ஒருவனிடம் பணம் கொடுத்து வாங்கி இருந்தாள்.
அவளுக்கு சாஹிளை அவளுக்கு அடிமையாக வைத்து கொள்ள வேண்டும். அதற்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதுவும் அவனை அவமானப்படுத்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
அவளையே அடித்து விட்டான் என்கிற கோவம் அவளுக்கு!
கோவம் எத்தனை கொடியது என்று அவள் அறியவில்லை.
மதி இழந்து விட்டாள். அவளின் மனதையே வைத்து விளையாடும் அளவிற்கு மதியிழந்து விட்டாள்.
சாஹில் ஒரு கோப்பை தேநீரை பருகியவுடனே அவனுக்கு தலை ஒரு மாதிரி சுற்ற துவங்கியது.
அவனுக்கு உடலின் சூடு வேறு தகிக்க கூடியதாக இல்லை. அவனின் கோட்டை கழட்டி விட்டான்.
ஏதோ உடலில் அவனையே மீறி ஏதோ ஏதோ உணர்வுகள்.
இதே சமயம் உள்ளே வந்தாள் ஹன்சிகா.
"ஹாய் டாக்டர்" என்று அவளின் குரலே அவனை மயக்கியது. அதுவும் அவள் அணிந்து இருந்த உடையும் கூட அவளின் அங்கவளைவுகளை அப்பட்டமாக காட்டியது.
அவனோ பற்களை கடித்து கொண்டு, "கொஞ்சம் வெளிய போறிங்களா" என்று கேட்கவும், அவள் போவாளா என்ன?
"டாக்டர் எனக்கு இடுப்புல சுளுக்கு எடுத்து விடுங்க" என்று அவள் அவனை நெருங்கவும், அவனுக்கோ மயக்கம் வேறு!
"நர்ஸ் இருந்தா அவங்க கிட்ட போங்க... நான் வீட்டுக்கு போறேன்" என்று அவன் நகர போக, அவளே அவனின் மீது விழுந்து இருந்தாள்.
அவன் தரையில் விழ, அவளோ அவனின் மீது விழ, அது வரை அவனிடம் இருந்த கொஞ்ச நஞ்சம் கட்டுப்பாடும் போய் விட்டது. அவனால் அவனையே கட்டுப்படுத்த முடியவில்லை.
அவளை கீழே தள்ளி அவளின் இதழ்களை சிறை எடுத்து விட்டான். மிருகத்தை போல் புணர்ந்து இருந்தான்.
அவளுக்கே வலித்தது தான். ஆனால் பொறுத்துக்கொண்டாள்.
அவளுக்கு அவனை ஜெயித்து விட வேண்டும் என்கிற வேட்கை மட்டும் தான் இருந்தான்.
அவனுக்கே அவனின் உடலில் என்ன மாற்றம் என்று தெரியவில்லை. அவனின் மனதே அவனை காரி துப்பியது.
ஆனாலும் அவனின் உடல் அவனின் பேச்சை கேட்டால் தானே!
சாஹில் அவனையே இழந்து விட்டான்.
அனைத்தும் முடிய அவனின் கண்களில் இருந்து கண்ணீர் ஹன்சிகாவின் நெற்றியில் விழுந்தது. ஆனால் அவளின் இதழ்களில் ஒரு வன்மபுன்னகை.
சாஹில் அப்படியே அருகே படுத்து விட்டான். அவனின் விழிகள் தாமாக மூடிக்கொண்டது. கூடலால் உண்டான மயக்கமா அல்லது மனசோர்வினாலா என்று அவனுக்கு மட்டும் தான் தெரியும்.
ஆனால் ஹன்சிகாவிற்கு வெற்றி களிப்பு.
அடுத்த நாள் விடிய, சாஹீலின் மருத்துவ அறையில் இருந்து அலறல் சத்தம் தான் கேட்டது.
அனைவரும் ஓடினார்கள். செவிலியர் பெண் கனகா கூட ஓடி வந்தாள்.
வெளியே அழுது கொண்டே வந்தது என்னவோ ஹன்சிகா தான்.
"உங்க டாக்டர் சாஹில்..." என்று ஆரம்பித்தவள் அதற்கு மேல் பேசவே இல்லை. அவள் இருந்த கோலமே அனைத்தும் சொல்லியது.
அதற்கு மேல் கேட்கவும் வேண்டுமா? காட்டு தீ போல் விடயம் பரவி இருந்தது.
இதே சமயம் சாஹிலும் உறக்கம் தெளிந்து வெளியே வந்தான்.
அவனால் யாரையும் பார்க்க முடியவில்லை.
அவன் செய்த செயலின் வீரியம் அவனுக்கு தெரியும்.
பக்ஷி ராஜா மற்றும் ஹம்சா இருவரும் வந்து இருந்தார்கள்.
அப்படி ஒரு கோவம் அவருக்கு! அவரது செல்வ மகள் ஆயிர்றே அவள்.
"அப்பா" என்று அவள் வந்து பக்ஷிராஜாவை அணைக்க, ஹம்ஸாவின் கண்கள் என்னவோ அவனின் தங்கையை தான் பார்த்து கொண்டு இருந்தது.
அவனுக்கு அக்கு வேர் ஆணி வேராக அவளை பற்றி தெரியும்.
நிச்சயம் ஒருவன் ஹன்சிகாவின் மேல் கை வைக்கும் அளவிற்கு அவள் அமைதியாக இருந்து இருக்கும் பெண் அல்ல!
சாஹீலின் முகமும் அவனை அசைத்து பார்த்தது என்னவோ உண்மை தான்!
அவனின் முகத்தில் உயிர்ப்பே இல்லை. அவனால் யாரையும் ஏறெடுத்து பார்க்க முடியவில்லை. அவனே ஒரு பதினாறு வயது பாலியல் கொடுமைக்கு உள்பட்டு இருந்த பெண்ணை சரிசெய்ய முயற்சி செய்து கொண்டு இருக்கிறான். இதில் அவனின் மேலே பாலியல் குற்ற வழக்கு.
நினைக்கும் போதே அவனின் மனதில் அப்படி ஒரு வலி.
இங்கோ ஹன்சிகா, "அப்பா இவன் என்னை நாசனம் பண்ணிட்டான்" என்று அவள் கதறி அழ, கனகாவுக்கு தான் மனது கேட்கவே இல்லை.
சாஹில் வந்து இருந்த கொஞ்ச நாட்களிலேயே அவனை பற்றி அங்கு இருந்த அனைவர்க்கும் தெரியும். அவன் இப்படி எல்லாம் செய்பவன் அல்ல என்று!
ஆனாலும் வேறு வழி இல்லை. அமைதியாக இருந்து ஆக வேண்டிய கட்டாயம். பேசுவது ஹன்சிகா, பக்ஷி ராஜாவின் மகள் வேறு, அவர்களால் எதுவுமே செய்ய முடியாத நிலை.
இதே சமயம், சாஹீலின் மனதிலோ, எப்படி இதெல்லாம் நடந்தது என்கிற கேள்வி தான். அவனின் அம்மாவிற்கு தெரிந்தால், அவனை கொன்றே விடுவார்கள். அதுவும் தலைமை நீதிபதியின் மகன் அவன்!
அவனின் மீதே இப்படி ஒரு குற்றம். அவனின் சித்தப்பா தான் சிறந்த வழக்கறிஞர். ஆனால் இப்போது, அவனின் நிலை என்னவென்று அவனுக்கே தெரியவில்லை.
ஹம்சா அப்படியே தான் நின்று இருந்தான்.
அவனை பார்த்த பக்ஷி ராஜா தான், "ஹம்சா இவனை பிடிச்சி உள்ள போடு டா... இவன் வாழ்க்கைல வெளியவே வர கூடாது" என்று கர்ஜிக்கவும், ஹம்சா அப்படியே தான் நின்று இருந்தான்.
"ஹம்சா உன்ன தான் சொல்றேன்" என்று அவர் மீண்டும் சொல்ல, ஹம்ஸாவோ ஆழ்ந்த மூச்சை எடுத்து அடிமேல் அடி வைத்து சாஹிலை நெருங்கினான்.
சாஹில் தலையை நிமிர்த்தவே இல்லை.
ஹம்ஸாவோ, "சாஹில்" என்று அழைக்க, அப்போதும் அவன் நிமிர வில்லை.
"டாக்டர் சாஹில்" என்று மீண்டும் அழைத்தான்.
நிமிர்ந்து பார்த்தான். அவனின் விழிகளில் இன்னும் அந்த போதையின் தாக்கம் இருந்தது.
கண்கள் சிவந்து இருந்தன. விழிகள் கலங்கி இருந்தது.
அவனின் மனதை அவனின் விழிகள் சொல்லி விட்டது.
ஹம்சாவிற்கு ஏதோ தவறாக பட்டது. அவனின் முகத்தை பார்த்து அவனால் குற்றவாளி என்று கூட கேள்வி கேட்க முடியவில்லை. அவனிற்கு கொஞ்சம் மனசாட்சி இருக்கிறது போல!
"டேய் ஹம்சா! இன்னும் என்ன பண்ணிக்கிட்டு இருக்க?" என்று மீண்டும் பக்ஷி ராஜா கேட்கவும், ஹம்சா ஒரு மூச்சை எடுத்து கொண்டு, அப்படியே திரும்பி, "ஹன்சிகா! நீ ஏன் நைட் ஹாஸ்பிடல் வந்த?" என்று கேட்க, அழுது கொண்டிருந்தவளின் அழுகை அப்படியே நின்று விட்டது.
அவள் நினைத்து பார்க்கவில்லை. இப்படி ஒரு கேள்வியை ஹம்சா அவளை பார்த்து கேட்பான் என்று!
"டேய் என்ன நீ உன்னோட தங்கச்சிய கேட்குற?" என்று பக்ஷி ராஜா கத்தவும், "நீங்க இந்த கேள்வியை உங்க பொண்ண பார்த்து கேட்கணும். இதே போல என்னை ஒரு பொண்ணு சொல்லி இருந்தா இந்த கேள்வியை தான் நீங்க இரண்டு பேரும் கேட்டு இருப்பிங்க" என்றவன் சொல்லவும், அவர்கள் விக்கித்து நின்று விட்டார்கள்.
அவன் சொல்வது சரி தானே!
இதே சமயம், கனகா ஜடாயுவிற்கும் விடயத்தை சொல்லி இருந்தாள்.
ஜடாயு மற்றும் மயூரன் மருத்துவமனைக்கு விரைய, மயூரன் சிட்டுவிற்கும் விடயத்தை சொல்லி இருந்தான்.
அவள் அடுத்து காகேஷிற்கு சொல்ல, ஸ்ரவாணியை மைனாவை பார்த்து கொள்ளும் படி சொல்லிவிட்டு, பரினீத்தி, சிட்டு மற்றும் குயில் மூவரும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.
சிட்டுவிற்கு மனதே கேட்கவில்லை.
"இந்த பக்ஷி குடும்பத்துல எல்லாமே பைத்தியம் போல... எப்படி அவ இப்படி பட்ட பழைய போடுவா?" என்று குயில் கேட்கவும், "அந்த பொண்ணு சரியான சாடிஸ்ட் போல" என்று பரினீத்தியும் சொல்ல, சிட்டுவின் எண்ணம் முழுக்க சாஹில் தான். இந்த நிலையில் மயூரன் இருந்தால் கூட அவள் ஓரளவுக்கு மனதை தேற்றி கொண்டு இருப்பாள்.
அவனால் ஒரு உயிர்க்கும் ஒன்றும் ஆக கூடாது என்று நினைப்பவன் சாஹில். ஆனால் அவனின் மீது இப்படி ஒரு பழி. அவனின் மனநிலை எப்படி இருக்கும் என்று அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.
இதே சமயம் ஜடாயுவும் மயூரனும் அங்கே விரைந்து இருந்தனர்.
அவர்களை பார்த்ததும் பக்ஷி ராஜாவிற்கு தான் இன்னும் கோவமாக வந்தது.
"என்ன கலெக்டர் சார், உங்க தம்பியே ஒரு ரேப்பிஸ்ட்" என்று அவன் பேசி முடிக்கும் போதே, "ஷாட் அப்" என்று கத்தி இருந்தான் மயூரன்.
"உங்களுக்கு என்ன அவனை பத்தி தெரியும்? உங்க பொண்ணு அழுது சீன் போட்டா நாங்க அவனை ரேப்பிஸ்ட்ன்னு நம்பிறணுமா?" என்று மயூரன் கத்தவும், ஜடாயுவோ பக்ஷி ராஜாவை கண்டு கொள்ளாமல் சாஹிளிடம் சென்றான்.
ஹம்ஸாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, சாஹீலின் புறம் திரும்பியவன், அவனின் தோளை பிடித்து, "சாஹில் என்ன நடந்தது?" என்று கேட்க, சாஹீலின் கண்களில் இருந்து இரு சொட்டு நீர் விழுந்தது.
ஜடாயுவின் கண்கள் மூடி திறந்தன.
"என்ன ஆச்சுன்னு நீ சொன்னா தான் டா தெரியும்" என்று அவன் சாஹிலை கேட்க, அவன் வாயே திறக்க வில்லை.
அவனால் உண்மையாகவே பேச முடியவில்லை. வார்த்தைகள் வந்தால் தானே பேசுவதற்கு!
மொத்தமாக இறுகி விட்டான்.
இங்கோ பக்ஷி ராஜாவிற்கு ஆத்திரம்.
"என்ன ஆளாளுக்கு விளையாட்டு காட்டுறிங்களா? இவன் ஒரு பொம்பள பொறுக்கி என் பொண்ணு மேல கைய வச்சி இருக்கான். வந்து அவன் கிட்ட சமாதானம் படுத்திகிட்டு இருக்கீங்க. யோவ்! கலெக்டர் நீ ஏதோ நல்லவன் மாதிரி பேசுன? இந்த விஏஓ நியாயஸ்தன் மாதிரி பேசுனான்" என்று மயூரனையும் பார்த்தவர், அதற்கு மேல் பொறுக்கவில்லை, சாஹிலை நெருங்கி அவனை அவர் அடிக்க கை ஓங்கிய கணம், அவரின் கையை பிடித்து இருந்தது ஒரு கரம். அங்கு நின்று இருந்தது என்னவோ சிட்டு தான்.
"கைய கீழ இறக்குங்க" என்று அழுத்தமாக வந்தது அவளின் வார்த்தைகள்.
முதன் முதலாக இந்த கிட்டுவை பார்க்கிறார் பக்ஷி ராஜா.
பக்ஷி ராஜா மற்றும் சிட்டுவின் சந்திப்பு இன்னும் என்னென்ன திருப்பங்களை கொண்டு வருமோ?
அத்தியாயம் 24
"கைய கீழ இருக்குங்கன்னு சொன்னேன் மிஸ்டர் பக்ஷி" என்றவள் கண்களில் துளி கூட பயம் இல்லை.
இது தான் முதல் முறை பக்ஷி ராஜா சிட்டுவை பார்ப்பது.
"நீங்க தான் புதுசா வந்து இருக்க தலைமை ஆசிரியரா?" என்று கேட்கவும், "அம்மா நான் தான் ஏன் எனக்கு அவார்ட் தர போறிங்களா?" என்று கேட்கவும், பக்ஷிக்கு கோவம் தான்.
"ஒரு ரேப்பிஸ்ட்க்கு சப்போர்ட் பண்றிங்களே உங்களுக்கு வெட்கமா இல்ல?" என்று பக்ஷி கேட்க, அவளோ ஒரு வித நக்கல் புன்னகையுடன், "இவளோ நாள் இந்த ஊர்ல எல்லா ரேப்பிஸ்ட்க்கும் சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருந்தது நீங்க தான். உங்க வீட்டு பொண்ணுக்கு நடந்தா வலிக்குது, இதே மாதிரி எத்தனை வீட்ல நடக்க நீங்க காரணமா இருந்து இருக்கீங்க? அதே மாதிரி இத கண்டிப்பா சாஹில் பண்ணி இருக்க மாட்டான் அப்படியே பண்ணி இருந்தா, அவனோட சுய நினைவுல நிச்சயமா நடந்து இருக்காது" என்று அடித்து பேசினாள்.
