இடுகைகள்

மார்ச், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 18

  இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 18   ஸ்ரீகாந்த் இங்கு வருவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.   "சித்தப்பா" என்று அதர்வ் அழைக்கவும், திரும்பி பார்த்தனர்.   "ஹாய் மை பாய்ஸ்" என்று சொன்னவர் அப்படியே கண்களால் பாவனை அளந்தார்.   பதினெட்டு வயது இளம்பெண் இருந்தாலும் நல்ல வளர்த்தி இருந்தது. அவரது கண்கள் என்னவோ நேராக அவளின் கழுத்திற்கு கீழ் தான் சென்றது.   'நல்ல தளதளன்னு இருக்கா' என்று மனதிற்குள் நினைத்து, "யாரு இந்த பொண்ணு" என்றவர் வேண்டுமென்றே பாவனாவின் நாற்காலியில் கை வைப்பது போல் அவளின் கழுத்தையும் தோளையும் வருடி சென்றார். சிறுபெண் அவளுக்கு அவரின் தொடுகையின் வித்யாசத்தை உணரவும் முடியவில்லை.   அதுவும் தவறதுலாக கை பட்டு இருக்கும் என்று நினைத்து கொண்டாள்.   "இவ ரிதேஷோட பிரண்ட் சித்தப்பா" என்று அதர்வ் சொல்லவும், "ஓஹ்" என்று சொன்னவர், "என்ன பாய்ஸ் இந்தியா செலெக்ஷன் சீக்கிரம் வர போகுது அதுக்கு ரெடியா?" என்று கேட்கவும், "ம்ம் ரெடி ஆகணும். இன்னும் நாலு மாசம் இருக்கு தானே" என்றான் அபராஜித்.   "அபி உனக்கு நிறைய ...

இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 17

  இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 17   அனைத்தையும் சொல்லி முடித்து வஞ்சி அபராஜித்தை பார்க்கவும், அவனின் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.   "என்ன அண்ணா? எதுவும் சொல்லாம இருக்கீங்க?" என்று கேட்க, அவனோ, "இல்ல என்னால எல்லாத்தையும் டைஜஸ்ட் பண்ணவே முடியல... அதர்வ் போன ஜென்மத்துல தி கிரேட் பிஏ குரூப்ஸ் அண்ட் கிறீன் எமரால்டு ஹோட்டேல்ஸ் முதலாளிங்க பையனா பிறந்து இருக்கானா? இன்னைக்கு வரைக்கும் இந்தியாவோட தி மோஸ்ட் பிரெஸ்டிஜியஸ் பேமிலி அவங்க தான். ஆதி எல்லாம் இப்போ போய் அவங்க பசங்க எல்லாத்தையும் டேக் ஓவர் பண்ணிட்டாங்க... அதான் யோசிக்கிறேன். அவளோ பெரிய வீட்ல பிறந்து ஏன் இப்படி சூசைட்?" என்று கேட்கவும், "நான் இல்லன்னு தான்... அவங்க வீட்ல எப்பவும் அவர் ஒதுங்கியே இருந்துட்டார். அவரோட தங்கச்சி ஜானவி கிட்ட தான் எல்லாத்தையும் சொன்னார்ன்னு கடைசியா சொன்னார்" என்றதும், "மிஸஸ் ஜானவி அர்ஜுன் அபினவ் தானே? அவங்க தான் இந்தியாவோட ஸ்டைல் ஐகானிக் டிரஸ் எல்லாம் ரெடி பண்ணுறாங்களே" என்றதும், "எல்லாம் அவரோட பிறந்தவங்க தான்" என்று சொல்ல, "இது எல்லாம் அவனுக்கு நினை...

குமரகம் - 3

 குமரகம் அத்தியாயம் 61   பக்ஷி ராஜாவிற்கு இன்னுமே கோவம் அடங்கவே இல்லை. அவரின் முன் அவர் விதைத்த விதை தான் நிற்கிறது. ஆனால் அவருக்கு எதிராக! தந்தையை மிஞ்சிய தனையனாக நிற்கிறான். அவரின் ஆட்சியை மொத்தமாக கவிழ்க்க கூட இல்லை, அவன் களைந்து எடுத்து விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்.   அவர்கள் குடும்பத்தின் அடுத்த தலைமுறையின் முதல் வாரிசு அவன். அவனை வளர்த்த தாத்தா சாகும் பொது சொல்லும் உண்மையில் தான் அவனுக்கே அவன் யாரென்று தெரியும்.   "எப்படி டா? செத்த குழந்தையை நான் தான் புதைச்சிட்டேனே" என்று பக்ஷி கேட்க, "அது என் தாத்தாவோட பேரன் தான். என்னை வளர்த்த தாத்தா வரதராஜன் யாரு தெரியுமா? இந்த ஊர்ல தான் தபால்காரரா இருந்தவர். அவரோட பொண்ணு இங்க பிரசவத்துக்கு வரும் பொது தான் பொண்ணும் இறந்திருச்சு, குழந்தையும் இறந்திருச்சு... இப்படி பட்ட சூழ்நிலைல தான் அன்னைக்கு அவர் என் அம்மா கவிதாவை பார்த்தார்" என்றவனின் நினைவுகளும் வரதராஜன் சொன்ன நிகழ்விற்கு சென்றது.   அன்று கவிதாவை அடித்து விட்டு இறந்துவிட்டாள் என்று நினைத்து பக்ஷி வந்து விட, அதற்கு பிறகு தான், உனக்காக நான் அவனை பழி வாங்குவேன் ...