இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 6
இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 6 மீட்டிங்கிற்கு அனைவரும் வந்து இருந்தார்கள். அவர்களுக்காக தேனீர் மற்றும் கொஞ்சம் பழங்களும் வைக்க பட்டு இருந்தன. அவர்களின் பயிற்சியாளர் சுக்கிரீவன் தான் பேச துவங்கினார். "இது தான் நான் ட்ரெயின் பண்ண பெஸ்ட் அண்ட் வர்ஸ்ட் டீம்" என்றவர் சொல்லவும், யாரும் எதுவும் சொல்லவில்லை. அவர் ஏன் அப்படி சொல்லுகிறார் என்று தான் அனைவருக்கும் தெரியுமே! "உங்களுக்குள்ள பிரச்சனைனா அதை ட்ரெஸ்ஸிங் ரூம் வரைக்கும் வச்சிக்கோங்க... இப்படி கிரௌண்ட் வரைக்கும் கொண்டு போகாதீங்க... அங்கையோட நின்னா கூட சரி பாக்குற இடம் எல்லாம் சண்டை போட்டு மானத்தை வாங்குறீங்க" என்று அவர் காட்டமாக சொல்லவும், அனைவரும் ஒரு சேர அதர்வ் மற்றும் அபராஜித்தை தான் பார்த்தார்கள். அணியின் கேப்டனும் துணை கேப்டனும் அடித்து கொண்டதுதான் இப்பொது வரை தலைப்பு செய்தி! அதர்வ் அபாரஜித்தை பார்வையால் எரிக்க, அவனோ அதர்வ்வை பார்வையால் பொசுக்கி இருந்தான். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை. இந்திய அணியின் தலைமை பொறுப்பிற்கு இருவரில் யாரு என்று தேர்வு செய்...