அவளுக்கு சாஹீலின் மீது அப்படி ஒரு நம்பிக்கை. அவளுக்கு சாஹிலை கிட்டதட்ட பதினான்கு ஆண்டுகளாக தெரியும். அவனின் அன்னையை விட அவள் தான் அவனிடம் இருந்து இருக்கிறாள். அண்ணி, அண்ணி என்று அவளின் பின்னாலேயே வரும் குழந்தை தான் அவன்.
அவன் இப்படி செய்ய வாய்ப்பே இல்லை.
"நீங்களும் அதையே தானே பண்றீங்க ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுத்தவனுக்கு சப்போர்ட் பண்றீங்க" என்று பக்ஷி சொல்லவும், அவளோ ஹம்ஸாவின் புறம் தான் திரும்பினாள்.
"நீங்க சொல்லுங்க இன்ஸ்பெக்டர், உங்களுக்கு சாஹில் தான் தப்பு செஞ்சி இருப்பான்னு தோணுதா?" என்று நேரடியாக கேட்டு இருந்தாள்.
ஹம்சாவால் பதில் பேச முடியவில்லை. இல்லை என்று தலையசைக்க தான் மனம் ஏங்கியது. தந்தையை மீறி அசைக்க முடியாத நிலையில் அவன் இருக்கிறான்.
ஆனால் மனசாட்சி சாஹிலை குற்றவாளி கூண்டில் ஏற்றவும் மறுத்தது.
"யாரு சொன்னா என்ன? என் பொண்ணே சொல்றா" என்று பக்ஷி சொல்லவும், "உங்க பொண்ணு ஆயிரம் சொல்லுவா அதெல்லாம் நாங்க நம்பிகிட்டு இருக்க முடியுமா?" என்று பரினீத்தியின் குரலும் ஒலித்தது.
"நீங்க எல்லாம் பொம்பளைங்க தானே! ஒரு பொண்ணுக்கு இப்படி நடந்ததுக்கு அந்த பையனுக்கு போய் சப்போர்ட் பண்ணிட்டு வரீங்க" என்று ஆங்காரமாய் அவர் பேச, "வள்ளி கூட பொண்ணு தான் சார்" என்று குயில் முடித்து இருந்தாள்.
பக்ஷிக்கு செருப்பால் அடித்த உணர்வு.
மூன்று பெண்களும் அவனை வைத்து செய்து கொண்டு இருந்தனர்.
"இந்த டாக்டர் என்னை ரேப் பண்ணிருக்கான். நீங்க எல்லாரும் அவனுக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க... தேவை இல்ல யாரும் எனக்கு நியாயம் கேட்க தேவை இல்லை" என்றவள் அருகில் இருந்த ஒரு சர்ஜிக்கல் கத்தியை எடுத்து விட்டாள்.
ஒரு நொடி அங்கிருந்த அனைவருக்குமே இதயம் நின்று விட்டது.
அவள் அவளின் கையை அறுத்து கொள்ள செல்ல, அவளின் கையில் இருந்த கத்தியை பிடித்து எரிந்து, அவளின் கன்னத்திலே அறைந்து இருந்தான் காகேஷ்.
அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து விட்டனர்.
பக்ஷி ராஜாவிற்கே அவள் கத்தியை ஏந்தியதும் நெஞ்சு பதறி விட்டது. அவரின் இரத்தம் அல்லவா! அது சொட்டும் போது அவருக்கு வலிக்கும் தானே!
"பைத்தியமா பிடிச்சி இருக்கு உனக்கு? சின்ன பொண்ணாச்சேன்னு பார்க்குறேன். இல்லனா சாவடிச்சிருவேன். உனக்கு எல்லாம் உயிரோட வேல்யூ தெரியல... ஆனா உன்ன தவிர இங்க இருக்க எல்லாருக்கும் அதோட வேல்யூ தெரியும். அதனால தான் உன்னையும் விட்டு வச்சிருக்கோம். உங்க அப்பனையும் விட்டு வச்சிருக்கோம். அடுத்த தடவை இந்த மாதிரி லூசுத்தனம் பண்ண நானே சுட்டுட்டு போய்ட்டு இருப்பேன். ஒழுங்கா உண்மையை சொல்லு என்ன நடந்தது?" என்று அவன் அவளின் விழிகளை பார்த்து கேட்க, அவளுக்கோ அவனின் விழியை பார்த்தே கிலி எடுக்க துவங்கியது.
"ஆளாளுக்கு என்ன என் பொண்ண கேள்வி கேட்குறீங்க?" என்று பக்ஷி இரண்டியில் ஹன்சிகாவை நெருங்கி விட்டார். அவளும் அவரை அணைத்து கொண்டு, "பாருங்க அப்பா" என்று மீண்டும் அழ, "இப்படியே அழுதுகிட்டு இருந்தா ஒன்னும் மாறாது" என்று காகேஷ் சொல்லவும், "யோவ் ஏசிபி! என் பொண்ண ஒருத்தன் கெடுத்து இருக்கான். அவனை அர்ரெஸ்ட் பண்ண துப்பு இல்ல" என்று அவர் சொல்லவும், அவனுக்கு கோவம் வந்து விட்டது.
"இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுனா அப்பா பொண்ணு இரண்டு போரையும் பிடிச்சி ஜெயில்ல போயிருவேன் அதுவும் உங்க மகன் கையாள... என்ன சரியா?" என்று காகேஷின் கத்தலில் ஹன்சிகாவின் உடல் நடுங்கியது.
அவளின் மனதிலோ, 'என்ன இது ஒருத்தங்க கூட நமக்கு பேச மாட்டேங்குறாங்க.. அண்ணா கூட அப்படியே நிக்குறானே' என்று தான் ஓடியது.
"ஹன்சிகா மறுபடியும் கேட்குறேன் நீ என்ன பண்ண?" என்று தான் கேட்டு இருந்தான்.
அவளால் காகேஷை பார்க்கவே முடியவில்லை. கண்களை பார்த்தாலே நடுங்கியது.
"அப்படி என்ன உங்களுக்கு எல்லாம் அவன் மேல அப்படி ஒரு நம்பிக்கை?" என்று பக்ஷி கேட்க, "நம்பிக்கை தான் யா.. உன் பொண்ணோட ஹிஸ்டரிய பார்த்தா நாறுது... உன் பொண்ணு அவ காலேஜ்ல படிக்குற ஒரு பொண்ண ரேக் பண்ணி காலேஜ் விட்டு போக வச்சி இருக்கா... இவளோ ஏன் ஒரு பையன் மேல போய் கேஸ் போட்டு போலீஸ்ல பிடிச்சி கொடுத்து இருக்கா... அவளை எதிர்த்து பேசுனதுக்காக மட்டும்... உன்ன விட பெரிய சேடிஸ்ட் போல இவ... இதுல சாஹில் இவளை அடிச்சி இருக்கான். என்ன பண்ணுவான்னு கூட யோசிக்க முடியாத அளவுக்கு நான் முட்டாள் இல்ல... அவனை எனக்கு பதினாலு வருஷமா தெரியும். அந்த பையன் எப்படின்னு எனக்கு யாரும் சொல்ல வேண்டாம். அவனை பத்தி எனக்கு நல்லா தெரியும். தோ இங்க நிக்குறாளே இவளை பத்தியும் எனக்கு நல்லா தெரியும்" என்றவன் ஹன்சிகாவை எரித்து விடும் பார்வை பார்த்தான்.
சாஹீலின் கண்கள் கலங்கி விட்டன. அவனுக்காக எத்தனை பேர் பேசுகிறார்கள்.
ஆனால் அவன் தானே இந்த குற்றத்தை செய்தது.
"நான் தான் அவங்களை..." என்றவனின் குரல் அதற்கு மேல் வரவே இல்லை.
அனைவரையும் அவனை தான் பார்த்தார்கள்.
அவனின் கைகளை பிடித்தாள் சிட்டு. அவன் சட்டென உதறி விட்டான்.
ஜடாயு, சிட்டு, மயூரன், காகேஷ் என்று அனைவரும் அதிர்ந்து விட்டனர்.
"வேண்டாம் அண்ணி! நீங்க நினைக்கிற மாதிரி நான் ஒன்னும் நல்லவன் இல்ல... சாக்கடை ஆகிட்டேன். தெரிஞ்சோ தெரியாமலோ நானே சாக்கடை குள்ள விழுந்துட்டேன்" என்றவனின் குரலில் அப்படி ஒரு வலி!
உடைந்து அழுதால் கூட அவனின் வலி குறைந்து இருக்கும் போல... அழ கூடாது என்று முடிவு எடுத்து விட்டான் போல, ஜடாயுவிடம் அழுததோடு சரி.
"சாஹில் நான் சொல்றத கேளு மொதல்ல நீ எங்களுக்கு என்ன நடந்ததுன்னு சொல்லு" என்று அவள் அப்போதும் அவனின் கையை பிடித்து கேட்க, அவன் பிளாஸ்கில் இருந்த தேனீர் அருந்தியதையும் அதற்கு பின் அவனுக்கு நடந்ததையும் கூறினான்.
"அந்த பிளாஸ்க் எங்க?" என்று காகேஷ் கேட்க, "உள்ள தான் இருக்கு" என்றதும், காகேஷ் ஹம்ஸாவை தான் பார்த்தான். அவனே உள்ளே சென்று அந்த ப்லேஸ்க்கை எடுத்து வந்து கொடுக்க, "நவநீதன்" என்று காகேஷ் கத்தவும், "இத டெஸ்ட்க்கு அனுப்பு" என்று சொல்லி கொடுத்து விட்டான்.
"இதை யாரோ வேணும்னே பண்ணி இருகாங்க" என்றவனின் கண்கள் அழுத்தமாக ஹன்சிகாவின் படிய, "என்ன ஏன் பாக்குறீங்க? எந்த பொண்ணாவது அவளோட மானத்தை வச்சே விளையாடுவாளா?" என்று அவள் சொல்லவும், "எந்த பொன்னும் செய்ய மாட்டா ஆனா செஞ்சி இருக்கியே" என்று சொல்லி இருந்தாள் பரினீத்தி.
"நீங்க அப்படி ஊருக்காக பேசுனீங்கன்னு கேள்வி பட்டேன். ஆனா இப்போ இப்படி பேசுறீங்க" என்றவளை பார்த்து, "உனக்காக எல்லாம் இப்படி தான் பேச முடியும். டாக்டர் எப்படின்னு எங்களுக்கு தெரியும்" என்று பரினீத்தி விடாமல் சாஹிலிற்காக நின்றாள். அவளுக்கு அவனை பார்க்கவே பாவமாக இருந்தது. வள்ளிக்காக அவன் ஒரு மருத்துவனாக துடித்தது அவள் பார்த்து இருக்கிறாளே! ஏன் சிட்டுவை அவன் எப்படி பார்த்தான், அவளிடம் கூட மிகவும் கண்ணியமாக தான் பேசி இருக்கிறான்.
ஒருவரை பார்த்து பேசினால் அவர் எப்படி என்று தெரியாதா?
"இங்க பாருங்க மிஸ் ஹன்சிகா உண்மையா நடந்தது என்னன்னு நீங்களே சொல்லிட்டிங்கனா ஒன்னும் பிரச்சனை இல்ல" என்று மீண்டும் காகேஷ் சொல்ல, "என்ன சார் இப்படி சொல்றிங்க! இதுவே உங்க அக்கா தங்கச்சி ஏன் உங்க பிரென்ட்க்கு ஆகி இருந்தா இப்படி தான் பேசுவீங்களா?" என்று அவள் காகேஷின் முன் வந்து நிற்க, "என் தங்கச்சி, அக்கா, பிரென்ட் இப்படி பண்ணி இருந்தா செவில்லேயே ஒன்னு விட்டு இருப்பேன்" என்று அவனும் சளைக்காமல் பேசினான்.
இதே சமயம் அங்கு வந்து இருந்தார்கள் கருணாகரன், கார்மேகம் மற்றும் ராஜேஸ்வரி.
அதிர்ந்து விட்டார்கள் அனைவரும்!
'நாசமா போச்சு' என்று காகேஷ் நினைத்து கொண்டான்.
ராஜேஸ்வரியோ காகேஷை பார்த்து, "என்ன ஏசிபி சார், என்னவோ அன்னைக்கு அவளோ ரோஷமா பேசுனீங்க" என்று ராஜேஸ்வரி கேட்க, 'ம்கூம் இந்த அம்மாக்கு இப்போ இது தான் பெருசா தெரியுது...இவங்க மகன் வாழ்க்கையே ஊசல் ஆடிக்கிட்டு இருக்கு..அது தெரிஞ்சா என்ன ஆட்டம் ஆடுமோ' என்று அவன் நினைத்து கொண்டு இருக்கும் போதே, "ஏதாவது பிரச்சனையா?" என்று கருணாகரன் கேட்க, "சார் மிஸ்டர் சாஹில் மேல மிஸ் ஹன்சிகா ரேப் கேஸ் கொடுக்க ட்ரை பன்றாங்க" என்று அவன் சல்யூட் அடித்து கூறி இருந்தான்.
அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதை அல்லவா அது!
அதிர்ந்து விட்டார்கள் மூவரும்!
"என்ன சொல்ற காகேஷ்?" என்று கார்மேகம் கேட்கவும், "எஸ், அது தான் பிரச்சனை" என்று அழுத்தமாக அவன் கூறவும், ராஜேஸ்வரி மயூரன் மற்றும் ஜடாயுவை பார்க்க, அவர்களும் தலையசைத்தாள்.
"உங்க மகன் தான் என் வாழ்க்கையே அழிச்சிட்டாரு" என்று ஹன்சிகா கத்தவும், ராஜேஸ்வரியோ அவளை முறைத்து விட்டு, "சாஹில்" என்று பெண் சிங்கம் போல் கர்ஜனையாக அழைக்க, அவனும் முன் வந்து நின்றான்.
"இந்த பொண்ணு சொல்றது..." என்று அவர் முடிக்கும் முதல், "எஸ்" என்று அவன் பதில் கொடுத்து இருக்க, அவனின் கன்னத்தில் ராஜேஸ்வரியின் கைரேகை படிந்து இருந்தது.
அத்தியாயம் 25
ராஜேஸ்வரி அரைந்ததும் தான் தாமதம், அவரின் முன் வந்து நின்று, "இப்போ எதுக்கு அவனை அடிக்கிறீங்க? உங்களுக்கு உங்க மகன் மேல நம்பிக்கை இல்லையா?" என்று சிட்டு கேட்கவும், "அதான் அவனே அவன் தான் பன்னேனு சொல்றனே" என்றவரை பார்த்து, "அவனுக்கு ட்ராக் கொடுத்து இருக்கலாம் இல்லையா? யாருக்கு தெரியும் என்ன நடந்ததுன்னு...இவளோ அடிக்கிறிங்களே! அந்த பொண்ண பார்த்து நீ ஏன் மா என் மகனை பார்க்க நைட் வந்தேன்னு கேளுங்க மிஸஸ் ராஜேஸ்வரி" என்று அவள் பேசவும், ராஜேஸ்வரி அப்போது தான் ஹன்சிகாவின் பக்கம் திரும்பினார்.
"ஹே" என்று சொடக்கிட்டு, "நீ எதுக்கு என் மகனை பார்க்க இந்த நேரத்துல போன?" என்று கேட்கவும், அவளோ, "எனக்கு கொஞ்சம் உடம்பு முடியலன்னு போனேன்" என்ற ஹன்சிகாவிடம், "நடுராத்திரி உடம்பு சரி இல்லனா உங்க அண்ணா இல்ல அப்பா கிட்ட சொல்லி அவங்களையும் கூட்டிட்டு வந்து இருக்கலாமே" என்று குயில் கேட்க, "நடுராத்திரி உடம்பு சரியாம தான் தனியா கார் ஓட்டிட்டு வந்து இருக்கீங்க?" என்று பரினீத்தியும் கேட்டாள்.
