இடுகைகள்

ஜனவரி, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 6

  இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 6   மீட்டிங்கிற்கு அனைவரும் வந்து இருந்தார்கள். அவர்களுக்காக தேனீர் மற்றும் கொஞ்சம் பழங்களும் வைக்க பட்டு இருந்தன.   அவர்களின் பயிற்சியாளர் சுக்கிரீவன் தான் பேச துவங்கினார்.   "இது தான் நான் ட்ரெயின் பண்ண பெஸ்ட் அண்ட் வர்ஸ்ட் டீம்" என்றவர் சொல்லவும், யாரும் எதுவும் சொல்லவில்லை.   அவர் ஏன் அப்படி சொல்லுகிறார் என்று தான் அனைவருக்கும் தெரியுமே!   "உங்களுக்குள்ள பிரச்சனைனா அதை ட்ரெஸ்ஸிங் ரூம் வரைக்கும் வச்சிக்கோங்க... இப்படி கிரௌண்ட் வரைக்கும் கொண்டு போகாதீங்க... அங்கையோட நின்னா கூட சரி பாக்குற இடம் எல்லாம் சண்டை போட்டு மானத்தை வாங்குறீங்க" என்று அவர் காட்டமாக சொல்லவும், அனைவரும் ஒரு சேர அதர்வ் மற்றும் அபராஜித்தை தான் பார்த்தார்கள்.   அணியின் கேப்டனும் துணை கேப்டனும் அடித்து கொண்டதுதான் இப்பொது வரை தலைப்பு செய்தி!   அதர்வ் அபாரஜித்தை பார்வையால் எரிக்க, அவனோ அதர்வ்வை பார்வையால் பொசுக்கி இருந்தான்.   இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை. இந்திய அணியின் தலைமை பொறுப்பிற்கு இருவரில் யாரு என்று தேர்வு செய்...

இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 5

  இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 5   நம் கதாநாயகர்கள் அனைவரும் ஒவ்வொரு ரகமாக இருக்கிறார்கள் என்றால், நம் கதாநாயகிகள் அனைவரும் கூட ஒவ்வொரு ரகம் தான். என்ன அவர்களை போல சண்டை எல்லாம் போடாமல் நெருங்கிய தோழிகள் தான் நால்வரும்! சிறுவயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள்.   முதலில் இளவஞ்சி!   அவளின் தாய்க்கு ஒரே மகள். ஆனால் தந்தைக்கு மூன்று மகள்களில் முதல் மகள். செல்வச்செழிப்பில் பிறந்தவளை இறைவன் விவாசியின் மகளாய் பிறக்க வைத்து இருந்தார். ஆனால் அன்றும் இன்றும் அவளுக்கு தாய் மடி மட்டும் எட்டாக்கனியாக தான் இருக்கிறது. அவளின் தாய் இறந்த பிறகு, அவளின் தந்தை இரண்டாவது திருமணம் செய்தும் கொண்டார். அவர்களுக்கும் இரண்டு மகள்கள் பிறக்க, இளவஞ்சி தனித்து தான் விட பட்டு இருந்தாள். அன்னையின் பாசம் இல்லை என்றாலும் பரவாயில்லை, தந்தையின் அரவணைப்பும் கூட அவளுக்கு கிள்ளி கொடுப்பது போல் தான் கொடுக்கப்பட்டது. அவளது தந்தை அவளை நெருங்கினாலும் அவளின் சித்தி விட வேண்டுமே! கொடுமை எல்லாம் இல்லை ஆனால் அவர் பெற்ற மகள்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தான் இருந்தார். தனிமையின் சூழலில் தான...

இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 4

  இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 4   கதிரவன் அவனை அழைத்ததற்காகவே எழுந்து அமர்ந்து இருந்தான் அதர்வ். அதர்வவர்ஷன்!   முப்பது வயது ஆக போகிறது. ஆனால் வெளியே சொன்னால் தான் யாரும் நம்புவது இல்லை. அவன் தான் எப்போதும் இருபத்தி ஐந்து வயதானவன் போல் தோற்றத்துடன் இருக்கிறானே!   அழகன் தான்! ஆறடிக்கு அதிகமாக அசரடிக்கும் அழகில் வளர்ந்து இருந்தான். அவனின் இந்த ஜென்மத்தின் தந்தையை அப்படியே பின்பற்றி கிரிக்கெட் வீரனாக ஆகி இருந்தான். முற்பிறவியில் அவனுக்கு தான் கிரிக்கெட் என்றால் உயிர் ஆயிர்றே!   அவனின் இந்த ஜென்மத்தின் தந்தை சிவராஜ்! சிறந்த கிரிக்கெட் வீரர்! கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றவர் இப்பொது குடும்ப தொழிலான அழகுசாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை எடுத்து நடத்த துவங்கி இருந்தார். அதே போல விளையாட்டு வீரர்கள் உபயோக படுத்தும் பொருட்களுக்காக ஒரு புது நிறுவனத்தையும் நிறுவி இருந்தார். அதிலேயே அவர்களுக்கு கோடிகளில் வருமானம் தான் வந்து கொண்டு இருந்தது.   சிவராஜின் மனைவி சங்கரி குடும்ப தலைவி! அவர்களுடையது பெற்றவர்கள் பார்த்து செய்து வைத்த திருமணம் தான். கிரிக்கெட் வ...