இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 9

 

இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ!

பிறவி 9

 

"வஞ்சி... வஞ்சி" என்று அவளின் கன்னத்தை தட்டி இருந்தாள் தரிக்கா.

 

"வந்த நாளே இப்படி என் நண்பியை இரத்த காவு வாங்கிட்டிங்களே! நீங்க எல்லாம் நல்லாவே இருக்க மாட்டிங்க டா... உங்க கிரிக்கெட் பெட் உடைஞ்சி போக.. நீங்க போடுற பேண்ட் கிழிஞ்சி போக... உங்க போன் தொலஞ்சி போக" என்று வெரைட்டி வெரைட்டியாக சாபம் விட்டு கொண்டு இருந்தாள் சுப்ரியா.

 

"ஹே கேர்ள்! கொஞ்சம் அமைதியா இருக்கியா? உன் பிராண்ட் மயங்கி விழுந்தா நாங்க என்ன பண்ணுறது?" என்று அவன் கையை விரித்து கேட்க, "ஹான் சொல்லுவ யா சொல்லுவ... எங்களை பழி வாங்க தானே அந்த பாலை அடிச்சான் உன் பிராண்ட்... நீயும் அதுக்கு தானே அடிச்ச" என்று ஒற்றை விரலை நீட்டி அவளும் கத்த, அவனோ அழுத்தமாக அவளை பார்த்து, "ஆமா அதுக்கு தான் அடிச்சோம்... எங்க காரை உடைச்சி, கார காபி கொடுத்து, சாணியை முகத்துல அடிச்சா மடியில தூக்கி வச்சி உன்னையும் உன் அறிவில்லாத பிரண்ட்ஸ்ச கொஞ்சுவாங்களா?" என்று கேட்க, அவளை தள்ளி விட்டு அவனின் முன் வந்தாள் ஜானகி.

 

"ஹலோ நாங்க பண்ணதுல என்ன நீங்க யாராச்சு மயங்கிட்டிங்களா? இல்ல இப்படி இரத்த காயம் பட்டு வந்து படுத்துடீங்களா?" என்று கேட்டவளுக்கு அபராஜித்தை தள்ளிவிட்டு ரிதேஷ் வந்து, "நாங்களும் ஒன்னும் அவங்களுக்கு இரத்த காயம் கொடுக்கலையே... அவங்களா மயங்கி விழுந்தாங்க... தலை கல்லுல பட்டுருச்சு" என்று அவளுக்கு பதில் கொடுத்தான்.

 

"ஹான் இப்படி சொன்னா மட்டும் எல்லாம் சரி ஆகிடுமா?" என்று தாரிக்கா சண்டைக்கு நிற்க, அகரன் தான் வந்து, "ஹே இப்போ எதுக்கு டி எல்லாம் கத்திகிட்டே இருக்கீங்க? அவ மயங்கி விழுந்ததும் அவளை வீடு வரைக்கும் என்ன நீங்களா தூக்கிட்டு வந்தீங்க? அதர்வ் தானே தூக்கிட்டு வந்தான். நீங்க மூணு பேரு சேர்ந்து இருந்தா கூட அவள் தூக்கி வந்து இருக்க மாட்டிங்க" என்று அவர்களை அதட்டி விட்டு, "வஞ்சி... வஞ்சி" என்று அவனும் எழுப்ப, அதர்வ் பின்பு என்ன நினைத்தானோ, "தண்ணி கொண்டு வா" என்று தாரிகாவை பார்த்து சொல்லவும், அவளும் கொண்டு வந்தாள்.

 

அவளின் முகத்தில் தண்ணீரை தெளித்தவன், "வஞ்சி" என்று அவளின் கன்னங்களை தட்டவும், அவனின் கை பட்டதாலோ என்னவோ காரியையும் கண் விழித்தாள்.

 

கண்களை அவள் திறந்ததும் தான் அனைவருக்கும் மூச்சே வந்தது.

 

பின்னே அரைமணி நேரமாக அவர்களும் எழுப்புகிறார்கள். அவள் எழுந்தால் இல்லை. நடுவில் ரிதேஷ் கூட, "ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்டலாமா?" என்று கேட்டு இருந்தான்.

 

அகரன் தான், "இல்ல தலைல சின்ன அடி தான் டா... அவ மயங்கி தான் இருக்கா... வெய்ட் பண்ணு" என்று சொல்லி இருந்தான்.