ஹன்சிகா நிச்சயம் மாட்டிக்கொள்வாள் என்பது போல் தான் ஆகிவிட்டது.
ஆனால் பக்ஷிக்கு அவரது பெண்ணின் மானம் போவது போல் இருந்தது.
"இங்க பாருங்க மா..உங்க மகன் தான் என் மகளோட இந்த நிலைக்கு காரணம். உங்க மகனை ஒழுங்கா என் பொண்ணு கழுத்துல தாலி கட்ட சொல்லுங்க" என்று அவர் பேச்சிற்கு வர, ஹன்சிகாவிற்கு அவள் நினைத்தை சாதித்தது போன்ற உணர்வு.
அவளுக்கு இது தானே வேண்டும்.
"என்ன விளையாடுறிங்களா?" என்று ஜடாயு கேட்க, ராஜேஸ்வரியோ யோசிக்க ஆரம்பித்தார். மகன் தவறு செய்து விட்டதாக அவனே சொல்கிறான்.
அந்த பெண் வழக்கு கொடுத்தால், குடும்ப மானமே போய் விடும்.
"சரி நாளைக்கே கல்யாணம்" என்று ராஜேஸ்வரி சொல்ல, "பைத்தியமா நீ ராஜி?" என்று கேட்டு இருந்தார் கருணாகரன்.
கார்மேகம் கூட, "அண்ணி ஒரு தடவை எல்லாமே விசாரிக்கலாம்" என்று சொல்லவும், "நான் சொல்றேன்ல அந்த பொண்ணுக்கு நடந்ததும் கொடுமை தானே" என்று சொல்ல, காகேஷோ அருகில் இருந்த சிட்டுவின் காதில், "உன் மாமியார் அவரோட சொந்த மகன் வாழ்க்கைக்கே கொல்லி வைக்குறாங்க" என்று சொல்லி இருந்தான்.
"சாஹிளுக்கு இதுல சம்மதமான்னு கேளுங்க" என்று சிட்டு சொல்ல, "எனக்கு சம்மதம் தான் அண்ணி" என்று சொல்லவும், அனைவர்க்கும் ஒரு வித அழுத்தம்.
"இங்க பாருங்க டாக்டர்... கேஸ் போடட்டும் நம்ப எல்லாரும் சேர்ந்து சண்டை போடலாம். அதான் அந்த டீயை டெஸ்ட் பண்ண கொடுத்து இருக்கோம்ல" என்று பரினீத்தி அவனின் முன் வந்து சொல்லும் போதே, "இல்ல இது தான் என் வாழ்க்கை போல" என்று சொல்லி இருந்தான் அவன்.
"அவளோ தான் விடுங்க சம்மந்தி...உங்க குடும்பத்தை பத்தி நான் நிறைய கேள்வி பட்டு இருக்கேன். இந்த மாதிரி ஒரு சம்மந்தம் கிடைக்க நான் கொடுத்து வச்சி இருக்கனும்" என்று பக்ஷி பேசினார்.
அவருக்கு இப்போது மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டால், இனி ஜடாயு மற்றும் மயூரன் அவரின் வழிக்கு வர மாட்டார்கள் என்கிற ஒரு அற்ப ஆசை. சிட்டுவும் அதே வீட்டு மருமகள் தானே, அவளையும் அடக்கி விட்டு, காகேஷ், பரினீத்தி மற்றும் குயில் மூவரையும் தீர்த்து கட்டி விடலாம் என்று தான் அவரது கேடுகெட்ட மூளை யோசிக்க துவங்கியது.
"நாளைக்கே கல்யாணம். எல்லா ஏற்பாடும் பண்ணு ஜடாயு" என்று ராஜேஸ்வரி சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
"அப்பா ஏன் அம்மா இங்க வந்தாங்க?" என்று ஜடாயு கேட்க, "டேய்! அவ உங்க எல்லாரையும் பார்த்து சாஹில் மயூரனுக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிக்கலாம்னு சொல்ல வந்தா...இங்க என்னடானா இப்படி ஆகிருச்சு... நீ சாஹில் கிட்ட பேசு ஜடாயு.. இந்த கல்யாணத்துல எனக்கு இஷ்டம் இல்ல..உன் அம்மாவை சமளிக்குறது கஷ்டம். ஆனா சாஹில் பேசுனா நம்ப இதை நிறுத்த ட்ரை பண்லாம்" என்று கருணாகரன் சொல்லவும், "ம்ம்" என்று பதில் அளித்து இருந்தான்.
"எப்படி மா இருக்க?" என்று கார்மேகம் சிட்டுவை பார்த்து கேட்க, "நல்லா இருக்கேன் மாமா" என்றவளை பார்த்து, "பாப்பா எங்க?" என்று கேட்கவும், "வீட்ல இருக்கா" என்று கூறி இருந்தாள்.
"பாப்பாவை பார்க்க தான் மா நாங்க வந்தோம். அவளை கொஞ்சம் அனுப்பி விடுறியா?" என்று கேட்கவும், மயூரனை பார்த்து, "ஸ்ரவாணிய அழைச்சிட்டு போய் கொடு" என்று கூறி இருந்தாள்.
அவனும் தலையசைத்து சென்றான்.
இப்போது அனைவரும் கூடி இருந்தது என்னவோ காகேஷின் வீட்டில் தான்.
"எதுக்கு டா எல்லாரும் என் வீட்டுக்கு வரீங்க?" என்று கேட்க, "இப்போதைக்கு இங்க தான் பேச முடியும்" என்று ஜடாயு சொல்லிவிட, பரினீத்தி, சாஹில், மயூரன், ஜடாயு, சிட்டு, குயில், மைனா என்று அனைவரும் கூடி இருந்தார்கள்.
"சாஹில் நீங்க இந்த கல்யாணம் பண்ணிக்கனும்னு என்ன அவசியம்? எல்லாமே அந்த வில்லி பண்ண பிளான். கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க" என்று குயில் பேசவும், "இங்க பாரு சாஹில் டெஸ்ட் ரிப்போர்ட் வரட்டும். அவ தான் ஏதாவது பண்ணி இருப்பா" என்று ஜடாயு கூட சொல்லி இருந்தான்.
"இல்ல நான் இந்த கல்யாணம் பண்ணிக்குறேன். இனி என்னால இன்னொரு பொண்ணோட வாழ முடியாது" என்று அவன் சொல்லவும், "லூசு போல பேசாதீங்க டாக்டர். அவ கூட வாழ்க்கை முழுக்க வாழ போறிங்களா? அவளே சரியான சைத்தானா இருக்கா... நீங்க வேற அவ கூட வாழணுமா?" என்று பரினீத்தியும் கேட்டாள்.
"இது தான் என் வாழ்க்கை" என்கிற குரலில் சுரத்தே இல்லை.
மயூரனின் கண்களில் கண்ணீர் தான் இருந்தது.
அவனால் சாஹிலை இப்படி பார்க்கவே முடியவில்லை.
அவனும் சாஹிலும் அண்ணா தம்பி என்பதை தாண்டி இருவரும் நல்ல நண்பர்கள்.
சிறுவயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள் அவரகள்.
"ஏதாவது யாரவது பண்ணுங்க ப்ளீஸ்" என்று விரக்த்தியில் கத்தியே விட்டான். அதற்கு மேல் அவன் அங்கு நிற்கவே இல்லை. அங்கிருந்து வெளியே சென்று விட்டான்.
அவன் வெளியே வந்து நின்று இருக்க, அவனின் தோளை பற்றியது ஒரு கரம்.
அவன் யோசிக்கவே இல்லை. அணைத்து இருந்தான். இறுக அணைத்து இருந்தான். மைனா தான் அதிர்ந்து விட்டாள்.
அவள் தான் மயூரனின் பின்னால் வந்தாள்.
"சார்" என்றதும் தான் அவன் சுய நினைவிற்கே வந்தான்.
"சாரி சாரி" என்று இரண்டடி பின்னால் சென்று இருந்தான்.
"இட்ஸ் ஓகே சார்... எதுவும் கவலை படாதீங்க சார்..எல்லாம் சரி ஆகிடும் நம்ப சாஹில் சார் கிட்ட பேசி சரி பண்ண ட்ரை பண்ணலாம்" என்று மைனா சொல்ல, "இல்ல உனக்கு அவனை பத்தி தெரியாது. அவன் மனசுல இருக்கறத பேசுலனா பிரச்சனை ஹன்சிகா தான். அவன் இந்த அளவுக்கு ஸ்டாபெர்னா இருக்கான். ஹன்சிகா நினைச்சுகிட்டு இருக்கா அவ ஜெயிச்சிட்டானு அவ வாழ்க்கைல தோற்க போறான்னு அவளுக்கு தெரியல" என்று சரியாக கணித்து தான் இருந்தான் மயூரன்.
இதே சமயம், ஹன்சிகாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தான் ஹம்சா.
"அண்ணா" என்று அவள் கத்த, "ஷ்ஷ்ஷ்... கத்துனா இங்கயே கொன்னு போட்டுட்டுடுவேன்" என்று ஒற்றை விரலை நீட்டி அவன் சொல்லவும், அவளோ எச்சில் கூட்டி விளங்கினாள்.
"உண்மையை சொல்லு என்ன கலந்து கொடுத்த சாஹிளுக்கு? சொல்லு ஹன்சிகா என்ன பண்ண?" என்று அவன் அதட்ட, அவளும் நடந்த அனைத்தையும் கூறி இருந்தாள்.
"ச்சீ... என்ன பண்ணி இருக்க நீ? ஒரு பொண்ணு நீ உன்னோட சொந்த மானத்தை அடமானம் வச்சி இதை பண்ணி இருக்க? நாளைக்கு வேற ஒருத்தன் அவமானம் படுத்தினா அவன் கூடையும் போய் படுப்பியா?" என்று பச்சையாக கேட்டு இருந்தான்.
"அண்ணா" என்று ஹன்சிகா கத்த, "பேசாத, வர ஆத்திரத்துக்கு... " என்று அவளை கொள்வது போல் கையை கொண்டு போக, "நல்ல வேலை அம்மா இல்ல.. இருந்து இருந்தா..." என்று அவன் சொல்லிவிட்டு சென்று விட்டான்.
அவனுக்கு மனது கேட்கவே இல்லை.
ஹன்சிகா இந்த அளவு இறங்கி கீழ் தரமான காரியம் செய்வாள் என்று அவன் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை.
அவனுக்கு ஆத்திரமாக வந்தது. வீட்டில் இருந்து அவனின் இருசக்கர வண்டியை எடுத்து கொண்டு ஆற்றங்கரைக்கு சென்று விட்டான்.
சாஹிளிடம் எவ்வளவு பேசியும் ஒன்றும் எடுபட வில்லை.
சிட்டுவிற்கு மனதே விட்டு போய் விட்டது.
பரினீத்தி, குயில், மைனா மற்றும் சிட்டு நால்வரும் நடந்து வந்து கொண்டு இருந்தனர். அப்போது தான் அங்கே ஹம்சா அமர்ந்து கொண்டு இருப்பதை பார்த்தனர்.
குயிலுக்கு பரினீத்திக்கும் வந்ததே கோவம்.
குயில் தான் முதலில், "யோவ் உன்னோடது எல்லாம் என்ன குடும்பம்யா? மானம் மரியாதை எல்லாம் இல்ல! உனக்கு தான் இல்லன்னு பார்த்தேன். உன் தொங்கச்சிக்கும் இல்லையா? அவ தான் எல்லாமே பண்ணி இருக்கன்னு தெரிஞ்சும் அமைதியா இருக்கோம் பாரு எங்களை சொல்லணும்" என்று அவள் பேசவும், பரினீத்தியும், "பொண்ணுங்க மேல கை வைக்குற பொம்பள பொறுக்கி தானே நீ! உங்கிட்ட எல்லாம் என்ன பேச முடியும்? உன் தங்கச்சின்னு கரெட்டா நிரூபிக்குறா அவ" என்று அவளும் பேசினாள்.
"என்ன மேம் இரண்டு பேரும் இந்த கிழி கிழிக்குறாங்க" என்று மைனா சொல்லவும், சிட்டுவோ ஹம்ஸாவை தான் பார்த்து கொண்டு இருந்தாள்.
ஹம்ஸாவோ இவர்களை கடந்து, "உங்க கிட்ட பேசணும்" என்று சிட்டுவை பார்த்து சொல்ல, அவளும் தலையசைத்தாள்.
இருவரும் சற்று தூரம் சென்று பேசி கொண்டு இருந்தார்கள்.
"இவன் என்ன மேம் கிட்ட பேசுறான்?" என்று பரினீத்தி குயிலை பார்க்க, "தெரியலையே என் தங்கச்சி இப்போ உங்க மச்சினன் பொண்டாட்டி அதனால எங்க வழியில இருந்து விலகிடுங்கன்னு சொல்லுறானோ" என்று கேட்க, "இருக்குமோ" என்று சொல்லவும், இருவரும் பேசி முடித்து வந்து இருந்தார்கள்.
"போகலாம்" என்று சிட்டு சொல்ல, இறுதியாக ஹம்சா தலையசைத்து சென்று விட்டான்.
"அப்படி என்ன மேம் அந்த அன்னப்பறவை உங்க கிட்ட பேசினான்?" என்று கேட்க, "உண்மையை பேசினான்" என்று சொல்லி முடித்து கொண்டாள்.
அவர்களால் அதற்கு மேல் எதுவும் கேட்க முடியவில்லை.
அடுத்த நாளும் விடிந்தது.
சாஹில் இதோ மணக்கோலத்தில் அமர்ந்து இருந்தான்.
அத்தியாயம் 26
காலை விடிந்தது.
இரவு முழுக்க யாருக்கும் சரியாக உறக்கமே இல்லை. கார்மேகம் ஸ்ராவனியை அவரே வைத்து கொள்வதாக கூறி விட்டார். அவருக்கு ஸ்ராவனி என்றால் அவ்வளவு பிடிக்கும்.
காலை எழுந்ததும், ஜடாயு கூட, "சாஹில், கொஞ்சம் வெய்ட் பண்லாம்" என்று சொல்ல, "இல்ல அண்ணா வேண்டாம்" என்று சொல்லி இருந்தான் அவன்.
அதற்கு மேல் அவனிடம் எதுவும் பேச முடியாது என்று அனைவருக்கும் தெரிந்து விட்டது.
ராஜேஸ்வரியோ, "முதல் மகன் கல்யாணம் தான் மட்டமா நடந்தது இப்போ ரெண்டாவது மகன் கல்யாணம் இன்னும் மட்டமா நடக்க போகுது. எல்லாரும் நம்பள காரி துப்ப போறாங்க" என்று சொல்லவும், கருணாகரனோ, "நீ தானே கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட" என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டார்.
அவருக்கு உண்மையாகவே இந்த திருமணத்தில் விருப்பமே இல்லை. சாஹிலை பற்றி அவருக்கு நன்கு தெரியும்.
அவர் வந்து கோவிலில் அமர்ந்து விட, அங்கு வந்தாள் சிட்டு.
"இந்தாங்க மாமா" என்று அவருக்கு பிடித்த இஞ்சி டீயை கொடுக்க, அவரோ, "நீ ஏன் மா வீட்டை விட்டு போன? இதுல டிவோர்ஸ் வேற அப்பளை பண்ண போற" என்று சொல்லவும், அவளோ, "உங்க பொண்டாட்டி தான் எல்லாத்துக்கும் காரணம் மாமா" என்று சொல்லி நகர்ந்து விட்டாள். அதை எல்லாம் ஜடாயுவும் கேட்டு கொண்டு தான் இருந்தான்.
சாஹில் வந்து அமர்ந்து விட, ஹன்சிகாவும் வந்து அமர்ந்து விட்டாள்.
