குமரகம் - 3

 குமரகம்

அத்தியாயம் 61

 

பக்ஷி ராஜாவிற்கு இன்னுமே கோவம் அடங்கவே இல்லை. அவரின் முன் அவர் விதைத்த விதை தான் நிற்கிறது. ஆனால் அவருக்கு எதிராக! தந்தையை மிஞ்சிய தனையனாக நிற்கிறான். அவரின் ஆட்சியை மொத்தமாக கவிழ்க்க கூட இல்லை, அவன் களைந்து எடுத்து விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்.

 

அவர்கள் குடும்பத்தின் அடுத்த தலைமுறையின் முதல் வாரிசு அவன். அவனை வளர்த்த தாத்தா சாகும் பொது சொல்லும் உண்மையில் தான் அவனுக்கே அவன் யாரென்று தெரியும்.

 

"எப்படி டா? செத்த குழந்தையை நான் தான் புதைச்சிட்டேனே" என்று பக்ஷி கேட்க, "அது என் தாத்தாவோட பேரன் தான். என்னை வளர்த்த தாத்தா வரதராஜன் யாரு தெரியுமா? இந்த ஊர்ல தான் தபால்காரரா இருந்தவர். அவரோட பொண்ணு இங்க பிரசவத்துக்கு வரும் பொது தான் பொண்ணும் இறந்திருச்சு, குழந்தையும் இறந்திருச்சு... இப்படி பட்ட சூழ்நிலைல தான் அன்னைக்கு அவர் என் அம்மா கவிதாவை பார்த்தார்" என்றவனின் நினைவுகளும் வரதராஜன் சொன்ன நிகழ்விற்கு சென்றது.

 

அன்று கவிதாவை அடித்து விட்டு இறந்துவிட்டாள் என்று நினைத்து பக்ஷி வந்து விட, அதற்கு பிறகு தான், உனக்காக நான் அவனை பழி வாங்குவேன் அம்மா என்று சபதம் எடுத்தே அவள் வயிற்றில் இருந்த குழந்தை இந்த உலகத்தை பார்க்க வெளியே வர தவித்தது.

 

பிரசவ வலியில் துடித்து கொண்டிருக்க, அப்போது தான் அவரின் பெண் இறந்த செய்தியை கேட்டு வரதராஜன் மருத்துவமனை விரைந்து கொண்டிருந்தார். யாரோ ஒரு பெண் கத்தும் குரலில் அப்படியே அவர் கவிதாவை நெருங்க, அங்கே குத்துயிரும் கொலையுருமாக அவள் இருக்க, அதே சமயம் அவள் ஈன்ற மாகவும் வெளியே வந்து இருந்தது.

 

அவள் அறிந்து கொண்டாள் அவளது இறுதி நிமிடங்கள் இது தான் என்று! ஆனால் அதற்குள் குழந்தையை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்கிற தவிப்பு அவளிடம்!

 

அதே நேரத்திற்கு வரதராஜன் வர, அவருக்கு கவிதாவை தெரியாமல் இருக்குமா ஒரே ஊர் வேறு..

 

"ஐயோ என்ன மா ஆச்சு... நான் இப்பவே பக்ஷி ஐயா கிட்ட" என்று ஆரம்பிக்கும் போதே, "அப்பா" என்று கையை எடுத்து கும்பிட்டு இருந்தார் கவிதா.

 

"என்ன மா நீ போய்..." என்று சொல்லும் போதே, "இல்ல... எனக்கு நேரம் ரொம்ப கம்மி தான்.... இதுக்கு மேல... என்னால பெருசா எதுவும் சொல்ல முடியாது" என்றவள் சுருக்கமாக பக்ஷியின் உண்மை முகத்தை அவரிடம் கூறி இருந்தாள்.

 

"அட சண்டாளா! அப்போ அவன் இவளோ பெரிய அரக்கனா?" என்றவரை பார்த்து, "என் குழந்தையை இந்த ஊரை விட்டு எங்கையாவது கூட்டிட்டு போயிருங்க... அவன் வாழனும்..... அவங்க அப்பாவை அழிக்க அவன் வாழனும்" என்று சொல்லவும், "என் பேரன் தான் செத்துட்டான்... கடவுள் இனி எனக்குன்னு கொடுத்த உறவா நான் உன் குழந்தையை வளர்க்குறேன் மா" என்றவரை பார்த்து, நன்றியுடன் கை குப்பி அவளது இறுதி மூச்சை நிறுத்தி இருந்தாள்.

 

பிறகு அவரின் பேரனை அங்கே போட்டுவிட்டு அடுத்த நாளே மாற்றல் வாங்கி கொண்டு சென்னை வந்து சேர்ந்து இருந்தார் வரதராஜன். அவரின் யாரும் இல்லாத தனிமைக்கு கவிதா அவருக்கு கொடுத்த பரிசு தான் காகேஷ்.

 

காகேஷ் தான் அவரின் உலகம் என்று வாழ்ந்தவர் அவர். அதே சமயம் தான் சிட்டுவும் அவளது தாத்தாவும் அவர்களது வாழ்க்கையில் வந்து சேர்ந்தார்கள்.

 

பிள்ளைகள் இருவரும் பழகும் சமயம் தான் ஒரு நாள் சிட்டுவின் தாத்தா காசிநாதன், "எப்படி எல்லாம் வளர்ந்து இருக்க வேண்டிய பொண்ணு.. இன்னைக்கு இப்படி வளருது... குமரகத்துக்கே இளவரசியா இருக்க வேண்டியவ" என்று அவர் சொல்லவும், வராதராஜனின் முகம் சட்டென திகிலாக அவரை பார்த்தது.

 

"என்ன சொல்றிங்க?" என்று அவர் கேட்கவும், காசிநாதனுக்கும் யாரிடமாவது உண்மையை சொல்ல வேண்டும் என்று இருந்தது.

 

மகளும் மருமகனும் இறந்ததை கூறியவர், "நான் தான் சிட்டுவை தூக்கிட்டு இங்க வந்துட்டேன்" என்று சொல்லவும், "அப்போ திருவடி ஐயா இறந்துட்டாரா? அவரையும் கொன்னுட்டானா அந்த பாவி?" என்று அவர் கேட்கவும், "உங்களுக்கு என் மருமகனை தெரியுமா?" என்று அதிர்ந்து கேட்டவரை பார்த்து, "தெரியுமாவா? அவரோட சம்சாரத்தோட ஊர்ல தான் நான் போஸ்ட் மாஸ்டரா இருந்தேன்" என்றவர் அனைத்தையும் அவரிடம் கூறி முடித்தார்.

 

"கவிதாவோட பையனா அப்போ காகேஷ்?" என்று தான் காசிநாதன் கேட்டாரே தவிர அவர் மறந்தும் கூட காகேஷை பக்ஷி ராஜனின் மகனாக நினைக்கவில்லை.

 

அப்படி நினைக்கவும் தோன்றவில்லை, அவனின் குணம் அப்படியே அவனின் தாயையும் சிறிய தாயையும் சேர்ந்தது போல் தான் இருந்தது.

 

ஒரு புறம் அவனின் தாய் கவிதாவின் கனிவு என்றால், மற்றோரு புறம் அவனின் சிறிய அன்னை குழலியின் துணிச்சலும் திமிரும் என்று சேர்ந்து பிறந்து இருந்தான்.

 

"ஆமாங்க.. நான் தான் என் பேரனா வளர்க்குறேன்" என்று வரதராஜன் சொல்ல, "பிள்ளைங்க வளரட்டும்... அவங்க அப்பா அம்மாக்கு எல்லாம் இந்த பக்ஷி பண்ணதை சொல்லணும்... கண்டிப்பா நம்ப செய்ய முடியாததை அவங்க செய்வாங்க.. நான் கூட நினைச்சி இருக்கேன், இந்த பொண்ணு சிட்டுவை எனக்கு அப்புறம் யாரு பார்த்துக்குவான்னு இப்போ கவலை இல்ல... எல்லாமே காகேஷ் பார்த்துக்குவான்" என்று காசிநாதன் சற்று ஆசுவாசம் அடைந்தார்.

 

அவர்களும் நண்பர்களாகவே வளர்ந்தார்கள். எக்காரணத்தை கொண்டும் சிட்டுவும் காகேஷும் அண்ணா தங்கை என்கிற உண்மையை அவர்கள் சொல்லவே இல்லை.

 

அவர்கள் இருவரும் மரண படுக்கையில் இருக்கும் பொது தான், வரதராஜன் அவனை அழைத்து உண்மையை சொல்லி இருந்தார்.

 

"உன் அம்மா என்கிட்ட கேட்ட கடைசி ஆசை, நீ உன் அப்பாவை பழி வாங்கணும்னு தான்... இப்போ நீ இருக்குற நிலைமைக்கு கண்டிப்பா அந்த ஆளை அசைச்சி பார்க்க முடியும். சிட்டு உன்னோட பெரியப்பா பொண்ணு தான்... அவளையும் இதோட உன் பொறுப்புல பார்த்துக்கோ... நண்பனா நீ அவளுக்கு இருக்குறது எனக்கு தெரியும்... இனி அவளுக்கு தாய் தகப்பன் வீட்டு சொந்தம்னு இருக்கறதும் நீ மட்டும் தான். அந்த பொண்ணுக்கு ஒரு குறையும் வரமா பார்த்துக்கோ" என்று சொல்லி தான் அவரின் இறுதி மூச்சை நிறுத்தி இருந்தார்.

 

இதையே தான் காசிநாதனும் கூறினார்.

 

"அவன் உன் பிராண்ட் மட்டும் இல்லமா உனக்கு முன்னாடியே பிறந்த உன் அண்ணாவும் அவன் தான். நீ அவனை அண்ணாவா பார்க்க மாட்டேன்னு எனக்கு தெரியும். ஆனாலும் உனக்குன்னு யாரும் இல்லன்னு என்னைக்கும் நின்னைக்காத... அவன் எப்பவும் இருப்பான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு... உன் அப்பா அம்மா, சித்தி எல்லாரோட சாவுக்கும் பழி வாங்கணும்... அந்த பக்ஷியை நீங்க தான் அழிக்கணும்" என்று சொல்லி தான் கண்ணை மூடி இருந்தார்.

 

அதற்கு பிறகு தான் இருவருக்கும் அவர்கள் யார் என்றே தெரியும். ஆனால் அவர்களுக்கே அதிர்ச்சி குழலியின் மறுபக்கம் தான். ஹம்சா சொல்லும் பொது தான் குழலி இத்தனை நல்லவள் என்று அவர்களுக்கு தெரிந்து இருந்தது.

 

யாருமே எதிர்பார்க்காத ஒன்று!

 

"உன் தம்பி என்ன டா பொசுக்குன்னு இவளோ நல்லவனா ஆகிட்டான்" என்று சிட்டு காகேஷை அன்று சீண்ட, "மேடம் நீங்க தான் தம்பி தங்க கம்மின்னு தூக்கி எல்லாம் கொஞ்சி இருக்கீங்க... எனக்கு எல்லாம் ஒரு பீலிங்க்ஸும் இல்ல" என்று அவன் சொன்னதை கூர்ந்து பார்த்தவள், "இதெல்லாம் நம்புற போலவா இருக்கு? உனக்கு ஹம்சா மேல கொஞ்சம் கூட பாசம் இல்லையா? அதனால தான் அவனை பெஸ்ட் கேண்டிடேடா ட்ரெயின் பண்ணியா?" என்று புருவம் உயர்த்தி கேட்க, "அவன் கிட்ட பொடென்ஷியல் இருந்துது ட்ரெயின் பண்ணேன் அவளோ தான்" என்று சொல்லி இருந்தவனை பார்த்து, "ஓஹ்! அண்ணா தம்பி இரண்டு பேருமே பேட்ச் டாப்பர்ஸ்" என்று சொல்லி சிரிப்பை அடக்கி கொண்டாள்.

 

"இப்போ என்ன டி உனக்கு? அவன் என் தம்பி என்ன பண்ணுறது? வந்து என் கிட்டயே என் அப்பாவை தூக்கி உள்ள போடுங்கனு ஐடியா கேட்குறான்" என்று தலையில் கை வைத்து கொள்ள, "அதான் பாரேன். என் சித்தப்பா பெத்த இரண்டும் அவரை போட்டு தள்ள ஒண்ணா ஆகி இருக்காங்க" என்று கூறி சிரித்தவள் பார்த்து முறைத்து கொண்டு தான் இருந்தான்.

 

அன்று ராஜேஸ்வரி அவளின் சீமந்தத்தை பற்றி பேசும் போது கூட, "அவ என்னோட தங்கச்சி" என்று தான் சொல்ல வந்தான். அவள் யாரென்று சொல்ல வேண்டும் என்கிற அவ அவனுக்குள் எழுந்து இருந்தது. அவளுக்கென்று யாரும் இல்லை என்று அவர் சொல்லும் போதெல்லாம், அவளுக்கென்று நான் இருக்கிறேன். நண்பனாகவும் சரி அண்ணாவாகவும் சரி என்றும் அவளுக்காக நான் இருக்கிறேன் என்று தான் சொல்ல இருந்தான். ஆனால் சிட்டு தவிர்த்து விட்டாள்.

 

அன்றும் அவளையும் காகேஷையும் வைத்து பேசும் பொது கூட, அவளால் சொல்லி இருக்க முடியும்,  நட்பிற்கு மதிப்பு கொடுக்காதவர்களிடம் என்ன விளக்கம் கொடுப்பது என்று தான் அமைதியாகி விட்டாள்.

 

ஜடாயுவுக்கு ஹம்ஸாவை பற்றிய உண்மை சொல்லிய நாளே காகேஷ் யார் என்று சொல்லி இருந்தாள்.

 

"அடிப்பாவி! அப்போ அவன் உண்மையாவே ஷ்ராவனிக்கு மாமாவா? அவன் இவளோ உரிமை எடுக்கும் போதே எனக்கு டவுட் வந்தது... ஆனாலும் என்னால பக்ஷியோட பையன்னு அவனை பார்க்கவே முடியல" என்று ஜடாயு சொல்ல, "இப்பவும் அவன் என் சித்தப்பா பையன் இல்ல... என்னோட சித்தி பையன் மட்டும் தான்" என்று அவள் சொல்லவும், மயூரன் மற்றும் சாஹிளுக்கும் உண்மை தெரிவிக்க பட்டது.

 

ஹம்சாவிற்கு கூட இந்த உண்மை சாஹில் மற்றும் ஹன்சிகாவின் விடயம் அப்போது தான் சொல்ல பட்டது. ஹன்சிகா அவளின் கழுத்தில் கத்தியை வைக்க, காகேஷ் அவளை அறைந்ததும் ஹம்ஸாவின் கண்கள் விரிந்தன.

 

காகேஷ் இப்படி எல்லாம் யாரிடமும் கையை நீட்ட மாட்டான். அதுவும் பெண்களிடம் நிச்சயமாக இல்லை. ஆனால் அன்று ஹன்சிகாவை உரிமையாக அடித்தது போல் ஒரு உணர்வு.

 

சிட்டுவிடம் தான் கேட்டு இருந்தான்.

 

"சார் ஏன் ஹன்சிகாவை அடிச்சார்?" என்று அவன் கேட்கவும், அவளுக்கு அதற்கு மேல் மறைக்கவும் எதுவும் இல்லை, "அவன் தான் உன் அண்ணா" என்று அவள் சொல்லவும், ஹம்ஸாவின் கண்கள் விரிந்தே விட்டது.

 

"ஆனா... எப்படி?" என்றவனின் உதடுகள் துடித்தது.

 

அவளும் நடந்ததை சொல்ல, அவனுக்கு ஒரு பக்கம் சந்தோஷம் இருந்தாலும், மற்றோரு பக்கம் தன்னை தம்பி என்று கூட அழைக்கவில்லையே என்கிற கோவமும் இருந்தது.

 

"அதுக்காக அவரை அண்ணான்னு எல்லாம் கூப்பிட மாட்டேன்" என்று அவன் முகத்தை தூக்கி கொண்டு வைக்கவும், அவளோ புன்னகையுடன், "அது உனக்கும் உன் அண்ணாக்கும் இருக்குற பிரச்சனை நான் வர மாட்டேன்" என்று சொல்லி சிட்டுவும் ஒதுங்கி கொண்டாள்.

 

காகேஷ் தான் பக்ஷியின் மகன் என்று உண்மை தெரிந்த கடைசி ஜீவன் பரி தான். அன்று ஹம்சா, "உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்" என்று சொல்லி உண்மையை கூற, அவளின் கண்கள் விரிந்தன.

 

"அவன் ஒன்னும் பக்ஷி மாதிரி கிடையாது" என்று ஜடாயு சொல்லவும், "தெரியும் சார்... ஆனா இவளோ பெரிய இடத்து பையன்னும் தெரியாதே... அதான் கொஞ்சம்" என்று அவள் தயங்கவும், சிட்டு தான் வந்து, "அவன் உன்னை நல்லா வச்சிக்குவான்" என்று சொல்லி அவளை நிலைக்கு கொண்டு வந்து இருந்தாள்.

 

இதோ இப்பொது பக்ஷியின் முன் காகேஷ் கனலுடன் நிற்கிறான்.

 

இனி என்ன ஆகுமோ?

 

 

 

அத்தியாயம் 62

 

காகேஷ் தான் பேச ஆரம்பித்தான், "நீ எல்லாம் என்ன மனுஷன் யா? ச்சை... இவளோ நாள் உனக்கு மனசு இல்லன்னு தான் நினைச்சுகிட்டு இருந்தேன். ஆனா இப்போ தான் தெரியுது மனுஷன் இல்ல... பக்ஷின்னு பேரு வச்சதுக்கு பரதேசின்னு வச்சி இருக்கனும். ச்சை ஹன்சிகாவை விட சின்ன பொண்ணு தெரியுமா அந்த தெய்வயானை.. அவ கிட்ட போய்..." என்று முகம் சுளிக்கும் போதே, சிட்டு சட்டென திரும்பி ஜடாயுவை பார்த்தாள்.

 

"ஆமா அந்த ஆளு அந்த பொண்ணை..." என்று துவங்கும் போதே, "எதுவும் சொல்லாதீங்க" என்று முடித்து விட்டாள்.

 

ஹன்சிகாவிற்கு கேட்க கேட்க அதிர்ச்சி.

 

"ஆமா டா நான் தான் எல்லாம் பண்ணேன்... இதோ இங்க நிக்குறாளே இவ அப்பா அம்மாவை கொன்னது நான் தான்... உன்னை பெத்தவளை கொன்னதும் நான் தான்.. என்னை பெத்தவங்களையே கொன்னவன் டா நான்... அப்புறம் உன் சித்திய கூட நான் தான் கொன்னேன். அவளை கொல்லும் பொது மட்டும் தான் வலிச்சுது... அவளை தான் உண்மையா காதலிச்சேன்... மீதி உன் தாத்தா இவ தாத்தா எல்லாரையும் கொன்னது நான் தான்.. இதோ இதை ஜட்ஜ் முன்னாடியே சொல்லிக்கிட்டு இருக்கேன். உங்க யாராலயும் என்னோட இதை கூட புடுங்க முடியாது" என்று அவர் சொல்லும் போதே, அவரின் தலை முடியை பிடிங்கி, "தோ புடிங்கிட்டேனே" என்று காட்டி இருந்தான் காகேஷ்.

 

எல்லாரோடைய கண்களும் விரிந்தது.

 

"கொழுப்பை பாரேன் உன் அண்ணாக்கு என்ன மா உன் அப்பா கிட்ட பேசுறான்" என்று மயூரன் ஹம்ஸாவின் செவிகளில் சொல்ல, "அதான் அவரு எல்லாருக்கும் முன்ன இருக்கார்" என்கிற ஹம்ஸாவை பார்த்து, "நீ ஏன் டா அண்ணான்னு கூப்பிட மாட்டேங்குற?" என்று மிக முக்கியமான கேள்வியை கேட்க, "அதெல்லாம் அப்படி தான்" என்று சொல்லி இருந்தான்.

 

"டேய்" என்று பக்ஷி அடிக்க கை ஓங்கும் முன்னமே, அவரின் கையை பிடித்து, "ஒரு குற்றவாளி நீ, ஏசிபியை அடிக்க கை ஓங்குனதை வச்சே உன்னோட பெயில் கேன்சல் பண்ண போறேன் நான்... யோவ் போட்டோ கிராபர் இதெல்லாம் படம் பிடிச்சியா? இதுக்கான விடியோவும் எடுத்த தானே?" என்று கேட்க, "எடுத்துட்டேன் சார்" என்றான் அவன்.

 

பக்ஷி அதிர்ந்து ஒரு அடி பின்னால் செல்ல, அப்படியே பார்த்து காகேஷின் தோளை தட்டி, "சபாஷ்! நீ ஒருத்தன் தான் டா என்னை மாதிரி பிறந்து இருக்க, ஹம்சா கூட என்னை மாதிரி இல்ல... அடுத்து இந்த ஊரை நீ தான் ஆளனும்... இந்த ஊரு பொண்ணுங்க..." என்று அவர் பேசும் போதே, "இன்னொரு வார்த்தை பேசுனா இங்கையே கொன்னு புதைச்சிருவேன்... என்ன என்னை பார்த்தா உன்னை போல பொம்பளை பொறுக்கி மாதிரி இருக்கா? கவிதா புள்ள டா நான்... என் அம்மா அவங்க உயிரை கொடுத்து என் உயிரை பிழைக்க வச்சாங்க... உன்னை கொன்னு போட்டா தான் என் அம்மா ஆத்மா சாந்தி அடையும்" என்று சொன்னவன், அங்கிருந்த நவநீதனை பார்த்து, "இவனை பிடிச்சிக்கிட்டு போங்க திருப்பி" என்றான்.

 

"எஸ் சார்" என்று அவரும் மீண்டும் பக்ஷியை அழைத்து சென்றார்.

 

அடுத்து திரும்பியது என்னவோ ராஜேஸ்வரியின் புறம் தான்.

 

"உங்க கிட்ட தான் கண்டிப்பா பேசணும்னு இருந்தேன். என்ன சொன்னீங்க அன்னைக்கு பிச்சைக்காரின்னு தானே சொன்னிங்க சிட்டுவ? உங்க கிட்ட எவளோ சொத்து இருக்கு? உங்களை விட பல மடங்கு பணக்காரி தான் இவ தெரியுமா உங்களுக்கு? இதுவே என் பெரியப்பா மட்டும் உயிரோட இருந்து இருந்தா இவ சீமந்தம் மட்டும் இல்ல ஷ்ராவனி பிறந்ததில் இருந்து இப்போ இவ மாசமா இருக்குற வரைக்கும் திருவிழா மாதிரி கொண்டாடி இருப்பார். அதை விட அனாதைன்னு வேற சொன்னீங்க தானே? சரி நாங்க யாரும் அவளுக்கு இல்லன்னு வச்சுக்குவோம்.. உங்க மகன் தாலி கட்டி தானே அவ கூட இருக்கான். அப்புறம் எப்படி அவ அனாதை ஆவா? சந்தோஷ பாத்துக்கோங்க என் பெரியப்பா இல்ல... இருந்து இருந்தார்ன்னு வைங்க இன்னைக்கு நீங்க இருக்க மாட்டிங்க" என்றவன் ஜடாயுவின் புறம் திரும்பி, "அன்னைக்கே இதை எல்லாம் நான் பேசி இருப்பேன். இவ தான் வேணாம்னு சொல்லிட்டா... அது என்ன டா உன் அம்மாக்கு பிராண்ட்ன்னா குத்துதா? இன்னைக்கு அவங்க பேச மாட்டாங்க ஏன்னா நான் அவ அண்ணா அப்படி தானே? அது எனக்கும் அவளுக்கும் எங்க தாத்தாங்க சாகும் பொது தான் தெரியும். அதுக்கு முன்னாடி வரை நாங்க பிரண்ட்ஸ் தான். ஏன் இப்பவும் பிரண்ட்ஸ் தான். இதுவே அண்ணான்னு அவ என்னை நினைச்சாலும் சரி தங்கச்சின்னு அவளை நான் நினைச்சாலும் சரி எங்களால இவளோ ப்ரீயா எல்லாத்தையும் ஷேர் பண்ண முடியாது" என்று சொல்லி இருந்தான்.

 

மீண்டும் ராஜேஸ்வரியின் புறம் திரும்பி, "உங்களை மாதிரி ஆளுங்க எல்லாம் திருந்தவே மாட்டிங்கனு தெரியும். ஆனாலும் சொல்றேன். இதோட சிட்டு ஷ்ராவனியை பத்தி ஒரு வார்த்தை பேச கூடாது. நீங்க கேட்கவே வேண்டாம் ஷ்ராவனிக்கு செய்ய வேண்டிய எல்லாமே நான் தாய்மாமாவா கண்டிப்பா செய்வேன்" என்று அவன் சொல்லவும், "அது என்ன செய்வேன் செய்வோம்" என்று சொல்லி இருந்தான் ஹம்சா.

 

"உரிமை போராட்டமா?" என்று மயூரன் அவனின் காதை கடிக்க, "கண்டிப்பா" என்று தோளை உலுக்கி இருந்தான்.

 

ஹம்சாவிடம் முன்னமே காகேஷ் சொல்லி தான் வைத்து இருந்தான். அன்றைக்கு ராஜேஸ்வரி பேசியது எல்லாம் தெரிந்த பிறகு ஹம்சா காகேஷின் முன் தான் வந்து நின்றான்.

 

"நீங்க வாங்க நம்ப போய் அக்காக பேசுவோம்" என்று அவனின் முன் கைகளை கட்டி வந்து நின்றான்.

 

"இங்க பாரு நீ அந்த அம்மா ராஜேஸ்வரி கிட்ட பேசுற வேலை எல்லாம் வச்சிக்காத... புரியுதா? என்னனு பேசுவ? அதான் ஜடாயு சிட்டுக்காக இருக்கான்ல... அதுவும் இப்போ ஹன்சிகா வாழ்க்கையும் சேர்ந்து இருக்கு... சோ நம்ப கொஞ்சம் அமைதியா தான் போகணும். நேரம் கிடைக்கும் பொது நான் பேசிக்குறேன்" என்று அவனையும் அடக்கி தான் வைத்து இருந்தான்.

 

அவன் நினைத்தது போலவே ராஜேஸ்வரி, "ம்கூம் அப்படியே ரொம்ப நல்ல குடும்பம் தான்... அதான் என் புள்ளைக்கு ட்ராக் கொடுத்து தானே உன் தங்கச்சி கூட இருந்தா" என்று ஹன்சிகாவை தான் குறி வைத்து பேசி இருந்தார்.

 

ஹன்சிகாவிற்கு மேலும் மனம் அடி வாங்கியது.

 

முன்னமே அவளின் மானம் தான் சந்தி சிரிக்கிறதே! அவளால் இப்பொது வரை சொன்ன உண்மையையே தாங்கி கொள்ள முடியவில்லை. அவள் தெய்வமாக நினைத்த தந்தை இன்று ராக்ஷசனாக தெரிந்தார்.

 

அவளை அந்த அடி அடித்து வெளுத்து வாங்கியவன் தான் அவளின் முதல் அண்ணா. அந்த உரிமையில் தான் அடித்து வேறு இருக்கிறான். ஆனால் அவள் செய்து வைத்த காரியம்?

 

மேலும் தொடர்ந்த ராஜேஸ்வரியோ, "அக்கா ஸ்கூல் பிரின்சிபால், அண்ணா ஏசிபி, சின்ன அண்ணா இன்ஸ்பெக்டர், ஆனா தங்கச்சி கிரிமினல்... கேட்கவே ரொம்ப நல்லா இருக்கு... என் கிட்ட பேச வந்துட்டான்" என்று அவர் மேலும் பேச, அவனோ அப்போதும் சளைக்காமல், "எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல, சாஹிளை கேஸ் கொடுக்க சொல்லுங்க இப்பவே அவளை உள்ள போடுறேன்" என்றவன், சாஹீலின் புறம் திரும்பி, "என்ன டா சாஹில் கேஸ் கொடுக்குறியா?" என்று வேறு கேட்டு இருந்தான்.

 

அவன் தான் முன்னமே முடியாது என்று சொல்லி விட்டு இருந்தானே.

 

"உன் அண்ணாக்கு காகேஷ்ன்னு பேரு வச்சதுக்கு கருப்பணசாமின்னு பேரு வச்சி இருக்கலாம் டா.. எப்படி திமிரா மீசையை முறுக்கிட்டு என் பெரியம்மா கிட்ட பேசுறாரு பாரு" என்றவனை பார்த்து சலிப்பாக தலையசைத்தான் ஹம்சா.

 

"அதான் வேண்டாம்னு சொல்லிட்டேனே" என்று சாஹில் முடித்து கொள்ள, "கேட்டிங்க தானே, உங்க பிள்ளை தான் கேஸ் கொடுக்க மாட்டேங்குறான். என்ன பண்றது?" என்று அவனும் கைகளை கட்டி கொண்டு நிற்கவும், "ஹான் என் பையன் வாழ்க்கையையே அழிச்சிட்டா உன் தங்கச்சி" என்று சொல்லவும், அவனோ சத்தமாக சிரித்து, "ஓஹ் மை காட்.. நீங்க உங்க பிள்ளைங்க வாழ்க்கை எல்லாம் பார்த்து கவலை படுறீங்களா? ஜடாயு சிட்டுவை லவ் பண்றது தெரிஞ்சும் அவனுக்கு இன்னொரு பொண்ணை பார்த்தவங்க தானே நீங்க? சரி ஹன்சிகாவை அவனுக்கு பிடிக்கலைன்னா ஒன்னும் பிரச்சனை இல்ல.. சாஹிளை விவாகரத்து கொடுக்க சொல்லுங்க" என்று சொல்லவும், சாஹிலும் சரி ஹன்சிகாவும் சரி இருவரும் காகேஷை பார்த்தனர்.

 

"என்ன டா சாஹில் அவளுக்கு விவாகரத்து கொடு" என்று ராஜேஸ்வரி சொல்லவும், "அம்மா கல்யாணம் இன்னும் ரெஜிஸ்டர் ஆகல... முதல்ல ரெஜிஸ்டர் ஆகட்டும் அப்புறம் பார்க்கலாம். என் வாழ்க்கையை பத்தி நீங்க கவலை பட வேண்டாம்" என்று முடித்து விட்டான்.

 

சாஹிளுக்கு அவனும் ஹன்சிகாவும் இப்படி காட்சி பொருள் அவதில் விருப்பம் இல்லை. அன்று கூட அவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்கள் இருந்தார்கள் என்கிற ஒரே காரணத்திற்காக தான் அவளை காகேஷ் அடிக்கும் பொது கூட அமைதியாக இருந்தான். அதுவும் அவளது அண்ணா தானே அடிக்கிறான் அவனுக்கு இல்லாத உரிமையா என்ன? இதுவே வேறு யாரவது அவளின் மீது கை வைத்து இருந்தால் என்ன செய்து இருப்பான் என்று அவனுக்கும் தெரியாது. தெரிந்து கொள்ளவும் அவன் விரும்பவில்லை.

 

"உங்க மகனே சொல்லிட்டான். இதோட இப்படி எல்லாம் பேசுற வேலை வச்சிக்காதீங்க..." என்று சொல்லி முடித்து கருணாகரன் புறம் திரும்பியவன், "சார் இதெல்லாம் எவிடென்ஸா கன்சிடர் பண்ணுங்க... இன்னும் சில எவிடென்ஸ் நான் கலெக்ட் பண்ணி கொடுக்குறேன். அந்த ஆளை உள்ள தள்ளனும்... நீங்க ஒரு ஜட்ஜ் உங்க முன்னாடியே அவரு இப்படி பேசி இருக்கார்... எல்லாமே ரெகார்ட் ஆகி இருக்கு... ப்ளீஸ் ஹெல்ப் அஸ்" என்று சொல்லி இருந்தான்.

 

"நீங்க கேஸை ப்ரொசீட் பண்ணுங்க ஏசிபி நான் பார்க்குறேன்" என்று சொல்லவும், அந்த மணக்கோலத்தில் கூட அவன் அவருக்கு சல்யூட் அடித்தான்.

 

அவனை பார்த்து புன்னகைத்தவர், பரியின் புறம் திரும்பி, "பையனை பார்த்துக்கோ மா.. அவன் தான் பெரிய பையன். நீ தான் பெரிய மருமக... பார்த்து பொறுப்பா நடந்துக்கோ என் மருமக மாதிரி" என்று சிட்டுவை புகழவும் கருணாகரன் தவறவில்லை.

 

ராஜேஸ்வரி அதற்கு மேல் அங்கே இருப்பாரா என்ன அங்கிருந்து நகர்ந்து விட, கருணாகரனும் அங்கிருந்து நகர்ந்து விட்டு இருந்தார்.

 

அதே சமயம் அப்படியே மயங்கி சரிந்தாள் ஹன்சிகா.

 

அத்தியாயம் 63

 

ஹன்சிகா அப்படி மயங்கவும் அவளை தாங்கியது என்னவோ பரினீத்தி தான்.

 

"ஹன்சி" என்று குயிலும் மைனாவும் கூட அவளை தாங்கி பிடிக்க, அனைவரின் கண்களும் இப்பொது அவளின் புறம் படிந்தது.

 

வந்திருந்த கொஞ்ச பேரை மட்டும், "நீங்க எல்லாரும் சாப்பிட போங்க" என்ற ஜடாயு, அவன் வைத்து இருந்த கேட்டரிங் மக்களை அழைத்து அனைவரையும் உபசரிக்குமாறு பணித்து இருந்தான்.

 

மயூரனும் ஹம்சா கூட அவளை நோக்கி செல்ல, ஆனால் அவளை தாங்க வேண்டியவன் அப்படியே கற்சிலையை போல் நின்று இருந்தான்.

 

அவளை இறுதியாக கைகளில் ஏந்தியது என்னவோ காகேஷ் தான்.

 

எத்தனை சுமைகளை தான் அவனும் சுமப்பான்? தெரிந்தோ தெரியாமலோ சிறு வயதில் இருந்தே சிட்டுவிற்கு அரனாய் இருந்து இருக்கிறான். இப்பொது ஹம்சா ஹன்சிகாவின் பொறுப்பும் அவன் புறம் இருந்தது.

 

அவளை கைகளில் ஏந்தி சாஹில் புறம் திரும்பி, "டேய் டாக்டர் உன் கடமையை செய்யவாது வா டா" என்று அவனை பார்த்தும் சொல்லி விட்டு தான் அருகில் இருந்த மணமகனின் அறைக்கு அவளை ஏந்தி சென்று இருந்தான்.

 

ஜடாயுவோ அவனின் அருகில் சென்று, "எல்லாத்தையும் சுமக்குறது ரொம்ப கஷ்டமா இருக்கு தானே?" என்று கேட்டவனை பார்த்து, "இல்லன்னு பொய் சொல்ல மாட்டேன்.  முடியல டா" என்று சொன்னவன் அப்படியே ஹன்சிகாவை மெத்தையில் கிடத்தி இருந்தான்.

 

சாஹிலோ பொறுமையாக தான் வந்தான். அவனுக்கு ஓரளவு புரிந்து இருந்தது, அவளுக்கு நடந்த அனைத்தையும் கிரகித்து கொள்ளவே நேரம் தேவை படுகிறது. ஆதலால் தான் மயங்கி விழுந்து இருக்கிறாள் என்று!

 

வந்தவன், அருகில் இருந்த தண்ணீர் பாட்டலை எடுத்து அவளின் முகத்தில் தெளித்து விட, அவளின் கண்களும் கொஞ்சம் சுருங்கியது.

 

"அவளோட கன்னத்தை தட்டுங்க" என்று பரியை பார்த்து சொல்லவும், அவளும், "ஹன்சி... ஹன்சி" என்று தட்ட, கண்களை திறந்து இருந்தாள்.

 

விழிகளை திறந்தவளுக்கு இன்னும் கண்கள் கரித்து கொண்டு வந்தது. கதறி அழ வேண்டும் போல இருந்தது.

 

"ஏதாச்சு சாப்பிடுறியா? ரொம்ப தலை சுத்துதா?" என்று பரி கேட்கும் போதே, குயில் தான் அவளுக்கு அதற்குள் பழரசம் ஒன்றை எடுத்து கொண்டு வந்து இருந்தாள்.

 

"இதை குடி" என்று அவள் கொடுக்கவும், ஜடாயுவுக்கு இறுக்கமான சூழ்நிலையை கொஞ்சம் தளர்த்த வேண்டும் போல் இருந்தது.

 

சிட்டுவையும் ஹம்சாவையும் பார்த்தவன், "ஏன் டி அக்கா அண்ணா இரண்டு பேரு குத்து கல்லு மாதிரி நிக்குறீங்க.. அங்க பாரு நேத்து வந்த பொண்ணுங்க எவளோ அழகா மருமகளா வேலை பாக்குறாங்க" என்று சீண்டவும், "நீங்க கூட இந்த வீட்டு மாப்பிள்ளை தான் தெரியுமா?" என்று ஹம்சா அவனை பார்த்து கேட்டு இருந்தான்.

 

அவனோ குரலை செருமி, "நான் சாஹிலோட அண்ணாவும் தான் டா... எனக்கு தான் அவ மேல கோவம் இருக்கு... உங்களுக்கு எல்லாம் என்ன?" என்று கேட்க, "நான் கூட சாஹிலோட அண்ணி தான்... அண்ணி அம்மா மாதிரி தெரியுமா?" என்று சிட்டுவும் பதில் கொடுக்க, ஹன்சிகா அப்போதும் அவளால் தான் பிரச்சனை என்று நினைத்து கொண்டு, "என்னால எதுவும் பிரச்சனை வேண்டாம் மாமா" என்று கூறி இருந்தாள்.

 

முதல் முறையாக ஜடாயுவை மாமா என்று அழைக்கிறாள். அவளின் மாற்றத்தின் முதல் படி!

 

"உன்னால எந்த பிரச்னையும் இல்ல" என்றவன் நெருங்கி ஹன்சிகாவின் தலையை வருட, "ஆமா ஆல்ரெடி நிறைய பிரச்சனை பண்ணி தானே வச்சி இருக்கா" என்கிற சாஹீலின் குரலில் சுரத்தே இல்லை.

 

"இவன் வேற... கொஞ்சம் அமைதியா இரு டா" என்று மயூரன் கூட வாய் விட்டே சொல்லி இருந்தான்.

 

ஹன்சிகாவிற்கு அழ வேண்டும். எப்படி அழுவது என்றும் தெரியவில்லை. எல்லாரும் சுற்றி இருக்க, அவளுக்கு ஒரு வித அழுத்தம்.

 

"அழணும் போல இருக்கா?" என்று சரியாக கேட்டான் ஜடாயு. அவனை நிமிர்ந்து பார்த்தவள், ஆமாம் என்று தலையசைத்தாள்.

 

"ஆனா பாருங்க எனக்கு கட்டி பிடிச்சி அழ கூட யாரும் இல்ல... ஏதோ எல்லாரும் இருந்தும் முதல் முறை அனாதை போல பீல் பண்றேன்" என்று சொன்னவளின் கண்களில் இருந்து இரு சொட்டு கண்ணீரும் விழுந்து விட்டது.

 

"ஏன் அப்படி எல்லாம் பேசுற ஹன்சி? நாங்க எல்லாம் இல்லையா என்ன? எங்க கூட தானே இரண்டு வாரம் இருந்த" என்று குயில் அவளை அதட்டவும், "அப்போ பிராண்ட்...இப்போ? என்னோட அண்ணியா பேசுறீங்க? அண்ணின்னு கூட கூப்பிட முடியாது. என் அண்ணாங்களை கூட இப்போ அண்ணான்னு கூப்பிட முடியாது. நான் எல்லாம் உண்மையாவே ஒரு சாபக்கேடு தான்" என்றவள் கைகளை முகத்தால் முடி கொண்டு அழ ஆரம்பித்தே விட்டாள்.

 

அவளால் தாங்கவே முடியவில்லை. அவள் தெய்வமென நினைத்த தந்தை தான், அவளின் அன்னையை கொன்றே இருக்கிறார் என்று தெரிந்த தருணமே அவளின் மொத்த நாடியும் அடங்கி விட்டது. அவரை போல் தான் அவளும் வளர்ந்து விட்டாலோ என்றும் தோன்றியது. தோன்றியது என்ன உறுதியே செய்து விட்டாள்.

 

அவளின் அழுகையை யாரும் நிறுத்த வில்லை. சில நேரம் அழுவது தான் சிறந்த மருந்து. அவளின் மனதில் இருக்கும் பாரத்தை இறக்கி வைக்கட்டும் என்று நினைத்து இருந்தார்கள். நினைத்தது போலவே கொஞ்ச நேர அழுகைக்கு பின் அவளுக்கு மனது லேசாக தான் இருந்தது.

 

முகத்தில் இருந்து கையை எடுத்தவள், "சாரி... எனக்கு அதெல்லாம் சொல்ல தகுதி இல்லன்னு தெரியும். இருந்தாலும் சாரி" என்றவள் யாரிடம் மன்னிப்பு கேட்கிறாள் என்று கூட தெரியவில்லை.

 

எல்லாரிடமும் பொதுவாக தான் சொல்லி இருந்தாள்.

 

"குமரகத்துக்கு கொஞ்ச நாள் வந்து இருக்குறியா?" என்று ஜடாயு கேட்க, "இல்ல பரவால்ல.. நான் சாஹில் இருக்குற வீட்டுக்கே போறேன். என்னோட தண்டனையை அனுபவிச்சி தானே ஆகணும்" என்று சொல்லவும், "நல்ல மாற்றம் தான். ஆனா அதுக்காக எல்லாம் தண்டனை கிடைக்காம இருக்காது" என்று அழுந்த சொல்லி இருந்தான் சாஹில்.

 

ஜடாயு கூட அவனை பார்த்து, "ஏன் டா இப்படி? என்னவோ பண்ணி தோலை... அவ பத்திரம்" என்று சொல்ல, அவன் எதுவும் பேச கூட இல்லை.