 

கண்களை திறந்தவளுக்கு கண் முன் இருப்பவனை இன்னும் நம்ப முடியவில்லை. அவளின் கண் என்னவோ அவனின் இடது கைக்கு தான் என்றது. அவனிடம் இருக்கும் அதே நட்சத்திர மச்சம்.

 

முற்பிறவியில் எத்தனை தடவை அதை தொட்டு தடவி முத்தம் கொடுத்து இருக்கிறாள். அவர்கள் இணையும் முன் தான் அனைத்தும் அழிந்து விட்டதே!

 

அவளின் கண்கள் அதர்வ்வை பார்த்த முதல் கணம் அவளின் கண்கள் பார்த்தது என்னவோ அந்த நட்சத்திர மச்சத்தை தான். பார்த்தவள் கண்களில் முற்பிறவியின் நினைவுகளும் மேலோங்கி நின்றது. எல்லாம் ஒரு நொடியில் நடந்து முடிந்து இருந்தது. காலையில் இருந்து சாப்பிடாமல் வந்தவளுக்கு இந்த நினைவுகளும் வந்து நிற்க, அப்படியே மயங்கி சரிந்து இருந்தாள்.

 

கண்களில் கண்ணீர் நிறைந்து இருந்தவளை பார்த்தவனுக்கு நெஞ்சம் வலித்தது.

 

அவனையும், "ஏன் அழற? எங்கையாவது வலிக்குதா?" என்றவனின் கைகள் தாமாக அவளின் நெற்றியை தொட போக, அவனின் கைகளிலேயே ஒரு அடி அடித்து தட்டி விட்டு இருந்தாள் சுப்ரியா.

 

"என்ன பழக்கம் இது? இப்படி தான் பொண்ணு மேல கை வைக்க போவீங்களா?" என்று அவள் கேட்க, அபராஜித் அவளின் அருகில் வந்து, "ஹே கேர்ள் அவன் என்ன அவளோட கைய பிடிச்சி இழுக்கவா போனான்? காயம் எப்படி இருக்குன்னு தானே பார்க்க போனான்... என்னை எல்லாம் அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேச வைக்குற நீ" என்று அதற்கும் அலுத்து கொண்டான்.

 

"வஞ்சி நீ ஓகே வா டி?" என்று தரிக்கா அக்கறையாக கேட்கவும், "ம்ம்" என்று அவளை பார்த்து சொன்னவளுக்கு இன்னுமே அதர்வ் அவளின் முன்னால் அமர்ந்து இருப்பதை நம்ப முடியவில்லை.

 

ஒன்றாக அவர்கள் பேசிய கதைகள், வாழ நினைத்த வாழ்க்கை என்று அனைத்தும் கண் முன் வந்து நின்றது. எப்படி எல்லாம் அவளை உருக வைத்து, கரைய வைத்து காதலித்து இருந்தான். ஆனால் அனைத்தும் இப்பொது கானல் நீர் ஆகி விட்டதே! ஒரு பிறவியையே இழந்து விட்டார்களே?

 

அவளுக்காக உயிரையே மாய்த்து கொண்டானே! அவளுக்காக மட்டும் தான் உயிரை மாய்த்து கொண்டான் என்று கூட கூறலாம். அப்படி காதலித்தவனுக்கு அவளை இன்று நினைவு கூட இல்லை. மறுபடியும் அந்த காதல் கிடைக்குமா? கிடைத்தாலும் நிலைக்குமா என்று காலம் தான் பதில் சொல்லும்.

 

"வஞ்சி வஞ்சி" என்று மீண்டும் சுப்ரியா அழைக்கவும், "ஹான்" என்று சுயநினைவுக்கு வந்தவள் அவளை பார்க்க, "என்ன டி ஏன் மயங்கி விழுந்த? காலைல சாப்பிடலையா?" என்று இப்பொது தான் சரியாக கேட்டு இருந்தாள்.

 

அவளது முகமே சொல்லியது அவள் எதையும் உட்கொள்ளவில்லை என்று!

 

என்ன என்று சொல்லுவாள்? காலையில் அவளது வீட்டில் தான் ஒரு போர்க்களம் நடந்ததே! அதற்கு பிறகு சாப்பிடுவது தான் ஒரு குறை என்று நினைத்து கொண்டு வந்து இருந்தாள்.

 

அவள் ஏதோ சொல்ல வரும் முன் தான், அவர்கள் பந்தை அடித்து இருந்தார்கள்.