மந்திரங்கள் ஒலிக்க, சாஹில் ஹன்சிகாவின் கழுத்தில் மூன்று மூச்சு போட, 'இது உனக்கான தூக்கு கயிறு சாஹில்' என்று அவள் மனதில் நினைக்க, அவனின் முகம் மட்டும் இறுகி இருந்தது. என்ன நினைக்கிறான் அவன், என்று இப்போது அவனுக்கு மட்டும் தான் தெரியும்.
திருமணம் முடிந்து, இருவரும் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க, அதை எல்லாம் பார்ப்பதற்கு அவர்கள் யாருக்கும் உண்மையாகவே மனம் இல்லை.
ஜடாயு மற்றும் மயூரன் ஜடாயுவிற்கு என்று கொடுத்த வீட்டிற்கு இடம் பெயர்வதாக கூறி விட்டார்கள்.
கோவம் தான் அனைவருக்கும், ஆனால் ஒன்றுமே செய்ய முடியாத நிலை.
ராஜேஸ்வரியோ, "எல்லாரும் உங்க வேலை முடிச்சிட்டு மொத்தமா வீட்டுக்கு வந்து சேருங்க" என்று சொல்லி காரில் ஏறி விட்டார்.
கருணாகரன் தான், "ஜடாயு, மொத்தமா முடிச்சிட்டு தான் வரணும்" என்று சொல்ல, அவனும் தலையசைத்து கொண்டான்.
"பை தாத்தா" என்று ஸ்ராவனி கருணாகரன் மற்றும் கார்மேகத்திடம் சொல்ல, "பை தங்கமே" என்று சொல்லிவிட, ராஜேஸ்வரி அவரின் பேத்தியிடம் வந்து, "நீயும் சீக்கிரம் வா" என்று சொல்ல, "என் அம்மா வந்தா நானும் வரேன்" என்று சொல்லி விட்டாள்.
"அப்படியே அவங்க அம்மா மாதிரி பண்ரா" என்று ராஜேஸ்வரி சொல்லவும், கருணாகரனோ, "உன்ன மாதிரின்னு கூட சொல்லலாம்" என்று சொல்லி கொண்டார்.
அவர்கள் அனைவரும் அன்றே கிளம்பி விட்டார்கள்.
சாஹில் மற்றும் ஹன்சிகாவும் அவனின் வீட்டிற்கு வந்து விட்டார்கள்.
"டாக்டர் சாஹில் இதோட நான் சொல்றத தான் நீங்க கேட்கணும்" என்று அவள் சொடக்கு போட்டு சொல்ல, அவனோ அவளை முறைத்து பார்த்து விட்டு உள்ளே சென்று விட்டாள்.
சிட்டு, காகேஷ், ஜடாயு, மயூரன், பரினீத்தி, மைனா, குயில் தான் கூடி இருந்தார்கள்.
"என் வீடை ஏதோ மீட்டிங் ஸ்பாட் மாதிரி யூஸ் பண்றீங்க" என்று காகேஷ் சொல்ல, "அதனால என்ன இப்போ?" என்று மயூரன் கேட்கவும், அவனோ, "ஒன்னும் இல்ல டா... இவன் அம்மா நினைச்சி இருப்பாங்க...இவனுக்கும் சிட்டுவுக்கும் தான் கல்யாணம் பண்ண கூடாதுனு நினைச்சி நம்ப நடத்தி வச்சோம்... இதுல சாஹில்க்கு இப்படியான்னு" என்று காகேஷ் சொல்ல, "எப்படி சார்க்கும் மேம்க்கும் கல்யாணம் நடந்துச்சு?" என்று பரினீத்தி ஆர்வமாக கேட்க, "இப்போ ரொம்ப முக்கியமா?" என்று காகேஷ் கேட்க, "ஏதாவது நல்ல விஷயம் பத்தி கொஞ்சம் பேசலாமே" என்று குயிலும் கூறி இருந்தாள்.
அது வந்து, என்று மீண்டும் அவர்களின் கல்லூரி நாட்களுக்கு பயணம் செய்தனர்.
சிட்டு ஜெயித்தவுடன், காகேஷ் அவனது என்சிசி கெம்ப் போக வேண்டியது இருந்ததது.
அப்படி ஒரு நாள் சிட்டுவை வீட்டில் விடுகிறேன் என்கிற பெயரில் ஜடாயு வேடந்தாங்கல் கூட்டி கொண்டு போயிருந்தான்.
"ஏன் சார் இப்போ வேடந்தாங்கல்?" என்று கேட்க, "சும்மா தான்.. கிளாஸ் தான் சீக்கிரம் முடிஞ்சிருச்சே" என்று சொல்லிக்கொண்டே அவன் சொல்ல, அவளுக்கு வேறு வழி இல்லை, ஆனால் அவனிடம் செல்வது அவளுக்கு பிடித்து தான் இருந்தது.
பறவைகள் சரணாலயத்தில் அவள் பறவைகளை பார்த்து லயித்து கொண்டிருந்தாள்.
அவனோ அவனின் சிட்டுவை தான் பார்த்து கொண்டு இருந்தான். அவனுக்கு அவளை அவ்வளவு பிடிக்கும். நிறத்தை பார்த்து பெண்களை இடை போடும் ஆண்களுக்கு மத்தியில், அவளின் நேர்மையையும், உண்மையும், தைரியத்தையும் பார்த்து காதலித்தவன் அவன்.
"சிட்டு" என்று அவன் அழைக்க, அவளும் திரும்ப, அவனோ அவளின் இடையை பிடித்து அவனிடம் இறுக்கி இருந்தான்.
அவனின் கண்களே அவனின் காதலை அவளிடம் சொல்லி தான் விட்டது.
ஆனாலும் அவனின் உதடுகளில் இருந்து கேட்டும் ஆவலும் அவளிடம் இருந்தது தான்.
"சிட்டு, எப்பவும் நீ என் கூட இருக்கனும்" என்று சொல்ல, "அதுக்கென்ன இருந்துட்டா போச்சு... என் பிரென்ட் காக்கா கூட இருக்குற மாதிரி இருக்குறேன்" என்று அவள் சொல்ல, அவனை சீண்டி தான் விடுகிறாள் என்று அவனுக்கும் தெரியும்.
"பொண்ணுங்களுக்கு பசங்கள வச்சி செய்ய அவளோ பிடிக்குமா?" என்று கேட்க, அவளோ சிரிப்பை அடக்கி கொண்டு, "ச்ச ச்ச... பிடிக்கும்லாம் இல்ல... ரொம்ப ரொம்ப பிடிக்கும் சீனியர் சார்" என்று கண்சிமிட்ட, "ரொம்ப படுத்துற டி... சரி வெளிப்படையாவே சொல்றேன். ஐ லவ் யு போதுமா?" என்று அவன் சொல்லவும், அவளோ, "சரி சார்.... ஆனா வெறும் ஜட்ஜ் பையன்னு என் தாத்தா கிட்ட வந்து பொண்ணு கேட்பிங்களா?" என்கவும், "நீ இப்படி தான் கேட்பேன்னு தெரியும் டி.. நான் யுபிஎஸ்சி கொடுக்கலாம்னு இருக்கேன். காலெக்டரா வந்து பொண்ணு கேட்குறேன்" என்றவன் கண் சிமிட்டி விட்டு, "அது வரைக்கும் இந்த சிட்டு குருவி எனக்காக வெய்ட் பண்ணுமா?" என்று கேட்கவும், "அதெல்லாம் பண்ணும்... நான் மொதல்ல இதை என் பிரென்ட் கிட்ட சொல்லணும்" என்றவளை அப்படியே மடக்கி பிடித்து, "அவன் கிட்ட ஒரு மாசத்துக்கு சொல்லாத" என்று சொல்லி விட்டான்.
அவளின் புருவங்கள் உயர்ந்தன.
"ஒரு மாசம் தான் டி.. அப்புறம் சொல்லிக்கலாம்... ப்ளீஸ் எனக்காக" என்று ஜடாயு கெஞ்சவும், அவளும் தலையசைத்து கொண்டாள்.
ஒரு வாரம் காகேஷ் இல்லாததால், ஜடாயு சிட்டுவை கூட்டி கொண்டு சிட்டுவாக பறந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனால் இதை எல்லாம் பார்த்த ப்ரியாவின் கண்கள் தான், அவர்கள் இருவரையும் எரித்து கொண்டு இருந்தது.
அவளுக்கு சிட்டுவை பழி வாங்கியே ஆக வேண்டும் என்கிற எண்ணம் தான்.
காகேஷும் வந்து விட்டான். வந்தவன், "ஸ்பாரோ நான் ஐபிஎஸ் ட்ரை பண்லாம்ன்னு இருக்கேன் டி" என்றதும் காபி குடித்து கொண்டிருந்தவள், "நீயுமா?" என்று கேட்க, "நீயுமாவா? வேற யாரு யுபிஎஸ்சி ட்ரை பண்ண போறா?" என்று புருவம் உயர்த்தி கேட்க, அவளோ, 'ஐயோ உளறிட்டோமே' என்று நினைத்து கொண்டு, "அது வந்து..." என்று இழுக்கும் போதே, "எதையாவது என்கிட்ட இருந்து மறைக்கிறியா?" என்று நேரடியாகவே கேட்டு இருந்தான்.
அவளுக்கு உண்மையாகவே அவனிடம் மறைத்து பழக்கம் இல்லை.
அவளோ இல்லை என்று தலையசைத்து, பின்பு ஆமாம் என்று தலையசைத்தாள். ஒரு மாதிரியான மனநிலை அவளுக்கு... நண்பனிடம் பொய் சொல்ல அவளுக்கு மனம் ஒப்பவில்லை. ஆனால் காதலனின் வார்த்தைக்கும் மரியாதை கொடுக்கவேண்டும். ரெண்டும்காட்டான் நிலை தான்.
"நீ எதுவும் சொல்ல வேணாம். எனக்கு யாரு கிட்ட கேட்கணும்னு தெரியும்" என்றவன் நேராக சென்று நின்றது என்னவோ ஜடாயு முன்னால் தான்.
"என்ன டா சொன்ன என் பிரென்ட் கிட்ட?" என்று நேரடியாக அவனை கேட்க, சிட்டுவை தான் ஜடாயு பார்த்தான்.
அவளோ, "நான் எதுவும் சொல்லல... அவன் ஐபிஎஸ் படிக்க போறேன்னு சொன்னான்" என்று அவள் சொன்னதும், என்ன நடந்து இருக்கும் என்று ஓரளவிற்கு அவன் கணித்து தான் இருந்தான்.
"ஆமா டா நான் தான் அவ கிட்ட ஐஏஎஸ் படிக்க போறேன்னு சொன்னேன். அதனால அவ அப்படி சொல்லி இருப்பா" என்றதும், "அதுக்காக மட்டும் அவ திணறுற மாதிரி இல்லையே ஜட்டு" என்று அவன் சொல்லவும், "அடிங்க... என்ன டா உங்க வீட்டு நாய கூப்பிடுற மாதிரி ஜட்டுன்னு கூப்பிடுற" என்று சொல்லவும், "ஹே ரவீந்திர சிங்க் ஜடேஜாவை கூட அப்படி தான் கூப்பிடுவாங்க" என்று சமாளிக்க, "சரி தான்.. அதான் இப்பவே போலீஸ் மாதிரி எல்லாம் யோசிக்கிறியே..." என்று காகேஷை பார்த்து சொன்னவன், அப்படியே சிட்டுவை பார்த்து, "உன் பிரென்ட்க்கு எல்லாம் தெரியும் டி.. தெரிஞ்சி தான் நம்பள வச்சி செய்றான். அவன் எமகதகன்" என்று சொல்லவும், அவளோ காகேஷை பார்க்க, "இவன் உன்ன லவ் பண்ரான்னு எனக்கு எப்பவோ தெரியும். நீ தான் பேக்க்கு மாதிரி இருந்த" என்றவன் அப்படியே ஜடாயு புறம் திரும்பி, "என் பிரென்ட் என்கிட்ட பொய் சொல்ற அளவுக்கு ட்ரெயின் பண்ணி வச்சிருக்க நீ! உனக்கு இருக்கு டா" என்று சொன்னவன், சிட்டுவின் கையை பிடித்து இழுத்து கொண்டு சென்று விட்டான்.
அதற்கு பிறகு ஒரு வாரம் ஜடாயுவின் கண்களில் சிட்டுவை அவன் படவே விடவில்லை.
ஜடாயுவிற்கு தான், "வச்சி செய்றான், அவனுக்கு லவ் செட் ஆகட்டும் என் பழைய தீர்த்துக்குறேன்" என்று தனக்கு தானே பேசிக்கொண்டான்.
அவர்கள் இப்படியே இருவருடன் கல்லூரியும் முடித்து விட்டார்கள்.
நல்லதோ கெட்டதோ, அடுத்து வந்த ஒரு வருடத்தில் சிட்டு அவளின் மேற்படிப்பை படித்து கொண்டு இருக்கும் போதே, முதல் அட்டெம்ப்டிலேயே ஜடாயு ஐஏஎஸ், மற்றும் காகேஷ் ஐபிஎஸ் இரண்டிற்கும் தேர்ச்சி பெற்று இருந்தார்கள்.
சிட்டுவிற்கு மகிழ்ச்சி தாளவே முடியவில்லை.
இதே சமயம், சாஹில் மருத்துவத்திற்கும், மயூரன் இன்ஜினியரிங் சேர்ந்து இருந்தார்கள்.
ஜடாயு மற்றும் காகேஷ் அவர்களின் ட்ரைனிங் செல்லும் நாள் வந்தது.
மயூரன், சாஹில் இருவருக்கும் இப்போது சிட்டுவை அண்ணி என்றே அறிமுக படுத்தி இருந்தான் ஜடாயு.
"எங்களுக்கு தான் தெரியுமே! செம்ம ஹாப்பி தான்" என்று இருவரும் சொல்ல, காகேஷோ, "டேய் போதும் டா உங்க பாச மழை எல்லாம் தாங்கல" என்று அவன் சொல்ல, சாஹிலோ அவனிடம் சென்று, "நீங்க ரொம்ப பேசுறீங்க" என்று ஒற்றை விறல் நீட்டி சொல்ல, அவனின் கையை பிடித்து இழுத்தவன், "என்ன விட நாலு வயசு சின்ன வாண்டு நீ எல்லாம் என்ன பேசுற... போ போய் உட்காந்து ஐஸ் கிரீம் சாப்பிடு" என்று அவனின் வாயில் அவனே ஐஸ் கிரீமை ஊட்டி விட்டான்.
ஜடாயுவோ, "நீ உன்னோட படிப்பை முழுசா முடிக்கணும். பிஎச்டி வரைக்கும்! பொண்ணுங்களுக்கு உன்ன மாதிரி இன்ஸ்பிரஷன் வேணும் சிட்டு" என்று சொல்லிவிட்டு தான் சென்றான்.
நாட்கள் அதற்கு பிறகு வேகமாக ஓடின.
ஐந்து வருடங்கள் இதோ ஓடிவிட்டது.
காகேஷ் இப்போது தான் சென்னைக்கு மாற்றல் வாங்கி வந்து இருந்தான். ஜடாயுவும் கூட தான்!
சாஹில் அவனின் இறுதி ஆண்டில் இருக்க, மயூரன் அவனின் முதுகலை படிப்பை படித்து கொண்டு இருந்தான்.
சிட்டு அவளின் முனைவர் படிப்பிற்கான தேசிஸை முடித்து வைத்து இருந்தாள். ஜடாயு மற்றும் காகேஷ் நினைத்ததை அவள் முடித்து காட்டி இருந்தாள்.
கொஞ்ச நஞ்ச கஷ்டம் அல்ல! நிறைய போராட்டங்கள் இடையில் வந்த போதும், இந்த நால்வரின் கூட்டணியால் தான் அவளால் இதை செய்ய முடிந்தது.
காகேஷ் மற்றும் ஜடாயு இல்லாததால், சாஹில் மற்றும் மயூரனின் துணை தான் அவளுக்கு பெரிய பலமாக இருந்தது.
