இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 15

 

இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ!

பிறவி 15

 

சத்தியமாக இவனை வஞ்சி எதிர்பார்க்கவில்லை. இவனா? இவன் இன்னும் உயிருடன் இருக்கிறானா? இவன் எல்லாம் வாழ்வதற்கே தகுதி இல்லாதவன். யோசிக்க யோசிக்க தலை வின் வின் என்று வலித்தது. இப்பொது வஞ்சி அல்ல இஷானாவாக மாறி இருந்தாள். உடல் எல்லாம் வேட வேடத்து போனது. போன பிறவியில் அவளின் தந்தையின் நண்பருடன் சேர்ந்து இவனும் தானே அவளை வேட்டையாடி இருந்தான். தந்தை வயதில் இருந்த அவர் அவளின் மீது கை வைத்தார் என்றால், அவளது நண்பனாக கூடவே இருந்து கருவறுத்து இருந்தவன் இவன் தானே! எதிரியை கூட மன்னித்து விடலாம், ஆனால் துரோகியை மன்னிக்கவே கூடாது. அப்படி பட்ட துரோகி தானே இவனும்... எவ்வளவு நம்பி இருந்தாள். ஆனால் அனைத்தையும் தவிடு போடி ஆக்கிவிட்டு கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சி இல்லாமல் அவனை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தானே! மறக்க முடியுமா? அவள் இறக்கும் தருவாயில் அவளின் கண்களில் நின்ற கொடூர சிரிப்பு அது தான்.

 

குடும்ப நண்பர்களாக இருந்தவர்கள் என்பதால் இவனை அவளுக்கு நன்றாக தெரியும் தான். இவனின் அண்ணாவிடம் தான் பெரிதாக பேசியது இல்லை. அவனின் அண்ணா அப்போதில் இருந்தே கிரிக்கெட் என்று வெளியே சென்று விட்டு இருந்தான். ஆதலால் இவன் தான் இஷானாவிடம் நெருங்கி பழகி இருந்தான். ஆதலால் தானே அவனுக்கு அவளின் காதலை பற்றியும் சொல்லி இருந்தாள்.

 

அதர்வ் மற்றும் அவளின் காதலை அவளின் தகப்பனிடம் போட்டு கொடுத்த எட்டப்பன் கூட இவன் தானே!

 

எல்லாவற்றிக்கும் காரணமானவன் இப்பொது அவளின் முன் நிற்கிறான். தேகம் நடுங்கியது. கோவம் மனதில் பற்றி எரிந்தது. அவனை கழுத்தை அறுத்து கொன்று போடும் அளவு கோவம் வந்தது. ஆனால் அடக்கி கொண்டு நின்றாள். அவளின் கண்களில் அன்றைய நிகழ்வுகள் படமாக விரிந்தன.

 

அன்று அவள் கெஞ்சினாலே அதற்கு கூட அவன் செவி மடுக்க வில்லையே...

 

"ப்ளீஸ் ப்ளீஸ்... இதெல்லாம் வேணாம்.. நான் உன்னை நண்பனா பார்த்தேன்... நீயே இப்படி பண்ணலாமா?" என்று கதறி அவனிடம் மன்றாடி இருந்தாலே!

 

ஆனால் அப்போது, "என்ன இஷானா இன்னும் குழந்தை மாதிரி பேசுற... எனக்கு நீ வேணும்... எனக்கு இல்லனா நீ யாருக்கும் கிடைக்க கூடாது.... ஆனா நீ அந்த அதர்வ் கூட எல்லாமே பண்ணி இருக்க தானே... அதையே என் கூட பண்ணிட்டு இந்த உலகத்தை விட்டு போய்டு... எனக்கும் நீ கிடைக்கல சோ அதர்வ்க்கும் கிடைக்க கூடாது" என்று ஏதோ சைக்கோவில் போல் பேசி இருந்தானே...

 

"வேண்டாம் நான் பிரேக்... ப்ரெக்னெண்டா இருக்கேன்.. ப்ளீஸ் என் வயித்துல ஒரு குழந்தை வளருது... அந்த குழந்தைக்காக என்னை விட்டுடு ப்ளீஸ்... எத்தனை நாள் உனக்கு என் கையால சாப்பாடு போட்டு இருக்கேன். அதுக்காகவாது என் குழந்தைக்கும் எனக்கும் உயிர் பிச்சை கொடு ப்ளீஸ்" என்று கெஞ்சி இருந்தாள்.

 

ஆனால் அவன் மனம் இறங்கினால் தானே!

 

"அது வேறையா? அதை தான் முதல்ல அப்போ அழிக்கணும். ஆனா வேண்டாம் இரண்டு பேரையும் சேர்த்து அனுப்பி விடுறேன்" என்றவன் அவளின் கை கால்களை கட்டி அவளை படுத்தின துன்பத்தை எல்லாம் மறக்க முடியுமா? ஒரு ஜென்மம் என்ன எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் மறக்க முடியாத அளவிற்கு அவளுக்கு வலிகளை கொடுத்து இருக்கிறானே அவன்... எத்தனை கெஞ்சல், கதறல், ஆனால் எதற்கும் இறங்கவில்லையே அவன்...