 

"நான் அவளை கூட்டிட்டு போறேன்" என்று சொல்லவும், அவளும் மெத்தையில் இருந்து எழுந்து விட்டு இருந்தாள்.

 

தப்பி தவறி கூட அவள் காகேஷ், ஹம்சா, சிட்டுவின் புறம் திரும்பவில்லை.

 

அவள் செல்லும் சமயம் அவளின் கையை பற்றி இருந்தது ஒரு கரம்.

 

சிட்டு தான் பிடித்து இருந்தாள்.

 

ஆழ்ந்த மூச்சை எடுத்தவள், "உடம்பை பார்த்துக்கோ, ஏதாவதுனா குமரகத்துக்கு வா... சும்மா தயங்கி அங்கையே இருக்கணும்னு அவசியம் இல்ல.. தண்டனை உனக்கு தான் இருக்கனும்.. உனக்குள்ள இப்போ வளருற குழந்தைக்கு கூடாது" என்றவள் இறுதி வாக்கியத்தை சொல்லும் பொது சாஹிளை பார்த்து சொல்லி இருந்தாள். அதில் என் தங்கைக்கு தான் தண்டனை கொடுக்க வேண்டும் அவளின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அல்ல என்கிற செய்தியும் ஒளிந்து தான் இருந்தது.

 

அதற்குள் மைனாவும் சென்று அவளுக்கு சில பழங்களை எல்லாம் போட்டு, "இதை எடுத்துட்டு போ.. மதியம் சாப்பாடு எல்லாம் கொடுத்து அனுப்புறோம்" என்று அவளின் கையில் திணித்து இருந்தாள்.

 

அவளால் அவர்கள் காட்டும் பாசத்தை கூட ஏற்று கொள்ள முடியவில்லை. தொண்டை அடைத்தது.

 

"தேங்க்ஸ்" என்று அவள் சொல்லவும், மயூரன் வந்து, "இப்படி எல்லாத்துக்கும் தேங்க்ஸ் சொன்னா.. சாரி தேங்க்ஸ்லேயே வாழ்க்கை முடிஞ்சிரும்... நல்ல படியா குட்டி சாஹில் இல்ல ஹன்சி நல்ல படியா வரணும்" என்று சொல்லவும், சாஹிலோ, "டேய் டேய்.. நீ முதல்ல சீக்கிரம் கல்யாணம் பண்ணு" என்று சொல்லவும், "என்னோட மைனா ஓகே சொன்னா எப்போ வேணா வச்சிக்கலாம்" என்று சொல்ல, மைனா அதிர்ந்து போய் அவனை பார்த்தாள்.

 

"சரி தான்.. சீக்கிரம் நல்ல செய்தி சொல்லு டா" என்று சொன்னவன் அங்கிருந்து நகர்ந்து விட, அவனின் பின்னால் அப்படியே ஹன்சிகாவும் சென்றாள்.

 

"சரி சரி அடுத்து பரியை குமரகத்துக்கு கூப்பிட்டுட்டு வாங்க" என்று சிட்டு சொல்லவும் தான், அனைவரும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று உணர்ந்தார்கள்.

 

மைனா அதற்கு பின் மயூரன் புறம் திரும்பவே இல்லை.

 

இதோ குமரகத்தின் முன் நின்று இருந்தாள் பரி. காகேஷின் கைகளை பிடித்து கொண்டு அதுவும்!

 

சிட்டுவோ புன்னகையுடன் ஆரத்தி எடுத்து கொண்டு வந்திருந்தாள்.

 

இருவருக்கும் ஆரத்தி எடுத்துட்டு விட்டு, "உள்ள வாங்க" என்று அவள் சொல்ல, இதோ குமரத்திற்குள் முதல் முறையாக அந்த குமரகத்தின் அரசனாக நுழைந்து இருந்தான் காகேஷ்.

 

அத்தியாயம் 64

 

"உன்னோட ரூம் ரெடி பண்ணி வச்சி இருக்கோம் டா" என்று ஜடாயு சொல்ல, "வாவ் மச்சான் எனக்காக முதல் பகல் ரெடி பண்ணி வச்சி இருக்கியா?" என்று காகேஷ் அவனின் தோளில் கையை போடவும், அவனோ முறைத்து பார்த்து, "பைத்தியக்காரா ஏன் டா இப்படி அலையுற? நான் உன்னை மட்டும் தான் ரூம் உள்ள போக சொன்னேன். இதோட நீயும் இங்கையே இருக்கலாம்னு... முதல் போகலாம் மூஞ்ச பாரு" என்று அவனை பார்த்து சொல்லி இருந்தான்.

 

"யாரு நான் அலையுறானா? டேய் டேய் கலெக்டர் உனக்கு மனசாட்சி இருக்கா டா? ஒண்ணுத்துக்கு இரண்டு ரிலீஸ் பண்ண போற இப்போ நீ.. ஆனா நான்? இன்னும் ஒன்னு கூட விதைக்கல... இன்னும் நான் அதுக்கான துவக்க புள்ளி கூட வைக்கல டா... அன்னைக்கு உங்க முன்னாடி பண்ண கிஸ் அவளோ தான்.. இந்த பார்ட் அவ கிட்ட கூட என்னை விடல தெரியுமா?" என்று சொல்லவும், "அவங்களை கிட்ட விட வேணான்னு சொன்னதே அண்ணா தான்" என்று மயூரன் ஒரே போடாக போட, "அட சண்டாளா" என்று காகேஷ் அவனின் முதுகிலே நான்கு அடி வைத்தான்.

 

"டேய் லூசு விடு! நான் மட்டும் அப்படி சொல்லலைனா நீ இந்நேரம் விதையை விதைச்சி இருப்ப" என்று சொல்லவும், அனைவரும் சத்தமாக சிரித்து விட்டனர்.

 

"இப்படி தான் நீங்க இரண்டு பேரும் பேசுவீங்களா?" என்று சிட்டு கேட்டுவிட்டு, பரியை பார்த்து, "நீ கெஸ்ட் ரூம் யூஸ் பண்ணிக்கோ" என்று சொல்லவும், "எதுக்கு எதுக்கு அவ கெஸ்ட் ரூம் யூஸ் பண்ணனும்? என் கூட என் ரூம்ல தான் இருப்பா" என்று காகேஷ் வந்து பரியின் கையை பிடிக்க, "டேய் காக்கா... உனக்கும் அவளுக்கு தோப்பு வீட்ல தான் டா பர்ஸ்ட் நைட்.. கொஞ்சம் அவ ரெஸ்ட் எடுக்கட்டும்... நீ சரியான அலஞ்சானா இருக்காத" என்று சொல்லி பரியின் கையை பிடித்து கொண்டு அழைத்து சென்று விட்டாள்.

 

காகேஷோ முகத்தை பாவமாக வைத்து கொள்ள, ஜடாயு, மயூரன் மற்றும் ஹம்சா தான் தோளை உலுக்கி கொண்டு சென்று விட்டனர்.

 

"நாங்களும் கிளம்புறோம்" என்று குயில் சொல்ல, "நான் கொண்டு விடுறேன்" என்று ஹம்சா சொல்லவும், "நான் எதுக்கு அப்போ நந்தி மாதிரி?" என்று மைனா கேட்க, "அப்போ நான் வரவா?" என்று கேட்ட மயூரனின் காதை பிடித்து இழுத்து, "வேலை இருக்கு வா டா" என்று இழுத்து சென்றான் ஜடாயு.

 

இங்கோ மைனா மற்றும் குயிலை அவர்களின் வீட்டின் வாசலில் இறக்கி விட்டவன், மைனாவை பார்த்து, "நீங்க போங்க... அவ வருவா" என்று ஹம்சா சொல்லவும், அவளோ சிரித்து கொண்டே சென்று விட்டாள்.

 

குயிலோ கண்கள் விரித்து, "எதுக்கு இப்போ என்னை பிடிச்சி வச்சி இருக்கீங்க?" என்று கேட்க, "நான் இன்னும் உன்னை தொட கூட இல்ல டி... எங்க பிடிச்சேன்?" என்று கேட்கவும், அவளோ, "சரி இப்போ என்ன?" என்று கேட்கவும், "ஏன் டி லவ் தான் சொல்லிட்டே தானே, ஒரு ஹக் ஒரு கிஸ் எதுவுமே இல்லாம ட்ரையா இருக்கு" என்று அவன் சொல்ல, அவளோ விழி விரித்து, "ஏதே? என்ன அன்னப்பறவை காலைலயே போதையா?" என்றவளின் கையை பிடித்து இழுத்து அவளை அவனின் மடிக்கு கிடத்தி இருந்தான்.

 

அவளோ அதிர்ந்து பார்க்க, "எஸ் போதை தான்... காதல் போதை என் கோதை குயிலால" என்றதும், "உங்களுக்கு முத்து போயிருச்சு" என்றவள் அவனிடம் இருந்து விலகி, "சாயந்திரம் வீட்டுக்கு வா டி" என்று சொல்லவும், "வர மாட்டேன்" என்று ஓடவும், "உன்னை வர வைப்பேன்" என்று சொல்லிவிட்டு சென்றான்.

 

மாலை சிட்டு தான் குயிலை வீட்டிற்கு அழைத்து இருந்தாள்.

 

"ஐயோ எதுக்கு மேம்?" என்று சொல்லவும், "இல்ல உங்கிட்ட ஒரு விஷயம் பேசணும் வீட்டுக்கு வா" என்று மட்டும் சொல்லி வைத்து விட்டாள்.

 

குயில் குமரகத்திருள் உள்ளே நுழைய அவளின் கண்களில் பட்டது என்னவோ ஷ்ராவனியும் ஹம்ஸாவும் தான்!

 

'ஆத்தி இந்த அன்னப்பறவையா?' என்று மனதிற்குள் நினைத்து கொண்டே ஸ்ராவனியை பார்த்து, "ஷ்ராவு பேபி, அம்மா எங்க?" என்று கேட்க, "நான் போய் கூட்டிட்டு வரேன் ஆண்டி" என்று உள்ளே ஓடி விட்டாள்.

 

'ஐயோ இவ வேற ஓடிட்டாளே! இந்த அன்னப்பறவை வேற நம்மளையே பார்குறானே' என்று நினைத்து கொண்டே அருகில் இருந்த இருக்கையில் அமர, ஹம்சா அடிமேல் அடி அவளின் அருகே தான் வந்தான்.

 

'ஐயோ வருதே அன்னப்பறவை வருதே' என்று அவளின் மனது வேறு பாட்டெல்லாம் பாட, அவனோ அவளின் அருகே வந்து அமர்ந்து விட்டான்.

 

சட்டென நிமிர்ந்து அவனை தான் பார்த்தான்.

 

"என்ன சார்?" என்று கேட்க, "சாரா? அன்னப்பறவைன்னு தானே கூப்பிடுவே" என்று சொல்ல, "சார் அது ஏதோ..." என்று அவள் இழுக்க, "சரி நான் சொன்னதுக்கு பதில் என்ன?" என்று கேட்கவும், "என்ன கேட்டீங்க?" என்று தெரியாதது போல் கேட்க, "ஓஹ்! நான் என்ன கேட்டேன்னு உனக்கு நினைவு இல்லல அதனால நான் நினைவு படுத்துறேன்" என்று சொன்னவன், அவளின் கன்னம் பற்றி அவனின் இதழ்கள் பதிக்க, அப்போது வந்த ஸ்ராவனியோ, "அம்மா மாமா குயில் ஆண்டியை கிஸ் பன்றாரு" என்று அந்த வீட்டிற்கே கேட்கும் படி கத்தி இருந்தாள்.

 

அவள் கத்திய கத்தில் காகேஷ், பரி, ஜடாயு, மயூரன் என்று அனைவருமே வந்து விட்டார்கள்.

 

"போச்சு போச்சு" என்று குயில் அவளின் முகத்தை தாழ்த்தி கொள்ள, "கல்யாணம் உன் அண்ணாக்கு தானே டா ஆச்சு... அவரு கிஸ் கொடுத்தாருன்னா கூட ஒரு லாஜிக் இருக்கு... எப்படி டா நீ?" என்று மயூரன் கேட்க, "அதான் நீ இன்னும் இப்படியே இருக்க" என்று பதில் அளித்து இருந்தான்.

 

"பார்த்தீங்களா அண்ணா குசும்பை... இந்த அண்ணா தம்பி இரண்டு பேருமே ஒரே மாதிரி தான் இருக்கானுங்க" என்று மயூரன் சொல்லவும், அவனின் அருகே வந்த காகேஷ், "எல்லாத்துக்கும் முன்னோடி உன் அண்ணா தான் டா" என்றான்.

 

ஜடாயுவோ, "நிறுத்துங்க டா" என்றவன், "அடியேய் சீக்கிரம் இந்த காக்காவை பண்ணை வீட்டுக்கு அனுப்பி விடு டி" என்றான் சிட்டுவை பார்த்து.

 

"உட்காருங்க" என்ற சிட்டு, பின்பு உள்ளே சென்று மற்றோரு பையை எடுத்து கொண்டு வந்தாள்.

 

அதிலும் நகைகள் தான் இருந்தன.

 

"இது குழலி சித்தியோடது... கவிதா சித்தியோட நகை எல்லாத்தையும் தான் நான் பரிக்கு கொடுத்துட்டேன். குழலி சித்தியோட நகையை ஹன்சிகா ஹம்சாக்கு தான் பாதியா பிரிச்சி தரணும். இல்ல ஹம்சா என்ன விருப்ப படுறனோ அதையே பண்ணலாம்" என்று அவனின் முன்னால் வைக்க, அவனோ ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டு, குயிலை பார்த்து, "உனக்கு என்ன வேணுமோ எடுத்துக்கோ" என்றான்.

 

அவளோ, "இல்ல எனக்கு எதுவும் வேணாம்... ப்ளீஸ் நீங்க கல்யாணத்துக்கு அப்புறம் ஏதாவது வாங்கி கொடுத்தீங்கனா வேணா வாங்கிக்குறேன்" என்று சொல்லி விட்டு இருந்தாள்.

 

"அப்போ எல்லாத்தையும் ஹன்சிகாவுக்கே கொடுத்திருங்க" என்று அவன் சொல்ல, இருவரையும் பார்த்து விட்டு, "இங்க பாருங்க நானே இரண்டு பேருக்கும் சமமா பிரிச்சி கொடுப்பேன். ஆனா உனக்கு ஏதாவது இஷ்டம் இருந்தா சொல்லுன்னு சொல்ல தான் உங்கிட்ட கேட்டேன். எல்லாத்தையும் அவளுக்கு கொடுக்கணும்னு அவசியம் இல்ல" என்று அவள் சொல்ல, "அவளுக்கு யூஸ் ஆகும் அக்கா... குழந்தையை வேற வச்சிக்கிட்டு இருக்கா... அவளோட சாஹிலோட வாழ்க்கை எல்லாம் எப்படி இருக்கும்னு தெரியல... குழந்தை வேற இருக்கு" என்று அவன் சொல்லும் போதே மயூரனுக்கும் ஜடாயுவிற்கும் தான் முகம் கருத்து விட்டது.

 

ஹம்சா என்ன சொல்ல வருகிறான் என்று அவர்களுக்கு புரியாமல் இல்லை. சாஹில் அவளை விட்டுவிட்டால் அவளுக்கு என்று வாழ வழி வேண்டுமே அதை தான் இப்படி சொல்லுகிறான் என்று புரிந்தது.

 

"ஹன்சி வாழ்க்கையை நம்ப இருக்கும் பொது யாரும் ஒன்னும் பண்ண முடியாது... நீங்க குயிலுக்கு என்ன வேணுமோ எடுங்க" என்று பரி சொல்லவும், அவனோ ஒரு முறை யோசித்து விட்டு, பின்பு ஆழ்ந்த மூச்சை எடுத்தவன், "சரி பாதியா நீங்களே பிரிச்சி கொடுத்துருங்க" என்று சொல்லி இருந்தான்.

 

"பாரு டா அக்கா சொல்லி கூட கேட்காத என் தம்பி அவனோட அண்ணி சொன்னதும் கேட்குறான்" என்று சிட்டு கூட அவனை சீண்டினாள் தான்.

 

"ஐயோ மேம்" என்று பரி பதற, "அடியேய் பதறுனதெல்லாம் போதும், நீ போ ரெடி ஆகு... நம்ப பண்ணை வீட்டுக்கு கிளம்பலாம்" என்று காகேஷ் பேச, "ஆமா சீக்கிரம் கிளம்புங்க இல்லனா தம்பி முடிஞ்சி அண்ணா எங்களுக்கு லைவ் ஷோ காட்டுவார்" என்ற மயூரனின் முதுகில் ஒன்று வைத்து விட்டு தான் சென்றான்.

 

இதோ அப்படி இப்படி என்று காகேஷும் பரினீத்தியும் அவனின் பண்ணை வீட்டிற்கும் வந்து சேர்ந்து இருந்தார்கள்.

 

அத்தனை அழகாக இருந்தது.

 

"ரொம்ப நல்லா இருக்கு" என்று பரி சொல்ல, அவனோ, "நீ ரொம்ப நல்லா இருக்க" என்று சொல்லி இருந்தான்.

 

அவளோ சட்டென திரும்பி பார்க்க, அவனின் கண்களில் முழுக்க பரி தான் நிறைந்து இருந்தாள்.

 

அவனின் கண்களில் காதலுடன் இன்று காமத்தையும் பார்க்கிறாள்.

 

அவளின் தேகம் சிலிர்த்து அடங்கியது. இந்த உணர்வுகள் எல்லாம் அவளுக்கு புதிது தான்.

 

"என்ன அப்படி பாக்குறீங்க?" என்று கேட்டுக்கொண்டே அவள் பின்னால் செல்ல, அவனோ முன்னேறி கொண்டே, "ஏன் பார்க்க கூடாதா?" என்று அடி மீது அடி எடுத்து வைத்தான்.

 

அவளின் கால்கள் தாமாக பின்னே சென்றன.

 

"காகேஷ்" என்றவளின் குரல் ஒரு வித மயக்கத்தில் ஒலிக்க, அவனோ அவளை நெருங்கி செவிகளை அடைந்து, "அப்படியே ஆப்பிள் மாதிரி இருக்க டி... கடிச்சி திங்கட்டுமா?" என்று கேட்க, "வேணாம்னு சொன்னா விட்டுருவீங்களா?" என்று அவனின் கண்களை நோக்கி கேட்க, "வாய்ப்பே இல்லை" என்றவன் அவளை கைகளில் ஏந்தி கொண்டான்.

 

அவளோ அவனின் கழுத்து வளைவில் முகத்தை புதைக்க, அவளை மெத்தையில் கடத்தியவனின் கைகளில் எப்போது காரிகை அவளின் புடவை வந்தது என்று இருவருக்குமே தெரியவில்லை.

 

பெண்ணவளை கண்களால் மட்டும் இன்றி கைகளாலும் தீண்டி, முழுதாக அவளை தன்வசமாக்கி இருந்தான் காகேஷ்.

 

காகேஷ் இல்லை இப்பொது காமனாக மாறி, அவனின் பரியை தேவலோகத்துக்கு அழைத்து சென்று மோட்சத்தை அவளுக்கு மட்டும் இன்றி அவளும் பெற்று இருந்தான்.

 

இருவரும் தம்பதிகளாக அவர்களின் வாழ்வை துவங்கி இருந்தனர்.

 

இதே சமயம் கண்ணீரில் கரைந்து கொண்டு இருந்தாள் ஹன்சிகா.

அத்தியாயம் 65

 

ஹன்சிகாவிற்கு தான் வீட்டிற்கு வந்தது முதல் நெஞ்சில் பாரம் ஏறி இருந்தது. அவள் செய்து வைத்த வேலை ஒரு புறம் மற்றோரு புறம் அவளுக்கு மிகவும் பிடித்த தந்தை தான் கொலைகாரனாக இருந்து இருக்கிறார். அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல எத்தனை கொலைகள் என்று கணக்கில் அடங்கவே இல்லை.

 

நினைக்க நினைக்க நெஞ்சம் தகித்தது. அவளும் அவரை போல் தான் ஆகி விட்டு இருந்தாலோ? ஆதலால் தான் அவளும் சாஹிலிற்கு இப்படி ஒரு இழி செயலை செய்து இருக்கிறாளோ என்றெல்லாம் அவளின் மனதில் கேள்வி எழுந்தது.

 

'இல்ல இல்ல.. நான் அப்படி இல்ல... நானும் என் அம்மா பொண்ணு தான்' என்று அவளே அவளின் மனதிற்குள் பேசியும் கொண்டாள்.

 

அவள் இப்படி நினைத்து கொண்டிருக்கும் போதே அவளின் முன் தட்டில் சாப்பாட்டை கொண்டு வந்து வைத்து இருந்தான் சாஹில்.

 

அவளும் அவனை பார்த்தாள்.

 

"சாப்பிடு" என்று அவன் சொல்ல, "இல்ல... பசிக்கல" என்று அவள் சொல்லவும், அவனோ சலிப்பாக தலையசைத்து, "இப்போ என்ன? இப்படி எல்லாம் பண்ணி சிம்பத்தி கிரியேட் பண்ணுறியா? இப்படி அழுதுகிட்டே இருந்தா நான் உன்னை நல்லவன்னு நம்பணுமா? இந்த நடிக்கிற வேலை எல்லாம் வேற யாருகிட்டையாவது வச்சிக்கோ... சாப்பிட்டா சாப்பிடு சாப்பிடாட்டி போ... இது கூட உனக்காக கொண்டு வரல... உன் வயித்துல வளருற குழந்தைக்காக தான்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டான்.

 

அவளோ எச்சில் கூட்டி விழுங்கி கொண்டு, அப்போது தான் அவளின் வயிற்றில் வளரும் குழந்தையின் நினைவும் வந்தது. குழந்தைக்காகவாது சாப்பிட வேண்டும் என்று நினைத்து கொண்டு, கண்ணீரை துடைத்து விட்டு, தட்டை எடுத்து சாப்பாட்டை வாயில் வைத்தவளுக்கு உணவு உள்ளே இறங்குவேனா என்று இருந்தது.

 

ஆனால் சாப்பிட வேண்டும் என்று சாப்பிட்டாள். இதை எல்லாம் சாஹிலும் வெளியே இருந்து பார்த்து கொண்டு தான் இருந்தான்.

 

அவள் முழுதாக சாப்பிட்டு முடிக்கும் வரை பார்த்துவிட்டு தான் அங்கிருந்து சென்று இருந்தான்.

 

அவனின் நிலை தான் மிகவும் மோசம். அவனை ஏமாற்றி அவளை கற்பழிக்க வைத்து இருக்கிறான். இப்பொது கற்பழிப்பு என்றும் சொல்ல முடியாது. அவளின் சம்மதத்துடன் தான் நடந்தது. ஆனாலும் வெளியில் அவனது மானம் போய் விட்டதே!

 

இப்பொது குழந்தை வேறு! அவனுக்கு குழந்தைகள் என்றால் பிடிக்கும் தான். அதுவும் இப்பொது அவனுக்கென்று ஒரு குழந்தை, நினைக்கும் பொது அவனுக்கு ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தது தான் ஆனால் குழந்தையின் அன்னையை தான் அவனது மனம் ஏற்று கொள்ள மறுத்தது.

 

அவளை வதைக்க வேண்டும் என்று அவனது மனம் சொல்ல, ஆனால் அவளை வதைக்க அவனும் அல்லவா வதைகிறான். அவனுக்குள் இருக்கும் நல்லவனால் இன்னும் அவளை கொடுமை படுத்த முடியவில்லையே!

 

ஆனால் அப்படியே அவளை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. என்ன வாழ்க்கை என்று தோன்றியது? அவனுக்கா இந்த நிலைமை? மோதலில் தான் முதலில் சந்தித்தார்கள், கொஞ்சம் சாதாரணமாக பேசி இருந்தார்கள் என்றால் காதல் வரை சென்று இருக்குமோ என்னவோ? அவன் தொட்டு அடித்த முதல் பெண். அவளை ரசித்தது இல்லை என்றாலும் அவளின் முகத்தை அவனும் தான் மறக்கவில்லை. ஒரே ஒரு முறை அவள் யோசித்து இருக்கலாம். அவனை அடித்து கூட இருக்கலாம். ஆனால் இப்படி ஒரு சூழலில் இருவரது வாழ்க்கையையும்  நிறுத்தி வைத்து இருக்கிறாள்.

 

ஆற்றாமை நிறைந்த கோவம். அப்படியே உறங்கியும் போய் இருந்தான்.

 

அடுத்த நாளை காலை யாருக்கு நன்றாக விடிந்ததோ இல்லையோ காகேஷிற்கும் பரிக்கும் நன்றாக இருந்ததது.

 

அவனின் மார்பில் தூங்கி கொண்டு இருந்தாள் பரி.

 

சூரிய கதிர்கள் அவர்களின் முகத்தில் படவும் மேலும் அவனின் மார்பில் புதைந்தவள், பின்பு அவளே எழுந்து அமர்ந்தாள்.

 

எழுந்தவளுக்கு ஒரே வெட்கம். வெறும் போர்வையுடன் தான் இருந்தாள். அவன் தான் அவளை ஆடை அணியவே விடவில்லையே!

 

அருகில் அவளுக்கு கிடைத்தது என்னவோ அவனது சட்டை தான்.

 

எடுத்து அணிய போனவளின் கையை பிடித்து இருந்தான் காகேஷ். அவளோ என்ன என்று பார்க்க, "எதுக்கு இப்போ டிரஸ் போடுற? தேவை பாடாது" என்று அவன் சொல்ல, அவளோ விழி விரித்து, "விளையாடுறிங்களா? காலைல நாலு மணிக்கு தான் தூங்க விட்டீங்க.. இப்போ மணி பதினொன்றரை தெரியுமா?" என்று கேட்கவும், "சோ வாட்?" என்றவனை பார்த்து, "எனக்கு பசிக்குது" என்று சிணுங்கவும், "எனக்கும் தான் டி பசிக்குது" என்றவன் அவனின் பசியை அடங்க வைத்து தான் அவளை விட்டு இருந்தான்.

 

"நீங்க ரொம்ப மோசம்" என்று சொல்லிக்கொண்டே அவர்கள் வெளியே வந்த சமயம் மதியம் இரண்டு மணி.

 

அதற்கு பிறகு குமரகத்திற்கு தான் சென்றனர்.

 

வந்தவர்களை பார்த்து, "நான் கூட நாளைக்கு தான் வருவீங்களோன்னு நினைச்சேன். அண்ணி கூட உங்களுக்கு சாப்பாடு கொடுத்து விடலாம்ன்னு சொன்னாங்க" என்கிற மயூரனின் அருகில் வந்து அமர்ந்தான் காகேஷ். பரி ஓடியே விட்டாள். இருந்தால் அவளை நிச்சயம் விட மாட்டார்கள் என்று தெரியும்.

 

ஹம்சாவோ, "ஏசிபி அவரோட எனெர்ஜி எல்லாம் ட்ரைன் பண்ணிட்டு வந்து இருக்கார் முதல்ல ஏதாவது சாப்பிட எடுத்துட்டு வாங்க" என்று சமையல்காரரிடம் சொல்லவும், மயூரன் அப்போதும், "அது என்ன டா ஏசிபி? அண்ணான்னு தான் கூப்பிடேன்" என்று சொல்லவும், "நீ கூட தான் ஏசிபின்னு சொல்லுற" என்றதும், "சரி இன்னைல இருந்து மச்சான்ன்னு கூப்பிடுறேன்... என்ன சரி தானே?" என்று காகேஷை பார்க்க, "வேண்டாம் டா கேட்கவே நாராசமா இருக்கு... ஏசிபின்னே கூப்பிடு" என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, அங்கே அவனுக்கு ஜூஸ் எடுத்து கொண்டு வந்தாள் ஸ்ரவாணி.

 

"காக்கி மாமா... அம்மா கொடுத்து விட்டாங்க" என்று பழரசத்தை அவனுக்கு கொடுக்க, "உன் அம்மா எதுக்கு வேலை செய்யுறா? அவளே பாப்பாவை சுமந்துக்கிட்டு இருக்கா" என்று சொல்லும் போதே, "டேய் நான் ப்ரெக்னெண்டா தான் டா இருக்கேன்... என்னை ஏதோ டிசிஎஸ் இருக்குற மாதிரி ட்ரீட் பண்ணாத" என்று சிட்டுவும் வந்து அமர்ந்தாள்.

 

அதற்கு பிறகு அவர்களின் வாழ்க்கை கொஞ்சம் நன்றாக தான் சென்றது.

 

ஒரு மாதம் இப்படியே கடந்து இருக்கும். இன்னும் ஒரு வாரத்தில் பக்ஷியின் வழக்கை தான் எடுத்து விசாரிக்க இருந்தனர். அதற்கான வேலை அனைத்தும் ஜடாயு மற்றும் காகேஷ் பார்த்து கொண்டு இருந்தனர்.

 

இப்படிப்பட்ட நேரத்தில் தான் ஹம்சா மற்றும் காகேஷ் ஒன்றாக வீட்டில் முற்கூடத்தில் அமர்ந்து இருந்தார்கள். இன்றும் அண்ணா தம்பி இடையில் விலகல் தான். இந்த ஒரு மாதத்தில் ஹன்சிகாவும் குமரகத்திற்கு வர வில்லை. அவள் எப்படி இருக்கிறாள் என்று சாஹிளிடம் கேட்டு தெரிந்து கொள்வார்கள். அவளுக்கு கொஞ்சம் தனிமை வேண்டும் என்று அவளும் சொல்லி தான் இருந்தாள்.

 

"மாமா" என்கிற ஸ்ராவணியின் அழைப்பில் காகேஷ் மற்றும் ஹம்சா இருவரும் திரும்பி பார்த்தனர்.

 

"சொல்லு டால்" என்று இருவரும் ஒரே போல் சொல்லவும், குழந்தையும் இருவரையுமே பார்த்தது.

 

"மாமா எனக்கு ப்ராஜெக்ட் செய்ய ஹெல்ப் வேணும்" என்று சொல்ல, "நான் பண்றேன்" என்று அவளின் ப்ராஜெக்ட் புத்தகத்தை காகேஷ் பிடுங்க, அவனின் கையில் இருந்து, "நான் தான் பண்ணுவேன்" என்று ஹம்ஸாவும் பிடுங்கினான்.

 

காகேசிற்கோ கோவம், "நான் தான் பண்ணுவேன்" என்று மீண்டும் அவன் பிடித்து இழுக்க, இப்படியே இருவரும் மாறி மாறி பிடித்து இழுத்து கொண்டு இருந்தனர். ஸ்ராவணியோ இருவரையும் திரும்பி திரும்பி பார்த்து கொண்டு இருந்தாள்.

 

ஒரு கட்டத்தில் இருவரும் இழுத்த இழுப்பில் புத்தகம் கிழிந்த விட்டது.

 

குழந்தையோ அழ ஆரம்பித்து இருக்க, அதே சமயம் உள்ளே வந்தாள் சிட்டு.

 

"அம்மா இந்த இரண்டு லூசும் என் ப்ராஜெக்ட் புக்கை கிழிச்சிட்டாங்க" என்று அவள் போட்டு கொடுக்கவும், ஆசிரியரிடம் மாட்டிய மாணவர்கள் போல விழித்து கொண்டு இருந்தார்கள் காகேஷும் ஹம்ஸாவும்!

 

"அறிவு இல்லையா உங்க இரண்டு பேருக்கும்? இதெல்லாம் நீங்க சின்ன பசங்களா இருக்கும் பொது விளையாடி இருக்கனும்... இப்படி எருமை மாடு மாதிரி வளர்ந்து உங்களுக்கே குழந்தைங்க வர வேண்டிய வயசுல விளையாட கூடாது" என்று சொல்லவும், "அதான் இன்னும் எங்களுக்கு குழந்தை இல்லாத அது வரைக்கும் நாங்க சண்டை போட்டுக்குறோம் ஸ்பாரோ" என்று காகேஷ் சொல்ல, அவனின் அருகில் சென்று தலையில் நஙநங்கென்று கொட்டியே இருந்தாள் சிட்டு.

 

இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த மயூரன் மற்றும் ஜடாயுவோ, "இப்போ தான் சின்ன குழந்தைங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க" என்று ஒரே போல் சொல்லி கொண்டனர்.

 

"நீங்க இரண்டு பேரும் தான் டா அவ ப்ராஜெக்ட் பண்ணனும்" என்று சொல்லிவிட்டு அவள் சென்று விட, பின்பு ஹம்சா மற்றும் காகேஷ் ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டே தான் ஸ்ரவாணியின் ப்ரொஜெக்ட்டை முடித்து இருந்தனர்.

 

இப்படி பட்ட சமயம் தான், ஹன்சிகாவை அடிக்க அடுத்த ஆயுதத்தை ஏந்தி இருந்தான் சாஹில்.

 

 

அத்தியாயம் 66

 

நிறையவே ஒடுங்கி இருந்தாள் ஹன்சிகா. இந்த ஒரு மாதத்தில் அவள் யாரிடமும் பெரிதாக பேசவில்லை. அவளுக்கு தேவை பட்டது தனிமை. அவளே கேட்டு தான் அதை பெற்றும் கொண்டாள். இப்பொது தான் மனம் அனைவரிடமும் பாசமாக பேசலாமா என்று ஒரு எண்ணம் எழுந்தது. இப்படியே எத்தனை நாட்கள் இருக்க முடியும்?

 

பேசினால் தீராத பிரச்சனை இல்லையே! அவள் செய்தது தவறு தான், உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இப்பொது அவளின் மனம் தண்டனை கொடுத்தால் கூட அதை ஏற்று கொள்ளும் மன பக்குவத்தில் தான் இருந்தது. ஆனால் அதையும் கூட கொடுக்க மாட்டேன் என்று நிற்கிறான் அவளது கணவன்.

 

இப்போது வரை அவள் காகேஷிடமும் ஹம்சாவிடமும் பேசவில்லை. சிட்டுவிடமும் ஒரு வார்த்தை பேச வில்லை. ஆனால் மனம் இப்பொது தாய்வீட்டின் பாசத்திற்காக ஏங்கியது.

 

சென்று விட்டு வரலாமா என்று கூட இருந்தது. இதோ இப்பொது கூட கண்களில் கண்ணீரை சுமந்து கொண்டு தான் இருந்தாள்.

 

மூன்று மாத கருவை சுமந்து கொண்டு இருந்தாள் ஹன்சிகா. அவளின் வாழ்வில் தான் எத்தனை மாற்றங்கள். அவளே நிறைய மாறி இருந்தாள்.

 

கண்களில் இருந்து நீர் வழிந்து கொண்டு இருந்தது. செய்த தவறு எல்லாம் இப்போது கண்முன் வந்து நின்றது. அதுவும் அவள் சாஹிளுக்கு செய்தது எல்லாம் துரோகம் அல்லவா!

 

இப்போது அழுது என்ன பயன்? செய்த அனைத்திற்கும் அவள் அனுபவித்து தான் தீர வேண்டும் என்று அவளுக்கும் தெரியும்.

 

கதவு திறக்கும் சத்தம் கேட்டு அவளும் திரும்பி பார்த்தாள்.

 

சாஹில் தான் வந்து இருந்தான், ஆனால் அவனின் கையை பிடித்து கொண்டு வேறொரு பெண் வந்து இருந்தாள்.

 

"டோன்ட் வரி கீதா, சீக்கிரம் நம்ப கல்யாணம் பண்ணிக்கலாம்" என்று சொல்லிவிட்டு அவன் கையை விட பார்க்க, அவளோ அவனை இறுக அணைத்து இருந்தாள்.

 

ஹன்சிகாவிற்கு அவளின் இதயத்தில் யாரோ கோடி ஈட்டிகள் கொண்டு தாக்கியது போன்று இருந்தது.

 

"பை சாஹில்" என்று கீதா நகர, சாஹிலும் புன்னகையுடன் உள்ளே வந்தான்.

 

அவன் தான் அவளை மதிப்பதே இல்லையே!

 

"சாஹில்" என்று ஹன்சிகா அழைக்க, அவனும் திரும்பி பார்த்து, "என்ன?" என்று கேட்டான்.

 

"என்ன இதெல்லாம்?" என்று கேட்க, "எதெல்லாம்?" என்று எதுவும் தெரியாதது போல் கேட்க, "அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்றிங்க?" என்று ஆதங்கமாக வந்தது அவளின் வார்த்தைகள்.

 

அவனோ, "இப்போ ஏன் இவளோ சீன் போடற? ஆமா, அவளை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்" என்று அவன் சொல்லவும், அவளுக்கோ அத்தனை கோவம்.

 

"நான் உங்க பொண்டாட்டி" என்று சொல்ல, "நம்ப கல்யாணம் ரெஜிஸ்டர் ஆகலேயே" என்று அவன் சொல்லவும் தான், அவர்களின் திருமணத்தை அவர்கள் பதிவு செய்யாதது அவளின் நினைவிற்கு வந்தது.

 

"சாஹில் நாளைக்கே ரெஜிஸ்டர் பண்ணலாம்" என்றதும், "நான் எப்போ வரேன்னு சொன்னேன்" என்று அவளின் முன் கைகட்டி கொண்டு நிற்கவும், "உங்க குழந்தையை சுமந்துட்டு இருக்கேன் நான். அது மட்டும் இல்ல உங்க கையாள தான் இந்த தாலிய கட்டுனீங்க" என்று அவள் எடுத்து காட்ட, அவன் யோசிக்கவே இல்லை. அதை அப்படியே அவனின் கைகளில் அறுத்து இருந்தான்.

 

அதிர்ந்து விட்டாள் அவள்! அரக்கனாக அவன்!

 

அவன் இப்படி செய்வான் என்று அவள் நினைக்கவில்லை. தாலியையே அறுத்து விட்டானே. அவர்களுக்கு என்று இருந்த ஒரே பந்தம் அது தான். அதையும் உடைத்து விட்டானா?

 

"சா... சாஹில்" என்று சொல்லும் போதே அவளின் உதடுகள் துடித்தது.

 

"என்ன டி? உன்னை என்ன சந்தோஷமா வச்சி இருக்க கல்யாணம் பன்னேனு நினைச்சியா? ஒரு ரேப்பிஸ்ட் கூட குடும்பம் நடுத்தர அளவுக்கு நான் கீழ் தனமானவன் இல்ல... குழந்தையை மட்டும் பெத்து கொடுத்துட்டு போ... நான் வளர்த்துக்குறேன்" என்று நேரடியாகவே சொல்லி இருந்தான்.

 

அவளுக்கு அவனிடம் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

 

"நீங்க என்னை ஜெயில்க்கு அனுப்பி இருக்கலாம்" என்று அவள் சொல்லவும், "ஏன் அங்க போய் இன்னும் எத்தனை போலீஸ் கூட இருக்க போற? நீ நான் நல்லா வாழுறதை பார்த்து பார்த்து சாகனும். கண்டிப்பா என் குழந்தைக்கு நீ தான் அம்மானு சொல்லவே மாட்டேன் டி.. உன்னை மாதிரி ஒரு அம்மா என் குழந்தைக்கு இருக்கறதுக்கு நீ இல்லாமையே இருக்கலாம்" என்று கடித்து துப்பி இருந்தான்.

 

நெஞ்சே அடைத்து விட்டது. அவளை அன்னை என்றே சொல்ல மாட்டேன் என்கிறான்.

 

அப்படியே தொப்பென்று அமர்ந்து விட்டாள்.

 

உள்ளே அறைக்குள் வந்தவனின் கைப்பேசி அலறியது.

 

கீதா தான் அழைத்து இருந்தாள்.

 

எடுத்ததும், "பாவம் சாஹில் உங்க வைப் ரொம்ப அப்செட் ஆகிட்டாங்க" என்றவளிடம், "அவளோலாம் ஒன்னும் பிரச்சனை இல்ல... நீ இதையே மெயின்டெய்ன் பண்ணிக்கோ.. என்னோட பிராண்ட்ன்னு தெரிஞ்சா அப்புறம் அவளுக்கு குளிர் விட்டு போய்டும்" என்றவனிடம், "நீயா சாஹில் இப்படி?" என்று கேட்டே விட்டாள்.

 

எப்போதும் சாந்தமாக இருக்கும் சாஹில் இப்படி சாமியாட்டம் ஆடுகிறானே. அவள் பார்த்த சாஹில் இவன் இல்லையே..

 

"பார்த்து சாஹில் ஷி இஸ் ப்ரெக்னன்ட்.. கொஞ்சம் மெண்டல் ஹெல்த் பார்த்துக்கோ" என்றவளை நிறுத்தி, "அவளுக்கு எமோஷன்ஸ் எல்லாம் இல்ல கீதா... அதெல்லாம் இருந்து இருந்தா இப்படி பிஹேவ் பண்ணிருப்பாளா?" என்றவனிடம் ஒரு நொடி மௌனம்.

 

அவளோ, "சரி தான் சாஹில்... அவ பண்ணது தப்பு தான். ஆனா அவ ஒன்னும் எல்லா பசங்க கிட்டையும் இப்படி பேசுற பொண்ணு இல்லையே... பண்ணது தப்பு தான் அதுக்கு தண்டனை கொடு.. ஆனா நீ கொடுமை பண்ணுற.. ரெண்டுத்துக்கும் நிறைய வித்யாசம் இருக்கு... நீ அவளை கொடுமை பண்ணுற... பார்த்து சாஹில் அவ பண்ணதுக்கு கூட அப்புறம் அவ மன்னிப்பு வாங்கிட போறா.. நீ பண்ணுறதுக்கு எதுவும் மன்னிப்பு இல்லாம ஆகிற போகுது... யோசி உன்னால உன் குழந்தை இல்லாம இருக்க முடியுமா? நீ நினைக்கிற மாதிரி அவளோ சுலபமா ஒரு குழந்தையை அவங்க அம்மாவை விட்டு பிரிக்க முடியாது சாஹில். பத்து மாசம் சுமந்து பெத்துக்குறவளுக்கு தான் என்னைக்கும் குழந்தை நன்றியா இருக்கும். ஏன் நீ கூட உன் அம்மா இவளோ பண்ணியும் அவளை விட்டுடுளையே... அதே மாதிரி தன் உன் குழந்தையும் இருக்கும்... பார்த்துக்கோ" என்று மட்டும் சொல்லி வைத்து விட்டாள்.