இந்த ஐந்து வருடங்களில் சாஹில் மற்றும் மயூரன் அவளுடன் நன்கு ஒன்றி இருந்தனர்.
"அண்ணி அண்ணி" என்று அவளை சுற்றியே வந்து கொண்டு இருந்தனர்.
இதே சமயம், ப்ரியாவும் அவளது அன்னையும், ராஜேஸ்வரியின் முன் அமர்ந்து இருந்தார்கள்.
அத்தியாயம் 27
"ராஜேஸ்வரி, என் மக ப்ரியாவை உன் மகன் ஜடாயுவுக்கு கல்யாணம் பண்ணி தரியா?" என்று அம்புஜம் கேட்கவும், ராஜேஸ்வரியோ, "அதான் பேசி வச்சது தானே... இதுல என்ன இருக்கு?" என்று கேட்க, "ஒன்னும் இல்ல ராஜி.. இப்போ நிச்சயம் வச்சிக்கலாமே! உன் மகனும் இங்க வந்துட்டான். உன் பிறந்த நாள் பார்ட்டில இவங்க நிச்சயத்தை அன்னோன்ஸ் பண்ணிரலாம்" என்று அம்புஜம் குழைந்து கொண்டே பேசவும், "பண்ணிரலாம்" என்று ராஜேஸ்வரியும் புன்னகையுடன் கூறினார்.
இங்கோ அவர்களின் அதே ஐஸ் கிரீம் கடையில் தான் இந்த ஐவர் கூட்டணி அமர்ந்து இருந்தது.
"இந்த வாட்டி அம்மா பார்த் டேக்கு நீயும் வா சிட்டு... அன்னைக்கு தான் நான் அம்மா கிட்ட நம்ப காதலை சொல்லலாம்னு இருக்கேன்" என்றதும், "ம்கூம்... அன்னைக்கு தான் அப்போ அவன் அம்மா இவனுக்கு சங்கு ஊத போறாங்கன்னு அர்த்தம்" என்று காகேஷ் சொல்ல, "ஏன் எப்பவும் அபச குணமா பேசுறீங்க?" என்ற சாஹிலை பார்த்து, "டேய் டாக்டர் நீங்க மட்டும் ரொம்ப நல்ல விதமா பேசுறிங்களா? சாரி இதுக்கு மேல எல்லாம் கடவுள் கிட்ட தான் இருக்குன்னு தானே எல்லா பேஷண்ட் கிட்டயும் சொல்றிங்க" என்றவனை பார்த்து, "நீங்க ரொம்ப பேசுறீங்க" என்றான் மயூரன்.
"உன் அண்ணா மட்டும் கம்மியா பேசுறான் பாரு" என்றவன் சிட்டுவின் புறம் திரும்பி, "ஸ்பாரோ இப்பவும் சொல்றேன் கேட்டுக்கோ... இவனுங்க எவனையும் நம்பாத... மூணும் மூன்று தேவாங்கு தான்" என்றதும், அவனின் கைகளில் இருபுறமும் கிள்ளி, "யாரு தேவாங்கு?" என்று மயூரன் மற்றும் சாஹில் கத்த, "டேய்! வலிக்குது டா லூசு பசங்களா" என்றதும், சிட்டு சிரித்து விட்டாள்.
"சரி நாங்க வரோம்" என்று சிட்டுவும் காகேஷும் கிளம்ப இருக்க, "ஸ்பாரோ நீ கொஞ்சம் வெளிய வெய்ட் பண்ணு" என்று காகேஷ் சொல்ல, அவளோ யோசனையுடன் போக, ஜடாயுவை பார்த்தவன், "உங்க அம்மா இதுக்கு ஒத்துக்குவாங்கனு எனக்கு தோணல... ஆனா நீ மட்டும் ஸ்பாரோவை அழ வச்சான்னு வை.. டேய் காலெக்டர் உன்னோட பாடிய தான் உன் தம்பி சாஹில் போஸ்ட் மார்டெம் பண்ணுவான் பார்த்துக்கோ" என்று மிரட்டி விட்டு சென்றான்.
காகேஷிற்கு தெரியும், ஜடாயு நிச்சயம் சிட்டுவை விட மாட்டான் என்று, ஆனாலும் அவனுக்கு சிட்டுவின் கண்களில் இருந்து என்றும் கண்ணீர் வந்து விட கூடாது என்பதில் அவ்வளவு கவனம் வைத்து இருந்தான்.
"கலக்டரையே மிரட்டடி போறாரு நீங்க அமைதியா இருக்கீங்க" என்று மயூரன் கேட்க, "அவனை பத்தி உனக்கும் தெரியும் தானே! அவன் சிட்டுக்கு மட்டும் இல்ல எனக்கும் பிரென்ட் தான். ஏன் இவளோ சொல்றிங்க.. உங்க பார்த் டேக்கு கூட அவன் கிப்ட் அனுப்புராணமே! அவன் பார்த் டேக்கு நீங்களும் கூட கிப்ட் அனுப்புறிங்க... அப்புறம் அவனோட ஒரு கேஸ்க்காக நீ அவனுக்கு டீடெய்ல்ஸ் கூட ஹேக் பண்ணி கொடுத்து இருக்க தானே" என்று மயூரன் மற்றும் சாஹிலை பார்க்க, அவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
இவர்களது உறவு என்னவென்று இவர்களுக்கே தெரியாது. நால்வருக்கும் சிட்டு தான் பாலம். அவளால் இவர்களும் கூட ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு தான் இருந்தனர்.
ஒருவருக்கு ஒருவர் வாயால் சண்டை எல்லாம் போட்டாலும் கூட, ஒருவருக்கு ஒன்று என்றால், மற்றோருவர் விட்டு கொடுக்க மாட்டார்கள் என்று அவர்களுக்கும் தெரியும்.
எதிர்பார்பற்ற அன்பு அவர்களுடையது. சிட்டு உண்மையாகவே ஒரு கூட்டையே கட்டி வைத்து இருந்தாள்.
காகேஷ், ஜடாயு, சாஹில் மற்றும் மயூரன் என்று அவளது கூட்டில் இருந்த அனைவரும் அவளுக்கு எப்போதும் அரண் தான்.
ராஜேஸ்வரியின் பிறந்த நாளும் வந்து சேர்ந்தது.
"என்ன உன் மாமியாருக்கு என்ன பிறந்த நாள் பரிசு வாங்கி இருக்க?" என்று கேட்டு கொண்டே காகேஷ் வர, "டேய் கத்தாதே டா... தாத்தா காதுல விழுந்தா பிரச்சனை ஆகிடும்" என்று சிட்டு சொல்ல, "மிஸ்டர் காசி கிட்ட எப்போ சொல்ல போற?" என்று அவன் கேட்கவும், "எனக்கு என்னவோ காசி தாத்தா கிட்ட சொல்றதுக்கு முன்னாடி உன் தாத்தா வரதராஜன் கிட்ட சொல்லலாம்னு தோணுது" என்று சிட்டு சொல்லவும், "ஏதே! அவரா? வேணாம் டி சொல்றத கேளு.. அந்த ஆளு நேத்து தான் லூசு மாதிரி சிட்டுக்கு நல்ல மாப்பிள்ளை பார்க்கணும்னு சொல்றாரு... நீ டைரக்ட்டா மிஸ்டர் காசி கிட்ட சொல்லு" என்று அவன் சொல்லவும், அவளோ, "நேத்து தாத்தா என்கிட்டயும் இதை பத்தி பேசுனாரு டா காக்கா" என்று சொல்லவும், அவனுக்கோ தூக்கி வாரி போட்டது.
"இன்னைக்கு பங்க்ஷன் போயிட்டு வந்து அவங்க கிட்ட எல்லாத்தையும் நீ சொல்றியா இல்ல நான் சொல்லவா? இல்லனா உன் ஆளு அந்த கழுகையும் கூட்டிட்டு வந்து சொல்ல வைப்போம்" என்றவனை பார்த்து, தலை மட்டும் அசைத்தாள்.
பின்பு இருவரும் சேர்ந்து ஜடாயுவின் வீட்டை அடைந்து விட்டார்கள்.
இது தான் முதல் முறை சிட்டுவும் காகேஷும் ஜடாயுவின் வீட்டிற்கு வருவது.
"உன் புகுந்த வீடு, வீடு இல்ல ஸ்பாரோ மாளிகை" என்று அவன் செவிகளில் சொல்ல, "ஏன் டா நீ வேற" என்று சொல்லிக்கொண்டே இருவரும் நுழைந்தனர்.
சாஹிலும் மயூரனும் தான் அவர்களை முதலில் பார்த்தனர்.
"ஹலோ அண்ணி" என்று மயூரன் சிட்டுவை கட்டி அணைத்து விடுவிக்க, சாஹிலும் அவளை அணைக்க போக, அதற்கு முன் காகேஷ் அவனை அணைத்து இருந்தான்.
"அப்படியே அண்ணி மேல பாசம் பொங்குது... நானும் அவ கூட தானே டா வந்து இருக்கேன்" என்று அவன் அணைக்க, பிறகு மயூரன் வந்து அணைத்து விடுவித்து, "என்ன ஏசிபி சார், எங்க வீட்டுக்கு வந்து இருக்கீங்க" என்று கேட்க, "எங்க டா உங்க அப்பா அவரு கிட்ட தான் பேசணும்" என்று கார்மேகம் பற்றி கேட்டுக்கொண்டு இருக்கும் போதே, "ஹாய் காகேஷ், நீங்க வருவீங்கன்னு நான் நினைக்கல" என்று சொல்லவும், "ஹாய் சார், ஜடாயு எங்க சீனியர் தான். ரேசன்ட்டா மீட் பண்ண அப்போ அவரு தான் இன்வைட் பண்ணி இருந்தாரு" என்று சொல்லவும், "இந்த பொண்ணு யாரு?" என்று கேட்கவும், "என் பிரென்ட் தான். ஜடாயு சார்க்கும் தெரியும்" என்று அவன் சொல்லவும், "எங்களுக்கும் தெரியும் சித்தப்பா" என்று சாஹில் சொல்லி இருந்தான்.
அவரே ஒரு வழக்கறிஞர் அவருக்கா புரியாது! ஓரளவு அவர் என்ன விடயம் என்று அவதானித்து தான் இருந்தார்.
ஆனாலும் எதுவும் கேட்கவில்லை.
"வா மா.. உன்னோட பேரு?" என்று கேட்கவும், "சிட்டு" என்று அவள் பதிலளிக்கும் முதல் ஜடாயு தான் பதில் அளித்து இருந்தான்.
அதுவும் அவளின் அருகில் வந்து நின்று விட்டு பதில் அளித்து இருந்தான்.
அவரும் ஜடாயுவை பார்த்து, "இப்போ என்ன பண்ரா?" என்று கேட்கவும், "பிஎச்டி முடிச்சிட்டா... கவர்ன்மென்ட் ஜாப்ஸ் அப்பளை பண்ணி இருக்கா" என்று சொல்லவும், "சரி தான்... குட் சாய்ஸ்" என்று சொல்லி அவர் நகர்ந்து விட்டார்.
"உன் சித்தப்பா அடுத்து போய் உன் அப்பா கிட்ட சொல்ல போறாரு டா" என்று ஜடாயுவை பார்த்து காகேஷ் சொல்ல, "எப்படியா இருந்தாலும் சொல்லி தானே ஆகணும்" என்று அவள் தோள் உலுக்கி கொண்டான்.
நினைத்தது போலவே கருணாகரனிடம் விடயம் சென்று இருந்தது.
இவர்கள் ஐவரும் சேர்ந்து பேசி கொண்டு இருக்க, அங்கு வந்த கருணாகரன், "என்ன பா உன் பிரண்ட்ஸ்க்கு என்ன இன்ட்ரோ பண்ண மாட்டியா?" என்று கேட்கவும், "பிரென்ட் நான் மட்டும் தான் ஜட்ஜ் சார்... இவ அவனுக்கு பிரண்டா?" என்று கேட்கவும், "ஏசிபி ரொம்ப ஓப்பனா பேசுறீங்க" என்று சொல்லி காகேஷிடம் கை குலுக்க, சிட்டுவை பார்த்து, "நான் தான் மா இந்த நல்லவனை பெத்தவன்" என்று சொல்ல, "ஹலோ சார்" என்று அவள் சொல்லவும், "அது என்ன சார், மாமான்னு உரிமையா கூப்பிடு" என்று காகேஷ் சொல்ல, ஜடாயுவோ, "டேய் ஏன் டா?" என்று அவனை பார்த்து கேட்கவும், "அதுவும் சரி தானே" என்று சொல்லி சிரிக்க ஆரம்பித்து இருந்தார் கருணாகரன்.
அவளோ அப்படியே வெட்கப்பட, "டேய் இதெல்லாம் போட்டோ எடுத்து வைங்க டா.. என் ஸ்பாரோ வெட்கம் எல்லாம் படுறா" என்று சொல்லவும், சாஹில், மயூரன் இருவருமே சிரித்து விட்டனர்.
"உனக்கு நல்ல புருஷன் கிடச்சனோ இல்லையோ மா.. நல்ல பிரென்ட் கொடுத்து இருக்கார் கடவுள்" என்று கருணாகரன் சொல்ல, "ஹலோ நல்ல புருஷனாவும் நான் நடந்துக்குவேன். அவனுக்கு சோம்பு தூக்குறதை விட்டுட்டு...உங்க பொண்டாட்டி கிட்ட எப்படி பேசுறதுன்னு எனக்கு ஐடியா கொடுங்க அப்பா" என்றான் ஜடாயு.
இதே சமயம் ராஜேஸ்வரியோ, "நான் தான் சொல்றேன்ல இப்போ அன்னோன்ஸ் பன்னிருவேன்" என்று மீண்டும் பிரியா மற்றும் அம்புஜத்திடம் சொல்லிவிட்டு இறங்கி வந்து இருந்தார்.
"தோ வந்துட்டா உன் அம்மா" என்று கருணாகரன் நகர்ந்து விட, ஜடாயு, மயூரன் மற்றும் சாஹிலும் குடும்பமாக அங்கு சென்று விட்டனர்.
அப்போது தான் பேச ஆரம்பித்து இருந்தார் ராஜேஸ்வரி.
"ஹாய் பிரண்ட்ஸ்! இன்னைக்கு என்னோட பிறந்த நாள் மட்டும் இல்ல.. இன்னொரு நல்ல நியூஸ் கூட நான் சொல்ல போறேன். அது என்னனா என்னோட முதல் மகன், சென்னை கலெக்டர் ஜடாயுக்கும் அம்புஜம் குரூப்ஸ் கரண்ட் சிஈஓ மிஸ் ஸ்ரீப்ரியாக்கும் கூடிய சீக்கிரம் கல்யாணம் நடக்க போகுது" என்று சொன்னதும், அங்கிருந்த மற்றவர்கள் ஆரவாரம் செய்ய, சிட்டு மற்றும் காகேஷிற்கு மட்டும் அல்ல, ஜடாயு, மயூரன், சாஹில், கருணாகரன் மற்றும் கார்மேகம் அனைவருக்கும் தலையில் இடி விழுந்த உணர்வு தான்.
ஜடாயு சட்டென திரும்பி சிட்டுவை தான் பார்த்தான்.
கருணாகரனோ, "ராஜேஸ்வரி நீ ஜடாயு கிட்ட ஒருவார்த்தை கூட கேட்கல" என்று அவரின் காதுகளில் கடுப்பாக பேசவும், அவரோ, "என் மகன் நான் சொன்ன வார்த்தையை மீற மாட்டான்" என்று அவர் சொல்லி திரும்பி போது அவர் கண்ட காட்சியில், அவர் மட்டும் அல்ல, அங்கிருந்த அனைவருக்கும் இதயம் ஒரு நொடி நின்று விட்டது.
அத்தியாயம் 28
ஜடாயுவின் கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தார் ராஜேஸ்வரி.