 

"என்ன ஆச்சு வஞ்சி? ஏதோ சொல்ல வந்த... ஆனா அதுக்குள்ளே தான் இவங்க பால் அடிச்சி, நீயே மயங்கின்னு ஏதோ ஆகிருச்சு" என்று ஜானகியும் வந்து அமர்ந்தாள்.

 

"முதல்ல அவளுக்கு சாப்பிட கொடுங்க" என்று அகரன் சொல்ல, தாரிக்கா உதட்டை சுழித்து கொண்டு செல்வதற்கு முன், அவளது தாய் கங்கா உணவு எடுத்து கொண்டு வந்து இருந்தார்.

 

கோவிலுக்கு போய் விட்டு அப்போது தான் வந்து இருந்தார். வந்ததும் தரிக்காவின் தம்பி தர்ஷன் வஞ்சி மயங்கி விழுந்து இருப்பதை சொல்லவும், கோவிலில் அவளது சித்தி எல்லாவற்றையும் சொல்லி தான் இருந்தார். ஆதலால் வந்ததும் அவளுக்கு உணவு எடுத்து கொண்டு வந்தார்.

 

அவரை பார்த்ததும் ஆண் மகன்கள் அனைவரும் ஒரு அடி தள்ளி நின்றனர்.

 

"சாரி அத்தை... அது வஞ்சி மயங்குனதும் நாங்களும் உள்ள வர வேண்டியதா ஆகிருச்சு" என்று அகரன் சொல்ல, "பரவால்ல அகரன்... தர்ஷன் சொன்னான்" என்றவர் வஞ்சியை பார்த்து, "முதல்ல சாப்பிடு... அப்புறம் மீதி எல்லாம் பேசிக்கலாம்" என்று சொல்லி இருந்தார்.

 

அவளோ கண்கலங்க அவரை பார்க்க, "உன் சித்தி எல்லாத்தையும் என் கிட்ட சொன்னா... அவளை நல்லா நாலு வார்த்தை கேட்டுட்டு தான் வந்தேன்" என்றவரை பார்த்து இன்னும் கண்ணீர் பெருகியது.

 

"என்ன அம்மா என்ன ஆச்சு?" என்று தரிக்காவும் கேட்க, "இவ சித்தி இவளுக்கு நாற்பத்தி அஞ்சு வயசு கிழவனை போய் மாப்பிள்ளை பார்த்து இருக்கா டி... அதுவும் இரண்டாம் தாரமா... கேட்டா அவன் வசதியானவனாம்... அவ பொண்ணுங்களுக்கு கூட கல்யாணம் பண்ணி வைக்குறேன்னு சொல்றானாம்" என்று அவர் பேச பேச சுப்ரியா, ஜானகி, தரிக்கா என்று அனைவருக்கும் கோவம் தான்.

 

அகரனுக்கு கூட கோவமாக வந்தது. என்ன இருந்தாலும் அவனுடன் வளர்ந்த பெண் தான் அவளும்! சிறுவயதில் இருந்தே அவனுக்கு அவளையும் தானே தெரியும்.

 

"என்ன நினைச்சுகிட்டு இருக்காங்க அவங்க? இதை எல்லாம் சின்ராசு மாமா பார்த்துட்டு இருக்காரா அத்தை?" என்று அகரன் கேட்க, "ம்கூம் அவருக்கு பொண்டாட்டி முந்தானையை பிடிச்சிட்டு சுத்துறதே வேலை... எங்க இருந்து இவளை பார்ப்பார்" என்று நொடித்து கொண்டார் கங்கா.

 

"பதினெட்டு வயசு ஆகிட்ட பிறகு எப்படி கட்டாய கல்யாணம் எல்லாம் பண்ண முடியும்?" என்று அபராஜித் பார்க்க, "அவங்க எங்க ப்பா கட்டாயம் படுத்துறங்க... இவளை நன்றி உணர்வுன்னு சொல்லி மடிய வைக்க பாக்குறாங்க" என்று சொன்னவர், அதே சமயம் அவளுக்கு சாப்பாட்டை ஊட்டி முடித்து இருந்தார்.

 

"வஞ்சி நீ எதுவும் கவலை படாத அப்படி எல்லாம் எதுவும் நடக்காது" என்று அகரன் சொல்ல, "ஆமா அதான் சொல்லிட்டாருல சார்... எல்லாம் அவங்க பாத்துக்குவாங்க" என்று தரிக்கா சொல்ல, அவளை பார்த்து முறைத்த கங்கா, "மாப்பிள்ளை கிட்ட இப்படி தான் பேசுவியா?" என்று அதட்டி இருந்தார்.