 

அவள் வைத்ததும் அவனின் எண்ணமும் கொஞ்சம் யோசிக்க துவங்கியது. குழந்தையை அவளிடம் இருந்து பிரிக்கும் அளவிற்க்கு அரக்கன் அல்ல அவன். ஆனாலும் குழந்தைக்காக அவளுடன் வாழும் அளவிற்கு அவனின் மனநிலையும் இருக்க வில்லை.

 

இரண்டும் கேட்டான் இல்லை தான்.

 

இதே சமயம் ஹன்சிகாவோ நேராக குமரகம் நோக்கி நடக்க துவங்கினாள். அவளால் அதற்கு மேல் அங்கே இருக்க முடியும் என்று தோன்றவில்லை. குழந்தையை வேறு அவளிடம் இருந்து பிரித்து விடுவேன் என்று சொல்லிவிட்டான். அவளுக்கு இப்பொது நெஞ்சம் முழுக்க பயம் தான். அவளை உடலால் அல்ல சொல்லாலும் செயலாலும் அடிக்கிறான். எங்கே ஏதாவது தவறான முடிவு எடுத்துவிடுவாளோ என்கிற பயம் கூட வந்து விட்டது.

 

சாஹிளுடன் சண்டையிட்டு குமரகம் வந்து இருந்தாள் ஹன்சிகா. அவளுக்கு மனதில் அத்தனை பாரம் ஏறி இருந்தது. யாரிடமாவது சொல்லி அழலாம் என்றால் அவளுக்கு என்று யாரும் இல்லாதது போல் தோன்றியது. ஆனால் அவளை நம்பி மூன்று மாத கரு இருக்கிறதே!

 

அதற்காகவாவது கொஞ்சம் நிம்மதியை தேடி தாய் வீடு வந்து இருந்தாள். ஆனால் அப்போது ஹம்சா அங்கு இல்லை. சிட்டுவும் இல்லை.

 

"ஹாய் சித்தி" என்கிற குரல் தான் அவளை வரவழைத்தது.

 

திரும்பி பார்த்தாள் ஸ்ரவாணி தான்.

 

அவளும் இல்லாத புன்னகையுடன். "ஹாய்" என்றாள்.

 

"வாங்க சித்தி இப்போ அம்மா வந்துருவாங்க... நம்ப கார்ட்டூன் பார்க்கலாம்" என்று அவளின் கையை பிடித்து இழுத்து கொண்டு சென்று அமர வைத்தாள்.

 

அவள் வைத்து இருந்த ஆப்பிளை ஹன்சிகாவின் முன் நீட்ட, அவளோ, "இல்ல ஸ்ரவாணி நீ சாப்பிடு" என்று சொல்லவும், "சித்தி உங்க வயித்துல தான் பாப்பா இருக்காமே... எனக்கு தம்பி இல்லனா தங்கச்சி வருவாங்க அதனால நீங்க சாப்பிடுங்க" என்றவள் சொல்லவா அவளின் வாயில் ஊட்டியும் விட்டாள்.

 

உண்மையை சொல்லவேண்டும் என்றால் அவளுக்கு பசி எடுத்து என்னவோ உண்மை தான். ஆனால் அவளுக்கு அதை கேட்க கூட இப்போது மனமில்லை.

 

ஆனால் ஸ்ரவாணி புரிந்து கொண்டாள்.

 

ஸ்ரவாணியை பற்றி பேசியதால் தான் சாஹில் முதன்முதலில் அவளை அடித்தே இருந்தான்.

 

எந்த குழந்தையை, "செத்து போனா என்ன?" என்று அவள் அன்று கேட்டாலோ, அதை குழந்தை இன்று அவளுக்கு வாழ்வில் இரக்கம் எவ்வளவு முக்கியம் என்று கற்று கொடுத்து கொண்டு இருந்தது.

 

கண்களில் நிற்காமல் நீர் வழிய துவங்கியது.

 

"ஏன் சித்தி அழறீங்க?" என்று அவளின் பிஞ்சு கைகளால் அவள் துடைத்து வேறு விட, அவ்வளவு தான் இத்தனை நேரம் இருந்த இறுக்கம் அனைத்தும் உடைந்து, ஸ்ரவாணியை அணைத்து அழுது விட்டாள் ஹன்சிகா.

 

கதறி விட்டாள். அவளின் மனதில் உள்ள பாரத்தை யாவும் இறக்கி வைக்க அவளுக்கு அந்த அழுகையும் அணைப்பும் தேவை பட்டது.

 

ஸ்ரவாணி பயந்தே விட்டாள்.

 

அவளும் அழ ஆரம்பித்து விட, இதே சமயம் சிட்டுவும் பரியும் உள்ளே வந்தனர்.

 

வந்தவர்கள் பார்த்தது என்னவோ ஸ்ரவாணியை அணைத்து அழுது கொண்டு இருக்கும் ஹன்சிகாவை தான்.

 

இருவரும் விரைந்து சென்று, "என்ன ஆச்சு?" என்று கேட்டுக்கொண்டே, ஸ்ரவாணியை பரி தூக்கி கொள்ள, சிட்டுவோ அருகில் இருந்த தண்ணீரை எடுத்து ஹன்சிகாவிற்கு கொடுக்கவும், அவளோ மீண்டும் அழுதாள்.

 

அவளால் முடியவில்லை. விட்டால் அவளுக்கு நெஞ்சு வெடித்து விடும் போல இருந்தது.

 

"என்னனு சொல்லிட்டு அழு" என்று சிட்டு சொல்ல, அப்போதும் அவள் நிறுத்தினால் இல்லை.

 

சிட்டுவோ பின்பு முதல் முறை, ஹன்சிகாவை அணைத்து, "என்னனு சொல்லு டி... எனக்கு நீ இப்படி இருக்கறது பார்த்து பயமா இருக்கு.. என்ன ஆச்சு?" என்று அவளின் தலையை வருடி விட, அவளுக்கோ அன்னையின் உணர்வு வந்தது.

 

அப்படியே மயங்கி சரிந்தாள் ஹன்சிகா.

அத்தியாயம் 67

 

ஹன்சிகா கண்களை திறந்ததும் அவள் பார்த்தது என்னவோ சிட்டு, ஜடாயு, காகேஷ், பரி மற்றும் ஹம்சா தான்.

 

"ஹாஸ்பிடல் போலாமா?" என்று சிட்டு கேட்க, "இல்ல வேணாம்... காலைல இருந்து சாப்பிடல அதான்" என்று அவளே கண்களில் கண்ணீருடன் சொல்லி இருந்தாள்.

 

ஹம்சாவிற்கே அவள் அப்படி சொன்னதும் ஒரு மாதிரி ஆகி விட்டது. உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் அவர்கள் நால்வரில் ராஜகுமாரியை போல் வளர்ந்தவள் அவள் தான்.

 

ஹம்சா கூட காவல்துறையின் பயிற்சியின் பொது மிகவும் கடினப்பட்டான் தான். அவன் கடினப்படுவதை சொல்லும் பொது கூட பக்ஷி அசரவில்லை. ஆனால் ஹன்சிகா அப்படி இல்லை. பக்ஷிக்கு மிக மிக நெருக்கமான மகள். அவளின் கையில் ஒரு சிறு கீறல் பட்டால் கூட, அன்று வீட்டையே புரட்டி போட்டு விடுவார். அவரின் காதலுக்கு கிடைத்த பரிசு அவள் ஒருவள் தானே. ஆதாலேயே அவளின் மீது அதிக பாசம் இருந்தது.

 

சிட்டு காகேஷ் என்ன தான் தாத்தாக்களிடம் வளர்ந்தாலும் அவர்களிடமும் இத்தனை செல்வ செழிப்பெல்லாம் இல்லை. அளவான செலவில் பொறுப்பாக வளர்ந்தவர்கள் அவர்கள். இப்பொது அவர்களின் பதவியும் படிப்பும் தான் அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்து இருக்கிறது.

 

குமரகத்தில் அவர்களின் வாழ்க்கை வேறு தான். ஆனாலும் இத்தனை நாட்கள் இந்த வாழ்க்கை இல்லையே!

 

ஆக மொத்தம் நால்வரில் உண்மையாகவே இந்த குமரத்தில் இளவரசியாக இருந்தவள் ஹன்சிகா தான். ஆனால் இன்று?

 

கால சக்கரம் சுழலும் நேரம் அனைத்தும் மாறும் என்கிற நிலை. இதோ ஹன்சிகா இந்த நிலையில் இருக்கிறாளே!

 

பக்ஷியின் பாவத்தை எல்லாம் அவளின் பாச மகள் தான் சுமக்க வேண்டும் என்பது விதி போல!

 

அவள் அப்படி சொன்னதுமே யாருக்குமே என்ன சொல்வது என்று தெரியவில்லை.

 

ஜடாயுவிற்கு இப்பொது சாஹீலின் மீது தான் கோவம் வந்தது. ஹன்சிகாவின் மீது கோவம் இருக்கலாம் ஆனால் குழந்தையை சுமந்து கொண்டு இருந்தவள் சாப்பிடாலா இல்லையா என்று கூடவா பார்க்க மாட்டான். அவன் சிட்டுவை எப்படி பார்த்தான் என்று அவனுக்கு தெரியும்.

 

பரி தான், "இரு நான் போய் சாப்பாடு எடுத்துட்டு வரேன்" என்று சொல்லி செல்ல போக, "இல்ல எனக்கு பசிக்கல" என்று அவள் சொல்லும் போதே கண்களில் இருந்து கண்ணீர் விழுந்து விட்டது.

 

"எப்படி பசிக்காம இருக்கும்? பசிக்காம தான் மயக்கம் போட்டு விழுந்துட்டியா? எங்களை எல்லாம் பார்த்தா உனக்கு என்ன லூசு மாதிரி தெரியுதா?" என்று சிட்டு தான் கத்தியே விட்டு இருந்தாள்.

 

பரி அதற்கு பிறகு அங்கு நிற்கவில்லை. அவள் சென்று அவளுக்கு உணவு எடுத்து விட்டு வர, அதை வாங்கி அவளுக்கு ஊட்டி விட்டு இருந்தது என்னவோ சிட்டு தான்.

 

உணவு அவளின் வாயில் இறங்குவேனா என்று இருந்தது.

 

"இப்போ நீ சாப்பிடலனா ஸ்ரவாணியை கூப்பிட்டு விடுவேன். அவ வந்தா இன்னும் உன்னை கேள்வி கேட்டே வச்சி செய்வா பரவால்லையா?" என்று அவள் சொன்னதும் தான் கொஞ்சம் சாப்பிட ஆரம்பித்து இருந்தாள்.

 

நிறையவே உண்டாள். அவள் வாய் தான் பசிக்கவில்லை என்று சொல்லி இருந்தது. ஆனால் அவளது வயிறு வேறு வார்த்தை தான் சொல்லி இருந்தது. அதுவும் குழந்தையை சுமந்து இருக்கிறவளுக்கு எவ்வளவு பசி இருக்கும் என்று சிட்டுவிற்கு தெரியாதா என்ன? அவளே இப்போதெல்லாம் அதிகமாக சாப்பிட ஆரம்பித்து இருந்தாள்.

 

"பாதம் பால் எடுத்துட்டு வா பரி" என்று சிட்டு சொல்ல, ஹன்சிகாவோ, "வே..." என்று சொல்ல வரும் போதே, ஒரே பார்வை தான் கப்சிப் என்று ஆகி விட்டு இருந்தாள்.

 

பரி சென்று எடுத்து கொண்டு வர, அதையும் அவளை பருக வைத்தவள், "நீ போய் உன் ரூம்ல தூங்கு" என்று சொல்லவும், "இல்ல... நான் வீட்டுக்கு..." என்று அவள் துவங்கும் போதே, "இல்ல பரவால்ல... நீ இங்கையே இரு... இன்னும் ஒரு வாரம் கழிச்சி சாஹில் வீட்டுக்கு போகலாம்" என்று சொல்லி இருந்தது என்னவோ ஜடாயு தான்.

 

அவள் அதற்கு மேல் பேச வில்லை. சரி என்று தலையசைத்து அங்கிருந்து அவளின் அறைக்கு சென்று விட்டு இருந்தாள்.

 

"பரி நீ அவ கூட இருக்கியா ப்ளீஸ்?" என்று காகேஷ் கேட்கவும், அவளோ, "இதுக்கு எதுக்கு ப்ளீஸ் எல்லாம்.. நான் பார்த்துக்கறேன்" என்று அங்கிருந்து நகர்ந்து இருந்தாள்.

 

அவள் சென்ற பிறகு அனைவருக்கும் மனதில் பாரம் ஏறி இருந்தது. தவறு செய்து விட்டார்களோ என்று ஒரு எண்ணம். அவளுக்கு தனிமை கொடுத்து இருக்க கூடாதோ என்றும் தோன்றியது.

 

காகேஷ் இம்முறை வாய் திறக்கவில்லை. ஹம்ஸாவும் திறக்கவில்லை.

 

சிட்டுவிற்கு ஆதங்கம் தான், ஆனாலும் என்ன சொல்ல முடியும்?

 

இருவரின் மீதும் இப்பொது தவறு இருப்பது போல் தோன்றியது.

 

சாஹீலின் மாற்றத்திற்கு ஹன்சிகா காரணமாக இருக்கலாம். ஆனால் தண்டனை ஹன்சிகா மட்டும் அனுபவிக்க வில்லையே, அவளுடன் சேர்ந்து இன்னொரு உயிரும் அல்லவா அனுபவிக்கிறது.

 

இதே சமயம் மயூரன் உள்ளே வர, அவர்களை பார்த்ததும், "என்ன ஆச்சு? ஏதாவது பிரச்சனையா?" என்று கேட்கவும், ஜடாயுவோ, "சாஹிளை கூப்பிடு" என்று சொல்லவும், "இல்ல வேண்டாம்" என்று தடுத்து இருந்தான் காகேஷ்.

 

ஜடாயுவும் அவனின் புறம் திரும்பி, "என்ன டா சொல்ற? அவனை கூப்பிட வேண்டாவா?" என்று கேட்கவும், "கூப்பிடாத... அவனே வருவான்... வரட்டும்... அப்புறம் பார்த்துக்கலாம்" என்று சொன்னவன் அங்கிருந்து அவனின் அறைக்கு சென்று விட்டு இருந்தான்.

 

சிட்டுவும் ஜாடாயுவும் கூட அவர்களின் அறைக்கு சென்று இருந்தார்கள்.

 

மயூரன் ஹம்ஸாவை தான் பிடித்து இருந்தான்.

 

"சொல்லு டா என்ன நடந்தது?" என்று அவனை ஒரு வழி ஆக்கி என்ன நடந்தது என்று அறிந்தும் கொண்டான்.

 

மயூரனுக்கு கூட பாவமாக இருந்தது. ஹன்சிகாவின் மீது கோவம் இருந்தது. ஆனால் இப்பொது சாஹில் செய்வதை என்ன சொல்வது என்றும் தெரியவில்லை.

 

"சாரி டா" என்று ஹம்ஸாவை பார்த்து சொல்ல, அவனோ ஒரு வித வலி நிறைந்த புன்னகையுடன், "நீ எதுக்கு சாரி சொல்ற? எல்லாம் அவ விதி... அவ பண்ண தப்புக்கு அனுபவிக்கிறா... என்ன கூட பிறந்தவ இப்படி பசிக்குதுனு சொல்லுற அளவுக்கு நானும் விட்டு வச்சி இருக்கேனே... அதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு" என்று சொல்லி அவனும் நகர்ந்து இருந்தான்.

 

மயூரனுக்கு அவனின் நிலை புரிந்தது தான்.

 

இங்கோ சாஹிளுக்கு இரவு தான் ஹன்சிகாவின் நினைவே வந்தது. குமரகம் தான் சென்று இருப்பாள் என்று ஒரு அனுமானம் இருந்தது தான். ஆனால் இன்னும் வரவில்லையே என்கிற கேள்வியும் இருந்தது.

 

அவனுக்கு பசிக்க ஆரம்பிக்கவும் தான் சமயற்கட்டிற்குள் சென்று பார்த்தான். பார்த்தவனின் கண்கள் விரிந்தன.

 

ஒரு உணவு கூட உண்ண பாடு இல்லை. அப்போது அவள் சாப்பிடவே இல்லையா? அவள் வீட்டை விட்டு செல்லும் போதே மதியம் மூணு மணி போல் இருக்குமே! கிட்டத்தட்ட இரண்டு வேளை உணவை சாப்பிடாமல் இருந்து இருக்கிறாளா? அதுவும் இப்போதெல்லாம் அவளுக்கு மசக்கையால் ஏற்பாடும் உடல் உபாதைகளும் கூட அவனுக்கு தெரிந்து தான் இருந்தது.

 

இதே சமயம் அவனுக்கு அழைப்பு வரவும் எடுத்து காதில் வைக்க, "டாக்டர் ஒரு ப்ரெக்னன்ட் லேடி சாப்பிடாம மயக்கம் போட்டு ரோடுல விழுந்துட்டாங்கனு தூக்கிட்டு வந்து இருக்காங்க... ஐ திங்க் அபார்ட் ஆகிருச்சு நினைக்கிறன்" என்று அவனின் மருத்துவமனையில் வேலை செய்யும் கனகா சொல்லவும், அவனோ கைப்பேசியை போட்டே விட்டான்.

 

ஒரு வேலை ஹன்சிகாவாக இருக்குமோ? சாப்பிடாமல் வேறு சென்று இருக்கிறாளே? அவனே அவனின் குழந்தையை கொன்று விட்டானா? என்றெல்லாம் அவனின் எண்ணங்கள் தறிகெட்டு ஓடியது.

 

அவசரமாக அவனின் காரை எடுத்தவன், மருத்துவமனைக்கு சென்று அந்த பெண்மணியை பார்த்ததும் தான் அவனுக்கு மூச்சே வந்தது.

 

வந்தவன், ஒரு மருத்துவனாக அவனின் கடமையையும் ஆற்றி தான் வெளியே வந்தான்.

 

ஆனால் அந்த பெண்ணுக்கு அவன் மருத்துவம் பார்க்கும் போதெல்லாம் அவனின் கண்களில் ஹன்சிகாவின் சிவந்த அழுத முகம் தான் கண்களில் தெரிந்தது.

 

பிடிக்காத பெண் தான், ஆனால் இப்பொது அவளை பார்க்காமல் அவனுக்கு மூச்சே விட முடியாதது போல் இருந்தது. ஏன் இந்த தவிப்பு என்று அவனுக்கு தெரியாது.

 

அவளுக்கு இப்படி ஏதாவது ஆகி இருந்தால்? அவளுக்கும் அவனுக்கும் பந்தம் ஏற்பட அவள் தான் குற்றவாளியாக இருந்தாள். ஆனால் இப்படி குழந்தைக்கு ஏதாவது ஆகி இருந்தால்? அவன் தானே கொலைகாரன் ஆகி இருப்பான். அவனால் காலத்திற்கும் அதில் இருந்து வெளியே வந்து இருக்கவே முடியாது.

 

மருத்துவமனையில் இருக்கவே அவனுக்கு மூச்சு முட்டியது. ஹன்சிகாவை பார்க்க தான் அவனது மனம் படபடத்தது.

 

இரண்டு மணி நேரம் கழித்து தான் அங்கிருந்து நகர்ந்து இருந்தான்.

 

அவன் நேரே சென்றது என்னவோ குமரகத்திற்கு தான்.

 

குமரகத்திற்குள் அவன் வர, "எதுக்கு வந்த?" என்று அவனை கேட்டு நிறுத்தி இருந்தது என்னவோ ஜடாயு தான்.

 

ஜாடாயு என்ன செய்ய காத்து இருக்கிறானோ?

அத்தியாயம் 68

 

ஜடாயு கேட்கும் தொனியே ஏதோ சரி இல்லை என்று சாஹிளுக்கு உணர்த்தி தான் இருந்தது. அவனின் மனமோ இப்பொது ஹன்சிகாவை பார்த்து விட வேண்டும் என்று துடித்து கொண்டு இருந்தது. அவனின் கண் முன் இப்பொது தானே ஒரு பெண் அவளின் குழந்தையை இழந்த காட்சியை பார்த்து விட்டு வந்து இருக்கிறான். அவனுக்கு அது வேறு மனதில் அழுத்தி கொண்டு இருந்தது.

 

அவள் நன்றாக இருக்கிறாளா என்று தெரிந்து கொள்ளும் எண்ணம் மட்டும் தான். அதுவும் கூட அவனின் குழந்தைக்காக என்று அவனுக்கு அவனே சொல்லியும் கொண்டான்.

 

"அண்ணா ஹன்சிகா எங்க?" என்று அவனும் ஒரு வித நிமிர்வோடு தான் கேட்டான்.

 

அவனின் குரலில் சிட்டுவும் காகேஷும் வெளியே வந்தனர். மயூரனும் ஹம்ஸாவும் வெளியே சென்று இருந்ததால் அவர்கள் வீட்டில் இல்லை. ஸ்ராவனி தான் ஹன்சிகாவுடன் விளையாடி கொண்டு இருந்தாள். அவர்களுடன் பரியும் அந்த அறையில் இருந்ததால் இவன் இங்கே வந்தது அவர்களுக்கு தெரிந்து இருக்க வில்லை. அதுவும் அந்த வீட்டில் ஹன்சிகாவின் அறை வேறு சவுண்ட் ப்ரூப் அறை. அதுவும் ஒரு வித சாதகமாக போய் விட்டது.

 

"அவ எங்க இருக்கானு உனக்கு எதுக்கு சொல்லணும்?" என்று அவன் கேட்கவும், சாஹீலின் முகம் கருத்து தான் போய் விட்டது.

 

"சொல்லுங்க டாக்டர் சார் எதுக்கு சொல்லணும்? அவளை ஜெயில்ல கூட போட்டு இருக்கலாம் தெரியுமா? அவளுக்கு எல்லா நேரமும் சாப்பாடாவது கிடைச்சி இருக்கும். நீ பண்ணுறது கொடுமை கூட இல்ல ஏதோ சேடிஸ்ட் மாதிரி பிஹேவ் பண்ணுற நீ சாஹில்... அவ இப்போ வரைக்கும் நீ என்ன பண்ணணு சொல்லல... ஆனா அவ சாப்பிடாதது மட்டும் எங்களுக்கு சொன்னா... காலைல இருந்து அந்த பொண்ணு ஒரு வாய் சாப்பிடல... அவ மட்டும்னா கூட நான் இவளோ எல்லாம் பேச மாட்டேன். அவ வயித்துல வளருற குழந்தை? நீ டாக்டர் தானே? பேசாத அவளுக்கு அபோர்ஷன் பில்ஸ் கொடுத்து..." என்று அவன் துவங்கும் போதே, "அண்ணா" என்று கத்தி இருந்தான் சாஹில்.

 

அதை கேட்க கூட அவனுக்கு தெம்பு இல்லை. இப்பொது தானே அந்த வலியை பார்த்து விட்டு வந்து இருக்கிறான். அங்கு இருக்கும் அனைவரையும் விட அவனுக்கு தான் அதன் வலி நன்கு தெரியும். மருத்துவனாக அவன் இப்படி சந்திக்கும் நிகழ்வுகள் ஒரு வித அழுத்தத்தை அவனுக்கு எப்போதும் கொடுக்கும். அதுவும் இன்று சொல்லவே வேண்டாம். என்ன இருந்தாலும் அவனின் உயிர் நீர் ஆயிர்றே! அதை இழக்க நினைக்கவே அவனுக்கு மனம் ஒப்ப வில்லை.

 

அவள் செய்த தவறுக்கு தண்டிக்க நினைக்கிறான். ஆனால் சேர்ந்து அவனின் உயிரும் அல்லவா வதை படுகிறது.

 

"என்ன கத்துனா நீ பண்ணுறது எல்லாம் சரின்னு ஆகிடுமா? முதல்ல பண்ணுற தப்பை சரி பண்ணு... அவ வீட்ல இருக்க யாரும் ஒரு வார்த்தை கேட்காம இருக்காங்களேன்னு ரொம்ப ஆடாத... இவங்களை பத்தி உனக்கு தெரியாது... நான் சொல்றேன் பாரு.. குழந்தை பொறந்ததும், காகேஷை ஹன்சிகா கிட்ட நீ டிவோர்ஸ் கொடு அவனுக்கு நான் பாத்துக்குறேன் உன்னைனு சொல்லிட்டு போய்கிட்டே இருப்பான். நினைவு வச்சிக்கோ ஹன்சிகாக்கு உன்னோட தயவு தேவை இல்ல... குழந்தையோட சேர்த்து அவ போய்டுவா... நீ எப்படி இன்னொரு கல்யாணம் பண்ணிக்க ரெடியா?" என்று அவனை பார்க்க, சாஹிலால் பதில் பேச முடியவில்லை.

 

இன்னொரு கல்யாணமா முதல் கல்யாணமே இத்தனை போராட்டங்களுடன் செல்கிறது இதில் இன்னொரு திருமணமாம். இவளாவது தெரிந்த பேய், தெரியாமல் வரும் தேவதை எல்லாம் அவனால் இப்பொது நினைத்து கூட பார்க்க முடியாது.

 

"நீ இப்போதைக்கு அப்படி ஒரு எண்ணத்துல இல்லனு எனக்கு தெரியும். இங்க பாரு சாஹில் அவளுக்கு கிடைக்க போற பெரிய தண்டனை என்ன தெரியுமா? நீ அவளை அப்படியே ஏத்துக்கறது தான். அவளுக்கு அதுவே குத்தும். அவ மாறுவாளான்னு நீ கேட்டா அவ ஆல்ரெடி மாறி தான் இருக்கா.. அதை பார்க்கா தான் உன்னால முடியல.. கண்டிப்பா அவ பண்ணது தப்பு தான். தண்டனை கண்டிப்பா கொடுக்கணும் தான். நீ தண்டனை கொடு... ஒன்னு அவளை மொத்தமா தள்ளி வச்சிரு... இல்ல அவளை கூட வச்சி வாழு... இரண்டுமே அவளுக்கு தண்டனை தான். ஆனா நீ பண்ணுறது என்னனு எனக்கு தெரியல" என்று ஜடாயு சொல்லவும், "அவ எங்க?" என்று அங்கேயே தான் வந்து நின்றான் அவன்.

 

"மேல இருக்கா சாஹில்" என்று சிட்டு சொல்லவும், அவன் நிற்கவெல்லாம் இல்லை இரண்டு இரண்டு படிகளாக ஏறி அவளை பார்க்க சென்று இருந்தான்.

 

இங்கோ அப்போது தான், ஹன்சிகாவின் புடவையை விளக்கி, "பாப்பா இங்க தானே இருக்கு சித்தி?" என்று கேட்டு படுத்து இருந்தவள் வயிற்றில் முத்தம் கொடுத்து கொண்டு இருந்தாள் ஸ்ராவனி. சிட்டுவிற்கு அவள் இப்படி தான் முத்தம் கொடுப்பாள் என்பது அவள் செய்கையிலேயே தெரிந்தது.

 

பின்பு பரியையும் பார்த்து, "அத்தை நீங்களும் சீக்கிரம் எனக்கு பாப்பா கொடுங்க" என்று சொல்ல, பரியோ சத்தமாக சிரித்து, "சரி தான் நீங்க சொல்லிடீங்க தானே பெரிய மனுஷி சீக்கிரம் கொடுக்குறேன்" என்று கூறி இருந்தாள்.

 

இப்படி இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போதே தான், அதிரடியாக உள்ளே வந்தான் சாஹில்.

 

அவன் இப்படி வருவான் என்று யாரும் நினைக்கவில்லை.

 

அவளின் அறை தானே, ஜடாயு, காகேஷ், ஹம்சா, மயூரன் எல்லாம் இப்படி நுழைய மாட்டார்கள் என்கிற எண்ணத்தில் வெறும் கதவை சாற்றி வைத்து இருந்தாள். தாழ்ப்பாள் எல்லாம் போடவில்லை.

 

அவளின் புடவை விலகி இருக்க, உடனே அதை சரி செய்து இருந்தாள் ஹன்சிகா. ஆனால் அவள் அதை மறைத்தும் அவனின் கண்கள் என்னவோ அவளின் மணி வயிற்றில் தான் படிந்து இருந்தது.

 

பரி கொஞ்சம் சுதாகரித்து, "நம்ப போகலாம் பேபி. சித்தப்பா சித்தி கிட்ட பேச வந்து இருக்கார்" என்று ஸ்ராவணியின் கையை பிடித்து கூட்டி கொண்டு செல்லும் பொது, சாஹிளை பார்த்து, "கொஞ்ச நாள் அவ இங்கையே இருக்கட்டும் சாஹில். அட்லீஸ்ட் பட்னியா இருக்க மாட்டா" என்று பரி சொல்லும் போதே சாஹிளுக்கு செருப்பால் அடித்த உணர்வு.

 

பரி இதை வேண்டும் என்றெல்லாம் சொல்ல வில்லை. அவளுக்கு உண்மையாகவே ஹன்சிகா மயங்கி விழுந்ததும் ஒரு வித பதற்றம். அதுவும் அவளை போல் இப்பொது அன்னை தந்தை இல்லாமல் இருக்கிறாள். அதுவும் தாண்டி இப்பொது பரிக்கு கூட காகேஷ், சிட்டு, ஜடாயு என்று அனைவரும் இருக்கிறார்கள். ஆனால் என்னவோ ஹன்சிகா மொத்தமாக தனித்து நிற்பது போல் அவளுக்கு தோன்றியது. செய்த தவறுக்கு தண்டனை என்றாலும் தனிமையின் கொடுமையை அனுபவித்தவள் அவளுக்கு மட்டும் தானே அதன் அழுத்தம் தெரியும்.

 

ஆகையால் தான் அப்படி சொல்லியும் இருந்தாள். ஆனால் சாஹிளுக்கு அப்படி இல்லையே!

 

ஆழ்ந்த மூச்சை எடுத்து அவன் உள்ளே வந்து அவளின் அருகில் இருக்கும் நாற்காலியில் தான் அமர்ந்தான்.

 

இருவருக்குமே அமைதி தான். எதுவும் பேச கூடிய மனநிலையில் இருவரும் இல்லை. ஆனால் ஹன்சிகா ஒரு முடிவுடன் தான் இருந்தாள்.

 

அதை சொல்லிவிடும் முனைப்பிலும் இருந்தாள்.

 

"நீங்க எனக்கு டிவோர்ஸ் கொடுத்துருறீங்களா? இல்ல வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோங்க... ஆனா இந்த குழந்தையை மட்டும் என்கிட்ட விட்டுடுங்க ப்ளீஸ்" என்று எப்படியோ நினைத்ததை சொல்லியே விட்டாள்.

 

சொல்லும் பொது அவளின் கண்களில் இருந்து நீரும் விழுந்தது.

 

அது அவனின் கண்களிலும் இருந்து தப்பவில்லை.

 

"உண்மையாவே உங்களுக்கு பண்ணது தப்பு இல்ல பெரிய பாவம் தான். ரியலி சாரி... சாரி சொன்னா மட்டும் கண்டிப்பா நான் பண்ண பாவம் போகாது... ஜெயிலுக்கு போக கூட ரெடியா தான் இருக்கேன். என் மேல கேஸ் வேணாலும் கொடுங்க... பட் நான் இதோட அந்த வீட்டுக்கு வர்றதா இல்ல... என்னை பார்க்க பார்க்க உங்களுக்கும் கஷ்டம். எனக்கும் கஷ்டம். உங்களுக்கே தெரியாம தானே இந்த குழந்தை வந்தது. கடைசி வரைக்கும் இந்த குழந்தை உங்களை தெரியாமையே வளரட்டும். நான் பார்த்துக்கறேன். உண்மையா உங்க கிட்ட ஏன் அப்படி நடந்துக்கணும்னு தோணுச்சுன்னு எனக்கு தெரியல... கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்களை அடிமையாக்கலாம்னு நெனச்சேன். ஆனா உங்களுக்கும் முன்னாடி எத்தனையோ பேர் என்னை எதிர்த்து பேசி இருக்காங்க... அவங்களை எல்லாம் அடிச்சிட்டு விட்டுடுவேன். ஆனா ஏன் உங்க கிட்ட இந்த எக்ஸ்ட்ரீம் போனேனு தெரியல... மே பி உங்களை பிடிச்சி இருந்ததுன்னு நினைக்கிறன். இந்த ஊர்ல எல்லாரும் என்னை தேவதை மாதிரி பார்க்கும் பொது என்னை ஒருத்தன் அடிச்சது எனக்கு பிடிச்சி இருந்தது. ஆப்போசிட் அட்ட்ரக்ட் மாதிரி போல... ஆனா அதை எப்படி வெளி படுத்தணும்னு எனக்கு தெரியல... எங்க அப்பா மாதிரி நான் கண்டிப்பா இல்ல...அவரை மாதிரி இருந்தா இப்படி பீல் பண்ணிட்டு இருக்க மாட்டேனே... முன்னாடி அவரை மாதிரி இருந்தேனோ என்னவோ... இப்போ நான் என் அம்மாவோட பொண்ணா இருக்க தான் ஆசை படுறேன். உங்களுக்கும் சுதந்திரம், எனக்கும் சுதந்திரம்... அதான் நல்லது" என்று அவள் பேசி கொண்டே செல்ல, சாஹிலோ அவளின் புடவையை விளக்கி இருந்தான்.

 

"என்ன பண்றீங்க?" என்று அப்போது தான் அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

 

அவனோ அவளின் வயிற்றில் கை வைத்து, "குழந்தை இப்போ ஓகே தானே?" என்று தான் கேட்டு இருந்தான்.

 

அவளோ, "எஸ் எதுவும் பிரச்சனை இல்ல" என்றவள் அவனின் கையை விளக்கி புடவையை சரி செய்து, "நான் உங்க கிட்ட தான் பேசிகிட்டு இருக்கேன்" என்று சொல்லி இருந்தாள்.

 

அவனோ ஆழ்ந்த மூச்சை எடுத்து, "எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல... கொஞ்சம் டைம் கொடு.. எஸ் நீ கொஞ்ச நாள் இங்கையே இருந்துக்கோ... அது தான் உனக்கு நல்லது" என்று அவன் சொல்ல, அவளோ, "அந்த பொண்ணு கீதாவையே.." என்று ஆரம்பிக்கும் போதே, "அவ புருஷன் என்னை செருப்பை கொண்டு அடிப்பான்" என்று சொல்லி இருந்தான்.

 

அவளோ அதிர்ந்து பார்க்க, "ம்ம், அவளுக்கு கல்யாணம் ஆகிருச்சு.. என்னோட பிராண்ட் மட்டும் தான் அவ... வேற எந்த பொண்ணை பார்க்குற ஐடியாவும் இப்போ எனக்கு இல்ல.. அதே மாதிரி உன்னை பார்க்குற ஐடியாவும் இல்ல... எனக்கு டைம் வேணும்... நீ பார்த்துக்கோ" என்றவன் அங்கிருந்து நிற்காமல் கீழே இறங்கி வந்து அவனின் வீட்டிற்கு சென்று விட்டான்.

 

யாரும் எதுவும் அவனை கேட்கவில்லை.

 

அடுத்த நாள் காலை சாஹீலின் வீடு தட்டப்பட்டது.

 

ஹம்சா தான் நின்று இருந்தான்.

 

 

 

 

 

 

 

அத்தியாயம் 69

 

ஹம்ஸாவை காலையிலேயே நிச்சயமாக சாஹில் எதிர் பார்க்கவில்லை. மயூரனிடம் இருந்து அவன் நல்லவன் என்கிற செய்தி மட்டும் அவனுக்கு வந்து தான் இருந்தது.

 

"வாங்க" என்று உள்ளே அழைத்து இருந்தான். இப்பொது வரை பெரிதாக இருவரும் பேசி கொண்டது இல்லை தான். ஆனாலும் காகேஷ் சிட்டு என்று இருவருடனும் சம்மந்தப்பட்டவன். அப்போதும் கூட அவனின் மனது இவனை ஹன்சிகாவுடன் சம்மந்தப்படுத்தி பார்க்கவில்லை.

 

உள்ளே வந்தவன் அவன் சொல்வதற்கு முன்னமே நாற்காலியில் அமர்ந்து இருந்தான்.

 

"ஏதாச்சு சாப்பிடுறீங்களா?" என்று கேட்கவும், "இல்ல எதுவும் வேண்டாம். அப்புறம் நீ வா போன்னே கூப்பிடலாம். ஒரே வயசு தான் இரண்டு பேருக்கும் நினைக்கிறன்" என்று சொல்ல, "ம்ம் சரி சொல்லு... என்ன திடிர்னு இங்க வந்து இருக்க?" என்று கேட்டு இருந்தான்.

 

"கொஞ்சம் பேசணும் சாஹில்" என்றவன் கண்களாலேயே அவனையும் எதிரே அமர சொல்லி இருந்தான்.

 

அவனும் அமர, "நீ ஏன் ஹன்சிகாவை ஜெயில்ல போட மாட்டேங்குற சாஹில்?" என்று நேரடியாகவே கேட்டு இருந்தான்.

 

சாஹிலோ அவனை பார்க்க, "நீ அவளை ஜெயில்ல போடு சாஹில் அது தான் அவளுக்கும் உனக்கும் நல்லதுன்னு எனக்கு தோணுது. அவளுக்கும் தண்டனை அனுபவச்சிட்டோம்னு ஒரு எண்ணம் வரும். உனக்கும் அவளை தண்டிச்சிட்டோம்னு ஒரு நிம்மதி இருக்கும். இல்லனா இரண்டு பேருக்குமே நிம்மதி இருக்காதுன்னு தோணுது... அவ உனக்கு பண்ண தப்புக்கு இப்போ நீ பண்ணுற... திருப்பி அவளும் நானும் பழி வாங்க போறேன்னு கிளம்புனா? அப்புறம் பழிக்கு பழின்னு போய்க்கிட்டே இருக்க வேண்டியது தான். குழந்தையோட ரெஸ்பான்சிபிலிட்டி எல்லாம் நீ எடுக்க வேண்டாம் சாஹில்.. அதெல்லாம் கூட நான் பார்த்துக்கறேன். நானும் ஏசிபியும் இருக்கோம். கண்டிப்பா அவளையும் அப்படியே தேங்கி நிற்க வைக்க மாட்டோம். நீயும் அங்கேயே தேங்கி நிற்காதன்னு தான் நான் சொல்றேன். நீ நல்லவன் சாஹில்.. நல்லா வாழனும்... உண்மையாவே மாமாவும் மயூரனும் உன்னை பத்தி நிறைய கவலை படுறாங்க... எப்படி வாழ வேண்டிய பையன் நீ! இப்படி சிரிப்புக்கே பஞ்சம் ஆகி போய் இருக்கறதை எங்களுக்கு பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு... அவ பண்ணதுக்கு அவ அனுபவிக்கட்டும். நீ ஏன் அனுபவிக்குற?" என்று அவனை தான் பார்த்து இருந்தான்.

 

சாஹிலோ ஒரு வித புன்னகையுடன், "பரவால்ல, என் அண்ணா கூட நான் தான் தப்பு பன்னேனு பேசும் பொது நீ உன் தங்கச்சி தான் தப்பு பண்ணான்னு பேச வந்து இருக்க... ஆனா உங்க யாருக்கும் தெரியாத ஒன்னு இருக்கு...அவ எனக்கு ட்ராக் கொடுத்தா தான் ஆனா அது ஓவர் டோஸ் எல்லாம் இல்ல... உண்மையா சொல்லனும்னா அந்த டோஸ் கொடுத்தா எல்லா ஆம்பளைங்களும் எல்லாம் இப்படி ஓவரா செக்ஸ்ல ஈடுபட மாட்டாங்க... ஒரு ஐம்பது சதவீதம்ன்னு வச்சுக்கோயேன்... மீதி ஐம்பது சதவீதம் ஆண்கள் அவங்களுக்கு முன்னவே ஈடுபாடு இருக்கிற பொண்ணுங்க மேல தா அவங்களோட அர்ஜசை காட்டுவாங்க... ஒரு டாக்டரா இது எனக்கு தெரியும். அப்படி பார்த்தா நான் அந்த வீக்கா ஆனா ஐம்பது சதவீத ஆண்கள்ல வந்துருவேன். இல்ல எனக்கு உன் தங்கச்சி மேல முன்னாடியே ஆசை இருந்து இருக்கனும்... உண்மையா சொல்லனும்னா எனக்கு உன் தங்கச்சி முகத்தை மறக்க தான் முடியல... நான் முதன் முதல்ல கை நீட்டி அடிச்ச பொண்ணுன்னு அவ மேல ஒரு கில்ட் இருந்துது ஆனா ஆசை இருந்துதான்னு தெரியல... நான் என் நினைவுல தேங்கி நின்ன முதல் பொண்ணு உன் தங்கச்சி தான்... அப்படி பார்த்தா ஒரு விதத்துல நானும் குற்றவாளி தான். ஆனா உன் தங்கச்சி மேல எனக்கு இருக்குற கோவம் என்ன தெரியுமா? அவளுக்கு வேணும்னா எந்த எல்லைக்கும் போய் அதை சாதிச்சிக்கணும்னு இருக்குற வெறி தான் எனக்கு கோவமா வருது. அதுக்கு கண்டிப்பா அவ அனுபவிக்கணும். அட் தி செம் டைம் குழந்தையும் எனக்கு வேணும். உன் தங்கச்சிக்கு டிவோர்ஸ் கொடுத்தா கூட குழந்தையை கண்டிப்பா உங்க கிட்ட எல்லாம் கொடுக்க மாட்டேன். நீங்க வேணா உங்க தங்கச்சிக்கு வேற மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் கட்டி வைங்க.. ஆனா என் குழந்தை என் கிட்ட தான் இருக்கும்... இதுல எந்த மாற்றமும் இல்ல... உன் அண்ணா கிட்டையும் சொல்லிடு" என்று அவன் சொல்ல, ஹம்சாவிற்கு தான் இப்பொது தலையே சுற்றியது.