"ஒரு கலெக்டர் மாதிரியா பிஹேவ் பண்ணி இருக்க நீ? எல்லாரு முன்னாடியும் அவளுக்கு கிஸ் பண்ணிருக்க?" என்று அவர் ஆவேசமாக கத்தவும், அவனோ அசராமல் நின்று இருந்தான்.
"நீங்க என்னை ஒரு கலெக்டர் மாதிரியா ட்ரீட் பண்ணறீங்க? என்னோட கல்யாணத்தை பத்தி எனக்கே தெரியாம முடிவு பண்ண உங்களுக்கு யாரு அதிகாரம் கொடுத்தா?" என்று அவன் கேள்வி கேட்க, ராஜேஸ்வரியோ அப்போதும், "என் மகன் என்னை தாண்டி எதுவும் செய்ய மாட்டான்னு ஒரு நம்பிக்கை இருந்தது" என்றதும், "இப்பவும் உங்கள தாண்டி எதுவும் செய்யலையே... உங்களுக்கு தெரியாம என்ன கல்யாணம் பண்ணிட்டேனா இல்ல குழந்தை பெத்துட்டேனா? உங்க கிட்ட சொல்லி அவளை இன்ட்ரோ பண்ணலாம்னு தான் வந்தேன். ஆனா நீங்க அன்னோன்ஸ் பண்ணதும் அவ இந்த பார்ட்டில இருந்து வெளிய போக ரெடி ஆகிட்டா.. எனக்கு அவளும் முக்கியம் அம்மா ஐ காண்ட் லூஸ் ஹேர்... அதனால தான் கிஸ் பண்ணிட்டேன். நீங்க நம்புவீங்களான்னு தெரியல நானும் அவளும் ஏழு வருஷமா லவ் பண்றோம் ஆனா இது தான் நாங்க பண்ற பர்ஸ்ட் கிஸ் தெரியுமா? அதுவும் எல்லாரு முன்னாடியும் பண்ண வச்சிட்டீங்க... அவளும் உங்க முன்னாடி தானே என்னை அடிச்சிட்டு போயிருந்தா" என்று கேட்டான்.
ஆம், சிட்டு ஜடாயுவை அடித்து இருந்தாள். அனைவரின் முன்னிலையிலும் முத்தம் கொடுத்தால் அடிக்காமல் கொஞ்சவா செய்வாள்.
"எனக்கு அந்த பொண்ண பிடிக்கல" என்று ராஜேஸ்வரி நிற்க, "எனக்கு அவளை மட்டும் தான் பிடிச்சி இருக்கு..கல்யாணம் பண்ணிக்க போறது நானா நீங்களா? அம்மா உங்க ஸ்டேட்டஸ் மண்ணாங்கட்டி எல்லாம் தூக்கி போட்டுட்டு என் வாழ்க்கையை நினைங்க" என்று அவன் சொல்லவும், கருணாகரனும் கூட, "இங்க பாரு ராஜி, அவன் ஒன்னும் குழந்தை கிடையாது. என் மகன் கலெக்டர்ன்னு வெளிய சொல்றல அதே மாதிரி அவனை ட்ரீட் பண்ணு... அவனுக்கு தான் அந்த பொண்ண பிடிச்சி இருக்குன்னு சொல்றான்ல... அதுக்கு அப்புறம் எதுக்கு இந்த பிடிவாதம்?" என்று கேட்டவர், ஜடாயுவின் புறம் திரும்பி, "நீ பண்ணது தப்பு தான் ஜடாயு! ஒரு பொண்ண இப்படி அத்தனை பேரு முன்னாடி கிஸ் பண்றது எல்லாம் என்ன பழக்கம்? நாளைக்கு நம்ப சிட்டு வீட்டுக்கு போறோம். பொண்ணு கேட்க... உங்க அம்மா வந்தாலும் சரி வரலானாலும் சரி" என்றதும், "என்ன பேசுறீங்க நீங்க?" என்று அவர் எகிறிக்கொண்டு வர, "இது தான் நல்லது...இல்லனா நாளைக்கு நியூஸ்ல நம்ப குடும்பம் தான் ஹெட்லைன்ஸ் பரவல்லயா?" என்று கேட்கவும், அமைதியாகி விட்டார்.
அவருக்கும் தெரியும், இப்படி செய்ய வில்லை என்றால் அவர்களது குடும்ப மானம் தான் பறக்கும் என்று!
வேறு வழி இல்லை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும்.
இதே சமயம் சிட்டுவை சமாதானம் செய்து கொண்டு இருந்தான் காகேஷ்.
"ஏன் டி இப்படி கோவமா இருக்க? உன் லவர் தானே கிஸ் பண்ணான்?" என்று அவன் கேட்கவும், அவளின் அருகில் இருந்த தலையணையை எடுத்து அடி வெளுக்க ஆரம்பித்து இருந்தாள்.
"அடியேய்! ராக்ஸஸி... என்கிட்ட சண்டை போட்டு என்ன பிரயோஜனம்? அவன் கிட்ட போய் பேசு! பாவம் அவன் கன்னத்தை வேற பழுக்க வச்சிட்டு வந்து இருக்க? ஆமா எப்படி அவன் ஹைட்க்கு உன் கை எட்டுச்சு" என்று வேறு கேட்டு வைக்க, மொத்தமாக மலை ஏறி விட்டு இருந்தாள் அவள்.
ஓடி பிடித்து அவளை ஓட வைத்து என்று அவளை எப்படியோ இயல்பு நிலைக்கு கொண்டு வந்து இருந்தான் காகேஷ்.
அவனின் கைப்பேசியும் சரியாக அலறியது.
ஜடாயு தான் அழைத்து இருந்தான்.
"உன் ஆளு தான் டி கூப்பிடுறான்" என்றவன் எடுத்து அழைப்பை ஏற்று காதில் வைக்க, "என்ன டா உன் பிரென்ட் நார்மல் ஆகிட்டாளா?" என்று கேட்கவும், "டேய் பைத்தியக்காரா! உன்ன அவ காதலிச்சதும் காதலிச்சா உன் பைத்தியம் அவளுக்கும் ஒட்டிகிச்சு" என்று அவன் சொல்ல, "சாவடிச்சிருவேன். நாளைக்கு நாங்க எல்லாரும் பொண்ணு பார்க்க வரோம்" என்று சொல்லவும், "நாளைக்கா? சரி எங்க தாத்தாங்கலும் நாளைக்கு வந்துருவாங்க" என்று சொல்லி வைத்து விட்டான்.
"உன் ஆளு நாளைக்கு பொண்ணு பார்க்க வரானாம்" என்று சொல்ல, அவளோ, "அது ஒன்னு தான் குறைச்சல்" என்று புலம்பிக்கொண்டே அவள் சென்று விட்டாள்.
அடுத்த நாள் விடிந்தது.
காகேஷிற்கு தான் ஒரு அழைப்பு வந்தது.
அழைப்பை ஏற்றவன், இறுக கண்களை மூடி திறந்தான்.
"சரி நாங்க வரோம்" என்று சொல்லிவிட்டு சிட்டுவின் வீட்டிற்கு செல்ல, அவளும் அப்போது தான் கதவை திறந்தாள்.
"என்ன டா காலைலயே வந்து இருக்க?" என்று கேட்க, "நீ வா நம்ப ஒரு இடத்துக்கு போகணும்" என்று சொல்ல, அவளும் அவனுடன் சென்று இருந்தாள்.
"எங்க டா போற?" என்று கேட்டுக்கொண்டே வந்தவளை அவன் அழைத்து சென்றது என்னவோ மருத்துவமனைக்கு தான்.
"இங்க ஏன் கூட்டிட்டு வந்து இருக்க?" என்று அவள் கேட்க, "தாத்தா..." என்று அவன் இழுக்க, அவனின் சட்டையை பிடித்து விட்டாள்.
"தாத்தாக்கு என்ன?" என்று கேட்க, "அவங்க வந்த கார் ஆக்சிடென்ட் ஆகிருச்சாம் சிட்டு" என்று சொல்லிமுடிக்கும் முதல், அவள் உள்ளே ஓட, இருவரும் அவரவர் தாத்தா இருக்கும் அறைக்கு சென்றனர்.
நிச்சயம் பிழைக்க மாட்டார்கள் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள்.
"தாத்தா" என்று வர்தராஜனை பார்த்து காகேஷ் அழைக்க, அவனிடம் இறுதியாக அவர் பேச வேண்டியதை மட்டும் பேசிவிட்டு சென்று விட்டார்.
இதே சமயம், அவர் இறுதியாக பேச இருந்ததை காசிநாதனும் சொல்ல, சிட்டுவின் கையை பிடித்தவர், "உன் கல்யாணத்தை பார்க்க முடியாம போயிரும் போல மா" என்று சொல்லவும், உள்ளே ஜடாயு வரவும் சரியாக இருந்தது.
அவனுக்கு அழைத்து என்னவோ காகேஷ் தான்.
இதே சமயம், வர்தராஜனையும் அந்த அறைக்கு மாற்றி இருந்தனர்.
இறுதி நொடிகளை எண்ணி கொண்டு இருந்தனர் இரண்டு உயிர்கள்.
காசிநாதன் கண்களை காட்ட, காகேஷ் அவர் வைத்து இருந்த பையில் இருந்து ஒரு தாலியை எடுத்து ஜடாயுவிடம் கொடுத்தான்.
ஜடாயுவின் பின் கருணாகரனும், கார்மேகம், மயூரன், மற்றும் சாஹில் நால்வரும் வந்து இருந்தார்கள்.
"இது என் பொண்ணோட தாலி... அது அவ பொண்ணுக்கு போடணும்" என்று அவர் சிட்டுவின் கையை பிடித்து கொண்டு சொல்லவும், "தாத்தா" என்று அவள் அழுது கதற, "ஜடாயு" என்பர் கருணாகரனும் கண் அசைத்து இருந்தார்.
ஜடாயு சிட்டுவை நிமிர வைத்து, அவளின் கழுத்தில் அந்த தங்க தாலியை போட்டு விட்டான்.
அவனின் முன்னால் உடனே மயூரன் சென்று குங்குமம் எடுத்து வந்து கொடுக்க, அவளின் நெற்றி வட்டில் குங்குமம் வைத்து அவளை மொத்தமாக அவளின் சரிபாதி ஆக்கி இருந்தான் ஜடாயு.
இதே சமயம், "சிட்டு" என்று வரதராஜன் அழைக்க, "தாத்தா" என்று அவரிடமும் அவள் செல்ல, "இந்த பையன பார்த்துக்கோ மா" என்று காகேஷின் கையை அவளிடம் கொடுத்து விட்டு இரு உயிர்களும் பிரிந்து இருந்தனர்.
சிட்டுவாவது கதறி அழுதாள். காகேஷால் அது கூட முடியவில்லை.
காகேஷின் தோளை பற்றி இருந்தான் ஜடாயு. "அழணும்னா நீயும் அழுதுரு டா" என்று அவன் சொல்ல, அவனோ புன்முறுவலுடன், "நானும் அழுதா அப்புறம் ஸ்பாரோவ யாரு சமாதானம் படுத்துறது? இட்ஸ் ஓகே.. ஐ அம் ஆல்ரைட்" என்று சொல்லவும், அவனை இறுக அணைத்தவன், "நீயும் உன் ஸ்பாரோவும் தனியா எல்லாம் இல்ல..நாங்க எல்லாரும் இருக்கும் நினைவு இருக்கட்டும்" என்று சொல்ல, அவனுக்கும் அந்த அணைப்பு தேவை பட்டது போல, ஆகையால் அவனை இறுக அணைத்து இருந்தான்.
அதற்கு பிறகு இருவருக்குமான இறுதி சடங்குகள் துவங்கின.
இருவருக்குமே காகேஷ் தான் கொல்லி வைத்து இருந்தான்.
ராஜேஸ்வரிக்கு விடயம் தெரிவிக்க பட, அவர் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்க, கருணாகரன் தான் அவரை அடக்கி இருந்தார்.
அதற்கு பிறகு பதினாறு நாட்கள் சிட்டுவை தேற்றுவதிலேயே சென்று விட்டது.
அவளுக்கு உணவு கொடுப்பது கூட பேரும் பாடாக தான் இருந்தது. தைரியமான பெண் தான் இருந்தாலும் அவளுக்கென்று இருந்த ஒரே சொந்தமும் போய் விட்டால், அவளும் என்ன செய்வாள்.
"ஏன் நான் இல்லையா?" என்று இரு பக்கம் காகேஷ் மறுபக்கம் ஜடாயு இருவரும் நின்று தான் வழுக்கு உணவு கொடுத்தனர்.
இப்படி தான் அவர்களின் திருமணம் நடந்ததே!
"ஆத்தி! அப்போ உங்க அம்மாக்கே தெரியாம கல்யாணம் நடந்திருச்சா?" என்று மைனா கேட்க, "விஏஓ சார் நீங்களும் உங்க பெரியம்மாக்கு தெரியாம கல்யாணம் பண்ணிட்டா ஹாட்ரிக் ஆகிரும்" என்று குயில் சொல்ல, "ஏன் மா ஏன் உனக்கு இவளோ நல்ல எண்ணம்? அப்புறம் எங்க எல்லாரையும் எங்க பெரியம்மா வச்சி செஞ்சிருவாங்க" என்று மயூரன் சொல்ல, "முதல்ல அந்த லேண்ட் கேஸ் எடுக்கணும் டா" என்று ஜடாயு சொல்ல, "செஞ்சிரலாம்.. அதை பத்தி தான் பேசணும்னு நினைச்சேன்" என்றவன் பேச துவங்க, அங்கிருந்த அனைவரின் கண்களும் விரிந்தன.
"ஆத்தி பக்ஷி நம்ப நினைச்சதை விட பெரிய வில்லன் போலயே... உசுருக்கு கூட உத்தரவாதம் இல்ல போல" என்று குயில் சொல்ல, "உண்மையாவே பெரிய வில்லன் தான். கேட்கும் போதே ரொம்ப பயமா இருக்கு" என்று பரினீத்தி சொல்ல, "ஆனா இப்போ அவரு மேல கேஸ் கொடுக்க நம்ப கிட்ட எவிடென்ஸ் வேணுமே! அது மட்டும் இல்ல இந்த கேஸ் ஸ்ட்ரோங்கா நிற்க என்ன பண்ண முடியும்? கேஸ் கொடுக்க வேண்டிய ஆளும் இல்ல" என்று மைனா சொல்ல, "அது தான் நம்ப யோசிக்க வேண்டியது... யோசிக்கலாம்" என்று மயூரன் சொல்லிவிட்டு, காகேஷின் வீட்டில் இருந்து அனைவரும் புறப்பட்டு சென்றனர்.
பரினீத்தியின் வீட்டிலேயே இருந்து கொண்டனர் குயிலும் மைனாவும்!
"நாங்களே ஸ்ரவாணியையும் வச்சுக்குறோம் மேம்" என்று பரினீத்தி தூக்கி கொண்டு சென்று விட்டாள்.
சிட்டுவோ யோசனையுடன் உள்ளே செல்ல, கதவு திறந்து தான் இருந்தது.
அவள் உள்ளே வந்தவுடன், கதவை அடைத்து அவளின் இதழை சிறை எடுத்து இருந்தான் அவளின் கணவன். இல்லை இல்லை கள்வனவன்!
அத்தியாயம் 29
அவனை தள்ளி விட்டு, "என்ன பண்றீங்க?" என்று கேட்கவும், அவளின் இடையை பற்றி இழுத்து அவளின் இதழ்களை மீண்டும் பருக அவன் துவங்கி இருந்தான். இருநொடிகள் வரை தான் அவளின் வேண்டாம் என்கிற சைகைகள் எல்லாம், அதற்கு பிறகு அவள் அவன் வசம் தான் ஆகி இருந்தாள்.
அவளை மொத்தமாக கொள்ளையிட துவங்கி இருந்தான் ஜடாயு.
அவளை மஞ்சத்தில் சரித்து, கொஞ்சம் கொஞ்சமாக அவளை அவள் வசம் இழக்கச்செய்து அவன் வசம் ஆக்கி இருந்தான். மாயக்காரன் அவன், சிட்டுவை எப்படி எல்லாம் இசைக்க வேண்டும் என்று அறிந்து வைத்து இருந்தான்.