 

"அட போ மா" என்று சொல்லியவள் அப்படியே வஞ்சியின் அருகே அமர்ந்து கொண்டாள்.

 

"இன்னைக்கு வஞ்சி இங்கயே தங்கட்டும் அம்மா" என்று சொல்லியும் இருந்தாள்.

 

"சரி நாங்க கிளம்புறோம்" என்று ஆண் மகன்கள் செல்ல எத்தனிக்க, "கிளம்புங்க கிளம்புங்க" என்று சுப்ரியா சொல்லவும், "ஹே கேர்ள்! உனக்கு இருக்கு வா" என்று அபராஜித் அவளை பார்த்து சொன்னவன், என்ன நினைத்தானோ, "வஞ்சி, நீ எதுவும் கவலை படாத... அந்த நாற்பத்து அஞ்சு வயசு கிழவனுக்கு இந்த கேர்ள்ல கல்யாணம் கட்டி வச்சிரலாம்" என்று சொல்லளவும், ஜானகியும் தரிக்காவும் சிரித்து விட்டார்கள்.

 

"நான் ஏன் டா நாற்பத்தி அஞ்சு வயசு கிழவனை கட்டிக்கணும்? நீ அறுபது வயசு கிழவியை கட்டிக்கோ" என்று இருவரும் மீண்டும் ஆரம்பிக்கும் முன், அகரன், "நீ பார்த்துக்கோ வஞ்சி" என்று அவனை இழுத்து சென்று இருந்தான்.

 

"மிஸ் ரொம்ப பீல் பண்ணாதீங்க... நீங்க கண்டிப்பா மிஸஸ் ஆவீங்க ஆனா நாற்பத்தி அஞ்சு வயசு கிழவனுக்கு இல்ல நல்லா பிரின்ஸ் சார்மிங்க்கு" என்று ரிதேஷ் சொல்லி சென்றான்.

 

அதர்வ் எதுவும் பேச வில்லை. ஆனால் அவளை அப்படி பார்க்க பார்க்க அவனின் மனது வலித்தது. ஏனென்று தெரியாத உணர்வு.

 

"ரொம்ப அழாத" என்று சொல்லியவன் அப்படியே திரும்பி சென்றான்.

 

"ஏன் இவ அழுதா எனக்கு வலிக்குது" என்கிற கேள்விக்கு தான் அவனிடம் பதில் இல்லை.

 

எதிரில் இருப்பவன் யாரென்று தெரிந்தும் அவளால் எதுவும் சொல்ல முடியாத நிலை.

 

அன்றைய நாள் அப்படியே கழிந்தது.

 

பட்டென்று அவன் அவனின் கனவில் இருந்து விழித்து விட்டான். அதே கனவு, மீண்டும் மீண்டும் வந்து அவனை இம்சிக்கிறது. யார் அந்த பெண் அவளின் முகம் மட்டும் அவனுக்கு ஏனோ தெரியவில்லை?

 

"யாரு டி நீ இப்படி தினமும் என்னை கனவுல வந்து கொல்ற?", என்று எழுந்து சென்று அவனின் பால்கனியில் நின்று கொண்டான் அதர்வ்.

 

இங்கோ மறு புறம் தூக்கம் வராமல் தரிக்காவின் வீட்டு திண்ணையில் அமர்ந்து இருந்தாள் இளவஞ்சி. அவளுக்கோ, "என்னோட பேரு உருவம் எல்லாமே மாறிடுச்சு அதர்வ்... ஆனா நீங்க மட்டும் அதே மாதிரி அதே பேருல இருக்கீங்க... உங்க உயரம் இப்போ வேற… என்னோட உயரம் வேற... இந்த பிறவில கூட நம்ப சேர மாட்டோம் போல", என்று நினைத்து கொண்டே வானத்தை வெறித்து கொண்டு இருந்தாள்.

 

முன் பிறவியில் அவனை நெஞ்சில் சுமந்து, அவனின் கருவை வயிற்றில்  சுமந்து, மாண்டு போனவள், இந்த பிறவியிலும் அவனை நெஞ்சில் சுமக்கிறாள். ஆனால் அவனோ எட்டாக்கனியாக உயர்ந்த இடத்தில இருக்கிறான்.

 

இந்த பிறவியிலாவது பிரிந்த உள்ளங்கள் சேர்வார்களா?



கருத்துகள்