 

"இதை ஹன்சிகா கிட்ட சொன்னியா?" என்று கேட்க, "இன்னும் இல்ல நீயே போய் சொல்லிடு... எனக்கு கொஞ்சம் டைம் வேணும்.. நான் எல்லாத்தையும் பிராசஸ் பண்ணனும்... ஒரு இரண்டு நாள் கழிச்சி அவளையும் அண்ணி இரண்டு போரையும் செக் அப் கூட்டிட்டு வா" என்று சொல்லி முடித்து இருந்தான்.

 

"சரி நான் கிளம்புறேன்" என்று ஹம்சா அங்கிருந்து நகர்ந்து செல்ல, "சாரி உன் தங்கச்சிய பட்னியா போட்டதுக்கு" என்று சொல்லவும், "இந்த சாரி கேமை இதோட நிறுத்திக்கலாம்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டான்.

 

ஹம்சா அங்கிருந்து அவனது காவல் நிலையத்திற்கு சென்றால், அங்கே அவனுக்காக காகேஷ் வேலையை மலையாக குவித்து வைத்து இருந்தான்.

 

இன்னும் ஒரு வாரத்தில் பக்ஷியின் வழக்கு நீதிமன்றத்திற்கு வர போகிறது. அதுக்கான அனைத்து வேலைகளையும் முடித்தே தீர வேண்டும் என்று வேலையை குவித்து இருந்தான்.

 

"உங்க அண்ணா உங்களை விட ரொம்ப மோசமா இருக்கார் அன்னம்" என்று குயில் கூட சொல்லி இருந்தாள்.

 

"இப்பவாச்சு என் அருமை உனக்கு புரியுதா டி?" என்று கேட்டவனின் தலையில் நங்கென்று கொட்டு வைத்து, "வேலை நேரத்துல என்ன டா ரோமன்ஸ்?" என்று காகேஷ் அவனின் பின்னால் வந்து நிற்கவும், "உங்களை யாரு இப்போ வர சொன்னா?" என்று கடுப்பாக கேட்டு இருந்தான்.

 

அதற்குள் அவனின் ஓட்டுநர் நவநீதன் தேநீர் எடுத்து வந்து கொடுத்தான்.

 

"சார் பரி மேடம் உங்களை ஒரு டசன் ஆப்பிள், ஒரு டசன் மாதுளை வாங்கிட்டு வர சொன்னாங்க சார்" என்று நவநீதன் சொல்ல, "ம்கூம் என் நிலைமையை பார்த்தியா கல்யாணம் ஆகி ஒரு மாசத்துல எல்லாரும் பூவும் அல்வா கேட்பாங்க என் பொண்டாட்டி என்ன கேட்குறா?" என்று தலையில் அடித்து கொள்ள, "அதான் உங்க வீட்ல ஒண்ணுத்துக்கு இரண்டு பேரு கன்ஸீவா இருக்காங்களே அதான் கேட்குறாங்க" என்று குயில் சொல்லவும், "பாரு டா வந்த புதுசுல குயிலுக்கு குகுன்னு கூட சொல்ல தெரியாது இப்போ எப்படி பேசுற?" என்று சொல்லவும், அவளும் அசரது, "எல்லாம் உங்க பார்ட், ஸ்பாரோ ட்ரைனிங் தான் சார்" என்று கண்சிமிட்டினாள்.

 

"எல்லாம் எனக்கு எதிரா சதி பண்ணுறதுக்கே இருக்காளுங்க" என்று நொடித்து கொண்டான்.

 

குயில் கூட சென்று விட்டாள். ஹம்சாவிற்கு தான் மதிய உணவு கூட உண்ண நேரம் கிடைக்கவில்லை. எப்படியோ வேலை எல்லாம் முடித்து வீடு திரும்பி இருந்தான்.

 

அவன் பைக்கை விட்டு இறங்கியதும், அவனின் முன் வந்தது என்னவோ அவனின் செல்லம் ஸ்ராவனி தான்.

 

"மாமா எனக்கு மாங்காய் வேணும்" என்று அவன் முன் வந்து நின்றாள் குட்டி ஸ்ரவாணி.

 

அப்போது தான் அவன் பைக்கை விட்டு கீழே இறங்கி இருந்தான்.

 

"வேலை ஆளுங்க யாரும் இல்லையா செல்லம்?" என்று அவளின் கன்னம் பிடித்து கேட்க, "இருக்காங்க ஆனா நீங்க எடுத்து கொடுத்து தான் செம்மயா இருக்கும்" என்று அவள் குண்டு கண்கள் உருட்டி பேசவும், அவனுக்கும் மறுக்க மனம் ஏனோ வரவில்லை.

 

அவனின் மனதே சோர்வாக தான் இருந்தது. ஹன்சிகா ஒரு பக்கம், பக்ஷிராஜன் ஒரு பக்கம், இதில் காகேஷ் ஒரு பக்கம் என்று அவனும் சமாளித்து கொண்டு தான் இருந்தான்.

 

சாஹிளிடம் இன்று பேசிவிட்டு வந்ததில் இருந்து அவனின் மனதில் வேறு பாரம் ஏறி இருந்தது.

 

ஸ்ரவாணியின் சிரிப்பு அவனின் மனதிற்கு இதமாக இருந்தது என்னவோ உண்மை தான்.

 

வீட்டின் அருகே இருந்த மரத்தின் அருகே சென்று அவளுக்காக அவன் கை எட்டும் தூரத்தில் இருந்த மாங்காயை எடுத்து கொடுக்க, "மாமா அதை கட் பண்ணி உப்பு மிளகாய் போட்டு கொடுங்க" என்று அவனுக்கு ஆணை பிறப்பித்து கொண்டு இருந்தாள் அந்த வீட்டின் இப்போதைய இளவரசி.

 

உண்மையாகவே இப்போது அந்த குமரகத்தில் இருக்கும் சிட்டு என்னவோ ஸ்ரவாணி தான்.

 

அவனே சென்று மாங்காயை வெட்டி அவளுக்கு உப்பு காரம் போட்டு கொடுக்க, அங்கிருந்த வேலை ஆட்கள் தான் உலகின் எட்டாவது அதிசயத்தை பார்த்து கொண்டு இருந்தனர். அவனுக்கு தண்ணீர் கூட அவர்கள் தான் கொண்டு வந்து தர வேண்டும். இதில் அவனே மாங்காயை வெட்டி, உப்பு மிளகாய் தூள் போட்டு அதுவும் ஒரு ஐந்து வயது பெண்ணிற்கு கொடுப்பது எல்லாம் அதிசயம் தான் !

 

இன்று வரை ஹன்சிகாவிற்கு கூட அவன் இதை எல்லாம் செய்தது இல்லை. ஹம்சாவையே அவளின் சுண்டு விரலில் அசைத்து தான் வைத்து இருந்தாள் ஸ்ரவாணி.

 

இதை அனைத்தையும் பார்த்து இருந்த ஹன்சிகாவிற்கு கூட வாய் பிளந்து விட்டது. ஹம்சாவா இது? என்கிற எண்ணம்.

 

"அண்ணி எனக்கு இந்த அண்ணா ஒரு க்ளாஸ் தண்ணி கூட எடுத்து கொடுத்தது இல்ல தெரியுமா?" என்று பரியின் செவிகளில் ரகசியம் பேசி இருந்தாள்.

 

"எல்லாம் அப்படி தான் டி.. அக்கா தங்கச்சி எல்லாம் விட அவங்க பெத்தவங்க மேல தான் பாசம் அதிகம். உன் அண்ணா அந்த காக்கா கூட அப்படி தானே" என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, "ஹன்சிகா" என்று ஹம்சா அழைக்க, அவளும் அவனின் முன் வந்து அமர்ந்தாள்.

 

இதே சமயம் வீட்டில் அனைவரும் சரியாக உள்ளே நுழைந்து இருந்தனர்.

 

சாஹில் சொன்ன அனைத்தையும் அவளின் முன் சொல்ல, அவளோ அசையாமல் இருந்தவள், பின்பு, "தெரியும்" என்று முடித்து இருந்தாள். இப்போது அதிர்வது அவர்களின் முறை ஆனது.

 

 

 

அத்தியாயம் 70

 

"ஏதே தெரியுமா? எங்களை எல்லாம் பார்த்தா உங்க இரண்டு பேருக்கும் எப்படி தெரியுது?" என்று ஜடாயு கத்த, "இல்ல அது... நான் டோஸேஜ் பார்த்து தான் கொடுத்தேன்... அப்புறம் அவருக்கு ஏதாவது ஆகிருமோனு ஒரு பயம் இருந்தது. பட் போட்ட பிளான் வர்க் அவுட் ஆகிருச்சு... எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல... ஆனா ரொம்ப கில்டியா இருக்கு" என்று அவள் சொல்லவும், "இப்படியே நீ கில்டியா இரு... அவன் யோசிச்சிகிட்டே இருப்பான். வாழ்க்கை முடிஞ்சிரும்... என்னவோ பண்ணுங்க... இதுக்கு மேல இவங்க இரண்டு பேருக்கும் பஞ்சாயத்து பண்ற நம்ப தான் லூசு" என்று ஜடாயு அங்கிருந்து நகர்ந்து விட்டான்.

 

பரியோ, "நீயும் உங்க அக்கா அண்ணாங்க மாதிரி தான் டி நல்லா அமுக்குணி மாதிரி இருக்க" என்று அவளின் கன்னத்தில் இடிக்க, "அண்ணி... எனக்கு உண்மையாவே சாஹிளுக்கு இதெல்லாம் தெரியும்னு தெரியாது. ஆனாலும் இப்போ கொஞ்சம் பெட்டெர்ரா இருக்கு" என்று சொன்னவள் முகத்தில் உண்மையாகவே கொஞ்சம் தெளிவு வந்து இருந்தது தான்.

 

"எல்லாம் சரி ஆகிடும் கவலை படாத" என்று சொல்ல, "சரி ஆகலானாலும் பரவால்ல... நான் இந்த பேபி கூட இருந்துக்குவேன்" என்று அவள் வயிற்றை தடவி சொல்ல, "அது என்ன பேபி? நாங்க எல்லாம் இல்லையா என்ன?" என்று பரி கேட்க, அவளிடம் பதில் இல்லை.

 

உண்மையாகவே அவள் என்ன நினைக்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை.

 

"அண்ணி எனக்கு ஒரு ஹெல்ப் பண்றிங்களா? உங்க பிராண்ட் ஒருத்தவங்க டேட்டா சயின்டிஸ்ட்டா வேலை பார்க்குறாங்கனு சொன்னிங்களே... அவங்க கம்பெனில ஏதாவது வர்க் பிரம் ஹோம் மாதிரி டேட்டா சயின்ஸ் சம்மந்தமான வேலை கிடைக்குமான்னு கேட்டு சொல்றிங்களா ப்ளீஸ்" என்று கேட்கவும், பரியின் கண்கள் சுருங்கியது.

 

அவளுக்கு கீழே ஆயிரம் பேர் வேலை செய்யும் அளவு அவளுக்கு சொத்து இருக்கிறது தான். அதுவும் இன்று வரை வீட்டில் கூட வேலை செய்யாத பெண் தான். ஆனால் இன்று வேலை பற்றி கேட்கிறாள்.

 

"எதுக்கு இப்போ வேலை எல்லாம் ஹன்சி? ப்ரெக்னெண்டா இருக்க வேற... முதல் பிரசவம் அதுவும்... இப்போ நடக்குற எல்லாத்தளையும் உன்னோட மெண்டல் ஹெல்த் கூட சரி இல்ல...இப்போ திடிர்னு வேலைன்னு சொல்ற" என்று கேட்டவளின் குரலில் உண்மையாகவே கவலை நிறைந்து இருந்தது.

 

"ஐயோ இல்ல அண்ணி.. ஏன் அக்கா நீங்க எல்லாரும் வேலைக்கு போறிங்களே... குயிலும் மைனாவும் கூட போறாங்க தானே? நானும் என் சொந்த கால்ல நிக்கனும்னு நினைக்கிறது தப்பு இல்லையே... அதுவும் நான் யூனிவர்சிட்டி டாப்பர் அண்ணி... படிச்சிட்டு இப்படியே வீட்ல டிகிரி பீரோல வைக்கவா? ஏதாவது வேலைக்கு போனா எனக்கும் ஒரு செஞ் இருக்கும் தானே? கேட்டு பாக்குறீங்களா ப்ளீஸ்" என்று அங்கேயே வந்து நின்றாள்.

 

"சரி ஹன்சி நீ ஏதோ சொல்ற... நான் ஆனா கேட்டு பாக்குறேன்" என்று சொல்லி சென்றவளுக்கு அப்போதும் மனது கேட்கவில்லை.

 

அவர்களின் அறைக்கு செல்ல அங்கே காகேஷ் இருந்தான்.

 

"என்ன ரொம்ப யோசனையா இருக்க?" என்று அவன் அவளின் கன்னத்தை தட்டி கேட்க, அவளோ அவனை இறுக அணைத்து இருந்தாள்.

 

அவளின் அணைப்பே ஏதோ அவளுக்கு பயம் என்று உணர்த்தியது.

 

"என்ன ஆச்சு என் பார்ட்க்கு?" என்றவன் அவளை அப்படியே அவனின் மடியில் அமர்த்த, "எனக்கு எதுவும் இல்ல காகேஷ் ஆனா ஹன்சிக்கு தான் ஏதோன்னு நினைக்கிறன்" என்றவள் அவள் வேலைக்கு செல்ல நினைப்பதை சொல்லி இருக்க, "இதுல என்ன இருக்கு? என்னை கேட்டா அவ இப்போ தான் சரியா முடிவு எடுக்குறா... அவ அவளோட கால்ல நிக்குறது தான் என்னைக்கும் நல்லது. இந்த குடும்ப சொத்து எல்லாம் எங்களோடது இல்ல... அதனால அதை எல்லாம் நாங்க யாரும் யூஸ் பன்னுறதே இல்லையே... அவ வேலைக்கு போகட்டும்... சொன்ன மாதிரி அவளுக்கு இப்போ தேவை மாற்றம். அது கண்டிப்பா அவ வேலைக்கு போனா கிடைக்கும். நீ உன் பிராண்ட் கிட்ட கேட்டு பாரு" என்று சொல்லி இருந்தான்.

 

அவளும் தலையசைத்து வந்து விட்டாள்.

 

அடுத்த நாள் அவர்கள் அனைவரும் உணவு உண்ண அமர்ந்து இருந்தனர். ஹன்சிகாவும் சிட்டுவும் மட்டும் உண்ணவில்லை. அவர்களுக்கு தான் மருத்துவமனை செல்ல வேண்டியது இருந்ததே... தண்ணீர் மட்டும் குடித்து இருந்தார்கள். "ஹன்சி உன்னோட ரெஸ்யூம் என் பிராண்ட் கேட்டா... நீ கொடுத்தா அவ ப்ரொபைல் செக் பண்ணிட்டு சொல்றாளாம்" என்று சொல்லவும், "தேங்க்ஸ் அண்ணி" என்று அவள் புன்னகையுடன் சொல்ல, மயூரன் தான், "எதுக்கு ரெஸ்யூம்?" என்று கேட்கவும், "அது நான் வேலைக்கு போகலாம்னு இருக்கேன்... இங்கையே வர்க் பிரேம் ஹோம் மாதிரி" என்று ஹன்சிகா சொல்ல, "ஓஹ் நைஸ்.. ஆள் தி பெஸ்ட்" என்று சொல்லவும்,  அவளும் புன்னகைத்தாள்.

 

அவனுக்கு மட்டும் தான் புதிய தகவல். காகேஷ் நேற்றே இதை ஜடாயு சிட்டுவிடம் சொல்லி இருந்தான். ஹம்சாவிடம் சிட்டு சொல்லி இருந்தாள்.

 

அவர்களுக்கும் அது சரியாக பட்டது.

 

"சரி இரண்டு பேரும் கிளம்புங்க இன்னைக்கு செக் அப் போகணும்ல" என்று ஜடாயு சிட்டு மற்றும் ஹன்சிகாவை பார்க்க, "மாமா என் பைல்?" என்று அவள் கேட்கும் போதே, "உன் புருஷன் எடுத்துட்டு வருவான். நீ வா" என்றவன் அவர்கள் இருவரையும் அழைத்து கொண்டு சென்றான்.

 

"இன்னைக்கு என்ன பஞ்சாயத்தோ?" என்று பரி சொல்ல, "வந்தா தெரியும்.. நீங்க எனக்கு சாம்பார் ஊத்துங்க" என்று ஹம்சா சொல்லவும், "டேய் அவங்களையாவது அண்ணின்னு கூப்பிட்டேன் டா" என்று மயூரன் சொல்லவும், ஹம்சா பரியை பார்க்க, "உங்க இஷ்டம் தான்... அண்ணின்னு கட்டாயம் கூப்பிடணும்னுலாம் இல்ல" என்று அவள் சொல்லவும், "அதான் டீச்சர் அம்மா சொல்லிட்டாங்களே அப்புறம் என்ன டா... நான் கிளம்புறேன் டீச்சர் அம்மா" என்றவன் காகேஷையும் ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றான்.

 

"அவன் எல்லாம் உங்களை அப்படி கூப்பிட மாட்டான் அக்கா" என்று மயூரன் சலிப்பாக பேசவும், "பரவால்ல அவன் அம்மான்னு அப்போ கூட கூப்பிடுறான் தானே அதுவே போதும்" என்று சொல்லி இருந்தாள் பரி.

 

"இதற்கு ஏசிபியின் பதில் என்னவோ?" என்று காகேஷை பார்க்க, "அவங்க யாருக்குள்ளையும் நான் போக மாட்டேன் டா... ஹன்சி, ஹம்சா, பார்ட்க்கு நடுவுல நான் மட்டும் இல்ல சிட்டுவும் தான் வரமாட்டா... ஏன் சிட்டுக்கும் உங்களுக்கும் நடுவுல கூட ஜடாயு வர்றது இல்ல தானே அதே போல தான்" என்றவன் அவனும் காவல் நிலையம் கிளம்பி இருந்தான்.

 

இங்கோ சிட்டு, ஜடாயு மற்றும் ஹன்சிகா மூவரும் மருத்துவமனை வந்து இருந்தனர். போன முறை அவளுக்கும் சாஹிளுக்கும் நடுவில் நடந்த உரையாடல் தான் நினைவிற்கு வந்தது.

 

இதே இடத்தில் தானே, அவளது குழந்தையே யாருடையது என்று கேட்டு இருந்தான்.

 

"நான் வேற டாக்டர்ர பார்க்குறேன் மாமா" என்று உள்ளே செல்லும் போதே அவள் சொல்ல, "எதுக்கு?" என்று சிட்டு கேட்க, அவளுக்கு ஜடாயுவுடன் பேச கூட தைரியம் இருந்தது ஆனால் அவளது அக்காவிடம் வாயை திறக்கவே பயம் தான். இதே தான் காகேஷ் மற்றும் பரியின் விடயத்திலும், அண்ணி, மாமா என்று உரிமையாக பேசுபவள், அக்கா, அண்ணா என்று சிட்டு மற்றும் காகேஷ் இடத்தில் உரிமை எல்லாம் எடுப்பதில்லை.

 

"அவன் கிட்ட தான் நீ பார்க்குற... போன தடவை என்ன வேணா அவன் பேசி இருக்கட்டும்... அதான் இப்போ எல்லாம் தெளிவாகிடுச்சுல இப்போ அதே போல பேசுனா.. கூட இருந்த உனக்கு யாரோட குழந்தைன்னு தெரியாதான்னு கேளு... அவன் நல்லவன் தான்... அதுக்காக அவன் பண்ணுற எல்லாமே சரின்னு ஆகிடாது... பழிக்கு பழின்னு போய்கிட்டே இருந்தா அப்புறம் வாழ்க்கைல நிம்மதியே இருக்காது" என்றவள் நிற்காமல் உள்ளே நடந்தாள்.

 

பாவமாக ஹன்சிகா ஜடாயுவை பார்க்க, "நீ வரலைனா உன் அக்காவே உன்னை சாஹில் ரூம்ல உள்ள தள்ளிருவா... வா மா" என்று அவன் தான் அழைத்து கொண்டு சென்றான்.

 

முதலில் ஜடாயுவும் சிட்டுவும் சென்றனர்.

 

இரண்டு நாள் கழித்து பார்க்கிறான். அன்றைக்கு நடந்த பிரச்சனையே போதுமாக இருந்தது. நேற்று ஹம்சாவிடம் பேசியதும் அவர்களின் செவியை அடைந்து இருக்கும் என்று அவனுக்கு தெரியும்.

 

சிட்டுவை பார்த்து புன்னகைத்தவன், "வாங்க அண்ணி... தண்ணி குடிச்சி இருக்கீங்க தானே?" என்று உறுதி செய்து கொண்டு அவனும் சென்று சோனோகிராபி செய்ய, "வாவ் கங்கிராட்ஸ் அண்ணி... உங்களுக்கு ட்வின்ஸ்" என்று அவன் சொல்ல, "உண்மையாவா?" என்று ஜடாயு மற்றும் சிட்டு இருவரும் ஒரே போல கேட்டு இருந்தனர்.

 

சிட்டுவோ ஜடாயுவின் கைகளை பற்ற, அவனும் அவளுக்கு கைகளை அழுத்தி கொடுத்து இருந்தான்.

 

"கொஞ்சம் டயட் எல்லாம் இன்னும் கவனமா இருங்க அண்ணி.. நானே என்ன எல்லாம் சாப்பிடணும்னு சொல்றேன்" என்று சொல்லி அவளுக்கு தேவையான மருந்துக்களை கொடுத்து இருந்தான்.

 

"தேங்க்ஸ் டாக்டர்" என்று ஜடாயு சொல்ல, "கோவமாக இருக்கிறான்" என்று தெரிந்தது.

 

"நீ போ ஹன்சிகாவை அனுப்பு" என்று சிட்டுவிடம் சொல்ல, அவளோ புருவம் சுருக்கி பார்த்து விட்டு, சரி என்று தலையசைத்து சென்று இருந்தாள்.

 

வெளியே வந்து, "நீ உள்ள போ.. ஜடாயு இருக்கார்" என்று சொல்ல, அவளும் உள்ளே நுழைந்தாள்.

 

சாஹிலோ ஜடாயு இங்கேயே அமர்ந்து இருப்பதை பார்த்து விட்டு, "உங்க வைப் தான் போய்ட்டாங்களே... நான் அடுத்த பேஷண்ட் பார்க்கணும்" என்று ஹன்சிகா உள்ளே வந்ததை பார்த்து சொல்ல, "சோ வாட்? என்னோட மச்சினிச்சி தான்... அவ ஹெல்த் எப்படி இருக்குனு தெரிஞ்சிக்குறேன்" என்று சொல்ல, ஹன்சிகாவோ, ஏதோ நடக்க போகிறது என்பதை மட்டும் உறுதி செய்து கொண்டு ஜடாயுவின் அருகில் அமர்ந்தாள்.

 

இரு வேங்கைகளுக்கு நடுவில் அமர்ந்து இருப்பவள் நிலை என்னவோ?

 

இங்கோ மயூரனுக்கு பெண்ணை பார்க்க துவங்கி இருந்தார் ராஜேஸ்வரி. ஆனால் மயூரனின் மடியில் அமர்ந்து இருந்தாள் மயில்.

 

 

அத்தியாயம் 71

 

ஜடாயு இப்படி இங்கேயே அமர்வான் என்று சாஹில் நினைத்து கூட பார்க்கவில்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இன்று ஹன்சிகாவிடம் கொஞ்சம் நல்ல மாதிரியாக பேசலாம் என்று தான் நினைத்து இருந்தான். ஆனால் ஜடாயு இருக்கையில் என்ன பேசுவது? போன முறை அவன் இருந்த மனநிலை வேறு இன்று இருக்கும் மனநிலையும் வேறு தான். அவளுக்கு வலிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தான். வலிக்க வைத்து விட்டான்.

 

அவளிடம் காதல் இல்லை. ஆனால் அவனுக்கே உண்டான கருணை இருக்கிறது. அதுவும் அவனின் மகவை சுமந்து கொண்டு இருக்கும் பெண்ணின் மீது அவனுக்கு கரிசனம் தான் வந்தது.

 

பதிலுக்கு பதில் என்று அவன் செய்யவில்லை என்றாலும் செய்ததே போதும் என்கிற எண்ணத்திற்கு வந்து விட்டு இருந்தான். அதுவும் அவளின் மாற்றத்தை எல்லாம் பார்த்தவனுக்கு இனி அடித்து என்ன பிரயோஜனம் என்கிற எண்ணம் வேறு வந்து இருந்தது. கண்களில் உயிர்ப்பு இல்லாமல் இருக்கிறாள். செத்த பாம்பை எதற்கு அடிப்பது?

 

அவளுடன் வாழ்வெல்லாம் அவன் நினைக்கவில்லை. ஆனால் இருவருக்கும் இடையில் இருக்கும் உயிரை விடவும் அவனுக்கு எண்ணம் இல்லை.

 

"நீங்க எதுக்கு இங்க இருக்கீங்க?" என்று இப்பொது ஜாடாயுவை பார்க்க, "அதான் சொன்னேனே என்னோட மச்சினிச்சி தான். என் பொண்ணு மாதிரி அவளோட ஹெல்த் முக்கியம்ல... அவளை கட்டி கொடுத்தவனுக்கு பொண்டாட்டிய பார்த்துக்க துப்பு இல்ல... என்ன பண்ணுறது டாக்டர்? இவ அக்கா அண்ணாங்களுக்கு தங்கச்சிய விட அவளை கட்டிக்கிட்டவன் பெருசா தெரியுறான். ஆனா எனக்கு அந்த அரைலூசை விட என் மச்சினிச்சி தான் பெருசா தெரியுறா" என்று சாஹீலின் முன்னே அவனை அரை லூசு என்று வேறு சொல்லி இருந்தான்.

 

ஹன்சிகாவோ அதிர்ந்து ஜாடாயுவை பார்த்தாள். இதுவே வேறு யாராவது என்றால் கூட சாஹிளுக்காக பேசிருப்பாள். பேசுவது அவனின் அண்ணா வேறு என்ன என்று பேச முடியும்? அவனுக்கு இல்லாதா உரிமையா யாருக்காவது இருக்க போகிறது.

 

"என்ன மா நான் ஏதாவது தப்பா உன் புருஷனை பத்தி பேசிட்டேனா?" என்று வேறு அவளிடம் கேட்டு இருந்தான்.

 

அவளின் மனதிலோ, 'ஐயோ இப்போ நான் என்ன சொல்லுறது? அரை லூசு தான்னு சொல்லவும் முடியாது. இல்லன்னும் சொல்ல முடியாது' என்று நினைத்து கொண்டே, "நான் என்ன மாமா சொல்லுறது... நீங்க என்ன சொன்னாலும் சரி தான்" என்று சொல்லி விட்டாள்.

 

சாஹிலோ பற்களை கடித்து கொண்டு இப்பொது ஹன்சிகாவை பார்த்தான். ஜாடாயு சரி என்றால் அவன் அரை லூசு என்று அர்த்தம் அல்லவா!

 

"அப்புறம் என்ன டாக்டர் அதான் என் மச்சினிச்சியே அவ புருஷனை அரை லூசுன்னு சொல்லிட்டாளே" என்றானே பார்க்கலாம். தூக்கி வாரி போட்டது ஹன்சிகாவுக்கு...

 

"ஐயோ மாமா நான் அப்படி சொல்லல" என்று உடனே மறுத்து பேச, அவனோ, "என்ன மா நீ தானே நான் சரின்னு சொன்ன" என்று கேட்க, அவளும் ஆமாம் என்று தலையசைத்தாள்.

 

சாஹிலோ உதடை குவித்து ஊதிக்கொண்டு, "ஸ்கேன் போகலாம்" என்று சொல்ல, ஹன்சிகாவும் எழுந்தாள்.

 

"என் மச்சினிச்சி பத்திரம்" என்று அப்போதும் சொல்ல, சாஹிலோ அவனை பார்த்து, "ஒன்னும் ஆகாதுங்க உங்க மச்சினிச்சிய பத்திரமா கொண்டு வந்து விடுறேன்" என்று சொல்லி அழைத்து சென்றான்.

 

ஹன்சிகாவிற்கு இருவரும் பேசுவதை பார்த்து சிரிப்பு வந்து விட்டது. "என்ன டி சிரிக்கிற?" என்று சாஹில் கேட்க, "என்ன டி எல்லாம் போடுறீங்க? பேஷண்டை மரியாதையா நடத்துங்க" என்று வேறு ஜடாயு சொல்ல, அதற்கு மேல் சாஹிலால் முடியவில்லை, ஹன்சிகாவின் கையை பிடித்து இழுத்து சென்று விட்டான்.

 

பின்பு அவளை படுக்க சொல்லி அவள் அணிந்து இருந்த குர்த்தாவை உயர்த்த, பின்பு பார்த்தான். குழந்தை நன்றாக தான் இருந்தது.

 

"குழந்தை ஹெல்தியா தானே இருக்கு?" என்று அவனை பார்த்து கேட்க, அவனும் அவளை பார்த்து, "ம்ம் நல்லா இருக்கு" என்று சொல்லி அவளின் வயிற்றில் கை பதிக்க, அவளோ, "இப்படி தான் வர பொண்ணுங்க வயித்துல எல்லாம் கை வைப்பிங்களா?" என்று புருவம் உயர்த்தி கேட்டு இருந்தாள்.

 

அவனை சீண்ட தான் கேட்கிறாள் என்று அவனுக்கு தெரியும். அவனோ அவளை ஒரு பார்வை பார்த்து, "எல்லாரு மேலையும் இல்ல மிஸ்டர் ஜாடாயுவோட மச்சினிச்சி, அப்புறம் ஏசிபி காகேஷ் மற்றும் இன்ஸ்பெக்டர் ஹம்ஸாவோட தங்கச்சி மேல மட்டும் கைவைப்பேன்னு சத்தியம் பண்ணிருக்கேன்" என்று அவனும் சளைக்காமல் பேசினான்.

 

"யாரு கிட்ட சத்தியம் பண்ணீங்க?" என்று எழுந்து அமர்ந்தவள், "எனக்கு நானே பண்ணிக்கிட்டேன்" என்று சொல்லிவிட்டு அவளை பார்த்து, "ஆர் யு ஓகே?" என்று கேட்டான்.

 

அவளோ அதிர்ந்து அவனை பார்க்க, "என்ன?" என்றதும், "என்கிட்டையா கேட்குறீங்க?" என்றவளை பார்த்து, "இல்ல உன் தங்கச்சி கிட்ட" என்று சொல்ல, "எனக்கு தான் தங்கச்சி இல்லையே" என்றாள்.

 

"ஆமா ஏன் உனக்கு தங்கச்சி இல்ல... இருந்து இருந்தா அவளை வச்சி உன்னை வெறுப்பேத்தி இருப்பேன். இன்னும் எனக்கு என்டேர்டைன்மெண்ட்டா இருந்து இருக்கும்" என்றவனை பார்த்து, "எனக்கு ஒன்னும் இல்ல.. என் அக்காவும் அண்ணாங்களும் சேர்ந்து உங்களை முடிச்சி விட்டு இருப்பாங்க பரவல்லயா?" என்று சொல்லவும், "நல்லா தான் பேசுற டி" என்று அவளை அவன் கை கொடுத்து தான் எழும்ப வைத்தான்.

 

"ஹே உண்மையாவே ஆர் யு ஓகே?" என்று கேட்க, "ம்ம்... ஆனா மார்னிங் சிக்னெஸ் கொஞ்சம் இருக்கு" என்று சொல்லிவிட்டு நகர, "டேப்ளெட்ஸ் கொடுக்குறேன்" என்று சொல்லிக்கொண்டே இருவரும் வெளியே வந்தனர்.

 

ஜாடாயுவோ, "குழந்தை எப்படி இருக்கு?" என்று கேட்க, "பேபி நல்லா இருக்கு" என்ற சாஹிளை பார்த்து, "நான் என் மச்சினிச்சி நல்லா இருக்காளான்னு கேட்டேன். அவ தானே எனக்கு குழந்தை" என்று சொல்லவும், சாஹில் கை எடுத்தே கும்பிட்டு, "உங்க குழந்தையும் நல்லா இருக்கு... என் குழந்தையும் நல்லா இருக்கு... டேப்ளெட்ஸ் கொடுக்குறேன். கூட்டிட்டு போங்க" என்று சொல்ல, ஹன்சிகாவோ சிரித்து விட்டாள்.

 

சாஹில் முறைத்து, "எப்போ வீட்டுக்கு வர போற?" என்று கேட்க, "இப்போதைக்கு அனுப்புற ஐடியா எனக்கு இல்ல" என்று ஜடாயு சொல்லவும், "நீங்களே வச்சிக்கோங்க" என்று சொன்னவன் அவளுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை கொடுத்து விட்டு அனுப்பி வைத்தான்.

 

அவளிடம் பேசாமல் அனுப்பியதே அவனுக்கு ஒரு மாதிரி இருந்தது.

 

மாலை சென்று வீட்டில் பேச வேண்டும் என்று குறித்து கொண்டான்.

 

மாலையும் வந்தது. இங்கோ ராஜேஸ்வரி மயூரனுக்கு பெண் பார்க்க துவங்கி இருந்தார்.

 

"இங்க பாரு ராஜி மயூரனுக்கு யாரையாவது பிடிச்சி இருக்கான்னு கேளு" என்று கருணாகரன் சொல்ல, கார்மேகம் கூட, "அண்ணி ஒரு வார்த்தை அவனை கேட்கலாம்" என்று சொல்லவும், "மயூரன் ஒன்னும் நான் பெத்த இரண்டு பேரு மாதிரி இல்ல" என்று சொன்னவருக்கு தெரியாது அவன் காதல் காவியமே எழுதி கொண்டு இருக்கிறான் என்று!

 

மைனாவோ மயூரனின் மடியில் அமர்ந்து கொண்டு இருந்தாள்.

 

"விஏஓ என்ன வேலை பாக்குறீங்க?" என்று அவள் கேட்க, "வேலை நேரம் முடிஞ்சிருச்சு... இனி இது என் டைம்" என்று சொல்லவும், "ம்கூம்... என்னவோ போங்க... எப்போ உங்க பெரியம்மா கிட்ட சொல்ல போறீங்க?" என்று கேட்க, "முதல்ல என் அண்ணா கிட்ட சொல்லணும்" என்று மயூரன் சொல்லி அவளையும் எழுப்பி விட்டு, "சரி நான் கிளம்புறேன். இன்னைக்கு வீட்ல செம்ம சீன் இருக்கு நான் போய் பார்க்கணும்" என்று சொல்லவும், அவளோ புருவம் சுருக்கி பார்க்க, "ஒரு பலி ஆடு வர போகுதாம். பாப் காரனோட உட்கார்ந்து பார்க்கணும்" என்று எதுவும் அவளிடம் சொல்லாமல் சென்று விட்டான்.

 

இதோ சொன்னது போல் பாப் கார்ன் உடன் அமர்ந்து இருந்தான் மயூரன். ஹம்சா அவன் அருகில் அமர்ந்து இருக்க, அவனின் மடியில் ஸ்ராவனி அமர்ந்து இருந்தாள்.

 

காகேஷ், சிட்டு மற்றும் பரி மற்றோரு புறம் அமர்ந்து இருந்தனர். ஜாடாயு தான் நடுவில் அமர்ந்து இருந்தான்.

 

"டேய் சாஹிளை தான் டா செய்யவே போறாரு உன் அண்ணா" என்று ஹம்சா சொல்ல, "அதுக்கு தான் டா வெய்ட் பண்றேன். எத்தனை தடவை தெரியுமா நான் தான் உலகத்துலயே நல்லவன்னு சீன் போட்டு இருக்கான். இன்னைக்கு அவனை செய்யுறதை நான் பார்க்கணும்" என்று பாப் கார்ன் சாப்பிட, "எங்களை பைத்தியக்கார குடும்பம்னு சொல்றிங்களே அப்போ நீங்க யாரு டா" என்று கேட்டவனை பார்த்து, "நாங்களும் பைத்தியம் தான் போதுமா? அதான் இரண்டு பேமிலிக்கும் செட் ஆகிருச்சு.. இந்த நீயும் பாப் கார்ன் சாப்பிடு" என்று சொல்லி அவனிடம் நீட்ட, "எனக்கு வேணாம்" என்றவன் சொல்லவும், "சரி தான் போடா... இந்த பேபி நீ சாப்பிடு" என்று ஸ்ராவனிக்கு ஊட்டி விட்டான்.

 

"உன் புருஷன் ஏன் டி இப்படி சாஹிளை செய்யுறான்?" என்று சிட்டுவிடம் காகேஷ் கேட்க, "நீயே கேளேன்" என்றதும் வாயை மூடி கொண்டான்.

 

நினைத்தது போல் வந்து இருந்தான் சாஹில்.

 

என்ன செய்ய காத்து இருக்கிறானோ ஜடாயு?

 

 

 

அத்தியாயம் 72

 

வந்தவன் யாரையும் பார்க்கவில்லை. அவன் பாட்டிற்கு மாடி ஏற சென்று இருந்தான். பார்த்து பேசினால் வைத்து செய்து விடுவார்கள் என்று அவனுக்கு தெரியும். காலையில் மருத்துவமனையில் நடந்ததே இன்னும் அவனின் நினைவில் இருந்தது தான்.

 

"நில்லு" என்று நிறுத்தி இருந்தான் ஜாடாயு.

 

சாஹிலோ அவனை திரும்பி பார்க்க, "இது என்ன லாட்ஜா? நீங்க பாட்டுக்கு வந்து உள்ள போறத்துக்கு?" என்று கேட்க, காகேஷோ சிட்டுவின் செவிகளில், "குசும்பை பார்த்தியா உன் புருஷனுக்கு நம்ப வீட்டை லாட்ஜ்னு சொல்றான். இதையே நம்ப அவன் வீட்டை சொன்னா ஒத்துக்குவானா?" என்று கேட்கவும், "ஏன் டா?" என்று அவளும் கையை விரித்து கேட்டு இருந்தாள்.

 

"லாட்ஜ்ன்னு நான் சொல்லலையே... இது என் பொண்டாட்டி வீடு நான் போறேன்" என்று அவன் சொல்ல, "பொண்டாட்டியா? அவளை நீ போண்டா டி மாதிரி கூட மதிக்கல... இப்போ எதுக்கு இங்க வந்த? அவ தான் இங்க கொஞ்ச நாள் இருக்கேன்னு சொல்லி இருக்கா தானே? இருந்துட்டு போகட்டும். உண்மையா சொல்லனும்னா அவளை உன்கூட அனுப்ப எங்களுக்கு விருப்பம் இல்ல" என்று அவன் சொல்ல, "அதை அவ சொல்லட்டும்" என்றவுடன், "அவ தான் சொன்னா" என்றான் ஜடாயு.

 

அனைவரின் கண்களும் இப்பொது ஜடாயுவில் பதிந்தது. இது அவர்களுக்கே புதிய செய்தி தான்.

 

"என்ன சொல்லுறீங்க?" என்று சிட்டு கேட்க, ஜடாயுவும் சொல்ல துவங்கி இருந்தான். இன்று மதியம் அவனை அழைத்து இருந்தாள் ஹன்சிகா.

 

"உங்களை பார்க்கணும். ஆபீஸ் வரலாமா?" என்று கேட்கவும், "ம்ம் வா" என்று சொல்லி வைத்து இருந்தான். எதற்கு என்று அவனுக்கு தெரியவில்லை. ஆனாலும் முதல் முறை கேட்கிறாள் மறுக்கவும் முடியவில்லை.

 

வந்தவளை பார்த்து, அமர சொன்னவனிடம் அவள் தான் பேச துவங்கினாள்.

 

"உங்க தம்பிய இதோட பார்க்க வேணாம்னு சொல்லிடுங்க ப்ளீஸ்" என்று சொல்லவும், ஜாடாயுவின் கண்கள் சுருங்கியது. இன்று காலை அனைத்தும் நன்றாக தானே இருந்தது. பின்பு ஏன்?

 

"அவன் ஏதாவது சொன்னானா?" என்று கேட்க, "ஐயோ இல்ல.. அவரு எதுவும் சொல்லல.. உங்க அம்மா தான் கால் பண்ணாங்க" என்று சொல்லி இருந்தாள்.

 

ஆம் ராஜேஸ்வரி தான் அழைத்து இருந்தார். சிட்டுவையே வைத்து செய்தவர், உண்மை எல்லாம் தெரிந்த பின் ஹன்சிகாவை விட்டு விடுவாரா என்ன?

 

அழைத்தவர், "உன்னால தான் என் பையன் வாழ்க்கையை போயிருச்சு... அவனுக்கு எவளோ நல்ல பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைச்சேன் தெரியுமா? ஆனா நீ? ச்சீ? நீ எல்லாம் பொம்பளையா டி? உன் அரிப்புக்கு என் மகன் தான் கிடைச்சானா? உனக்கு அப்படி சுகம் வேணும்னா வேற எவன் கிட்டயாவது போக வேண்டியது தானே? உன் அக்காவாவது லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தா ஆனா நீ? இப்படி எத்தனை பேரோட இருந்து இருக்க? வயித்துல வளருறது என் பிள்ளையோட குழந்தை தானா இல்ல வேற எவனுக்காவது பொறந்ததா? இப்போ மயூரனுக்கு பொண்ணு பார்த்துகிட்டு இருக்கோம்... தையவ செஞ்சு நீயே அவன் வாழ்க்கையை விட்டு போய்டு... அவனுக்கு வேற நல்ல பொண்ணா பார்த்து நான் கட்டி வைக்குறேன். இப்போ உன் வீட்ல தான் இருக்கியாமே.. அப்படியே இருந்துக்கோ" என்று சொல்லி வைத்து விட்டார்.