 

அவன் மட்டும் கொஞ்சம் மனம் இறங்கி இருந்தால் அவளோட வாழ்க்கையை மாறி இருக்குமே! அதர்வ் மற்றும் அவள் கற்பனையில் கட்டி வைத்த மாளிகையில் இன்று அவர்கள் குழந்தைகளே திருமண வயதில் இருந்து இருப்பார்கள். அதுவும் அவனது குடும்பம்? எத்தனை கதறி இருக்கும்? ஆருஷை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

 

எல்லாவற்றிக்கும் காரணம் இவன் ஒருவன் தான். அதற்கு கூட அவளது தந்தையின் நண்பர் ஒருவரையும் கூட்டு சேர்த்து இருந்தான்.

 

ஆனால் அவன் தான் மூலதனம். அந்த வீட்டிற்குள் அவனை தவிர வேறு யாருக்கும் இத்தனை சுதந்திரம் இருந்தது இல்லையே. அதை வைத்து தானே அவளின் காதலை கருவறுத்து இருந்தான்.

 

ஆனால் இன்று? இப்பொழுது ஏன்? இன்றா அவனை பார்க்க வேண்டும். அதுவும் உயிருடன் இருக்கிறானே.

 

அவனை கொன்று போடும் கோவம் எழுந்தது. ஆனால் ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையில் நின்று கொண்டு இருக்கிறாள்.

 

அதுவும் இன்று அவள் வாழும் வாழ்க்கை அதெல்லாம் வாழ்க்கையா? எப்படி இருந்தவள் அவள்? காசு, பணம், பதவி என்று இளவரசியாக இருந்தவள் அவள். இன்று இதோ நாற்பத்தி ஐந்து வயது கிழவனுக்கு அவளை திருமணம் செய்து கொடுக்க காத்து கொண்டு இருக்கிறாள் அவளது சிற்றன்னை. அவளது தந்தையின் கரங்களில் தேவதையாக இருந்தவள் அவள். இப்பொது இந்த ஜென்மத்தில் இந்த இழிநிலை வந்ததற்கு காரணம்? அவன் தானே!

 

கண்முன் நிற்கிறான். ஆனாலும் அடிக்க முடியவில்லை என்று மனம் அவளை காறித்துப்பியது. வேறு வழி இல்லையே!

 

அதை வித இப்பொது அவளின் கண்கள் மேலும் விரிந்தன.

 

"சித்தப்பா" என்று அதர்வ் மற்றும் ரிதேஷ் சொல்ல, அவளுக்கு உலகமே நின்ற உணர்வு.

 

சித்தப்பா, ஆம் சிவராஜின் தம்பி தான் அவர். சிவராஜ் தங்கமானவர் என்றால் அவரது தம்பி ஸ்ரீகாந்த் தகரத்திற்கும் கீழ் தான். ஆனால் இது யாருக்கும் தெரியாது.

 

சிவராஜ் அப்போது கிரிக்கெட் உலகில் அவரின் கால் பதித்து கொண்டு இருக்க, அவரது தம்பியோ இஷானாவின் வாழ்வையே புரட்டி போட்டு கொண்டு இருந்தான்.

 

இதில் அவன் தான் இப்போது கிரிக்கெட் உலகையே ஆட்டி வைக்கும் உலக கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் வேறு!

 

என்ன ஒரு கொடுமை, அவனை அப்பா என்று அழைக்க இந்த உலகிற்கு வரவிருந்த உயிரை கொன்று இருந்த அவனை சித்தப்பா என்று அழைக்கிறான் அதர்வ். ஆணடவனின் விளையாட்டில் நம் அனைவரும் கைப்பாவைகள் தான்.

 

அது அதர்வ் மற்றும் வஞ்சியின் வாழ்விலும் உண்மை போல.

 

எல்லாவற்றையும் கோர்த்து பார்த்தாள்.

 

"ஆமா சிவராஜோட தம்பி தான்ல இவன். அவனோட பையன் தானே அதர்வ்... எப்படி மறந்தேன்... அப்போ இவன் என்னோட அதர்வ் இல்லையா? இப்படி ஒருத்தனோட குடும்பத்தலையா என்னோட அதர்வ் பிறந்து இருப்பான்? இல்ல இவன் வேற ஒருத்தனா? இல்லையே... இவன் என்கிட்ட வரும் பொது தானே என் இதயம் வேகமா துடிக்குது... அந்த சிரிப்பு... அவன் என்னை பார்க்கும் பார்வை எல்லாமே என் அதர்வ்வை தானே நினைவு படுத்துது... அப்புறம் எப்படி? ஐயோ கடவுளே இவனை போய் அதர்வ் சித்தப்பா என்று அழைகிறானே" என்றெல்லாம் அவளின் உள்ளம் கொதித்தது.

 

கயவன் அவன் முகத்தில் தான் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லை. நரகாசுரனை காட்டிலும் அரக்கன் அவன்!