இத்தனை வருட திருமண வாழ்க்கையில் அவனுக்கு தெரியாதா என்ன அவனின் மனையாளை எப்படி எல்லாம் இயக்க முடியும் என்று!
கொள்ளையிட்ட பின்பு அவளை அவன் மீது போட்டு கொண்டு அவளின் தலையை கோத ஆரம்பித்து இருந்தான்.
அவளோ அவனின் வேற்று மார்பில் கடிக்க, "ஹே! கடிக்காத டி... வலிக்குது..." என்று அப்போதும் அவன் அவளின் பிறைநெற்றியில் முத்தம் கொடுக்க, "பரினீத்தி கிட்ட என்ன சொன்னிங்க?" என்று அவனை பார்க்க, அவனோ குரலை செருமிக்கொண்டு, "என் பொண்டாட்டி கூட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு சொல்லி இருந்தேன்" என்றதும் அவனின் கையை பிடித்து திருகி இருந்தாள்.
"விடு டி... வலிக்குது" என்று அவன் சொல்ல, "என்ன நினைப்பா அவ நம்பள பார்த்து?" என்றவளிடன், "ஹான், சீக்கிரம் உன் நண்பனை கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கணும். ஆனா நினைப்பாளான்னு தான் டவுட்... காகேஷ்க்கு பரினீத்தி சரியா இருப்பா இல்ல?" என்று அவன் அவளை பார்க்க, "ம்ம்... நானும் யோசிச்சேன்.. ஆனா அவங்க என்ன யோசிக்கிறீங்கன்னு தெரியல..அது மட்டும் இல்ல இப்போ சாஹில் விஷயம் வேற.." என்றவளை இறுக அணைத்து, "சாஹில் விஷயத்தை பத்தி பேசாத...எனக்கு செம்ம கோவம் வருது... ஹன்சிகாவை விட்டா..." என்றவன் அப்படியே நிறுத்தி ஒரு கணம் அவளை பார்க்க, "எனக்கும் ஆத்திரமா வருது... அவளே அவ வாழ்க்கைல மண்ணை அல்லி போட்டுக்கிட்டா" என்றதும், "அவ வாழ்க்கைல மட்டும் போட்டுக்கிட்டு இருந்தா பரவால்ல... சாஹில் வாழ்க்கைல வேற போட்டு இருக்கா" என்றவன் ஆழ்ந்த மூச்சை எடுத்து அவனை சமாதானம் செய்து கொண்டான்.
"சரி நீ நம்பள பத்தி பேசு...என்ன சொன்னாங்க என் அம்மா நீ டிவோர்ஸ் கொடுக்குற" என்றதும், இப்போது வரை இருந்த அந்த மனநிலை அவளுக்கு சட்டென்று மறைந்து விட்டது.
அவளும் நகர போக, "போனா சாவடிச்சிருவேன் பார்த்துக்கோ" என்று மீண்டும் அவன் அவளை அவன் மேல் போட்டு கொண்டு உறங்கி விட்டான்.
அவளாக பேசட்டும் என்று நினைத்து இருந்தான்.
அடுத்த நாள் விடிய, சிட்டு குளித்து வரும் சமயம், ஜடாயு எழுந்து இருக்க, "ஏன் என்னையும் எழுப்பி இருக்கலாம்ல... சேர்ந்து குளிச்சி இருக்கலாம்" என்று ஜடாயு சொல்ல, "நீங்க குளிக்க மட்டும் மாட்டீங்களே" என்றவளை பார்த்து, "கண்டிப்பா அதுக்கும் மேல எல்லாமே பண்ணி தான் இருப்பேன்" என்று அவன் கண் சிமிட்டி சொல்ல, "போய் குளிங்க... உங்க பொண்ணு வர போறா" என்றதும் அவனும் குளிக்க சென்றான்.
இதே சமயம் நினைத்தது போல் ஸ்ரவாணியை தூக்கி கொண்டு வந்தான் காகேஷ்.
"என்ன ஸ்பாரோ உன் புருஷன் உன்ன சமாதானம் பண்ணனா?" என்று கேட்கவும், "அதெல்லாம் ஒன்னும் இல்ல... நீ போ போய் தோசை சுடு டா... நான் இவளை குளிக்க வைக்குறேன்" என்று ஸ்ரவாணியை தூக்கி கொண்டு உள்ளே செல்ல, குளித்து விட்டு வந்த ஜடாயுவும் காகேஷை பார்க்க சமயற்கட்டிற்குள் சென்றான்.
"அடேய் காக்கா காலத்திலேயே வந்துட்டியா?" என்று கேட்கவும், "கலெக்டர் சார் நம்ப உங்க தம்பி வீட்டுக்கு போகணும். வாங்க... வள்ளி கேஸ் இருக்கு தானே" என்று புருவம் உயர்த்தி கேட்க, "அவன் என்ன நிலைல இருக்கானோ" என்ற ஜடாயுவின் விழிகள் சற்று கலங்கி விட்டன.
காகேஷோ அவனின் தோளை பிடித்து, "பி ஸ்ட்ரோங்...எல்லாம் சரி ஆகிடும்" என்று சொல்லவும், "ம்ம்" என்று மட்டும் சொல்லி கொண்டான்.
மயூரனும் வந்து இருந்தான்.
"என்ன டா என்ன தான் பிளான் வச்சி இருக்க?" என்று காகேஷ் கேட்க, "அந்த பர்சன் இல்லமா கண்டிப்பா கேஸ் கொடுக்க முடியாது என்ன பண்றதுனே தெரியல" என்று அவனும் அமர்ந்து விட்டான்.
"சரி விடு கண்டுபிடிக்கலாம்" என்று சொல்லி அவனின் கையில் தோசையை கொடுக்க, "நம்பி சாப்பிடலாமா?" என்கிற மயூரனை பார்த்து, "டேய் என் கையாள தானே டா உனக்கு தோசை சுட்டு போட்டு இருக்கேன்" என்றதும் அவனும் சிரித்து கொண்டே சாப்பிட துவங்கி விட்டான்.
இங்கோ அவனின் குளியலறையில் ஷவரின் கீழ் நின்று இருந்தான் சாஹில்.
அவனின் உடலை எரித்து விடும் அளவிற்கு அவனுக்கு அவனின் மீதே கோவம். வழி தவறி விட்டான் என்கிற ஆதங்கம்.
இன்று அவனின் வாழ்க்கையே போய் விட்டதே என்கிற ஒரு வித ஏமாற்றம் என்று கூட சொல்லலாம்.
குளித்து விட்டு அவன் வெளியே வர, "எவ்வளவு நேரம் வெளிய வர?" என்று ஹன்சிகா உள்ளே குளிக்க சென்றாள்.
அவளின் மனத்திலும் இப்போது ஒரு சிறுவலி இருந்தது. ஆனால் அதை எல்லாம் அவள் கண்டுகொள்ளவில்லை.
அவளின் உடலில் இப்போதும் சாஹீலின் பற்தடங்கள் இருந்தன. சில இடங்கள் எரிந்தது.
அவனிடமே மருந்து கேட்கலாம் என்று நினைத்து இருந்தாள்.
குளித்து விட்டு உடை மாற்றி வந்தவள், சாஹீலின் முன் வந்து நின்றாள்.
அவன் ஏறிட்டு பார்க்க, "சில இடம் எல்லாம் எரியுது... உங்க டீத் மார்க்ஸ் இருக்கு" என்று சொல்லவும், அவனோ ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டு, "ஈவினிங் ஒய்ன்ட்மென்ட் கொண்டு வரேன்" என்று மட்டும் சொல்லி மருத்துவமனைக்கு சென்று விட்டான்.
அவளிடம் ஒரு வார்த்தை கூட அவன் பேசவில்லை. அவளும் பேசவில்லை.
இனி பேசும் நேரம், விரிசல் பெரிதாக இருக்கும் என்று அவர்கள் அறியவில்லை.
பரினீத்தி, மைனா, குயில் என்று மூவரும் அவர்களின் வேலைக்கு சென்று இருந்தார்கள்.
குயிலுக்கு தான் நிறைய அறிவுரைகள் வழங்க பட்டது.
அவள் தான் ஹம்ஸாவுடன் வேலை செய்ய வேண்டுமே!
பரினீத்தி மற்றும் சிட்டு இருவரும் பள்ளிக்கு சென்று இருந்தார்கள்.
மைனாவிற்கு தான் பிரச்சனை இல்லை. மயூரன் இருக்கிறானே!
சாஹீலின் முன் அமர்ந்து இருந்தனர் காகேஷும் ஜடாயுவும்!
"இப்போ வள்ளியோட ஸ்டேட்டஸ் என்ன?" என்று காகேஷ் கேட்க, "அவ ரெஸ்பாண்ட் பண்ரா... ஆனா இன்னும் கோமால தான் இருக்கா... ஷி ஹாஸ் டு பைட்... வேற வழி இல்ல" என்று சாஹில் சொல்ல, "சரி அப்போ கேஸ் பைல் பண்லமல... ரேப் பண்ணிருக்காங்கன்னு?" என்று காகேஷ் கேட்க, "தாராளமா பண்லாம்" என்று சாஹில் சொல்ல, காகேஷ் அவனின் தொப்பியை கழட்டி விட்டு, "நீ இந்த கல்யாணம் பண்ணிருக்க வேண்டாம் சாஹில்" என்று சொல்லி இருந்தான்.
அவனோ அவனை நிமிர்ந்து பார்த்து, "இது தான் என் தலையெழுத்து போல... விடுங்க" என்று அவன் சொல்ல, ஜடாயுவோ, "நீ ஏதாவது பேசு டா இப்படியே இருக்கறது தான் எங்களுக்கு இன்னும் பயமா இருக்கு" என்று ஜடாயு சொல்லவும், அவன் அப்போதும் அசர வில்லை.
காகேஷ் கண்களை காட்ட, ஜடாயு மற்றும் காகேஷ் இருவரும் சென்று விட்டனர்.
"நாளைக்கு அந்த லேண்ட் கேசும் போடணும்" என்று காகேஷ் உறுதியாக சொல்ல, "டேய்" என்று ஜடாயு கத்தவும், "போட்டு தான் ஆகணும்.. நான் பார்த்துக்கறேன்... மயூரனை ப்ரோஸெட் பண்ண சொல்லு" என்று அழுத்தமாக சொல்லிவிட்டு அவனின் ஜீப்பில் நவநீதனுடன் அவன் சென்று விட்டான்.
ஜடாயுவுக்கு தான் தலையை பிய்த்து கொள்ளலாமா என்று இருந்தது.
அவன் அழைத்து என்னவோ சிட்டுவிற்கு தான்.
இதே சமயம் சிட்டு பரினீத்தியுடன் பேசி கொண்டு இருந்தாள்.
ஜடாயுவின் அழைப்பை பார்த்ததும், "ஒரே ஒரு நிமிஷம் பரினீத்தி" என்று சொன்னவள் வெளியே வந்து, "என்ன ஆச்சு?" என்று கேட்க, "உன் நண்பன் லேண்ட் கேஸ் போட சொல்றான் டி" என்றதும், "போடுங்க" என்றவளிடம், "பைத்தியமா நீயும்?" என்று கேட்க, "இத்தனை வருஷமா உங்களுக்கு தெரியலையா? இன்னைக்கு தான் கண்டு பிடிச்சீங்களா?" என்று கேட்கவும், "உங்க இரண்டு பேரு கிட்ட மாட்டிக்கிட்டு நான் தான் டி முழிக்குறேன். நீங்க இரண்டு பேரும் பண்றது எங்க போய் முடிய போகுதோ" என்று புலம்பவும், "ஒன்னும் ஆகாது பார்த்துக்கலாம்" என்று சொல்லி வைத்து விட்டாள்.
அடுத்து அவன் மயூரனுக்கு அழைத்து விடயத்தை சொல்ல, "நாளைக்கு என்ன நடக்குமோ" என்று அவனும் சொல்லி வைத்து விட்டான்.
நவநீதனின் முன் வந்த காகேஷோ, "யோவ் நவநீதன், இந்த பக்ஷிக்கு ஏன் இப்படி ஊரு கட்டு படுது?" என்று அவன் கேட்கவும், "சரி எல்லாம் பணம் தான் சார்.. பணம் பத்தும் செய்யும்ன்னு சொல்ற மாதிரி இந்த ஆளு பணம், பதவின்னு எல்லாமே வச்சிட்டு தான் இப்படி எல்லாம் ஆடிக்கிட்டு இருக்கான். உண்மையை சொல்லனும்னா இந்த ஊரு இப்படி இருந்ததே இல்ல சார்...இந்த ஆகையாபுரி உண்மையாவே ஆகையாபுரியா தான் இருந்துது. எல்லாமே இருபத்தி எட்டு வருஷத்துக்கு முன்ன தான் மாறுச்சு" என்று சொல்லவும், "சோ பக்ஷி பவருக்கு இருபத்தி எட்டு வருஷத்துக்கு முன்ன தான் வந்தது" என்று அவன் கேட்கவும், "ஆமா சார்" என்றவனை பார்த்து, "சரி அப்போ அதுக்கு முன்னாடி இந்த ஊரு எப்படி இருந்தது?" என்று கேட்க, "அது எனக்கு தெரியாது சார் ஆனா எங்க அம்மா சொல்லுவாங்க... திருவடி ஐயா இருக்குற வரைக்கும் எல்லாமே அவரோட திருவடில நல்லா இருந்ததுன்னு இப்போ இந்த பக்ஷி வந்துட்டு தான் இந்த ஊரே இப்படி ஆகிருச்சு... அது வரைக்கும் பொண்ணுங்கள சாமியா மதிச்ச ஊரு சார் இது... இப்போ என்னடானா பொண்ணுங்களுக்கு புதை குழி ஆகிருச்சு" என்று நவநீதன் சொல்லவும், காகேஷும் தலையசைத்து கொண்டான்.
இங்கோ சிட்டுவின் பள்ளியில் அடுத்த அசம்பாவிதம் நடந்து ஏறி இருந்தது.
சிட்டுவின் முன் நின்று இருந்தார்கள் இரு மாணவர்கள் மற்றும் இரு மாணவிகள்.
அத்தியாயம் 30
"என்ன பண்ணீங்க?" என்று இரு மாணவர்களை பார்த்து அவள் கேட்க, அவர்களோ தெனாவட்டாக, "அவங்கள எங்க சூ துடைக்க சொன்னோம்" என்று சொல்லவும், அவளுக்கோ கட்டுக்கடங்காத கோவம் தான் வந்தது.
"உங்க சூவை உங்களால துடைக்க முடியாதா?" என்று கேட்கவும், அவர்களோ, "அப்புறம் எதுக்கு பொண்ணுங்க இருக்காங்க?" என்று எதிர் கேள்வி கேட்டார்கள்.
"அப்போ நீங்களும் அவங்க சூவை துடைச்சு விடுறிங்களா?" என்று அவள் கேட்க, "நாங்க ஏன் துடைக்கணும்? நாங்க பசங்க" என்று அவர்கள் சொல்லவும், "சரி, உங்களுக்குள்ள ஒரு போட்டி, அதுல நீங்க ஜெயிச்சிட்டா கண்டிப்பா நீங்க சொல்றத எல்லாம் அவங்க கேட்பாங்க ஆனா அவங்க ஜெயிச்சிட்டா நீங்க கேட்கணும்" என்று அவள் சொல்லவும், அவர்களும் சம்மதித்தனர்.
"ரன்னிங் ஒடுங்க" என்று சிட்டு சொல்ல, அவர்களும் சம்மதித்தனர்.