 

அவளை பேச கூட விடவில்லை. சொல்லும் போதே அவளுக்கு கண்ணீர் வந்து விட்டது. செய்தது பிழை தான் ஆனால் இப்படி திரும்பும் இடம் எல்லாம் அடித்தால் அவளும் எப்படி தங்குவாள். திருந்தி விட்டேன் என்று சொல்கிறவளை எப்படி எல்லாம் அடிக்கிறது இந்த உலகம்? பாவம் அவள். குழந்தையை சுமந்து கொண்டு அவள் கேட்க கூடாத பேச்சை எல்லாம் கேட்டு கொண்டு இருக்கிறாள். அவள் செய்த தவறுக்காக தண்டனை தான். ஆனால் அவளது ஒழுக்கத்தை தானே அனைவரும் பேசுகிறார்கள்.

 

இதையே ஒரு ஆண் மகன் செய்து திருந்தி இருந்தாள் இப்படி எல்லாம் கேள்வி வந்து இருக்குமா என்ன? பல பெண்களுடன் சென்று வந்த ஆணை கூட ஏற்று கொள்கிறது இந்த சமூகம். அவன் திருந்தினால் மகான். ஆனால் இதுவே ஒரு பெண் ஒருவனுடன் தான் இருந்தால் கூட இப்படி ஒரு நிலையில் அவளின் குணத்தை மொத்தமாக உடைத்து விடுகிறார்கள்.

 

"வேண்டாம் நான் இந்த குடும்பத்துக்கு வேண்டாம். என்னால தினமும் இந்த கேள்வியை எல்லாம் கேட்டுட்டு வாழ முடியாது. என் குழந்தையை நானே பார்த்துக்கறேன். குமரகம் இல்லனாலும் என்னால வேலை வாங்கி எங்கையும் பிழைச்சிக்க முடியும். என் படிப்பு இருக்கு..என்னால எங்கையும் தேறி வர முடியும். ஆனா இப்படி வார்த்தையால தினம் தினம் சாகுறதை தான் என்னால தாங்க முடியல.. உங்க தம்பிய இப்போ யாராவது ரேப்பிஸ்ட்ன்னு கூப்பிடுறாங்களா இல்லையே... அவரு பண்ண தப்புக்கு நான் தான் காரனும்னாலும் அவரை எல்லாரும் அப்பவே மனிச்சிட்டாங்க... உண்மை தெரியும் முதலே அவரோட ஹாஸ்பிடல்ல கூட அவரை நல்ல விதமா தான் நடத்துனாங்க... ஆனா நான்... என்னால முடியாது..ப்ளீஸ்.. நான் குமரகத்துல இருந்துக்குறேன். அப்படி நான் அங்க இருக்குறதும் எல்லாருக்கும் சுமைனா சொல்லுங்க... நான் வேற எங்கையாச்சு வேலை கிடைச்சதும் போயிடுறேன்... ஆனா என்னால உங்க தம்பி கூட இருக்கவே முடியாது. அவருக்கு உங்க அம்மா சொல்லுற மாதிரி வேற பொண்ணை கல்யாணம் பண்ணி வச்சிக்கோங்க.. என்னை விட்டுடுதுங்க" என்று முகத்தை மூடி கொண்டு கதறி அழுபவளை என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் அமர்ந்து இருந்தான் ஜடாயு.

 

கோவம் எல்லாம் ராஜேஸ்வரியின் பக்கம் திரும்பியது. இன்று வரை அவர் சிட்டுவை பேசியதற்கே அவன் அவரிடம் பேசாமல் தான் இருக்கிறான். அவர் எத்தனை முறை அழைத்தாலும் பதில் கொடுப்பதே இல்லை. இப்பொது இவள் சொல்வதையும் கேட்டவனுக்கு, அவர் எல்லாம் என்ன பெண் என்று தோன்றியது.

 

"தண்ணி குடி" என்று அவளிடம் தண்ணியை நீட்டியவன், அவள் குடித்ததும், "நீ கிளம்பு நான் பேசிக்குறேன்" என்று மட்டும் சொல்லி இருந்தான்.

 

அதற்கு பிறகு தான் அனைவரையும் வர சொல்லி இருந்தான். சாஹில் வருவான் என்று அவனுக்கு தெரியும். ஆதலால் அவனிடம் சொல்ல வில்லை. யாரிடமும் எதையும் மறைக்கும் எண்ணமும் அவனுக்கு இல்லை.

 

காகேஷிற்கு கோவமாக வந்தது.

 

சிட்டுவிற்கு கூட தான், ஹம்சா இன்னும் இறுகி அமர்ந்து இருந்தான்.

 

தவறு அவர்களின் தங்கை செய்ததால் தான் இப்படி! இல்லை என்றால் இன்று சாமி ஆடி இருப்பார்கள்.

 

பரிக்கு மனது கேட்கவில்லை.

 

"உங்க அம்மா என்ன நினைச்சுகிட்டு இருக்காங்க? எங்க வீட்டு பொண்ணை பத்தி இப்படி எல்லாம் பேசுனா கேட்க ஆளு இல்லனு நினைச்சாங்களா? அவ பண்ணது தப்பு தான். அதனால தான் உங்க தம்பி பேசுனத்துக்கு கூட இங்க யாரும் எதுவும் பேசல.. ஏன் இப்போ கூட பேசாம இருக்காங்க... ஆனா இப்படி எல்லாரும் அவளை குறை சொல்லிகிட்டே இருந்தா எப்படின்னு எனக்கு தெரியல... எல்லாரும் திருந்துறது இல்ல ஏன் தெரியுமா ஏன்னா ஒரு தடவை செஞ்ச தப்பை தான் இந்த உலகம் சொல்லி காட்டும். அவ பண்ண தப்பை மன்னிக்க எல்லாம் வேண்டாம். ஆனா இப்படி எதை எதையோ பேசி அவளை வலிக்க வலிக்க அடிக்குறிங்களே! சரி நானும் கேட்குறேன். ஹன்சிகா மருந்து கொடுத்து உங்க தம்பி அவ கூட இருந்தாரு... அப்போ யாரு மருந்து கொடுத்தாலும் கூட இருப்பாரு அப்படியா? அவளோ வீக்கா உங்க தம்பி... அதுவும் அர்ஜஸ் கண்ட்ரோல் பண்ண டாக்டர்க்கு தெரியாத என்ன? பாவம் அவளை இப்படி எல்லாம் பேச உங்களுக்கு எல்லாம் எப்படி மனசு வருது? அவளை இந்த குமரகத்தை விட்டு எல்லாம் நான் அனுப்ப மாட்டேன். அப்படி அவ இங்க இருந்து போகுறானா நானும் இங்க இருந்து போய்டுவேன் பார்த்துக்கோங்க" என்று காகேஷை பார்த்து சொல்ல, அவனோ, "அவளை வெளிய அனுபுறேன்னு யாரு டி சொன்னது? அவளே போறேன்னு சொன்னாலும் நாங்க விட மாட்டோம்" என்று அவன் சொல்லி இருந்தான்.

 

அதுவே சாஹிளுடன் அவன் அனுப்ப மாட்டான் என்கிற முடிவை சொல்லி இருந்தது. இதற்கு மேல் அவனுக்கு சாஹிளுடன் அனுப்ப என்ன பைத்தியமா?

 

"இந்த வீடு பூர்விக வீடு தான். எங்க நாலு பேருக்கும் இதுல சம உரிமை. யாரும் யாரையும் அனுப்ப எல்லாம் முடியாது" என்று ஹம்சா சொல்ல, சிட்டுவோ, "கிளம்பு சாஹில்" என்றே சொல்லி விட்டாள்.

 

அவனுக்கு இன்னும் கோவம் தான் வந்தது.

 

"என்ன பார்த்தா உங்களுக்கு எல்லாம் எப்படி தெரியுது? நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்ல.. என் வாழ்க்கைல முடிவு நான் எடுத்துக்குவேன். என் அம்மா சொன்னாங்க ஆட்டு குட்டி சொன்னாங்கனு எல்லாம் இன்னொருத்தியை கல்யாணம் பண்ண மாட்டேன். ஏன் நீங்க பண்ணிங்களா என்ன?" என்று ஜடாயுவை பார்த்து கேட்கவும், அவனோ, "நான் ஒன்னும் சிட்டுவை.." என்று துவங்கும் போதே, "ஆமா நீங்க அண்ணியை லவ் பண்ணி கல்யாணம் பண்ணீங்க.. எனக்கு இன்னும் அவ மேல லவ் எல்லாம் இல்ல.. ஆனா அதுக்காக என் பொண்டாட்டிய விட்டுட்டு இன்னொருத்தி கூட போகுற அளவுக்கும் நான் இல்ல... அவளுக்கு இங்க இருக்கணும்னா இருக்கட்டும். இது அவ அம்மாவோட வீடு... ஆனா என்னைக்கா இருந்தாலும் என் கூட தான் வந்து இருக்கனும். இது நிரந்தரம் கிடையாது. குமரகத்துல இருக்கறது அவ உரிமையா இருக்கலாம். ஆனா அவ கூட நான் இருக்றதும் என்னோட உரிமை. அதை யாருக்கவும் விட்டு எல்லாம் கொடுக்க மாட்டேன். இன்னைக்கு வரைக்கும் எனக்கு அவ மேல லவ் எல்லாம் இல்ல... ஆனா இப்படி நீங்க எல்லாம் அவளை பூட்டி வச்சே எனக்கு அவ மேல கண்டிப்பா லவ் வந்திரும் போல" என்று சொன்னவன் பரியை பார்த்து, "கவலை படாதீங்க இதோட எந்த மருந்து கொடுத்தாலும் என் பொண்டாட்டி கிட்ட மட்டும் தான் போவேன்" என்று சொல்ல, பரியோ உதட்டை சுழித்து கொண்டாள்.

 

"நீ எதுவும் பேசலையாடா?" என்று மயூரனை பார்க்க, "டேய் நான் இன்னும் எனக்கு பெரியம்மா பொண்ணு பார்க்குறாங்கர ஷாக்ல இருந்தே வெளிய வரல டா" என்று சொல்லி இருந்தான்.

 

இங்கோ இரவே ராஜேஸ்வரி ஆகாயபுரியை நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

அத்தியாயம் 73

 

காலையிலேயே இதோ வந்து இறங்கி இருந்தார் ராஜேஸ்வரி. அவர் மட்டும் தான் வந்து இருந்தார். அவரின் கணவரும் வரவில்லை. மயூரனின் தந்தை கார்மேகமும் வரவில்லை.

 

உள்ளே வந்த அவரை யாரும் வா என்று கூட அழைக்கவும் இல்லை. பரி கூட அப்படியே நின்று தான் இருந்தாள்.

 

"இந்த வீட்டோட இரண்டு பொண்ணையும் என் பசங்களுக்கு தான் கட்டி கொடுத்து இருக்காங்க தெரியுமா? இந்த வீட்டோட மருமக நீ அப்போ என்ன எப்படி கவனிக்கணும்?" என்று அவளிடம் இருந்து தான் ஆரம்பித்து இருந்தார்.

 

அவள் ஒன்றும் இப்பொது பரினீத்தா மட்டும் இல்லையே! முன்னவே அப்படி பேசி இருப்பாள். இப்பொது திருமதி. பரினீத்தா காகேஷ் வேறு சொல்லியா கொடுக்க வேண்டும்?

 

"எப்படி கவனிக்கணும்? நீங்க எங்க வீட்டு பொண்ணுங்களை பேசுன மாதிரி நானும் பேசவா? பிரண்ட்ஸ் இரண்டு பேரை கேவலமா பேசி இருக்கீங்க... அப்படி நானும் உங்களை இன்னொருத்தரோட சேர்த்து வச்சி பேசவா? உங்க பிஸ்னஸ்க்காக தினமும் எத்தனை ஆம்பளைங்கள சந்திக்குறிங்க? அப்போ அவங்க கூட எல்லாம் உங்களுக்கு உறவு இருக்குன்னு சொல்லட்டுமா? சரி எங்க இன்னொரு பொண்ணு பண்ணது தப்பு தான். அதுக்காக என்ன எல்லாம் பேசி இருக்கீங்க... அவ வயித்துல வளராது உங்க பையனோட குழந்தையானு உங்களுக்கு டௌட்டா இருக்கா? ஏன் உங்க பையன் ஆம்பளை தானே?" என்று சரமாரியாக கேட்டு இருந்தாள்.

 

அவளுக்கு சாஹில் ஜடாயுவின் அன்னை அவர் என்பதெல்லாம் மறந்தே போய் இருந்தது. சிட்டு, ஹன்சிகா இருவரையும் பேசி இருக்கிறார். அதுவும் இருவரின் மீதும் வைத்த குற்றமும் ஒன்று தானே! அவர்களின் நடத்தையை பற்றி பேசி இருக்கிறார். எந்த பெண்ணிற்காய் இருந்தாலும் கோவம் வரும்.

 

"பரி" என்று காகேஷின் குரல் ஒலிக்கவும், திரும்பி பார்த்தாள்.

 

"நீ உள்ள போ" என்று காகேஷ் சொல்ல, "ஏன் நான் எதுக்கு ரூம் உள்ள போகணும்? நான் இங்க தான் இருப்பேன். அவங்களை வெளிய போக சொல்லுங்க" என்று ராஜேஸ்வரியை பார்த்து கையை நீட்டி வேறு பேசி இருந்தாள்.

 

அனைவரும் அவரவர் அறையை விட்டு வெளியே வந்து இருந்தனர். பரியின் இந்த அவதாரம் அனைவருக்கும் புதிது.

 

"என்ன டா உன் அண்ணி இந்த கிழி கிழிக்குறாங்க" என்று மயூரன் ஹம்ஸாவின் காதை கடிக்க, "எல்லாம் ஏசிபி ட்ரைனிங்.. டீச்சர் அம்மா உன் பெரியம்மாவுக்கு டுஷன் எடுக்குறாங்க" என்று சொல்லி இருந்தான்.

 

"ஜடாயு... என்ன பேச்சு பேசுறா பாரு டா இவ?" என்று பெரிய மகனிடம் தான் சென்றார்.

 

"ஆத்தி என் அண்ணாவை வேற கூட்டு சேர்க்குறாங்க டா" என்ற மயூரனை பார்த்து, "பாப் கார்ன் கொண்டு வரல?" என்று ஹம்சா கேட்க, "காலைலயே இப்படி சினிமா பார்க்கலாம்னு எனக்கு தெரியாம போச்சு" என்று சொல்லி முடித்து இருந்தான்.

 

"இவளோ தான் பேசுறாளேன்னு சந்தோஷ படுங்க... எனக்கு வாயில இன்னும் வருது ஆனா பெத்த அம்மான்னு கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு இருக்கேன். என்ன சொல்றதுன்னே தெரியல... எப்படி அம்மா உங்களுக்கு அவளோ ஈஸியா பொண்ணுங்களோட கேரக்டரை அசாசினேட் பண்ண மனசு வருது? முதல்ல சிட்டு இப்போ ஹன்சிகாவா? ஹன்சிகாவை பத்தி நான் பேச மாட்டேன். ஏன்னா அவ பக்கம் தப்பு இருக்கு... அவ ஒன்னும் என் பொண்டாட்டி இல்ல... ஆனா நான் என் பொண்டாட்டிக்காக பேசுவேன். யாரை கேட்டு நீங்க அவளோட காகேஷோட உறவை அவளோ கேவலமா பேசுனீங்க? இதுல ஸ்ரவாணி? ச்சை... நாளைக்கு என் பொண்ணுக்கு இது தெரிஞ்சா என்னை பார்த்து காரி துப்ப மாட்டா? உன் ஆத்தாகாரி நான் உனக்கு தான் பிறந்தேனானு கேட்டு இருக்காங்க.. நீ கன்பார்ம் பண்ணுன்னு என் பொண்ணு என்னை பார்த்து கேட்டா நான் என்ன பண்ணுவேன்?" என்று கையை விரித்து ஆங்காரமாய் பேசி இருந்தான்.

 

"ஜடாயு" என்று சிட்டு அவனின் தோளை தொட, "நீ பேசாத... இன்னைக்கு வரைக்கும் என்னை பேசாதீங்கன்னு கண்ட்ரோல் பண்ணி வச்சி இருந்தது நீ தான்.. இல்லனா இந்த லேடிய அன்னைக்கே கிழி கிழின்னு கிழிச்சி விட்டு இருப்பேன். அவங்க என் அம்மா தான் டி அதுக்காக என் பொண்டாட்டிய பத்தி என்ன பேசுனாலும் அமைதியா இருப்பேன்னு நினைச்சியா? அவங்க புருஷன் அமைதியா இருப்பாரா? அவங்க இவளோ ஆட்டம் போட்டும் என் அப்பா அமைதியா இருக்க காரணம் அவரை நம்பி வந்த பொண்ணை எதுக்கு இப்படி அசிங்க படுத்தணும்னு தான்... இவங்க பண்ற வேலைக்கு இதுவே வேற எவனாவது இருந்தா..." என்றவன் அதற்கு மேல் வந்த வார்த்தைகளை விழுங்கி தான் இருந்தான்.

 

ராஜேஸ்வரிக்கு கண்கள் பணித்தது. அவர் ஈன்ற மகன் தான் இன்று அவருக்கு எதிராக அதுவும் அனைவரின் முன்னிலையிலும் அவரை பேசுகிறான். அவர் செய்தது தவறு தானே!

 

"சரி நான் தெரியாம தான் கேட்குறேன். எப்படி என் பொண்டாட்டி கேரக்டரை நீங்க பேசலாம்? அவ கூட நீங்களா குடும்பம் நடத்துறீங்க? இப்போ கூட மாசமா இருக்கா... இதுவும் என் குழந்தை தானான்னு உங்களுக்கு சந்தேகமா? சொல்லுங்க... இப்போ எனக்கே சந்தேகம் வருது நான் உங்களுக்கு தான் பிறந்தேனானு... ஏன்னா உங்களோட ஒரு குணம் கூட என்கிட்ட இல்லையே" என்றதும், "ஜடாயு நீயா பேசுற?" என்று சொல்லும் போதே அவரின் குரல் தழுதழுத்தது.

 

"ப்ளீஸ் நான் தான் பேசுறேன். ஏன் நீங்க பேசும் போதெல்லாம் எல்லாரும் அமைதியா தானே இருந்தோம். இப்போ நீங்களும் அப்படியே இருங்க... நான் ஒன்னு சொல்றேன். இதோட அம்மான்னு சொல்லிட்டு நானும் வர மாட்டேன். நீங்களும் உங்களுக்கு முதல் பையன் ஜடாயுன்னு இருந்தானு மறந்துருங்க... சாஹில் இருக்கான் தானே எல்லாமே பார்த்துக்குவான்" என்று சொல்லி முடிக்கும் போதே அங்கே வந்தான் சாஹில்.

 

உள்ளே வந்தவன் ராஜேஸ்வரியை எதிர் பார்த்து தான் வந்து இருந்தான். அவனின் தந்தை தான் அழைத்து அவர் வந்து இருப்பதாய் சொல்லி இருந்தார்.

 

வந்தவன் கை கட்டி நின்று இருந்தான்.

 

"இங்க பாரு டா உன் அண்ணா என்ன சொல்றான்னு?" என்று அவர் கேட்க, அவனோ, "என்ன சொன்னார்?" என்று அவன் அவரை பார்த்து கேட்கவும், "அவனுக்கு நான் அம்மா இல்லையாம்" என்று அவர் சொல்லவும், "ஓஹ்... அதை ஏன் என்கிட்ட சொல்லுறீங்க.. எனக்கும் அம்மா இல்லையே" என்று சாதாரணமாக சொல்லி இருந்தான் சாஹில்.

 

அதிர்ந்து தான் விட்டார் ராஜேஸ்வரி. முதல் மகனிடம் மட்டும் இல்லாமல் அவரின் அடுத்த புதல்வனிடமும் இருந்து புறக்கணிப்பு.

 

"சாஹில்" என்றவருக்கு வாயில் இருந்து வார்த்தை வரவே இல்லை.

 

"என்ன சாஹில்? நீங்க உண்மையாவே எங்களுக்கு அம்மா மாதிரி என்னைக்காவது நடந்து இருக்கீங்களா? இல்ல எனக்கு புரியல நாங்க உங்க பிள்ளைங்களா இல்ல பொருளா? எங்களை விக்குறதுக்காக தான் வளர்த்தீங்களா? எனக்கு புரியல! ஹன்சிகா பண்ணது தப்பு தான். நான் இல்லனு சொல்ல மாட்டேன். அதுக்காக தான் அவளுக்கு நானும் சரி மத்தவங்களுக்கு சரி இப்படி ஒதுக்கி வச்சிக்கிட்டு இருக்கோம். ஆனா அதுக்காக என் குழந்தையை யாரோட குழந்தையொன்னு சொல்லிருக்கீங்க... எப்படி உங்களுக்கு மனசு வருது? அவளுக்கு நீங்க ஆதரவா நாலு வார்த்தை பேச வேணாம். ஆனா இப்படி நோகடிக்கிற மாதிரி ஏன் பேசுறீங்க? உங்களுக்கு என்ன இப்போ என்னை நல்ல விலை போற இடத்துல விற்கணும் அவளோ தானே?" என்றவன், ஜடாயுவின் புறம் திரும்பி, "அண்ணா எனக்கும் ஹன்சிகாவுக்கும் டிவோர்ஸ் பேபேர்ஸ் எடுத்துட்டு வாங்க" என்று சொல்லி இருந்தான்.

 

அதற்கு பிறகு ராஜேஸ்வரியை பார்த்து, "ஆனா ஒன்னு நினைவு வச்சிக்கோங்க.. டிவோர்ஸ் வாங்கிட்டு நீங்க எங்க என்னை வித்தாலும் அந்த பொண்ணை எல்லாம் நான் தொட மாட்டேன். ஏன் டெஸ்ட் ட்யூப் பேபிக்கு கூட ஒத்துக்க மாட்டேன். எனக்கு வாரிசு வெறும் ஹன்சிகா மூளையமா வர குழந்தை தான். இது தான் என்னோட முடிவு. இதுக்கு ஓகேன்னா நான் விலை போக தயார்" என்று சொல்லி முடிக்க, ராஜேஸ்வரி தொப் என்று அமர்ந்தே விட்டார்.

 

கேட்க கூடாத பேச்செல்லாம் கேட்டு விட்டார்.

 

மயூரன் தான் அவரின் அருகில் சென்றான்.

 

"பெரியம்மா" என்று அவன் அழைக்கவும், அவரோ உயிர்ப்பே இல்லாமல் திரும்பி பார்த்தார்.

 

"நான் எதுவும் பேச மாட்டேன் பெரியம்மா. ஆனா நீங்க என் வாழ்க்கையை பத்தி எதுவும் சொல்லும் முதல் நான் சொல்லிடுறேன். எனக்கு என்னோட பிஏ மைனாவை பிடிச்சி இருக்கு.. அவளை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசை படுறேன். உங்களுக்கு சரினா கல்யாணம் பண்ணிக்குறேன்" என்று சொல்ல, "அவங்க வேணாம்னு சொன்னா என்ன டா பண்ணுவ?" என்று ஹம்சா கேட்கவும், "லிவ் இன் தான்" என்று சொல்லி இருந்தான்.

 

ராஜேஸ்வரிக்கு இந்த நேரத்திலும் கோவம் வந்தது.

 

"இங்க பாருங்க பெரியம்மா நான் ஒன்னும் சாஹில் மாதிரி எல்லாம் சொல்ல மாட்டேன். நான் விலை போயிட்டு முனிவர் வாழ்க்கை வாழுவேன்னு... அந்த அளவுக்கு நல்லவன் எல்லாம் நான் இல்ல... எனக்குன்னு நீட்ஸ் இருக்கு... சோ கல்யாணம் வேணான்னு நீங்க சொன்னா நான் லிவ் இன்ல இருந்துக்குறேன். அப்புறம் உங்க இஷ்டம்" என்று போட்டு உடைத்து விட்டான்.

 

தலையில் கையை வைத்து விட்டார் ராஜேஸ்வரி. அவர் வளர்த்த மூன்று மகன்களும் அவருக்கு கெடு வைக்கிறார்கள்.

 

"அவங்க ஏன் இன்னும் இங்க இருக்காங்க? வெளிய போக சொல்லுங்க" என்று சாஹில் மேலும் பேச, "டேய் கொஞ்சம் அமைதியா இரு டா" என்று காகேஷ் தான், "ஆன்டி" என்று அழைத்து இருந்தான்.

 

அவனை நிமிர்ந்து பார்த்தார். அவருக்கு பிடிக்கவே பிடிக்காத ஒருத்தன் தான் அவன்.

 

"சாப்பிட்டீங்களா? முதல்ல சாப்பிடுங்க" என்று சொல்லவும் உடைந்து தான் விட்டார்.

 

பெற்ற இரு மகன்களும் கூட எதுவும் கேட்கவில்லை. வளர்த்த மகனும் கேட்கவில்லை. அவர் எதிரி என்று நினைத்தவன் கேட்கிறான்.

 

நெஞ்சு அடைத்தது. வெடித்து விடும் போல் இருந்தது. என்னவெல்லாம் பேசி இருக்கிறார். அவன் ஏதாவது நாலு வார்த்தை பேசி இருந்தால் கூட வாங்கி தான் இருப்பார். ஆனால் இப்போதும் அவரிடம் மரியாதையாக தான் பேசுகிறான்.

 

சிட்டுவும் வந்தாள். "தோசை வேணா செய்ய சொல்லட்டுமா அத்தை?" என்று அவளும் கேட்டாள்.

 

கையால் முகத்தை மூடி கதறி இருந்தார் ராஜேஸ்வரி.

 

 

 

அத்தியாயம் 74

 

உண்மையாகவே அவருக்கு செருப்பால் அடித்த உணர்வு.

 

"அத்தை" என்று சிட்டு வந்து அருகில் அமர்ந்தாள் தவிர, கொஞ்சம் கூட ஜடாயுவும் சாஹிலும் அசையவில்லை.

 

மயூரனுக்கு கூட கொஞ்சம் மனம் இறங்கி இருக்க வேண்டும்.

 

"அழுதீங்க பெரியம்மா" என்று அவன் சொல்லவும், அவரோ கண்களை துடைத்து கொண்டு, "நான் எவளோ நல்லவளா இருந்து இருந்தா பெத்த பிள்ளைங்க எனக்கு ஒரு வாய் தண்ணி கூட கொடுக்கல... ஆனா நான் யாரை எல்லாம் பேசி இருக்கேனோ அவங்க எல்லாரும் என்கிட்ட இவளோ பரிவா பேசுறீங்க.. எனக்கு தெரியல... நான் வளர்ந்த விதம் அப்படி... பணம் தான் எல்லாம்னு வளர்ந்துட்டேன். இது ஒன்னும் ஒரே நாள்ல வந்ததது இல்ல... நான் பிறக்கும் பொது என் அப்பாவும் கஷ்ட பட்டு தான் இருந்தார். பத்து வயசு வரைக்கும் மூணு வேலை சாப்பிடுறதே கஷ்டமா இருந்தது. பணத்தோட அருமை என்னனு பசில இருக்கவங்க கிட்ட தான் கேட்கணும். என்கிட்ட கேளுங்க... நான் சொல்றேன்... இங்க இருக்க யாருக்காவது தெரியுமா பசி எவளோ கொடுமைன்னு என்னை கேளுங்க! அதுக்கு பிறகு தான் பணம் எல்லாம் வர ஆரம்பிச்சது. என்னை கஞ்சூஸ்ன்னு கூட எல்லாரும் சொல்லி இருக்காங்க... ஏன் வீட்ல இன்னைக்கு வரைக்கு தேவைக்கு ஒரு பருக்கை அதிகமா நான் சமையல் செய்ய சொல்ல மாட்டேன். அதுக்கு காரணம் உணவு வேஸ்ட் ஆக கூடாதுன்னு தானே தவிர... கஞ்சத்தனத்துக்காக இல்லை... இன்னைக்கு வேணா ராஜேஸ்வரி பணக்காரியா கோடீஸ்வரியா இருக்கலாம்... ஆனா ஒரு காலத்துல மழைக்கு கூட ஒழுகுற வீட்ல இருக்க வேண்டிய நிலைல இருந்து வந்தவ தான்... அந்த நிலைமை என் பசங்களுக்கு வர கூடாதுன்னு தான் நல்ல இடத்துல கொடுக்கணும்னு நினைச்சேன். நீங்க கேட்கலாம்? உங்களுக்கு எவளோ கஷ்டம் தெரிஞ்சி நீங்க ஏழை பொண்ணுங்களுக்கு வாழ்க்கை கொடுக்கணும் தானேன்னு... ஏழை பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்குறதுக்கு நான் ஒன்னும் மடம் நடத்துல... நான் ஏழையா இருக்கும் பொது எனக்கு யாரும் எதுவும் செய்யல... நானே முன்னேறி வந்தது தான்.. அந்த மாதிரி இருக்குற பொண்ணுங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு சிட்டுவை பிடிக்காதுன்னு இல்ல.. ஆனா அவளால எங்க என் பேரு போயிடும்னு பயம். எல்லாரும் ஒரே மாதிரி ஒரே கண்ணோட்டதோட பார்க்க மாட்டாங்க... நான் காகேஷையும் சிட்டையும் பேசுனத்துக்கு இவளோ குதிக்கிறிங்க... எத்தனை தடவை நானே இதை கேட்டு என் மருமகளை பத்தி பேச நீங்க யாரு எனக்கு தெரியும்னு சொல்லிற்கேன்னு உங்களுக்கு தெரியுமா? தெரியாது ஏன்னா நான் சொன்னது இல்ல... ஹன்சிகாவை பேசுன விதம் வேணா தப்பா இருக்கலாம் ஆனா இப்பவும் எனக்கு என் இரண்டாவது பையனுக்கு இப்படி பட்ட பொண்ணை கட்டுனது எனக்கு வெறுப்பு தான். உங்களுக்கு எல்லாம் பசங்க வந்த பிறகு உங்களுக்கு ஒரு அம்மாவா என்னோட தவிப்பு புரியும். இப்போ எல்லாம் பேச நல்லா இருக்கும். ஏன் ஸ்ரவாணியை ஒன்னும் இல்லாதவனுக்கு உன் புருஷன் கட்டி கொடுப்பானா?" என்று சிட்டுவை பார்த்து கேட்க, சிட்டுவும் ஜடாயுவை பார்த்தாள்.

 

"நல்ல படிச்ச பையனா இருந்தா கொடுப்பேன் தான்" என்றவனிடம், "ஹான் சொல்ல எல்லாம் நல்லா இருக்கும். அவளை ராஜகுமாரி மாதிரி வளர்த்து ஒன்னும் இல்லாத வீட்டுல கொடுக்க உனக்கு மட்டும் இல்ல.. ஏன் காகேஷுக்கு கூட மனசு வராது... இது தான் நிதர்சனம்" என்று சொல்லும் ராஜேஸ்வரியை தான் பார்த்து இருந்தாள் பரி.

 

"என்னவோ அப்படி பேசுறியே மா... இன்னைக்கு வந்த உனக்கே இவளோ பாசம் இருக்கு... ஆனா உன் புருஷன் பாரு வாயை மூடிக்கிட்டு இருக்கான். அவன் கிட்ட இருந்து கத்துக்கோ எப்படி சம்மந்தி வீட்டு ஆளுங்களை எல்லாம் ட்ரீட் பண்ணனும்னு" என்று கெத்தை விடமால் அவர் பேச, காகேஷோ சிரித்து, "அவ ஏதோ கோவத்துல பேசிட்டா ஆன்டி" என்று காகேஷ் தான் சொல்லி இருந்தான்.

 

அவரின் கண்கள் சுற்றி பார்த்து, "ஹன்சிகா எங்க?" என்று கேட்க, "கோவிலுக்கு போயிருக்கா ஆன்டி" என்று சொல்லவும், "சரி அவ வந்ததும் பார்த்துட்டு போறேன்" என்று சொல்லி, "யாரு டா நீ லவ் பண்ற பொண்ணு?" என்று மயூரனை கேட்க ஆரம்பித்து இருந்தார்.

 

அவருக்கு நிதர்சனம் புரிந்து விட்டது. பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். இனி அவர்களது வாழ்க்கையில் அவரால் முடிவு எடுக்க முடியாது. அவர்களின் முடிவுக்கு துணை நிற்பது தான் சிறந்தது என்று பட்டு உணர்ந்து கொண்டார்.

 

"இவ தான் பெரியம்மா" என்று புகைப்படத்தை எடுத்து காட்டி இருந்தான்.

 

காகேஷை பார்த்து, "இவனுக்கும் மயூரன் வயசு தானே சீக்கிரம் கல்யாணம் பண்ணலாமே" என்று கேட்கவும், "என் கொழுந்தனாருக்கு பொண்ணு எல்லாம் ரெடியா இருக்கு..." என்று பரி தான் பதில் கொடுத்து இருந்தாள்.

 

"உன் பொண்டாட்டிய எனக்கு தோசை சுட்டு வந்து கொடுக்க சொல்லு" என்று சொல்லவும், காகேஷ் பரியை பார்க்க, அவளோ அவனை முறைத்தாள்.

 

ஏனோ ராஜேஸ்வரிக்கு அவளை சீண்டுவது பிடித்து இருந்தது. இன்று வரை சிட்டு கூட பேசாத அவரையே பேசி இருக்கிறாளே!

 

"நான் சுடுரேன் அத்தை" என்று சொன்ன சிட்டுவை, "நீ எதுக்கு செய்யணும்? உன் அண்ணி செய்வா.. போ மா போய் தோசை சுடு" என்று மீண்டும் சொல்ல, ஜடாயுவோ, "நான் வேணா ஹெல்ப் பண்றேன் பரி" என்று சொன்னதும், "வேண்டாம் நானே போய் சுடுரேன்" என்று கழுத்தை நொடித்து கொண்டு தான் சென்று இருந்தாள்.

 

இதே சமயம் குயில் மற்றும் ஹன்சிகா இருவரும் உள்ளே வந்து இருந்தனர்.

 

"எல்லாம் சரி ஆகிடும். நீ உன்னை பாரு.. இன்னும் ஒரு மணி நேரத்துல இன்டெர்வியூல" என்று குயில் பேசிக்கொண்டே வரவும், அப்படியே இவரைகளை பார்த்ததும் இரு பெண்களும் நின்று விட்டனர்.

 

ஹன்சிகாவிற்கு இன்னும் ஒரு மணி நேரத்தில் நேர்காணல் இருந்தது. ஆம், பரியின் நண்பியின் நிறுவனத்தில் இருந்து தான் அழைப்பு வந்து இருந்தது. அதற்கு பயந்து தான் காலையிலேயே கோவிலுக்கு சென்று இருந்தாள்.

 

குயிலிடம் வரும் பொது தான் கூறினாள். அவள் ஹன்சிகாவை தேற்ற முயன்று கொண்டு இருக்க, இங்கோ இவர்கள் அனைவரும் இருந்தார்கள்.

 

'போச்சு இந்த அம்மாவையா நான் இன்டெர்வியூ போகுற முன்னாடி பார்க்கணும். மனசை கல்லாகிக்க ஹன்சி' என்று அவளுக்கு அவளே பேசியும் கொண்டாள்.

 

யாரிடமும் எதுவும் பேசவில்லை.

 

அவள் படி எற துவங்கும் போதே, "மாமியார் இருக்கேன் எப்படி போறா பாரு?" என்று சிட்டுவிடம் சொல்லவும், அவளோ திரும்பினாள் இல்லை. அவர் ஏதாவது பேசுவார் அவளுக்கு தான் சங்கடம்.

 

அவளுக்கு தப்பித்தால் போதும் என்று இருந்தது. ஆதலால் இரண்டு படிகளை எற முயற்சிக்க, அவளது நேரத்திற்கு புடவை தடுக்கி விட்டது. அவள் விழவே போய் இருந்தாள்.

 

"அம்மா" என்று கத்துவதற்குள் அவளை பிடித்து இருந்தது என்னவோ சாஹில் தான்.

 

எப்படி வந்தான் என்று தெரியாது. ரெண்டே எட்டில் அவளை அடைந்து இருந்தான். அவள் இரண்டு படிகள் கால் வைக்கும் போதே எதையோ கிரகித்தவன் அவளிடம் நோக்கி செல்ல, அவள் விழுவதற்குள் பிடித்து இருந்தான்.

 

"உனக்கு என்ன பைத்தியமா? கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தா என்ன ஆகி இருக்கறது?" என்று கேட்டு அவளை நிறுத்தி பிடித்து வைக்க, அவளோ, "ஒன்னும் ஆகி இருக்காது. குழந்தையும் இல்ல, அதனால இன்னும் நிம்மதின்னு உங்க அம்மா கொண்டாடி இருப்பாங்க... நீங்களும் நிம்மதின்னு வேற பொண்ணை இப்பவே கட்டி இருக்கலாம்" என்று அவள் பேசவும், "அறைஞ்சேன்னா பாரு" என்று சாஹில் கையை ஓங்கியே விட்டான்.

 

"சாஹில்" என்று அவனை அதட்டியது என்னவோ இப்பொது ராஜேஸ்வரி தான்.

 

"இப்படி தான் மாசமா இருக்க பொண்ணை கை நீட்ட கை ஓங்குவியா?" என்று கேட்கவும், ஹன்சிகாவிற்கு பொறுக்க முடியவில்லை.

 

"அவரு கையாள தான் அடிக்க வந்தார் ஆனா நீங்க தான் வலிக்க வலிக்க சொல்லல அடிச்சிடீன்களே இன்னும் என்ன உங்களுக்கு? நான் தான் டிவோர்ஸ் தரேன்னு சொல்லிட்டேன்ல.. உங்க கிட்ட ஒண்ணே ஒன்னு தான் கேட்குறேன். ப்ளீஸ் என்னை விட்டுடுங்க.. இப்படியே நான் இருந்துக்குறேன். இந்த குழந்தை யாரோடதுன்னு கேட்டீங்க தானே நானே சொல்றேன் இது உங்க பையனோட குழந்தை இல்ல.. அவளோ தான். இந்த குழந்தைக்கு அம்மா அப்பா எல்லாமே நான் தான்... இதோட இதை முடிச்சிக்கலாம். நீங்க என் அக்காவோட மாமியாரா மட்டும் இங்க வந்துட்டு போங்க.. என்னைக்கும் இந்த குடும்பத்தோட இருக்க உறவை என் குழந்தைக்கு தெரியவே விட மாட்டேன்" என்று கை எடுத்து கும்பிட்டு சொல்லி இருந்தாள்.

 

சாஹிளை பார்த்தவள், "உங்களுக்கு நிறைய தப்பு பண்ணிட்டேன். உண்மையா சொல்றேன் உங்களை கல்யாணம் பண்ணி கூட வாழணும்னு தான் அப்படி பண்ணேன். எனக்கு அடங்கி இருப்பீங்கனு ஒரு எண்ணம். ஆனா இந்த மாதிரி ஒரு உணர்வு எனக்கு எந்த ஆம்பளை மேலையும் வந்தது இல்ல.. இது காதலன்னு கூட எனக்கு அப்போ தெரியல.. ஆனா இப்போ தெரியுது. எஸ் உங்களை லவ் பண்ணிருக்கேன். அண்ணா பிள்ளைக்காக என்னை அடிச்ச ஒருத்தர் மேல எனக்கு காதல் வந்து இருக்கு... ஆனா அதை எப்படி எக்ஸ்பிராஸ் பண்ணனும்னு எனக்கு தெரியல.. என்னை அப்படி வளர்க்கவும் இல்ல... என் அண்ணாக்காவது அவனோட இன்னொரு அண்ணா அக்கான்னு பார்த்து திருந்திக்கிற சந்தர்ப்பம் கிடைச்சுது ஆனா எனக்கு கிடைக்கல... எனக்கு அந்த சந்தர்ப்பம் பட்டு திருந்தி உங்க மூலமா கிடைச்சி இருக்கு... நான் ரொம்ப உதம்மின்னு எல்லாம் சொல்ல மாட்டேன். ஆனா உண்மையா உங்க கூட மட்டும் தான் இருந்து இருக்கேன். ஐ ஸ்வர்" என்று சொல்லும் போதே அவளின் குரல் உடைந்தது.

 

"ஆனா இப்படி தினமும் என்னால சத்தியம் பண்ணிக்கிட்டு இருக்க முடியாது. அது எனக்கும் நல்லது இல்ல என் குழந்தைக்கும் நல்லது இல்ல.. நீங்க தான் அன்னைக்கே தாலிய அறுத்துடீங்களே! அப்பவே எல்லாம் அருந்திருச்சு.. இதை எனக்கு புரிஞ்சிக்க தான் நேரம் தேவை பட்டது... இதோட இதை பத்தி யாரும் பேச வேண்டாம். எனக்கு என் குழந்தை போதும். அப்படி குழந்தை வேணும்னா கேஸ் போட்டுக்க சொல்லுங்க... நான் குழந்தையை யாருக்கும் கொடுக்குறதா இல்ல" என்றவள் காகேஷின் புறம் திரும்பி இருந்தாள்.

 

"இன்னைக்கு வரைக்கும் நான் ஒண்ணுமே உங்க கிட்ட கேட்டது இல்ல.. இன்னைக்கு கேட்குறேன்... ப்ளீஸ் எனக்கு இந்த கல்யாணத்துல இருந்து டிவோர்ஸ் மட்டும் வாங்கி கொடுக்குறீங்களா?" என்று சொல்லும் போதே மொத்தமாக உடைந்து இருந்தாள் பெண்ணவள்.