 

இஷானாவின் தந்தைக்கு கூட தெரியாத வில்லன் இவன் தான். உயிரும் உறவாய் கலந்து இருந்தவர்களை பிரித்த துரோகி இவன் தான். இந்த கதைகளில் இத்தனை பாகங்களில் யாரும் பார்த்திராத காம கொடூரன்.

 

இவனை போல் விளையாட்டு வீரர் மட்டும் வீராங்கனைகளை தேர்ந்து எடுக்கும் பெரிய பதவியை கொடுத்து இருந்தார்கள். வீராங்கனைகளை தேர்ந்து எடுக்கிறேன் என்கிற பெயரில் இன்று வரை அவர்களின் கற்பை சூறையாடி கொண்டு இருக்கிறான் இந்த பாதகன். இன்று வரை உலகிற்கு மத்தியில் பேரோடும் புகழோடும் இருக்கிறான். ஆனால் அந்த நாலு சுவற்றிற்கு மத்தியில் அவனின் சுய ரூபம் தெரிந்த மூன்று நபர்கள் ஒன்று இஷானா, மற்றோன்று அவளும் அவனும் தான்.

 

இவனால் தானே அபி மற்றும் அதர்விற்கு மத்தியில் பிரச்சனையே பெரிதாகியது. என்ன தான் இருவரும் சிறுவயதில் இருந்து முறுக்கி கொண்டு திரிந்தாலும் இவனால் தான் அவர்கள் இப்படி இருப்பதே!

 

அபியின் முகம் இறுகி இருந்தது. அவனையே இந்தியா கிரிக்கெட் அணியில் தேர்ந்து எடுத்தவன் அவன் தான். ஆனாலும் அவனுக்கே அடங்காத ஒருவன் அபி.

 

ஸ்ரீகாந்த் ரிதேஷ் மற்றும் அதர்வ் இருவரையும் கட்டி அணைத்து இருந்தான்.

 

அவனின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. பல நாள் கழித்து அதர்வ் மற்றும் ரிதேஷை பார்க்கிறார்.

 

பசும் தோல் போற்றி இருக்கும் புலி அவர் தான். அதுவும் பெண்களை மட்டும் வேட்டையாடும் புலி.

 

"என்ன சித்தப்பா நீங்க இங்க?" என்று அதர்வ் கேட்க, "இங்க அகரன் புதுசா ஒரு கிரிக்கெட் கிரௌண்ட் கட்டி இருக்கேன்னு சொன்னான். பார்த்துட்டு அதுக்கு இந்தியா கிரிக்கெட் அஸோஸியேஷன் அப்ரூவல் கொடுக்கலாம்னு வந்தேன்" என்றவரின் கண்கள் அனைவரையும் ஒரு சுழற்று சுழற்றி பார்த்தது.

 

தெரிந்தோ தெரியாமலோ அவரின் கண்கள் வந்து நின்றது என்னவோ வஞ்சியிடம் தான்.

 

அவளை பார்த்தவரின் கண்களில் அப்படி ஒரு காம வெறி.

 

'பொண்ணு நல்லா இருக்கே... யாருனு தெரியலையே' என்று இப்பொது கூட அவனின் எண்ணம் அப்படி தான் இருந்தது.

 

ஊருக்கு மட்டும், "விளையாட்டுக்காக என் வாழ்க்கையையே அர்ப்பணிக்கிறேன்" என்று பேசி திருமணம் செய்து கொள்ளாமலே காலத்தை கடத்தி விட்டான். ஆனால் அவனின் லீலைகள் எல்லாம் அவனுக்கு மட்டும் தான் தெரியும்.

 

உலகத்திற்கு ராமனாக இருப்பவன், அவனை நம்பி வரும் பெண்களுக்கு அவர்களின் கற்பை சூறையாடும் அரக்கன் தான்.

 

"உனக்கு எல்லாம் நல்ல சாவே வராது" என்று அவனை சபித்த பெண்கள் எல்லாம் கணக்கில் இல்லை. அதை பற்றி எல்லாம் அவனுக்கு கவலையும் இல்லை.

 

இதில் கொடுமை என்னவென்றால் அவன் இதை ஆரம்பித்தது என்னவோ இஷானாவிடன் தான். முடிப்பதும் இஷானாவாக இருக்குமோ?

 

அவளின் வாழ்க்கையை முற்பிறவியில் மாற்றி எழுதியவன் இவன் தான். இப்பிறவியிலும் அவள் வாழ்க்கையை மாற்றும் தருவாயில் இருக்கிறாள். அன்று அவன் அவளின் வாழ்வை எழுதினான். இன்று அப்படி ஒரு நிலையை இஷானா கொண்டு வர விடமாட்டாள். ஆனால் இப்போதும் அவளின் வாழ்வை எழுதும் அதிகாரம் அவளிடம் இல்லையே! அது பலரிடம் சிக்கி இருக்கிறதே!

 

இல்லை இம்முறை அந்த உரிமையை அவள் யாருக்கும் கொடுக்க போவது இல்லை. முடிவெடுத்து விட்டாள். இஷானாவாக தோற்றவள், வஞ்சியாக வீழ மாட்டாள்.

 

இஷானாவின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும்?

 

அடுத்த அத்தியாத்தில்!



கருத்துகள்