"மேம், எப்படி பசங்க கூட பொண்ணுங்க ஓடுவாங்க?" என்று பரினீத்தி கேட்க, "அதெல்லாம் ஓட முடியும்" என்றவள், அந்த இரு மாணவிகளை அழைத்து, "நீங்க ஏதாவது உங்க ஊர்ல மாறணும்னு நினைச்சா இந்த போட்டியில வின் பண்ணி காட்டுங்க... பசங்கள பொண்ணுங்க ஜெயிக்க முடியாதுன்னுலாம் எதுவும் இல்ல... எல்லாத்துக்கும் காரணம் வில் பவர் தான்.. நானே என் பிரென்ட் காகேஷை எத்தனையோ தடவை வின் பண்ணி காட்டி இருக்கேன். உங்க மனசுல நீங்க ஜெயிக்கணும்னு நினைங்க... மாற்றத்தை நீங்க தான் கொண்டு வரணும்" என்று சொன்னவள், ஓட்டப்பந்தயத்திற்கு அவர்களை தயார் படுத்தி இருந்தாள்.
"மேம் இன்னொரு தடவை யோசிச்சிக்கலாமே" என்று பரினீத்தி கூறியும் அவள் கேட்கவில்லை.
ஓட்டப்பந்தையமும் துவங்கியது.
முதலில் மாணவர்கள் தான் ஜெயிப்பது போல் இருந்தார்கள். ஆனால் இறுதியாக இருந்த அந்த இருபது நொடி தான் அனைத்தையும் மாற்றி இருந்தது.
ஆம், மாணவிகள் புயலை போல் முந்தி இருந்தார்கள். அந்த இரு மாணவிகளும் ஓட்ட பந்தயத்தில் சிறந்து விளங்குபவர்கள் தான்.
ஆதலால் மாணவர்களை தோற்கடிப்பது ஒன்றும் அத்தனை சிரமமான காரியமாக இருக்கவில்லை.
தோற்கடித்து விட்டார்கள்.
"என்ன இப்போ அவங்க சூவை நீங்க துடைக்கிறிங்களா?" என்று பரினீத்தி கேட்க, "ஐயோ மேம் அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நீங்க வேற... அவங்களும் எங்க கிளாஸ்மேட் தானே! எங்களுக்கு அவங்க மரியாதை கொடுத்தா போதும்... அவங்களுக்கு சமமா ட்ரீட் பண்ணா போதும்" என்று மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார்கள்.
அந்த மாணவர்களுக்கோ தோற்றுவிட்டதை ஏற்று கொள்ளவே முடியவில்லை.
இதே மனநிலையுடன் அவர்கள் வீட்டிற்கு செல்ல, அங்கு ஒரு மாணவனின் அன்னை தான் அழுது கொண்டு இருந்தார்.
"என்ன அம்மா ஆச்சு?" என்று அவன் பதற்றமாக கேட்க, "உங்க அப்பா தான் டா செருப்பால கையில முடிச்சிட்டு போய்ட்டான். அவன்லாம் நல்லா இருப்பானா... திருவடி ஐயா இருக்குற வரைக்கும் இந்த ஊரு எப்படி இருந்துது தெரியுமா? அந்த பக்ஷி ராஜன் வந்ததும் வந்தான். எங்க எல்லாரோட சந்தோஷதுளையும் மண்ணை அல்லி போட்டுட்டான்" என்று புலம்பி கொண்டு சென்றார்.
ஏனோ அன்னையின் பேச்சு கொஞ்சமே அவர்களை அசைத்து தான் பார்த்தது.
அவர்களும் இப்படி தான் அவர்களுடன் படிக்கும் மாணவிகளை நடத்துகிறார்கள் என்று ஒரு எண்ணம் மனதில் எட்டி பார்த்தது.
இதெல்லாம் நடந்து கொண்டு இருக்க, வள்ளியின் அக்கா தெய்வானை வழக்கையும் பதிவு செய்து இருந்தான் காகேஷ்.
"பக்ஷி ராஜா மேல இது வரைக்கும் இரண்டு கேஸ்... ஒன்னு அந்த பொண்ணு வள்ளியை வறுபுறுத்தி கல்யாணம் பண்ணி வச்ச அவங்க அப்பா, அம்மா அதுக்கு மூல காரணமே இவரு தான்னு ஒரு கேஸ்... அடுத்து தெய்வானை மற்றும் கார்த்திகேயனை ஹானர் கில்லிங் பண்ணிருக்காரு அதுக்கும் அவரு மேல கேஸ் போட்டு இருக்கேன்.. இன்னும் அந்த ஆளு மேல நிறைய கேஸ் பைல் பண்ணலாம்.. அடுத்து லேண்ட் கேஸ் மயூரன் தான் ப்ரொசீட் பண்ணனும்" என்று ஜடாயுவை பார்த்து அவன் சொல்லவும், "ஆனா இன்னும் அஞ்சு கொலை கேஸ் இருக்கே... அதுவும் சாலிட் எவிடென்ஸ் இருக்கு அதுக்கு இல்லையா" என்று அவன் காகேஷை பார்க்க, "லேண்ட் கேஸ் போடட்டும்... அந்த அஞ்சுல மூணு கேஸ் தானா வரும்" என்று சொல்லி முடித்து விட்டான்.
"மீதி இரண்டு கேஸ்?" என்று ஜடாயு பார்க்க, "அது கொடுக்குறவங்க கொடுத்தா நான் எடுத்துக்குறேன்" என்று சொல்லவும், "கண்டிப்பா கொடுப்பாங்க" என்று கண் சிமிட்டி கொண்டான் அவன்.
காகேஷின் முகம் இறுகியது.
பரினீத்தி மற்றும் சிட்டு வீட்டிற்கு வந்து விட்டார்கள்.
"மேம் இந்த பசங்கள எல்லாம் எப்படி தான் திருத்த போறோமோ?" என்று புலம்பி கொண்டு அவள் வந்து அமர, "அதெல்லாம் பார்த்துக்கலாம்... பரினீத்தி நீங்க ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல?" என்று கேட்க, "நானே ஒரு அனாதை மேம்.. என்ன எல்லாம் யாரு கல்யாணம் பண்ணிக்க போறாங்க?" என்றவளை பார்த்து, "உங்களுக்குனு யாரவது பிறந்து இருப்பாங்க... அப்படி கிடைச்சா கண்டிப்பா பண்ணிக்கோங்க.." என்றதும், "உங்கள ஜடாயு சார் லவ் பண்ற மாதிரி எனக்கும் யாரவது கிடைச்சா கண்டிப்பா பண்ணிக்குறேன் மேம்" என்று சொல்லிவிட்டு இருந்தாள்.
குயில் வீட்டிற்கு கிளம்பும் சமயம் தான் அவளின் முன் வந்து நின்றான் ஹம்சா. இன்று முழுவதும் அவனின் முன் அவள் செல்லவில்லை.
அவனும் அவளை அழைக்கவில்லை.
நேற்று அவள் பேசிய பேச்சிற்கு இன்று வைத்து செய்வாள் என்று அவள் நினைத்து இருக்க, இன்று முழுவதும் அவன் கிட்டயே வராததே நல்லது என்று நினைத்து கொண்டு இருந்தாள்.
ஆனால் இதோ வந்து விட்டானே!
'ஆத்தி பைத்தியம் வந்துட்டானே' என்று அவள் நினைத்து கொண்டு இருக்க, "என்ன டி பைத்தியம்னு என்ன திட்டுறியா? குயிலுக்கு இறக்கை ரொம்ப பெருசாகிர்ச்சு போல... என்ன அந்த சிட்டு, பரினீத்தி, மைனாலாம் இருந்தா ரொம்ப பேசுற.. இப்போ பேசு.. நீ தான் தைரியமான ஆளாச்சே" என்று அவன் சொல்லவும், அவளோ அவனின் முன் கையை கட்டி நின்று, "இப்பவும் பேசுவேன்... எப்பவும் பேசுவேன்... சரியான லூசு குடும்பம் டா நீங்க.. லூசு மட்டும் இல்ல, பொம்பள பொறுக்கி நீ, ஆம்பளை பொறுக்கி உன் தங்கச்சி" என்று சொல்லவும், "ஹே நோ பெட் வர்ட்ஸ்" என்று அவன் சொல்ல, "உனக்கு எல்லாம் என்ன டா மரியாதை? நான் மட்டும் உன் வீட்டு வேலைக்காரியா இருக்கனும்... உனக்கும், உன் அப்பனுக்கும் சேர்த்து அரளிவிதை வச்சி கொன்னு இருப்பேன்... அதுவும் உன் தொங்கச்சி இருக்காளே.. அவளை எல்லாம் அம்மில வச்சி அரைச்சி காக்கைக்கு போட்டு இருப்பேன்" என்று அவள் சொல்லவும், அவனோ சிரிப்பை அடக்கி கொண்டு, "அதுக்கு எதுக்கு வேலைகாரியா வரணும்? எனக்கு வீட்டுக்காரியா வா" என்று சொல்லவும், அவளுக்கு வந்ததே கோவம், லத்தியை வைத்து அவனின் காலிலேயே ஒன்றை போட்டாள்.
"அடியேய் சண்டாளி!" என்று காலை பிடித்து கொண்டு அவன் அலற, "இன்னொரு வாட்டி வீட்டுக்காரி மாட்டுக்காரின்னு சொல்லு.. உனக்கு மொத்தமா பாடை கட்டிருவேன்" என்று சொல்லி சென்று விட்டாள்.
அவள் சென்ற திசையை பார்த்தவன், "குயில் ஒரு மார்க்கமா தேறிட்டா தான்... இந்த அன்னத்துக்கு இந்த குயில் தான்" என்று அவன் சொல்லிக்கொண்டு அவனின் வீட்டிற்கு சென்றான்.
அடுத்த நாள் அவர்கள் அனைவரும் சென்று நின்றது என்னவோ குமரகத்தின் முன்னால் தான்.
பக்ஷி ராஜாவின் கோட்டை அது தானே!
சாஹில் மற்றும் ஹன்சிகா கூட வந்து இருந்தார்கள். வர வழைத்து இருந்தான் ஜடாயு.
"மிஸ்டர் பக்ஷி உங்க மேல ஒரு கேஸ் இருக்கு...அதுவும் உங்க அண்ணாவை கொன்னு அவரோட சொத்து எல்லாத்தையும் அபகர்ச்சி இருக்கீங்க...அதுல வந்தது தானே இந்த நிலம் எல்லாம். உங்க அண்ணா அரசாங்கத்துக்கு எழுதி கொடுத்த நிலத்தை கூட நீங்க அபகர்ச்சி இருக்கீங்க" என்று மயூரன் வந்து முன்னால் நிற்கவும், பக்ஷி ராஜா ஏளனமாக வந்து முன்னால் நின்றார்.
அவரின் அருகே நின்று இருந்தான் ஹம்சா.
"சார், நீங்க சொல்றது எல்லாம் சரி தான். இது என் அண்ணாவோட சொத்து தான். ஆனா இதுக்கு கார்டியன் நான் தான் விஏஓ சார்... அவரு செத்துட்ட பிறகு எல்லா சொத்தும் என் பேருக்கு வந்திருச்சு" என்று அவர் பேசவும், நக்கல் புன்னகையுடன் முன்னே வந்தான் காகேஷ்.
"யாரு சொன்னது? உங்க அண்ணா பொண்ணு இன்னும் உயிரோட தான் இருக்காங்க... அவங்க தான் உங்க மேல கம்பளைண்ட் கொடுத்து இருக்காங்க" என்று அவன் சொல்லவும், பக்ஷியின் முகமே மாறியது.
ஹம்ஸாவின் கண்கள் பக்ஷியை தான் பார்த்தன.
"அப்பா?" என்று அவன் வினவ, "வாய்ப்பே இல்ல என் அண்ணா பொண்ணு தங்கம் அவங்க அப்பா அம்மா கூடவே இறந்து போய்ட்டா" என்று அவர் அடித்து சொல்லவும், "நீங்க உங்க அண்ணா பொண்ணு பாடிய பார்த்திங்களா?" என்று ஜடாயு கேட்க, "இல்ல வெறும் செய்தி தான் வந்தது" என்று பக்ஷி சொல்ல, "பாருங்க மிஸ்டர் பக்ஷி உங்க மேல உங்க அண்ணா பொண்ணு தான் கேஸ் கொடுத்து இருக்காங்க... அவங்க கிட்ட எல்லா டாகுமெண்ட்ஸ் கூட இருக்கு... இவளோ ஏன் டிஎன்ஏ ரிப்போர்ட் கூட இருக்கு...உங்க குடும்பத்தை சேர்ந்தவங்க தான் அவங்க.. உங்க டிஎன்ஏ கூட அவங்க கூட மேட்ச் ஆகுது அப்போ அது உங்க அண்ணா பொண்ணு தானே.. இல்ல நீங்க யாரவது சைட் செட் அப் வச்சிக்கிட்டு இருந்தீங்களா?" என்று காகேஷ் புருவம் உயர்த்தி கேட்கவும், "வாய்ப்பே இல்ல தங்கம் உயிரோட இல்ல" என்று பக்ஷி கத்தவும், "ஷ்ஷ் கத்ததிங்க பக்ஷி... உங்க இறக்கையை நாங்க பிச்சி எறிய வேண்டாம்... அதுவும் பாருங்க... இப்போ உங்களுக்கு விலங்கு போட போறது உங்க மகன் தான்" என்று காகேஷ் ஹம்ஸாவை பார்த்து கூறினான்.
"சார்... அப்படி கம்பளைண்ட் கொடுத்த என் பெரியப்பா பொண்ணு தங்கத்தை நாங்க பார்க்கலாமா?" என்று ஹம்சா கேட்க, "கண்டிப்பா வை நாட்? வாங்க டாக்டர் தங்கச்சிட்டு பெரியதிருவடி" என்று காகேஷ் அழைக்க, வந்து நின்றாள் சிட்டு.
வெறும் சிட்டு அல்ல, தங்கச்சிட்டு பெரியதிருவடி அவள்!
பக்ஷி வேரோடு அறுத்து விட்டேன் என்று நினைத்து கொண்டு இருந்த அவனின் அண்ணாவின் குடும்பத்தில் விட்டு வைத்து இருந்த அணையா விளக்கு அவள்!
பக்ஷிக்கு மட்டும் அல்ல, பரினீத்தி, மைனா, குயில் என்று அனைவருக்குமே அதிர்ச்சி.
மயூரனுக்கே இந்த விடயம் காலையில் தான் தெரியும்.
சாஹிலுக்கும் காலையில் தான் சொல்லி இருந்தார்கள்.
"மேம் தான் பக்ஷியோட அண்ணா பொண்ணா?" என்று குயில் கேட்க, "அப்படி தான் போல" என்று பரினீத்தியும் சொல்ல, அப்போது தான் பக்ஷி சிட்டுவின் கண்களாய் உற்று நோக்கினார்.
நடந்த இத்தனை கலவரத்தில் அவளின் கண்களை பார்க்க தவறி தான் இருந்தார். பார்த்து இருந்தால், நிச்சயம் அவர் கணித்து இருப்பார். வந்து இருப்பது அவரது அண்ணாவின் மகள் தங்கம் தான் என்று!
அப்படியே பெரியதிருவடியின் கண்களை கொண்டு பிறந்து இருக்கிறாளே சிட்டு!
மறக்க முடியுமா அந்த கண்களை!
அவரை மிரட்டி வைக்கும் அதே கண்கள் அது!
"இன்ஸ்பெக்டர் அர்ரெஸ்ட் ஹிம்" என்று காகேஷ் கத்த, ஹம்சாவிற்கு வேறு வழி இல்லை.
விலங்கை எடுத்து பக்ஷியின் கைகளில் போட்டு இருந்தான்.
இப்போது பக்ஷியின் கண்களுக்கு ஜடாயு, சிட்டு, காகேஷ், பரினீத்தி, மயூரன், மைனா, குயில், சாஹில் யாரும் தெரியவில்லை. அவரின் கம்பீரமாக பாகுபலியை போல் தெரிந்தது என்னவோ பெரியதிருவடியின் உருவம் தான்.
யார் இந்த பெரியதிருவடி குமரகத்தின் இரண்டாம் பாகத்தில்!
கருத்துகள்
கருத்துரையிடுக