 

எந்த திருமணத்தை அவளே விரும்பி செய்து இருந்தாலோ, எந்த சாஹிளை அடக்கி ஆண்டு விடலாம் என்று அவள் செய்து இருந்தாலோ அதே திருமண பந்தத்தில் இருந்து இப்பொது அவள் விடுதலை கேட்கிறாள்.

 

அடக்கி ஆண்டு விட நினைத்தவளை இப்பொது மூச்சு முட்ட அடக்கி வைத்து இருந்தது இந்த திருமணம்.

 

அத்தியாயம் 75

 

அவளை பார்க்க உண்மையாகவே பாவமாக இருந்தது.

 

காகேஷ் அவளின் அருகில் வந்தான். அவளின் தலையை தடவியவனை பார்த்து இன்னும் உடைந்து விட்டாள். உடையவே கூடாது என்று தான் நினைத்து இருந்தாள். ஆனால் முடியவில்லை.

 

"போ முதல்ல இன்டெர்வியூ அட்டென்ட் பண்ணு மீதி அப்புறம் பேசலாம்" என்று அவன் சொல்ல, அவளும் சரி என்று தலையசைத்து சென்று விட்டாள்.

 

"காகேஷ் நான் வேணா அவ கிட்ட" என்று ஆரம்பித்த ராஜேஸ்வரியை நிறுத்தி இருந்தான் காகேஷ்.

 

"வேணாம் ஆன்டி அவ சொல்றது ஒரு விதத்துல சரி தான். இரண்டு பேருமே இப்படி மூச்சு முட்ட வாழ முடியாது. டிவோர்ஸ் கொடுக்குறியா சாஹில்?" என்று சாஹிளை பார்க்க, "குழந்தை வேணும்" என்று அவனும் பிடிவாதமாக நின்றான்.

 

"நீ வேற வாழ்க்கையை தேடிக்கோ சாஹில்" என்று சிட்டுவும் இப்பொது பேச ஆரம்பித்து இருந்தாள்.

 

முதல் முறையாக சாஹில் ஹன்சிகாவின் வாழ்க்கையில் காகேஷ், சிட்டு தலையீடு செய்கிறார்கள்.

 

இன்று வரை அவர்களது வாழ்க்கை என்று இருந்தவர்கள் இப்பொது இருக்க முடியவில்லை.

 

"இங்க பாரு சாஹில் உன்னை அப்பவே அவளை கல்யாணம் பண்ண வேணாம்னு நான் சொன்னேன். அப்பாவும் நீ கேட்கல...இப்பவும் கேட்க மாட்டேங்குற.. இது இரண்டு பேருக்குமே நல்லது இல்ல.. அவ தான் டிவோர்ஸ் தரேன்னு சொல்றாளே டா அப்புறம் என்ன உனக்கு?" என்று காகேஷ் கத்தியே விட்டான்.

 

"என் குழந்தையை கொடுங்க நான் டிவோர்ஸ் கொடுக்குறேன்" என்று சொல்லவும், "அந்த குழந்தை என்ன நீ காதலிச்சு கல்யாணம் பண்ணி வந்ததா? அவ பண்ண தப்புக்கு அவ குழந்தையை வச்சிக்கட்டும்.. நீ வேற ஒருத்திய கல்யாணம் பண்ணி வாழு... அவளுக்கு தலைல விதி இருந்தா அவளை ஏத்திக்கிட்டு வர இன்னொருத்தனை.." என்று சிட்டு சொல்லும் போதே, "அண்ணி ப்ளீஸ்" என்று கெஞ்சி இருந்தான்.

 

அவனால் இன்னொருவனை ஹன்சிகாவின் அருகில் வைத்து கூட பார்க்கவில்லை.

 

"லவ் பண்றியா சாஹில்?" என்று ஜடாயு கேட்டு இருந்தான். சாஹில் கண்கள் விரித்தான்.

 

காதலிக்கிறானா? அவள் இல்லாமல் இப்பொது அந்த வீட்டில் உறக்கம் வரவில்லை தான். இத்தனை நாட்கள் பேசாமல் இருந்தாலும், அவனுக்காக அவள் யு ட்யூப் பார்த்து சமைத்து வைப்பது, அவள் வீட்டில் சுற்றி வருவது என்று அனைத்தையும் கவனித்து கொண்டு தானே இருந்தான்.

 

அவள் செய்த தவறு இன்றும் அவனின் நினைவில் இருந்தாலும் ஏன் அவளின் பால் மனம் செல்கிறது. குழந்தைக்காக என்று அவனுக்கு அவனே சொல்லி கொள்கிறானா என்றும் தெரியவில்லை.

 

"லவ் எல்லாம் இல்ல... ஆனா அவளை விடுற எண்ணமும் இல்ல" என்று சொல்ல, "அப்போ இரண்டு பேரும் இப்படியே நரகமான வாழ்க்கையை வாழ போறிங்களா? சாரி சாஹில் எங்களுக்கு அதுல உடன்பாடு இல்ல.. இப்போ வரைக்கும் உனக்காக பேசணும் பட் இப்போ ஹன்சிக்காக பேசுறோம். அவளுக்கு இந்த நரகத்துல இருந்து விடுதலை கொடுத்திரு சாஹில். உண்மையாவே எங்களால எங்க கண்ணு முன்னாடி வளர்ந்த பையன் வாழ்க்கை வீணா போறதையும் பார்க்க முடியல.. கூட பிறந்தவை இப்படி இருக்குறதையும் பார்க்க முடியல... எங்களுக்கு தான் ரொம்ப வலிக்குது" என்று சிட்டு சொல்லியே விட்டாள்.

 

உண்மையாகவே இவர்களின் வாழ்க்கையால் அவர்கள் அனைவருக்கும் நிம்மதி இல்லாமல் போவது என்னமோ உண்மை தான்.

 

"இங்க பாருங்க அவ இங்கையே இருக்கட்டும். நான் டிவோர்ஸ் கொடுக்க மாட்டேன். வேணும்னா நீங்க நோட்டீஸ் அனுப்பிக்கொங்க" என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டான்.

 

"என்ன இப்படி பேசுறாங்க இந்த பசங்க?" என்கிற ராஜேஸ்வரியை பார்த்து, "நீங்க விடுங்க அவங்க வாழ்க்கையை அவங்க பார்ப்பாங்க... மயூரன் மைனா கல்யாணத்தை பார்க்கலாம். அப்படியே ஹம்சா குயிலுக்கு கல்யாணம் தான்" என்று சிட்டு சொல்ல, "ம்ம் ஆமா கொஞ்சம் சீக்கிரமா பிக்ஸ் பண்ணா நல்லா இருக்கும்"என்று மயூரன் சொல்ல, "அலையாத டா" என்று சொல்லி இருந்தான் ஹம்சா.

 

"யாரு நான் அலையுறானா? சண்டாளா உன் கூட ஒரு நாள் படுத்தேன். குயில்ன்னு நினைச்சி என்னை கட்டி பிடிச்சி கன்னத்துல கிஸ் கொடுக்குறேன். கேட்டா நான் அலையுறேனாம்" என்று மயூரன் சொல்ல, அவனின் வாயை பொத்தி இருந்தான்.

 

பரிக்கோ சிரிப்பு வந்து விட்டது.

 

"இங்க பாருங்க அது ஏதோ சின்ன பையன் தூக்கத்துல பண்ணிட்டான்" என்று அவள் முட்டு கொடுக்க, மயூரன் ஹம்ஸாவின் கையில் இருந்து விடுபட்டவன், "ஏதே! சின்ன பையனா? அவனுக்கே ஒரு பையன் வந்தாலும் சொல்லுறதுக்கு இல்ல" என்று சொல்லி இருந்தான் மயூரன்.

 

திருமணத்தை சீக்கிரம் நடத்தி விட தான் அனைவரும் இருந்தனர். இரண்டு மாதத்தில் திருமணம் என்று முடிவு செய்து இருந்தனர்.

 

பக்ஷியின் கேசும் வந்தது. அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பித்து இருந்தான் காகேஷ். ஹம்ஸாவும் அவனின் பங்கிற்கு சமர்ப்பிக்க, பக்ஷிக்கு எதுவும் செய்ய முடியாத நிலை. ஆனால் நம் நாட்டில் தான் தீர்ப்பு அத்தனை எளிதில் கொடுப்பது இல்லையே! வாயுதா தான் கிடைத்தது.

 

நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தன. ஹன்சிகாவிற்கு வேலை கிடைத்து வீட்டிலேயே வேலை செய்ய துவங்கி இருந்தாள். அவளுக்கென்று ஒரு உலகத்தை அவள் அந்த வீட்டிற்குள்ளேயே உருவாக்கி கொண்டு இருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும். அவளின் உலகத்தில் இருந்தது ஸ்ரவாணி, பரி, குயில் மட்டும் தான். சாஹிளை சார்ந்த யாரையும் அவள் கிட்டே சேர்க்க விரும்பவில்லை. ஜடாயு பேசினால் பேசுவாள். காகேஷ், சிட்டு மற்றும் ஹம்சா அனைவரிடமும் பார்வை மட்டும் தான்.

 

ஐந்து மாத கருவை சுமந்து கொண்டு இருந்தார்கள் சிட்டுவும், ஹன்சிகாவும்! இன்னும் ஒரு வாரத்தில் மயூரன் மற்றும் ஹம்ஸாவின் திருமணம் வந்து இருந்தது.

 

"வெளிய வா டி ஒரு வாக் போகலாம்" என்று மைனாவை வெளியே அழைத்து வந்து இருந்தான் மயூரன்.

 

அவர்கள் நடந்து வரும் சமயம், மழை வந்து விட்டது.

 

இருவரும் கைகோர்த்து நடந்து கொண்டு வந்தனர். தீடீரென்று மழை பெய்ய துவங்கி விட்டது.

 

அவன் நகர்ந்து செல்ல முற்பட, ஆனால் அவள் ஆட ஆரம்பித்து இருந்தாள்.

 

மழையில் மயில் தானே ஆடும் ஆனால் இங்கு மைனா ஆடியது. மயில் வேடிக்கை பார்த்தது.

 

அவளின் அங்க வளைவுகள் அனைத்தும் மழை அப்பட்டமாக எடுத்து காட்டியது.

 

அவனும் ஆண் தானே! மனதிற்கு பிடித்த பெண், அவனின் கண்முன் அழகாக வடிவாக ஆடி கொண்டு இருக்கிறாள். ரசிக்கவும் அவனுக்கு அனுமதி வேண்டுமா என்ன?

 

அவனை மீறி அவனின் கால்கள் அவளை நோக்கி சென்றது. மழையில் இருவரும் நன்றாக நனைந்து இருந்தனர். அவளின் இடையை வளைத்து பற்றியவன், அவளின் கன்னத்தை இருகைகளால் ஏந்தி அவளின் இதழ்களை பருகி, அவளின் உமிழ்நீருடன் மழைநீரையும் சுவைக்க துவங்கி இருந்தான்.

 

அதற்கு மேல் இடியின் சத்தத்தில் பிரியவும், "போகலாம்" என்று அவன் சொல்ல, இருவரும் காதல் வயத்தில் சென்று இருந்தனர்.

 

இதோ அப்படி இப்படி என்று இருவரின் திருமண நாளும் வந்து இருந்தது.

 

"இரண்டு பேருமே அழகா இருக்கீங்க" என்று பரி சொல்லவும், பரியை தான் பார்த்து கொண்டு இருந்தாள் ஹன்சிகா.

 

"அண்ணி ஏதாவது விசேஷமா?" என்று கேட்கவும், சிட்டுவும் அவளை தான் பார்த்தாள்.

 

பரியோ அதிர்ந்து, "ஹே எப்படி டி கண்டு பிடிச்ச? நான் இரண்டு நாள் முன்னாடி தான் செக் பண்ணி பார்த்தேன். இன்னும் உன் அண்ணா கிட்ட கூட சொல்லல தெரியுமா?" என்று சொல்லவும், "உண்மையாவா?" என்று சிட்டு வந்து பரியை இறுக அணைத்து இருந்தாள்.

 

அவளின் கன்னத்தில் வேறு முத்தம் கொடுத்தாள்.

 

"எனக்கு எவளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? என் காக்காக்கு ஒரு குட்டி பார்ட் வர போகுது" என்று சிட்டு சொல்லவும், "சீக்கிரமா ஏசிபி சார் கிட்ட சொல்லுங்க.. அவரு செம்ம ஹாப்பி ஆகிருவாரு" என்று ஹன்சிகாவும் வந்து கட்டி அணைத்து, "இதோட நான் உங்களை பார்த்துக்கறேன். சரியா?" என்று கேட்க, "சரி தான் டி பெரிய மனுஷி" என்று அவளின் கன்னத்தை கிள்ளி இருந்தாள்.

 

குயில் கூட, "அக்கா செம்ம போங்க.. ஏசிபி மொத்தமா உங்க கால்ல விழ தான் போறார்" என்று அவளும் சொல்ல, "செம்ம பான் தான் போங்க அப்போ" என்று மைனாவும் சொல்ல, "எப்போ சொல்ல போறீங்க?" என்று ஹன்சிகா கேட்கவும், "இவங்க கல்யாணம் முடிய சொல்லலாம்னு இருந்தேன். ஆனா நீ தான் இப்பவே சொல்லிட்டியே" என்றதும், "இன்னும் உங்க புருஷனுக்கு தான் தெரியாதுல... கல்யாணம் முடிஞ்சதும் நான் சொல்லவா?" என்று ஹன்சிகா கேட்கவும், "என்ன டி சொல்ல போற?" என்று மைனா கேட்க, "அதெல்லாம் சொல்ல மாட்டேன்... ஆனா என் ஸ்டைல்ல சொல்லுறேன்" என்று சொல்லி இருந்தாள்.

 

"ஓகே" என்று பரியும் விட்டு விட்டாள்.

 

இதோ குயிலை ஹம்ஸாவின் பக்கத்திலும், மைனாவை மயூரன் பக்கத்திலும் அமர வைக்க பட்டு விட்டனர்.

 

"கெட்டிமேளம்" என்று புரோகிதர் சொல்ல, இருவருமே அவர்களின் துணிகளுக்கு மங்கள நாணை பூட்டி சரி பாதியாக்கி கொண்டனர்.

 

சம்பிரதாயங்கள் எல்லாம் முடிய, ஹன்சிகா தான் மணமேடை ஏறி இருந்தாள். அவளின் ஐந்து வயது மேடிட்ட வயிறுடன் அவளை பார்ப்பதற்கே அழகாக இருந்தது. சாஹிலும் இருந்தான் ஆனால் அவளின் அருகில் செல்ல வில்லை. இந்த இரண்டு மாதங்களில் அவளை அவன் நெருங்கவில்லை. ஆனால் தூரத்தில் இருந்தே ரசித்து கொண்டு இருந்தான்.

 

ஆம் ரசிக்கிறான்! அவனின் மகவை சுமந்து கொண்டிருக்கும் அவளை தான் ரசிக்கிறான். அருகில் இருக்கும் பொது அரக்கியாக தெரிந்தவள், தூரத்தில் இருந்து பார்க்க இப்பொது தேவதையாக தெரிகிறாள்.

 

அதுவும் அவளின் செலவிற்கு கூட இப்போதெல்லாம் அவளின் சம்பளம் மட்டுமே என்று இருக்கிறாள் என்று கேள்வி படவும் இன்னும் அவளின் மேல் ஒரு பிடித்தம் வந்து தான் இருந்தது.

 

அவன் வளர்ந்த விதம் வேறு, அவள் வளர்ந்த விதம் வேறு! இப்பொது அவளை திருத்தவும் சந்தர்ப்பம் கிடைத்து இருந்தது. அதை பயன்படுத்தியும் கொண்டாள்.

 

"உங்க எல்லார்கிட்டயும் ஒன்னு சொல்லணும்" என்று அவளின் குரலில் கத்தியவளை தான் எல்லாரும் பார்த்தார்கள்.

 

"நான் அத்தை ஆகிட்டேன்" என்று அவள் சொல்ல, மயூரனோ ஹம்ஸாவை பார்த்து, "அடப்பாவி இவளோ ஸ்பீடா இருப்பான்னு நான் நினைக்கல டா" என்று சொல்ல, ஜடாயுவோ, "என்ன டி உன் தம்பி இப்படி?" என்று சிட்டுவை பார்க்க, ஹன்சிகாவோ தலையில் அடித்து கொண்டாள்.

 

"ஹலோ அத்தை ஆகிட்டேன்னு சொல்றேன். கல்யாணம் இப்போ ஆன அண்ணாவை பார்க்குறீங்க" என்று சொல்லவும் தான் அனைவரின் கண்களும் காகேஷின் பக்கம் திரும்பியது.

 

அவன் அவள் சொல்லும் போதே கணித்து விட்டான்.

 

அவர்கள் காகேஷின் புறம் திரும்பும் போதே, அவனின் பறவையை குழந்தை போல் ஏந்தி இருந்தான் காகேஷ்.

அத்தியாயம் 76

 

"என்ன பண்ணுறீங்க? இறக்கி விடுங்க" என்று பரி சொல்ல சொல்ல கேட்காமல், அவளை குழந்தையை போல் கையில் ஏந்தியவன் அப்படியே சுற்றி இருந்தான்.

 

"டேய் அவளை விடு டா" என்று ஜடாயு சொல்ல, "பொறாமை பிடிச்சவனே! என் பொண்டாட்டிய நான் சுத்துறேன். இதுல என்ன டா உனக்கு பிரச்சனை?" என்று சொல்லிவிட்டு தான் இறக்கி விட்டான்.

 

"தேங்க்ஸ் அண்ணா" என்று சொல்லவும், ராஜேஸ்வரியோ, "எல்லாரும் சாப்பிட போங்க" என்று சொன்னவர், "நீ இங்க வா" என்று பரியை பிடித்து இழுத்து, சிட்டு மற்றும் ஹன்சிகாவையும் சேர்த்து வைத்து, உப்பு மிளகாய் எடுத்து வந்து சுற்றி போட்டு கொண்டிருந்தார்.

 

"கல்யாணம் ஆனவங்க அங்க இருக்காங்க அத்தை" என்று சிட்டு சொல்ல, "நீ சும்மா இரு... உனக்கு ஒன்னும் தெரியாது. இப்படி மாசமா இருக்க பொண்ணுங்க மேல தான் நிறைய கண்ணு விழும். அதுவும் உன் தங்கச்சி வேற எல்லாரு முன்னாடியும் சொல்லி இருக்கா. பரியை எல்லாரும் எப்படி பார்த்தாங்க தெரியுமா?" என்று சொல்லி திருஷ்டி கழித்து விட்டு தான் விட்டார்.

 

ஹன்சிகா அவரிடம் பேசுவது இல்லை. அவர் அவளை பற்றி எல்லாம் சிட்டுவிடம் கேட்டு கொள்வார். பரி கிடைக்கும் சமயம் எல்லாம் வாய் அடிப்பாள். கருணாகரன் கூட, "பேசாத நான் ஒரு ட்ரை கொடுத்து பொண்ணு பெத்து இருக்கலாம் மா இவளுக்கு சரி சமமா உன்னை மாதிரி பேசி இருப்பா" என்று சொல்லும் அளவிற்கு இருந்தது அவர்களது சண்டை.

 

சாஹில் பரியின் அருகில் வந்து, "கங்கிராட்ஸ்... நாளைக்கு செக் அப் வாங்க... கொஞ்சம் பார்த்து இருங்க.. தர்டி ஆகிருச்சுல..." என்று சொல்லவும், "ம்ம்" என்று மட்டும் சொல்லி இருந்தாள் பரி.

 

"இன்னும் கோவம் இருக்கா?" என்று கேட்டவனை பார்த்து, "கோவம் இல்ல சாஹில்... ஆனா வருத்தம் இருக்கு... நீயும் இந்த சிறையிலே இருந்து விடு பட மாட்டேங்குற... அவளையும் விடு பட விட மாட்டேங்குற... உன்னை சிறைல போட்டவளே இப்போ விடுதலை கொடுக்க நினைக்கிறா... ஆனா நீ ஏன் இப்படி இருக்குற?" என்று கேட்கவும், "சாரி என்னை யாராலும் சிறை வைக்க முடியாது. அப்படி சிறைல இருக்கேன்னா அது என்னோட சிறை தான். அதுக்குள்ள யாரவது இருந்தா அவங்க என் விருப்பம் இருந்தா தான் போக முடியும்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து இருந்தான்.

 

"அவங்களை விடு... நீ உன்னை பாரு பரி" என்று சிட்டு சொல்ல, "ம்ம் ஓகே மேம்" என்று சொல்ல, "இன்னும் மேம் தானா?" என்று ஜடாயு கேட்க, "பழகிருச்சு" என்று சொல்லி இருந்தாள்.

 

"செம்ம கல்யாண கிபிட் தான் போங்க... சித்தப்பா போஸ்ட்" என்று ஹம்சா சொல்ல, "ஆமா ஆமா எனக்கும் மாமா போஸ்ட் தான்" என்று மயூரனும் சேர்ந்து கொண்டான்.

 

ஹன்சிகாவோ வந்து, "இதோட அண்ணியை நான் தான் பார்த்துக்க போறேன்" என்று சொல்ல, "உன்னை பார்த்துக்கவே நாலு பேரு வேணும்" என்று மயூரன் சொல்ல, உதட்டை சுழித்து கொண்டாள்.

 

அவள் அவனுடன் பேசுவது இல்லை. ஆனால் சமயம் கிடைத்தால் மயூரன் அவளிடம் வம்பு இழுப்பான் தான். என்ன இருந்தாலும் அவனின் சகோதரனின் மனைவி தானே! அவள் இல்லை என்று சொன்னாலும் அப்படி ஆகிவிடாதே!

 

அவள் ஒதுக்கி வைத்தாலும், அவனுக்கு காபி கலக்கும் போதெல்லாம் அவளுக்கு சில நேரங்களில் சத்து மாவு கஞ்சி எடுத்து கொண்டு செல்லுவான். அவள் வேண்டாம் என்று சொல்லியும் கேட்க மாட்டான்.

 

"சரி அதெல்லாம் இருக்கட்டும் நீ ஏன் இவரை அண்ணான்னு கூப்பிட மாட்டேங்குற? என்னை அண்ணின்னு தானே கூப்பிடுற? இவரை மட்டும் உங்க புருஷன், ஏசிபி சார் இப்படி தான் கூப்பிடுறது" என்று பரி கேட்க, "அப்படி தான் வருது நான் என்ன செய்யட்டும்?" என்று கேட்கவும், அவளுக்கு சிரிப்பும் வந்து விட்டது.

 

ஹம்சா மற்றும் மயூரன் இருவருக்கும் முதல் இரவு ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது.

 

"பாலும் பழமும் கைகளில் ஏந்தி" என்று ஹம்சா பாட, "ம்கூம் நான் கை ஏந்தி வருவேன்.. நீங்க காலை ஆட்டிகிட்டு உட்காந்துட்டு இருப்பீங்களா?" என்று அவள் பால் சொம்பை வைக்க, "ஏன் டி இப்படி?" என்று கேட்டு அவளை இழுத்து அமர வைத்து இருந்தான்.

 

"உங்கிட்ட ஒன்னு சொல்லணும்.. இல்ல கேட்கணும்" என்று சொல்லவும், அவளும் திரும்பி பார்த்தாள்.

 

"இல்ல.. ஒரு இரண்டு வருஷம் கழிச்சி பேபி பெத்துக்கலாமா?" என்று கேட்டு இருந்தான்.

 

அவள் புருவம் சுருக்கி பார்த்தாள்.

 

"இல்ல அக்கா, தங்கச்சி, அண்ணி மூணு பேரும் கன்ஸீவா இருக்காங்க... அவங்க மாமியார் வீட்லயும் யாரும் பார்த்துக்குற மாதிரி இல்ல... மூணு பேருக்கும் நம்ப தான் ஹெல்ப் பண்ற மாதிரி இருக்கும். அக்காக்கு வேற ட்வின்ஸ், ஸ்ராவனி வேற இருக்கா, இது இல்லாம இரண்டு குழந்தைங்க... கொஞ்சம் அவங்களுக்கு ஹெல்ப் பண்லாம். நமக்கும் ட்ரெய்னிங்கா இருக்கும்ல" என்று ஹம்சா சொல்ல, குயிலுக்கு அவனை இன்னுமே பிடித்து தான் இருந்தது.

 

அவள் பார்த்து இருந்த ஹம்சா எங்கே இவன் எங்கே?

 

அவனை இறுக அணைத்து இருந்தாள். "உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்குது" என்று சொல்லவும், "பிடிச்சா ஹக் மட்டும் பண்ண கூடாது" என்று சொன்னவன், அவளின் கழுத்து மடலில் உரச, "பேபி வேணாம்ன்னு சொன்னிங்க" என்றதும், "பேபி மட்டும் தான் வேணாம்னு சொன்னேன்" என்றவன் அருகில் இருந்த ட்ரையாரை திறந்து காட்ட, "அடப்பாவி எல்லாம் ரெடியா வந்து இருக்க" என்று சொல்லவும், அதற்கு மேல் அவளுக்கு பேச வாய்ப்பே கிடைக்கவில்லை.

 

கிடைக்கவில்லை என்று சொல்வதை விட அவன் கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

 

இதையே தான் அச்சு பிசறாமல் மயூரன் சொல்லி கொண்டு இருந்தான்.

 

"அண்ணிக்கு ட்வின்ஸ் டி, அம்மா கிட்ட போக மாட்டாங்க... ஸ்ராவனி பிறந்தப்பவே நாங்க அஞ்சு பேரு இருந்தோம். நானு, அண்ணி, அண்ணா, சாஹில், ஏசிபின்னு ரொம்ப கஷ்டம் தான். ஆனா இப்போ பாரு நாலு பேபீஸ்... கண்டிப்பா அவங்களுக்கு ஹெல்ப் தேவை படும். ஒரு டூ ஆர் த்ரீ யேர்ஸ் பிறகு பேபி என்ன?" என்று கேட்கவும், "நானே சொல்லணும்னு நினைச்சேன்" என்று மைனாவும் அதையே தான் சொல்லி இருந்தாள்.

 

"சரி அப்போ ஆரம்பிப்போமா?" என்று கேட்கவும், "ஆரம்பிக்கலாமே" என்று இருவரும் ஓருயிராக சேர்ந்து இருந்தார்கள்.

 

அடுத்த நாள் பத்து மணி அளவில் தான் இரு ஜோடிகளும் வெளியே வந்தார்கள்.

 

ஸ்ராவனிக்கு பரி ஊட்டி கொண்டு இருந்தாள்.

 

"அத்தை உங்களுக்கும் பேபி வர போகுதாம். அம்மா சொன்னாங்க" என்று அவள் கேட்கவும், "ஆமா ஆனா அதுக்கு இன்னும் எட்டு மாசம் ஆகும். உங்க அம்மாக்கு தான் முதல்ல வரும். அடுத்து ஹன்சி சித்திக்கு அப்புறம் தான் எனக்கு" என்று சொல்லவும், "வாவ் அப்போ நம்ப வீட்ல போர் பேபீஸ்" என்று வாயை பிளந்து கொண்டு அவள் கொடுக்கும் உணவை வாங்கி கொண்டு இருந்தாள்.

 

நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தன. பக்ஷியின் கேஸ் கூட தீவிர மடைந்தது.

 

அவரின் சொத்துக்கள் இனி அவரோடது இல்லை என்கிற நிலைமைக்கு வந்து இருந்தார். இருந்த சொத்துக்கள் பாதி சிட்டுவின் பேரிலும், மீதி எல்லாம் குழலி, கவிதா பேரிலும் இருந்ததால் அனைத்தும் பிள்ளைகள் பேருக்கு வந்து இருந்தது.

 

இது எல்லாம் விட, அந்த ஊரில் அவர் அமைத்து வைத்து இருந்த அனைத்து விதிமுறைகளையும் உடைத்து விட்டு இருந்தார்கள் சிட்டு, காகேஷ், ஹம்சா.

 

ஹன்சிகா கூட அவளின் பங்கிற்கு, "அண்ணி உங்க ஸ்கூல்ல ஒரு அப் லன்ச் பண்ணலாமே! பசங்க எல்லாருக்கும் ஹாம் வர்க், போன வருஷ குவெஸ்ட்டின் பேபேர்ஸ், அவங்க ப்ரோக்ரேஸ் எல்லாமே அதுலயே வரலாம். இதெல்லாம் நிறைய பிரைவேட் ஸ்கூல்ல இருக்கு தான். கவர்ன்மென்ட் ஸ்கூல்ல நீங்க கொண்டு வரலாமே" என்று சொல்ல, "நல்ல ஐடியா தான்.. ஆனா நிறைய இன்வெஸ்ட் பண்ண வேண்டியதா இருக்குமே" என்று சொல்லவும், "நான் பண்றேன் அண்ணி... என்கிட்ட காசு இருக்கு நான் கொடுக்குறேன்" என்று கொடுத்து இருந்தாள்.

 

அதை சிட்டுவிடம் சொல்ல, "நிறைய மாறிட்டா" என்று வந்தது சிட்டுவின் வார்த்தைகள். அவளுக்காக என்று வாழுந்து கொண்டு இருந்தவள், இப்பொது அடுத்தவர்களுக்காக என்று யோசிக்கிறாள்.

 

ஏழாம் மாதம் வந்து இருந்ததது.

 

"அக்காக்கு நான் சீமந்தம் பன்னலாம்னு இருக்கேன்" என்று வந்து நின்றான் ஹம்சா.

 

"அதெல்லாம் முதல் குழந்தைக்கு தான் பண்ணுவாங்க" என்று சிட்டு சொல்ல, "பரவால்ல அப்போ நான் இல்ல.. இப்போ பண்ணுறேன்" என்று சொல்லவும், "வீட்ல இன்னொரு பொண்ணு இருக்கா தெரியுமா?" என்று பரி கேட்க, "இல்ல எனக்கு சீமந்தம் எல்லாம் வேணாம்ன்னு நான் தான் சொன்னேன்" என்று அவள் சொல்ல, "சிட்டுக்கு நீ சீமந்தம் பண்றதா இருந்தா ஹன்சிகாவுக்கும் பண்ணு.. இல்லனா இரண்டு பேருக்கும் வேணாம்" என்று சொல்லி இருந்தான் ஜடாயு.

 

"இரண்டு பேருக்கும் பண்ணலாம்" என்று காகேஷ், "இல்ல வேணாம்... அப்புறம் அவரை வேற கூப்பிடனும்... வருவாங்க ஏதாவது பேசுவாங்க" என்று சொல்ல, "அதெல்லாம் பார்த்துக்கலாம்" என்று சொல்லி இருந்தான் காகேஷ்.

 

அன்றைய நாள் மாலையே ஹம்சா மற்றும் காகேஷ் சாஹிளை பார்க்க அவனின் வீட்டிற்கு வந்து இருந்தார்கள்.

 

அவர்களை பார்த்ததும், "உள்ள வாங்க" என்று அழைக்கவும், உள்ளே வந்தார்கள்.

 

ஹம்சாவிற்கு தான் தயக்கம் இருந்தது. காகேஷிற்கு அந்த தயக்கம் எல்லாம் இல்லை.

 

"எங்க வீட்ல இரண்டு பொண்ணுங்களுக்கு சீமந்தம் வைக்கலாம்னு இருக்கோம்" என்று உடைத்து விட்டான்.

 

"சரி" என்று அவன் சொல்ல, "சரி ஓகே வந்திரு" என்று அவன் எழவும், ஹம்சா இருவரையும் மாறி மாறி பார்த்தான். வெகு சாதாரணமாக பேசி இருந்தார்கள்.

 

'இவங்க உண்மையாவே நார்மலா இருக்காங்களா? இல்ல நம்ப முன்னாடி அப்படி இருக்காங்களா?' என்று நினைத்தவன், "வந்திருங்க சாஹில்" என்று அவனும் சொல்லிவிட்டு சென்று இருந்தான்.

 

ஒரே வாரத்தில் வெகு விமர்சியாக இரு பெண்களுக்கும் சீமந்தம் ஏற்பாடு செய்து இருந்தார்கள் ஹம்ஸாவும், காகேஷும்!

 

"இந்த நகை எல்லாம் போட்டுக்கோ" என்று குயில் சொல்லவும், "இல்ல வேண்டாம்" என்று குழலியின் நகையை கூட போடவில்லை ஹன்சிகா.

 

பரி தான் உருட்டி மிரட்டி கவிதாவின் நகைகள் சிலவற்றை போட்டு விட்டு இருந்தார்கள்.

 

சிட்டு மற்றும் ஹன்சிகாவை அமர வைத்து இருந்தார்கள்.

 

இதே சமயம் உள்ளே வந்தான் சாஹில்.

 

அத்தியாயம் 77

 

சாஹிலை பார்த்த பின்பு யாரும் ஒன்றும் பேசவில்லை. மயூரன் மட்டும், "வா டா நல்லவனே" என்று அவனின் தோளின் மீது கையை போட்டு அழைத்து சென்றான். அவனும் உள்ளே செல்ல, "ம்ம் எல்லாரும் நலங்கு வைக்க ஆரம்பிங்க" என்றதும் முதலில் ராஜேஸ்வரி தான் வைத்தார்.

 

இருவருக்குமே தங்க காப்பு போட்டு இருந்தார். ஹன்சிகா எதுவும் சொல்லவில்லை. அமைதியாக இருந்தாள்.

 

அடுத்து ஜடாயு சிட்டுவிற்கு வைக்க, சாஹில் ஹன்சிகாவின் புறம் நகர்ந்து சென்றான்.

 

சந்தனம், நலங்கு வைத்து அவளின் நெற்றியில் போட்டு வைத்தவன், அவளின் கைகளை பற்றி வளையல் அணிவித்து இருந்தான்.

 

அவள் முகத்தில் எந்த உணர்வும் இல்லை. முடியும் நேரம், "தேங்க்ஸ்" என்கிற ஒரு வார்த்தை வந்து இருந்தது.

 

"பேபி மூவ் ஆகுறானா?" என்று கேட்கவும், அவனை நிமிர்ந்து பார்த்து, "பையனா?" என்று கேட்கவும், அவனோ நாக்கை கடித்து கொண்டு, "ம்ம்.. யாரு கிட்டையும் சொல்லாத என்னை ஜெயில்ல பிடிச்சி போட்டுருவாங்க" என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்ல, "என்னைய தான் ஜெயில்ல முதல்ல போடணும்" என்று சொல்லவும், அவளை பார்த்து ஆழ்ந்த மூச்சை எடுத்து, "எல்லாத்தையும் மறந்திரு" என்று சொல்லி இருந்தான்.

 

"நீங்க மறந்திருங்க.. நான் என்னை பார்த்துக்குவேன்" என்று சொல்லி விட்டு இருந்தாள்.

 

அடுத்து காகேஷ் வந்தான். அவன் சிட்டுவிடம் செல்லும் முன் ஓடி சென்று அவளிடம் சென்று இருந்தான் ஹம்சா.

 

"அண்ணாவும் தம்பியும் இப்போ தான் குழந்தைங்க மாதிரி ஓடி பிடிச்சி விளையாடுறாங்க" என்று குயில் சொல்லவும், "அப்போ மிஸ் பண்ணிட்டாங்கல அதான்" என்று மைனா சொல்லி இருந்தாள்.

 

காகேஷின் கால்கள் இப்பொது ஹன்சிகாவின் பக்கம் நகர்ந்தது. நலங்கு வைத்தவனின் கையை பற்றி இருக்க, "நான் உங்க கிட்ட ஒன்னு கேட்டேன். நீங்க இன்னைக்கு தர்றதா சொன்னிங்க" என்று அவள் சொல்லவும், "நீ அதை விடவே மாட்டியா?" என்று கேட்கவும், அழுத்தமாக இல்லை என்று தலையசைத்து இருந்தாள்.

 

"எல்லாரும் போகும் பொது தரேன்" என்று சொன்னவன் அவளுக்கு செய்ய வேண்டிய எல்லவரையும் செய்து விட்டு, "உன் மேல நிறைய கோவம் இருந்தது. நான் பார்த்து வளர்ந்த பையன் சாஹில். அவன் வாழ்க்கையை என் முன்னாடி அழிச்சிட்டியேன்னு ஆத்திரம் இருந்தது. ஆனாலும் என்னவோ உன்னை பார்க்கும் போதெல்லாம் என் சித்தியோட முகம் நினைவுக்கு வருது" என்று சொல்ல, "கோவம் வந்தா அடிச்சிருங்க" என்றவளை பார்த்து, "அதான் அன்னைக்கே அடிச்சேனே" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து இருந்தான்.

 

ஹம்சா அவளின் அருகில் வந்தவன், "எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.. நீயே உன் தலைல மண்ணை வாரி போட்டுக்கிட்டே" என்று சொல்லவும், "அப்பா செஞ்ச பாவத்தை யாரவது அனுபவிக்கணும்ல... நான் அனுபவிக்குறேன் போல" என்றதும், "நீ செஞ்ச பாவமே இன்னும் இருக்கு" என்று சொல்லிவிட்டு நகர்ந்து சென்று இருந்தான்.

 

அனைத்தும் முடிய, இறுதியாக அனைவரும் சாப்பிட்டு உண்டு சென்று இருந்தனர்.

 

இறுதியாக ராஜேஸ்வரி வீட்டினர் இருந்தார்கள்.

 

ஹன்சிகாவோ, அவரின் முன் வந்து, "இது ம்யூச்சுவல் கன்சர்ன் டிவோர்ஸ்... நான் சைன் பண்ணிட்டேன். உங்க பையனை சைன் பண்ணி ப்ரொசீட் பண்ணிக்கலாம். நீங்க அவருக்கு வேற பொண்ணை பார்க்க ஆரம்பிங்க.. உங்க இந்த பையனோட கல்யாணம் நீங்க நினைச்ச மாதிரி நடக்கட்டும்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து இருந்தாள்.

 

சாஹிளுக்கு அவளை என்ன செய்தால் தகும் என்று இருந்தது. அவளை வைத்து கொண்டு வாழவும் முடியவில்லை. ஆனால் மொத்தமாக பிரியவும் முடியவில்லை. எங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறாள்.

 

"அதெல்லாம் தூக்கி போடுங்க" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியே சென்று இருந்தான்.

 

யாரும் எதுவும் பேசவில்லை.

 

இதோ அப்படி இப்படி என்று ஒன்பதாம் மாதம் துவக்கத்தில் சிட்டுவிற்கு பிரசவம் நடந்து இருந்தது. இரண்டுமே ஆண் குழந்தைங்கள் தான். ஜாடாயுவின் ஒரே இளவரசி ஸ்ராவனி தான் போல!

 

"செம்ம க்யூட்டா இருக்காங்க டி" என்று சொல்லி இருந்தான் ஜடாயு. அகத்தியன், அகிலன் என்று பெயர் சூட்டி இருந்தார்கள்.

 

அடுத்த இரு வாரத்திலேயே ஹன்சிகாவிற்கு குழந்தை பிறந்து இருந்தது. ஆண் குழந்தை தான்!

 

அவனை முதலில் சாஹில் தான் ஏந்தி இருந்தான். அப்படியே சாஹிலை உரித்து வைத்து பிறந்து இருந்தான் அவனது மகன்.

 

"என்ன பேரு யோசிச்சி இருக்க?" என்று ஹன்சிகாவை பரி கேட்க, அவளோ சாஹிலை பார்த்தாள்.

 

"சாஹித்யன்" என்று சாஹில் சொல்லி இருந்தான்.

 

சாஹில் மகன் சாஹித்யன் தானே!

 

"டேய் எப்படி டா இப்படி எல்லாம் யோசிக்கிற?" என்று மயூரன் சாஹித்யனை வாங்கி, "சாஹி பேபி! நான் தான் டா செல்லம் உன் சித்தப்பா.. உன் லூசு அப்பாக்கு பிறகு பிறந்த உன் ஒரே சித்தப்பா" என்று குழந்தையை கொஞ்சுகிறானா அல்லது சாஹிலை திட்டுகிறானா என்கிற நிலைமையில் இருந்தான்.

 

குழந்தை அழவும், "பேபிக்கு பீட் பண்ணனும்" என்று அவன் சொல்ல, அனைவரும் வெளியே செல்ல குழந்தையை வாங்கி இருந்தாள் ஹன்சிகா. அவன் அங்கேயே தான் நின்று இருந்தான்.

 

"என்ன இங்கையே நிக்குறீங்க? ஒரு நர்ஸை அனுப்புங்க.. பீட் பண்ணனும்" என்று சொல்லவும், அவனே நெருங்கினான். அவளுக்கு தூக்கி வாரி போட்டது.

 

"என்ன பண்ணுறீங்க?" என்று கேட்க, "பீட் பண்ண ஹெல்ப் பண்றேன்" என்று சொல்லவும், "நீங்க எதுக்கு? நர்ஸை அனுப்புங்க?" என்று அவள் சொல்ல, "நான் பார்க்காத இடம் ஏதாவது இருந்தா சொல்லு நான் வேற ஒருத்தரை அனுப்புறேன். அவங்களுக்கு தான் புதுசு எனக்கு இல்ல.. இப்போ எதுக்கு இப்படி சீன் போடுற.. இன்பெக்ட் உன் மகனுக்கு முன்னாடி" என்று அவன் சொல்லி முடிக்கும் முதலே, "நீங்களே ஹெல்ப் பண்ணுங்க" என்று சொல்லிவிட்டு இருந்தாள் ஹன்சிகா.

 

அவனுக்கு சிரிப்பு வந்தாலும் அடக்கி கொண்டான். அவனே தான் உதவினான். கூச்சமாக இருந்தது அவளுக்கு மட்டும் தான், மருத்துவன் அவனுக்கு இதெல்லாம் சாதாரணம் தான்.

 

"பார்ப் பண்ணி தூங்க வைக்கணும்" என்று அவள் பிள்ளைக்கு பசி ஆற்றிய பிறகு சொல்லி இருந்தான்.

 

ஹன்சிகா வீட்டிற்கு வந்த இரண்டாவது நாளே பரிக்கு வளைகாப்பு நடந்து இருந்தது.

 

"லைனா வளைகாப்பு தான் நடக்குது. முடியல டா" என்று மயூரன் புலம்பவும், "அதுக்கு தான் நான் இரண்டு வருஷம் பிரேக் விட்டு இருக்கேன்" என்று ஹம்சா சொல்ல, "மச்சான் நானும் டா" என்று அவனை கட்டி அணைத்து இருந்தான் மயூரன்.

 

அவர்களை பார்த்து மைனாவும் குயிலும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

 

"இதுங்க இரண்டும் திருந்தாத கேஸ்" என்று சொல்லி அங்கிருந்து நகர்த்தும் இருந்தனர்.

 

அவளுக்கும் நல்ல படியாக சீமந்தம் முடிந்து இருந்தது.

 

இரண்டு மாதங்கள் கழித்து இன்று தான் பக்ஷிக்கும் தீர்ப்பு எழுத காத்து கொண்டு இருந்தார் நீதிபதி.

 

எப்படியோ ஒரு வருடத்தில் அவரை தீர்ப்பு எழுத வைத்து இருந்தனர் என்று தான் சொல்ல வேண்டும்.

 

அவர்கள் நினைத்தது போல அவருக்கு தூக்கு தண்டனை கிடைக்கவில்லை என்றாலும், ஆயுள் தண்டனை கிடைத்து இருந்ததது.

 

"ஜெயில்ல போய் இதோட கலி தின்னு" என்று காகேஷ் சொல்ல, "உன் பொண்டாட்டி மாசமா இருக்கறாளாமே" என்று சொல்லி மார்கமாக சிரித்து இருந்தார் பக்ஷி.

 

அவனுக்கு ஏதோ உறுத்தியது.

 

அன்று இரவு, "சீயர்ஸ்" என்று ஹம்சா, மயூரன், ஜடாயு சொல்லவும், காகேஷ் மட்டும் இன்னும் ஏதோ யோசனையில் இருந்தான்.

 

இரண்டு மாதமேயான சாஹித்யனை தூக்கி கொண்டு அவனின் அருகில் வந்தாள் ஹன்சிகா. அவளிடம் பெரிதாக பேச வில்லை என்றாலும் அவளின் குழந்தையின் மேல் அதிக அன்பு இருக்க தான் செய்தது. அவனின் தங்கையின் குழந்தை என்பதை தாண்டி அது சாஹீலின் குழந்தை. சாஹிலை பிறந்து பார்ப்பது போல் அவனுக்கு எப்போதும் தோன்றும். அகத்தியன், அகிலனை ஹம்சா மற்றும் மயூரன் அவர்கள் வசம் ஆக்க, சாஹித்யன் காகேஷின் வசம் ஆகிப்போனான் என்று தான் சொல்ல வேண்டும்.

 

"ஏதாவது பிரச்சனையா?" என்று கேட்டவளிடம் குழந்தையை அவன் வாங்கி, "இல்ல ஆனா அந்த ஆளு ஏதோ பிளான் வச்சி இருக்கானு தோணுது" என்று சொல்லி இருந்தான்.

 

"எதுவும் ஆகாது. எதுவும் ஆக நீங்க விட மாட்டிங்க" என்று சொல்லவும், அவனோ அவளை பார்த்து, "ட்ரான்ஸ்பெர்க்கு அப்பளை பண்ணி இருக்கியா?" என்று கேட்கவும், அவளோ ஆமாம் என்று தலையசைத்தாள்.

 

"ஏன்?" என்று கேட்கவும், "கொஞ்ச நாள் தனியா இருக்கனும்" என்று முடித்து கொண்டாள்.

 

அன்றைய நாள் சாஹில் கூட குமரகத்தில் இருப்பதாக சொல்லி இருந்தான். அகத்தியனுக்கு கொஞ்சம் உடம்பு முடியாததால் அவனை பார்த்துக்கொள்ள இருப்பதாக சொல்லி இருந்து கொண்டான்.

 

அன்றைய இரவு தான் பரிக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் போல் இருக்க அவளும் அறையை விட்டு வெளியே வரும் பொது நிழல் உருவம் ஒன்றை பார்த்து, "ஆஹ்" என்று கத்தி விட்டாள்.

 

அவள் கத்தவும், காகேஷின் கைப்பேசி அலறவும் சரியாக இருந்தது.

 

"சார் பக்ஷி தப்பிச்சிட்டான் சார்" என்று எதிரே சொல்லவும், "ஷீட்" என்று கத்திகொண்டே வெளியே ஓடி வர நேரம், பரியை கத்தி முனையில் அவனின் கை பிடியில் வைத்து இருந்தான் பக்ஷிராஜன்.

 

சத்தம் கேட்டு அனைவரும் ஓடி வந்து இருந்தனர்.

 

"வாங்க டா வாங்க... என்ன இந்த பக்ஷிக்கே பால் உத்தலாம்னு நினைசீங்களா? என் முன்னாடி நீங்க எல்லாம் எம்மாத்திரம்? இவன் தான் எல்லாத்துக்கும் காரணம். இவனை அன்னைக்கே முடிச்சிட்டேன்னு நினைச்சேன் முடியல... ஆனா இன்னைக்கு.. உங்க எல்லாரையும் கொல்லனாலும் பரவால்ல.. ஆனா அவன் வாரிசையும் அவன் வாரிசை சுமந்துக்கிட்டு இருக்க இவளையும் போட்டு தள்ளாம விடமாட்டேன் டா" என்று பக்ஷி பரினீத்தியின் கழுத்தில் கத்தியை வைத்து அழுத்த போகும் சமயம், "வேண்டாம்" என்று அனைவரும் கத்த, "அம்மா" என்று பரினீத்தி கத்த, கண்ணை மூடி கொண்டவள் திறக்கும் பொது அவளுக்கு இன்னும் வலி இல்லை.

 

கண்களை திறந்து பார்த்தாள். அனைவரின் கண்களும் அவளின் பின்னால் சென்று அதிர்ந்து நின்றது.

 

திரும்பி பார்த்தவளுக்கு அதே நிலை தான். பக்ஷி ரத்த வெள்ளத்தில் கிடக்க, அங்கே பெரிய திருவடி உபயோகி படுத்தி இருந்த அந்த அரிவாளுடன் ஒரு கையில் குழந்தையுடன் நின்று இருந்தாள் ஹன்சிகா.

அத்தியாயம் 78

 

பரி ஒரு முறை பின்னால் சென்று வந்தாள். ஹன்சிகாவின் கைகளில் இருந்த அரிவாளும் கீழே விழுந்து இருந்தது.

 

இரவு சாஹித்யனுக்கு உறக்கம் வராமல் இருக்க, சிணுங்கி கொண்டே இருந்தவனை தூக்கி நடக்க அவர்கள் வீட்டில் உள்ளேயே இருக்கும் கூடத்திற்கு வந்து இருந்தாள். கொஞ்சம் நடந்ததும் சொக்க ஆரம்பித்து இருந்தது சாஹித்யனுக்கு. அவன் உறங்கி விட்டான் என்று அவள் உள்ளே செய்யும் சமயம் தான் அந்த உருவத்தை பார்த்தாள். இந்த நேரத்தில் யார் என்று கூர்ந்து பார்க்கும் பொது தான், "அப்பா" என்று அவளின் வாய் முணுமுணுத்தது.

 

'ஜெயில்ல இருந்து தப்பிச்சிட்டாரா? காகேஷ் அண்ணா இதை தான் நினைச்சி சொன்னாரா? என்ன செய்ய வந்து இருக்காருன்னு தெரியலையே' என்று அவள் நினைத்து கொண்டு இருக்கும் போதே, வெளியே வந்தாள் பரினீத்தி.

 

"அண்ணி" என்று அவள் கத்துவதற்கு முன்பு அவளின் அருகே வந்த பக்ஷி அவளை வளைத்து பிடித்து இருந்தார் பக்ஷி. அதிர்ந்து தான் விட்டார் அவள்.

 

பரியின் கழுத்தில் கத்தி வைத்து இருக்கிறார். நினைக்கவே நெஞ்சு பதறியது. அவள் அறிந்து அன்னையின் கைகளில் சாப்பிட்ட நினைவு எல்லாம் இல்லை. அதற்கு பிறகு கூட வேலையாட்கள் ஊட்டுவார்கள். ஆனால் தாயின் அன்பை அவளுக்கு கொடுத்தவள் உண்மையாகவே பரி ஒருத்தி தான். அண்ணி என்பவள் அடுத்த அன்னை என்று அவளுக்கு உணர்த்தியவள் அவள்.

 

உலகமே அவளை குற்றம் சொன்னாலும், தாய்க்கு தன் குஞ்சு பொன் குஞ்சு போல, ஹன்சிகாவை அவளின் மகவை போல பார்த்து அனைவரிடமும் பேணி காத்து இருந்தவள் அவள்.

 

அவளும் மாதமாக இருந்தாலும், அதை எல்லாம் பொருட்படுத்தாமல் வந்து, சாப்பிட கொடுத்து இருக்கிறாள். அக்கறையாக பார்த்து கொண்டு இருக்கிறாள். ஏன் இன்று வரை பத்திய சாப்பாடு வரை அவளுக்கு பார்த்து கொடுப்பது அவள் தான்.

 

அதையும் விட காகேஷ். அவளிடம் பேசினது இல்லை தான். அவளும் இன்று வரை அண்ணா என்று அழைத்தது இல்லை தான். ஆனால் பரி எத்தனை நாட்கள் அவளுடன் தூங்கினாலும் ஒரு வார்த்தை கூட கேட்காது, ஹன்சிகாவின் உடல் நிலை எல்லாமே பரியின் மூலமாக கேட்டு அறிந்து கொண்டே தான் இருந்தான்.

 

ஒரு நாள் அவள் நடந்து கொண்டு இருக்கும் பொது கூட அவர்கள் பேசுவதை கேட்டாளே!

 

"அவளை கொஞ்சம் பார்த்துக்கோ பரி, சிட்டு எனக்கு பிரச்சனை இல்ல ஜாடாயு இருக்கான். இவ தான் கொஞ்சம் பயமா இருக்கு... நான் வேற கேஸ்ல பிசியா இருக்கேன். நீ அவ கூட இருக்கேன்னு தெரியும். உன்கூடவே நான் பெருசா எதுவும் பேசுறது இல்ல... ஆனா ஹம்சா உன்னை பார்த்துக்குறானு எனக்கு தெரியும். ஆனா அவ அப்படி இல்ல.. இந்த வீட்ல அவ உங்கிட்ட மட்டும் தான் நல்ல படியா பேசுறாளே! குயிலும் புதுசா கல்யாணம் ஆன பொண்ணு அதுவும் சின்ன பொண்ணு வேற... அதனால நீ கொஞ்சம் ஹன்சி கூட இருந்துக்கோ ப்ளீஸ்" என்று சொல்லி இருந்தானே!

 

அண்ணாவாக அவனின் கடமையை அவன் ஆற்றாத இடம் என்று ஒன்றுமே இல்லை. அவளை சொந்த காலில் நிற்க வைத்தது பரி. அவளுக்கு சொந்தமாக இருப்பவன் காகேஷ். அவர்களின் வாரிசை, அவர்களின் காதலின் சின்னத்தை அவளின் முன் அழிக்க நிற்கிறான் ஒரு அரக்கன்.

 

ஆம், அரக்கன் தான். பக்ஷி இப்பொது அவளின் அப்பாவாக தெரியவில்லை. அரக்கனாக தெரிந்தார். அவளின் வாழ்க்கையில் அவள் வாழவே பிடிக்காத நிலையில், அவளுக்கு பிடிப்பை கொடுத்த இரு தெய்வங்களின் குழந்தையை அழிக்க நினைக்கும் ஒரு அரக்கன்.

 

அவர் பேசிக்கொண்டு முடிக்கும் போதே கண்களை சுழல விட்டாள். சுவற்றில் பெரிய திருவைத்தியின் அரிவாள் ஒன்று இருந்தது.

 

யாரும் அதை தொட்டது இல்லை. அவருக்கு பின் அதை தொடும் அருகதை யாருக்கும் வரவில்லை. அப்படி தான் அனைவரும் நினைத்து இருந்தார்கள். பெரிய திருவடிக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது. அவரின் மேல் உள்ள அந்த மரியாதையே அந்த அரிவாளை அங்கே இருக்க வைத்து இருந்தது. எல்லாம் சிட்டு வந்த பிறகு வைத்தது தான்.

 

அவளுக்கு அது கூட நினைவு இல்லை. அவளுக்கு எதையாவது வைத்து அந்த அரக்கனை தடுக்க வேண்டும். வதம் செய்யும் காளியாய் மாறி இருந்தாள்.

 

அரிவாளை எடுத்தவள், பக்ஷி அனைத்தையும் பேசி முடித்து, பரியின் கழுத்திற்கு கத்தியை எடுத்து போகும் முன்னே, அவரின் பின்னால் இருந்து அவள் அவரின் கழுத்தை வெட்டி இருந்தார்.

 

யாருமே நினைத்து பார்க்கவில்லை. பக்ஷியையும் பரியையும் பார்த்தவர்கள் பின்னால் இருந்த ஹன்சிகாவை பார்க்கவில்லை.

 

காகேஷின் இதயம் மட்டும் அல்ல, பக்ஷி பரியின் கழுத்தில் கத்தியை எடுத்து போகும் சமயம் அங்கே இருந்த அனைவரின் இதயமும் ஒரு முறை நின்று துடித்தது.

 

ஆனால் பரிக்கு பதில் பக்ஷி விழுவார் என்று யாரும் நினைத்து பார்க்கவில்லை.

 

பரி திரும்பி பார்க்கவும், அங்கே ரௌத்திர கண்களுடன் ஹன்சிகா நின்று இருக்க, பக்ஷியோ இன்னும் உயிருக்கு போராடி கொண்டு இருந்தார்.

 

அவருக்கு கண்களில் குழலியின் மகள் தெரியவில்லை. கவிதா தெரிந்தாள். ஆம், கவிதா தான் தெரிந்தாள்.

 

எந்த மகனை அவரின் உயிரை கொடுத்து ஈன்று எடுத்து இருந்தாரோ, இன்று அதே மகனின் உயிர் அணுவில் இருந்து பிறக்கும் மகவை காக்க, அவரின் உயிரை கொடுக்காமல் பக்ஷியின் உயிரை எடுத்து இருப்பது இருந்தது அவருக்கு!

 

கவிதா இறந்த பிறகு அந்த வீட்டில் அதுவும் குழலியின் வயிற்றில் உதித்த மகவு ஹன்சிகா தானே! அவரின் காதல் குழலிக்கு காதலால் மட்டுமே பிறந்தவளால் தான் அவரின் இறுதி அத்தியாயமும் எழுத பட்டது.

 

எந்த மகளை அவரின் காதலின் சின்னமாய் பார்த்தாரோ, எந்த மகளை வைத்து இந்த பறவை கூட்டத்தை அடக்கி விடலாம் என்று நினைத்தாரோ, எந்த மகளை அவரின் உயிருக்கு உயிராக நேசித்தாரோ, அதே மகளின் கையால் தான் இன்று அவரின் உயிரும் பிறந்து இருந்தது.

 

ஒரு நொடி பரியை பார்த்தவள், பின்பு அரிவாள் கீழே விழுந்ததும் அவரின் அருகில் அமர்ந்தாள்.

 

"சாரி நான் உங்க பொண்ணு இல்ல.. குழலியோட பொண்ணு தான்" என்று அவள் சொன்னது அனைவரின் செவிகளிலும் விழுந்து இருந்தது.

 

இதே சமயம் அங்கே மற்ற காவலர்களும் வந்து விட்டு இருந்தார்கள். ஒரு யுகத்தில் இங்கு தான் பக்ஷி வந்து இருப்பான் என்று கணித்து வந்து இருந்தார்கள்.

 

காகேஷை பார்த்ததும் சல்யூட் அடித்து விட்டு, அங்கே அரிவாள் இருப்பது மற்றும் பக்ஷி சடலாம்க இருப்பது என்று அனைத்தையும் பார்த்தவர்கள். இப்பொது காகேஷை பார்க்க, அவன் பேசுவதற்கு முன்னே, "நான் தான் கொலை பண்ணேன்" என்று சொல்லி இருந்தாள் ஹன்சிகா.

 

இதை யாரும் எதிர் பார்க்கவில்லை. அவள் ஒப்புக்கொள்வாள் என்று தெரியும் தான். ஆனால் இப்போதே, இந்த நிலைமையில்?

 

"எவிடென்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணுங்க... போஸ்ட் மோர்டெம் ரெடி பண்ணுங்க... நான் கொஞ்சம் ஹன்சிகா கிட்ட பேசணும்" என்று காகேஷ் சொல்லவும், "ஓகே சார்" என்று சொல்ல, அவளை அழைத்து கொண்டு அனைவரும் கொஞ்சம் ஒதுக்கமாக நின்று இருந்தனர்.

 

பரிக்கு இன்னும் உடல் நடுக்கம் குறைந்தது இல்லை.

 

அவளின் கையை வந்து மைனா பற்றி இருக்க, சிட்டுவிற்கு கூட அதிர்ச்சி தான்.

 

குயில் கூட அப்படியே நின்று இருந்தாள்.

 

"உட்கார்" என்று காகேஷ் சொல்லவும், அவனின் எதிரில் அமர்ந்தாள் ஹன்சிகா.

 

"இதெல்லாம் ஒன்னும் பெரிய கேஸ் இல்ல... நான் பார்த்துக்கறேன்" என்று அவன் சொல்ல, அவளோ அழுத்தமாக இல்லை என்று தலையசைத்து இருந்தாள்.

 

"நான் ஜெயிலுக்கு போக வேண்டியவை தானே! என்ன இருந்தாலும் ஒரு ரேப்பிஸ்ட் நான்.. இவரை கொன்னதுக்கு எல்லாம் எனக்கு ஜெயிலுக்கு போகணும்னு அவசியம் இல்ல தான். எப்படியா இருந்தாலும் குற்றவாளி தான் . தண்டனை அனுபவிக்கறது தான் நல்லது. யாரும் அப்புறம் தப்பு யாரு வேணா பண்ணலாம். தண்டனை எதுவும் கிடைக்காதுன்னு நினைக்க கூடாது. நான் உட்பட... அவருக்கு ரொம்ப பிடிச்ச பொண்ணு நான் தான்.. நிறைய அவரை மாதிரியே இருந்துட்டேன். அவரு போன பிறகு இப்போ என்னவோ எனக்குள்ள இருந்த எல்லா கெட்ட எண்ணமும் போன போல ஒரு பீல்... இன்னும் இந்த தண்டனையையும் அனுபவிச்சிட்டு வந்தா ஐ வில் பீல் ரீலீவ்ட்" என்று அவள் சொல்லி முடிக்கவும், "ஹன்சி" என்று அவளின் அருகில் வந்தாள் பரி.

 

"ரொம்ப தேங்க்ஸ்" என்று கையை எடுத்து கும்பிட்டு இருந்தாள். அவளின் கையை பிடித்து, "எத்தனை நாள் இந்த கையாள எனக்கு சோறு ஊட்டி இருப்பிங்க... எத்தனை நாள் எனக்கு கால் அமுக்கி விட்டு இருப்பீங்க... நான் தான் உங்களுக்கு நிறைய தேங்க்ஸ் சொல்லணும். நிறைய நாள் யோசிச்சி இருக்கேன். உங்களுக்காக ஏதாவது பண்ணனும்னு ஏதோ என்னால முடிஞ்சது பண்ணிட்டேன்." என்று அவள் சொல்லி முடிக்க, ஜடாயுவோ, "உண்மையாவே நீ ஜெயிலுக்கு போறது எனக்கு விருப்பம் இல்ல... ஆனாலும் அது உனக்கு நிம்மதியை தரும்னா போயிட்டு வா" என்று சொல்லி இருந்தான்.

 

அவனை பார்த்தவள், "எனக்காக ஏதாவது பண்ணனும்னு நினைச்சா நீங்க உங்க தம்பி கிட்ட திருப்பி பழைய மாதிரி பேசணும்.. ப்ளீஸ்... உங்களை மாதிரி எனக்கு ஒரு அப்பா கிடைச்சி இருக்கலாம். நான் நல்ல பொண்ணா வளர்ந்து இருப்பேனோ என்னவோ" என்று சொல்லும் போதே அவளின் கண்களில் கண்ணீர் விழுந்து விட்டது.

 

"இப்பவும் நீ என் பொண்ணு தான்" என்று அவளை ஜடாயு அணைக்க, அவனின் இடுப்பை கட்டி கொண்டு, "நான் ரொம்ப மோசமா வாழ்ந்துட்டேன் மாமா... எல்லாத்துக்கும் காரணம் நான் தான்... என்னால தான் எல்லாருக்கும் பிரச்சனை.. இனி அது இருக்காது. நீங்க எல்லாரும் சந்தோஷமா வாழுங்க" என்று தேம்பி அழுது அவள் சொல்லவும், "அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல... யாரு சொன்னது?" என்று சிட்டுவும் வந்து அமர்ந்தாள்.

 

"நாங்க யாருமே செய்ய யோசிச்சதை நீ செஞ்சு இருக்க.. யு ஆர் கிரேட்" என்று அவள் சொல்லி அவளை அணைத்து, "இங்கையே இருக்குறியா?" என்று கேட்கவும், "இல்ல அக்கா வேணாம்... ப்ளீஸ் எனக்கு தண்டனை வேணும்" என்று சொல்லி விலகி விட்டு, "உங்களுக்கு என்னைக்குமே நான் நல்ல தங்கச்சியா இருக்கல்ல... எவளோ கேவலமா பிஹேவ் பண்ணிருக்கேன்ல" என்று சொல்லி விசும்பவும், "அழ கூடாது" என்று சொல்லும் பொது அழுதது என்னவோ சிட்டு தான்.

 

ஹம்சா அவளின் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.

 

"அம்மா ரொம்ப பெருமை பாடுவாங்க" என்று சொல்ல, "உங்களை பார்த்து எப்பவும் பெருமை மட்டும் தான் பட்டு இருப்பாங்க" என்று சொன்னவள் அவனையும் அணைத்து, "சாரி அண்ணா" என்று சொல்லவும், அவளை இறுக அணைத்து இருந்தான். சிட்டுவும் சேர்ந்து கொள்ள, காகேஷ் அவர்கள் மூவரையும் சேர்த்து அணைத்து இருந்தான்.

 

ஒரே குடும்பமாக இன்று தான் நால்வரும் சேர்ந்து அணைத்து இருந்தார்கள்.

 

அவர்கள் பிரியும் சமயம், "சார் போஸ்ட் மோர்டெம் அனுப்பிட்டோம்.. அக்யுஸ்ட்" என்று அவர் ஹன்சிகாவை பார்க்க, "போகலாம் சார்" என்று அவள் எழும் சமயம், கையில் இருந்த குழந்தைக்கு என்ன புரிந்ததோ அழ துவங்கி இருந்தான் சாஹித்யன்.

 

இப்பொது குழந்தையை விட்டு பிரியும் எண்ணம் அவளுக்கு நெஞ்சை சுட்டது. பரியின் குழந்தையை காப்பற்றி விட்டாள். ஆனால் அவளின் குழந்தை?

 

பிரிந்து ஆக வேண்டும் என்று அவளுக்கு இப்பொது தான் புரிந்தது.

 

நெஞ்சே அடைத்தது. எத்தனை ஆசையாக அந்த பிள்ளையை பெற்றாள். இப்போது அவன் கூட இருக்க முடியாது என்கிற நிலை.

 

அந்த காவலரை பார்த்து, "ஒரே ஒரு தடவை கடைசியா குழந்தைக்கு பசி ஆத்திட்டு வரட்டுமா சார்?" என்று அவள் சொல்லும் போதே, அவளின் மார்பில் பால் சுரந்து வழிந்து ஓடியது.

 

அவள் கேட்கும் போதே உடைந்து விட்டனர் பெண்கள். அவர்களுக்கு அவளின் உணர்வு புரியாமல் இல்லை. சிட்டு ஜடாயுவின் நெஞ்சில் சாய்ந்து அழுதாள்.

 

அந்த காவலரோ காகேஷை பார்க்க, அவனுக்கு தலையசைக்கும் சமயமே கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. எந்த அண்ணாவிற்கு வர கூடாதா நிலை. உடன் பிறந்தவள் அவள் பெற்ற குழந்தைக்கு அதுவும் இறுதியாக பசி ஆற்ற அடுத்தவனிடம் அனுமதி வாங்குகிறாள்.

 

"போயிட்டு வாங்க மா" என்றதும், வேகமாக சென்று அவளின் குழந்தைக்கு பசி ஆற்றி முடித்து உறங்க வைத்து விட்டு, "அம்மா இல்லாம கொஞ்ச வருஷம் இருந்துக்கோ டா செல்லம். அம்மா வந்ததும் கண்டிப்பா வேற எங்கையாவது போய்டலாம்" என்று சொல்லி முத்தம் கொடுக்கும் போதே கண்ணீர் தாரை தாரையாக வழிந்து ஓடியது.

 

குழந்தையை எடுத்து கொண்டு அவள் வரும் சமயம், "இல்ல காகேஷ் அவளை இப்படியே நம்ப ஸ்டேஷன் கொண்டு போணுமா? அவ என்ன மஹாத்மாவையா கொன்னா?" என்று ஜடாயு அவனிடம் பேசி கொண்டு இருக்கவும், வந்தவள் அடுத்து வந்து நின்றது என்னவோ காகேஷிடம் தான்.

 

"முடிஞ்சுது சார்... ஒரே ஒரு ஹெல்ப் பண்றிங்களா?" என்று அவள் கேட்கவும், அவள் சார் என்று அழித்ததே அவனுக்கு குத்தியது.

 

ஆனால் அவனை சுற்றி காவலர்கள் இருக்கும் சமயம், அப்படி அழைக்காதே என்றும் சொல்ல முடியாது.

 

"ம்ம்" என்று சொல்ல, "நான் வர வரைக்கும் குழந்தையை மட்டும் பார்த்துக்குறீங்களா? நான் வந்ததும் நானே எங்கையாவது குழந்தையை எடுத்துட்டு போயிடுறேன். அது வரைக்கும் மட்டும் பார்த்துக்கோங்க.. அப்படி உங்களால முடியலைன்னா ஏதாவது நல்ல ஆரபானெஞ்.." என்று அவள் துவங்கும் போதே, "உனக்கு என்ன பைத்தியமா? நாங்க எல்லாம் என்ன செத்தா போய்ட்டோம்?" என்று மயூரன் தான் வந்து குழந்தையை வாங்கி இருந்தான்.

 

"ஆர்ப்ஹானேஜ் மண்ணாங்கட்டின்னு பேசுனா அப்புறம் அவளோ தான் சொல்லிட்டேன்" என்று மயூரன் கத்தி கொண்டே சாஹிலை பார்த்து, "என்ன டா அவ இப்படி பேசுறா நீ கல்லு மாதிரி நிக்குற" என்று அவன் கேட்கவும், அவன் எதுவும் சொல்லவில்லை. நடந்த அனைத்தையும் பார்த்து கொண்டே இருந்தான். அவனுக்கு உண்மையாகவே என்ன சொல்வது என்று தெரியவில்லை.

 

உடன் ஒரு பாஸ்புக் எடுத்து வந்து இருந்தாள்.

 

அதையும் காகேஷிடம் நீட்டி, "இதுல என் ஒன்பது மாசம் செலரி இருக்கு... குழந்தைக்கு எது வேணும்னாலும் வாங்கி கொடுங்க... ப்ளீஸ் நான் சிறையில்ல இருக்கேன்னு என் குழந்தைக்கு தெரிய வேணாம். அம்மா பாரின்ல வேலை செய்யுறேன்னு ஏதாவது சொல்லுங்க... நான் வந்ததும் குழந்தையை..." என்று அவள் மீண்டும் துவங்க, "அவளை கொஞ்சம் ஜெயிலுக்கு கூட்டிட்டு போக சொல்லு டா... பேசுனதையே திருப்பி திருப்பி பேசிகிட்டு இருக்கா" என்று இம்முறை தான் பொரிந்து இருந்தான் சாஹில்.

 

குழந்தையை அனாதை ஆசிரமத்தில் விட வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கா அவர்கள் அவளை கொடுமை படுத்தி இருக்கிறார்கள்?

 

அந்த பாஸ்புக்கை வாங்கி மயூரனிடம் கொடுத்தவன், "இதை வை" என்று சொல்லி அவளை பார்த்து, "இங்க பாரு.. நாங்க எல்லாம் என்ன உனக்கு அந்நியமா? ஏன் இப்படி எல்லாம் பேசுற? உன்னை நாங்க இந்த வீட்ல ஒருத்தியா பார்க்கல? அப்புறம் ஏன் இப்படி எல்லாம் பேசுற? குழந்தை நீ வர வரைக்கும் இங்கையே இருப்பான். யாரும் நீ ஜெயில்ல இருக்கறதை சொல்ல மாட்டோம் சரியா? நீ காசு தந்து தான் குழந்தையை பார்க்கணும்னு ஒன்னும் இல்ல.. ஏன் டி எப்பவும் எல்லாரையும் ஒதுக்கி வைக்குற? ஒரு தடவை கூட உனக்கு என்ன அண்ணான்னு கூப்பிடணும்னு தோணல தானே? என்ன இருந்தாலும் நான் வேற அம்மாக்கு பிறந்தவன் தானே?" என்று அவன் சொல்லி முடிக்கும் போதே, "சிட்டு மாதிரி ஒரு தங்கச்சிய வச்சிக்கிட்டு என்ன மாதிரி சாக்கடை உங்களுக்கு தங்கச்சியா வேண்டாம் அண்ணா" என்று முதல் முறையாக அவனை அண்ணா என்று அழைத்து இருந்தாள்.

 

"யாரு சாக்கடை? இங்க எல்லாரும் கங்கை நதியா? புருஷனை வச்சிக்கிட்டு வேற ஒருத்தன் கூட எத்தனை பேரு இருக்காங்க தெரியுமா? பொண்டாட்டியோட சேர்த்து எத்தனை வப்பாட்டி? ஏன் நம்பளை எல்லாம் பெத்த இந்த பரதேசி கூட இப்போ பத்தொன்பது வயசு தெய்வானையை ரேப் பண்ணி இருக்கான்... பண்ண தப்பை திருத்தி எழுதி இருக்க ஹன்சி.. நீ ஒன்னும் சாக்கடை இல்ல.. உன் மேல இருந்த சாக்கடை எல்லாம் நீ சுத்தம் பண்ணிகிட்டே... எதையும் யோசிக்காத... ஐ பீல் இப்போ உனக்கு வேண்டியது மன அமைதி.. உனக்கு அது ஜெயில்ல கிடைக்குமான்னு தெரியல.. பட் ஐ வில் ட்ரை மை லெவல் பெஸ்ட்" என்று சொல்லி அவளின் கைகளில் விலங்கு மாட்டி இருந்தான்.

 

நான்கு மாதங்களுக்கு முன் எந்த கைகளால் வளையல் பூட்டி இருந்தானோ அதை கைகளால் இப்பொது விலங்கும் பூட்டி இருந்தான்.

 

எந்த ஹன்சிகாவை அனைவரும் இகழ்ந்தார்களோ, எந்த ஹன்சிகாவை அனைவரும் வெறுத்தார்களோ, எந்த ஹன்சிகாவால் சாஹில் வாழ்க்கை போனது என்று சொன்னார்களோ, அதே ஹன்சிகா இன்று சிறைக்கு செல்லும் பொது அனைவரின் கண்களிலும் கண்ணீர் இருந்தது.

 

சாஹீலின் வாழ்க்கையை கெடுத்தவள், இன்று பரி மற்றும் அவளது குழந்தை என்று இருவருக்கும் வாழ்க்கை கொடுத்து சென்று இருக்கிறாள்.

 

இந்த மொத்த பறவை கூட்டமும் சேர்ந்து அசைக்க முடியாத பக்ஷியின் கதையை அவளின் கையால் முடித்து வைத்து இருக்கிறாள்.

 

குமரகத்தின் இளவரசி சிட்டாக இருக்கலாம், அதன் ராஜா காகேஷாக இருக்கலாம், மந்திரி ஹம்சாவாக இருக்கலாம். ஆனால் அனைத்திற்கும் ஒரு சேனாதிபதி வேண்டும். நல்ல சேனாதிபதி இல்லை என்றால் ராஜ்யமே கவிழ்ந்து விடும். இந்த குமரகத்தின் பெண் சிங்கமாய் சேனாதிபாதியாய் இருப்பவள் ஹம்சா தான்.

 

செய்த தவறை திருத்தி எழுத முடியாது. ஆனால் செய்த தவறுக்காக தண்டனையை இதோ அனுபவிக்க செல்கிறாள். திருத்தி எழுத முடியாத ஒரு தவறுக்கு பிராய்ச்சித்தமாக தவறான ஒருவனை அழித்து, புனிதமான ஒரு ஜீவன் இந்த உலகிற்கு வர வழி வகுத்து கொடுத்து இருக்கிறாள்.

 

அவளின் பயணம் இங்கே முடியவில்லை தொடரும்!

 

சாஹீலின் கண்கள் போகும் அவளில் தான் பதிந்தது.

 

 

 

 

அத்தியாயம் 79

 

மூன்று வருடங்கள் கழித்து,

 

"வா மா ஹன்சிகா இன்னைக்கு தான் உனக்கு விடுதலை" என்று சொல்லி இருந்தார் அந்த சிறைச்சாலையின் தலைமை காவல் அதிகாரி.

 

அவளும் வந்தாள். அவள் யாரென்று அவருக்கு தெரியும். ஆனால் அவள் யாரென்று மற்றவர்களுக்கு தெரியாமல் பார்த்து கொள்ளும் படி அவள் சொல்லி இருந்தாள்.

 

இந்த மூன்று வருடங்களில் அவள் படாத துயரம் துன்பம் எண்ணில் அடங்காதது இருந்தது. கஷ்டமாக இருந்தது தான். சிறைக்கு வந்த முதல் வாரம் அந்த உணவு ஒத்து கொள்ளாமல் வாந்தி எடுத்து மயக்கம் வரை சென்று இருந்தாள்.

 

இதில் பால் கட்டி நெஞ்சு வேறு வலித்தது. நெஞ்சு வலித்ததை விட, இனி குழந்தைக்கு தாய் பால் கொடுக்க முடியாதோ என்று தான் வலித்தது. ஆனால் எப்படியோ அதை பம்ப் செய்து அந்த காவல்துறை அதிகாரியிடம் கொடுத்து அனுப்ப காகேஷ் வழி செய்து இருந்தான்.

 

இளவரிசியாக வளர்ந்தவள் இப்படி சிறையில் பரதேசி போல் வாழ வேண்டிய கட்டாயம்.

 

அவளுக்கு அவளே கொடுத்து கொண்ட தண்டனை தான். தந்தையை கொலை செய்தவள் என்று சில பேர் அவளை பார்த்தாலும், அந்த தந்தை எப்படி பட்டவர் என்று பலருக்கும் தெரியாதே!

 

அதை எல்லாம் சட்டை செய்யாமல் இருக்க பழகி கொண்டாள். அவள் கற்று இருந்த படிப்பு இங்கேயும் அவளுக்கு உதவியது. காவல் துறைக்கு தேவையான பல ஏஐ சம்மந்தப்பட்ட உதவிகளை செய்து கொடுத்தாள்.

 

அதையும் காகேஷ் தான் சொல்லி இருந்தான்.

 

"அவ ஒரு ஏஐ என்ஜினீயர். ரொம்ப ரொம்ப டெலெண்டெட்" என்று சொல்ல, அதை காவல்துறையும் பயன் படுத்தி கொண்டது. அதில் இருந்தும் அவளுக்கு தனி மரியாதை தான். அது காகேஷால் அல்ல அவளின் அறிவால் தான். அதற்கு வழி வகுத்து கொடுத்தது மட்டும் தான் காகேஷ்.

 

இதோ அப்படி இப்படி என்று மூன்று வருடங்கள் முழுதாக ஓடி விட்டது.

 

நிறைய பேருடன் பேசினால், நிறைய பேரின் கஷ்டங்களை கேட்டாள். அவளின் வாழ்க்கை எல்லாம் பரவாயில்லை போல் இருந்தது.

 

கணவனின் கொடுமையால் அவர்களை கொன்று விட்டு வந்து இருந்தவர்களை எல்லாம் பார்க்கும் பொது, அவர்கள் எல்லாம் அரக்கர்கள் அவர்களை கொன்றதற்கு தண்டனையா என்று எல்லாம் தோன்றியது.

 

"எங்களுக்கு எல்லாம் வெளிய போனா வேலை கூட கொடுக்க மாட்டாங்க மா" என்று சிலர் சொல்ல கேட்டவள், "நான் வெளிய போனா கண்டிப்பா உங்களுக்கு வேலை தரேன் அக்கா" என்று சொல்லும் அளவிற்கு மனப்பக்குவம் அடைந்து இருந்தாள்.

 

வைரமுத்துவின் வரிகளுக்கு ஏற்ப, "உள்ள போன அத்தனை பேரும் குத்தவாளி இல்லீங்க வெளியே உள்ள அத்தனை பேரும் புத்தன் காந்தி இல்லீங்க" என்பது எத்தனை நிதர்சனம் என்றும் அறிந்து கொண்டாள்.

 

"நீ வெளிய போனா என் பொண்ணை நல்ல காலேஜ்ல மட்டும் சேர்த்து விடுறியா பாப்பா?" என்று கேட்டு இருந்தார் ஒரு பெண்மணி. அந்தோ பாவம், பெற்ற அப்பனே பணத்திற்காக பதினேழு வயது பிள்ளையை கூட்டி கொடுக்க நினைக்க அவரோ இதோ கணவனை கொன்று விட்டு சிறைக்கு வந்து விட்டார்.

 

"பொண்ணு தனியா இருக்கும் பாப்பா பக்கத்து வீட்டு அக்கா கிட்ட சொல்லி இருக்கேன். இருந்தாலும்..." என்று அவள் தயங்க, "அக்கா நான் உங்க பொண்ணை நல்ல காலேஜ்ல சேர்த்து விடுறேன் சரியா... அப்படியே அவளை நல்ல பாதுகாப்பான ஹோஸ்டேல்லை சேர்த்து விடுறேன்" என்று அவள் நேற்று அந்த பெண்மணியிடம் சொல்ல, அவரோ காலில் விழுந்து விட்டார்.

 

"ஐயோ அக்கா என்ன பண்ணுறீங்க?" என்று அவள் பதட்டமாக கூறவும், "இல்ல மா நீ தெய்வம் மாதிரி.. என் பொண்ணை நினைச்சி எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துது.. இப்போ தான் கொஞ்சம் பரவல்லயா இருக்கு" என்றவரை அணைத்து, "அதெல்லாம் நான் பார்த்துக்குறேன். நீங்க உங்க அட்ரஸ் கொடுங்க" என்று சொல்லி வாங்கியும் கொண்டாள்.

 

அவள் விடை பேரும் சமயம் கூட, "உன் வாழ்க்கையை நிம்மதியா வாழு மா ஹன்சி" என்று சொல்லி தான் அனைவரும் அனுப்பி வைத்து இருந்தார்கள்.

 

"உங்களை கூட்டிட்டு போக உங்க அண்ணா இரண்டு பேரும், உங்க அக்காவும் வந்து இருக்காங்க" என்று அந்த காவல் அதிகாரி சொல்ல, அவளும் தலையசைத்து இருந்தாள்.

 

வெளியே அவளுக்காக காத்து கொண்டு இருந்தார்கள் காகேஷ், ஹம்சா மற்றும் சிட்டு.

 

அவர்களை கூட மூன்று வருடங்களில் ஒரு நாள் கூட பார்க்க அவள் விடவில்லை.

 

காகேஷிற்கு மகன் பிறந்ததும் கூட அந்த காவல் அதிகாரியின் கைப்பேசியில் பார்த்து கொண்டாள். பிள்ளைக்கு ஹர்ஷா என்று பெயர் வைத்து இருந்தார்கள் என்று அறிந்து கொண்டாள்.

 

இதே சமயம், போன வருடம் தான் மயூரனுக்கும், ஹம்ஸாக்கும் கூட ஒரே நாளில் மகன்கள் பிறந்தார்கள் என்று கேள்வி பட்டு இருந்தாள். மயூரனின் மகனுக்கு மிருதுல் என்றும், ஹம்ஸாவின் மகனுக்கு ஆகாஷ் என்றும் பெயர் வைத்து இருந்தார்கள்.

 

அவள் இந்த மூன்று வருடங்களில் பேசிய இரண்டே ஆட்கள் ஒன்று பரி, மற்றோன்று அவளது மகன் சாஹித்யன்.

 

இருவரிடமும் வாரம் ஒருமுறை அந்த காவல் அதிகாரியின் மூலம் வீடியோ காலில் அதுவும் பத்து நிமிடம் மட்டும் பேசுவாள்.

 

மகன், "அம்மா எப்போ வருவ?" என்று இப்பொது தான் ஆறு மாதம் முன் அவனின் மழலை மொழியில் கேட்ட பொது அவளின் மனமும் உடைந்து தான் போனது.

 

"அம்மா" என்று அவன் முதன் முதலில் அழைத்தது, அவன், "அத்தை மம்மம் கொடுத்தா" என்று பரியை காட்டி சொல்லுவது, "காக்கி மாமா வாங்கி தந்தா" என்று காகேஷ் அவனுக்கு வாங்கி கொடுத்த குட்டி சைக்கிளை காட்டி சொல்லியது, "ஹம்சா மாமா கூட டூர் போனேன்" என்று அவனை ஹம்சா பைக்கில் கூட்டி சென்றது, "சித்தா சாக்கி வாங்கி கொடுத்தா" என்று மயூரனை பற்றி என்று அனைத்தையும் அவளிடம் ஒப்பித்து தான் விடுவான்.

 

அதுவும், "பெரிப்பா பெரிம்மா ஷிஞ்சான் பேக், ஸ்பைடி பாட்டில் எல்லாம் கொடுத்தா" என்று இப்பொது தான் நர்சரி சேர்க்கும் சமயம் ஜடாயுவும் சிட்டுவும் வாங்கி கொடுத்ததை கூட அத்தனை மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் சொல்லி இருந்தானே!

 

ஆனால் அவனின் வாயில் இன்று வரை அவள் கேட்காத ஒரே பெயர் அப்பா!

 

அவளுக்கு சில நேரம் வாயை விட்டு கேட்கலாமா என்று தோன்றும்... ஆனாலும் அடக்கி கொள்வாள். அப்படி ஒருவன் அவளின் மகனின் வாழ்வில் இருக்க வேண்டாம் என்று நினைத்து இருந்தாலும் சாஹித்யனை ஒரு முறை கூட அவன் வந்து பார்க்கவில்லையா? என்று கேள்வி நெஞ்சில் எழும். அவன் தானே பிள்ளைக்கு கூட பெயர் வைத்தான். எல்லாம் மறந்து விட்டதா? குழந்தை அவனுக்கு வேண்டும் வேண்டும் என்று சொல்லி கொண்டே இருந்தானே! இப்பொது?

 

ஆனால் நீயும் அவனிடம் ஒன்றும் குழந்தையை கொடுக்கவில்லையே! அனாதை ஆசிரமத்தில் விட்டு விடுங்கள் என்று தானே சொல்லிவிட்டு வந்தாய். ஆனாலும் இன்று வரை அவனை ஒரு இளவரசனை போல் தான் பார்த்து கொள்கிறார்கள். காகேஷின் மகனும் அவனும் கூட நல்ல நண்பர்கள் தான். அகத்தியன், அகிலன் என்று அவனுக்கு அனைவருமே நெருக்கமாக தான் இருப்பார்கள்.

 

"ஹர்ஷா கூட தான் நர்சரி போறேன். அகத்தி, அகில் கூட வராங்க..." என்று கூட சொல்லி இருந்தான்.

 

"யாரு கூடையும் சண்டை போட கூடாது சரியா? சமத்து பிள்ளையா இருக்கனும் சரியா?" என்று பிள்ளைக்கு பல அறிவுரைகளும் சொல்லுவாள்.

 

"அதெல்லாம் நாங்க பார்த்துக்குறோம். நீ என்ன ஹன்சி இப்படி இளைச்சி போய் இருக்க?" என்று கேட்க, "அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல அண்ணி.. நான் ஓகே தான்" என்று பரியிடம் சொல்லுவாள் தான்.

 

காவல் துறைக்கு என்று சில வேலைகள் அவள் செய்யும் சமயம் கணினியை உபயோக படுத்தும் நாட்களில் அவளுக்கு நல்ல உணவு கிடைக்கும் தான். அவள் அப்படி வெளியே வரும் நாட்களில் எப்படியாவது காகேஷிடம் உணவு கொடுத்து அனுப்பி விடுவாள் ஹன்சிகா.

 

அவள் இருந்த சிறை அவர்கள் ஊரில் இருந்து ஒரு மணி நேரத்தில் தான் இருந்ததது என்பதால், அவள் ஹாட் பாக்சில் போட்டு கொடுப்பது அவளை சென்று அடையும் வரை எப்படியோ சூடவாகும் இருக்கும். சாப்பிடும் முதல் வாயிலேயே அது பரி கொடுத்தது என்று கண்டும் பிடித்து விடுவாள்.

 

"ஏன் அண்ணி இதெல்லாம் கொடுத்து அனுப்புறிங்க? ஆல்ரெடி அத்தனை பிள்ளைங்க வீட்ல வேற வச்சி இருக்கீங்க அதுவே கஷ்டம்" என்று சொல்லியும், "லூசா நீ? எல்லாருக்கும் தானே சமைக்கிறோம்.. உனக்குன்னு தனியா ஒன்னும் செய்யல" என்று சொல்லி வாயை அடைத்து விடுவாள்.

 

இன்று அவள் வர மாட்டாள் என்றும் அவளுக்கு சொல்லி இருந்தாள்.

 

"இந்த குட்டிஸ் எல்லாம் பார்த்துக்கணும் டி... உன் அண்ணா அக்கா எல்லாம் வருவாங்க... அவங்க தான் உன்னை பார்க்கணும்னு ரொம்ப ஏங்குறாங்க. நீ தான் பார்க்கவே மாட்டேன்னு சொல்லிட்டியே" என்று சொல்லவும், அவள் எதுவும் சொல்ல வில்லை.

 

இதோ கண் முன் நிற்கிறாள். மொத்தமாக மாறி நிற்கிறாள். ஆணவம், அகம்பாவம், அதிகாரம் என்று அனைத்தும் அழிந்து அன்பின் உருவாய், கண்களில் கனிவை சுமந்து புது ஹன்சிகாவாக நிற்கிறாள்.

 

"அண்ணா" என்று அவள் முதலில் சென்று அணைத்தது என்னவோ காகேஷை தான்!

 

அன்று அவனே கேட்டு வாங்கிய அழைப்பு இன்று தானாக வந்து இருந்தது. அவனுக்கு தங்கையாக இருக்க இன்று அவளுக்கு அத்தனை குணாதிசியங்களை இருப்பதாலோ என்னவோ எந்த தட்டு தடங்கலும் இன்றி அந்த அழைப்பு வந்து இருந்ததது.

 

"எப்படி இருக்க?" என்று அவளின் தலையை தடவி விட, "நல்லா இருக்கேன். அதை விட நல்லவளா இருக்கேன்" என்று சொல்லி அவனை பார்க்க, "வி மிஸ்ட் யு" என்று சொல்லி அவளின் உச்சி முகர்ந்து இருந்தான்.

 

அடுத்து சிட்டுவை பார்த்தாள்.

 

"என் பையனுக்கு நிறைய அவனோட பெரியம்மாவை தான் பிடிக்குது. பெரிம்மா இதை சொல்லி கொடுத்தாங்க அதை சொல்லி கொடுத்தாங்கன்னு ஒரே புகழ்ச்சி" என்று சொல்லி அவளை கட்டி அணைத்து விடுவிக்க, "அதை ஏன் கேட்குற? அவ பெத்த இரண்டு வேண்டும் ஸ்பாரோ சொல்லுறதை மதிக்கிறதே இல்ல.. ஆனா உன் பையன் அவ சாஹித்யன்னு ஒரு வார்த்தை கூப்பிட்டா போதும் அப்படியே.. பெரிம்மான்னு வந்திடுறான்" என்று காகேஷ் சொல்லவும், "அக்காவை வச்சி செய்யவே அவங்க பெத்த மினியன்ஸ் இருக்காங்க" என்று ஹம்சா சொல்லி சிரித்து இருந்தான்.

 

ஹம்ஸாவின் புறம் திரும்பியவன், "ஆகாஷ் செம்ம க்யூட்டா இருக்கான்" என்று சொல்லி அவனையும் அணைத்து, "உங்கள மாதிரியே இருக்கான் அண்ணா" என்று சொல்லவும், "ஆனா இவனுங்க பெத்த இரண்டு பேருமே இவனுங்கள மாதிரி இல்ல ஹன்சி... இவனுங்க என்ன டா இன்னும் அன்னப்பறவை... ஏசிபின்னு இருக்கானுங்க.. ஆனா ஹர்ஷா ஆகாஷை பேபி ப்ரோன்னு கூப்பிடுறதும், அவன் ஹர்ஷாவை ண்ணா ண்ணானு வால் மாதிரி சுத்துறதும் ஒரே கூத்தா இருக்கு" என்று சிட்டு சொல்ல, அவர்கள் இருவரையும் இப்பொது பார்க்க, "நான் என்ன பண்ணுறது? என் பையனை ஏசிபி தான் நிறைய தூக்கி வச்சி இருக்கார்" என்று ஹம்சா குறை பட, "ஆமா ஆமா ஹர்ஷாவை இவன் எப்படி எல்லாம் எனக்கு எதிரா ட்ரெயின் பன்றான் தெரியுமா? என் மகன் என்னை அப்பான்னு கூப்பிடுறத்துக்கு பதில் இவனையும் மயூரனையும் மாதிரி ஏசிபின்னு தான் டி கூப்பிடுறான்" என்று காகேஷும் ஹன்சிகாவிடம் குற்ற பத்திரிக்கை வாசித்தான்.

 

"சரி சரி கிளம்பலாம் ... பரி உன்னை சீக்கிரம் கூட்டிட்டு வர சொல்லி இருந்தா" என்று சொல்லி அனைவரும் கிளம்பி இருந்தனர்.

 

போகும் வழியில் பிள்ளைகளின் படங்கள் அனைத்தையும் காட்டி கொண்டு அவர்கள் செய்யும் சேட்டை அனைத்தையும் சொல்லி கொண்டே நேரம் சென்றது. அவர்களும் சாஹிலை பற்றி பேசவில்லை. அவளும் கேட்கவில்லை.

 

குமரகத்தின் முன் வந்து கார் நின்றது. நால்வரும் இறங்கினார்கள்.

 

கூடவே அவர்களை வரவேற்க ஜடாயு, மயூரன், மைனா, குயில், பரி என்று அனைவரும் நின்று இருந்தார்கள்.

 

அவளை ஓடி வந்து அணைத்து இருந்தாள் பரி.

 

"எவளோ இலச்சிட்ட பாரு" என்று சொல்லி அவளின் கன்னத்தை பிடிக்க, "அதான் வந்துட்டேன்ல இனி உங்க கையாள சாப்பிட்டு வெய்ட் போட்டுக்கலாம்" என்று சொல்லி செல்ல, குயில் வந்து, "நில்லு நில்லு ஆரத்தி எடுக்கணும்" என்று சொல்லி அவளை உள்ளே அழைத்து சென்று இருந்தார்கள்.

 

"அத்தை" என்று ஹர்ஷா வர, "த்தை" என்று ஒரு வயது ஆகாஷும் வர, "சித்தி" என்று ஸ்ராவனி, அகத்தியன், அகிலன், மிருதுல் என்று ஒரு பட்டாளமே வந்து இருந்தார்கள்.

 

அதுவும் ஸ்ராவனி இப்பொது நன்கு வளர்ந்து இருந்தாள். ஆறு வயது சிறுமி இப்பொது ஒன்பது வயத்தில் இருக்கிறாள்.

 

"நல்லா வளர்ந்துட்ட" என்று அவளின் கன்னத்தில் முத்தம் கொடுத்து, "இந்த வீட்டோட அடுத்த ஒரே இளவரசி" என்று சொல்லி கன்னம் வழித்து இருந்தாள்.

 

அவளும் முத்து பற்கள் தெரிய சிரித்து, "ரொம்ப மிஸ் பண்ணேன் சித்தி" என்று கட்டி அணைத்து இருந்தாள்.

 

இப்பொது அவளின் கண்கள் சாஹித்யனை தேடியது. அவன் எங்கும் தென்பட வில்லை. பிள்ளைகள் பள்ளிக்கு செல்லாமல் தான் இருக்க போகிறார்கள் என்று அவளுக்கு சொல்லியும் இருந்தாள் பரி.

 

"சாஹித்யன் எங்க?" என்று அவர்களை பார்த்து அவள் கேட்க, அவர்களோ என்ன சொல்லுவது என்று தெரியாமல் முழித்து கொண்டு இருக்க, அதான் காகேஷின் மகன் ஹர்ஷா இருக்கிறானே, "அவன் சாஹில் மாமா வீட்ல இருக்கான் அத்தை" என்று போட்டு கொடுத்து விட்டான்.

 

"வாட்?" என்று அவள் அதிர, "ம்ம் அவன் சித்தப்பா கூட தான் இருக்கான் சித்தி. சித்தப்பா ஹாஸ்பிடல் போகும் பொது தான் இங்க விட்டுட்டு போவார்" என்று ஸ்ராவனியும் சொல்லி இருந்தாள்.

 

இப்பொது அவர்கள் அனைவரையும் அவள் பார்க்க, "ஹன்சி" என்று பரி ஆரம்பிக்கும் போதே, "எனக்கு என் பையனை முதல்ல பார்க்கணும்" என்று அவள் சொல்லவும், "வா" என்று காகேஷும் ஜடாயுவும் அவளை அழைத்து கொண்டு சென்றார்கள்.

 

இங்கோ, "அப்பா நம்ப எல்லாரு கூடவும் இருந்து இருக்கலாம்" என்று சாஹில் கொடுத்த அப்பளத்தை கொறித்து கொண்டு அவனின் மகன் கூறவும், "ம்கூம் அங்கேயே இருந்தா உன் அம்மா இங்க வர மாட்டா டா.. நீ இங்க இருந்தா தான் அவ இங்க வருவா" என்று சொல்லி அவனின் மகனை பார்க்க, அவனோ அப்பளத்தை வாயில் வைத்து கடிக்காமல் இருக்க, "என்ன உன் அம்மா அங்காளி மாதிரி பின்னாடி நிக்குறாளா?" என்று கேட்கவும், அப்பளத்தோடு ஆமாம் என்று தலையசைத்து இருந்தான் சாஹித்யன்.

 

சாஹிலோ திரும்பி அவளை பார்க்க, அவளோ இடுப்பில் கைவைத்து கொண்டு அவனை முறைத்து கொண்டு இருந்தாள்.

 

அனைத்து பறவைகளும் சேர்ந்து இருக்க, சேருமா இந்த இரு பறவைகள்?

அத்தியாயம் 80

 

சாஹில் அவளை பார்த்து அதிர்ச்சியும் அடையவில்லை. ஆனந்தமும் அடையவில்லை. ஆனந்தம் அடையவில்லை என்று சொல்ல முடியாது. உள்ளுக்குள் அவளை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அவளை ஆதி முதல் அந்தம் வரை ரசனையாக பார்த்தான். காதலுடன்!

 

காதலா? ஆம் காதலிக்கிறான். ஆழமாக காதலிக்கிறான். அவனின் வாழ்வை பிரட்டி போட்டவள் தான். ஆனால் செய்த தவறை உணர்ந்து, திருந்தி எத்தனை பேர் வருகிறார்கள்? அவள் வந்து இருக்கிறாள். திருந்தி வந்தவளை திருப்பி அனுப்ப அவனுக்கு மனம் வரவில்லை. அவனின் மனம் தான் என்றோ அவளின் பின்னால் செல்ல ஆரம்பித்து விட்டதே!

 

அவனுக்கு திமிராக இருந்த ஹன்சிகாவை பிடிக்கவில்லை தான். அவனை அடிபணியவைக்க வேண்டும் என்று நினைத்த ஹன்சிகாவை பிடிக்கவில்லை தான். அவள் தான் சரி, அனைவரும் தவறு என்று நினைத்த ஹன்சிகாவை அவனுக்கு பிடிக்கவே இல்லை தான். அதுவும் பக்ஷியின் பிள்ளையான ஹன்சிகாவை சுத்தமாக பிடிக்கவில்லை.

 

ஆனால் இன்று அடக்கம், அன்பு, கருணை என்று இருக்கும் இவளை பிடிக்கிறது. தாயாக அவனின் பிள்ளைக்கு இறுதியாக ஒரு முறை பசியாற்றி விட்டு சிறை செல்கிறேன் என்று சொன்ன அந்த ஹன்சிகாவை அவனுக்கு மிகவும் பிடித்து இருந்தது. பக்ஷியின் மகளாக அல்லாமல் காகேஷின் தங்கையாக இருக்கும் இவளை அவனுக்கு பிடித்து தான் இருக்கிறது. இதோ இப்பொது கூட அவனை முறைக்கும் அவளின் கண்களை அவனுக்கு பிடித்து இருந்தது.

 

கட்டி அணைத்து முத்தம் கொடுக்கவும் மனது தவித்தது. இந்த உணர்வுகள் கூட இப்போதெல்லாம் அவளை நினைத்தால் தான் வருகிறது. ராக்ஷஸி அவனின் மனதை மொத்தமாக கொண்டு சென்று விட்டாள்.

 

"என்ன டி ஏன் இப்படி பாக்குற?" என்று கேட்கவும், அவளோ அவனுக்கு பதில் அளிக்காமல், "சாஹித்யன்" என்று பிள்ளையிடம் கண்களை கொண்டு சென்றாள்.

 

"அம்மா" என்று அவன் இரு கைகளையும் உயர்த்தி தூக்குவதற்கு காட்ட, அவளும் சாஹிலை தாண்டி சென்று அவனை தூக்கி இருந்தாள்.

 

அவனுக்கு முகம் முழுக்க முத்தம் கொடுத்து கட்டி அணைத்து இருந்தாள் ஹன்சிகா.

 

கண்களில் கண்ணீர் பெருகியது. இரண்டு மாத குழந்தையாக விட்டு சென்றவன். இப்பொது மூன்று வயதில் இருக்கிறான்.

 

சாஹிளுக்கு கூட மனது கனத்து போனது. மனைவியையும் மகனையும் சேர்த்து அணைக்க அவனுக்கும் ஆசை தான். ஆனால் கிட்டே இப்பொது சென்றாள் அவனின் மனைவி அவனை கொன்று விடுவாள் என்று தெரியும்.

 

காகேஷ் மற்றும் ஜாடாயுவும் நின்று இருந்தார்கள்.

 

அவனின் தோள் மேல் கையை போட்ட ஜடாயு, "இங்க வர வரைக்கும் எங்க இரண்டு பேரையும் கிழி கிழி கிழின்னு கிழிச்சிட்டா டா... இன்னைக்கு உனக்கு சங்கு தான்" என்று அவன் சொல்லவும், "நீங்க இன்னைக்கு சாஹித்யனை உங்க கூட கூட்டிட்டு போறிங்களா? நான் ஹன்சி கிட்ட தனியா பேசணும்" என்று சொல்லவும், அவனோ, "உனக்கு நான் அண்ணா டா" என்றவனை பார்த்து, "அவளுக்கு மாமா தானே" என்று சாஹில் சொல்ல, ஜடாயுவிற்கு எங்காவது சென்று முட்டிக்கொள்ளலாமா என்று இருந்தது.

 

"மச்சான் உங்க தங்கச்சியை இங்க விட்டுட்டு சாஹித்யனை கூட்டிட்டு போங்க" என்று காகேஷிற்கு சொல்வது போல் அனைவருக்கும் சொல்லி இருந்தான்.

 

'அட சண்டாளா! இப்போ இவ நான் தான் உன் கூட கூட்டுன்னு நினைச்சி என்னை தான் செய்ய போறா' என்று காகேஷ் நினைக்கும் போதே, "நீங்க தான் அப்போ இவருக்கு துணையா?" என்று காகேஷிடம் பாய்ந்தாள் அவனது தங்கை.

 

"ஹே ஹே இல்ல டி அவன் சும்மா சொல்றான்" என்றதும், "நீ வா சாஹி பேபி நான் உன்னை குமரகம் கூட்டிட்டு போறேன்" என்று சொல்லி பிள்ளையை தூக்கி கொண்டு நடந்து விட்டாள்.

 

"நானும் வருவேன்" என்று சாஹில் அவள் பின்னால் செல்ல, "உன் தம்பி ஒரு முடிவோட தான் இருக்கான்" என்று காகேஷ் சொல்ல, "இன்னைக்கு குமரகத்துல கூத்தா இருக்க போகுது" என்று சொல்லி ஜடாயுவும் சென்றான். ஜடாயு காரை ஓட்ட, அவனின் அருகில் காகேஷ் அமர்ந்து இருந்தான். பின்னால் ஹன்சிகாவும் சாஹிலும் நடுவில் சாஹித்யனும் அமர்ந்து இருந்தார்கள்.

 

குமரகம் வந்ததும், "சாஹி" என்று அகில், அகத்தியன், ஹர்ஷா மூவரும் ஓடி செல்ல, அவனும் அவர்களுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்து இருந்தான்.

 

குழந்தைகள் அனைவரும் சென்று விட்டார்களா என்பதை உறுதி செய்து கொண்டு, "எதுக்கு சாஹித்யனை இவரு கிட்ட விட்டு இருக்கீங்க?" என்று அனைவரையும் பார்த்து கேட்கவும், அனைவரும் சாஹிலை பார்த்தனர்.

 

"இப்போ எதுக்கு டி அவங்களை எல்லாம் பார்த்து கத்துற? என்னை பார்த்து கேளு... என் பையன் என் வீட்ல தானே இருப்பான். நானும் இங்கையே இருந்து இருப்பேன். சரி தாலி எல்லாம் கூட அறுத்துட்டேன். திருப்பி தாலி கட்டினதும் இங்கயே உன்கூட இருக்கலாம்னு தான் இவளோ நாள் தனியா நானும் சாஹித்யனும் இருந்தோம்.. அவன் இங்க தான் நாள் முழுக்க இருப்பான். தூங்க மட்டும் தான் அங்க கூட்டிட்டு போவேன்" என்று அவன் விளக்கம் கொடுக்க, "நான் தான் உங்களை பார்த்துக்க வேணாம்னு சொன்னேனே.. ஜெயிலுக்கு போகும் பொது கூட அவனை உங்க கிட்ட கொடுக்கலையே" என்று அப்படியே திரும்பி மயூரனை பார்த்தாள்.

 

அவனோ மைனாவின் பின்னால் சென்று ஒளிய, "எதுக்கு என் பின்னாடி போகுறீங்க?" என்று அவனை கடிந்தவளை, "அடியேய் சும்மா இரு டி.. இப்போ ஆத்தா என் பக்கம் சாமி ஆட திரும்புறா" என்று சொல்லி அவன் வேறு அவளின் முந்தானையை எடுத்து அவனின் முகத்தை மூடி கொண்டான்.

 

சாஹிலோ அசராமல், "அது அவனுக்கு கை வலிச்சதும் என் கிட்ட கொடுத்துட்டான்" என்று அசால்ட்டாக சொல்லி இருந்தான்.

 

"இரண்டு மாசம் குழந்தையை வச்சிக்க கை வலிச்சுதா?" என்று மயூரனை பார்த்து மீண்டும் கேட்க, "இவன் ஒருத்தன்" என்றவன். மைனாவின் முந்தானையில் இருந்து வெளியே வந்து, "அம்மா தாயே நீ அப்படி ஜெயிலுக்கு போனதும் உன் புருஷன் தான் மா வந்து குழந்தையை என் கிட்ட இருந்து பிடுங்கிட்டு, நீங்க யாரும் என் பையனை பார்த்துக்க வேண்டாம் நானே எல்லாமே பார்த்துக்குவேன். என் பையனை என் கிட்டயே விட்டுடுங்க... என் பொண்டாட்டி தான் என் கூட இல்ல என் பையனாவது கூட இருக்கட்டும். எனக்கு கடைசி வரைக்கும் ஹன்சி மட்டும் தான் பொண்டாட்டி அப்படின்னு டைலாக் எல்லாம் விட்டு அவன் பாட்டுக்கு குழந்தையை வேற தூக்கிட்டு போய்ட்டான். அப்புறம் நாங்க தான் பேசி, இரண்டு மாசம் குழந்தையை எல்லாம் தனியா பார்த்துக்க முடியாதுன்னு சாஹித்யனுக்கு ஒரு வயசு ஆகுற வரைக்கும் இரண்டு பேரையும் இங்கயே வச்சிகிட்டோம். அப்புறம் அவன் ஹாஸ்பிடல் போகும் பொது இங்க உங்க பையனை விட்டுட்டு நைட் கூட்டிட்டு போயிடுவான். இது தான் நடந்தது" என்று அவன் சொல்லி முடித்து இருந்தான்.

 

"யாரு வந்து கேட்டாலும் நீங்க எல்லாம் குழந்தையை கொடுத்திருவீங்களா?" என்று அவள் கேட்கவும், "யார் வந்து கேட்டாலும் எப்படி கொடுப்போம்? பையனோட அப்பா வந்து கேட்குறான் அப்போ கொடுத்து தானே ஆகணும்" என்று சிட்டு சொல்ல, "அண்ணா" என்று காகேஷின் பக்கம் திரும்பும் போதே அவன் சோபாவிற்கு அடியில் ஒளிய சென்று கொண்டு இருந்தான்.

 

"ஐயோ பார்த்துட்டாளே!" என்றவன், "நான் சொன்னேன் ஹன்சி... அவ வரட்டும் அது வரைக்கும் பையன் இங்கையே இருக்கட்டும்னு... ஆனா அவன் தான் எனக்கு உங்க தங்கச்சி நினைவாவே இருக்கு.. ப்ளீஸ் என் பையனை கொடுத்துருங்கனு கெஞ்சுனான். என்ன பண்றது? உன்னை லவ் பன்றானாம்" என்றும் சொல்ல, அவளோ விரக்தி புன்னகையுடன், "லவ்வா? எப்படி லவ் வரும் நான் ஒரு ரேப்.." என்று ஆரம்பிக்கும் போதே, "ஷாட் அப்.. சும்மா அதையே சொல்லாத.. ஆமா தப்பு பண்ண தான்... ஆனா நான் தான் சொல்றேனே எனக்கும் கண்ட்ரோல் இல்ல... நீ ஜெயிலுக்கு போன பிறகு கூட என்னை நிறைய பொண்ணுங்க அப்ப்ரோச் பண்ணாங்க டி தெரியுமா? இதெல்லாம் விட ஒரு நர்ஸ் எனக்கு திருப்பி ட்ராக்ஸ் கொடுத்தா... ஆனா பாரேன் இந்த தடவ நான் ஸ்லிப் ஆகல... நீ மட்டும் தான் என் கண்ணுக்கு தெரிஞ்ச... அவளை வேலைய விட்டு தூக்கிட்டேன். அவளோட லைசென்சும் கேன்சல் பண்ணிட்டேன். செஞ்ச தப்புக்கு உன்னை மாதிரி எல்லாரும் தண்டனை அனுபவிச்சி திருந்தி வர்றது இல்ல.. நீ வந்து இருக்க.. இனி நமக்காக வாழலாம். நம்ப பையனுக்காக வாழலாம்.. ப்ளீஸ்.. எத்தனை நாள் அவன் என்கிட்ட அப்பா நான் எப்போ ஹர்ஷா மாதிரி அப்பா அம்மாக்கு நடுவுல தூங்குறதுன்னு கேட்டு இருக்கான் தெரியுமா? எத்தனையோ பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக தான் வாழுறாங்களே! நான் உன்னை பிள்ளைக்காக கூட இல்ல எனக்காக கூப்பிடுறேன். என்னால நீ இல்லாம இருக்க முடியாது" என்று அவளின் கையை பிடித்து கெஞ்ச ஆரம்பித்து இருந்தான்.

 

ஆம் கெஞ்சுகிறான். அவள் செய்த தவறு அனைத்திற்கும் தண்டனை அனுபவித்து திருந்தி வந்து இருக்கிறாள். ஆனால் அவன் சொன்ன சொற்கள்? அது எதற்கும் அவள் தண்டனை கூட கொடுக்கவில்லை.

 

"நான் உங்களுக்கு வேணாம் சாஹில்" எனும் போதே அவளும் உடைந்தாள்.

 

"எனக்கு நீ மட்டும் தான் வேணும்" என்று அவன் நின்றான்.

 

"சரி இரண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க... இன்னைக்கு சாஹித்யன் எங்க கூட தூங்கட்டும்" என்று அவர்கள் அனைவரும் சென்று விட்டார்கள்.

 

ஹன்சிகாவின் அறைக்குள் தான் இருவரும் சென்றனர்.

 

"ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்குறிங்க?" என்று கேட்டவளை பார்த்து, "எல்லாம் உங்கிட்ட இருந்து கத்துக்கிட்டது தான். இப்போ என்னை திருப்பி கல்யாணம் பண்ணிக்கோ" என்று அவன் வந்து அவளின் அருகில் அமர, "முடியாது" என்று அவளும் பிடிவாதமாக நின்றாள்.

 

"அப்போ நீ என்னை கல்யாணம் பண்ண என்ன பண்ணியோ அதையே நானும் பண்ண வேண்டியது தான்" என்று அவன் சொல்ல, "என்ன ட்ராக் கொடுப்பீங்களா?" என்று கண்களை உருட்டி அவள் கேட்கவும், "அது எதுக்கு? அதான் நிறைய காதல் ட்ராக் இருக்கே... நீ எதை செய்ய டார்க் கொடுத்தியோ அதை தான் திருப்பி செய்ய போறேன்" என்றவன் அவளின் கழுத்தை பற்ற, "சா..." என்று அவள் ஆரம்பித்த அவளின் பெயரை அவன் இதழ் கொண்டு உள்வாங்கி இருந்தான் சாஹில்.

 

அவர்களுக்குள் எந்த கலவையால் பந்தம் வந்தது. இன்று அதே கலவி அவர்களுக்கு காதலையும் கற்பித்து கொண்டு இருந்தது.

 

அதற்கு மேல் இருவரின் வாயிலும் ஒருவரின் பெயர் முனங்களாக மட்டுமே வந்தது. இருவருக்குமே புரிதல் இருந்தது. திருந்தி வந்தவளுடன் வாழ அவனும் காத்து இருந்தான். அவளின் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்று இருந்தவனை மீண்டும் ஏற்க அவளும் காத்து இருந்தாள்.

 

சங்கமம் முடிய, "கல்யாணம் பண்ணிக்கலாம்" என்று சாஹில் சொல்ல, அவள் மீண்டும் அவனின் மார்பில் புகுந்து, "சாரி" என்று சொல்ல, "நானும் சாரி.. அண்ட் தேங்க்ஸ்.. உண்மையா நீ ஜெயிலுக்கு போகலானா நான் உன்னை இந்த அளவு லவ் பண்ணி இருப்பேன்னானு தெரியல.. எனக்கு செஞ்ச தப்புக்காக கடைசி வரைக்கும் பீல் பண்ணி ஜெயிலுக்கு போறேன்னு போன பாரு அங்க தான் டி உன் மேல லவ் வந்தது. அதுவும் கடைசியா நான் என் பிள்ளைக்கு பசியாதிக்கவான்னு நீ கேட்கும் போதே, உன்னை கட்டி பிடிச்சி, போகாத ஹன்சி அப்படின்னு கத்தனும் போல இருந்துது" என்று அவன் சொல்ல, "உண்மையாவே அப்போ லவ் பண்றிங்களா?" என்று அவள் கேட்கவும், "அதை தான் இப்போ காட்டுனேனே... திருப்பி காட்டவா?" என்றவன் மீண்டும் அவளுள் தேடல் தேட ஆரம்பித்து இருந்தான்.

 

 

 

 

எபிலாக்

 

"இவன் எல்லாம் திருந்தவே மாட்டான். அன்னைக்கு கூட என் பையன் எதுவும் பண்ணி இருக்க மாட்டான்னு நினைச்சேன். இப்போ தான் டா தெரியுது... நீ தான் சரியான கேடி.. உன்னை எல்லாம் நல்லவன்னு நினைச்சேன் பாரு என்னை தான் சொல்லணும்" என்று ராஜேஸ்வரி சாஹிலை பார்த்து திட்டி கொண்டு இருக்க, அவருக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான் சாஹித்யன்.

 

"பாட்டி தண்ணி" என்று அவன் கொடுக்கவும், அவனிடம் வாங்கி குடித்து விட்டு, "நீ போ டா தங்கம்.. உன் அப்பா உங்கிட்ட இருந்து கொஞ்சமாவது கத்துக்கட்டும்" என்று சொல்ல, "இவன் கிட்ட இருந்தா? பாட்டி அவனோட க்ளாஸ்ல இருக்க சைந்தவின்னு ஒரு பொண்ணுக்கு கிஸ் கொடுக்குறேன் இப்பவே.. அதுவும் சுட்கின்னு செல்ல பேரெல்லாம் வச்சி கூப்பிடுறான் தெரியுமா?" என்று ஸ்ராவனி அவளின் தம்பியை பற்றி சொல்லவும், ஹர்ஷாவோ, "அப்படியா டா? அதான் அவளை என்னை அண்ணான்னு கூப்பிட சொன்னியா?" என்று கேட்டு இருந்தான் குழந்தை.

 

"எல்லாம் உன் சித்தப்பனை சொல்லணும். அவன் ரீலீஸ் பண்ண ப்ரொடக்ட் தானே அதான் அவனை மாதிரியே இருக்கான்" என்று அப்போதும் திட்டு சாஹிளுக்கு தான் விழுந்தது.

 

"விடு ராஜி அதான் நாளைக்கு கல்யாணம் தானே" என்று கருணாகரன் சொல்ல, "அதான் எனக்கும் புரியல அவ ஜெயில்ல இருந்து வந்தே இரண்டு மாசம் தான் ஆகுது... அடுத்த நாளே நம்ப கல்யாணம் இரண்டு மாசத்துக்கு பிறகுன்னு சொல்லிட்டோம். அப்புறம் எப்படி இப்போ இரண்டு மாசம் இவ மாசமா இருப்பா?" என்று கேட்கவும், சங்கடமாக இருந்தது ஹன்சிகாவிற்கு!

 

"உங்களை தான் தனியா இருக்க சொன்னோம் தானே?" என்று ராஜேஸ்வரி இப்பொது ஹன்சிகாவின் புறம் திரும்ப, "தனியா தான் இருந்தோம் அத்தை" என்று அவள் ஈனஸ்வரத்தில் சொல்லி இருந்தாள். அது உண்மை தான். அவள் வந்து அடுத்த நாளே வந்து இறங்கி இருந்தார் ராஜேஸ்வரி.

 

வந்ததும், "முதல்ல கல்யாணம் பண்ணனும் இரண்டு பேருக்கும்... அதுக்கு பிறகு தான் எல்லாம்" என்று ஒரே போடாக போட்டு அன்றே இரண்டு மாதங்களுக்கு பின்பு திருமணம் என்றும் முடிவு எடுத்து ஆகி விட்டது.

 

அதில் இருந்து இருவரையும் பிரிந்து தான் இருக்க வேண்டும் என்றும் ராஜேஸ்வரி திட்ட வட்டமாக சொல்லி இருந்தார்.

 

சாஹில் குமரகம் வந்தாலும் அவனுக்கு ஹன்சிகாவின் அறை வரை செல்ல உண்மையாகவே யாரும் அனுமதிக்கவில்லை.

 

காகேஷ், ஹம்சா இருவரும் அண்ணாவாக அவனிடம் கெத்து எல்லாம் காட்டி கொண்டு இருந்தார்கள்.

 

"நான் போய் சாஹித்யனை பார்த்துட்டு வரேன் மச்சான்" என்று ஹன்சிகாவின் அறைக்கு அவன் செல்ல போகும் முன்னே, "சாஹி பேபி" என்று அவனை அழைத்து, "இங்கயே பார்த்துக்கோ" என்று நிறுத்தியும் விடுவார்கள்.

 

ஆனால் அவன் அவள் வந்த அதே நாளில் கூடிய கூடலிலேயே விதையை விதைத்து இருந்தான் என்று யாருக்கும் தெரியவில்லை.

 

ஹன்சிகா இப்பொது தான் இருவாரங்களுக்கு முன்பு மருத்துவமனை வந்து இருந்தாள்.

 

"என்ன டி ஹாஸ்பிடல் நீயே வந்து இருக்க? மாமா மேல அவளோ லவ்வா?" என்று கேட்க, "மண்ணாங்கட்டி... டெட் தள்ளி போயிருக்கு சாஹில்" என்று சொன்னதும் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.

 

"எப்படி டி?" என்று கேட்கவும், "எப்படின்னு உங்களுக்கு தெரியாதா? ஒரே நாள்ல என்னை நாலு வாட்டி..." என்று அவள் ஆரம்பிக்க, "ஐயோ அதை சொல்லல டி.. இப்படி ஒரே தடவைல... ஐயோ எனக்கு சாஹித்யன் தான் சீக்கிரம் வந்துட்டான். கொஞ்சம் உன் கூட ஜாலியா இருக்கலாம்னு நினைச்சேன். பையனை இங்க விட்டுட்டு யூரோப் போகலாம்னு நினைச்சேன் டி... இப்படி எல்லாம் எனக்கு ஒரே நாள்ல ஏன் தான் நடக்குதோ?" என்று அவன் சொல்ல, "ம்கூம் இதெல்லாம் அன்னைக்கு ப்ரிகாஷன் எடுக்கமா பண்ணும் பொது தெரிஞ்சி இருக்கனும்" என்று அவள் குறைப்படவும், "நீ டேப்ளெட்ஸ் எடுத்து இருக்க வேண்டியது தானே?" என்று அவனும் கேட்டு இருந்தான்.

 

"நான் என்ன கனவா கண்டேன்? எப்பவும் முதல் தடவையே நீங்க என்னை லோட் பண்ணிறீங்க" என்றதும், "இந்த பேபி வந்ததும் முதல்ல உனக்கு குடும்ப கட்டுப்பாடு தான்.. இல்லனா எனக்கே பயமா இருக்கு... ஐயோ இப்போ உன்கிட்ட அடுத்த ஒரு வருஷத்துக்கு வரவே முடியாது டி.. கண்டிப்பா உன் இரண்டு தடிமாடு அண்ணாங்களும் என்னை வச்சி செய்வானுங்க" என்று அவன் புலம்ப, "உங்களுக்கு அது தான் முக்கியம். இதை எல்லாருகிட்டையும் எப்போ சொல்லுறது?" என்று கேட்க, "கல்யாணம் முடிஞ்சதும் சொல்லலாம்.. நீ ஜஸ்ட் ஒரு கன்பார்ம் பண்ணிக்கோ" என்று அவன் அன்று கொடுத்த ரிப்போர்ட்டை தான் அவர்களது செல்ல மகன் அனைவரின் முன்பும் விளையாட என்று எடுத்து வந்து அவர்களின் குட்டை போட்டு உடைத்து இருந்தான்.

 

"என்ன டா இதெல்லாம் வாயை திற? தனியா இருக்கேன்னு சொல்றிங்க அப்புறம் எப்படி குழந்தை?" என்று அவர் மீண்டும் கேட்க, "குழந்தை எப்படி வரும்னு உங்களுக்கு தெரியாதா? அதுக்கு என்ன டெமோவா காட்ட முடியும்?" என்று சாஹில் பேச, மயூரனுடன் இப்பொது ஜாடாயுவும் பாப் கார்ன் சாப்பிட்டு கொண்டு இருந்தான்.

 

"எப்படி பேசுறான் பாருங்களேன்" என்று ராஜேஸ்வரி கருணாகரனை பார்க்க, அவரோ தலையைதேய்த்து கொண்டு, "சரி விடு ராஜி நாளைக்கு கல்யாணம் முடியட்டும் அப்புறம் எல்லாம் சொல்லிக்கலாம்" என்று முடித்து வைத்து இருந்தார்.

 

"காலைல எல்லாரும் கல்யாணத்துக்கு ரெடி ஆகுங்க" என்று அவர் சொல்லவும், அங்கிருந்து அனைவரும் நகர போக, சாஹில் ஹன்சிகாவின் அறைக்கு செல்ல முற்பட, "டேய் நீ கெஸ்ட் ரூம் போடா" என்று சொன்ன ராஜேஸ்வரியை பார்த்து, "ஆன்டி இனி அவன் ரூமுக்கு போனா என்ன போகலானா என்ன? அதான் அடுத்த பேபி வந்திருச்சே" என்று காகேஷ் சொல்லவும், அவரோ, "எல்லாம் நேரம்" என்று சொல்லி சென்று விட்டார்.

 

குயில் மற்றும் மைனா சிரித்து கொண்டு இருந்தனர்.

 

அறைக்குள் வந்தவனை, "எல்லாரும் என்னை எப்படி பார்க்குறாங்க தெரியுமா? கண்டிப்பா குயிலும் மைனாவும் வச்சி செய்ய போறாங்க" என்று சிணுங்கினாள்.

 

"விடு டி பார்த்துக்கலாம்" என்றவன் அவளை அணைத்தே உறங்கியும் போனான்.

 

அடுத்த நாள் விடிய அவர்களின் நெருங்கிய உறவுகளுக்கு மத்தியில் சாஹில் மற்றும் ஹன்சிகாவின் திருமணமும் நடந்து ஏறியது. அவன் பிரித்து இருந்ததை அவனே கோர்த்து இருந்தான்.

 

"எல்லாரும் வாங்க" என்று காகேஷின் ட்ரைவர் நவநீதன் சொல்லவும், அனைவரும் ஒன்றாக நின்று இருக்க, "ஆமா வள்ளி இப்போ என்ன பண்ணுறா?" என்று ஹன்சிகா கேட்கவும், "அவ இப்போ பைலட்க்கு படிச்சுக்கிட்டு இருக்கா" என்று சிட்டு சொல்லவும் அவளின் மனம் நிறைந்து போனது.

 

ஆம் உயர பார்க்க இருக்கிறாள். அவளின் வாழ்க்கை முடிந்து விட்டது என்று நினைத்த அந்த வள்ளிக்கு வாழ்க்கையை கொடுத்து இருந்தார்கள் இந்த பறவைகள்.

 

"நீ சொன்ன அந்த பொண்ணையும் காலேஜ்ல சேர்த்தாச்சு சொல்ல மறந்துட்டேன்" என்று மயூரனும் சொல்லி இருந்தான். அவள் சிறையில் இருந்த பெண்மணிக்கு சொன்ன அந்த சத்தியவாக்கை காப்பாற்றி இருந்தாள் ஹன்சிகா.

 

அனைத்தும் மாறி இருக்க, இனி குமரகத்தில் இந்த பறவைகளுடைய நல்லாட்சி நடக்கும் என்று நம்பி நாமும் விடைபெறுவோம்!

 

முற்றும்!

 


 

கருத்துகள்